Advertisement

9

             அதன் பின்பு அங்கிருந்த இரண்டு நாட்களும் அவள் வேலைகளை.,  அவளே செய்து கொள்ளும் அளவிற்கு முன்னேறி இருந்தாள்.,

        ஆனால் எப்போதும் திலகவதி உடன் இருக்க வேண்டும் என்று நினைப்பாள்., அல்லது சரவணன் இருக்க வேண்டும்., இருவரின் துணை இல்லாமல் தனியே அவள் இருப்பதே இல்லை எனும் அளவிற்கு மாறி போயிருந்தாள்.,

     ரத்தக்கட்டுக்கு தொடர்ந்து மருந்து போட்டு விட்டனர்., வலிக்கும் மருந்து கொடுத்து கொண்டிருந்தனர்.,

      கோயம்புத்தூரில் போய் மருத்துவம் பார்த்தாலும் சரி இல்லை., பெங்களூரில் போய் பார்த்தாலும் சரி., என்று சொல்லியிருந்தனர்.

        இதற்கு இடையில் அவளுக்கான எந்த ஐடி கார்டு அவர்களிடம் இல்லாததால்., பிளைட்டில் போக முடியாது என்ற சூழ்நிலையில் கோயம்புத்தூருக்கு அவர்களது காரை வர சொல்லியிருந்தனர்.,

         இங்கிருந்து ஜீப்பில் கொண்டு போய் கோயம்புத்தூரில் விட சொல்லியிருந்தால்., சரவணன் அதன்படியே ஏற்பாடுகளை செய்து கொண்டு அவர்கள் கிளம்ப தயாராய் இருந்தான்.,

             அவசரத்திற்கு என்று அவளுக்கு அருகில் உள்ள கடைகளில் வாங்கியதால் அவரது அவள் போட்டிருந்த துணிகள் சாதாரணமாக தெரிந்தது போல இருந்தது திலகவதிக்கு.,

               எனவே அவர் சரவணனிடம் கோயம்புத்தூரில் போய் நாம கிளம்புறதுக்கு முன்னாடி வேற டிரஸ் வாங்கி மாத்திக்கனும்., இது வீட்டுக்கு போட்டுக்கிற மாதிரி இருக்கு”., என்று சொன்னார்.

           திரும்பி பார்த்தவன்., “அப்படி ஒன்னும் இல்லையேம்மா.,  நல்லாத்தான் இருக்கு., காரை விட்டு எங்கேயும் இறங்கப் போறதில்லை அப்புறம் என்ன”.,  என்று சொன்னான்.

       “அப்படியெல்லாம் இல்ல டா., கூட கூட்டிட்டு போகும் போது., அவள் பார்க்க நல்லா இருக்கணும்”., என்று சொன்னார்.

       “உங்க இஷ்டம்”., என்று சொன்னவன் அவளைப் பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தான்.,

        “ஏண்டா அப்படி பாக்குற”., என்று கேட்டார்.,

       “இல்ல இந்த ட்ரெஸ் க்கு என்ன குறைச்சல் ன்னு யோசிக்கிறேன்”., என்று சொன்னான்.,

        “அப்படி இல்லடா பொண்ணுங்க டிரஸ் பண்றது உனக்கு புரியாது., பார்த்ததும்  அப்படி ஒரு லுக் கொடுக்கணும்., அது மட்டுமில்லாம ஒரு  டிரஸ் போட்டா., அந்த டிரஸ் போட்டதால அந்த பொண்ணு அழகா இல்ல.,  அந்த பொண்ணால அந்த டிரஸ் அழகா ன்னு., யோசிக்க வைக்கனும்., அந்த பொண்ணு அழகு டா., டிரஸ் கம்மியா தெரியுது.,  ரெண்டு பேருமே அழகா இருக்கணும் இல்ல”., என்று சொன்னார்.,

           “நல்ல புதுசு புதுசா காரணம் கண்டுபிடிக்கிறீங்க”என்று சொன்னவன் அவளை பார்த்தபடி அம்மாவை பார்க்க.,

       “என்னடா”., என்றார்.

        “இல்ல இந்த பொண்ணு.,  இந்த மாதிரி எல்லாம் யோசிச்சு இருக்குமா., இல்ல எப்படி  நினைச்சிருக்கும் ன்னு யோசிச்சிட்டு இருந்தேன்”., என்று சொன்னான்.,

      “ம்ஹீம்., தெரியல டா., எல்லாம் சீக்கிரம் சரியாயிடும் ன்னு நம்புவோம்”., என்று சொன்னார்.

         இவர்கள் இருவரும் பேச.,  அவளோ அவர்கள் கண் பார்வையில் அமர்ந்து அவனுடைய செல்லில் ஏதோ விளையாடிக் கொண்டிருந்தாள்.,

          இந்த இரண்டு நாட்களில் அதை தான் சரியாக கற்றுக் கொண்டிருந்தாள்.,  ஒன்று திலகவதி அம்மாவின் செல் அவள் கையில் இருக்கும்.,

         ஒரு நாள் எதையோ எடுத்து பார்த்துக் கொண்டிருக்க., சரி அவளுக்கும் ஏதாவது போரடிக்காமல் இருக்கட்டும் என்று தான் அதில் விளையாடுவதை சொல்லிக் கொடுத்திருந்தான் சரவணன்.,

        அதிலிருந்து எப்போதும் எப்படியும் அவள் கையில் செல் வேண்டும் என்று சிறு பிள்ளை போல அடம் பிடித்து அதை வைத்துக்கொண்டு விளையாடிக் கொண்டே இருப்பாள்.,

      சரவணன் தான் கையில் குறிப்பிட்ட நேரம் மட்டும் கொடுத்து விட்டு பின்பு வாங்கி வைத்து விடுவான்., சிறு சிறு புத்தகங்கள் வீட்டில் இருந்ததை எடுத்துக் கொடுத்து இருந்தான்.,

      இங்கு அதிகமான புத்தகங்கள் அவன் வைத்துக் கொள்வதில்லை., பெங்களூரில் நிறைய உண்டு என்பதால் ஊருக்கு சென்ற பிறகு இவளை வாசிக்க வைக்க வேண்டும் என்று நினைத்திருந்தான்., அதையே தன் அம்மாவிடமும் சொல்லிக் கொண்டிருந்தான்.,

           “அம்மா அந்த பொண்ணு என்ன படிச்சிருக்கு ன்னு  நமக்கு தெரியாது.,  ஆனா நல்ல ஃப்ளுயன்டா  இங்கிலீஷ் வாசிக்குது.,  சோ ஊருக்கு போன உடனே உங்களோட வேலை இது தான் எப்பவும் கையில செல்ல கொடுத்துட்டு.,  சின்ன பிள்ளை மாதிரி அவளை விளையாட விட்டுட்டு இருக்கக்கூடாது.,

       அப்பப்போ அவள் வயசு கூறிய விஷயங்களைச் சொல்லிக் கொடுங்க.,  அவ  பேசாம விளையாடுவது மட்டும் தான் லைஃப் நினைச்சிட்டு உட்காரக் கூடாது..,  வாசிக்கும் போது தான் அவளுக்கு பழைய விஷயங்கள் ஏதாவது நினைவுக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கு”.,  என்று சொன்னான்.

      “நீ எப்படா டாக்டருக்குப் படிச்ச”., என்று கேட்டார்.,

       “மா என்னமா இது.,  நான் அவளுக்காக ரெண்டு நாளா உட்கார்ந்து பழைய  ஞாபகம் மறந்து போனவங்களோட  நினைவுகளை திருப்பி கொண்டு வருவது எப்படி ன்னு படிச்சிட்டு இருக்கேன்.,  டாக்டருக்கு படிச்சியா ன்னு கேட்கிறீங்க”., என்று கேட்டான்.

        “போடா பெங்களூர் போய் நல்லா பார்த்துக்கோ”.,  என்று சொன்னவுடன் அம்மாவையே குறுகுறு என்று பார்த்தான்.

         “என்னடா அப்படி பார்க்குற”.,  என்று கேட்டார்.

           “இல்ல நீங்க அந்த பொண்னை வேணும் ன்னே தானே அத்தை ன்னு சொல்லி கொடுத்தீங்க”., என்று கேஞ்டான்.

       அவரோ சிரித்த படி “அட கள்ளப்பயலே”., என்று மகனின் கன்னத்தைக் கிள்ளி “கண்டுபிடிச்சிட்டியா” என்றார்.

         “ஏன்ம்மா., எப்ப இருந்து இப்படி ஆரம்பிச்சீங்க.,  எந்த பெண்ணை பார்த்தாலும் இப்படி சொல்கிறது”., என்று சொன்னான்.

       “அப்படி இல்லடா அழகா இருக்கா.,  செல்லம் போல இருக்கா”.,  என்று சொன்னார்.

        “மாமா அவ சின்ன பிள்ளை மாதிரி இருக்கா ம்மா.,  அப்படி பேசாதீங்க”., என்று சொன்னான்.

       “அதெல்லாம் இல்ல., நீ வேணா பாரு சூப்பரா வந்துடுவா”., என்று சொன்னார்.

     அவனும் கன்னத்தில் கை வைத்தபடி “நீங்க தேறாத கேஸ் ஆயிட்டீங்க ம்மா., எப்ப பாரு.,  எந்த பெண்ணை பார்த்தாலும் இந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கலாமா., அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கலாமா ன்னு யோசிச்சிட்டு இருக்கீங்க., நீங்க போடுற லிஸ்ட் பார்த்தா எனக்கு பத்து வைஃப் அ கல்யாணம் பண்ண போறேன்னு நினைக்கிறேன்”., என்று சொன்னான்.

              “ஓஹோ உனக்கு அப்படி வேற நினைப்பிருக்கா., இங்க ஒன்னுக்கே வழிய காணோம்.,  பத்து கேக்குது., இரு இரு முதல்ல இவளோ சரி பண்ணி எழுப்பி ட்ரெய்னிங் கொடுக்கிறேன்”., என்று சொன்னார்.

       “அம்மா முதலில் அவ நல்ல ஆகட்டும் அதுக்கப்புறம்  நீங்க ட்ரைனிங் கொடுங்க”., என்று சொன்னான்.

        “கண்டிப்பா நல்ல ஆவாடா., நான் அந்த நம்பிக்கையில் தான் இருக்கேன்.,  ஆனா மனசுக்குள்ள ஒரு பயம் இருக்கு தான்., சப்போஸ் அந்த பொண்ணுக்கு நினைவு திரும்பவில்லை னா., இப்படியே தான் இருக்கும் அப்படினா என்னடா பண்ண”., என்று கேட்டார்.,

      அவளையே சற்று நேரம் பார்த்து இருந்தவன்., “அத அப்புறமா யோசிப்போம் ம்மா.,  பெங்களூரில் போய் அவளுக்கு நம்ம டாக்டரிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கணும்., அத ஞாபகம் வச்சுக்கோங்க., அவர் ஜெனரல் மெடிசின் ஆனாலும்., அவர் சொல்லுவார் சஜஸ் பண்ணுவாரு.,  எந்த டாக்டர் பார்க்கலாம்னு.,

     அதுக்கப்புறம் இதுக்கான டிரீட்மென்ட் கொடுக்க ஆரம்பிக்கலாம் அதுக்கு அப்புறம் அவளோட ரெக்கவரி பார்த்துட்டு எதுனாலும் பேசுங்க..,  தயவுசெய்து நீங்களா மனசுல ஆசையை வளர்த்துட்டு அது இதுன்னு பேசாதீங்க..,  நாளைக்கு ஏமாற்றங்கள் வந்தா தாங்க முடியாமல் போயிடுவீங்க”., என்று சொன்னான்.

          “ஏன்டா அபசகுனமா பேசுற.,  அதெல்லாம் இல்லை எனக்கு தெரியும்”.,  என்று சொன்னவர் அவளையே பார்த்துக் கொண்டிருக்க..,  விளையாடிக் கொண்டிருந்தவளோ நிமிர்ந்து பார்த்தாள்.,

            அவரைப் பார்த்தவுடன் சிரித்துக் கொண்டிருந்தாள்.,  அவரோ கையை ஆட்டி தன்னருகே வருமாறு அவளை அழைத்தார்.

         எழுந்து வந்தவள்.,  அவர் அருகே அமர்ந்து கொண்டு “கேம் டைம் முடிஞ்சு போச்சா” என்று கேட்டாள்.,

       திலகவதி பதில் சொல்வதற்கு முன் சரவணன் தான்., “டைம் முடிஞ்சிடுச்சு.,  கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கோ.,  அப்புறமா உனக்கு ரீடிங் டைம்”.,  என்று சொன்னான்.

       அவனை பார்த்து விட்டு சரி என்னும் படியாக தலையை ஆட்டியவள்., அவனது போனை அவனது கையில் கொடுத்தாள்.

Advertisement