Advertisement

அத்தியாயம் 1

 

உன்னை அழகாய் படைத்த பிரம்மன்

என்னை கொஞ்சம் அறிவாய்

படைத்திருக்கலாம்….

காதலிக்க கிடைத்த சந்தர்ப்பத்தை

எல்லாம் நழுவ விட்ட

முட்டாள் காதலன் நான்…

காதல் சொல்ல தெரியாமல்

எத்தனை நாளைக்குத்தான்

கண்ணை பார்த்து கொண்டு

காதல் தேடி திரிவது….”

         நட்புக்கு இலக்கணமாய் சிறு வயது முதல் இதோ இப்போதுவரை நட்பாய் இருக்கும் இருவரின் குடும்பம் தான் இது.

   இனம் வேறுவேறாக இருந்தாலும், தங்களுக்குள் எந்த பிரிவினையும் இல்லாமல் அவர்களது தாய் தந்தையர் முதல் சுற்றியிருக்கும் சொந்தம் வரை இவர்களின் நட்பு அனைவருக்கும் தெரியும்.

      அனைவரும் அந்த நட்பை ஏற்று பெருமையாக பார்த்து  கொள்ளக்கூடிய மனநிலையில் இருந்தனர். ஆனால் ஏனோ அவர்களின் பிள்ளைகளுக்கு மட்டும் அந்த நட்பு ஒத்துவரவில்லை.

    பாலன் அவரது மனைவி வசந்தி அவர்களுக்கு இரு மகன் மூன்றாவதாக ஒரு மகள் இது அவர்களது குடும்பம்.

    ராஜன் அவரது மனைவி சந்திரா அவர்களுக்கு முதலில் ஒரு மகள் இரண்டாவது ஒரு மகன் இது அவர்கள் குடும்பம்.

    இருவருமே அரசாங்க உத்தியோகத்தில் இருப்பவர்கள் இரண்டு குடும்பமும் வசதியிலும் படிப்பிலும் ஒரே நிலையில் இருந்தாலும்., பாலன் குடும்பத்தில் அவர்கள் இனத்தில் ஆண் பிள்ளைகளுக்கும் கொஞ்சம் சீக்கிரமாகவே திருமணம் செய்யும் பழக்கம் உண்டு.

         எனவே பாலன் அவருக்கு திருமணம் முடிந்து மூன்றாவது பிள்ளை பிறந்த பொழுது தான் ராஜன் அவருக்கு திருமணம் முடிந்தது. ராஜனுக்கு முதலில் பெண்ணும் இரண்டாவது பையன் பிறந்த பிறகு தான் இருவரும் ஒரே தெருவில் வீடு கட்டி குடிபுகும் வாய்ப்பு கிடைத்தது…

       அதன் வாய்ப்பாக அவர்கள் பிள்ளைகளுக்கு சண்டைகள் வர தொடங்கியது. அதுவரை எப்போதாவது  பார்ப்போம் என்ற எண்ணத்துடன் விலகி இருந்தவர்கள். ஒரே தெருவில் குடியேறிய சிறிது காலத்திற்குள்  பிள்ளைகளுக்கு சண்டை தொடங்கியது.

       பாலனின் மூத்த மகன் சூர்யா, இரண்டாவது முகிலன்,  மூன்றாவது அனைவருக்கும் செல்லப் பிள்ளையான இனியா..,

       இனியவை விட இரண்டு வயது இளையவள் ராஜனின் மகள் வெண்மதி., அதில் இருந்து நான்கு வயது இளையவன் ஸ்ரீராம்.

     முகிலனும், இனியாவும் அதிக ஒட்டுதல், சூர்யாவிடம் இனியா அவ்வளவாக ஒட்டுவது கிடையாது. ஏனெனில் சூர்யாவிற்கு தவறு செய்தால் தட்டிக் கேட்கும் குணம் உண்டு. அது யார் என்றாலும் யோசிக்க மாட்டான்.

       முகிலனோ தங்கை என்ற பாசத்துடன் இனியா எந்த தவறு செய்தாலும் அவளுக்கு சாதகமாகவே பேசுவான். ஆனால் சில இடங்களில் சொல்லி திருத்தவும் தவறமாட்டான்.,  எனவே சூர்யாவை விட முகிலனை தான் இனியாவிற்க்கு பிடிக்கும்.

         ஒரே தெருவில் இருவரும் வீடு கட்டி குடி வந்த பிறகு அவர்களுடைய நட்பு பலப்பட்டது.. அவர்களுடைய மனைவி மார்களும் நல்ல நட்புடன் இருந்தனர்… சூர்யா, வெண்மதியும் ஸ்ரீராம் நன்றாகவே பார்த்துக்கொண்டான். முகிலனும் இனியாவையும் போலவே இவர்களை நினைத்தான். ஆனால் முகிலனுக்கும்  இனியாவிற்கும் வெண்மதியை கண்டால் பிடிக்காது. ஸ்ரீராமை கூட தங்களுடன் விளையாட சேர்த்துக் கொள்வார்கள். ஆனால் வெண்மதியே மட்டும் சேர்த்துக் கொள்ள இனியா அனுமதித்தது கிடையாது. அங்குதான் பிரச்சினையே அவர்களுக்குள் தொடங்கியது.

    பத்து வயது வெண்மதி ஐந்தாவது படிக்கும் போது அதே பள்ளியில் 12 வயது இனியா ஏழாவது படித்துக் கொண்டிருந்தாள். அதே பள்ளியில் 16 வயது முகிலன் ப்ளஸ் ஒன் படித்துக் கொண்டிருந்தான். சூர்யாவோ கல்லூரியில் இறுதி ஆண்டில் இருந்தான்.

       அப்போது தான் பள்ளியில் இனியாவின் தோழியாக இருந்தவள் மூலம் சண்டை தொடங்கியது.  ஏற்கனவே இனியா விற்கு வெண்மதியை கண்டால் ஆகாது ஏனெனில் எப் -பொழுதும்  “இனியாவின் தந்தை  மதி குட்டி என்று ஆசையாக கொஞ்சுவதும்,” இனியாவின் “அம்மா மதியை பார்த்து ஒருமுறை பொம்மை போல அழகாக இருக்கிறாள்.” என்று சொல்லியதும் இனியாவின் மனதில் பதிந்து போயிருந்தது…

             பார்க்கவும் அவள் அப்படித்தான் இருந்தாள். சிறுவயதில் அழகிற்கு அர்த்தம் தெரியாத வயதில் இனியாவின் மனதிற்குள் பதிந்து போன விஷயம் இது. “அவள் பொம்மை போல் அழகாக இருக்கிறாள் என்று அனைவரும் சொன்ன அந்த வார்த்தைதான்.”  அதுவே அவளை எப்படியாவது மட்டம் தட்ட வேண்டும் என்ற எண்ணத்தை இனியாவின் மனதில் விதைத்தது…

       இனியாவின் தோழியின் தங்கை கீதா வெண்மதி வகுப்பில் ஒன்றாக படிப்பவள்.  இருவரும் மிகவும் நெருக்கம் அதை வைத்து ஒரு முறை கீதாவின் “அக்கா தற்செயலாக அவளின் குணத்தையும்., சிறு வயதிலேயே என்ன அழகு பெரிய பெண்ணாக வரும் போது எப்படி இருப்பாள் என்று இனியாவிடம்  பெருமையாக பேசவும்.,”  என்னுடைய தோழியாக பழகி கொண்டு எப்படி அவளைப் பற்றி நீ எப்படி பேசலாம் என்று வாக்கு வாதம் தொடங்கியது… அதிலிருந்து அவளுடன் பேச மாட்டாள்.,

        கீதாவின் சகோதரி “வெண்மதி அழகு பொம்மை என்று சொல்லி சொல்லியே சண்டை இழுத்து இனியாவிற்கு கடுப்பை உருவாக்கி வைத்தாள்.”

         பள்ளியில் நடந்த பிரச்சனை எதுவும் தெரியாமல் வெண்மதி பள்ளிவிட்டு வந்ததும்., அவர்கள் அம்மா செய்து வைத்திருந்த அப்பத்தை எடுத்துக்கொண்டு சூர்யாவை பார்க்க சென்றாள்.

        அவளுக்கு எப்போதும் சூர்யாதான் அண்ணன்., சூர்யாவை அப்படித்தான் அழைப்பாள் வெண்மதி., அதற்கும் ஒரு காரணம் உண்டு, இனியா முகிலனை தன் அண்ணன் தனக்கு மட்டும் சொந்தமானவன்., அவனை உரிமை கொண்டாடக்கூடாது அவனிடம் வெண்மதி பேசக்கூடாது என்று ஒருமுறை இவளிடம் சண்டை போட்டதால் அதிலிருந்து அவள் முகிலன் பக்கம் திரும்பக் கூட மாட்டாள்.

        அதிலிருந்து அவளுக்கு சூர்யா தான் அண்ணனாகி போனான். “சூர்யாவும் 10 வயது சிறுமியை தன்னை விட 10 வயது இளையவளை  தன் குட்டி தங்கையாகவே பார்த்தான். சூர்யாவிடம் அதிகம் இனியா ஓட்டாததால் அவனுக்கு வெண்மதி தன் தங்கை ஆகவே தோன்றியது.”

    அன்றும் அப்படித்தான் வீட்டில் வெண்மதி., சூர்யாவை தேடி சூர்யாவின் வீட்டிற்கு ஓடி வந்தாள் .

     “அண்ணா… அண்ணா என்று அழைப்போடு வீட்டிற்குள் நுழைந்தவள் அப்பத்தை சூர்யாவிடம் கொடுத்துவிட்டு அன்று பள்ளியில் நடந்த அனைத்து கதைகளையும் அவனிடம் ஒப்பித்து கொண்டிருந்தாள். எப்போதும் எந்த விஷயத்தையும் அவள் சூர்யாவிடம் மறைக்க மாட்டாள்.,  அதனால் அனைத்தையும் சூர்யாவிடம் சொல்லிக்கொண்டிருந்தாள்.”

  அதேநேரம் மாடியிலிருந்து இறங்கி வந்த முகிலனை துணைக்கு சேர்ந்துகொண்டு இனியா வெண்மதியிடம் சண்டை பிடிக்க கிளம்பினாள்.., வெண்மதி பார்ப்பதற்கு 10 வயதிற்கு ஏற்றார் போல  இல்லாமல் சிறியதாகவே தெரிவாள்., ஆனால் அழகான பொம்மை போல இருந்தாள். அவளைப் பார்த்துவிட்டு முகிலன் இடம் இனியா.,

         “முகி அண்ணா உனக்கு ஒரு விஷயம் தெரியுமா., எங்க கிளாஸ்ல ஒருத்தி சொல்றா இவ அழகாம்., இந்த கத்திரிக்காயை அழகா இருக்குன்னு சொல்லுறா ஒருத்தி., கத்திரிக்காய் உருண்டையா குண்டா., தானே இருக்கும்… எப்படி அது அழகா இருக்கும்…, என்று கேட்டு வெண்மதியை பார்த்து கிண்டல் செய்யவும்.,”

       “வெண்மதியோ நான் ஒன்றும் கத்தரிக்காய் இல்லை என்று சண்டைக்கு கிளம்பினாள்.,”

        “நீ கத்திரிக்கா தாண்டி., உன் பிரண்ட் கீதாவோட அக்கா சொல்றா., நீ ரொம்ப அழகா இருக்கியாம்., கத்திரிக்கா அழகா இருந்தா என்ன எப்படி இருந்தாலும் அதை வெட்டி குழம்பு ல போட்டுருவாங்க என்று இனியா படபடவென பொரிய தொடங்கினாள்.,” சூர்யா பெரியவனாக இனியாவை அதட்டி -னான்.

    “அவ குட்டி பொண்ணு., குழந்தைங்க எப்பவும் அழகு தான்…. அதுக்காக நீ கத்திரிக்காய் சொல்லுவியா., தப்பு இனியா சாரி கேளு…,”

      “நான் ஒன்னும் இவகிட்ட சாரி கேட்க மாட்டேன்., நான் எதுக்கு இவட்ட சாரி கேக்கணும்., நான் அவளை விட அழகு தான்., என்று பேச்சை தொடங்கவும்…,”

       “முகிலன் வந்து ஆமா இனியா குட்டி நீ அழகு தான்…, அவளைப் பற்றி பேசுவதெல்லாம் நீ கணக்குல சேர்க்காத…, உன் பிரண்ட் இருக்காலே அவ கீதா வோட அக்கா…, அவ அப்படித்தான் பேசுவா., தங்கச்சியோட பிரெண்ட் அப்படி ன்னு சப்போர்ட் பண்ணி பேசுறா., நீ இதுக்காக யோசிக்க கூடாது டா இனியா குட்டி…, நீ எப்பவுமே அழகுதான் என்று பேசினான்…,” முகிலன் தன் தங்கையின் மனம் வருத்தப்படக்கூடாது என்ற காரணத்திற்காகவும்., தங்கை இதை நினைத்து தன் படிப்பிலோ மற்றவற்றிலும் கவனம் இழக்கக்கூடாது என்ற காரணத் -திற்காகத்தான்…  அவன் முதலில் அப்படி பேச தொடங்கியது. ஆனால் இனியாவின் பிடிவாதம் அதன்பிறகு தான் வளரத்தொடங்கியது.

     சூர்யா வந்து இனியாவை சமாதானப்படுத்தி விட்டு., வெண்மதியும் சமாதானப்படுத்தி விட்டு., “இனியாவிடம் மதி குட்டி உன்ன விட சின்ன பொண்ணு., குட்டி பொண்ணு ட்ட பேசுறவங்க எல்லாரும் அழகா இருக்க பாப்பா ன்னு தான் சொல்லுவாங்க….”

        “அவள மாதிரி நீயும் சின்னகுட்டியா இருக்கும் போது எல்லாரும் அப்படி தான் சொன்னாங்க… இப்ப நீ வளர்ந்து ட்ட மா…  நீ பெரிய பொண்ணு இல்ல அதனால பாப்பா வ அப்படி பேசக்கூடாது., அவ உன்ன விட சின்ன பொண்ணு…,  சின்ன பொண்ணு ட்ட போய் போட்டி போடுற மாதிரி பேசுற.., மத்தவங்க பேசுறது க்கு எல்லாம் வருத்தப்படக்கூடாது என்று சொல்லி ஒரு பெரியவனாக அறிவுரை வழங்கினான்….”

  ஆனால் “இனியாவோ  இல்லவே இல்லை நான் தான் அழகு.,  என் முகத்தில் பரு வந்ததை வைத்து தான், அந்த சீதா சொன்னாள்… என்று கீதாவின் அக்கா சொன்னதையே பிடித்துக் கொண்டு அதையே பெரும் பிரச்சினையாக கிளப்பி விட்டாள்…”

             அதிலிருந்து அவளுக்கு யாரும் வெண்மதியே அழகு என்று சொல்வது பிடிக்காது., அப்போதுதான்  “முகிலன் இடம் சொன்னால் இவளை இனிமேல் கத்திரிக்காய் என்றுதான் கூப்பிட வேண்டும் என்று.,  யாரும் அவளை பெயர் சொல்லி கூப்பிடக் கூடாது” என்றாள் அதற்கு இனியாவின் பெற்றோர் கண்டித்தனர்..,

       “என்ன பேச்சு இனியா இதெல்லாம்., சின்னப்பிள்ளை மாதிரி பண்ணாத வரவர நீ பெரிய புள்ள., சின்ன புள்ள மாதிரி என்ன இது என்று சொல்லி இனியாவின் தாயார் கண்டித்தார்…,”

      இனியாவின் தந்தையோ “ஒரு படி மேலே போய்  இப்படியா பேச கத்து கிட்டு வருவ., உன்ன ஸ்கூலுக்கு படிக்க அனுப்பினா என்ன கத்துகிட்டு வர்ற என்று சொல்லி சத்தம் போடவும்., இனியாவிற்கு அதிகமான கோபம் வந்தது.,  அதன்பிறகு அவளை எங்கு பார்த்தாலும் கத்தரிக்காய் என்று தான் அழைப்பது இனியாவின் வழக்கம்… இது அவளுக்கு சந்தோஷமான சந்தோஷத்தை கொடுத்தது..,” இப்படியே ஒரு வாரம் போக..,

         அன்று பள்ளியில் இருந்து திரும்பிய வெண்மதி எப்போதும் போல் சூர்யாவிடம் போய் பள்ளியில் நடந்த கதையைச் சொல்லிக் கொண்டிருக்கும் போது, பின்புறமாக வந்த இனியா அவளை வேண்டுமென்றே கத்திரிக்கா என்று சொல்லி தலையில் தட்டி விட்டு போகவும்., கோபம் வந்து அவளைப் பார்த்து  “நீ ஜிராஃபி., நீ தான் அப்படி வளர்ந்து இருக்க ஜிராஃபி மாதிரி…,  என்று சண்டை தொடங்கிவிட்டது.,”

          “நீ வளராம கத்தரிக்காய் மாதிரி இருக்க, அதுக்காக என்ன பாத்து ஜிராஃபி ன்னு சொல்லுவியா…, நான் ஒன்னும் ஜிராஃபி இல்ல நீ தான் கத்திரிக்கா என்று அவள் சொல்லவும்.,”

      “முகிலன் ஏதோ ஒரு விஷயத்திற்காக இனியா விற்கு சார்ந்து பேசவும்., வெண்மதி மீண்டும் சொல்லத் தொடங்கினால் நீயும் ஜிராஃபி தான்…  அண்ணன் தங்கச்சி நீங்க ரெண்டு பேரும் ஜிராஃபி என்று சொல்லவும்..,  முகிலனோ நீ  ன்னு சொன்ன உனக்கு இருக்கு கத்திரிக்கா..,” என்றான்..

“என்னை கத்திரிக்கா சொன்னா நான் அப்படி தான் பேசுவேன்.,” என்றாள்…

    “சூர்யா வோ மதிம்மா., நான் சொன்னா கேட்ப இல்ல., நம்மளை விட மூத்தவங்களை மரியாதை இல்லாமல் பேசக் -கூடாது சரியா… என்று சொல்லவும்.,” அழகாக அவளுடைய குட்டி இரட்டை பின்னல் ஆட தலையசைத்து சம்மதம் தெரிவித்தாள்…

       முகிலனோ  “அவனும் தான் வளர்ந்து போய் இருக்கான்..,  அவனை என்ன ஜிராஃபி ன்னு சொல்லுவியா” என்று சொன்னதற்கு….

     “இல்ல அவங்க என் அண்ணன் நான் அப்படி சொல்ல மாட்டேன்… நீங்க ரெண்டு பேரும் தான்., ஜிராஃபி…, போங்கடா லூசு” என்று சொல்லித் திட்டி விட்டு கிளம்பி விட்டாள்…

   அதன்பிறகு இனியாவிற்கும் வெண்மதிக்கும் எங்கு பார்த்தாலும்.,  ஜிராஃபி , கத்திரிக்காய் என்ற பேச்சோடு சண்டை வர தொடங்கியது., அப்படி ஒருநாள் சண்டை வரும்போது தான்…

        முகிலன் இனியாவிற்கு சார்ந்து பேசுவதாக நினைத்துக் கொண்டு வெண்மதியிடம் “ஜிராஃபி இருக்கு இல்ல நடந்து போனாலே அழகா இருக்கும்…, கத்தரிக்காய் என்ன பண்ணும் தெரியுமா உருண்டு உருண்டு போகும் என்று சொல்லி கிண்டல் செய்யவும்.., வெண்மதி அழ தொடங்கி விட்டாள்.,” அப்போது தான் சூரியா வந்து வென்மதியை அருகில் அமர்த்திக் கொண்டு அவளை சமாதானம் செய்ய தொடங்கினான்.

    “மதி குட்டி எல்லாரும் சொல்றதெல்லாம் நீ மனசுல எடுக்கக் கூடாது…, நீ சின்ன பொண்ணுடா இன்னும் வளர்ந்து வரும் போது உயரமா வளர்ந்து வந்துருவ…”

        இப்ப போய் ” ஜூ ல பார்த்தோம்னா.,  ஜிராஃபி இருக்கும்., ஜீப்ரா  இருக்கும்., சிங்கம் , புலி இருக்கும்.., எல்லா அளவிலும், உயரத்திலும்., ஒரே அளவு கிடையாது..,”

       ஆனாலும் “ஒவ்வொன்றும் ஒவ்வொரு  விதத்தில் அழகு டா.,  ஆனால் நம்ம பொருத்தவரை மனசு அழகா இருக்கனும்., அது தான் முக்கியம் வெளி அழகு எல்லாம் சும்மா….  இப்ப  இதுஎல்லாம் யோசிக்க கூடாது என்று சொல்லி சிறு குழந்தைக்கு சொல்வது போல சொல்லி.,  விலங்குகளை உதாரணமாகக் காட்டி எது எப்படி இருந்தாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் அழகு என்பதை புரிய வைத்தான்…”

         “அவன் பேசுவதை அப்படியே ஏற்கும் வெண்மதி மனதின் அழகோடு., அக அழகு வெளியே தெரியும் விதமாக வளர்பிறை நிலவாக வளர்ந்து வந்தாள்…,” அதன்பிறகும் நாட்கள் செல்ல செல்ல வெண்மதி இனியாவின் வீட்டிற்கு போவதை குறைத்துக்கொண்டாள்., ஏனெனில் இனியாவின் பேச்சும் போக்கும் அதிக பிடிவாத தோடு இருந்ததால் வெண்மதியே அங்கு அதிகமாக போவது கிடையாது…

      ஏனெனில் அவள் பேச்சு எப்பொழுதும் அடுத்தவர்களை மட்டம் தட்டும் விதமாகவும், அழவைக்கும் விதமாகவும் இருக்கும்… எனவே இவள் வெளியே இருந்தே சூர்யாவை பார்த்து பேசி விட்டு வருவாள்.,

       அதன்பிறகு சூர்யா தேர்வு எழுதி வேலைக்கு செல்வதற்காக தயார் செய்து கொண்டிருந்ததால், அவனுடன் பேசும் நேரங்கள் குறைந்து விட்டாலும் எப்போதாவது தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுவான்., இவளுடைய படிப்பு இவளு -டைய அன்றாட நிகழ்வுகளை அவனும் தெரிந்து கொண்டே இருப்பான்…  இனியாவிற்கு தான் அது பிடிக்கவே பிடிக்காது…

        சூர்யாவிற்கு அவர்கள் வழக்கப்படி சீக்கிரமாகவே திருமணம் செய்ய பேசும்போது அவன் முடியாது என்று சொல்லிவிட்டான்…,  தான் ஒரு வேலைக்கு  அமர்ந்த பிறகே திருமணம் என்று சொல்லிவிட்டான்…

       அவனுடைய சொந்த அத்தை மகளை திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருந்தது.., ஆனால் அதைப்பற்றி அதற்கு மேல் யாரும் பேசுவது கிடையாது., அவர்களெல்லாம் சொந்தத்தில் தான் ஒன்று விட்ட இரண்டு விட்ட சொந்த்திற்குள் முடித்துக் கொள்வார்கள்…, அப்படித்தான் அவர்கள் இனத்தில் நடந்துகொண்டிருந்தது.

                 இனியா கல்லூரியில் சேர்ந்திருந்தாள்.., அவள் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும்போது., வெண்மதி பள்ளி இறுதியில் இருந்தாள்.., முகிலன் கல்லூரியில் தன்னுடைய பிஜி முடித்துவிட்டு  ஆசை பட்ட வேலைக்கு முயற்சி செய்வது என்ற எண்ணத்தோடு சுற்றிக் கொண்டிருந்தான்….

Advertisement