Advertisement

                   அத்தியாயம் 4

பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த  கட்டிடத்தினுள் நுழைந்த அபி தன் தமையன் இருக்கும் அறை நோக்கி செல்ல ஹர்ஷா அவனை புருவமுடிச்சோடு பார்த்துக்கொண்டிருந்தான்.

அபி “ஹர்ஷா. நீ மிஸ் பண்ணிட்ட யூ should ஹாவ் மெட் her” என்று கூற அவனை புரியாமல் பார்த்தவன் “யாரை டா”

“என்னோட வருங்கால அண்ணியை”

“அஞ்சலியை பார்த்தியா” என்று அவன் கேட்க அதில் முழித்தவன் “அஞ்சலி யாரு” என்று கேட்ட அதில் தலையில் அடித்துக்கொண்டவன் “நீ எனக்காக பார்க்க போன பொண்ணு பெரு தான் அஞ்சலி”. அப்போது தான் ஆளை மாற்றி சந்தித்தது அவனுக்கு புரிய தலையை கோதிக்கொண்டே ஹர்ஷாவை பார்த்து அசடு வழிந்தவன் “சாரி ஹர்ஷா, நான் ஆளை மாத்தி பார்த்துட்டேன்”

“சுத்தம்”

“பட் ஹர்ஷா அஞ்சலிய விட சாஹித்யா தான் உனக்கு perfect மேட்ச்”

“சாஹித்யாவா”

“ஆமா, மதுரை பொண்ணு IT டிபார்ட்மெண்ட். இங்க ஒரு ப்ரெசென்டஷன் பண்ண வந்தாங்க”

“எஸ் ஐ know her. அவளை perfect மேட்ச்னு எப்படி சொல்ற”

“சிம்பிள்.. she is simple, intelligent and beautiful.. இதுக்கு மேல என்ன வேணும்”

“அபி இது ரொம்ப சில்லியா இருக்கு. கொஞ்ச நாள் அவளை வாட்ச் பண்ணனும் அதுக்கு அப்பறம் தான் எதுவா இருந்தாலும் டிசைட் பண்ணணும்”

“சரி உன் இஷ்டம்” என்றுவிட்டு அவன் கேட்ட கேள்விகளை சமாளித்துவிட்டு அபி தன் அறைக்கு சென்றான்.

வாழ்க்கை நாடகமா..

என் பொறப்பு பொய் கணக்கா..

தினந் தோரும் வெறும் கனவா..

ஏன் விதியை எழுதையிலே..

அந்த சாமியும் உறங்கியதையே…

என்று வழியெல்லாம் பாடிக்கொண்டும் புலம்பிக்கொண்டும் வந்த சாஹியை பார்த்து சிரித்துக்கொண்டே வந்தனர் நண்பர்கள் அனைவரும்.

மாயா “இப்போ எதுக்கு இப்படி புலம்புற”

“அவன் ஒகே சொல்லிட்டான் dude. இதான் சாக்குன்னு உடனே கல்யாணம் பண்ணி வச்சிட்டா என்ன பண்றது”

“அதெல்லாம் அபிகிட்ட சொன்னா அவர் பார்த்துக்குவார்” என்று மாயா கூற அவளை குறுகுறுவென பார்க்க மாயா சட்டென்று அமைதியானாள்.

சாஹி வீட்டினுள் நுழைய பிரேம் அவளை முறைத்துக்கொண்டிருந்தார். அவர் முறைப்பதை பார்த்த  ‘இவரு எதுக்கு முறைகிறாரு’ என்று அவள் மனதினுள் நினைத்துக்கொண்டு அவரிடம் “இப்போ எதுக்கு மாமா இப்படி முறைக்குறீங்க”

“மாப்பிள்ளைய பார்த்தியா”

“ம்ம் பார்த்தேன்.. ஏன் என்ன ஆச்சு”, அவள் பொய் உரைக்க மாட்டாள் என்று அவருக்கு நன்றாக தெரியும் அதனால் மீண்டும்

“பார்த்தியா” என்று அவர் குழம்பி பார்க்க, சாஹி “இவரு ஏன் ஷாக் ஆகிறார்” என்று நினைத்து கொண்டு “ஆமா பார்த்தேன். ஆனா அவர் வரல அவரோட தம்பி தான் வந்தாரு”

“மாப்பிள்ளைக்கு தம்பி கிடையாது அவரு வீட்டோட ஒரே பையன்” என்று பிரேம் கூற சாஹி முகம் மலர்ந்து “அப்போ நாங்க ஆள மாத்தி பார்த்துட்டோம் போல” என்று குதூகளிக்க பிரேம் அவர் தலையில் கொட்டி “உங்க அம்மாகிட்ட சொல்லு அதை”

“நோ மாம்ஸ்.. அவங்க கிட்ட சொன்னா அவ்ளோ தான்”

“ஏதோ.. நீயே சமாளி உங்க அம்மாவை.. ப்ரொஜெக்ட் என்ன ஆச்சு”

“ராஜா கைய வச்ச அது ராங்கா போனதில்ல” என்று அவள் இல்லாத காலரை தூக்கி விட அவர் சிரித்துக்கொண்டே அங்கிருந்து சென்றார்.

அறைக்கு வந்த சாஹி மாயாவை தழுவி “தன்க்ஸ் மாயா பேபி.. நீ இன்னிக்கி ஆளை மாத்தி பார்க்கமா இருந்திருந்தா.. நான் மாட்டிருந்திருப்பேன்” என்று அவள் கூற அவளுக்கு ஒரு புன்னகையை பரிசாக வழங்கியவள் குளியலறைகுள் புகுந்தாள்.

ஏனோ அவளுக்கு அபியின் முகமே கண்முன் வந்து இம்சித்தது.

ஹார்ஷா வேலைகளை முடித்துக்கொண்டு வீட்டினுள் நுழைய அங்கு ஒரு பெரிய பட்டாளமே அவனுக்காக கத்துக்கொண்டிருந்தது. அவர்களை நோக்கி தன் கூர் பார்வையை செலுத்தியவன் விறுவிறுவென தன் அறைக்கு செல்ல அவன் பின் விசில் அடித்துக்கொண்டே வந்த அபி வீட்டினுள் இருந்த கூட்டத்தை பார்த்து தன் தாயிடம் வந்தவன் அவர்களுக்கு மட்டும் கேட்கும் குரலில் “யாரு மாம் இவங்க”

“ஹர்ஷாக்கு பார்க்க போறதா சொன்ன பொண்ணு. நீங்க ஈவினிங் அவளை பார்க்க போல அதான் உங்க அப்பா அவங்களை இங்கயே வர சொல்லிட்டாரு” என்று முடிக்க அவன் அமைதியாக ஹர்ஷாவின் அறைக்கு சென்றான்.

ஹர்ஷா தன்னை சுத்த படுத்திக்கொண்டு வெளியில் வர அங்கு போனில் pubg ஆடிக்கொண்டிருந்த அபியிடம் “யாருடா அவங்க”

“உன்ன மாப்பிள்ளை பார்க்க வந்திருக்காங்க ப்ரோ” என்று நக்கல் தோணியில் கூற அவனை ஒரு பார்வை பார்த்தவன் டீ – ஷர்ட் ட்ராக்குடன் கீழே சென்றான்.  ஹாலில் தன் பெற்றோர்களுக்கு நடுவில் நீல நிற புடவையில் அமர்ந்திருந்தவளை ஒரு வினாடிக்கும் கீழ் பார்த்தவன் தன் தந்தையுடன் சென்றமர்ந்தன்.

விமல் “ஹர்ஷா அஞ்சலிக்கிட்ட ஏதாவது பேசணும்னா போய் பேசு” என்றிட அவளை அழைத்துக்கொண்டு தோட்டத்திற்கு சென்றான். அழகிய மஞ்சள் ரோஜாவின் நடுவில் இருந்த கல் இருக்கையில் அமர்ந்தவன் அவளிடம் “உங்களுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இருக்கா” என்று கேட்க அதில் திடுகிட்டவள் அவனை பாராது

“ஆம்” என்று கூற அவன் எந்த உணர்ச்சிகளும் வெளியில் காட்டது “நீங்க போலாம்” என்றிட அவளும் வந்த வழியே சென்றாள். அவளுக்கு பின் நுழைந்தவன் அவர்களிடம் பொதுவாக “எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பமில்லை” என்றுவிட்டு மேலேறினான் அபி சிரித்துக்கொண்டே “எனக்கு தெரியும்டா நீ இதான் சொல்லுவானு” என்று நினைத்துக்கொண்டு அவன் சென்ற திசையை பார்த்தான்.

பெண் வீட்டினர் அனைவரும் கிளம்பிவிட விமல் அபியிடம் ஏறிக்கொண்டிருந்தார். அபி அவர் திட்டுகளை சிரித்துக்கொண்டே வாங்கிக்கொள்ள, விமல் “உன்னை போய் திட்டுனேன் பாரு” என்று தலையில் அடித்துக்கொண்டார். அபி “அப்பா ஹர்ஷாக்கு ஏத்த பொண்ணு எனக்கு தெரியும். சீக்கிரம் அவளை உங்களுக்கு introduce பண்றேன்” என்றவன்

என்னை பார் நான் கைய தட்ட

உண்டாச்சு உலகம்

ஹே நான் சொன்ன பக்கம் நிக்காம சுழலும்

டேய் என் கூட சேர்ந்து கூத்தாடும் நிழலும்

உள்ளாற எப்போதும் உல்லாலா உல்லாலா

என்று பாடிக்கொண்டே ஏறியவனை விமலும் யசோதாவும் ஏதோ விசித்திர பிறவியை பார்ப்பது போல் பார்த்து கொண்டிருந்தனர்.

சாஹி ஊருக்கு கிளம்ப தன் உடைமைகளை அடுக்கிக்கொண்டிருந்தாள் ஜானு அவளிடம் “சாஹி அக்கா திரும்ப எப்போ வருவ”

“வருவேன் ஜானுமா சீக்கிரம் வருவேன்”

“ஐ அம் வெயிட்டிங்” என்றவள் அவளுடன் சேர்ந்து கதையலுத்தாள்.

இரவு 10 மணிக்கு  இரட்டையர்கள் காரை புயல் வேகத்தில் செலுத்திக்கொண்டிருக்க. அபி “வேண்டாம் ஹர்ஷா இன்னிக்கி உன்னால ஜெயிக்க முடியாது” என்று தன் காரை உறும்ம விட ஹர்ஷா இதழோர புன்னகையுடன் தன் காரை செலுத்தினான்.

ஒரு முனையில் திரும்பிய அபி முன்னுக்கு செல்ல ஹர்ஷா  க்ரீச்ச் என்ற சத்தத்தோடு காரை நிறுத்த எதிரில் நின்றவள்  ஓட்டுநர் இருக்கையில் இருந்தவனை நோக்கி “ஹலோ மிஸ்டர் கண்ணு தெரியல இவ்ளோ ஸ்பீடா வண்டி ஓட்டுற” என்று அவள் ஒருபுறம் கத்திக்கொண்டிருக்க மறுபுறம்  அழைப்பில் இருந்த அபி “ஹர்ஷா எங்க இருக்க நீ.. உன்னை ஆளையே காணும்” என்று அவன் கத்த  “இருடா” என்று அவனை அடக்கியவன் வண்டியை விட்டு இறங்கினான். 

11 மணிக்கு நடு ரோட்டில் இறக்கிவிட்டு சென்ற வண்டிக்காரனை திட்டிக்கொண்டிருந்தவள் இருளில் நிற்க பாயந்துகொண்டு  மின்விளக்குகள் நிறைந்த இடத்திற்கு செல்ல அப்போது சீரிப்பாய்ந்தது வந்த கார் அவளை இடிக்கும் அளவிற்கு நெருங்கி வந்து நிற்க கோபம் முழுவதும் அந்த ஓட்டுனரின் மீது திரும்பியது.

வண்டியிலிருந்து இறங்கிய ஹர்ஷா “நடு ராத்திரி நடு ரோட்டில் நீ என்ன பண்ற” என்று கேட்க அந்த குரலில் தொலைந்த தைரியம் மீண்டும் வர  “சார் நீங்களா.. நானும் வேற யரோனு நினைச்சேன்”

“நான் கேட்ட கேள்விக்கு பதில்” என்று புருவமுயர்தி அவன் கேட்க “அது ஒரு பெரிய கதை சார்”

“பரவால்ல நான் கேக்குறேன் சொல்லு” என்று கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக்கொண்டு காரில் சாய்ந்தபடி அவன் கேட்க “இன்னிக்கி ஊருக்கு போக ஸ்டேஷன் போனேன்னா அப்போ என் பிரிண்ட் அவளோட லேப்டாப்பை வீட்லயே வச்சிட்டு வந்துட்டேன்னு சொன்னா அதான் அதை எடுத்துட்டு பஸ்ல போலாம்னு பஸ் ஏறினேன் அந்த பஸ்ல டிக்கெட் கொடுத்தவன் ஓவரா பேசிட்டான் அதான் எறங்கிட்டேன். அதுக்கு அப்பறம் தான் தெரிஞ்சிது அவன் என்னை ஹை வேல விட்டுட்டு போய்ட்டானு… ” என்று கூறி “அது தான் நடந்தது” என்றால் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு.

“இப்போ எப்படி போக போற”

“என்னோட மாமாக்கு கால் பண்ணிருக்கேன் சார். வரேன்னு சொன்னாரு சரின்னு கிராஸ் பண்ணி நிக்கலாம்னு வரும்போது தான் உங்க கார் வந்தது” என்று பேசிக்கொண்டிருக்கும் போதே தன் தமையனை தேடி அபி வந்துவிட்டான்.

அபி காரை நிறுத்திவிட்டு “இவன் எந்த பொண்ணு கூட பேசிட்டு இருக்கான்” என்று யோசித்தவாறே அவர்களை நெருங்க எதர்ச்சியாக திரும்பிய சாஹி அவனை பார்த்து “ஹாய் ஜி” என்று அபிக்கு கை காட்ட அவனும் அவளை பார்த்து புன்னகை மலர “ஹாய் சாஹித்யா.. என்ன ஹை வேல தனியா நின்னுட்டு இருக்க”

“என்ன ஜி கண்ணு தெரியல என்கூட ஒருத்தர் இருக்காரே” என்று அவனை கேலி செய்ய அவன் “அப்படி யாரும் என் கண்ணுக்கு தெரியலையே சாஹித்யா” என்று அவளை வம்பிழுக்க மெதுவாக அபியின் பக்கம் வந்தவள் “நிஜமா தெரியல”

“அட நிஜமா பா எனக்கு தெரியல.. இது வேற ஆக்சிடெண்ட் zone. இங்க abnormal அக்ட்டிவிடிட்ஸ் நிறைய நடக்குதுன்னு கேள்வி பட்டிருக்கேன். ஒருவேளை பேய்யா இருக்குமோ” என்று பயந்த குரலில் அவன் கூறி முடிக்க நடு இரவில் தனியாக நின்றதில் முன்னமே பயந்திருந்தவள் அவன் கூற்றை நம்பி கண்களில் கண்ணீர் ததும்ப அவனை ஏறிட அதை பார்த்த ஹர்ஷா அபியின் முதுகில் ஒன்று வைத்து “போதும் டா.. பாவம் பயந்துட்ட” என்று கூற அபி இவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த சிரிப்பை சிரிக்க அவனை தீயாய் முறைத்தவள் எதுவும் பேசாது அவர்களை விட்டு சற்று தள்ளி சென்று நின்றுகொண்டாள்.

அவளின் அந்த செயலில் இரட்டையர்கள் இருவரும் அவள் பயத்தை உணர்ந்துகொள்ள அபி “சாரி சாஹித்யா.. நான் சும்மா விளையாடுவேன்” என்று அவன் கூற பதிலேதும் பேசாமல் அமைதியாக நின்றாள். ஹர்ஷா அவளை கூர்ந்து கவனித்துவிட்டு “உனக்கு இருட்டுனா பயமா” என்று புருவம் சுருக்கி கேட்க “ஆம்” என்பது போல் தலையசைத்தவள் வேறெதுவும் பேசாமல் நிற்க ஹர்ஷா “அபி அவளை பஸ்ல ஏத்தி விட்டுட்டுடு” என்று கட்டளை பிறப்பித்தவன் அவளை நோக்கி “ரெண்டு பேர் சார்பா நான் சாரி கேட்குறேன்.. அவன் உன்னை பஸ்ல ஏத்தி விடுவான் அவன்கூட போ” என்று அவனுக்கு சற்றும் பொருந்தாத மென்மையான குரலில் பேச அபி அவனை ஆச்சிர்யமாக பார்க்க அவன் கண்களாலேயே கிளம்பும்படி செய்கை செய்தான். 

Advertisement