Advertisement

அவள் மயக்கம் தெளிந்து எழுந்ததில் இருந்து பார்த்த இந்த நான்கைந்து பேரை தவிர வேறு யாரைப் பார்த்தாலும் சற்று பயப்பட தொடங்கினாள்.,

       அதை  உணர்ந்து கொண்ட டாக்டர் திலகவதியிடமும் சரவணனிடமும் தனியாக அழைத்துப் பேசினார்.,

            இன்னும்  ஒருநாள் இங்கே ட்ரீட்மென்ட் எடுத்துட்டு., நீங்க பெங்களூர் கிளம்புங்க.,   அந்த பொண்ணுக்கு இப்போ யாரு என்னன்னு எதுவும் தெரியல.,  ஞாபகம் வந்துச்சுனா அவங்க வீட்ல கொண்டு விட்டுக்கலாம்., மற்றபடி அந்த பொண்ணு ஞாபகம் இல்லாத நேரத்தில்., இங்க நம்ம போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் கூட பண்ண முடியாது”.,  என்றவர்.

          யாருமே இப்போ நம்ப முடியாத சூழ்நிலை.,   இப்ப இருக்க காலத்துல யாரையும் நம்பி அதுவும் பொண்ணு இப்படி இருக்கும் போது விட முடியாது.,  நம்ம ஏற்கனவே பேசினது தான்., நீங்க இப்ப சொன்னது சரியா சொன்னிங்க.,  நான் கூட நீங்க ஏதும் மாத்திடுவீங்களோ ன்னு பயந்தேன்., ஆனால் நீங்க கரெக்டா சொல்லிட்டீங்க..,

          லீவுக்கு உங்க கூட வந்தால் வந்த இடத்தில் ஆக்சிடென்ட் சொன்னதால.,  இப்ப அப்படி தான் நினைத்திருப்பா.,  அவளுக்கு நினைவில் உருவங்களா வந்தது அவளுக்கு ஆக்சிடென்ட் நடப்பதற்கு முன்னாடி நடந்த விஷயங்களா இருக்கும்.,

      அது அவளுக்கா நினைவு வர வரைக்கும் நம்ம ரொம்ப போர்ஸ் பண்ணி ஞாபகப்படுத்த வேண்டாம்., நீங்க சொன்னது கரெக்ட் தான்., அவ அப்படியே இருக்கட்டும் நீங்க கூட்டிட்டு போயிருங்க.,  உங்க கிட்ட பாதுகாப்பா இருக்கட்டும்., அவளுக்கு ஞாபகம் வந்துச்சுனா கொண்டு போய் விட்டுட்டு வரலாம்.,

          இல்ல னா., அவ போட்டோவை காட்டி யாரும் கேட்டாங்கன்னா., நல்ல விசாரிச்சுட்டு நான் உங்களுக்கு போன் பண்ணிட்டு உங்க  நம்பர் கொடுக்கிறேன்.,  நீங்களும்  விசாரிச்சுட்டு அதுக்கப்புறம் கொண்டு விட்டா போதும்”.,  என்று சொல்லி பேசிக்கொண்டிருந்தனர்.

          அதுவும் சரிதான் என்று பேசிக் கொண்டவர்கள்., மறுநாள் அவள் கொஞ்சம் சரியானதும் கிளம்பலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தனர்.

      அவளுக்கு தேவையான உடைகளை மேனேஜர் உடன் சென்று அருகில் இருந்த சிறிய கடையில் தேவையானது மட்டும் வாங்கிக்கொண்டு வந்தார் திலகவதி.,

       யாராவது ஒருவர் அவளோடு இருக்க வேண்டும் என்பது அவளது எழுதப்படாத சட்டமாக மாறிவிட்டது.,  ஒன்று சரவணன் அருகில் இருக்க வேண்டும் அல்லது திலகவதி அருகில் இருக்கவேண்டும்.,

       பாக்கியம் நர்ஸ் டாக்டர் மூவரிடமும் பேசினாலும் சற்று தள்ளியே தான் நின்றாள்.,

        திலகவதி., சரவணன் இருவரிடமும் சாதாரணமாக அவளால் இணைந்து கொள்ள முடிந்தது.,  ஏனெனில் அவள் குழம்பும் போது திலகவதி சொன்ன கதையை அவள் நம்பி கொண்டாள்.

        அன்று இரவு அவள் அறையில் பாக்கியம் வந்து படுக்க வர, ” இல்ல நான் எங்க அத்தை கூட படுக்க போறேன்”.,  என்று அவளது போர்வையை தூக்கி கொண்டு நேராக திலகவதியின் அறையில் போய் நின்றாள்.

       திலகவதிக்கு  சிரிப்பு தான் வந்தது.,  சிறு பிள்ளையில்  ‘சரவணன் இப்படித்தான் அவனுக்கு என்று தனி அறையை ஒதுக்கிக் கொடுத்தாலும்.,  அம்மா அப்பாவோடு தான் படுப்பேன்’ என்று வந்து படுத்துக் கொள்வான்.,

        அதுபோலவே வந்து நிற்பவளை பார்க்கும் போது அழைத்து தன்னருகே படுக்க வைத்துக் கொண்டார்.,

      சிறுபிள்ளை போல அவரை கட்டிக்கொண்டு தூங்கியவளை பார்க்கும் போது ‘கடவுளே நல்ல நிலைமையில் இவளை சந்தித்து இருக்கக்கூடாதா’ என்று தோன்றியது.,

      இருந்தாலும் அவளுக்கு நல்லபடியாக குணமாக வேண்டும் என்று மனதிற்குள் வேண்டிக் கொண்டவர்., அவளைப் பார்த்தபடியே தூங்கிப் போனார்.

     . தன் அறையில் இருந்த சரவணனும் இன்று பகலில் நடந்தவற்றை நினைத்துக் கொண்டிருந்தான்.,

     அவளுக்கு என்று துணி வாங்க அம்மா வெளியே போய் இருந்த சமயத்தில் அவனோடு அமர்ந்துக் கொண்டிருந்தவள் அவன் லேசாக நகர்ந்தாலும்., அவன் கூடவே எழுந்து., அவன் கையை பிடித்துக் கொண்டு அவன் கூடவே போனாள்.,

        “நீ இரு நான் வந்துருறேன்”.,  என்று சொன்னாலும்.,

         ” இல்ல.,  நானும் வருவேன்”., என்று சொன்னாள்.

        “நான் குளிக்கப் போறேன்., நீ அங்க வருவியா”., என்று சொன்ன பிறகு., அவனை திருதிரு வென்று முழித்துப் பார்த்தவாறு ” சரி”என்று சொல்லி விட்டு அங்கே ஒரு ஓரமாக அமர்ந்தாள்.,

       ” நான் கதவை பூட்டிட்டு போறேன்., யாரும் வீட்டுக்குள்ள வரமாட்டாங்க.,  பாக்கி அம்மா சமையல் பண்ணிட்டு இருக்காங்க., யாரையும் தேடாமல் நல்ல பிள்ளையா இருக்கணும்”.,  என்று சொன்னான்.,

        “நீங்க குளிச்சிட்டு வர நேரம் ஆகுமா”.,  என்று கேட்டாள்.,  இல்ல சீக்கிரம் வந்துட்டுவேன்”.,  என்று சொன்னான்.

       ” சரி” என்று அமைதியாக அமர்ந்து கொண்டாள்.,  அங்கு இருந்த ஒரு புத்தகத்தை எடுத்தவள் அதை வாசிப்பதை பார்த்தவன்.,

       ‘வாசிக்க எல்லாம் தெரிகிறதா’ என்ற யோசனையோடு அவளருகில் மீண்டும் வந்து அமர்ந்தான்.,

     அவன் அமர்ந்ததை  உணர்ந்தவன் “குளிக்க போகலையா” என்று கேட்டாள்.

       “வாசிக்க தெரியுதா” என்று கேட்டான்.

       “ம்ம்ம்” என்று சொல்லவும்., அருகிலிருந்த இங்கிலீஷ் பேப்பரை எடுத்து “இதை வாசி”., என்று சொன்னான்.

         அதையும் வாசித்தாள்., இப்போ கையில இருக்குறத சத்தமா வாசிச்சு காட்டு”., என்று சொன்னான்.

         அதையும் வாசித்தாள்., “ஓகே., இரு நான் வரேன்”., என்று சொல்லிவிட்டு டாக்டருக்கு போன் செய்தான்.,

     ” டாக்டர் அந்த பொண்ணு புக்கெல்லாம் வாசிக்கிறா., இங்கிலீஷ்., தமிழ் இரண்டும் வாசிக்கிறா” என்று சொன்னான்.

     “அதெல்லாம் அவளுக்கு மறந்திருக்காது.,  நார்மலா இதுவரை அது அவளோட மெமரியில் பதிந்து போயிருக்கும்., அதெல்லாம் பார்த்த உடனே தானா வந்துரும்., இப்ப அவளுக்கு அடிபட்ட  அதிர்ச்சியில் தான்.,   மறந்து இருக்கா., தான் யாரு தன்னை சுத்தி என்ன நடந்துச்சு., எதனால அவளுக்கு ஆக்சிடென்ட் ஆச்சு அப்படிங்கறது தான் மறந்து இருக்கா..,

          இப்போ உங்க அம்மா சொன்ன கதையால.,  நீயும் உங்க அம்மாவும் மட்டும் தான் அவளுக்கு ரிலேஷன்னு நினைச்சுகிட்டு இருக்கா., சோ அத அப்படியே மெயின்டெயின் பண்ணுங்க.., அவளுக்கு ஞாபகம் வரும்  போது அவளே சொல்லுவா”.,  என்று சொன்னார்.,

           “சரிங்க டாக்டர் பார்த்துக்கிறோம்”., என்று சொன்னான்.

             “ஏம்பா அந்த பொண்ணு., அந்த பொண்ணுங்க.,  அந்த பொண்ணுக்கு ஒரு பேரு வச்சா என்ன”.,, என்று சொன்னார்.

           “ஓகே டாக்டர் பேர் சொல்லி கூப்பிடுறேன்”., என்று சொல்லி விட்டு வந்தவன்.

        ஏதேதோ பெயர் எல்லாம் யோசிக்க அவனுக்கு எந்த பெயரும் பிடிக்கவில்லை.,

          அவன் குளித்து உடை மாற்றி வரும் போது., அவளும் மும்மரமாக புத்தகத்தில் மூழ்கிப் போயிருந்தாள்.,

       சற்று நேரத்தில் புத்தகத்தை வைத்து விட்டு ஏதோ யோசனையில் இருந்தாள்.

          ” என்ன யோசனை”.,என்றான்.

          “இல்ல இதுக்கு முன்னாடி எங்கேயோ படித்திருக்கிறேன்”., என்று சொன்னாள்.

         “இது நார்மலா எல்லா வீட்லையும் இருக்கிற புக்கு தான்., அதனால் நீ படித்திருப்ப”., என்று  சொன்னான்.

               ஏனெனில் அவள் படித்துக் கொண்டிருந்தது., பேப்பரில் இணைப்பாக வரும் சிறுவர்கள் படிக்கும் கதைகளை தான்., அதனால் அவளுக்கு நினைவு இருக்கக்கூடும் என்ற எண்ணத்தில் அப்படி சொன்னான்.,

        ஓ அப்படியா என்ற யோசனையோடு மீண்டும் சாதாரணமாக அமர்ந்து அந்த புத்தகத்தை வாசிக்க தொடங்கியிருந்தாள்.,

    அப்போது திலகவதி அம்மா வர., அவள் புத்தகம் வாசிப்பதை பார்த்து விட்டு சரவணனிடம் ஜாடையில் கேட்டார்.,

         அவனும் அம்மாவின் பின்னே மெதுவாக செல்வது போல் சென்று விஷயத்தைச் சொன்னான்.

     டாக்டரிடம் பேசியதையும் சொன்னவன்.,  டாக்டர் சொன்னதை சொன்னவுடன்., “சரிடா நினைவு வரும் போது வரட்டும் அதற்காக அந்த பிள்ளை கிட்ட எதுவும் கேட்டுடாதே”., என்று சொன்னார்.,

        “டாக்டர் பெயர் வைக்க சொன்னாங்க மா., என்ன பெயர் வைக்கலாம்”., என்று கேட்டான்.

          “ஆமாண்டா பெயர் வைக்கவில்லை” என்று சொல்லி பேசிக்கொண்டிருந்தனர்.,

           “என்ன பெயர் வைக்கலாம்”., என்று கேட்டான்.,

             “ஏதாவது சும்மா செல்லமா கூப்பிடற மாதிரி வச்சுக்குவோம்.,  அப்பதான் ஒரு வேளை திடீர்னு அவ பேரு ஞாபகம் வந்தா., நாங்க உன்னை செல்லமா இப்படி தான் கூப்பிடுவோம்.,  அப்படின்னு சொல்லி விடலாம்”., என்று சொன்னார்.

        அதுவும் சரிதான் என்று அம்மாவும் மகனும் ஐடியா செய்து கொண்டு.,  அவளை அதிலிருந்து அம்மு என அழைக்கத் தொடங்கினர்.,

      அதன்பிறகு அவளை சாதாரணமாக அழைப்பது போல அம்மு என்று அழைத்து அவள் பெயர் அம்மு என அவள் மனதில் பதிய வைத்தனர்.,

        திடீரென யோசனையோடு அவள் “ஏன் அம்மு”., என்று கேட்டாள்.,

        “நீ தான் அம்மு., உன்னை அப்படி தான் கூப்பிடுவோம்”., என்று சொன்னான்.

          “நான் அம்மு வா”., என்று சொல்லி “ஓகே நான் அம்மு”., என்று சொல்லி அவளை அவளே சொல்லிக் கொண்டாள்.

           “ஓஓ., அப்படித்தான் கூப்பிடுவீங்களா” என்று கேட்டாள்.,

        “ஆமா”., என்று சொன்னான்.,

         மீண்டும் யோசித்தவள் சரி  என்று சொல்லிவிட்டு அதற்கு மேல் அதைப்பற்றி பேசாமல் எழுந்து கொண்டாள்.,

     அதையெல்லாம் இப்போது யோசித்துக் கொண்டிருந்தவன்., “அம்மு அம்மு”., என்று சொல்லிப் பார்த்துக் கொண்டே., அப்படியே உறங்கிப் போனான்..

     ஒருவரின் நம்பிக்கையை பெற சில செயல்கள் போதும்.,

     பொய்மை எப்போதும் ஓங்குவதுமில்லை.. உண்மை எப்போதும் தூங்குவதுமில்லை.!

Advertisement