“ஐயோ அதெல்லாம் ஒன்னும் இல்ல… நீங்க போயிட்டு வாங்க” என்று சொல்லி அவனை இவள் தான் சமாதானபடுத்தி அனுப்பும்படி இருந்தது….
அவர்கள் அனைவரும் வண்டியிலும் காரிலுமாக கிளம்பி செல்ல.. மதி அவள் அம்மாவிடம் சொல்லிவிட்டு தூங்க சென்றாள்… “மதியின் அம்மா மதியை அழைத்து நீ எதுவும் வருத்தப்படுறீயா.. அவ குணம் தெரிஞ்சது தானே” என்று கேட்கவும்….
“அதெல்லாம் ஒரு வருத்தம் இல்லம்மா. அவளை பத்தி தெரியாதா விடுங்க… இங்க வரும் போது ஏதாவது இந்த மாதிரி பண்ணிட்டு போறா.. நான் எதையுமே கண்டு போறதில்ல… ஏற்கனவே இப்படி ஏதாவது வரும் தெரியும்., கீதா சொல்லிட்டு தான் இருந்தா… அதனால நான் அதெல்லாம் பெருசா எடுத்துக்க மாட்டேன் அவர் என் மேல பாசமா இருக்கறாரு… வீட்டிலுள்ள எல்லாரும் பாசமா இருக்காங்க.. அப்புறம் என்ன விடுங்க”.. என்று சொல்லவும்
“நீ ஏன் ஒரு மாதிரி இருக்க மத்தியானமும் சரியா சாப்பிடலை”…
“அம்மா தூக்கம் வருது மா… கொஞ்சம் நல்லா தூங்கி எழுந்தால் ரிலாக்ஸ்டா ஃபீல் பண்ணுவேன்… அவ்வளவு தான் போய் தூங்குறேன் எழுப்பாதீங்க பார்த்துக்கலாம்.. நானே எந்திரிச்சி வர்றேன்”என்று சொல்லிவிட்டு போய் படுத்தவள் தான்..
அவளுக்கும் அசதியில் அப்படி ஒரு தூக்கம் தூங்கி விழித்தவள் நேரம் பார்க்கும் போது மணி ஆறை தாண்டியிருந்தது… செல்லை எடுத்து பார்த்தால் அவனிட -மிருந்து அழைப்பு எதுவும் இல்லை.. இப்ப வரைக்கும் வரல என்ற யோசனையோடு மாடியிலிருந்து கீழே எட்டிப் பார்க்கவும்… வீட்டிலும் எந்த சத்தமும் இல்லை.. ஸ்ரீராம் டிவி பார்த்து கொண்டிருக்க அம்மா கிச்சனில் ஏதோ உருட்டிக் கொண்டிருப்பது சத்தம் கேட்டது….
அப்பா வெளியே இருப்பாராக இருக்கும்.., என்று நினைத்துக் கொண்டே முகத்தை கழுவி விட்டு வீட்டில் உள்ளவர்கள் யாரும் மனம் வருத்தப்படக் கூடாது என்பதற்காக தன்னை பிரஷ்ஷாக ஆக்கிக் கொண்டாள்…
தூங்கி எழுந்த அவளுக்கு ஏற்கனவே இரண்டு மூன்று நாட்களாக இருந்த சந்தேகம் உறுத்திக்கொண்டே இருந்தது… நாட்கள் தள்ளிப் போய் இருப்பது போல அதை இங்கு வைத்து பார்ப்பதற்கும் யோசனையாக இருந்தது வேண்டாம்… ரெண்டு நாளில் ராமேஸ்வரம் போய் போன பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற யோசனையோடு அதைப் பற்றிய நினைப்பை விட்டு விட்டாள்…
ஒருவேளை டென்ஷன் டிப்ரஷன் காரணமா.., லேட்டா கூட வரலாம்… அதுக்காக அவசரப்பட்டு நாமலா முடிவு பண்ணிக்க கூடாது என்ற நினைவோடு விட்டுவிட்டாள்….
ஏனெனில் வேலை பார்க்கும் காலங்களில் அவளுக்கு சில நாட்கள் முந்தவும் செய்யும்., பிந்தவும் செய்யும்., என்ற காரணத்தினால் இப்போதும் அது போலவே இருக்கும் என்று நினைத்துக் கொண்டு அதை பற்றிய எண்ணத்தை விட்டுவிட்டு கீழே வந்து தம்பியோட அமர்ந்தாள்…
திருமணத்திற்கு முன் அவர்கள் இருந்தது போல உட்கார்ந்து அவனோடு பேசிக்கொண்டிருந்தாள்…. அவனது தலையை தடவி விட்டபடி படிப்பு எப்படிடா போகுது என்று கேட்டுக் கொண்டே., அவன் தோளில் கையை போட்டு அக்கா என்பதை மீறி அவனுடைய தோழியாக அமர்ந்து அவனோடு கதை பேசிக் கொண்டிருந்தாள்..
“டேய் காலேஜ் ல பொண்ணு ஏதும் பார்த்து வச்சிருக்கியா” என்று கேட்கவும்…
அவன் சிரித்துக்கொண்டே”அக்கா வீட்டுக்கு வந்த உடனே அம்மா ட்ட அடி வாங்கி கொடுத்ததற்கு பிளான் பண்ற” என்று சொல்லவும்
“சும்மா கேட்டேன் டா… சொல்லு டா நல்ல பொண்ணா இருந்தா பொண்ணு பாக்குற வேலை மிச்சமாகும் இல்ல… ஆனா ஒன்னு மட்டும் சொல்லி இருடா பொண்ணு பார்க்கும் போதே ஃப்ரெண்ட்லியா இருக்கணும்… நம்ம வீட்டுல ஜாலியா இருக்கணும்.. நல்ல பிரெண்ட்லி கேரெக்டர் ஆ நம்ம வீட்ல ஒத்து போற மாதிரி ஒரு கேரக்டரை பாரு” என்று சொல்லவும்
பின்னாடி இருந்து அவளுக்கு காபி எடுத்துக்கொண்டு வந்த அம்மா… “அடியே நீ என்ன சொல்லிக் கொடுத்துட்டு இருக்க ன்னு.. உனக்கு தெரியுதா” என்று கேட்கவும்.,
“அட போங்கம்மா நீங்க எந்த காலத்துல இருக்கீங்க… நான் அவனுக்கு பிடிச்ச மாதிரி பொண்ணு வரணும். நம்ம வீட்டோட மருமகளா இல்லாம நம்ம வீட்ல இன்னொரு பொண்ணு மாதிரி இருக்கணுமா ஜாலியா நம்ம ஃபேமிலியோட நல்ல செட் ஆகுற மாதிரி ஒரு பொண்ணு வேணும்”… சொல்லவும்…
“அக்கா நீ சும்மா இரு., என் படிப்பு முடியட்டும்” என்று சொல்லவும்…
“அப்ப படிப்பு முடிஞ்சதும் பார்க்கிற வேலை தான்” என்றுஅவள் கேட்கவும்
அவள் அம்மாவோ “நீ அக்கா மாதிரியா பேசுற”
“அம்மா அக்கா என்கிறது வேற மா…. நான் இப்ப அவனுடைய ஃபிரண்டா பேசிகிட்டு இருக்கேன்…. அவனுக்கு பிடிச்ச மாதிரி ஒரு லைப் அமைந்தா.., அவன் ஹாப்பியா இருப்பான்”… என்று சொல்லவும்
“நீ ஹேப்பியா இருக்கீயா அக்கா” என்று அவன் பதிலுக்கு கேட்கவும்….
“நான் சந்தோஷமா தான் டா இருக்கேன்… ரொம்ப சந்தோஷமா இருக்கேன் நீ ஏன் இப்படி எல்லாம் யோசிக்கற”
“அது அந்த வயசுல அப்படித்தான் நம்மள யாரும் டாமினேட் பண்ணா நமக்கு பிடிக்காது…. நம்மள யாரும் அதிகமா அதட்டி பேசுற மாதிரி இருந்தாலும் நமக்கு பிடிக்காது… அப்படித்தான் பிடிக்காதுன்னு வச்சுக்கோங்க” ஆனால் “இப்போ கல்யாணம் முடிந்து வரும் போது அவர் ஓகே… நல்ல ஹஸ்பன்ட்., நல்ல பார்த்துக்குவாரு., இதுக்கு மேல என்னடா வேணும்.., சோ நான் சந்தோஷமா தான் இருக்கேன்” என்று சொல்லவும்..
“எனக்கு தான் உண்மையிலேயே ஒரு சந்தேகம் இருந்துச்சு…. உன்னை ஹாப்பியா வச்சிருக்காறா… உண்மையிலேயே உன் மேல பாசமா இருக்கிறாரா ன்னு… என்று ஒரு டவுட் இருந்துட்டே இருக்கும்…
” ரொம்ப சந்தேகப்படாத டா… லூசு குட்டி” என்று அவன் தலையில் தட்டி தோளோடு சேர்த்து பிடித்துக் கொண்டாள்…
” அம்மா அக்கா உங்கள லூசு ங்கா மா”….
“நான் எப்படா சொன்னேன்”…
“இப்ப தானே லூசு குட்டி ன்னு சொன்ன”….
அவளும் சிரித்து கொண்டே… “நான் சந்தோஷமா தான் இருக்கேன் இதுக்கு மேல உனக்கு எப்படி தெரியப்படுத்துவது எனக்கும் புரியல”…. என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே…
மதியின் அம்மா ஏதாவது ப்ரோக்ராம் வைங்கடா பார்க்கலாம் என்று கேட்டுக் கொண்ட இவர்களோடு அமர்ந்தார்…
இரவு உணவிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் ஏற்கனவே தயார் செய்து வைத்துவிட்டு வந்து அமர்ந்திருந்தார்… அதே நேரம் வெளியே சென்றிருந்த மதியின் அப்பாவும் நால்வரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.. வெகு நாளைக்குப் பிறகு அவர்கள் நால்வரும் சேர்ந்து பேசிக் கொண்டி ருந்தது போல ஒரு தோற்றம் அவர்களுக்கு தோன்றியது.. ஆனால் அதை மகிழ்ச்சியாகவும் உணர்ந்தனர்…
அப்போது மணி எட்டை தாண்டவும் மதியின் அம்மா உணவு தயார் செய்ய எழுந்து செல்லும் போது “தம்பி எப்ப வருவார் என்று ஒரு வார்த்தை கேளு… சாப்பாடு செய்யனும் இல்ல”.. என்று சொல்ல…
” நான் போன் பண்ணி கேட்டேன் னா அத வச்சி அந்த லூசு ஒரு பிரச்சினை கிரியேட் பண்ணுவா… அதனாலதான் நான் எதுவும் கேட்காமல் இருக்கேன்… போயிட்டு வரட்டும் விட்டுருங்க… எப்ப வேண்டும் னாலும் வரட்டும் விடுங்க”…,
” பெரிசா எடுத்துக்க மாட்டாங்க விட்ருங்க” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே பாலனின் நம்பரிலிருந்து ராஜனுக்கு போன் வந்தது…
” ராஜா இப்படி வெளியே வந்த இடத்துல கொஞ்சம் லேட்டாயிருச்சி… அதனால நைட்டு சாப்பாடு வெளியே முடிச்சுட்டு வந்துடுறேன் பா… நீங்க யாரும் முகில் காக வெயிட் பண்ண வேண்டாம்., சாப்பிடுங்க” என்று சொல்லிக் கொண்டிருந்தார்..
அதை முகிலன் மதியிடம் சொல்வதற்கு தயங்கி தான் சூர்யாவிடம் சொல்ல சூர்யா மூலமாக நேரடியாக மதியின் அப்பாவிற்கு தெரிவிக்கவும் அவளும் சிரித்துக் கொண்டாள்…
அங்கு சீக்கிரம் முடி ம்மா என்று வீட்டில் உள்ள அனைவரும் சொல்லும் அளவிற்கு.., அவள் கடைகடையாக ஏறி இறங்கினாள்… எல்லோருக்கும் தெரிந்து போயிற்று அவள் வேண்டும் என்றே செய்கிறாள்… என்று
இனியாவை பொருத்தவரை அவன் மதி வீட்டிற்கு மதியோடு சென்றிருக்கிறான் என்று தெரிந்த அந்த நிமிடத்திலிருந்து எப்படி அவன் அவர்கள் வீட்டில் தங்குவதை தடுப்பது என்பதிலேயே குறியாக இருந்தால்… அதற்காகவே இந்த ஷாப்பிங் கணவன் வீட்டில் அண்ணன் கூட கடைக்கு போறேன் என்று சொல்லிவிட்டு அவளுடைய குழந்தையை மட்டும் கூட்டிக்கொண்டு கடைக்கு கிளம்பி இருந்தாள்… இது தெரியாத கணவன் பாசமலர்கள் எப்பவும் தங்கச்சி தாங்கிட்டு அலையுது என்று நினைத்துக்கொண்டான் .
தீபாவளிக்கு முதல்நாள் என்பதால் கடைகளில் பயங்கர கூட்டம் இருந்தது… எனவே அனைவரும் வாங்கிக்கொண்டு முதலில் நீங்க கார்ல போங்க என்று சொல்லவும்… உணவை முடித்துக் கொண்டே அனைவரும் கிளம்பினர்..
எனவே முதலில் காரில் வந்தவர்கள் கிளம்ப முகிலனும் சூர்யாவும் பைக்கில் ஏறி கிளம்பி வந்து கொண்டிருக்கும் போது முகிலின் கையில் இருந்த கவரை பார்த்துவிட்டு இனியா “வாங்குன ட்ரெஸ் இல்லாம இங்க இருக்கு.., அப்புறம் அண்ணன் கையில என்ன வச்சி இருக்கான்” என்று கேட்கவும்..
பாலன் “உனக்கு தேவையானதை வாங்கிட்ட இல்ல அப்புறம் எதுக்கு தேவையில்லாம பேசுற… உன் வேலைய மட்டும் பாரு…. நீ இன்னும் திருந்தலையா.. எனக்கு என்னமோ தோணுது நீ இன்னைக்கு கடைக்கு கூட்டிட்டு வந்தது கூட வேண்டும் அப்படின்னு இப்பத் தோணுது… என்ன நீ வாங்குனது… சூர்யா வாங்கி கொடுத்த ஒரு சேலை… முகிலன் கிட்ட ஒரு சுடிதார்… உங்க அம்மா கிட்ட ஒரு கம்மல் வாங்கி இருக்க…. இந்த மூன்று பொருள் வாங்குவதற்கு மத்தியானம் 3 மணிக்கு வந்தவர் நைட்டு எட்டு மணிக்கு மேல ஆக்கிட்ட”..
“சாப்பிட்டுட்டு கிளம்ப ஒன்பதை தாண்டியாச்சு… கிட்டத்தட்ட அஞ்சு மணி நேரம் ஷாப்பிங் பண்ணி இருக்க இந்த மூன்று திங்ஸ் காக… இந்த டைம்ல சூர்யா அவன் குடும்பத்திற்கு தேவையானதை வாங்கிட்டான்… உங்க அம்மா வீட்டுக்கு தேவையானது வாங்கிட்டா … எல்லாரும் வாங்கியாச்சு… உனக்கு இவ்வளவு நேரம்.., இதை பார்க்கும் போது எனக்கு என்னவோ நீ சரி இல்லைன்னு தோணுது.. இனியா உன்னை நீ மாற்றிக்கொள்…அது தான் நல்லது”…
“ஒரு குடும்பத்தில் வாழ போயிருக்குற பொண்ணு அங்க வந்து யாரும் திட்டக்கூடாது… உன் வீட்டுக்காரருக்கு தெரிஞ்சா என்ன நடக்கும் ன்னு யோசி… அட்ஜஸ்ட் பண்ணி போ… இல்ல இப்போ இந்த விஷயத்தை எல்லாம் உன் வீட்டுக்காரர் கிட்ட…., அன்னைக்கு சூர்யா என்ட்ட சொன்ன மாதிரி இதை எல்லாம் சொன்னா என்ன ஆகும் ன்னு என்று யோசிக்கோ…
என்ட்ட சூர்யா சில விஷயங்களை சொன்னான்… இராமேஸ் -வரத்திலிருந்து நீ என்ன வேலை பண்ணுன ன்னு கதையும் சொன்னான் இதெல்லாம் என்னைக்கும் ஒன்று போல இருக்காது”…..
“மதி அமைதியா போற வரைக்கும் தான்., முகிலனும் அமைதியா இருப்பான்… உன் கிட்ட மதி என்னைக்காவது எதிர்த்து கேட்க ஆரம்பிச்சா… அதுக்கு அப்புறம் முகிலன் உன்கிட்ட மூஞ்சி கொடுத்து கூட பேசமாட்டான்.. ஞாபகம் வச்சுக்கோ” என்று சத்தம் போடவும்…. அமைதியாக வந்தாள்
பின்பு. இனியா “அந்தக் அவர் என்ன ன்னு கேட்டேன்… அதுக்கு நீங்க இவ்வளவு சத்தம் போடுறீங்க பா” என்று இனிய அதிகாரமாக பேசவும்…
“அவன் என்ன வாங்கி இருந்தா உனக்கு என்ன… உனக்கு வாங்கினது உன் கைக்கு வந்துவிட்டது தானே” என்று மறுபடி வசந்தி சத்தம் போட பின்பு அந்த இடமே அமைதியாகி விட்டது….
வீட்டில் வந்து இறங்கவும்… சூர்யா முகிலனை நேராக மதியின் வீட்டில் இறக்கி விட்டு விட்டு வந்தான்… இங்கு வந்து இனியாவை “கிளம்பு.. உன் வீட்டில் கொண்டு விடுகிறேன்” என்று சொல்லவும்..
அவளுடைய கவர்களை எடுத்துக்கொண்டு முகிலனை தேட “அண்ணன் எங்கே” என்று சூர்யாவிடம் கேட்டாள்…
“ஏன் உனக்கு என்ன… வாங்கியாச்சு இல்ல கிளம்பு”.. என்று சொல்லவும்.
“எல்லாரும் திட்டுறதுலேயே குறியாய் இருக்கீங்க” என்று பிள்ளையை தூக்கிக்கொண்டு அவள் கிளம்ப தொடங்கவும்….
சூர்யா சொன்னான் “என்றைக்கும் ஒன்று போல இருக்காது.. நீ எப்பவும் வீட்டுக்கு வந்து போய் இருக்கணும்னா… அதுக்கு தகுந்த படி நடந்துக்கோ… உனக்கு நான் எத்தனையோ தடவை அட்வைஸ் பண்ணிட்டேன்… முகிலன் இதுவரைக்கும் எதுவும் சொல்லல.. அவனையும் சொல்ல வச்சுராத” என்று சத்தம் போடவும்… அதற்கு மேல் பேசாமல் இனியா அவள் வீட்டை பார்த்து கிளம்பினாள்..
அனுபவங்களை விட சிறந்த ஆசான் வேறு இல்லை… ஒவ்வொரு காலகட்டத்திலும் அனுபவங்கள் நமக்கு அடித்து சொல்லிக் கொடுக்கிறது… ஆனாலும் கற்றுக்கொள்ள தான் நாம் மறுப்பு தெரிவிக்கிறோம்… அனுபவ பாடங்கள் ஆழ்மனதில் பதிந்து விட்டால் வாழ்க்கையை எதார்த்ததோடு கடக்க துணிந்து விடுவோம்….