Advertisement

அவள் வந்த  பிறகு தான் லீவ்  எடுத்துக் கொள்வதாகவும் அதுவரை வேலைக்கு சென்று விடுவதாகவும் சொல்லிக் கொண்டிருந்தான்.

              இவள்  கிளம்பும் நாள் அன்று மதியத்திற்கு மேல் அவன் போவதாகவும்.,  மாலை இவள் இங்கிருந்து சென்னைக்கு ட்ரெயினில் கிளம்புவதாக பேசிக் கொண்டிருந்தார்கள்..,

                 அன்று அவன் தோளில் சாய்ந்தபடியே பேசிக்கொண்டு இருந்தவள்.,  அவன் மார்பில் தலை வைத்து அப்படியே தூங்கி விட்டாள்.  அவனுக்கு மனைவிஎன்ற எண்ணம் இருந்தாலும்., ஏதோ  மற்ற எண்ணங்கள் எதுவும் தோன்றவில்லை., பழைய நினைவுகளோடு இப்பொழுது உள்ள  நிலைமையை  ஒவ்வொன்றாக யோசித்துக் கொண்டிருந்தான்..,  தூங்கும் வரை அவனுக்கு அவனுடைய பௌமியை தவிர வேறு யாரும் நினைவில் இல்லை..

கையணைவில் தூங்கும் அவளை பார்த்து கொண்டே நிம்மதியான தூக்கத்திற்கு சென்றான்.

               மனநிலை சந்தோஷமாகவே இருந்ததால், இருவருக்கும் நிம்மதியான தூக்கம் இருந்தது. காலை எழும் போதும் அவன் கையணைவில் தான் இருந்தாள்.

           அவன் மனம் முழுவதும் நிரம்பிய சந்தோஷம் வர முக்கிய காரணம் அவனுடைய பௌமி மட்டுமே புரிந்து கொள்ளும் மனைவி கிடைப்பதெல்லாம் வரம் என்று நினைத்துக் கொண்டான். அந்த விதத்தில் தனக்கு கிடைத்த வரம் அவள் என்று சந்தோஷப் பட்டுக் கொண்டான்.

           அந்த சந்தோஷத்தை நிலைநிறுத்த என்ன வேண்டு -மானாலும் செய்து கொள்ளலாம் என்ற எண்ணமும் அவனுக்கு வந்திருந்தது..

           அதன் பிறகு அங்கிருந்த மூன்று நாட்களும் இருவருக்கும் ரெக்கை கட்டி பறப்பது போல தான் இருந்தது. மறுவீடு சம்பிரதாயங்கள் கோயில் கும்பிடுவது.,  குலதெய்வம் கும்பிடுவது.,  முக்கியமான நெருங்கிய உறவினர் வீட்டுக்கு சென்று வருவது என்று மூன்று நாட்களுமே இருவருக்கும் நேரம் இல்லாத அளவிற்கு அலைச்சல் இருந்தது. ஆனாலும் ஒருவர் ஒருவருடைய அருகாமையை  ரசித்துக் கொண்டனர்.

        ஏனெனில் இன்னும் மூன்று மாதம் கழித்து தான் இருவரும் ஒரே இடத்தில் இருக்கும் சந்தர்ப்பம் வாய்க்கும், அதுவரைக்கும் இருவரும் ஆளுக்கு ஒரு திசையில் இருக்க வேண்டும்., என்ற நிலையில் அருகில் இருக்க கிடைத்த அருகாமை கூட ஏனோ சந்தோஷமாக உணர்ந்தனர்..

       அன்று மதியத்திற்கு மேல் உணவு உண்டபின் மதியின் வீட்டிலும் சொல்லிக் கொண்டு., வீட்டிலும் சொல்லிக் கொண்டு கிளம்ப வேண்டும்,  என்ற சூழ்நிலையில் மதியை அறைக்கு வருமாறு சொல்லி விட்டு அவன் கொண்டு வந்த பொருட்களை துணிகளை எடுத்து வைக்க மாடிக்கு சென்று விட்டான்.,  கலை கீழே அயர்ன் செய்து வாங்கி வைத்திருந்த துணிகளை எடுத்துக் கொண்டு மேலே சென்றாள்.

      அவன் பேக் செய்து கொண்டே தினமும் போன் பேசுவதாகவும்., சொல்லிக் கொண்டிருந்தான்..

         “ஒழுங்காக சாப்பிடு, வேலையில் நேரம் இழுக்க தான் செய்யும்., உணவு நேரத்தில் சரியாக சாப்பிடு” என்று அறிவுரை கூறிக் கொண்டிருந்தான்.

       “நீ சாப்பிடுவது சரியாக இல்லை., நானும் இத்தனை நாள்   கவனித்துக் கொண்டு தான் இருக்கிறேன்…, உடம்பை பார்த்துக்கொள் என்று சொல்லிவிட்டு எனக்காக என்று சேர்த்து சொன்னான்”…

            ம்ம்ம்…. சத்தம் மட்டும் கொடுத்தாலும்.,  முகம் சிவக்க நின்றாலும்.,  அவனிடம் வம்பு வளர்க்க வேண்டும் என்று “ஏனோ எனக்காக நான் சாப்பிட மாட்டேனா நான்.,  உங்களுக்காக தான் சாப்பிட்டேனுமா” என்று கேட்டாள்.

       அவனும் பதிலுக்கு “என்னைய  சமாளிக்கணும் இல்ல., எனக்கு சமைச்சு போடணும், என்ன பார்த்துக்கணும் அப்படின்னு உனக்கு இன்னும் ராமேஸ்வரம் வந்ததுக்கப்புறம் வேலை நிறைய இருக்கும்.,  இதுக்கு ஆபீஸ்ல பார்த்த வேலையே பரவாயில்லை என்று தோன்றும் அளவுக்கு வேலை இருந்துச்சுன்னா என்ன பண்ணுவ அதுக்காகத்தான் சொன்னேன் எனக்காக சாப்பிடு” என்று சொன்னான்..,

      என்ன நினைத்தானோ.. “நீ என்னைய மட்டும் பார்த்துகிட்டா போதும்., வீட்டில் வேலைக்கு எல்லாம் ஆள் வருவாங்க”. என்றான்.

        “ம்ஹூம்… அத்தை சொல்லியிருக்காங்க., சமையல் மட்டும் யார்ட்டயும் செய்ய சொல்ல கூடாது ன்னு”…

  “சமையல் செய்ய தெரியுமா”என்று கேட்கவும்…

           “ஏதோ சுமாரா செய்வேன்”… என்று அவனை பார்த்து சிரித்து கொண்டே சொல்லவும்.

       அவனுக்கும் புரிந்தது.. அவள் சொல்லியது.. அவள் நன்றாக செய்வாள் என்று ஏற்கனவே கலை ஒரு முறை சொல்லியது நினைவு வந்தது.

        இருவருக்குமே  காரணமில்லாமல்  சிரித்துக் கொண்டனர்.  பின்பு  அனைத்தையும் எடுத்து வைத்து விட்டு கிளம்பிய அவன்.,  அவள் அருகில் வந்து அவளை சேர்த்து அணைத்து., அவள் நெற்றியில் அழுத்தமாக முத்தம் வைத்தான். அவளுக்கு அவளறியாமல் உடம்பிற்குள் ஒரு நடுக்கம் ஓடியது ஏனெனில் அவனிடமிருந்து வாங்கும் முதல் முத்தம் இது…

           அதன் பிறகு அவளிடம் பதிலுக்கு வாங்கிக்கொண்டு, பின்பு திருப்பிக் கொடுத்து, என அங்கு ஒரு சிறு  முத்தச் சண்டையை நடத்தி முடித்து விட்டே, கிளம்பினான். ஏதோ ஐந்து நாட்களில்  அதிகநாள் சேர்ந்து இருந்தது போல ஒரு உணர்வை இருவருமே உணர்ந்தனர்.

           இவள் இரவு ட்ரெயினில் கிளம்புவதற்கு முன் அவன் ராமேஸ்வரம் போய் சேர்ந்து விட்டதை இவளுக்குப் போன் செய்து தெரிவித்தான்., வீட்டிற்கும் தெரிவித்து விட்டான்..

         இரவு ட்ரெயின் ஏறியவள்,  காலை சென்னை போய் இறங்கியவுடன் அவனுக்கு முதலில் தகவல் தெரிவித்துவிட்டு வீட்டிற்கும் தெரிவித்தாள்.

           இரவு ட்ரெய்னில்  இவளுக்கு தூக்கம் வரும் வரை அவனோடு பேசிக் கொண்டு தான் இருந்தாள்.,  பின்பு அவன் காலையில் வேலைக்கு செல்ல வேண்டும், இவளும் செல்ல வேண்டும் என்பதற்காகவே மனதில்லாமல் போனை வைத்தனர்.

          சென்னை வந்த பிறகு வேலை அவளை இழுத்துக் கொண்டது., சில நாட்கள் வேகமாக செல்வது போலவும், பல நாட்கள் நிதானமாக செல்வது போலவும் உணர்ந்தாள்.

          இருவரும் தினமும் போனில் பேசிக் கொண்டாலும் இவள் யாரையும் பற்றி குறை சொல்லவோ யாரைப் பற்றியும் விசாரிக்கவில்லை.,  வீட்டிற்கும் தினமும் பேசி விடுவாள் என்பதால்..,

           அதுவும் அவனுக்கு தெரியும் என்பதால் அவனும் அதை பற்றி கேட்டுக் கொண்டதும் இல்லை.,  இருவருக்குமான அன்பு தள்ளி இருக்கையில் வளர்ந்ததாக இருவருமே உணர்ந்தனர்., நாட்கள் வேகமாக செல்ல தொடங்க அவர்களுக்கான புரிதல்களும் அங்கு வளரத்தொடங்கியது..

         இதற்கு இடையில் போன் செய்யும் போதெல்லாம் அவன் அவளுடைய நண்பர்களோடும் பேசி நட்பை வளர்த்துக் கொண்டான். அவளுடைய கலகலப்பு நண்பர்களோடு அவள் பழகும் விதம் அனைத்தும் புரிந்துகொண்ட அவனுக்கு இவள் யாரிடமும் பகைக்க மாட்டாள் என்ற எண்ணமே  அதிகமாக இருந்தது..,

               அவள் தினமும் கீதாவோடு பேசும்போது கீதாவிடம் சொல்லுவாள்., அப்போதுதான் கீதா ” முகிலன் அண்ணா ஓரளவுக்கு நன்றாகவே புரிந்து கொண்டார் என்று நினைக்கிறேன், நீயும் அதற்கு தகுந்தாற்போல் நடந்து கொள்” என்று  அறிவுரை வழங்கினாள்.

         நாட்கள் வேகமாக ஓட அவளுடைய வேலையை அவள் சீக்கிரம் முடிக்கும் பொருட்டு வேகமாகவே நகர்த்தி சென்றாள். அவளுடைய வேளையும் அந்த நேரத்தில் சரியாக முடிவுக்கு வர அவளும் வேலையை விடுவதற்கான ஆயத்தங்களில் இறங்கினாள்., ஏற்கனவே வேலை பார்க்கும் இடத்தில் சொல்லியிருந்ததால்., அவள் பிராஜெக்ட் முடியும் அன்று  ஒரு சிறு பார்ட்டி அலுவலகத்தில் இருப்பதால் அதை முடித்துக்கொண்டு அவள் விடை பெறலாம் என்றும் சொல்லி இருந்தனர்..

     அதிலிருந்து ஒரு வாரம் மட்டுமே அவள் ராமேஸ்வரம் கிளம்புவதற்கு இருக்க.,  முதலில் மதுரை சென்று அதன் பிறகு அங்கிருந்து அவள் செல்வதாக முடிவாகி இருந்தது. ஆனால் இப்போது அது மாறி அவளை நேராக ராமேஸ்வரம் வரும்படி சொல்லிக் கொண்டிருந்தனர்.

      “இவள் நான் எப்படி தனியாக வருவது” என்று கேட்டுக் கொண்டிருக்க.,

     ” ஒரே ட்ரெயின் தான் நேராக வந்துவிடு” என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

       அவளுக்கு தான் யோசனையாக இருந்தது.,  “சரி அப்பா அல்லது ஸ்ரீராம் யாராவது வர சொல்லுங்க நான் கிளம்பி வரேன்” என்று சொல்லும்போது.,

      “இல்ல நாங்க எல்லாம் மொத நாளே ராமேஸ்வரம் போயிருவோம்., நீ நேரே அங்க வந்து சேர்ந்துரு., ரெண்டு பேர் வீட்லயும் அங்க வந்திடுவோம் உனக்கு தேவையானதை எல்லாம் நாங்க போயி முதலிலேயே எல்லாம் ரெடி பண்ணி வைக்கிறோம்., அதுக்கப்புறம் நீ வந்து சேர்ந்தவுடனே ஒரு நாள் உன் கூட இருந்துட்டு, அப்புறம் நாங்க கிளம்பி விடுவோம்” என்று சொன்னார்கள்…

      இவளுக்கு சரி சரி என்று சொல்வதை தவிர வேறு வழி இல்லை., ஏனெனில் இரு வீட்டு பெற்றோர்களும் ஒரே இடத்தில் இருந்து கொண்டு அவளுக்கு உத்தரவு போட்டுக் கொண்டிருந்தார்கள்..

       அதை அன்று முகிலனோடு பேசும்போது பகிர்ந்துகொண்டாள்.

      முகிலனோ “நான் வேணா கூப்பிட வரவா” என்று கேட்டான்.

      “இல்ல வேண்டாம், எல்லோரும் அங்கே இருக்கும் போது நீங்க வந்தா நல்லாயிருக்காது., நானே வந்துடுறேன்” என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

      ” ஒரே ட்ரெயின் தாண்டா மதுரைக்கு வந்து இறங்குறதுக்கு பதில நேரே ராமேஸ்வரத்தில் இருந்து இறங்க போற, அவ்வளவு தான்…, கண்டிப்பா காலையில நான் ரயில்வே ஸ்டேஷன் வந்துருவேன் கூப்பிடறதுக்கு” என்று சொல்லிக் கொண்டிருந்தான்…,

           அவளும் சரி சரி என்று சொல்லிக் கொண்டிருக்க., “ஏன் இங்க வர உனக்கு பிடிக்கலையா”., என்று அவன் கேட்டான்.

          ” பிடிக்கலைன்னா நான் எதுக்கு வேலையை விட்டுட்டு வர்றேன்., இங்கே இருந்திட மாட்டானா” என்று கேட்டுக்கொண்டு இருந்தாள்.

       “அப்ப ஓகே தானே., வந்துருவ இல்ல” என்று அவனும் கேட்டுக் கொண்டிருந்தான்.

      ” வந்து விடுவேன்” என்று சொன்னாள்.

      ” டிக்கெட் நான்போட்டு அனுப்பி விடுறேன்., நீ எடுக்க வேண்டாம்”என்று அவன் சொல்லிக் கொண்டிருந்தான்

         அவன் “ஒரு வாரம் தான் இருக்கா பௌமி” என்று கேட்கவும்

       “ஏன் என்ன ஆச்சு திடீர்னு இவ்வளவு சந்தேகம்” என்று பதிலுக்கு அவளும் கேட்டாள்.

      “நம்பவே முடியல அதுக்குள்ள மூணு மாசம் ஓடிவிட்டது” என்று சொன்னான்.

       “இடையில லீவு போடாம ஒர்க் பண்ண போயி வொர்க் சீக்கிரமா முடிஞ்சது. இல்லை னா இழுத்திருக்கும்” என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

      மூன்று மாதத்தில் ஒரு முறை கூட இவளும்  இங்கு வரவில்லை, அவனும் அங்கு போகவில்லை இருவரும் அவரவர் வேலையில் கவனம் செலுத்தினர்..

வாழ்க்கை தேடல்களுக்கான சிறந்த விடை உன் அனுபவங்களால் மட்டுமே உனக்கு கிடைக்க பெறும் ஆதலால் எதையும் நேருக்கு நேராக சந்தித்து விட்டு வெற்றி பெற்றால் ஜெயமாகட்டும் தோல்வியுற்றால் ஒரு சிறந்த அனுபவமாய் அமையட்டும்.”

Advertisement