Advertisement

நினைவு 04
காணப்படாத கனவுகளுடன்
எட்டப்படாத உச்சங்களுடன்
தகர்க்கப்படாத நம்பிக்கைகளுடன்
பிரிக்கப்படாத பரிசுப்பொதியாய்
விடிகிறது…….

 

அஞ்சலி சீக்கிரம் கிளம்பு டி பஸ்க்கு மணி ஆகுது பாரு என்று பத்மாவதி கீழே இருந்து கத்திக் கொண்டு இருந்தார்.
இதோ வந்தறேன் அம்மா என்றவள் தனது catching clipஐ எடுத்து தன் அடங்காத தலை முடியை ஒன்று சேர்த்து தலையில் கில்ப்பை மாட்டினாள்..பிறகு அவளது பையை எடுத்துக்கொண்டு கீழே வந்தாள்.
அவளுக்காக அவளது அம்மா மற்றும் தந்தை என இருவரும் கீழே காத்திருந்தனர் .பிறகு அவளது அன்னை கதவை பூட்டி விட்டு வர மூவரும் சேர்ந்து பேருந்து நிலையம் சென்றனர்..
அஞ்சலி எப்போதும் மாமா வீட்டிற்கு செல்கிறோம் என்றால் போதும் அவளுக்கு கையும் காலும் பரபரப்பாக வேலை செய்யும்..,ஊருக்கு முன்னாடி கிளம்பி வந்து நிற்பாள். ஆனால் இன்றோ அவளின் முகத்தை பார்த்தே சொல்லலாம் , அவளுக்கு அங்கு வருவதில் விருப்பம் இல்லை என்று.
“அஞ்சலி அத்தைக்கு call பண்ணி சொல்லிவிடு நாம் பஸ் ஏறிட்டோம் என்று ” என்றார் அஞ்சலியின் அன்னை
“சரிங்க மா நான் இப்பவே அத்தை கிட்ட சொல்லிடுறேன்” என்று தன் கைப்பேசியை எடுத்து அழைப்பு விடுத்தாள்.
இரண்டு நிமிடம் கழித்து தன் கைப்பேசியை எடுத்த லதாவிடம் பேருந்து ஏறிட்டோம் அத்தை என்று சிறிது நேரம் பேசி விட்டு கைப்பேசியை அணைத்த பிறகு பேருந்தில் ஜன்னல் ஓரம் உள்ள சீட்டில் அமர்ந்துகொண்டு பாட்டு கேட்க ஆரம்பித்தாள்.
பேருந்து கிளம்பிய சிறிது நேரத்திலேயே அஞ்சலி செல்வாவை நினைத்து கொண்டு இருக்க சிறிது நேரத்தில் உறங்கியும் போனாள்.
%%%%%£%%%%
மீனு விடுதியில் இருந்து, நான்கு நாட்களுக்கு தேவையான தன் உடைமைகளை ஒரு பையில் போட்டுக் கொண்டு இருந்தாள். அப்பொழுது அவளது அழைப்பு மணி அடித்தது.ஆனால் அவள் செவிகளுக்கு அந்த ஓசை எட்டவில்லை..
இரண்டு முறை அடித்து விட்டது. மூன்றாவது முறை அவள் அழைப்பேசி அடிக்கும் போது .., அவள் செவிகளில் அந்த பாடல் எட்டியது.
You’re my Honeybunch Sugarplum
Pumpy-umpy-umpkin
You’re my Sweetie Pie
You’re my Cuppycake
Gumdrop Snoogums-Boogums
You’re the Apple of my Eye
And I love you so and I want you to know
That I’ll always be right here
And I love to sing sweet songs to you
Because you are so dear
என்று பாடல் ஒலிக்க தன் கைப்பேசியை எடுத்து தனக்கு வந்த அழைப்பை ஏற்றாள்.
மீனு :ஹலோ !என்ன புதுசா எனக்கு கால் பண்ணி இருக்க என்ன விஷயம்ன்னு சொல்லு டா???
சிந்து :அக்கா நீ இன்னைக்கு தான் கிளம்புற ???
மீனு : நான் எங்க டி கிளம்ப போறேன்???
நீ என்ன சொல்ல வர ???
சிந்து : அக்கா நீ இன்னைக்கு ஊருக்கு கிளம்பி வர ???
மீனு : ஆமாம் ..!!அதுக்கு என்ன டா செல்லம்.., உனக்கு ஏதாவது வாங்கிட்டு வரனுமா???
சிந்து : அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் கா ….
மீனு : சரி…!!! அப்பறம் என்ன வேண்டும் உனக்கு???
சிந்து :அக்கா எனக்கு எக்ஸாம் ரிசல்ட் வந்துடுச்சி கா
மீனு : சரி அதுக்கு இப்ப நான் என்ன பண்ணனும்??
சிந்து :இந்த செம்ல எனக்கு ஒரு பேப்பர்ல அரியர் வந்துடுச்சி கா நீ தான் என்ன காப்பாத்தனும்
மீனு :ஓஓ அதான் விஷயமா என்னடா இது கால் பண்ணியே பேசாத ஒருத்தி தானா வந்து பேசுறாளேன்னு நினைச்சேன். இப்போ தான தெரியுது புலி எதுக்கு எலியா மாறுதுன்னு. என்ன டி என்னைய வச்சி அம்மா கிட்ட இருந்து எஸாக நினைக்கிறியா ??
சிந்து : அக்கா ஃபிளிஸ் எனக்காக??….!!!!
மீனு :சரி டி..!!!இப்போ தான்  நான் கிளம்பிட்டு இருக்கேன். ட்ரெயின் ஏறிட்டு உன்கிட்ட பேசுறேன் சரியா…
சிந்து :”லவ் யூ அக்கா பாய் “
தன் கைப்பேசியை அணைத்து விட்டு ஊருக்கு கிளம்ப ஆயத்தமானாள்.சிறிது நேரத்தில் கிளம்பியவள் தனது அறையை பூட்டிக்கொண்டு விடுதியை விட்டு வெளியே வந்தாள் மீனு.
வெளியே வந்தவள்..,சாலையின் ஓரத்தில் நின்று இருந்த ஆட்டோவில் ஏறி ரயில் நிலையம் சென்றாள்.
‌ரயில் நிலையம் வந்தவுடன், ரயில் நிற்க்கும் நடைமேடை தெரிந்துக் கொண்டு ..,அங்கு சென்று அந்த ரயிலில் ஏறி தன் இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.
இன்னும் ரயில் கிளம்ப பத்து நிமிடங்கள் உள்ளது என்பதால்.., அவள் ரயிலில் இருந்து இறங்கி பக்கத்தில் இருந்த கடைக்கு சென்று பிஸ்கட்ஸ் வாங்கி கொண்டு ரயிலில் ஏறினாள்.
பிறகு ரயில் கோவையில் இருந்து கிளம்பியது. பிறகு , தன் தங்கையிடன் சிறிது நேரம் கைப்பேசியில் பேசிவிட்டு ஜன்னலை வெறித்து பார்த்து கொண்டிருந்தாள். அவளின் அந்த தனிமை அவளது கடந்த காலத்தின் நினைவுகளை கொண்டு வந்தது .அதை நினைத்துக் கொண்டே சிறிது நேரத்தில் உறங்கியும் போனாள்.
அடுத்த நாள் காலை 5:00 மணிக்கு ரயில் சென்ட்ரல் வந்து சேர்ந்தது அந்த நீலகிரி எக்ஸ்பிரஸ்
%%%%£%%%%
லதா காலை 5 மணி அளவில் செல்வாவின் அறை கதவை தட்டினார்.
யாரு டா அது இப்படி காலங்காத்தால என் தூக்கத்தை கெடுக்கிறது என்று அறை மின்விளக்கை போட்டு விட்டு சலிப்புடனே கதவை திறந்தான் செல்வா..
என்ன மா எதுக்கு இந்த நேரத்தில் கதவை தட்டுறீங்க எதாவது பிரச்சினை யா மா என்றான் செல்வா.
அதெல்லாம் ஒன்னும் இல்ல டா என்று பதில் கூறினார் லதா.
இப்ப தான் உங்க மாமா எனக்கு கால் பண்ணாரு டா . அவுங்க இன்னும் கொஞ்ச நேரத்துல சென்னை பேருந்து நிலையத்திற்கு வந்துடுவோம்னு சொன்னாங்க டா .அதனால் நீ போய் அவுங்கள கூட்டிட்டு வந்திடு செல்வா என்றார் லதா.
“ஏன் மா அர்ஜுன்ன அனுப்ப வேண்டியது தானே ” என்றான் செல்வா.
” டேய் செல்வா அவனுக்கு நேத்து நைட் ஷிப்ட் டா.., அவன் இன்னும் வீட்டுக்கே வரல. அதுவும் அவுங்க  நம்ம வீட்டுக்கு வர விருந்தினர்கள். அதனால் நாம தான் அவுங்கள நல்லா கவனிக்கனும் சரியா .போ போய் அவுங்களை கூட்டிட்டு வா” என்றார் லதா
சரி மா நான் போய் அவுங்கள கூட்டிட்டு வரேன் என்று விட்டு கிளம்ப தொடங்கினான்.
%%%%£%%%%
அந்த அதிகாலை காலை பொழுதினில் அஞ்சலியும் அவளது அம்மா அப்பா என மூவரும் சென்னை பேருந்து நிலையத்தை வந்தடைந்தனர்.
அதே நேரத்தில் மீனுவும் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை பேருந்து நிலையம் வந்து சேர்ந்தாள் அவள் தங்கையை அழைப்பதற்காக.
மீனு தன் தங்கைக்கு கைப்பேசி மூலம் அழைப்பு விடுத்தாள்.
சிந்து : சொல்லு அக்கா …!!!!
மீனு : நீ எங்க டி இருக்க???
உன்னால தான் எனக்கு இவ்வளவு அலைச்சல்…
சிந்து : கோவ படாத அக்கா …!!
இதோ அஞ்சு நிமிஷத்துல நான் வந்துடுவேன்…, கொஞ்சம் வெயிட் பண்ணு அக்கா ப்ளிஸ்
மீனு : சரி சீக்கிரம் வா …!!!!
என்று கைப்பேசியை அணைத்தாள்.
செல்வாவும் வீட்டில் இருந்து தனது காரில் கிளம்பி பேருந்து நிலையத்திற்கு வந்து சேர்ந்தான்.
காலத்தின் செயலில் அஞ்சலியும் மீனுவும் எதிரெதிறே நின்று கொண்டு இருந்தனர் அந்த பேருந்து நிலையத்தில்
சிந்துவும் செல்வாவும் ஒரே நேரத்தில் அவ்விடத்தை அடைந்தனர்.
சிந்து தன் அக்காவிடம் சென்று பல திட்டுக்களை பரிசாக பெற்றுக் கொண்டு இருந்தாள். அதே நேரம் செல்வா மீனுவை கடந்து அஞ்சலியிடம் செல்லும் போது அவன் மனதினுள் ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு அவனுக்குள் தோன்றியது.அதே போல் உணர்வு மீனுவிற்கும் ஏற்பட்டது..
அவர்களிடம் வந்த செல்வா அவர்களின் நலன்களை கேட்டுக்கொண்டு இருந்தான்.
அவனுக்கு எதிரே மீனுவும் அவளது தங்கை சிந்துவும் பேசிக்கொண்டு இல்லை இல்லை சிந்து திட்டுவாங்கி கொண்டு இருந்தாள்…
ஏனோ
அந்த
உணர்வின்
நெருக்கத்தை
புரிந்து
கொள்ள
இயலவில்லை…!!!
செல்வாவிற்கு ஏற்பட்ட அந்த உணர்வை..,,இதற்கு முன்பு அவன் ஒரு முறை அனுபவித்து இருக்கிறான்..அதற்கு பிறகு அவனுக்கு அதே உணர்வு இன்று தான் ஏற்பட்டுள்ளது….
அவர்களிடம் பேசிக்கொண்டே சுற்றிலும் தன் பார்வையை சுழல விட்டு எதையோ செல்வா தேட ஆரம்பித்தான் …
அவன் மீனுவை பார்க்க போகும் அந்த நேரத்தில் ,மீனுவிற்கு அவள் வீட்டில் இருந்து கார் வந்து அவர்கள் முன் நின்றது.மீனுவும் சிந்துவும் அவர்களது வீட்டிற்கு காரில் ஏறி சென்று விட்டனர்…
பிறகு செல்வா எவ்வளவு தேடியும் அவனுக்கு ஏன் அந்த உணர்வு ஏற்பட்டது என்று அவனால் கண்டு பிடிக்க இயலவில்லை. அவனுக்குள் ஏற்பட்ட அந்த உணர்வு  இதமாகவே இருந்தது.
பிறகு அவனும் அவர்கள் மூவரையும் தன் காரில் ஏற்றிக்கொண்டு வீட்டிற்கு திரும்பினான்….
%%%%£%%%%
இங்கே சுபா இரண்டு நாட்களுக்கு பிறகு இன்று தன் பதிலை கூறலாம் ‌என்று நினைத்து தன் அன்னையிடம் சென்றாள்.
அம்மா நான் உங்க கிட்ட என்னுடைய பதில்லை சொல்லாம்னு இருக்கிறேன்.
சொல்லு டா ..,என்ன முடிவு பண்ணியிருக்க????? என்று அவளை பார்த்து கேட்க
அம்மா அது வந்து என்று தயங்கி நின்றாள் தன் அம்மாவிடம் எப்படி தன் பதிலை சொல்வது என்று திணறி கொண்டு இருந்தாள்.
சுபா உனக்கு கொடுத்த இரண்டு நாள் முடிஞ்சிடுச்சி .இப்போ ஏன் கிட்ட தானே உன்னோட பதில சொல்ல போற அதுக்கு எதுக்கு உனக்கு இவ்வளவு தயக்கம் சொல்லு ” என்று கேள்வி கேட்டுக்கொண்டே போனார் லதா….
“அம்மா எனக்கு இப்போ கல்யாணம் பண்ணிக்கிற ஐடியா சுத்தமாவே இல்ல ” என்றவள் ஒரு நொடி விட்டு ” ஆனா எனக்கு அடுத்து தான் அண்ணா கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொல்ற தாள மட்டும் தான் நான் கல்யாணத்துக்கு சம்மதிக்கிறேன். நீங்க மாப்பிளை பாக்கலாம் மா ” என்று தன் அண்ணனுக்காக திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தாள். அதேநேரம் அவர்கள் பேசியதை பார்த்த படியே உள்ளே நுழைந்தான் அர்ஜூன்.
“ரொம்ப சந்தோஷமா இருக்கு மா” என்ற லதா அவள் நெத்தியில் மென்மையாக இதழ் பதித்தார்.
“குட் மார்னிங் அத்தை ” என்று அவர்களை பார்த்து சொன்னான் அர்ஜுன்.
“வா டா இப்போ தான் வேலை முடிஞ்சிதா” என்று லதா கேட்க
“ஆமாம் அத்தை இப்போ தான் முடிஞ்சது “என்று பதில் கூறினான்.
“என்ன இப்படி அம்மாவும் பொண்ணும் காலையிலேயே மீட்டிங் போட்டுட்டு இருக்கிங்க  என்ன விஷ்யம் சொன்னா நாங்களும் தெரிஞ்சுக்குவோம்ல” என்று அவர்கள் பேசிக்கொள்ளும் விஷயத்தை கேட்கும் ஆர்வத்தில் கேட்டான் அர்ஜுன்.
“கண்டிப்பாக உனக்கு சொல்லாமலா அர்ஜூன்???” என்றார் லதா .
“அப்ப சொல்லுங்க அத்தை “என்று ஆர்வத்துடன் கேட்க அவனது ஆர்வத்தை கலைக்கும் விதமாக”இப்போ இல்லை டா அர்ஜுன் ‌” என்று கூறிவிட்டு
“நீ இப்ப தான வந்த கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு செல்வா வெளிய போயிருக்கான் அவன் வந்ததும் ரெண்டு பேருக்கும் சேர்த்தே அந்த மகிழ்ச்சியான விஷயத்தை சொல்றேன் ” என்று அவனை அனுப்பி வைத்தார்.பிறகு அவன் தனது அறைக்கு சென்று தூங்கி விட்டான்..
அவன் தூங்கின சிறிது நேரத்தில் செல்வாவும் அஞ்சலியின் குடும்பத்தினரும் வீட்டிற்கு வந்து சேர்ந்தான்..
” வாங்க வாங்க ” என்று லதா அவர்களை வரவேற்றார்.
“இதோ வந்துட்டேன் அத்தை ” என்று அஞ்சலி சிறு குழந்தையாய் மாறி தன் அத்தையிடம் ஓடி சென்றாள்.
“வாடா செல்லம் இப்ப தான் இந்த அத்தையை பார்க்க நேரம் கிடைச்சிதா உனக்கு சொல்லு” என்று லதா பொய் கோபத்துடன் கேட்க
“அய்யோ  சாரி அத்த வர கூடாதுனலாம் இல்ல வர முடியலை அவ்ளோதான் த்த” என்று தன் இரு கைகளையும் காதில் வைத்து மன்னிப்பு வேண்டினாள்.
” சரி சரி இப்போ மன்னிச்சு விடுறேன் ” என்று அவளுடன் உள்ளே சென்றார்.
“அண்ணா அண்ணி இரண்டு பேரும் எப்படி இருக்கிங்க‌ ” என்று லதா கேட்க
” நாங்க நல்லா இருக்கோம் மா நீ எப்படி இருக்க ” என்றார் அஞ்சலியின் தந்தை‌ ஈஸ்வரன்.
சுபா எல்லாருக்கும் காஃபி போட்டு கொண்டு வந்து அத்தை மாமா அஞ்சலி அண்ணா அம்மா என அனைவருக்கும் கொடுத்தாள்.
” சரி எல்லாரும் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்கோங்க ” என்று அக்கறையுடன் கூறினாள் லதா
“சரி மா ” ‌ என்றார் அஞ்சலியின் தந்தை.
சுபா அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட அறைக்கு அவர்களை அனுப்பி வைத்தாள்.
“ஏங்க நம்ம சுபா எவ்வளவு பொறுப்பா மாறிட்டா இல்ல… அவகிட்ட முதலில் இருந்த சுட்டி தன்னமெல்லாம் இப்போது அவகிட்ட இல்லங்க ” என்று அவள் கணவனிடம் சொன்னார் பத்மாவதி.
“ஆமா டி நாம அவளை பார்க்க வரும்போது சின்ன பெண்ணா இருந்தா. இப்ப பாரு கல்யாண வயசு வந்துருச்சி “என்றார் ஈஸ்வரன்.
தன் கணவர் கூறியதற்கு ஆமாம் என்று சொல்லி தலை அசைத்தார்.
“ஏங்க எனக்கு ஒன்னு தோனுது?? “என்று ஏதோ யோசனையாய் தன் கணவனிடம் சொல்ல
“என்ன தோனுது உனக்கு??? ” என்றார் அவர்.
“நாம ஏன் நம்ம அர்ஜுன்க்கு நம்ம சுபாவை கல்யாணம் பண்ணி வைக்க கூடாது  ” என்க
“நல்ல விஷயம் தான் மா .ஆனால் அதுக்கு என் தங்கச்சி குடும்பம் சரின்னு சொல்லனுமே ” என்று யோசனையாய் கூற
” நான் இத பத்தி உங்க தங்கச்சி கிட்ட பேசி பாக்குறேன் ” என்றார் பத்மாவதி.
சிறிது நேரத்தில் காலை உணவை தயார் செய்து விட்ட லதா சுபாவிடம் சென்று அவர்களை சாப்பிட அழைத்து வருமாறு கூறி அனுப்பி வைத்தார்.
அர்ஜுனை தவிர அனைவரும் சாப்பிட வர காலை உணவை பரிமாறினாள் சுபா.
அவர்கள் சாப்பிட ஆரம்பித்த சிறிது நேரத்தில்”நான் உங்க கிட்ட ஒரு நல்ல விஷயம் சொல்லனும் ” என்றார் பீடிகையோடு பேசினார் லதா.
” என்ன நல்ல செய்தி அத்தை ” என்று ஆர்வத்துடன் கேட்டாள் அஞ்சலி.
“அது சுபாவுக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு இருக்கோம். அதுக்கு அவளும் சம்மதம் சொல்லிட்டா “என்றார் மகிழ்ச்சியாகவே..
“எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு அண்ணி” என்று பத்மாவதி கூற
“மாப்பிள்ளை பார்க்க வேண்டியது தான் என் தங்கத்துக்கு ” என்றவாறே அஞ்சலியின் அன்னை சுபாவிடம் வந்தார்.
“இல்லை அண்ணி நான் மாப்பிள்ளை பார்த்துட்டேன் .என் பொண்ணுக்கு அந்ந பையன் தான் கரட்டா இருப்பான்…”என்று புதிர் வைக்க
என்ன அம்மா சொல்றீங்க .,நானே இன்னைக்கு காலைல தான கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னேன். ஆனா நீங்க அதுக்குள்ள பையன் ‌பார்த்துட்டேன்னு சொல்றீங்க ” என்று சுபா சந்தேகமாக கேட்க
சுபா நான் எது செஞ்சாலும் அது உன்னோட நல்லதுக்காக தான் இருக்கும் சரியா?? என்றார் லதா. அதன் பிறகு சுபா வாயை திறக்கவில்லை.
சரிங்க அண்ணி மாப்பிள்ளை யாருனே இன்னும் சொல்லவே இல்லையே நீங்க .. என்று பத்மாவதி கேள்வி கேட்க
சுபாவிற்கு ஏதோ மனதில் ஒரு வலி ஏற்பட்டது. அது ஏன் என்றே அவளுக்கு தெரியவில்லை.
உங்க எல்லாருக்கும் நல்லா தெரிஞ்சவுங்க தான் என்று மீண்டும் புதிர் போட
யாரு அத்தை அது ??? என்று ஆர்வத்துடன் அஞ்சலி கேட்டாள்…
%%%£%%%
மீனுவும் சிந்துவும் அவர்களது காரில் வந்து வீட்டில் இறங்கினர்..
கார் சத்தத்தை கேட்டு சுசிலா ஆர்த்தி தட்டுடன் வெளியே வர கூடவே ராஜனும் வந்தார்…
என்ன மா இது , எனக்கு போய் ஆர்த்திலாம் எடுக்கிறீங்க என்று கேட்டு கொண்டே சிந்து தன் அன்னையின் முன் வந்து நின்றாள்.
உனக்கு யார் எடுக்க வந்தா?? கொஞ்சம் வழிய விடுறியா நான் என் பொண்ணு மீனுவுக்கு தான் ஆர்த்தி எடுக்க வந்தேன்  என்று சிந்துவிற்கு பல்ப் கொடுத்தார்.
அட போமா மா  நானும் தானே ஹாஸ்டல்ல இருந்து வந்திருக்கேன் .எனக்கும் சேர்த்து எடு அது என்ன அக்காவுக்கு மட்டும் ஸ்பெஷல் என்று பொய்யான கோபத்தை வெளிக்காட்ட
“நீ தான் வாரம் தோறும் இங்கு வரியே அப்பறம் நான் எதுக்கு உனக்கு  எடுக்கணும் சொல்லு . அப்புறம் உன்..” என்று சொல்லிக்கொண்டே ஏதோ கூற வர அதற்குள் மீனு “ரெண்டு பேருக்கும் சேர்த்தே எடுங்க மா” என்று கூறினாள்..
” அய்யோ தப்பிச்ச டி சிந்து இல்லன்னா உன்ன வச்சி இன்னைக்கு ஊறுகாய் போட்டிருப்பாங்க டி நல்ல வேலை அக்கா காப்பாத்திட்டாங்க ” என்று மனதில் நினைத்து கொண்டே ஆர்த்தி பொட்டை வைத்து கொண்டாள் .
” உள்ள வா டா மீனு .உன்ன பார்த்தே எவ்ளோ நாள் ஆச்சு நீ நல்லா இருக்கியா மா ” என்று ராஜன் நலம் விசாரிக்க அவளும் தன் நலத்தை‌ பற்றி கூறி பேசிக் கொண்டு இருந்தாள்.
“ஏங்க என்னோட பொண்ணே இப்ப தான் வீட்டுக்கு வந்துருக்கா வந்ததும் வராததும்மா ஏன் இப்படி கேள்வி கேட்டு தொலைக்கிறீங்க  என்று கோபமாக கத்த
“சரி மா நாம அப்புறமா பேசலாம்  நீ போய் கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்துக்கோ டா கண்ணா ” என்றார் ராஜன்.
“சரி பா ” என்றாள் மீனு.
” என்ன யாராவது இந்த வீட்டில் கண்டு கொள்ளுறாங்களான்னு பாரு  எல்லாம் அவுங்க மூத்த பொண்ணையே கவனிக்கிறாங்க பா இதெல்லாம் எங்க போய் சொல்வதோ எல்லாம் என் தலையெழுத்து ” என்று புலம்ப ஆரம்பித்தாள் சிந்து .
“என்ன டி அங்க ஏதோ சத்தம் போட்டுட்டு இருக்க அங்கேயே இரு டி நான் வரேன் ” என்று சமையல் அறையில் இருந்து சத்தம் போட்டார் சுசிலா…
“அயோ இப்பவும் மாட்டிக்கொண்டேன்னே ” என்று அங்கிருந்து செல்ல முயன்ற போது மீனு  கையை பிடித்து இழுத்து அவளின் அருகில் வந்து “தவளை தன் வாயால் கெடும் டி தங்கச்சி” என்று கூறி சிரிக்க தொடங்கினாள்..
“அக்கா ரொம்ப சிரிக்காத “என்று சிந்து கோபமாக சொல்ல
“இரு டி நான் அம்மா கிட்ட சொல்லி தரேன் உன்னை  ” என்று மீனு சொல்லி
” அம்மா அம்மா இங்க வாங்க கொஞ்சம் “என்று மீனு அன்னையை அழைக்க
“இரு மீனு வரேன் ” என்று சத்தம் கொடுத்தார் சுசிலா.
“அய்யோ நான் போறேன் பா” என்று கூறிவிட்டு தன் அறைக்கு சிட்டாக பறந்து விட்டாள் சிந்து.
அவள் ஓடுவதை பார்த்து மீனு சிரிக்க ஆரம்பித்து விட்டாள்.
அவளது சந்தோஷத்தை பார்த்த சுசிலாவிற்கு மனம் நெகிழ்வாக இருந்தது. இவள் இதே போல் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று மனதில் தன் வேண்டுதலை கடவுளிடம் வைத்தாள் சுசிலா.

Advertisement