Advertisement

நிலவு வானொலி -3

வழமை போல் கல்லூரி பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. இன்று தான் ப்ராஜெக்ட் குழு பிரிப்பதாகச் சொல்ல படக் கல்லூரி கிரௌண்டில் அனைவரும் கூடிருந்தனர்.

மார்ட்டின் மற்றும் பானு ஆசிரியருடன் குழு பிரித்துக் கொண்டிருக்க ஏனையவர்கள் அமர்ந்து கதையடித்துக் கொண்டிருந்தனர்.

வெண்ணிலாவை நெருங்கிய நித்யா “மூக்கி காலேஜ் வந்து ஒரு வாரம் ஆகுது இன்னைக்கு வருவாளா நிலா?”

“எத்தனை நாள் ஓடி ஒழிய முடியும் வந்து தான் ஆகனும் வருவா இரு பார்ப்போம்” என்றவள் பக்கத்தில் இருக்கும் பெண்ணிடம் பாடத்தைப் பற்றி எதையோ கேட்க தொடங்க,

நித்யா வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டாள். சில நிமிடங்கள் சென்று தூரத்தில் ஓட்டமும் நடையுமாக இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தாள் சில்வியா.

அவளைக் கண்ட நித்யா வெண்ணிலா தோளை பற்றி உலுக்கி “சில்வி வாராடி” என்றதும் அவளும் தோழியைப் பார்த்துக் கை அசைத்தாள்.

அன்றைய நிகழ்வுக்குப் பிறகு தான் நடந்து கொண்ட முறையை எண்ணி சிறு சங்கடம் பிறக்க.யாரிடமும் சகஜமாகப் பேசவும் பார்க்கவும் முடியவில்லை போலும் பெண்ணுக்கு. ஒரு வாரம் காலேஜ் பக்கமே வரவில்லை. இன்று முக்கியமாக வர வேண்டிய சூழ்நிலை என்பதற்காக வந்திருந்தாள்.

நிலா கை அசைப்பதை பார்த்து விட்டு சிறு புன்னகை கொண்டு தலையைக் குனிந்த வாரே வந்து தோழிகளுடன் அமர்ந்து கொண்டாள்.

அவர்களுக்குச் சற்று தள்ளி தான் ஆனந்த், ரஃபிக், ராஜு, கபிலன் அமர்ந்திருந்தனர். ஆனந்த் சற்றுத் தோழிகள் பக்கம் நெருங்கி தாழ்ந்த குரலில்

“மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல! அல்ல! அல்ல! அதையும் தாண்டி கொடுமையானது!” என்க

அவன் சொன்ன தினுசில் நிலா நித்யா கல கலவெனச் சிரிக்க சில்வியா அதிர்ந்து அவர்களைப் பார்த்து விட்டு தலையைக் குனிந்து கொண்டாள். கண்கள் கலங்கியது பெண்ணுக்கு அதனைக் கண்டு கொண்ட கபிலன்.

“மூக்கி அழுது வைக்காத என்றவன் டேய் ஆனந்த் அவளை ஒட்டாத டா பாவம்”

“யாரு பாவம் அமுக்குனு மாதிரி இருந்து கிட்டு என்ன வேலை பார்த்து வச்சிருக்கா பார்” ராஜு

“ப்ச் டேய் விடுங்க டா” நிலா சொல்ல

“அது எப்படி விட முடியும் எங்க நண்பன் வாழ்க்கை” என்றதும் அனைவரும் அதிர்ந்து ரஃபிக்கை பார்க்க அவனோ தோழமைகளைப் பார்த்துக் கண் சிமிட்டி பேச தொடங்கினான்.

அவனது கேலி புரிந்து ராஜுவும் இனைந்து கொண்டான் “என்ன மச்சான் சொல்லுற?”

“ஆமா டா பாவம் மார்ட்டின் சூப்பர் பிகர் உஷார் ஆகுற நேரம் குட்டைய குழப்புனா என்ன செய்வான்” நண்பர்களின் கேலியை தாங்கி கொண்டிருந்தவள் இப்படிச் சொல்லவும் கோபமாக நிமிர்ந்து.

“நான் ஒன்னும் உன் நண்பனுக்குக் குறுக்க நிக்கல. உன் நண்பனை அந்தப் பொண்ணையே கட்டிக்கச் சொல்லு எனக்கு எதுவும் தேவலை என்றவள் தோழிகளைப் பார்த்து எல்லாம் உங்களைச் சொல்லனும் வேகமாக எழுந்து கொண்டே.

“என் உணர்வு உங்களுக்கெல்லாம் கேலி கூத்தா தெரியுதுல” அழு குரலில் சொல்லிவிட்டு அங்கிருந்து செல்ல போக. அவளைப் பிடித்துத் தடுக்க முயன்ற தோழிகளைக் கண்டு கொள்ளாமல்.

அவர்களது கையை வேகமாக உதறிய சில்வியா தனியாகச் சென்று அமர்ந்து கொண்டாள்.

நித்யா கோபமாக நண்பர்களைப் பார்த்து “ஏன் டா?” என்று முறைக்க.

“ஹே! அது என்ன சும்மா பேசனத்துக்கே கோச்சுக்கிட்டா நாங்க என்ன செய்ய.பார்க்க போன நம்பத் தான் கோப படனும்,

இத்தனை வருஷம் கூட இருக்கோம். அது எப்படி நம்பக் கிட்ட இருந்து மறைக்கலாம் அவ” என்றதும் நித்யா தன்னை எண்ணி அதிர்ந்து நிலாவை பார்க்க அவள் ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்கினாள்.

இவர்களுக்குள் மீண்டும் பேச்சு ஆரம்பிக்க அதனைத் தடுத்தது ஆசிரியரின் குரல் “லிசன் ஸ்டுடண்ட்ஸ் குரூப் அண்ட் டாபிக் பிரிச்சாச்சு. ப்ராஜெக்ட் பண்ண சின்னச் சின்னக் கம்பெனி போதும்.

சோ உங்க குரூப் மெம்பர்ஸ் கிட்ட டிஸ்கஸ் பண்ணிக்கோங்க. நீட் ப்ரசண்ட் பண்ணுங்க நேரம் நெறையா இருக்குக் கொஞ்சம் கவனமெடுத்து உங்க பேஸ்ட்ட கொடுங்க.

எல்லாரும் காலேஜ் வந்து அட்டெண்டன்ஸ் போட்ட பிறகு தான் ப்ராஜெக்ட் வேலைக்குப் போகனும்.

அதை மித்திர, செல்வம் பார்த்துப்பாங்க அப்படி வரலைனா அட்டெண்டன்ஸ் போட மாட்டாங்க சொல்லிட்டேன்.

“மார்ட்டின் நீங்க யார் யார் எந்தக் குரூப்ன்னு சொல்லுவான். ஒரு குரூப்புக்கு மூன்று பேர் தான்” என்றதும் மாணவர்கள் சல சலக்க அதில் ஒரு பெண் மேம் அஞ்சு பேராவது வேணும் தானே.

“வேண்டாம் நிறையக் கம்பெனி இருக்கு சோ பண்ணுங்க கூட்டம் வேண்டாம். அதுவுமில்லாம ஒரே மாதிரியே எல்லாரும் பண்ணாம. பல டாபிக்ஸ் எடுத்து பண்ணுங்க உங்களுக்கு அடுத்த வர பட்ஜெக்கு யூஸ் ஆகும்” என்றதும்

“அது சரி” என்று முனகி கொண்டனர் மாணவர்கள் பட்டாளம்.

“சரி இன்னும் மூணு மாசம் டைம் இருக்கு நல்ல பண்ணுங்க ஆல் தி பெஸ்ட்” என்றவரை பார்த்து

“தாங்கியூ மேம்” என்று கோரஸ் பாடினர். ஆசிரியர் சென்றவுடன் மாணவர்களுக்கு மத்தியில் வந்து நின்ற மார்ட்டின் தனது கணீர் குரலில்

“ப்ரண்ட்ஸ் எல்லாரும் கேட்டுக்கோங்க ரோல் நம்பர் ரிஜிஸ்டர் நம்பர் படி குரூப் பிரிக்கல. பொதுவா தான் பிரிச்சிருக்கு

நம்பக் கிளாஸ்ல பொண்ணுங்க ஸ்ட்ரென்த் பதினஞ்சு தான். சோ இரண்டு பையன் ஒரு பொண்ணுன்னு குரூப் போட்டு இருக்கு.

அப்போ தான் ஒருத்தருக்கு ஒருத்தர் ஹெல் பண்ண முடியும் என்றவன் சக தோழிகளைப் பார்த்து “இது ஓகே தானேப்பா வேற வழியும் இல்ல” என்றதும் பெண்களுக்குள் சிறு முணு முணுப்பு.

அதில் ஒருத்தி “நாங்க தனித் தனியா இருக்குற மாதிரி இருக்கும் மார்ட்டின்” என்றவளை பார்த்து.

“இல்ல பிரியா அப்படி இருக்காது பக்கத்துல பக்கத்து ல கம்பெனி இருக்குற மாதிரி பார்த்துக்கலாம் அட்ஜஸ்ட் பண்ணுங்கப்பா” என்றதும் அவர்களும் வேறு வழியில்லாமல் ஒத்து கொண்டனர்.

அதன் பின் சரியாகக் குழு பிரிக்கப் பட்டுக் கொண்டே வர அதில் மார்ட்டின் கபிலன் சில்வியா ஒரு குழுவாக வர அதிர்ந்து நிமிர்ந்து மார்டினை பார்க்க.

அவனோ தனது வேலையில் மும்மரமாக இருந்தான்.

நண்பர்கள் குழு தான் ஆ வெனப் பார்த்து வைத்தது பானு இவர்களுடன் வந்து அமர்ந்து கொண்டவளை எட்டி பார்த்த கபிலன் “ஏய் பானு குரூப் யாரு பிரிச்சாடி”

“மேம் தான்” என்றதும் கபிலன் அவளைக் கூர்மையாகப் பார்க்க அதில் திருத் திருவென முழித்தவள்.

“இல்ல மார்ட்டின் தான்” என்று மெல்லிய குரலில் முனக சிரிப்பை விழுங்கியவன்,

“அது சரி என்னை எதுக்குடி சேர்த்து வச்சிருக்கான்” என்றதும் சுற்றி முற்றி பார்த்த பானு நண்பனை நெருங்கி பேச வர. அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த மற்ற நண்பர்கள் குழுவும் ஆர்வமாக நெருங்கியது அதனைக் கண்ட பானு

“இப்போ எதுக்கு எல்லாம் இப்படிக் கிட்ட வரீங்க தள்ளி போங்கடா”

“ஏன் எங்களுக்குத் தெரிய வேணாமா அது என்ன அவனுக்கு மட்டும் சொல்லுறது” ராஜு எகிற தலையில் அடித்து தொலைங்க!… பல்லை கடித்தவள்,

கபிலனை பார்த்து “கபி மார்ட்டின் சில்வி மேல செம காண்டுல இருக்கான்டா ஏன்டா இப்படினு கேட்டதுக்கு?

அவளை வச்சுச் செய்யத் தான்னு சொல்றான். உன்னையும் அதுக்குத் தான் சேர்த்து வச்சிருக்கான் நான் கேட்டதுக்கு இதைத் தான்டா சொன்னான்”

“ஹே! இது என்ன பிடிக்கலைன்னா பிடிக்கலன்னு போக வேண்டியது தானே அவளை எதுக்குப் படுத்தனும்” நிலா நியாயமாகக் கேட்க.

“விடு அவன் மனசுல என்ன இருக்குனு தெரியாம எதுவும் பேச முடியாது நமக்கு இரண்டு பேரும் முக்கியம் அவன் எதாவது பண்ணா பார்த்துக்கலாம் அதான் கபி இருக்கானே கூட” என்றதும் சிறுதும் யோசிக்காமல்

“நான் பார்த்துக்குவேன் மூக்கிய கவலை படாதீங்க” என்றான் கபிலன்.

“ஏற்கனவே ஒருத்தி காதல்னு பண்ணி நம்பப் பேச்சை கேட்காம கல்யாணம் பண்ணி நித்தமும் கண்ணு முன்னே சாவுறா இப்போ இவ” ஆனந்த் வலியுடன் சொல்ல.

“ப்ச் நம்ப மார்ட்டின் அப்படிக் கிடையாதுடா” கசப்பை விழுங்கி கொண்டு ராஜு சொல்ல அனைவரும் மௌனமாகி விட்டனர்.

சிறகடிக்கும் நாட்கள் என்றால் அது கல்லூரி காலம் தான்.நண்பர்களின் கேலியும், கிண்டலும், பரிவும், சில அழகான காதலும், பல நெருக்கமான நட்பும், மெல்லிய உணர்வுகளாகத் தீண்டி இன்பத்தை வாரி வழங்கும் பருவம்.

எதையும் எதிர் பார்க்காத நட்பு. அந்த நட்புக்காகக் கடக்கும் எல்லை. வரையறை இல்லாத கோட்பாடுங்கள் கொண்ட இக்காலம் ஒவ்வொருவருக்கும் பொக்கிஷம் தான்.

இக்காலம் எத்தனை இன்பத்தை வாரி தருகிறதோ அதே அளவு ஒரு சிலருக்கு ஆறா வடுவையும் கொடுத்தே தீரும் அதில் ஒருவள் தான் வைஷ்ணவி இந்த நண்பர்கள் பட்டாளத்தில் ஒருவள்.

இரண்டாம் ஆண்டு இறுதியில் இருக்கும் போது நண்பர்களுக்கே தெரியாமல் காதல் என்று ஒருவனைத் திருமணம் செய்து விட்டு வர சர்ச்சையாகி போனது. பெரும் போராட்டத்திற்குப் பிறகு பெற்றவர்கள் தொலைந்து போ என்று விட்டுவிட.

நண்பர்கள், சில கல்லூரி ஆசிரியர் துணையோடு மீண்டும் அவளைக் கல்லூரிக்கு அனுமதித்தனர்.

ஏனென்றால் நன்றாகப் படிக்கக் கூடிய பெண் அவள். அவளது எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு படிப்பை தொடர வைத்தனர்,

ஆனால் இந்த ஒருவார காலமாக அவள் கல்லூரிக்கு வரவில்லை.

நண்பர்களுக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்டதால்.அவர்களும் பேச்சை நிறுத்தி கொண்டனர். அதனால் அவர்களுக்கும் அவளை பற்றி தெரியவில்லை.

ராஜுவின் சொல்ல படாத காதல் வைஷ்னவி என்றதால் அவன் மட்டுமே உள்ளுக்குள் மருகினான்.

வைஷ்னவி நினைவில் ராஜு முகம் கசங்க அவனைத் தோளோடு அணைத்த ரஃபிக் ஆறுதல் சொல்ல. தனது நண்பனை பார்த்து சிறு வலியோடு சிரித்து வைத்தான் ராஜு.

அவனது நிலையை அறிந்த கபிலன் “இன்னும் இரண்டு நாள் பார்க்கலாம் டா அவ வரலைனா நம்ப வீட்டுக்கே போயி பார்த்துடலாம்” என்றான்

“நம்பத் தான் அவளைப் பத்தி யோசிக்கிறோம் அது நம்பள யோசிச்சு எதாவது பண்ணுச்சா” என்றால் பானு.

“விடு பானு போதுங்குற அளவுக்கு அவளைத் திட்டியாச்சு ரொம்ப கஷ்ட பட்டுட்டா பாவம் அவ” என்றால் நித்யா.

“எனக்கு என்னமோ பயமாவே இருக்கு. புள்ள புடிக்கிறவன் மாதிரி இருக்கான் அவன் மூஞ்சியும் ஆளும்” என்றால் நிலா.

“இல்லப்பா அப்படி சொல்லாத விசாரிச்சு வரைக்கும் தண்ணி போடுவானு சொன்னாங்க வேற எதுவும் தப்பா சொல்லல” என்ற ராஜூவை பார்த்து அதிர்ந்த நண்பர்கள் பட்டாளம்

“டேய் நீ இதெல்லாம் விசாரிச்சியா டா” என்றதும் சிறு முறுவல் கொண்டு

“நான் ரசிச்சு ஆசை பட்டு பார்த்த பொண்ணு டா அவ நல்ல இருக்கனும்” என்றதும்

“அட நல்லவனே நீயெல்லாம் இந்தக் கிரகத்துல இருக்க வேண்டிய ஆள் இல்லையே” ரஃபிக் வம்பு செய்தாலும் அவனது மனதையும் தூய்மையான அன்பையும் எண்ணி அவனது கழுத்தை வளைத்து அனைத்துக் கொண்டான்.

இவர்கள் பேசி கொண்டிருக்கும் போதே அவர்களை நெருங்கிய மார்ட்டின் “என்னடா குரூப் ஓகே தானே?… என்ன எல்லாரும் ஒரு மாதிரி இருக்கீங்க” என்றவாறே அமர

“ப்ச் வைஷு பத்தி பேசிகிட்டு இருந்தோம் அதான்”

“ஹ்ம்ம் என்றவன் சிறு அமைதிக்கு பிறகு ராஜூவை பார்த்து கொண்டே “அவளுக்கு எதோ பெரிய பிரச்சனை போல. சைனி அவ வீட்டுப் பக்கம் தானே சொன்னா விசாரிக்கச் சொல்லி இருக்கேன்” என்றதும் இன்னும் கலங்கி போனான் ராஜு.

“என்னடா சொல்லுற அப்போ இன்னைக்கே போயிடலாம் இரண்டு நாள் வெயிட் பண்ண வேண்டாம்” என்றான் கபிலன் பெண்களுக்கும் அது தான் சரியென்று தோன்றியது.

“மதிய சாப்பாடு வெளில பார்த்துக்கலாம். வெளி வேலை இருக்கு நானும் கபிலனும் போயி பார்த்துட்டு வரோம்” என்ற மார்ட்டின் தங்களுக்குப் பக்கவாட்டில் சற்று தள்ளி அமர்ந்திருக்கும் சில்வியாவை சுட்டி காட்டி “என்னவாம் அவளுக்கு?” என்று கேட்க.

நடந்ததைச் சுருக்கமாகச் சொன்ன நிலா சற்று தயங்கி “நான் கேக்குறேனு தப்பா எடுத்துக்காத மார்ட்டின் உனக்கு எதுவது ஐடியா இருக்கா அவ மேல” என்றதும் பட்டென

“என்கிட்ட எதுவும் கேட்காத நிலா ப்ளீஸ்” என்று விலகி செல்ல செய்வதறியாது நின்றனர் நண்பர்கள் குழு.

பிற்பகல் கல்லூரி முடிய கபிலனும் மார்டினும் வைஷ்னவி வீட்டை நோக்கி செல்ல பெண்கள் அனைவரும் சிறுது நேரம் அரட்டை அடித்து கொண்டிருந்தனர் சில்வியா மட்டும் கிளம்பிவிட்டாள்.

***

குளிர் காலத்தை நெருங்கி கொண்டிருக்கும் பருவம் போலும் இரவு வேளையுடன் இணைந்து கொண்ட காற்று சற்று இதமாக வீச கண்ணை மூடி நிலவு வானொலியை கேட்க தயாரானாள் நித்யா.

பொதுவாக ஸ்ரீ காலை இரவு என்று இரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவான் நேரம் கிட்டிய போது கேட்பாள் நித்யா.

இன்று மதியம் ப்ராஜெக்ட் வேலை இருந்ததால் இரவு வேளை தான் சிக்கியது. தனது அறையில் படுத்துக் கொண்டு அந்த ஹெட் போனை மாட்டியவள் கண் மூடி அவனது குரலுக்காகக் காத்திருக்க.

கேட்டது என்னவோ ஒரு பெண்ணின் குரல் “ஹாய்! வணக்கம் நான் உங்க மல்லிகா பேசுறேன் இன்னைக்கு ஸ்ரீக்கு உடம்பு சரியில்லாத காரணத்துல அவர் நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்க போறேன்” என்றதும் பதறி எழுந்தவள் தவித்துப் போனாள்.

அவனை எண்ணி இரவு முழுமையும் உறங்காமல் நீண்டு நின்றது.இப்பொழுதெல்லாம் ஒரு நாள் ஒரு பொழுது கூட அவனது குரல் இல்லாமல் கழிக்க முடியவில்லை என்பதை அதிர்வாக உள் வாங்கினாள் நித்யா.

Advertisement