Advertisement

இருவருக்கும் நடுவில் அமர்ந்திருந்தவளை தன்னோடு சேர்த்து பிடித்திருந்தார்.,

       அவர்கள் இருவரையும் கண் இமைக்காமல் அவன் பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருந்த திலகவதி தன் போனில் இருந்து  மூவரையும் சேர்த்து ஒரு செல்பி எடுத்தார்.,

         அப்போது அந்த போட்டோவை பார்த்தவள் “நல்லா இருக்கே” என்று சொல்லிவிட்டு.., “இதே மாதிரி வேற போட்டோ இருக்கா.,  நம்ம சேர்ந்து எடுத்தது”., என்று கேட்டாள்.

           சரவணன் அம்மாவை பார்த்து சிரிப்போடு ‘என்ன செய்ய போறீங்க’ என்பது போல பார்த்தான்.,

        அவரோ திருதிருவென முழித்தார்.,  ‘என்ன சொல்ல’ என்ற யோசனையோடு சரவணனை பார்த்தார்.

            சரவணன் தான் “இல்லடா அம்மு இந்த ஆக்ஸிடெண்ட்ல போன் மிஸ் ஆயிடுச்சு., இது வேற போன் மா.,  வீட்டிலிருந்த பழைய போன் யூஸ் பண்றோம்”.,என்று சொன்னான்.

         “உம்ம்., அப்படியா”., என்றவள் அமைதியாகி விட்டாள்.,

     அவளுக்கு பின் பக்கமாக சாய்ந்து அம்மாவிடம் “தேவையா இதெல்லாம்” என்று வாயை அசைத்தான்.,

        “சும்மா இருடா லூசு பயலே”., என்று சொன்னவர்.,

         “நீ போயி பாக்கியம் என்ன செய்றா ன்னு பார்த்துட்டு வா”., என்று அவளை அனுப்பினார்.,

        அவளோ எழுந்து நின்று விட்டு.,  மறுபடியும் “என்ன எல்லாம் பார்க்கணும்” என்று கேட்டாள்.,

        “போயி என்ன சமைக்கிறாங்க ன்னு பாரு., சமைச்சு முடிச்சிட்டாங்களா ன்னு கேளு.,  சமைச்சு முடிச்சிட்டேன் சொன்னா வந்துரு., இல்லைனா இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் ன்னு கேளு., கேட்டுட்டு கிச்சன்ல எப்படி சமைக்குறாங்க ன்னு பார்த்துட்டு வர்றீயா”.,  என்று சொன்னார்.

     சரி என்று தலையாட்டிவிட்டு கிச்சனை நோக்கி சென்றாள்.

         “ஏன்மா இப்ப கிச்சனுக்கு அனுப்புனீங்க., பாக்கியம்மா மேல உங்களுக்கு என்ன கடுப்பு”.,  என்று கேட்டான்.

        ” ஏன்டா இப்படி சொல்ற”.,  என்றார்.

         “இல்ல இப்ப கேள்வியா., கேட்டு உண்டு இல்லைன்னு ஆக்க போறா”.,  என்று சொன்னான்.

            “அதெல்லாம் இல்லடா., கேட்டா கேட்கட்டும்.,  இப்ப என்ன கொஞ்சம் அவளும் கொஞ்சம் தெரிஞ்சிக்கட்டும்., ஒன்னு ஒன்னா புரிஞ்சுக்கட்டும்”., என்று சொன்னார்.,

        “சரி தான்., ஆனால் எனக்கு என்னவோ அந்த பொண்ண அதை செய் இதை செய்., ன்னு சொல்வதைப் பார்க்கும் போது வேலையை ஏவுற மாதிரி ஒரு பீல் ஆகுது.,  அப்படி பண்ண வேண்டாமே”., என்று சொன்னான்.

               “அப்படி எல்லாம் இல்லைடா.,  பொண்ணுங்க எல்லாம் கத்துக்கணும்., அவளுக்கு  எப்பவும் அப்படியே இதே மாதிரி இருக்காது., கொஞ்சம் கொஞ்சமா ஞாபகம் வரும் ன்னு நம்பிக்கை இருக்குல்ல., அந்த ஞாபகம் வரும் போது ஒருவேளை இந்த பழைய ஞாபகங்களும் இருந்துச்சுன்னா.., அவளை நானும் அதே மாதிரி வைத்திருந்தால்.,  அவ யோசிக்க மாட்டாளா.,  அதே இது அவளுக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்து., எல்லாம் நல்லபடியா பார்த்து இருந்தால் அவளுக்கும் மனசுக்குள்ள ஒரு நிம்மதியா இருக்கும் இல்ல., இந்த வீட்டு பொண்ணு மாதிரி இல்ல இல்ல மருமக மாதிரி பாத்துட்டாங்கங்க ன்னு இருக்கும் இல்ல”., என்று சொன்னார்.,

            “வர வர உங்களுக்கு நட்டு கலண்டு போச்சு”., என்று சொன்னான்.

        சிரித்துக்கொண்டே அவரோ “நீயா ஒரு பொண்ண பாத்து கூட்டிட்டு வந்திருந்து.,  பொண்ண கல்யாணம் பண்ணி வை ன்னு சொல்லியிருந்த னா.,  நான் எதுக்குடா இப்படி பொண்ணு பாத்துட்டு சுத்த போறேன்., இப்பவும் நீ பார்த்து சொல்ல மாட்டேங்குற.,  இதுக்கு முன்னாடியும் பார்த்து சொல்லல..,  சரி நான் பாக்குற பொண்ண கல்யாணம் பண்ணிக்குவ ன்னு பார்த்தா.,பார்க்கிற பொண்ணுட்ட  எல்லாம் ஒரு குறை கண்டுபிடிக்க.., அப்புறம் என்ன தாண்டா செய்றது”., என்று சொன்னார்.

            “ஒன்னும் செய்ய வேண்டாம்.,  நாளைக்கு பெங்களூர் கெளம்புற வழியை பார்ப்போம்”., என்று சொல்லிக் கொண்டிருந்தான்.,

     அதற்குள் போய் கேட்டு விட்டு வந்தவள் திலகவதி இடம் அனைத்தையும் ஒப்பித்தாள்.,

       அவரும் சிரித்துக் கொண்டே “சரி மா” என்று கேட்டுக்கொண்டார்.

             அப்போது தான் சரவணனிடம் “முடிவெட்டனும் டா., மேனேஜர் ட்ட கேட்டு யாரையாவது அழைத்து வர சொல்லு.,  அவளுக்கு முடி வெட்ட வேண்டும்”., என்று சொன்னான்.

         பிறகுதான் அவள் முடியை இருவரும் யோசித்தனர் அதன்பிறகு மாலை வேளைக்கு முன்பே முடி வெட்டுபவர் வந்து மூடியை அழகுற வெட்டி விட., மேல் முதுகு வரை தான் இப்போது முடி இருந்தது.,

             தலையின் வீக்கம் சற்று குறைந்திருக்க.., அவர்களும் அங்கிருந்து கிளம்பலாம் என்ற எண்ணத்தோடு இருந்தனர்.,

        மறுநாள் காலை அங்கிருந்து பெங்களூர் கிளம்புவதாக இருக்க.,  அவர்களுக்கான துணிகளை பேக் செய்து கொண்டிருந்தனர்.,

        அம்முடைய உடைகளையும் எடுத்து பேக் செய்தபடி இருந்த திலகவதி.,

        “அம்மு நாளைக்கு கிளம்பும் போது இந்த ட்ரஸ் போட்டுக்கரியா”.,   என்று சொன்னார்.,

        “சரி அத்தை”.,  என்றவாறு “நீங்க என்ன டிரஸ் போடுவீங்க”., என்றாள்.

         “அத்தை சாரி தான் கட்டுவேன்”., என்று சொன்னார்.

      “ஏன் ஸாரி கட்டணும்., நீங்களும் இதே மாதிரி டிரஸ் போடுங்களேன்”., என்று சொன்னார்.

          “நம்ம ஊருக்கு போயிட்டு., ரெண்டு பேருக்கும் ஓரே போல டிரஸ் வாங்கி போட்டு போட்டோ எடுத்துப்போம்”.,  என்று சொன்னார்.,

           “ம்ஹா., ஆனால் அவங்க ட்ட சொல்லாதீங்க., சரியா”., என்று சொல்லி அவருடன் ரகசிய பேரம் பேசிக் கொண்டாள்.

       திலகவதியும் சரவணனும் இவளுக்கு மருத்துவமனையில் அப்பாய்ன்மெண்ட் வாங்குவது விஷயமாக பெங்களூரிலுள்ள அவர்களுக்கு வேண்டப்பட்ட டாக்டரிடம் கேட்டனர்.,

        அவரிடம் முழு விபரத்தையும் சொல்லி கேட்டனர்.,  அவரோ “நீங்க வாங்க.,  நீங்க வரும் போது உங்களுக்கான மருத்துவ ஏற்பாடுகளை நான் செய்து வைத்திருக்கிறேன்., வந்த ஒரு நாள் ஓய்வு எடுத்துட்டு., மறுநாள் ரிலாக்சா வாங்க., அந்த பொண்ணு ப்ரீயா இருக்கனும்”., என்று சொல்லி இருந்தார்.,

            அவர்களும் சரி என்று சொல்லி இருந்தனர்.,  இருவர் மனதுக்குள்ளும் ‘ட்ரீட்மென்ட் எப்படி இருக்கும்.,  பிறகு அது இவளோட நிலை எப்படி இருக்கும்’ என்பதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தனர்.

         மறுநாள் அதிகாலையிலேயே ஜீப் ல கோயம்புத்தூர் வந்து சேர்ந்தனர்.

         மேனேஜர் வந்ததால் ஜீப்பின் பின் பக்கம் திலகவதி அம்மாவோடு அமர்ந்திருந்தாள்., பாதை முழுவதும் ஆங்காங்கே சரி பண்ணிக் கொண்டிருந்தனர்.,  பாதைகளும் பழையபடி போக்குவரத்து தொடங்கியிருந்தது., அவளும்  பார்த்துக் கொண்டே கடந்து சென்றனர்.

      . கிட்டத்தட்ட ஐந்து நாட்கள் கடந்த நிலையில் தான்., அங்கிருந்து கிளம்பி இருந்தனர்., கோயம்புத்தூரில் வந்து இறங்கவும்., அவர்கள் கார் அவர்களுக்காக ஒரு ஹோட்டலில் காத்திருந்தது.,

            ஹோட்டலில் சென்று காலை உணவை முடித்துக் கொண்டு கிளம்பலாம்., என்று சொல்லும் போது

          திலகவதி தான் “டேய் நான் சொன்னதை மறந்துட்டியா”., என்று சொன்னார்.

     “ஐயோ.,  நல்ல ஞாபகம் இருக்கு ம்மா.,  போற வழியில நல்ல ஷாப் பார்த்து  நிறுத்துறேன்”., என்று சொன்னான்.

        “இல்ல இல்ல., இங்கே கீழே ஒரு பொட்டிக்  பார்த்தேன்., ஹோட்டல் இருக்குறதால இங்கேயே வாங்கலாம்”.,  என்று சொன்னார்.,

         “வாங்க வாங்கிட்டு., அங்கேயே  டிரஸ் சேஞ்ச் பண்றது னா பண்ணிட்டு வாங்க”., என்று சொன்னான்.

      அவளை அழைத்துக் கொண்டு அங்கு சென்றார்., அங்கு சென்றவுடன் “இங்கே எதுக்கு அத்தை”., என்று கேட்டவுடன்.,

        “என்னடா நாம உனக்கு கொஞ்சம் டிரஸ் வாங்கிக்கலாம்.,  நம்ம ஊர்ல போய் இன்னும் கொஞ்சம் டிரஸ் வாங்கிக்கலாம்.,  இப்போதைக்கு இங்க கொஞ்சம் வாங்குவோம்”.,  என்று சொன்னார்.,

         சரி என தலை அசைத்தாள்.,  அதன் பிறகு அவளுக்கு தேவையான சில சற்று விலை உயர்ந்த தரத்தில் உள்ள சுடிதார்.,  மாடல் டிரஸ் என வாங்கிக் கொண்டவர்.,

        சரவணனை அழைத்து “பில் பே பண்ணு”., சொன்னார்.

       சரவணனும் அவரிடம் “பொண்ணுங்க டிரஸ் வாங்க கூட்டிட்டு வந்தா.,  பர்ஸ் காலியாகிரும் ன்றது  சரியாதான் இருக்கு”., என்று சொன்னான்.,

            “சம்பாதிக்காத மாதிரியே பேசுற.,  என் புருஷன் சம்பாதியமும்  சேர்த்து தானடா வைத்திருக்க., என் மருமகளுக்கு வாங்கி கொடுக்க இவ்வளவு அழுவுற”., என்று சொன்னார்.

     “ஐயோ அம்மா., சத்தமா சொல்லாதீங்க ம்மா அவ காதுல விழுந்துச்சு., ஏன் எனக்கு வாங்கி கொடுக்க மாட்டீங்க.,  கேட்டுகிட்டே இருப்பா.,  ஊர் போய் சேர்ற வரைக்கும் திரும்பத் திரும்ப இதையே தான் கேட்பா., இடையில் என்ன எல்லாம் தோணுதோ அந்த கேள்வியும் சேர்த்து கேட்பா., தயவு செய்து சொல்லாதீங்க”.,  என்று சொன்னான்.

             “அவ டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வரட்டும்., சொல்லுறதா வேண்டாமா ன்னு யோசிப்போம்”., என்று சொன்னார்.,

       அவளோ டிரஸ் சேஞ்ச் பண்ணி விட்டு தன்னை கண்ணாடியில் பார்க்கும் போது தான் என்ன உணருகிறோம் என்று அவளது மனநிலைக்கு உணராமல் பார்த்துக் கொண்டே இருந்தாள்., சற்று நேரம் அமைதியாக பார்த்தவள் பின்பு அங்கு ஏற்கனவே போட்டு வந்திருந்த உடையை மடித்து கையில் எடுத்துக் கொண்டாள்.,

         வெளியே தலையை நீட்டி ‘அத்தை’ என்று அழைத்தாள்.,

         “இருடா வாறன்”.,  என்று போனவர் அவளின் அழகில் பிரமித்து தான் போனார்., வீட்டிலிருந்து கிளம்பும் போதே மேல் முதுகு அளவுக்கு இருந்த முடியை நன்றாக பொனிடைல் போல் போட்டு விட்டிருந்தார்.

             அந்த குட்டி குதிரை வாலுக்கும் அவளது இந்த சுடிதார் இன்னும் அவளுக்கு அழகாக தெரிந்தது..

     கையில் இருந்த உடையை அங்கிருந்த பெண்ணிடம் ஒரு கவர் வாங்கி அதில் போட்டுக் கொண்டவர்., “சரி வா போலாம்” என்று சொன்னார்.,

              பில் கவுண்டரில் பணத்தை கொடுத்து விட்டு திரும்பி பார்த்தவன்., ஒரு நிமிடம் அசந்து தான் போனான்.

        ‘அம்மா சொன்னது உண்மை தான் போலும்., ஆள் பாதி ஆடை பாதி என்று சும்மாவா சொன்னார்கள்’., சாதாரண உடையிலேயே அழகாக தெரிந்தவள் இந்த உடையில் இன்னும் அழகாக தெரிந்தாள்.

   அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன்., மனமோ ‘கடவுள் அவளுக்கு இப்படி ஒரு சோதனையையும்.,  பிரச்சனையும் கொடுத்து இருக்க வேண்டாம்’., என்று நினைத்துக் கொண்டான்.

      ‘சீக்கிரம் குணமாக வேண்டும்’., என்ற பிரார்த்தனையும் அவனுக்குள் இருந்தது.

             அவளை அழைத்துக் கொண்டு திரும்பியவர் அவனின் பார்வையை தான் பார்த்துக் கொண்டிருந்தார்., “அடேய் மகனே நல்லா பார்க்குறடா”., என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவர்.,

       ‘கடவுளே சீக்கிரம் எல்லாம் சரியாக வேண்டும்’., என்று மட்டும் நினைத்துக் கொண்டார்.

      அதன் பின்பு அங்கிருந்து அவர்களது பெங்களூர் பயணம் துவங்கியது.,  ஆங்காங்கு உணவு மற்றவற்றிற்கு நிறுத்தினாலும்.,

     அவளுக்கு டாக்டர் அங்கு சென்று சேரும் வரை., கொடுக்க வேண்டிய மருந்துகளை சரியாக கொடுக்க சொல்லியிருந்தார்.,

    அது போல அவள் மருந்துகள் சாப்பிட்டு இருந்ததால்., பாதி நேரத்தில் நல்ல உறக்கத்தில் இருந்தாள்.

          பெங்களூரில் அவளுக்கான மருத்துவத்தில்.,  அவளுக்கு மாற்றம் வருமா என்ற யோசனையோடு.,

         ட்ரைவர் ஓட்ட டிரைவர் அருகில் அமர்ந்திருந்தான் சரவணன்.,
டிரைவரிடம் சொந்தக்கார பெண் என்று சொல்லி இருந்தனர்.,

      அவளும் அத்தை என்று அழைத்ததால் அதற்கு மேல் யாருக்கும் சந்தேகம் வராதபடி.,  அதையே அப்படியே அங்கு சொல்லிக் கொள்ள வேண்டும் என்று மட்டும் நினைத்திருந்தனர்.,

       *உறவுகள் புதுமை தான்.,

  மனிதனின் தேவையில் மற்றவர்களின் சேவையும் அடங்கி இருக்கிறது.. அதை அறிந்து வாழும் போது வாழ்க்கை அழகாக மாற மாற்றம் பிறக்கிறது..*

Advertisement