Advertisement

அத்தியாயம் 4  

           இரண்டு நாட்கள் சென்றபின் மருத்துவமனையில் எத்தனையோ பரிசோதனைகளுக்கு பிறகும் எதனால் நரேனின் கால்கள் பாதிக்கப்பட்டது. இடுப்பிற்கு கீழ் உணர்வு இல்லாத நிலை எப்படி வந்தது என்று மருத்துவர்களாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. நரம்புகளில் ஏதேனும் பாதிப்பு இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தார்கள். அது சம்பந்தப்பட்ட மருத்துவர்களை பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்திருந்தனர். இன்னும் முழுமையாக சரியாக விட்டாலும் வீட்டிற்கு செல்வோம் என்று அவனது பிடிவாதத்தை அவனது காயத்தின் அளவைப் பார்த்து மருத்துவமனையில் பிடித்து வைத்திருந்தனர். அதற்குள் வீட்டில் அவனுக்கு தேவையான வசதிகள் செய்யும்படி ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர்..

         மதிய உணவிற்கு பிறகு அவனுக்கு கொடுக்க வேண்டிய மாத்திரைகளை கொடுத்து தூங்க சொல்லிவிட்டு அந்த அறையின் கதவை சாத்திவிட்டு வெளியே வந்து முன்னறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது., லலிதா மனம் தாங்காமல் ராஜசேகரிடம் “அதே முகூர்த்தத்தில் அந்தப் பெண்ணுக்கு திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்து விட்டார்களாம், கேள்விப்பட்டேன். நீங்களும் உடனே ஒரு பொண்ணு பாருங்க” என்று சொன்னார்.

     ராஜசேகரோ பொறுமையாக எடுத்துக் கூறிக் கொண்டிருந்தார்.  “நீ கொஞ்சம் அமைதியா இரு., அவனுக்கு ன்னு எழுதி வைத்திருக்குற பொண்ணு அவனுக்கு கிடைக்கும்., நீ ஏதாவது பேச போக ஏற்கனவே இரண்டு பேர் பேசி ஒரு வழி பண்ணிட்டு போய்ட்டாங்க…, அவனுக்கு தெரிஞ்சா வருத்தப்படுவான், பேசாம இரு அவனையும் சேர்த்து டென்ஷனாக்காத” என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

       அப்போது லலிதாவும் “ஏன் என் பிள்ளைக்கு என்ன.,  அவனுக்கு கண்டிப்பா உடனே பொண்ணு பார்க்கணும்” என்று கொஞ்சம் சத்தமாக சொன்னார்.

        உள்ளிருந்து நரேன் அழைக்கும் குரல் கேட்டு., கல்யாண் வேகமாக உள்ளே சென்றான்.

         “அம்மா அப்பா வை உள்ள கூப்பிடு ணா” என்று சத்தமாகச் சொன்னான்.

      அதேநேரம் வினோதா அவள் கணவனோடு,  நரேனை பார்க்க அங்கு வந்து இருக்க.,  நரேனின் கோபத்தை முழுமையாக அன்றுதான் பார்த்தனர் ..

        “அம்மா உங்களுக்கு ஒரு தடவைக்கு ரெண்டு தடவை அசிங்கப்பட்டு இருக்கீங்களே., மறுபடியும் பொண்ணு பார்க்கணும் சொல்றீங்களே, நீங்க கொஞ்சம் கூட யோசிக்கவே மாட்டீங்களா.,  நீங்க உங்கள மட்டும் அசிங்கப்படுத்தலை மா..,  என்னையும்  சேர்த்து  அசிங்க படுத்துறீங்க..,  நீங்க பொண்ணு பார்த்து வச்சு இருந்தீங்களே,  அந்த பொண்ணு வீட்ல என்ன சொன்னாங்க..,  என்று சொல்லி அவர்கள் சொல்லியது எல்லாம் சொல்லிக் காட்டி, அவங்க பொண்ணு என்ன வீல் சேர் தள்ளவா வரச் சொல்லுறீங்க ன்னு சொன்னாங்க.,  கடைசி வரைக்கும் சரியாகாம போச்சுனா., என் பொண்ணு உங்க வீட்டில் எதுக்கு இருக்கனும் அப்படின்னு கேட்டாங்க..,  இன்னும் எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா வார்த்தை எல்லாம் நிறைய போட்டிருப்பாங்க..,  மனசுக்குள்ள நினைத்திருப்பாங்க., மீறி வெளியே சொல்லாமல் போயிருக்கலாம்., அப்படி ஒரு சிட்டுவேஷன் ல இருந்துட்டு திரும்ப திரும்ப பொண்ணு பாக்க  சொல்றீங்க”., என்று நிறுத்தியவன் சற்று அமைதியாகி பின்.,

        “அது மட்டும் இல்லாம உங்க அண்ணன்  கிட்ட போய் பொண்ணு கேட்டீங்களே.., உங்க அண்ணன் என்ன சொன்னாரு., உங்க அண்ணன்  அதைவிட கேவலப்படுத்தினாங்க.., அப்பவும் உங்களுக்கு  மனசுக்கு புரியலை இல்ல., என்னைய இன்னும் கேவலப்படுத்த நினைக்கிறீங்க.,  திரும்பத் திரும்ப இன்னும் எத்தனை வீட்டுலப்போய் பொண்ணு கேக்க போறீங்க..,  அத்தனை பேரும் இதே கேள்வியைத்தான் கேட்பாங்க.,  உங்க அண்ணன் கேட்டாரே.,  உன் பையனால நல்ல புருஷனா இருக்க முடியுமான்னு அதே கேள்வியைக் கேட்பாங்க., பரவாயில்லையா , என்னை  அவமானப்படுத்த வேண்டும்., அப்படினா போங்க”.., என்று நரேன் வேகமாக கத்தினான்.

      லலிதா வாயை மூடிக் கொண்டு அழுதார்.  “எனக்கு எதுவும் பிடிக்கல.,  நீங்க ஓவரா ஏதாவது பண்ணிக்கிட்டே இருந்து இரீடேட்  பண்ணிட்டு இருந்தீங்க னா., யார் கிட்டயாவது சொல்லி எதையாவது வாங்கி சாப்பிட்டுட்டு செத்துருவேன்.. இல்ல னா பக்கத்துல தான் எல்லா  மாத்திரை யும் இருக்கு.,  எல்லாம்  எடுத்துப் போட்டுட்டு போயிருவேன்,  ஞாபகம் வச்சுக்கோங்க” என்று கத்தி விட்டு முகத்தை மூடிக்கொண்டு அழுகையோடு “என்னை திரும்ப திரும்ப கேவலப்படுத்தாதீங்க.,  ஏற்கனவே பாதி செத்துட்டேன்., முழுசா கொல்லாதீங்க”.., என்று சொன்னான்.

         லலிதா ஒருபுறம் அழ..,  வினோதா ஒரு புறம் அழ., அங்கு நிலைமை பரிதாபமாக இருந்தது..,  கல்யாண் கண்களிலும் கண்ணீரை வெளியே விடாமல் ‘மறுபடியும் பேசி பார்ப்போமா’ என்று நினைத்தான்..,  ஆனால் தம்பி சொன்னது போல் ‘அவனை கேவலப்படுத்துவதாக அவன் நினைத்து விடக்கூடாது’ என்று நினைத்து கொண்டான். ஆனால் ‘கண்டிப்பாக அப் பெண் வீட்டாருக்கு ஒரு பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும்.,  தம்பியை அவமானப்படுத்திய மாமனுக்கும் ஒரு பாடம் கற்பிக்க வேண்டும்., அதற்கு சமயம் வரும்போது கற்றுக் கொடுக்கலாம்’ என்று எண்ணிக் கொண்டான் ..

            அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை  யோசித்தவனாக அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும்., என்பதை அழகாக திட்டங்களாக வகுத்துக் கொண்டான்.

      அம்மாவையும் சத்தம் போட்டு அவன் மனம் நொந்து போயிருக்கும் நேரத்தில் இது தேவையில்லாத வேலை அமைதியாக இருங்கள் என்று தனியாக சொல்லி அவரை சமாதானப்படுத்தி விட்டு., அது போல அப்பாவிடம் அம்மாவை பார்த்துக் கொள்ளுங்கள்.,  எல்லாம் சரியாகும் நான் நரேனிடம் பேசுகிறேன் என்று சொல்லி அவரையும் சமாதானப்படுத்தி வைத்தான்.

             பிறகு நரேன் அருகில் போய் அமர்ந்தவன்., நரேனிடம் “எதையும் போட்டு மனதை குழப்பாதே எல்லாம் சரியாகிவிடும்” என்று சொன்னதோடு அவனுக்கு வீட்டில் என்னென்ன வசதிகள் வேண்டும்., எப்படி எப்படி செய்ய வேண்டும் என்பதை அவனிடமே கேட்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வீட்டிற்கு போவதை பற்றி மருத்துவரிடம் கேட்கிறேன்., என்று சொல்லிக்கொண்டிருந்தான்.

     ” இல்ல. எனக்கு இங்க இருக்க பிடிக்கல.,  என்ன எங்கேயாவது கொண்டு போய் விட்டுட்டு” என்று கண்கலங்க சொல்வதை கண்டவன் அவனை தன் தோளோடு சேர்த்து கொண்டு “நான் இருக்கேன் டா.,  நான் உன்ன பார்த்துப்பேன்”., என்று சொல்லும் போது நரேனும் கல்யாணை கட்டிக் கொண்டு கண்ணீர் வடித்தான். அந்தச் சூழலில் கல்யாண் ற்கு  நரேன் இன்னும் சிறுவயது தம்பியாகவே தெரிந்தான்.

        ராமநாதனுக்கும்.,  நிர்மலா விற்கும்., வீட்டில் வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது.

        “எதுக்கு இவ்வளவு அவசரப்படுற., அதே மூஹுர்த்தத்தில் கல்யாணம் பண்ணனும் ன்னு என்ன கட்டாயமா”.., என்றார் ராமநாதன்.

          ” ஏன் இப்ப என்ன…, இந்த பையனுக்கு என்ன குறைச்சல், என் பிரண்டோட பையன் நல்ல பையன் எல்லாருக்கும் தெரியும்., இதுக்கு மேல என்ன வேணும்., அவங்களும் பொண்ணு பார்த்திட்டு இருந்தாங்க…, அவங்களுக்கும் அமையல., நமக்கு இப்படி ஒரு சிட்டுவேஷன் வரும் போது அவ கேட்டா., நான் சரின்னு சொன்ன உடனே., அவளும் சரின்னு சொல்லி பொருத்தம் எல்லாம் பார்த்து உடனே ரெடி பண்ணிட்டோம்., நாங்க ரெண்டு பேரும் பிரண்ட்ஸ் தானே., இதுல நீங்க ஏன் யோசிக்கிறீங்க.” என்று ராமநாதனிடம் விவாதம் செய்தாள்.

       “யோசிச்சிக்கோ., அவசரப்படாதே நாளைக்கு இத வச்சி ஏதும் பிரச்சினை வரக்கூடாது…, இப்ப இவ்வளவு அவசரமா கல்யாணம் வைக்கனுமா., என்னதான் இருந்தாலும் அவங்க அரசியல் குடும்பத்தில் உள்ளவங்க…, நாளைக்கு ஏதும் பிரச்சினை வந்துடக் கூடாது, அதுக்கு தான் சொல்றேன்., நீ புரிஞ்சு நடந்துக்கோ” என்று சொன்னார்.

         அதற்கு  “முடியவே முடியாது என்று அடம் பிடித்து.,  திருமணம் கண்டிப்பாக அதே நாளில் நடந்தே ஆகவேண்டும்”.என்று சொன்னதோடு,  அவள் மாப்பிள்ளையின் பெயர் மட்டும் மாறி விட்டது என்று சொந்த பந்தங்களுக்கு ஒரு அறிவிப்பு விட்டாள். வேறு வழி இன்றி ராமநாதனும் அதில் சரி என்று சொல்லும்படியாக இருந்தது. ஏனெனில் அபர்ணாவின் வாழ்க்கை இது என்பதால்.

        நிர்மலாவின் அண்ணனும் அப்பாவும், சரி என்ன பண்ண, பொம்பள புள்ள வாழ்க்கை.,  அபர்ணாவும், சரின்னு சொல்லிட்டா.., அவளே சரி என்று சொல்லும் போது நமக்கு என்ன என்று சொல்லி எல்லோரும் அமைதி அடைந்தாலும்..,  அபூர்வாவிற்கு  மட்டும் மனம் கொள்ளாத கோபம் இருந்து கொண்டே இருந்தது.

                  திருமணத்திற்கு பத்துநாள் இருக்கும் போதே தன் மாமாவிடம் வந்து பேசுவதற்கு அமர்ந்தாள்.  “என்னம்மா ஆபீஸ் கிளம்பலையா” என்று கேட்டார்.

Advertisement