Advertisement

அத்தியாயம் 12

இசையாய் இதமாய்

செல்லும் வாழ்க்கை

சில நேரங்களில்

சுருதி தப்பிய

இசையாகி போகிறது…

அதை மீண்டும் மீட்க

நம் இருவரின்

சிநேக புன்னகை

மட்டுமே…

மீண்டும் நாம்

ஸ்ருதியோடு லயமாக

மெல்லிசையாய்

மாற்றுகிறது…,

வாழ்க்கையை…

                 எல்லோரும் கிளம்பும் நாள் வரை அனைவரும் ஒன்றாக இருக்கும் படி பார்த்துக் கொண்டாள்.,

               எந்த சூழ்நிலையிலும் கலையும் அம்முவையும் அவள் தள்ளி நிற்காத அளவில் பார்த்து கொண்டாள். சூர்யாவிடம் ஏற்கனவே அன்பாய் இருப்பது அனைவருக்கும் தெரியும்., அதனால் ஒன்றாகவே சுற்றிக் கொண்டிருந்தாள்.,

                       அவர்கள் இருக்கும் வரை அவர்களோடு ஹாலில் அனைவரும் சேர்ந்து படுத்து கொண்டனர்.. கலை சொன்னதுக்கு கூட வேண்டாம் என்று சொல்லிவிட்டாள். முகிலனும் இவர்களோடு சேர்ந்து கொண்டான்.

                      இனியாவின் கணவன் கூட அனைவரும் ஹாலில் படுத்து கதை பேசி சிரிப்பதை கண்டு., அவனும் இனியாவை அழைக்க அவள் வர முடியாது என்று சொல்லிவிட்டாள்.

              இனியாவின் கணவன் வந்து சூர்யா முகிலனோடு சேர்ந்துகொண்டான். அவர்கள் இருந்த இரண்டு நாளும் மிகவும் சந்தோஷமாக இருந்தனர்.. போகும்போது முகிலனின் அம்மா நம்ம சொந்தத்துல பொண்ணு கட்டி இருந்தா கூட இந்த அளவு குடும்பத்தோட ஒற்றுமையா சந்தோஷமா இருக்குமானு தெரியாது.., ஆனா உனக்கு நல்ல நேரம் இருக்க போயி தங்கம் போல பொண்ணு கிடைச்சிருக்கு.., அவளை நல்லபடியா பார்த்துக்கோ என்று சொல்லி விட்டு சென்றார்…

               மதியின் அம்மாவோ., நிறைய அறிவுரைகள் சொன்னதோடு சமையல் ருசியாக செய்ய வேண்டும்., சோம்பேறித்தனம் படகூடாது என்று சொல்லி விட்டு சென்றார். அவர்கள் இருந்த இரண்டு நாளில் அவளுக்குத் தேவையான மசாலா திரிப்பது., வீட்டிற்கு தேவையான மாவு அரைத்து வைப்பது., அவளுக்கு தேவையான என்னவென்று பார்த்து செய்து வைத்து விட்டு சென்றனர்.., இதன் பிறகு உனக்கு தேவையானவற்றை நீ தான் பார்த்துக் கொள்ள வேண்டும்..,

                வீட்டின் உதவிக்கு என்று வந்திருந்த அம்மா மிகவும் பொறுப்பானவராகவும் நம்பிக்கையானவர் ஆகவும் இருந்தார்.. அவரது வீடு அங்கிருந்து அருகில் தான் இருந்தது. அவருடைய கணவர் அங்குள்ள பகுதியில் ஆட்டோ ஓட்டுபவர் ஆக இருந்தார். முகிலன் அனைத்தையும் விசாரித்து தான் வைத்திருந்தான்.

             அதுமட்டுமல்லாமல் அந்த உதவிக்கு இருக்கும் அம்மாவிடமும் சரி அவர் அவர்களுடைய கணவரிடமும் சரி எதுவும் அவசரம் என்றால் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும்., அவசரத்திற்கு எங்கேயும் அவளுக்கு போக வேண்டுமென்றால்., ஆட்டோவில் கூட்டி செல்ல வேண்டும் என்றும் சொல்லியிருந்தான். எனவே அவளுக்கும் அதே போல சொல்லி வைத்திருந்தான். எங்கேயும் போக வேண்டுமென்றால் வேறு யாருடைய ஆட்டோவிலும் போக வேண்டாம் இந்த ஆட்டோவில் சென்று வந்தால் போதுமானது என்று அவளும் சரி என்று சொல்லியிருந்தான்.

                 அந்த அம்மாவிடம் சொல்லி இருந்தான். கடைக்குப்போவது பொருட்கள் வாங்குவது என்று எல்லாம் பார்க்க கொடுக்கவேண்டும் என்று.., அவரும் சரி என்று சொல்லியிருந்தார் ..

                 மதியவேளையில் உணவை முடித்துக்கொண்டு அவர்கள் அனைவரும் பல அறிவுரைகளோடு ஊருக்கு கிளம்பி சென்றனர்., இவளும் இரவு உணவிற்கான ஏற்பாடுகளை ஏற்கனவே செய்து வைத்திருந்தால்., அதை மட்டும் முடித்து எடுத்து வைத்து விட்டு உதவிக்கு வந்த அம்மா எல்லா வேலையும் முடித்துக் கொண்டு அவர்கள் கிளம்பவும், சற்று நேரத்தில் முகிலனும் வீடு வந்து சேர்ந்தான்., “என்ன ஆச்சு சீக்கிரம் வந்துட்டீங்க திருப்பி போகனுமா” என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே உள்ளே வந்தவன்.,

            அவளைப் பார்த்து கண்ணடித்து விட்டு “லீவு போட்டுட்டு வந்துட்டேன்” என்று சொல்லவும்.., அவளுக்குத் தான் சிரிப்பை அடக்க முடியாமல் போயிற்று…

          “எதுக்குடி சிரிக்கிற”., என்று சொல்லி விட்டு யூனிஃபார்ம் மாற்றுவதற்க்காக அவனுடைய அலுவலக அறைக்குள் சென்றான்.

            அவள் ஏற்கனவே சொல்லியிருந்ததால் யூனிஃபார்மோடு அருகில் வரக் கூடாது என்று.., அதனால் சிரித்துக்கொண்டே யூனிபார்ம் மாற்றுவதற்காக உள்ளே சென்ற உடன் வெளியே நின்று கொண்டு “திடீர்னு இப்ப எல்லாரும் திரும்பி வந்துட்டாங்க னா என்ன செய்வீங்க” என்று கேட்டாள்.

                   “நாங்கல்லாம் யாரு… சூர்யாக்கு போன் பண்ணி எங்க போயிட்டு இருக்கீங்க ன்னு கேட்டு தான் திரும்பி வந்திருக்கேன்…, அவங்க பாதி தூரம் போயாச்சு., இன்னும் ஒரு ஒன் ஹவர் ல வீட்டுக்கு போய் சேர்ந்திருவாங்க”…, என்றான்கையை எடுத்து வாயில் வைத்து மூடிக் கொண்டு பார்த்து கொண்டே நின்றாள்…

“ஒய்… பௌமி இது என்ன ரியக்க்ஷன்”…

         “அய்யோ பெரிய கேடி…, நான் கூட ரொம்ப நல்ல பையன் ன்னு நினைச்சிட்டேன் என்று சொல்லவும்…,

         “உன்னோட வொர்க்காக மூணு மாசம் தள்ளி நின்ன என்னைய பார்த்து நல்ல பையனா ன்னு சந்தேகமா சொல்லுவியா… சந்தேக படாம அப்படியே வச்சுக்கோ நான் ரொம்ப நல்ல பையன்” என்று சொன்னான்.

            “என்னா பொய்…, எல்லாம் பொய்.,” என்று அவனோடு வம்பு வளர்த்துக் கொண்டிருந்தாள்.

உடைமாற்றி வந்தவன்., அவளை இழுத்து தன் மடியில் அமர்த்திக்கொண்டு அவளிடம் நிறைய பேசவேண்டும் என்று சொல்லிக்கொண்டு பழைய விஷயங்களைப் பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருந்தான்..,

                “நல்லவேளை சண்டை போட்டு நீ என்னை பார்த்து பயந்து போயிருந்த…, இல்லாடி எங்க அண்ணனை., அண்ணன் கூப்பிட்ட மாதிரி., என்னையும் கூப்பிட்டு இருப்ப இல்ல” என்று கேட்டாள்.

                  இருக்குமோ என்று இவளும் பதில் கேள்வி கேட்டு இருந்தாள்…,

             இனியாவை பற்றிய விஷயங்களை தவிர இவர்கள் இருவரும் சம்பந்தப்பட்ட மற்ற எல்லா விஷயங்களும் பேசினர்.

            ஆமா பஸ்ல என்ன பார்த்து எதுக்கு அப்படி பண்ணின.., நான் அடிக்கடி உன்னை யோசிப்பேன் எனக்கு பஸ்ல யாரும் என் பக்கத்தில் நின்னாலே உன்னோட ஞாபகம் தான் வரும்…. இந்த கத்திரிக்காய் மட்டும் நம்ம பக்கத்துல போனாலே         அலருமே ன்னு., என்று கேட்கவும்.,

         “இவளும் ஆமா., ஜீராஃபி பக்கத்துல வந்தா., கத்தரிக்கா பயப்பட தான் செய்யும்., நான் என்ன பண்ண அப்ப எல்லாம் உங்கள பார்த்தாலே கை கால் எல்லாம் உதரும்” என்று அவள் சொல்லவும்.,

“இப்ப பயம் போயிருச்சி ன்னு நினைக்கேன்”., என்றான்.

          இப்படி மடியில உட்கார்ந்து இருக்கும் போதே தெரியலையா.., என்றாள்…

           “ஆமா உங்க வீட்டுக்கு மாடி வழியா ஏறி குதிச்சு ஓடி வந்தேன் இல்ல…, உன் கிட்ட பேசுறதுக்கு…, அப்ப ஏண்டி என்ன அவ்ளோ அவசரமா அடுத்த வீட்டு மாடியில் போய் நிற்க சொன்ன., என் பக்கத்தில் நிக்காதீங்க தள்ளிப்போங்க ன்னு சொல்லி., எது பேசுறதா இருந்தாலும் அங்க போய் பேசுங்க ன்னு பதறின., எதுக்கு” என்று கேட்க அவன் கேட்டான்.,

           ” இவளும் பின்ன நீங்க ஏறி குதிச்சி மொட்டை மாடிக்கு வருவீங்க., வீட்டுக்குள் ஆள் இல்லாத நேரம் வீட்டுல வந்து பேசுவீங்களா…, பக்கத்து வீட்டு வழியா நீங்க வீட்டுக்குள்ளேயே வருவீங்களா…, யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க… எவ்வளவு ஈசியா உள்ள வந்திருக்கீங்க”…

“அது தான் யாரும் பார்க்கல இல்ல” …,

           “எல்லா தில்லாலங்கடி வேலையும் பாத்துட்டு… இப்போ நீங்க போலீஸ்., வெளியே சொல்லிறாதீங்க” என்று சொல்லி அவனை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள்…

“அப்பவே பார்த்து இருந்தா எப்படி இருந்திருக்கும்”….

         “எப்படி இருந்திருக்கும்… என் படிப்பு கோவிந்தா…, கோவிந்தா ன்னு போய் இருக்கும்…, ஈஸியா கேட்கிறீங்க” என்று சொன்னாள்…

            “அத விட முக்கியமாஅப்பவே கல்யாணம் பண்ணி வைத்து இருப்பார்களே ரெண்டு பேருக்கும்” என்று சொல்லவும்…,

              “சுத்தம் அப்போ கல்யாணம் பண்ணி வச்சுருந்தா., நாம ரெண்டு பேரும் மண்டையை பிச்சிட்டு நின்றிருப்போம்., இப்படி உங்க மடியில் வந்து உட்கார்ந்து இருந்து இருக்க மாட்டேன்”…, என்று சொன்னாள்.

         “அப்பவே கல்யாணம் பண்ணி இருந்தா., இப்போ ரெண்டு பிள்ளை யாவது இருந்திருக்காது”…, என்று அவன் கேட்கவும்…

“ரெண்டு பிள்ளையா…, போடற சண்டையில் கோர்ட் வாசலில் நின்னுட்டு இருந்திருப்போம்…, இல்ல னா நீங்க தனியா., நான் தனியா., ன்னு பிரிஞ்சி இருந்திருப்போமா ன்னு தெரியாது” என்று அவள் சொல்ல…,

              “அப்படி எல்லாம் கிடையாது., தெரிஞ்சுக்கோ, எல்லார் வீட்லயும் சண்டை நடக்கத் தான் செய்யும்.., அதுக்காக எல்லாரும் என்ன குடும்பம் நடத்தாமலா இருக்காங்க, அதெல்லாம் கிடையாது வீட்ல சண்டை ங்கிறது சர்வ சாதாரணமாக வரும்.., எந்த வீட்டில் தான் சண்டை இல்ல.., உங்க அம்மா, அப்பாக்கு சண்டை வரவே வராதா., அது எல்லாருக்கும் வரும் உங்க முன்னாடி காட்டிக்க மாட்டாங்க., அதே மாதிரி தான் எங்க வீட்டிலேயும் எங்க அம்மா, அப்பாவுக்கும் சண்டை வரும், முதல் நாள் அவங்க முகத்தில தெரிஞ்சிக்கலாம்… ஆனா அதெல்லாம் ரெண்டு நாள்ல சரி ஆயிடுவாங்க.., அப்படித்தான் நார்மல் பேமிலி ல போகும்”….,

           “சில பேமிலி ல பிரச்சனை யே கிடையாது ன்னு சொல்லுவாங்க”.,

          “சில சமயங்களில் விட்டுக்கொடுத்து போகும் போது அப்படி இருக்க வாய்ப்பு இருக்கு… இல்லை னா பிரச்சனை க்கு பயந்து பேசாம இருப்பார்களா இருக்கும்”…

           இருக்குமோ… என்றாள் யோசனையான குரலுடன்…,

             “நாம ரெண்டு பேரும் முன்னாடியே சண்டை போட்டு முடிச்சிட்டோம் இல்ல., இனி மேல் போட மாட்டோமோ என்னவோ, தெரியல., சரி பார்ப்போம்., சண்டை வந்தாலும் வரட்டும் ஓகே”….,

          “அப்ப ரெண்டு பேருக்கும் சண்டை வரும் ன்னு சொல்றீங்களா”., என்று அவனைப் பார்த்து வாக்காக திரும்பி உட்கார்ந்து கொண்டு கேட்கவும்…,

Advertisement