Advertisement

நினைவு 05
மீனுவும் சிந்துவும் சிறிது நேரம் ஓய்வு எடுத்து விட்டு பிறகு காலை உணவை சாப்பிட்டு முடித்து எல்லாரும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்தனர்.
பிறகு நாளை பொங்கல் என்பதால் மீனு வீட்டில் அனைவரும் கடை வீதிக்கு சென்று தேவையான பொருட்களை எல்லாம் வாங்கி வந்தனர்…
“அக்கா இன்னைக்கு நாம எப்பொழுதும் போகிற பூங்காவுக்கு பொய்ட்டு வரலாம் ப்ளிஸ் ” என்க
சிந்து அப்படி கேட்டதும் மீனுவின் முகத்தில் இருந்த புன்னகை முற்றிலுமாக மறைந்தது.. அடுத்த நொடியே வராத சிரிப்பை வர வைத்துக் கொண்டாள் மீனு.
அவள் முகம் வாடியதை கவனித்த சிந்து  “பரவாயில்லை அக்கா நாம இன்னொரு நாள் அந்த பூங்காவுக்கு போகலாம்” என்றாள் சிந்து.
“இல்லை வேண்டாம் சிந்து நாம இன்னைக்கே அந்த பூங்காக்கு போலாம் சரியா ” என்க
சிந்து அமைதியாக இருப்பதை கண்டு , “இப்போவாது கொஞ்சம் சிரிக்கலாமே ” என்று மீனு கூற
சிந்து ஈஈஈஈஈ என இழித்து வைக்க ,”உன்ன நான் சிரிக்க தான் சொன்னேன் சரியா இப்படி பல்லை காட்டி பயமுறுத்த சொல்லல ” என்று அவளை சீண்டினால்.
” அக்கா  “என்று பல்லை கடித்த படி கூற
” கூல் பேபி கூல் ” என்று மீனு சமாதானம் படுத்த முயல
“சரி பேசுனதலாம் போதும் சமையல் வேலைக்கு எனக்கு உதவி செய்யுங்க ” என்று சுசிலா சொல்ஐனல
” எனது சமையலுக்கு உதவி செய்யனுமா அதுவும் அக்கா கூடயா அய்யோ நான் மாட்டேன் பா ” என்று பதறினாள் சிந்து.
“சிந்து மா அக்கா உனக்காக சமைத்து தரேன் டா “என்று மீனு முன் வர
” இல்ல வேணாம் வேணாம் என்னால் திரும்பவும் நீ செய்த உணவை சாப்பிட முடியாது ஒரு முறை நான் செய்த தவறை மீண்டும் செய்ய மாட்டேன் பா  “என்று சிந்து கண்ணீர் வராதா குறையாக சொல்ல
” மீனு நீ சமையல் செஞ்சிருக்கியா??? என்று அவள் அன்னை கேள்வி கேட்க
“ஆமா அம்மா அவ சமச்சி என்னோட பாதி உயிரை எடுத்து விட்டாளே உங்களுக்கு ஞாபகம் இல்லை யா மம்மி “என்று சிந்து கேட்க
“எனக்கு தெரிலயே சிந்து ” சுசிலா கூற மீனு அவளை முறைத்து பார்த்தாள்.
‘ அம்மா அக்கா முறைக்கிறா மீ பாவம் “என்று சிந்து குழந்தை போல் முகத்தை வைத்து கூற
“மீனு அமைதியா இரு  நீ சொல்லு சிந்து எனக்கு தெரிஞ்ச வரைக்கும் உங்க அக்கா சமையல் அறைக்கு சமைக்கிறேன் என்று சொல்லி வந்ததே இல்லையே ” என்று யோசனையுடன் கேட்டார் சுசிலா…
%%%%£%%%
அது வேறு யாரும் இல்லை அண்ணி என்று லதா கூற வரும்போதே சுபாவின் இதயத் துடிப்பு அதிகமாகிக் கொண்டே இருந்தது.
அது வேற யாரும் இல்லை அண்ணி நம்ம அர்ஜுன் தான் என்றார்.
சுபாவிற்கு இதை கேட்டதும் அவளது மனம் இப்போது லேசான மாதிரி உணர்ந்தாள்..அது மட்டுமின்றி அவன் பெயரை கேட்டதும் அவளுக்கு மகிழ்வாகவும் அதே நேரத்தில் புது உணர்வும் தோன்றியது.
“உங்களுக்கு இந்த திருமணத்தில் சம்மதமா அண்ணி. என்னோட பொண்ண உங்க வீட்டு மருமகளா ஏத்துக்குவீங்களா  ” என்று லதா பயத்துடன் கேட்க
” நானே உங்க கிட்ட இதை பத்தி பேசலான்னு தான் இருந்தேன் லதா . அதுக்குள்ள நீங்களே இதை பத்தி என்கிட்ட கேட்டுடிங்க “என்று பத்மாவதி கூற
“எனக்கும் உங்க அண்ணாவுகும் இந்த திருமணத்தில் பரி பூர்ண சம்மதம் லதா “என்றார்.
“ரொம்ப நன்றி அண்ணி எங்கே இதை மறுத்துருவீங்களோன்னு  ஒரு பயம் என் மனசுல இருந்தது இப்போ தான் எனக்கு சந்தோஷமாக இருக்கு அண்ணி ” என்றார்.
“சுபா மா உனக்கு இந்த திருமணத்தில் சம்மதம் தானே??? ” என்று அர்ஜுனின் அம்மா கேள்வி கேட்க
அவள் தன் சம்மதத்தை தெரிவிக்கும் நேரத்தில் சரியாக வந்து சேர்ந்தான் அர்ஜுன்.
அர்ஜுன் அவன் குடும்பத்தினரை பார்த்து மிகவும் மகிழ்ச்சி மற்றும் அதிர்ச்சி அடைந்தான்.
“அம்மா அப்பா அஞ்சு எல்லாரும் எப்படி இங்க எப்போ வந்தீங்க என் கிட்ட வரேன்னு யாருமே சொல்லல” என்று அவர்களிடம் கேட்க..,,
அஞ்சு என்ற பெயரை கேட்ட செல்வாவிற்கு ஒரு நிமிடம் என்ன செய்வதென்றே தெரியவில்லை.
அர்ஜுன் அஞ்சு என்று கூறியவுடன் அஞ்சலி செல்வாவை பார்த்துவிட்டு தன் அண்ணனிடம் ” உனக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு தான் டா அண்ணா ” என்றாள்.
இவை அனைத்தையும் சுபா கவனித்துக் கொண்டு தான் இருந்தாள்.பிறகு அவளே ஒரு முடிவிற்கு வந்தாள்.
“நல்லா கொடுத்தீங்க பா சர்ப்ரைஸ் எல்லாரும் ” – அர்ஜுன்
அர்ஜுன் அவர்களிடம் நலன்களை விசாரித்த பிறகு, நான் வரும் போது ஏதோ சம்மதமா என்றெல்லாம் சுபாவிடம் கேட்டுட்டு இருந்தீங்க இங்கு என்ன நடக்குது எனக்கு தெரியாம “
” அது ஒன்றும் இல்லை டா அர்ஜுன் சுபாவிற்கு மாப்பிள்ளை பார்த்து இருக்காங்க , அதான் அவளோட சம்மதத்தை கேட்டுட்டு இருந்தேன் என்று அவனது தாய் அவனிடம் சொல்லிவிட்டு..” அவனது முக வெளிப்பாட்டை காண ஆசை பட்டார்.
அவனது அன்னையின் ஆசையை பொய்யாக்காமல் அவன் முகம் சட்டென்று சுருங்கியது..உடனே அவன் தன் முக வெளிப்பாட்டை மாற்றிக் கொண்டு சுபாவிடம் சென்று “CONGRATULATIONS SUBHA ” என்று கூறிவிட்டு அவளது பதிலை கூட எதிர் பார்க்காமல் தன் அறைக்கு சென்று விட்டான்.
“ஏன் அண்ணி அவனிடம் அவன் தான் மாப்பிள்ளைன்னு சொல்லலை “
“லதா அவனுக்கு நாம இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம்னு தான் “என்றார்.
“சரிங்க அண்ணி “என்றார் லதா.
பிறகு குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து நிச்சயதார்த்த நாளை குறிக்க ஆயத்தமானார்கள்.
பொங்கல் அன்றே நல்ல நாளாக இருக்க அன்றே அவர்கள் இவர்களது வாழ்வின் தொடக்க நாளை குறித்தனர்.
ஆனால் இதை அறியாத அர்ஜுன் தன் அறைக்கு சென்று பொலம்ப ஆரம்பித்து விட்டான்..
%%%%£%%%%
“சிந்து இப்ப நீ சொல்ல போறியா இல்லையா??? என்று சற்று கோபமாகவே” கேட்டார் சுசிலா.
சொல்றேன் அம்மா …..
வாங்க flashback_க்கு போலாம்…….
(யாரும் தூங்கிறாதீங்க பா )
அம்மா ஒரு நாள் நீங்களும் அப்பாவும் ஒரு திருமணத்திற்கு சென்று விட்டீர்கள். அன்று நானும் அக்காவும் மட்டுமே வீட்டில் இருந்தோம்…,,,
நான் டிவியில் Ready steady goo பார்த்துக்கொண்டு இருந்த போது பசிக்க தொடங்கியது….
அக்கா எனக்கு ரொம்ப பசிக்குது நீ swiggy ல நமக்கு எதாவது சாப்பிட ஆர்டர் பண்ணு கா”
“ஏய் அதெல்லாம் வேண்டாம் தங்கம் உன் அக்கா நான் எதுக்கு இருக்கேன் “என்று இழுக்க
“நீ என்ன செய்ய போற அக்கா??? “
“உன் அக்காவாகிய நான் உனக்கு இன்று என் கையால் சமைத்து கொடுக்கலாம் என்று இருக்கிறேன் ” என்று மீனு கூறினாள்‌.
” என்னது நீ சமைக்க போறியா அக்கா ? “என்று அதிர்ச்சியில் கேட்க
“ஆமாம் தங்கையே நீ கொடுத்து வைத்தவள் அதான் உனக்காக நான் சமைக்க போகிறேன் ” என்று இல்லாத காலரை தூக்கி விட்டாள்.
“என்னது நான் கொடுத்து வைத்தவளா???
என்ன கொடுமை டா சாமி இது ” என்று தலையில் கை வைத்து கொண்டாள்.
“எந்த கொடுமையும் இல்லை ,, நான் தான் உனக்கு இன்னைக்கு சமைச்சு தர போறேன் “
“சரி நான் சமைக்க கிளம்புறேன் ” என்று சமையல் அறைக்கு சென்று விட்டாள் .
“அய்யோ நமக்கு சமைக்க வேற தெரியாதே இப்போ என்ன பண்ணலாம் என்று யோசிக்க
“அய்‌ ஐடியா வந்துருச்சு” என்று கத்தினாள்.
தன் கைபேசியை எடுத்து கொண்டவள் யூட்யூப் சென்று அதில் வரும் வீடியோவை பார்த்து சமைக்க ஆரம்பித்தாள்..
மீனு சமைத்து கொண்டு இருக்க இங்க சிந்து ktvயில் சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் ‌படம் பார்த்து கொண்டு இருந்தாள்.
சிறிது நேரத்தில் மீனு தன் சமையலை  யூட்யூப் மூலமாக முடித்தாள்.
அவள் சமைத்த உணவை ஒரு தட்டில் போட்டு கொண்டு தன் தங்கையான சிந்துவிடம் வந்தாள்..,,அதே நேரம் அந்த படத்தில் HALWA Cmdy போய் கொண்டு இருந்தது…
(ஜெயம் ரவிக்கு அவள் எப்படி அல்வா எடுத்து கொண்டு சென்றாலோ …,,அதே போல் தான் மீனுவும் அவளுக்கு செய்த உணவுடன் வந்தாள்..)
சிந்து செல்லம் வா வந்து சாப்பிடு என்றாள் மீனு…
“அக்கா ப்ளிஸ்  எனக்கு சாப்பிட எதுவும் வேண்டாம் கா “என்று கெஞ்ச
“ஹே செல்லம்  உனக்காக தானே நான் சமச்சி இருக்கேன். நீ என்னென்னா சாப்பிட மாட்டேன்னு சொல்ற??? என்று சிறிது வருத்தத்துடன் சொல்ல
சிந்துவிற்கு சங்கடமாக போனது.தன் அக்காவை வறுத்த பட வைக்க கூடாது என்ற எண்ணத்தில் அவள் அந்த தட்டை வாங்கி சாப்பிட ஆரம்பித்தாள்…
மீனு கொடுத்த உணவில் இருந்து ஒரு வாயை சாப்பாட்டில் வைத்தவள் தான் ..,, அப்படியே வாயடைத்து போய்விட்டாள்..
“ஹே பேபி மா !! சாப்பாடு எப்படி இருக்கு டா செல்லம் “என்று ஆவலுடன் கேட்க
அவளை பதிலுக்காக காத்திருக்க வைக்காமல்.,”அக்கா உங்க சமையல் சூப்பர் “என்று கூறிவிட்டு அவள் சமைத்த அனைத்து சாப்பாட்டையும் சாப்பிட்டு விட்டால் ஒரு பருக்கை விடாமல் (பாவம் அவ்வளவு பசி போல அவளுக்கு)
மீனுவிற்கு ஒன்றும் புரியவில்லை .பசியாக இருக்கும் என்று நினைத்து விட்டாள்.
சிறிது நேரத்தில் மீனுவிற்கும் பசிக்க தொடங்கிடுச்சு ஆனா சாப்பிட தான் இங்கு ஒன்னும் இல்லையே என்று புலம்பி கொண்டு இருக்க ….
காலிங்பெல் அடிக்கும் சத்தம் கேட்டது..
மீனுவே சென்று கதவை திறந்தாள்.
“ஹலோ மேம் இந்தாங்க நீங்கள் கேட்ட ஆர்டர் ” என்று ஒருவன் கொடுக்க
“நான் எந்த ஒரு சாப்பாடும் ஆர்டர் பண்ணலையே .,,இது வேற யாருக்காவது வந்துருக்கும் ,,நீங்க போய் அதை கரட்டான அட்ரஸ்ல கொடுங்க ” என்றாள்
“இல்லை மேம் இது அஞ்சனா என்ற பெயரில் தான் ஆர்டர் பண்ணிருக்கு அதுவும் இந்த அட்ரஸ் தான் கொடுத்திருக்காங்க”என்று சொல்ல
“ஆமா என்னோட பெயர் தான் அஞ்சனா. ஆனா நான் எதுவும் ஆர்டர் பண்ணலையே ” என்று யோசனையுடன் இருந்தவளை ,
“அக்கா நான் தான் ஆர்டர் பண்ணினேன்” என்று சொல்லிவிட்டு வந்தவரிடம் இருந்து பணத்தை கொடுத்து உணவை வாங்கிக் கொண்டு உள்ளே சென்றாள் சிந்து.
“ஹே சிந்து நான் தான் உனக்கு சமைச்சு கொடுத்தேன்ல . அது பத்தவில்லையா உனக்கு . எதுக்கு இப்போ இத ஆர்டர் பண்ண??? “என்று மீனு கேள்வி கேட்க
“அக்கா இந்த சாப்பாடு உனக்காக தான் ஆர்டர் பண்ணி வாங்கினது “
“எதுக்கு டி எனக்காக இதை வாங்கின நான் உன்கிட்ட கேட்டேனா??? “
“உனக்கு பசிக்குதுன்னு எனக்கு நல்லாவே தெரியும் கா அதான் ஆர்டர் பண்ணேன் “
அவள் உனக்கு பசிக்குதுன்னு சொல்லிட்டு இருக்கும்போதே..,,மீனுவிற்கு பசி வந்தது மீண்டும்….
“சரி பாசமா ஆர்டர் பண்ணிருக்க கொடு நான் சாப்பிடுறேன் ” என்று சொல்லிட்டு அந்த உணவை வாங்கி வேகவேகமாக சாப்பிட ஆரம்பித்தாள்.
சாப்பிட்ட சிறிது நேரத்தில்  ராஜன் மற்றும் சுசிலா இருவரும் வீட்டிற்கு வந்தனர்.
நால்வரும் சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு. இரவு சாப்பாட்டை தயார் செய்து விட்டு அனைவரையும் சாப்பிட அழைத்தார்..
பிறகு எல்லாரும் சாப்பிட்டு முடித்து விட்டு உறங்க சென்றனர்..
நடு இரவில் சிந்துவிற்கு ஏனோ வாமிட்டு ஆக வந்து கொண்டே இருந்தது.
தண்ணீர் குடிப்பதற்காக வெளியே வந்த சுசிலா சிந்துவின் அறையில் லைட் எரிவதை பார்த்து உள்ளே சென்று பார்த்தால் அவள் மயங்கி கீழே விழுந்து இருந்தாள்.
பிறகு அவளை மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றனர்.
மருத்துவர் அவள் சாப்பிட்ட சாப்பாடு தான் சரியில்லை  இப்போது நல்லா இருக்கா. காலையில் அவளை வீட்டுக்கு அழைத்து செல்லாம் என்று கூறிவிட்டு சென்றார்.
அடுத்த நாள் காலையில் அவளை வீட்டுக்கு அழைத்து வந்தார்கள்.
Flashback over …….
அப்போ நீ மீனு செஞ்ச சாப்பாட்ட சாப்பிட்டு தான் உனக்கு அப்படி ஆச்சா என்று சுசிலா கேட்க
“ஆமாம் மா “என்றாள் பாவமாக
“சரி சொல்லு அவ செஞ்ச சாப்பாடு எப்படி இருந்துச்சின்னு நீ சொல்லவே‌ இல்லையே??? ” என்று கேள்வி கேட்டார் சுசிலா.
“அதை என்னால் சொல்ல முடியாது மா உங்களிடம் “
“சரி எனக்கு நேரம் ஆச்சு நான் சமைக்க போறேன் ..நாளை வேற பொங்கல் சீக்கிரம் எந்திரிக்கனும் “என்று சொல்லிவிட்டு சமைக்க சென்று விட்டார்.
%%%£%%%
“அண்ணி எனக்கு அர்ஜுனை பார்க்க ரொம்ப கஷ்டமா இருக்கு .நாம அவன்கிட்ட நீ தான் மாப்பிள்ளைனு சொல்லிடலாம்”
“இல்லை சொல்ல கூடாது லதா  அவனுக்கு இது ஒரு சர்ப்ரைஸா இருக்கட்டும் “என்றார்
“ஆனா அண்ணி” என்ற பேச வரதுக்கு முன்பே ” இதை பற்றி பேசாதே லதா  நாளைக்கு அவனுக்கே தெறிங்சுடும் அதனால நாம இத சொல்ல வேண்டாம் “
அடுத்த நாள் காலை அழகாக விடிந்தது…,,,
வீட்டில் உள்ள அனைவரும் பரபரப்பாக வேலை செய்ய தொடங்கினர்.

செல்வா வீட்டில் ஆண்கள் எல்லோரும் நிச்சயதார்த்த வேலை செய்து கொண்டு இருக்க..,,பெண்கள் அனைவரும் பொங்கலுக்கு எல்லா வேலைகளையும் செய்தனர். இதில் எதில்லையும் கலந்து கொள்ளாமல் அறையே கதி என இருந்தான் அர்ஜுன். சுபா இனி தனக்கில்லை என்று நினைக்கும்போது அவனுக்கு அவன் மேலே ஆத்திரமாக வந்தது.

முற்றங்களை நிரப்புகின்ற வண்ண கோலங்கள்….
நிலைப்படி சாமரமாய் அசைகின்ற
மாவிலைத் தோரணம்…
அடிகள் ஆறிலும் தித்திப்பு தெவிட்ட
கரும்புகள்…
நறுமணப் புட்டிகள் தோல்வி காணும்
மஞ்சள் கிழங்குகள்…
இன்று வரை மாற்று காண ருசியுடன்
பனைங்கிழங்குகள்…
புதுவெல்லமும் நெய்யும்
பச்சரிசியுடன் சங்கமித்து
பொங்கிய பொங்கல்…
ஆடை புதிது உடுத்தி
ஆதவன் முன் படைத்து
அனைவருக்கும் பகிரப்பெற்றது
பொங்கலும்!!
பொங்கல் வாழ்த்துக்களும்!!!
பிறகு வீட்டில் உள்ள அனைவரும் சூரிய பகவானுக்கு பொங்கல் படைத்து சாமி கும்பிட்டனர் .
அங்கு மீனுவின் வீட்டிலும் பொங்கல் கடவுளுக்கு படைத்து சாமி கும்பிட்டு விட்டு எல்லோரும் சாப்பிட சென்றனர்…
மீனு வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தனர்….
இங்கு கதிரோ தன் வேலைகளை எல்லாம் சரியாக முடித்து விட்டு தன் குடும்பத்துடன் சேர்ந்து அவனும் பொங்கல் வைத்தான்…
மாலை நேரம் நெருங்கியதும் நிச்சயதார்த்த விழாவிற்கு அனைத்து சொந்தங்களும் வர தொடங்கினர்….
வீட்டில் உள்ள அனைவரும் அவரவர் வேலையை செய்து கொண்டு இருக்க ,ஆனால் அர்ஜுன் மட்டும் அவன் அறையில் இருந்து வெளி வரவே இல்லை. யாரும் அவனை கண்டு கொள்ளவும் வில்லை.
திடீரென்று நிச்சயதார்த்தம் முடிவு செய்ததால் சுபாவின் அக்காவான சக்தியால் வர முடியவில்லை.
இளம் பெண்கள் அனைவரும் சுபாவை அலங்காரம் செய்ய தொடங்கி விட்டனர்….
அவளது நெருங்கிய தோழிகளை மட்டுமே சுபா அழைத்திருந்தாள்.
அவளை வெட்கம் ஆட்கொள்ள அவளது தோழிகள் அவளை கலாய்க்க தொடங்கினர்.
தோழி 1 : ஹே சுபா என்னடி ரொம்ப தான் வெக்கபடுற.
தோழி 2: ஹே உன்னோட வெக்கத்த கொஞ்சம் வச்சிக்கோமா அப்ப தான் உன் ஆள பாக்கும் போது வெக்க பட முடியும்.
சுபா : ……..
தோழி 1:‌என்னடி‌ உன் ஆள் கூட கனவா செல்லம்
சுபா வெட்கப்பட…
தோழி 1 : ரொம்ப வெக்க படாதடி பாக்க முடியல இதை எல்லாம் பாக்கனும் எனக்கு இருக்கு.
சுபா : ??
தோழி 2 : என்னடி உன்னோட வருங்கால கணவர எங்களுக்கு காட்ட கூட மாட்டேங்கிற
தோழி 1 : அவர நாங்க ஒன்னும் கொத்திட்டு போக மாட்டோம் சரியா.அவர் பெயர் கூட யாரும் சொல்ல மாட்டேங்கிறீங்க
சுபா : அவனுக்கு தான் இன்னைக்கு நிச்சயம்ன்னு அவனுக்கே தெரியாது டி ??
தோழி 1 : என்னடி சொல்ற புரியுர மாதிரி சொல்லு எரும …
நேத்து நடந்த எல்லாத்தையும் இரண்டு தோழியிடமும் சொல்லி முடித்தாள்…
தோழி 1&2 இருவரும் அதிர்ச்சியில் அவளை பார்த்தனர்.
தோழி 1 :‌அடா பாவிங்கலா எங்க அண்ணாக்கு இப்படி ஒரு கொடுமை பண்றிங்களே டி ….
சுபா : இதெல்லாம் பெரியவுங்க எடுத்த முடிவு பா….
தோழி 1: அண்ணாக்கு எதாவது லவ் இருக்க போகுது டி…????
சுபா அதற்கு எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க , அர்ஜுனின் அம்மா அறைக்குள் வந்தவர் ,”என் மருமக எவ்வளவு அழகா இருக்கா .இப்ப மட்டும் என் பையன் உன்ன பாத்தா இன்னைக்கே கல்யாணம் பண்ணாலும் பண்ணிருவாம் ” என்க
“போங்க அத்த இவளுங்க தான் கலாய்க்கிறாங்கன்னா நீங்களும் என்ன‌ கலாய்க்கிறீங்க  “என்று வெட்க பட்ட படியே சுபா கூறினாள்.
“நான் உண்மைய தான் சுபா சொல்றேன் இன்னைக்கு நீ தேவதை மாதிரியே இருக்க டா தங்கம். என் கண்ணே பட்டுட்டும் போல இருக்கு”என்று சுபாவிற்கு நெற்றி எடுத்தார்.
” இரண்டு பேரும் பேசி முடிச்சிட்டிங்கன்னா பொண்ண கூட்டிட்டு வெளிய வாங்க ஐயர் கூப்பிடுறாரு ” என்று விட்டு சென்றாள் அஞ்சலி.
லதா அர்ஜுன் அறைக்கு சென்று கதவை தட்டினார்.
கதவை திறந்த அர்ஜுன் “சொல்லுங்க அத்தை?? “என்றான் விரக்தியாக
” ஒன்னும் இல்லை டா .இந்த ட்ரெஸ போட்டுட்டு கீழ வா சீக்கிரமா” என்று கூறிவிட்டு அவனது பதில்லை கூட எதிர் பார்க்காமல் விருட்டென்று கீழே சென்று விட்டார்….
அர்ஜுனிற்கு ஒன்றும் புரியவில்லை..,,இது மாப்பிளைக்கு எடுத்த உடை தானே??? ஏன் இந்த உடையை நம்மிடம் கொடுத்து மாத்த சொல்றாங்க….??? என்று யோச்சிக்க செய்தான்(அட பக்கி பையலே இந்த நிச்சயதார்த்தமே உனக்கு தான் )
சிறிது நேரம் யோசித்த அவனுக்கு பதில் எட்ட வில்லை..பிறகு அவன் அதை அணிந்து கொண்டான்.
“மாப்பிள்ளையை அழைத்து வாங்கோ” என்றார் அந்த ஐயர்…
அஞ்சலி வேகமாக அர்ஜுன் அறைக்கு சென்று ..,, அவனிடம் உன்னை ஐயர் கீழே வர சொல்றாங்க டா அண்ணா என்று கூறிவிட்டு சிட்டாக பறந்து விட்டாள்.
இங்கே என்ன தான் நடக்குது என்று ஒன்றும் புரியாமல் அங்கேயே நின்று கொண்டு தன் மூலையை கசக்கி கொண்டு இருந்தான்  அர்ஜுன்(இல்லாத மூலையை எதுக்கு கசக்குற ).
மீண்டும் அஞ்சலி மேலே வந்து , “டேய் அண்ணா.!!! நீ யோசிச்சதெல்லாம் போதும் டா ,உன்ன கீழ கூப்பிட்டுட்டே இருக்காங்க.,,நீ வந்தா தான இந்த நிச்சயதார்த்தம் நடக்கும் நீ பாட்டுக்கு இங்கேயே நின்னுட்டு இருக்க?? உன்னால நான் அங்க அம்மாகிட்ட திட்டு வாங்கிட்டு இருக்கேன் டா எரும .கொஞ்சம் என்கூட வரியா இல்லனா அங்க இருக்கிற எல்லாரும் என்ன திட்ட ஆரம்பிச்சிடு வாங்க “என்று அவனை யோசிக்க விடாமல் பேசவும் விடாமல் அவனை கீழே இழுத்து சென்றாள் அஞ்சலி.
அவனை இழுத்து வந்து கீழே விட்டவள்..,,என்ன நடக்கிறது என்று தெரியாமல் அவனால் எதையும் பேசவும் முடியவில்லை…
பிறகு ஐயர் பெண்ணை அழைத்து வாங்கோ என்று கூற..,,
சுபா அழகு தேவதையாக பச்சை வண்ண பட்டு புடவையில் வந்து  அர்ஜுன் பக்கத்தில் நின்று வந்திருந்த உறவினர்கள் அனைவருக்கும் தனது வணக்கத்தை தெரிவித்தாள்…
அர்ஜுனிற்கு ஒன்றும் புரியவில்லை. சுபாவையே பார்த்து கொண்டு இருந்தான்.
அங்கு இருந்த அனைவரும் “இவுங்க ஜோடி நல்லா இருக்குல “என்று ஒருவர் காதை ஒருவர் கடித்து கொண்டு இருந்தனர்..
“என்ன டா அண்ணா..!! இங்க என்ன நடக்குதுன்னு உனக்கு புரியலையா??? “
” ஆமா அஞ்சலி மா ,இங்க என்ன தான் நடக்குது ..?? எனக்கு எதுக்கு இந்த உடை அத்த கொடுத்தாங்க?? அப்றம் ஐயர் எதுக்கு என்ன கூப்பிட்டாரு?? எனக்கு ஒன்னுமே புரியல பா?? தலையே வெடிச்சுரும் போல இருக்கு ” என்று அர்ஜுன் பாவமாக சொல்ல
“அட என்ன டா அண்ணா நீ…!!! இவ்வளவு மக்கா இருக்க” என்று தலையில் அடித்துக் கொண்டாள் அஞ்சலி.
” நான் என்ன பண்ணேன் அஞ்சலி??” என்று பாவமாக கேட்டான்.
“டேய் அர்ஜுன்  இந்த நிச்சயதார்த்தம் வேற யாருக்கும் இல்லை டா மகனே உனக்கு தான் . எங்களுக்கு தெரியும் டா ,,நீ சுபாவ காதலிக்கிறனு. அதான் நானே உனக்கு சுபாவை பொண்ணு கேக்கனும்னு இருந்தப்ப தான் உங்க அத்தையே என் கிட்ட வந்து இத பத்தி கேட்டாங்கன்னு ” அனைக்கு நடந்த அனைத்தையும் அவனிடம் கூறி முடித்தார்..
அர்ஜுன் தன் அன்னையை ஒடி சென்று கட்டி கொண்டான்…
“அம்மா ரொம்ப நன்றி மா !! நான் கேட்காமளையே எனக்கு சுபாவை என்கிட்ட கொடுத்திருக்கிங்க மா.எனக்கு இப்போ பேச்சே வரவில்லை .” என்றான் மகிழ்ச்சியின் உச்சத்தில்
” போதும் போதும் உங்க பாசத்தை அப்றமா வச்சிக்கோங்க ,அங்க என்னோட மருமக தன்னியா நின்னுட்டு இருக்கா பாரு???போய் மொதல்ல என் மருமக பக்கத்தில நில்லு டா “என்றார் அர்ஜுனின் தந்தை.
பிறகு அவனும் சுபா பக்கத்தில் போய் நின்று கொண்டான்..
ஐயர் நிச்சய பத்திரிகை வாசித்து விட்டு  திருமண நாளை குறித்தனர் .இரு வீட்டு குடும்பத்தாரும் தட்டை மாற்றிக் கொண்டனர்…

நேற்றுவரை‌ என் நெஞ்சத்தில்
இருந்த நீ…!!!

இன்று என் கைகளுடன்
உன் கைகளை
கோர்த்து விட்டேன் ??….!!!!

பிறகு நிச்சய மோதிரத்தை அர்ஜுன் கையில் கொடுத்து சுபாவிற்கு போட்டு விட சொல்லவும் , சுபாவும் அவளது கையை நடுக்கத்துடன் நீட்ட அவனும் மோதிரத்தை அணிவித்து விட்டான்.பின்னர் அவளும் அவனுக்கு மோதிரத்தை போட்டு விட வீடே மகிழ்ச்சியில் நிறைந்தது….
பின்னர் , வீட்டிற்கு வந்த அனைத்து உறவினர்களும் அவர்கள் இருவரையும் வாழ்த்தி விட்டு சென்றனர்….
சுபா தன் மனதில் உள்ளதை அர்ஜுனிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்தால்..,, ஆனால் அர்ஜுனை தனியாக சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை…

Advertisement