Advertisement

ஓம் நமச்சிவாய.

உன் நினைவே என் சுவாசமானது.

அத்தியாயம். 18.

ஆறு மாதங்களுக்கு பின்..

பிரசவம் என்றாள் பிறக்கும் போது நாம் சவமாவோம் அதனால் வாழும் காலத்தில் நேர்மையுடனும் மனித நேயத்துடனும் வாழவேண்டும் என்பதை பிள்ளை பருவத்தில் இருந்து சவமாகும் வரை சொல்லி வளர்க்கவேண்டும்..

அதே போன்று பிள்ளை கருவில் உருவான காலத்தில் இருந்து பிறக்கும் வரை ஒரு தாய் மீண்டும் பிறந்து சவமாகும் இறுதி தருணத்திற்கு சென்றுவருகின்றாள். என்பதாகும். 

இதை உண்மை படுத்தும் வகையில் தான் எழில் தற்போது பிரசவ அறையில் அதிக வலியில் துடித்துக்கொண்டிருக்கின்றாள்..

ஆறுமதத்திற்கு முன் மூன்றாவது மாதத்தில் ஸ்கேன் பண்ணி பார்த்து மிகுந்த கவனதுடன் இருக்கவேண்டும் என டாக்டர் சொன்னதிலிருந்து எழில் நின்றால் நடந்தால் உணவு கட்டுபாடு உறங்கும் நேரம் என அனைத்து செயலிலும் பூமணி சாந்தி வீட்டிலிருக்கும் நேரம் செழியன் என அனைவரும் கண்ணில் வைத்து பார்த்துக்கொண்டனர். ஒவ்வொரு மாதமும் செக்கபிற்கு மூர்த்தியின் காரில் தான் மனையாளை அழைத்துச்சென்று மீண்டும் அழைத்துவருவது என ரொம்ப கவனமாக பார்த்துக்கொண்டான் செழியன்..

செழியனை விட்டு எழில் பிரிந்திருக்க முடியாமல் இரண்டு மாதத்திற்கு முன் ஏழாவது மாதத்தில் ஊரையே அழைத்து விருந்துவைத்து வளைகாப்பு பூட்டி சிறப்பாக செய்து முடித்தனர்..

மூர்த்தி செழியனை அவமதித்ததால் அவர் மன்னிப்பு கேட்டுக்கும் வரை செழியன் அங்கு வரவேண்டாம் அவளுக்காக அவளுடைய அப்பாவாக இருந்தாளும் தப்பே பண்ணாத கணவன் இறங்கி போவது பிடிக்காமல் சம்பிரதாயத்திற்கு வளையல் பூட்டிய அன்று முத்தரசி சாந்தியின் சம்மதத்தோடு அகிலத்தின் வீட்டில் ஒரு வாரம் இருந்துவிட்டு மீண்டும் கணவனை பிரிந்து அவனது கை அணைப்பு கதகதப்பு இல்லாமல் தூக்கமில்லாமல் தவித்தவள் செழியனை அழைத்து அகிலத்திடம் நல்ல நாள் பார்கச்சொல்லி கணவனுடன் அவளது வீட்டிற்கு சென்றாள் எழில்..

அவள் சொல்லியும் மூர்த்தி இன்னும் செழியனிடம் மன்னிப்பு கேட்காமல் வீம்புடன் இருப்பதனால் எழிலும் மூர்த்தியுடன் பேசுவதை விட்டுவிட்டாள்..

பாசமாக வளர்த்த மகள் தன்னுடன் பேசுவதில்லை என்பதில் மிகுந்த மனவருத்தம் இருந்தாலும் நல்லபடியா குழந்தை பிறக்கவேண்டும் மகளுக்கும் எந்தவித ஆபத்தும் இல்லாமல் பிளைத்து வரவேண்டும் என்று காவடி எடுப்பதாக நேர்ந்துகொண்டு மாலை போட்டிருக்கின்றார் மூர்த்தி..

முத்தரசிதான் மூர்த்தியை புரிந்துகொள்ள முடியாமல் தவித்தார் ஆனாலும் மகனின் வேண்டுதலிற்கு முழு உதவியும் செய்தார்..

இவ்வாறே இரண்டு மாதமும் கடந்து. 

டாக்டர் கொடுத்த நாளிலிற்கு இரண்டு நாள் முன்பு இன்று நள்ளிரவில் லேசாக வலி வரவும் அவளது அசைவினில் எழுந்துவிட்டான் செழியன் எழுந்ததும் சீக்கிரமாக அவளை தயார் படுத்தி சாந்தி பூமணி மாறன் என அனைவருக்கும் தகவல் சொன்னான். எந்த நேரமும் இதை எதிர் பார்த்ததால் மாறனும் தயாராகதான் இருந்தான் மாறன் கார் ஓட்டிச்செல்ல எழிலின் இருபக்கமும் சாந்தி செழியன் இருவரும் இருந்து அழைத்துச்சென்று அவளை செக்ப் பண்ணிய டாக்டர் லட்சுமி அம்மாவையும் அழைத்து தகவல் சொன்னதும் துரிதமாக அனைத்தையும் தயார் படுத்தி தாதியரும் வெளியில் தயார் நிலையில் இருந்தனர்.

மருத்துவமனையில் சேர்த்திருந்த நேரத்தில் இருந்து மூர்த்தி கண்மூடி ருத்ராட்சம் வைத்து மன்றாடியபடி இருக்கின்றார்.

முத்தரசி அகிலம் என அனைவரும் அவளுக்காக தவிப்புடன் மன்றாடியபடியே இருந்தனர்..

***********************

அன்புக்கொடி தற்போது ஐந்து மாதமாக இருக்கின்றாள்..

பாட்டியர் சங்கம் திட்டமிட ஆயத்தமானபோது மாறனிடம் கையும் களவுமாக மாட்டிவிட்டனர்..

முத்தரசி ராசாத்தி அகிலம் பூமணி இவர்கள் நால்வரும் செழியனின் வீட்டு மல்லிகை பந்தலின் கீழ் சங்கத்தை கூட்டினர்.

” என்னடி அகிலா இந்த சின்னதுகளை சரியான ஜோடி பார்த்து கட்டிவைக்கிறதுல இருந்து அவங்க சேர்ந்து வாழவைக்கிறதுக்கும் நாமதான் திட்டபோடவேண்டியதாக இருக்கு இப்புடியே மிச்ச காலமும் இவங்க பிள்ளைகளுக்கு திட்டம்போட்டே நம்ம காலம் போயிடும் போலயே..” என்று அங்கலாயாத்தார் முத்தரசி..

” ஆனா பாருங்க சம்மந்தி இதுலயும் ஒரு சந்தோசம் இருக்கு பாருங்க அதுவே இன்னும் ஒரு உத்வேகம் கொடுக்குது..” என்று  பூமணியிடம் அகிலம் பாட்டி பேசியபடிருந்தார்..

அன்று தான் இவர்கள் ராசாத்தியிடமும் சொல்லலாம் என நினைத்து அவரை அழைத்துவந்தனர்..

இவர்கள் என்ன பேசுகின்றார்கள் என தெரியாமல் முழித்துக்கொண்டிருந்தார் ராசாத்தி..

அகிலம்தான் மணிமாறன் அன்புக்கொடி திடீரென்று திருமணம் நடந்த விதத்தை எவ்வாறு எப்படி நடந்தது என்று படம் போட்டு காட்டுவது போன்று தெள்ளத்தெளிவாக சொல்லிமுடித்தார்..

இந்த வயதிலும் அந்த பெரியவர்களுக்கு ‘பகலில் பக்கம் பார்த்து பேசவேண்டும்’

என்பது தெரியாமல் அவர்களின் வீரதீர செயல்களை கூடியிருந்து பட்டியலிட்டுக்கொண்டிருந்தனர்..

அவனது கொடியிடையாளை அழைத்துச்செல்வதற்காக வந்தான் மாறன்.. அப்பொழுதுதான்  அவர்கள் பேசியதை கேட்டு அதிர்ச்சியாகி நின்றுவிட்டான்.

” என்னடா இது நம்ம பேர் ரொம்ப அடிபடுது என்னன்னு பார்ப்போம்..” என்று நினைத்து நின்றவன் அவர்கள் பேசியதை கேட்டு மிகுந்த அதிர்ச்சியாகி விட்டான்..

” என்னடா இது இந்த சுண்டெலி நம்மலை உருகி உருகி காதலிச்சிருக்காளா??.. இது புதுசால்ல இருக்கு அதை சாக்கா வைத்து இவங்க ஒரு திட்டம் போட்டு இப்படி நாடகமாடி என்னை ஏமாத்தியிருக்காங்க இதுல இந்த சுண்டெலியும் கூட்டா இருக்கு அவளுக்கு இன்னைக்கு கச்சேரி..” என்று நினைத்துவிட்டு அவன் கேட்டதை அவர்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக அவர்களின் முன்னால் வந்துநின்றான்..

அந்த நேரம் அவனை எதிர் பார்க்காதவர்கள் அகிலத்தை தவிர மற்றவர்கள் அதிர்ந்து எழுந்து என்றனர்..

” என்ன ராசா இந்த பக்கம் உன் மாமன்தான் பஞ்சாயத்து போர்ட் பிரசிடன்டை பார்க்க போயிருக்கானே அவனை தேடியா வந்த??.. ” என்று முகத்தை சாதாரணமாக வைத்துக்கொண்டு கேட்டார் அகிலம்..

” அதுவா அப்பத்தா என்னோட அதி புத்திசாலி அப்பத்தாவை முதலமைச்சர் தேர்தலுக்கு நிக்கவைக்க மனு தாக்கல் பண்ண அழைச்சிட்டு போகலாம்னு வந்தேன். ஏன்னா குடும்பத்துக்குள்ள திட்டம்போட்டு முன்னேற்றம் பண்ணுறதோட உங்க திறமையை முடக்கிடாம இந்த தமிழ்நாட்டை நீங்க முதலமைச்சராக வந்தா எங்கயோ கொண்டுபோயிடலாம் பாருங்க அதுதான் நல்ல சந்தர்ப்பத்தை ஏன் தவறவிடனும்னு வந்தேன்..” என்றான் மாறன்..

” டேய் பேராண்டி உன் அப்பனயே பெத்த அப்பத்தாடா இந்த அகிலம் எனக்கே நீ தில்லாலங்கடி ஆட்டம் போடுறியா??.. பிச்சிடுவேன் ஒழுங்கா எங்க மருமக அன்போட வாழ்க்கையை ஆரம்பிக்க தயாராகு இல்லன்னா நாங்க வேற மாதிரி முடிவெடுக்கவேண்டி வரும். பார்த்துக்க உன்னை கொலையா பண்ணச்சொன்னோம் உன் பொண்டாட்டியோட சேர்ந்து  வாழதானே சொன்னோம் அதுக்கு இப்புடி சலிச்சிக்கிர நீ.  உனக்கு கெட்டதா பண்ணிணோம் ஊரில் இல்லாத சீமை பொண்டாட்டியை அம்மா சொன்னான்னு கட்டிகிட்டு அவ செத்துப்போனதும் அவளை நினைத்து தேவதாஸு மாதிரி இரண்டு பொண்ணுங்களை வச்சிகிட்டு இருப்பாராம் இந்த ராசா. அந்த பக்கம்  என்னடான்னா அன்பு ராணி ராசாவ மனசுல நினைச்சிகிட்டு தவமிருப்பாங்களாம் இந்த கூத்தை பார்த்துக்கிட்டு குத்துக்கல்லாட்டம் நாங்க கண்ணு காதை மூடிகிட்டு எதுவும் தெரியாம இருக்கணுமாம் இது எந்த ஊர் நியாயமோ எனக்கு தெரியலடி முத்து..” என்று மாறனை கழுவி ஊத்தினார் அகிலம்..

பல்லை கடித்த மாறன் ” அப்பத்தா ஏதோ பண்ணி கட்டிவச்சிட்டிங்க அதை நான் இனிமே எதுவும் பண்ணமுடியாது. ஆனா வாழ்க்கையை எடுத்தேன் கவுத்தேன்னு ஆரம்பிக்கமுடியாது நான் தாயாளனுக்கு பொண்ணு பார்த்து ககட்டிவைக்கனும். இன்னும் பல வேலைகள் இருக்கு எல்லாத்துக்கும் மேல கலை தமிழுக்கு ஒரு ஐந்து வயசாகட்டுமேனு பார்கிறேன் இப்பவே அவங்க நடக்க ஆரம்பித்தபிறகு கொடியை ஒருவழி பண்ணுறாங்க பாவம் அவ இதுல அடுத்த குழந்தையும் உண்டானா அவளுக்குதானே கஷ்டம் அப்பத்தா அதைதான் யோசித்தேன்…” என்றான்..

இதை கேட்ட ராசாத்தி மாறனிடம்.” ஏன் மாப்பிள்ளை நாங்க இத்தனை பேர் இப்போ நல்லபடியா இருக்கும் போதே பெத்து தந்திங்கன்னா நாங்க வளர்த்துவிடுவமே இதுக்காக ஏன் காலத்தை தள்ளிப்போடுவானே பேத்திங்களுக்கு மூணு வயசாகிடுச்சி அடுத்த புள்ள பிறக்கும் போது எல்லாம் சரியா இருக்கும் பார்த்துக்கோங்க மாப்பிள்ளை…” என்றார்..

அவரை தொடர்ந்து  மற்றவர்களும் அதே போல் சொல்லவும் அவனும் யோசித்தான். ” ஏன் முத்து கெளவி உன் பேத்தியும் இப்போ உண்டாகி இருக்கா அவளுக்கும்  பிள்ளை பிறந்ததும் எத்தினை பேரை வளர்பிங்களாம்…” என்றான்..

” அட யாருடா இவன் நான் முத்து ராசாத்தி சம்மந்தி பூமணி சம்மந்தி சாந்தி உன் அப்பா தாத்தா மூர்த்தி எழில் அன்பு நீ செழியன் உன் தம்பி. இம்புட்டுபேர் சும்மாதானே இருக்கிறோம் ஒரு ஐந்து குழந்தைகளை பார்த்துக்கமாட்டோமா என்ன??.. நீ இனி மறுத்து பேசாம அடுத்த சாந்திமுகூர்த்த நாள் குறிக்கிறோம் வேற எந்த திட்டமும் இல்ல நீ தயாராகு அம்புட்டுதான் இதுக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்ல இனி..” என்று ஒரே போடாக போட்டார் அகிலம்..

அதன்பின் தீயாக வேலை செய்து மீண்டும் சாந்திமுகூர்தத்திற்கு நாள் குறித்து அன்று அன்பு மாறன் இருவரிடமும் நல்லபடியாக எடுத்து சொல்லி ஆசிவழங்கி பால் கொடுத்து மூத்த சுமங்கலியாக அன்பை அவர்களின் பரம்பரை கட்டில் போடப்பட்டிருந்த அறைக்குள் அனுப்பிவைத்தார் அகிலம்..

 

அன்று இயற்கையும் அவர்களை ஆசிர்வதித்தது போன்று அழகிய குளிர் காற்றோடு ரோஜா பூவில் இருக்கும் பனித்துளி போன்று வானம் தூறலின் மூலம் அவர்களின் காதல் மனதினை குளிர்வித்தது இந்த ரம்மியமான சூழலை ரசித்து அனுபவித்தபடியே வாழ்வின் அடுத்தகட்டமான தாம்பத்தியத்திற்குள் அடிவைத்தனர்..

சிலபல காரணங்களினாள் தள்ளிவைத்திருத்த பிரியாணி ஃபுள் மீல்சாக இன்று அவனின் கையில். கட்டிபிடித்து இச்சு கொடுத்து என புளியோதரையுடன் நின்ற மாறன் அவனது முப்பத்தியொராவது வயதுவரை முதலில் பிரம்மசாரியாக இருந்து சம்சாரவாழ்வில் முதலடியை எடுத்துவைத்தான்..

கொடியின் கொடியிடையின் மென்மையை சோதித்தபடி  மென்மையான கன்னியவளை வன்மையாக கையாண்டு அவனின் தாகத்தை தீர்த்தான். அதை மகிழ்வோடு மனையாளும் ஏற்றுக்கொண்டாள். 

ஓரளவிற்குமேல் அவனின் வன்மையை தாங்கமுடியாமல் துவண்டாள் கொடி அதை புரிந்து அவனின் மடமையை நினைத்து வெட்கி முத்தத்தால் அவளை அர்சித்து குளிர்வித்தான். அதனை தொடர்ந்து இச் என்ற சத்தமும் சிணுங்கள்களுமே அங்கு மொழியானது.

அதற்கடுத்து வந்த நாட்களிலும் அவர்கள் அழகான புளியோதரையுடனும் பகல் நேரத்தை கழித்து இரவில்  நேரத்துடன் வீட்டிற்கு வரும் நாளில்  பிரியாணியுடனும் வாழ்ந்து நாட்களை சந்தோசத்தோடு கழித்தனர் அதன் பலனாக தற்போது அன்பு ஐந்து மாத கருவை அவளின் மணி வயிற்றில் தாங்குகின்றாள்..

அவளால் அதிகமாக கலையும் தமிழையும் கவனிக்கமுடியவில்லை வளர வளர அவர்களின் துடினம் சேட்டையும் அதிகமாகியது மாறன்தான் அவர்களிடம் அன்பாக அவர்களுக்கு புரியும்  படி கெஞ்சிக் கொஞ்சி தாஜா பண்ணி என எடுத்துசொல்லி அவர்களை முழு நேரமும் அகிலத்தின் கவனிப்பில் விட்டுவிட்டான்..

அடுத்து அந்த வீட்டின் விதிமுறையை மாற்றினான். வேலைக்கு இரண்டு பெண்களை எடுத்தான் மேல்வேலைக்கும் சமையலுக்கும் வைத்தான். அன்பு அன்று சமைக்கும் உணவை பட்டியலிடுவாள் அருகில் இருந்து உணவின் ருசி மற்றும்  பதம் பார்த்து பக்குவம் சொல்லுவாள்..

அவன் சமையலுக்கு ஆள் வைத்ததை பெரியவர்கள் தடுக்கவில்லை அதற்கு ஒருகாரணம் அவன் பெரியவீட்டிற்கு வந்ததே பெரிது என்று நினைத்தனர். இனி இந்த வீட்டில் அவர்களின் காலம் முடிந்து விட்டது அடுத்து அனைத்தையும்  வழி நடத்திச்செல்லும் அரசன் அவன்தான். அடுத்து வசந்தி போன்று அன்பு சோம்பல் பட்டு சமைக்க ஆள் கேட்கவில்லை அகிலத்தின் மூலம் இந்த வீட்டு நடைமுறை  தெரிந்ததும். மாறன் ஆள் வைப்பதாக பெரியவர்களிடம் கேட்டபோது அவனின் மனையாள் தான் தடுத்தாள் அதன்பின் அவளை அதட்டி கொஞ்சி என அவனின் ஸ்டையிலில் சம்மதம்வாங்கினான் மாறன்..

அதனால் அன்பிற்கு போதியளவு ஓய்வு கிடைத்தது அவளை ராசாத்தி தினமும் வந்து கவனித்துசென்றார். அவரும் ஒரு பெண்பிள்ளையை அவரின் பொறுப்பில் எடுத்துக்கொண்டார்..

இருவரின் மனைவியரும் கருவுற்று இருப்பதனால் கூடிய கவனத்துடன் பார்த்துக்கொண்டனர் மாமனும் மருமகனும்..

இவ்வாறே நாட்கள் சென்று இதோ இன்று எழில் மூன்று மணிநேரமாக வலியுடன் போராடுகின்றாள்..

டாக்டர் லட்சமி அவரின் அனைத்து அனுபவத்தையும் இன்னும் இரண்டு  மகப்பேற்று மருத்தவர் தாதியர் இருவருர் என அவ்வறையில் மிகுந்த சவாலான பிரசவத்தில் ஈடுபட்டனர்..

மேலும் பல வலி கஷ்டம் என அனைத்தையும் தாயிற்கு கொடுத்து யாருக்கும் பாதிப்பில்லாமல் தாயின் வயிற்றிலிருந்து அழுகையுடன் கூடிய புன்னகையில் வெளியே வந்தார்கள் அன்புச்செழியன் எழிலரசியின் சீமந்த மக்கள்..

மிகுந்த பயத்துடன் இருந்தவர்களின் முகத்தில் சோபையான அழகிய புன்னகை..

எழிலை பார்கச்சென்ற சாந்தி நல்லபடியாக பெண்ணும் அவளின் பிள்ளைகளும் இருக்கின்றார்கள் என்று மூர்த்தியிடம் கூறியதும் தொடக்கு என்பதனால் பெண்ணை பார்க்காமல் அவரின் வேண்டுதலை நிறைவேற்றச்சென்றார்.. 

அவரின் இச்செயல் சாந்தியை தவிற மற்றவர்களுக்கு இவர் நல்லவரா?? கெட்டவரா?? என புரியாத புதிராக தெரிந்தார் சுந்தரமூர்த்தி…

மாமனுக்கு பிள்ளைகள் பிறந்துவிட்டார்கள் என மாறனும் அவனின் மாப்பிள்ளைகளை பார்க்கச்சென்றான் சிப்பி இமை மூடி அழகாக தொட்டிலில் உறங்கிக்கொண்டிருந்தார்கள்..

அந்த சந்தோசத்தை கொண்டாடும் விதமாக கைபேசியில் அவர்களின் நண்பன் அழகன் தம்பி கவி என அவர்களிடம் ஊர் மக்களுக்கு அறுசுவை விருந்து மீனாட்சி அம்மன் கோவிலில் ஆறு கால பூசைகள் என மாமனின் குடும்பத்திற்காக அமர்கலப்படுத்தினான் மாறன்.

 சாந்தி மாறன் செழியனை தவிற மற்றவர்கள் வீட்டிற்கு வந்து விருந்தில் பங்கெடுத்தனர்..

அனைவரின் கவனமும் விருந்திலிருந்ததாள் நொண்டி என்று அழைக்கப்படுபவன்  வந்து மாறனின் பெண்ணரசிகளை தூக்கிச்சென்றது யாரின் கவனத்திலும் பதியவில்லை…

செழியனை அருகிலிருந்த லாட்சில் ரூம் கொடுத்து சற்று நேரம் ஓய்வெடுத்து குளித்து வருமாறு கூறி அனுப்பிவைத்தான் மாறன்..

” பெரியம்மா நீங்களும் எழிலுக்கு பக்கத்து கட்டில்ல தூங்குங்க பாருங்க கண் சிவந்துபோய் இருக்குது..” என்று சாந்தியை அனுப்பிவைத்தான்..

அதன் பின் அவனும் ஆறுதலாக அவனின் கொடியை மனதில் நினைத்தபடியே இருந்தான்..

அப்போதுதான் அவனின் கைபேசி அழைத்தது அதை காதிற்கு கொடுத்தவன். ” ஹலோ” என்றான்.

” ஹலோ நான் நொண்டி பேசுறேங்க சின்னைய்யா உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உங்களுக்கு பாரமாக இருந்த உங்க மொத பொண்டாட்டியோட பெண் பிள்ளைகள் இரண்டு பேரையும் தூக்கிட்டேன்.. 

முடிந்தால் ஐந்து லட்சம் பணத்துக்கு விக்க ஏற்பாடு பண்ணிட்டேன்.  பாஸ் நீங்க இன்னும் ஒருமணி நேரத்துல நான் இருக்கிற இடம் கண்டுபிடித்து வந்து அதுக்கு அதிகமாக பணம் தந்து வாங்கிட்டு போங்க இல்லன்னா நான் பொறுப்பில்ல சரிங்களா?? வச்சிடட்டுங்களா..” என்று மாறனை கோபத்தின் உச்சத்திற்கு அழைத்துசென்றான்..

மாறனும் துரிதமாக தாதியரிடம் அவன் அவசரமாக வெளியே போவதாகவும் எழிலையும் பிள்ளைகளையும் கவனமாக பார்த்தக்கொள்ளும் படி பத்திரம் கூறிவிட்டு செழியன் வந்ததும் அவனுக்கு அழைக்கசொல்லும் படி கூறிவிட்டு கவிமாறனுக்கு அழைத்து பிள்ளைகள் வீட்டில் இல்லயா? என்பதை உறுதிபடுத்திக்கொண்டு வேகமாக தேடிச்சென்றான்..

நொண்டி என்பவன் யார்??..

எவ்வாறு அவர்களை கண்டுபிடிப்பான் என்பதை அடுத்த அத்தியாயத்தோடு சீக்கிரம் வருகின்றேன்..

சுவாசம் சீராகும்…

Advertisement