Advertisement

அத்தியாயம் 1

கடலலைகளின் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருந்த நிசப்தமான இரவில் காற்றை கிழித்துக்கொண்டு சீரிப்பாய்ந்தது அந்த விலையுயர்ந்த
ஜாகுவார் கார். அந்த காரின் வேகமே பிரதிபலித்தது அவனின் கோவத்தை. ஆம் சினம் கொண்ட சிங்கமாய் தன் முழு கோபத்தையும் அந்த கார் ஸ்டியரிங்கில் காட்டிக்கொண்டிருந்தான் அவன். கார் வேகமெடுக்க எடுக்க அவன் கோபம் அதிகமானதே தவிர குறையவில்லை.

கோபம் தீரும்வரை
சீரிப்பாய்ந்தவன் நின்றது தன் இல்லத்தின் முன் தான். வண்டியை போர்டிகோவில் நிறுத்தியவன் அமைதியாக உள்ளே நுழைந்தான். அந்த பறந்து விரிந்திருந்த முகப்பில் அவன் தாய் யசோதா அவனுக்காக கத்துக்கொண்டிருந்தார். அவர்களை ஒரு பார்வை பார்த்தவன் தன் அறையில் சென்று முடங்கினான் எங்கு தன் கோபத்தினால் தன்னவர்களை காயப்படுத்தி விடுவோமா என்ற அச்சத்தில்.

அவன் அறையில் இருந்து கடிகாரம் இரண்டு முறை கூவியது. இரவு இரண்டு மணி ஆகியும் தனக்காக காத்திருந்த அன்னையை நினைத்து சந்தோஷ படுவதா கோபப்படுவதா என்று தெரியவில்லை எதுவாக இருந்தாலும் நாளை பேசிக்கொள்ளலாம் என்று முடிவெடுத்தவன் கட்டிலில் கண்ணயர்ந்தான்.

மறுநாள் காலை அவன் அலைபேசி கத்திக்கொண்டிருக்க அதை அணைத்தவன் எழுந்து சென்று தன் தினசரி பயிற்சிகளை மேற்கொண்டான். இரவு தன் தமையனை காணாது உறங்க சென்ற அபி காலையில் எழுந்ததும் அவன் உடற்பயிற்சி கூடத்தில் இருப்பான் என்று யூகித்து அங்கு சென்றான். அவன் நினைப்பை பொய்யாக்காது தன் உடலை மெருகேற்றும் கடமையை செவ்வனே செய்துகொண்டிருந்தான் அவனின் அன்பு தமயன் ஹர்ஷாவர்தன். இரவு இருந்த கோபம் தணிந்திருந்தாலும் அவன் முகத்தை எப்போதும் போல் இறுக்கமாகவே வைத்துக்கொண்டிருந்தான்.

தன் தமையனிடம் உற்சாகமாக “ஹர்ஷா எப்போ வந்த நேத்து நைட் நான் உனக்காக ரொம்ப நேரம் வெய்ட் பண்ணிட்டு இருந்தேன்”

“நைட் லேட் ஆகிடுச்சு அபி”

“அது எனக்கும் தெரியும் எங்க போன” என்று அபி விசாரிக்க , அபியிடம் எதையும் மறைக்காதவன் அவனிடம் “கீர்த்தி தர்ஷனை கல்யாணம் பண்ணிக்க ஒகே சொல்லிருக்கா” என்று உணர்ச்சிகள் துடைத்த குரலில் கூற அதில் அதிர்ந்தவன் “ஹர்ஷா நீ பேசுனியா அவங்ககிட்ட”

“இல்ல”

“பேச வேண்டியது தானே”

“அவ பணத்துக்காக தான் என்னை ரிஜெக்ட் பண்ணிட்டு தர்ஷனுக்கு ஒகே சொன்னா” என்று ஏளனமாக கூறியவனுக்கு நேற்று நடந்தவை நியாபாகத்திற்கு வர அந்த அறையில்கருந்த சாண்ட் பேக்கை குத்தினான்.

அபிக்கு ஒன்று மட்டும் விளங்கியது ஹர்ஷா முதல் முறையாக கீர்த்தி விஷயத்தில் தவறிழைத்துவிட்டான் என்று அதை அவனிடம் சொல்ல இது சரியான தருணம் இல்லை என்பதை உணர்ந்தவன் அமைதியாக அங்கிருந்து சென்றான்.

காலை உணவு உண்ண அமர்ந்திருந்தவன் தன் தாயிடம் “அம்மா ஹர்ஷா சின்ன குழந்தையா அவனுக்காக விடிய விடிய விழிச்சிட்டு இருந்திருக்கீங்க. எனக்கு புரியல நீங்க ஏன் உங்க உடம்பை இப்படி கெடுத்துக்குறீங்கன்னு” என்று அர்ச்சித்துக்கொண்டிருந்தான் அபிவர்தன்.

எப்போதும் போல் அவனின் செல்ல அதட்டல்களை வாங்கியவர் அவனுக்கு உணவை பரிமாறிவிட்டு ஹார்ஷாவிற்காக காத்துக்கொண்டிருந்தார்.

அபி மனதில் “ஒருத்தன் இவ்ளோ சொல்றேன் எங்கயாச்சு மதிக்கிறாங்களா” என்று நொந்துகொண்டவன் தன் உணவில் கவனத்தை திருப்பினான். அவன் உண்ண ஆரம்பித்த சில நிமிடங்களில் தன் சட்டையின் கையை மடித்துவிட்டபடி மாடியிலிருந்தது இறங்கினான் ஹர்ஷா.

ஹர்ஷா இறங்குவதற்கும் குரு வருவதற்கும் சரியாக இருந்தது. அவசர அவசரமாக வந்த குரு அபியின் காதை கடிக்க அபி அவனை கண்ணசைவிலேயே அமைதியாகினான். குருவும் எதுவும் பேசாது உண்ண அமர்ந்தான். சிங்கத்தின் கண்களுக்கு இது புலப்படாமல் இருக்குமா என்ன.. ஆனால் ஹர்ஷா எதுவும் பார்க்காதது போல் உண்டுவிட்டு எழுந்தான்.

குருவுக்கு பரிமாறி கொண்டிருந்த யசோதவிடம் அபி “அம்மா இன்னிக்கி வர லேட் ஆகும் நீங்க எங்களுக்கு வெய்ட் பண்ண வேண்டாம்” என்றுவிட்டு எழுந்தவன் அப்போது தான் சாப்பிட தொடங்கிய குருவை கையோடு அழைத்து சென்றான். குரு “டேய் அவன் எவ்ளோ டிஸன்ட்டா சாப்பிட விட்டான் நீ என்னடான்னா சாப்பிட உட்கார்ந்தவன இழுத்துட்டு வர”

“போதும் டா ஆஃபீஸ் போய் சாப்பிடுவோம் வா”

“ஏன்மா ரெண்டு பேரையும் ஒரே நேரத்துல தான பெத்தீங்க அவன் எவ்ளோ பொறுமை இருக்கான் இவனும் இருக்கானே” என்று கத்திக்கொண்டே சென்றான். அவன் கத்தியதை கேட்டு அனைவர் முகத்திலும் சிறு புன்னகை கீற்று வர தான் செய்தது.

யசோதாக்கு தெரியும் என்னதான் இருவரும் இரு வேறு துருவங்களாக இருந்தாலும் ஒருவரை ஒருவர் எப்போதும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள் என்று.
ஹர்ஷா ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருக்க குரு அதிர்ந்து அவனிடம் “எப்பா ராசா தயவுசெய்து இறங்கு நான் வண்டிய ஓட்டுறேன்”
“ஏன்”
“டேய் நம்ம ஆஃபீஸ் தான் போகணும் பரலோகம் இல்ல நேத்து நீ வண்டி ஓட்டுனதை நான் பார்க்கலனு நினைச்சியா. என்னமோ பாஸ்ட் அண்ட் ப்ஃயூரியஸ்ல வர வின் டீசல் மாதிரி ஓட்டுற என்ன நினைச்சிட்டு இருக்க உன் மனசுல முதல கீழ இறங்கு” என்று ஒரு நண்பனாக அவனை கடிந்துகொள்ள ஹர்ஷா சிலை போல் அமர்ந்திருந்தான் குரு அவனை முறைத்துவிட்டு “அழுத்தக்காரான்” என்று அவனை திட்டிவிட்டு பின்னிருகையில் அமர்ந்துகொண்டான்.
அபி “அசிங்க பட்டான் ஆட்டோ காரன்” என்று அவனை கலாய்த்துக்கொண்டிருந்தான், ஹர்ஷா அவனை ஒரு பார்வை பார்க்க அதில் அடங்கியாவன் தனது தொலைபேசியில் கேம் விளையாட தொடங்கிவிட்டான். இதுவே இவர்கள் வழமை. ஹர்ஷவர்தன் அபிவர்தன் இருவரும் இரட்டையர்கள் ஆனால் இருவரும் இருவேறு துருவம். ஹர்ஷவர்தன் அமைதியானவன் ஆனால் அழுத்தக்காரன் எப்போதும் எளிமையாகவே வாழ்பவன் அவனுக்கு நேரெதிர் அபிவர்தன் சரியான சேட்டைக்காரன் பணத்தை எப்படி செலவு செய்ய கூடாது என்பதை அவனிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும் ஆனால் எதிலும் பிடிவாதம் பிடிக்காதவன் தன் சகோதரின் மேல் உயிரையே வைத்துள்ளவன். இதற்கு சான்று தான் ஹர்ஷாவின் விருப்பப்படி எந்த ஒரு ஆடம்பரமும் இன்றி நான்கு வருடங்கள் அவன் தேர்ந்தெடுத்த கல்லூரியிலே படிப்பை முடித்தான்.

ஹர்ஷாவிற்கு அந்த நான்கு வருடம் எதுவும் பெரிதாக தெரியவில்லை ஆனால் பாவம் அபிக்கு தான் அந்த நான்கு வருடங்கள் யுகமென கடந்தது.

தூங்காநகரமென புகழ்பெற்ற மதுரையில் தன் தாய் ரேணுவிடம் அர்ச்சனை வாங்கிக்கொண்டு கல்லூரிக்கு கிளம்பிக்கொண்டிருந்தாள் சாஹித்யா.​
ரேணு “ஒரு நாள் சீக்கிரம் எழுந்துக்குரிய எப்போவும் லேட் தான். உனக்கு கல்யாணம் பண்ணி கொடுத்தா அங்க போயும் என் மானத்தை வாங்குவ போல” என்று கத்திக்கொண்டிருக்க சாஹி “அம்மா அப்படியே நான் கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் என்கூட சேர்ந்து பத்து மணி வரை தூங்குறவனை தான் கல்யாணம் பண்ணிக்குவேன்” என்று பதில் கூறிவிட்டு அங்கிருந்து நழுவ அவளின் தாய் “பொம்பள பிள்ளையா அடக்கமா இருக்காளா பாரு எப்போ பாரு வாய் அடிக்கிறது இவ எப்போ தான் திருந்த போறாளோ” என்று தன் கணவர் மகேஸ்வரனிடம் புலம்பிக்கொண்டிருந்தார் அவரோ “விடு ரேணு சின்ன பொண்ணு அவ அதெல்லாம் சீக்கிரம் சரி ஆவிடுவா” என்று தன் மகளுக்கு பரிந்து பேச அவருக்கும் சேர்ந்து அர்ச்சனை விழுந்து

Advertisement