Advertisement

8

       அதிகாலையிலேயே அனைவரும் எழும் முன் எழுந்து அமர்ந்திருந்தாள்.,  அவள் எழுந்து அமர்ந்திருப்பதைப் பார்த்த நர்ஸ் தான்., “என்னமா எதுவும் வேண்டுமா”., என்று கேட்டாள்.

       வேண்டாம் என்பது போல் தலையசைத்தவள்.,  நர்ஸ் “ஏதும் ஹெல்ப் பண்ணவா.,  நீயே எல்லாம் பார்த்துக்குவீயா” என்று கேட்டார்.

          ” வேண்டாம்”., என்று சொன்னவள் காலைக்கடன்களை முடித்துவிட்டு நர்சிடம் “தண்ணி ரொம்ப ஜில்லுனு இருக்கு” என்று சொன்னாள்.,

       நர்ஸ் அவளுக்கு ஹீட்டர் போட்டிருப்பதை காட்டி சொல்லி கொடுத்தார்.,

           “நான் குளிக்க வேண்டும்”., என்றாள்.,

       “இல்லமா டாக்டர் கிட்ட கேக்கணும்.,  அதனால கை கால் முகம்  கழுவிட்டு இருந்துக்க., கொஞ்சம் பொறு., டாக்டர் வரட்டும்”.,  என்று கேட்டார்.

      “இல்ல எனக்கு குளிச்சே ஆகனும்”., என்று சொன்னாள்.,

         “இந்த பொண்ணு என்னடா., இன்னைக்கு எல்லா வேலையும் தானா செஞ்சுகிட்டு இருக்கு”.,  என்று யோசித்தார்.,

        பாக்கியத்தை எழுப்ப போக.,  “அவங்களை எதுக்கு எழுப்புறீங்க.,  நான் தானே குளிக்க போறேன்”., என்று சொன்னாள்.,

       நேற்றைவிட இன்று தெளிவாக பேசுகிறாள் என்று நினைத்துக் கொண்டார்.,

        ஆனாலும் ஏதோ கீ கொடுத்த பொம்மை போல அனைத்தையும் மிக வேகமாக செய்து கொண்டிருந்தாள்.,

       குளிக்கப் போனவள் டிரஸ் என்று கேட்டாள்., ஏற்கனவே அவளுக்காக வாங்கி வைத்திருந்த கவுன் மாடல் டிரஸை கொண்டு வந்து கொடுத்தார்.,

           அவளுக்காக தேவையான மற்ற ஆடைகளோடு அவற்றை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றவள்., குளித்து உடை மாற்றிக் கொண்டு வந்து அமர்ந்தாள்.,

        அவள் வெண்ணீர் வைத்து குளித்து இருந்தாலும் தலைக்கு ஊற்றி இருப்பதை பார்த்தவர்., “ஏம்மா தலைக்கு குளிச்ச., டாக்டர் பார்த்தா திட்டுவாங்களே”.,  என்று சொன்னார்.

        “எனக்கு என்னவோ இங்கெல்லாம் பிசுபிசுன்னு இருக்க மாதிரி இருக்கு.,  என்னவோ ஒரு ஒரு ஃபீல்”.,என்று தலையை காட்டி சொன்னாள்.

        ‘அது சரி அவளுக்கு என்ன தோணுது ன்னு தெரியலையே., அவளுக்கு என்ன செய்து ன்னு., அவளுக்கு தெரியல போல’ என்று நினைத்துக் கொண்டார்.,

         ‘அவள் தலையை துடைத்து காய வைப்போம்’., என்று நினைத்து அவள் தலையில் கட்டியிருந்த துண்டை வைத்து தலையை துவட்டி விட்டு கொண்டிருந்தார்.

        அதே நேரத்தில் பாக்கியம் எழுந்து “என்ன ஆச்சு., இந்த பொண்ணுக்கு.,  காலையிலேயே எழுப்பி குளிச்சிட்டு உக்காந்து இருக்கு”., என்று கேட்டார்.

              “தெரியல., எழுந்ததிலிருந்து அவ வேலையை கரெக்டாக செஞ்சுகிட்டா”., என்று சொன்னார்.

           “அப்ப இப்ப பரவாயில்லையா” என்று அவர்கள் இருவரும் பேசிக் கொண்டனர்., இவ்வளோ வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் இருந்து கொண்டே இருந்தாள்.,

         அதற்குள் பாக்கியம் அம்மா போய் தலையை காய வைக்க ஹேர் ட்ரையரை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தார்.,

         நர்ஸ் ஹேர் டிரையர் போட்டு அவள் தலை முடியை  காயவைக்க சற்று நேரம் அமைதியாக இருந்தவள்.,

           அங்கிருந்த டிரெஸ்ஸிங் டேபிளை பார்த்தவள் வேகமாக போய் தன் முகத்தை பார்த்தாள்.,

       முகத்தை பார்த்தவள்., கண்ணாடியில் தெரியும் அவள் முகத்தை தடவி பார்த்ததோடு.,  தன் முகத்தை அவளே தடவிப் பார்த்துக் கொண்டு.,  “நான்” என்று யோசிக்கத் தொடங்கினாள்.

       பாக்கியம் அம்மா ஏற்கனவே ஹேர் டிரையர் வாங்கப் போகும் போது திலகவதி அம்மாவையும் எழுப்பி விட்டிருந்தார்., அவரும் “நீ போ வருகிறேன்”., என்று தான் சொல்லி இருந்தார்.,

           அவர் வரும் போது தான் இவள் கண்ணாடி முன்னின்று தன்னைத் தானே ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தாள்.,

     அப்போது தான் முடியை எடுத்து போட்டு பார்த்தாள்.,  ஏதோ யோசனையோடு தலையை தட்டிக்கொண்டே யோசித்துக் கொண்டிருந்தாள்.,

           “அந்த பொண்ணுக்கு ஞாபகம் வந்திருச்சா., என்னன்னு தெரியலையே”.,  என்ற யோசனையோடு நர்ஸைப் பார்க்க.,

            நர்ஸ் காலையிலிருந்து அவள் நடந்துக்கொண்ட முறைகளை சொன்னார்.,

        அப்போ ஞாபகம் வந்திருச்சு போலேயே.,  தானாவே  எல்லாம் பார்த்துக்கிட்டாலே”., என்று சொன்னார்.

       ” நான் அவளை கேட்டேன்., தண்ணி ஜில்லுனு இருக்கு அப்படின்னு சொன்னா., எனக்கு சுடா வேணும் அப்படின்னு கேட்டா” என்றார் நர்ஸ்.,

       “தலைகுளித்து இருக்களே மா.,  தலையை செக் பண்ணிட்டியா”.,  என்று கேட்டார்.,

     ” பார்த்தேன் கொஞ்சம் வீக்கம் இருக்கு., ஆனா இந்த பொண்ணு குளிச்சிட்டு வந்துடுச்சு., டாக்டர்  கிட்ட கேட்கனும்னு சொன்னேன்.,  இல்ல எனக்கு என்னமோ பண்ணுது.,  என்று சொன்னா., அப்படி சொன்னதால் தான் விட்டுட்டேன்.,  இப்போ டாக்டர் வந்தவுடனே கேட்கணும்”., என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே.,

        அவள் கையைப் பார்த்த திலகவதி அம்மா தான் “அந்த பேன்ட்டெய்டை எடுத்துட்டு வேற  போட்டு விடுமா”.,  என்று சொல்லிக் கொண்டிருந்தார்.,

         ஏற்கனவே அவளுக்கு ட்ரீப் போட்ட எல்லாவற்றையும்  கலட்டியிருந்ததால் அதில் பேன்டடெய்ட் போல ஒட்டி விட்டிருந்தனர்.,  இப்போது அந்த இடம் லேசாக வீங்கியது போலவும் இருந்ததால்.,  அதை எடுத்து விட்டு துடைத்து மீண்டும் போட்டு விட்டனர்.,

           கவுன் போன்ற உடை அணிந்து இருந்ததால் கால்களில் மருந்து போட்டு விட அமைதியாக கொடுத்துக் கொண்டே இருந்தாள்., அதற்குள் பாக்கியம் அம்மா டீ கொண்டு வந்து கொடுக்கவும் அவளே எடுத்து குடித்துவிட்டு., இது இன்னும் வேண்டும் என்று அமைதியாக கேட்டவள்., யோசனையோடு அமர்ந்து கொண்டாள்.,

         பின்பு ஏதோ யோசனையோடு தலைமுடியைப் பிடித்து பார்ப்பதும்.,  கண்ணாடி முன் நின்று பார்ப்பதுமாக யோசித்துக் கொண்டே இருந்தாள்.,

     சரி அவளுக்குள் யோசிக்கிறாள் என்ற எண்ணத்தோடு அமைதியாக இருந்தார்.,

         சற்று நேரத்தில் திலகவதி அருகே வந்து கையைப் பிடிக்க.,  அவளை  பார்த்தவர் அமைதியாக “என்னமா”., என்று கேட்டார்.

        “ஒன்னும் இல்ல எனக்கு ஒரே குழப்பமா இருக்கு., என்னமோ என்னமோ தெரியுது., கண்ணை முடினா  கண்ணில் என்னவெல்லாமோ வருது., ஆனா என்னால அத.,  அது என்ன ன்னு எனக்குத் தெரியல.., என்று தன் குழப்பங்களை முதன்முதலாக திலகவதியிடம் வாய்திறந்தாள்.,

         திலகவதியும் “ஒன்னும் இல்லமா மெதுவா யோசிக்கலாம்., டென்ஷனாகாத ரிலாக்ஸாக இரு., எதுவும் யோசிக்காதே” என்று சொன்னார்.,

               அவரிடம் சரி என்பது போல தலையசைத்தாள்., மீண்டும் யோசிக்க தொடங்கு முன் “வேண்டாம் யோசிக்காமல்.,  நீ வெளியே வந்து உட்காரு., என்று சொன்னார்.

            அவளும் சரி என்று சொன்னாள். அவளுக்கு இரவே கீரிப் பேன்ட் வாங்கி வைத்திருந்ததால்., அருகிலிருந்த அவர்களுடைய எஸ்டேட் ல் உள்ள சிறிய மெடிக்கல் ஸ்டோரில் இருந்து டாக்டர் எடுத்து வந்திருந்தார்., அதை காலில் கட்டி விட்டார்கள்.,

         குளிக்கப் போகும் போது நர்ஸ் அனைத்தையும் எடுத்து விட்டிருந்தார்.,  இப்போது மீண்டும் கட்டிவிட்டு விட ஓரளவு சாதாரணமாக  அவளால் நடக்க முடிந்தது.,

       திலகவதியின் கையை பிடித்தபடி நடந்தவள் வெளியே வந்து ஹாலில் அமர்ந்தவள்.,  யோசனையோடு சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டே இருந்தாள்.,

       அதே நேரம் சரவணன் வரவும்., அவனையே பார்த்தவுடன் மீண்டும் யோசனைக்கு சென்று தன் தலையை பிடித்துக் கொண்டே திலகவதியை பார்த்தாள்.

          திலகவதி தான் “உன்ன ரொம்ப யோசிக்கக்கூடாது சொன்னேன் இல்ல.,  உனக்கு ஞாபகம் வரும் போது வரட்டும்.,  அதுக்குள்ள நீயே ரொம்ப யோசித்து பீல் பண்ணாத”., என்று சொன்னார்.

           “இல்ல நான்., எனக்கு என்னமோ.,  என்னமோ தெரியல., ஆனா என்னனு தெரியல”.,  என்று சொன்னாள்.

            “அது தெரியும் போது தெரியட்டும் விடு”., என்று சொன்னவர்.,
சரவணன் இடமும் தனியாக அழைத்து சென்று அவள் காலையிலிருந்து நடந்து கொண்ட முறைகளை சொல்லிக் கொண்டிருந்தார்.,

       சரவணன் “ஞாபகம் வந்திருச்சா”., என்று கேட்டான்.

       ” தெரியல டா., இந்த பொண்ணு எதை எதையோ யோசிக்க முயற்சிக்கிறா போல”.,  என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

        ” சரியாயிடுவா பயப்பட வேண்டாம்”., என்று அவனும் ஆறுதல் சொல்லிக் கொண்டான்.,

        அதிலிருந்து சற்று நேரத்தில் எல்லாம் மருத்துவரும் வந்து விட., அவரிடம் ஏற்கனவே போனில் தகவல் தெரிவித்து இருந்ததால் வந்தவுடன் அவளை பார்த்தவர்.,

          “என்ன மா., ப்ரிஸ்க் ஆகிட்ட  போல” என்று கேட்டார்.

            அவரை பார்த்து சிரித்தபடி தலையசைத்தாள்., அமைதியாக அவளையே பார்த்துக் கொண்டிருந்தவர்.,

        “சரி சொல்லு.,  என்ன செய்து”., என்று கேட்டார்.

          “கண்ணை மூடினா ஏதோ ஏதோ கண்ணுக்குள் தெரியுது., ஆனா என்னனு தெரியல., இந்த இடம் இதுக்கு முன்னாடி நான் பார்த்திருக்கேன்., ஆனால் இந்த இடம் எனக்கு பழக்கமில்லாத  மாதிரி இருக்கு., அது மாதிரியே ஏதேதோ தோணுது.,

       ஆனா என்னன்னு தெரியல.,  ஏதோ சில உருவங்கள் எல்லாம் தெரியுது., ஆனா எனக்கு அதெல்லாம் என்னன்னு பார்வைக்கு வரலை” என்று சொன்னாள்.

      தன்னைத்தானே குறுக்கிக்கொண்டு தலையில் கையை வைத்து அழுத்தி பிடித்துக் கொண்டாள்.,

        டாக்டர் தான் “அதெல்லாம் ஒன்னும் இல்ல., இப்ப நீ  ஓகேவா இருக்க சரியா.,  உனக்கு எப்ப நியாபகம் வருதோ.,  அப்ப வரட்டும்., அது வரைக்கும் நீ இங்கே  அப்படியே இரு.,  ஒன்னும் பிரச்சனை இல்ல”.,  என்று சொன்னார்.,

             திலகவதி தான் அவள் அருகில் அமர்ந்து.,  கையை பிடித்துக்கொண்டு “ரொம்ப யோசிக்காத டா தங்கம்., நான் இருக்கேன்ல”.,  என்று சொன்னார்.

          “நீங்க யாருன்னு எனக்குத் தெரியலையே”., என்று சொன்னார்.

            முதன்முதலாக அவளுக்கு மற்றவர்கள் யார் என்று சரியாக தெரியவில்லை., என்பதை அவளே உணர்ந்து கொண்டாள்.,

        அதற்கு திலகவதி தான்., நான் சொல்லட்டா., உங்க அப்பாவோட அக்கா இல்ல தங்கச்சி வச்சுக்கோ., இல்லனா உங்க அம்மாவோட அண்ணன் வீட்டில் இருக்க ன்னு வச்சுக்கோ., உனக்கு எப்படி தோணுதோ அப்படியே வச்சுக்குவோம் சரியா”.,  என்று சொன்னார்.,

         “அம்மா அப்பா.,  எங்க இருக்காங்க” என்று கேட்டாள்.

         ஒரு நிமிடம் திகைத்தவர்., “அவங்க எல்லாம் ஊர்ல இருக்காங்க., நீ இப்ப எங்க கூட இருக்க., அவங்க கிட்ட போகும் போது நமக்கு போய்க்கலாம்., அது வரைக்கும் நீ அத்தை கூட இரு சரியா”., என்று சொன்னார்.,

     தலையை அசைத்தவாறு., “நான் எப்படி இங்க வந்தேன்., என்றாள்.

       “அதுவா ரெண்டு நாளைக்கு முன்னாடி., நாங்க இங்க வரும் போது கூட்டிட்டு வந்துட்டோம்., வந்த இடத்தில நீ  சின்ன ஆக்ஸிடெண்ட்ல மாட்டிக்கிட்ட.,  அந்த ஆக்சிடெண்ட்ல தான் உனக்கு இப்போ கண்ணு குள்ள உருவம் உருவமா தெரியுது., எல்லாம் சரியாகிரும்., அந்த ஆக்சிடெண்ட்ல நீ மாட்டிக்காம என்கிட்ட வந்து இருக்கே.,

      இப்போ உனக்கு நல்ல குணம் ஆனதுக்கு அப்புறம் தான்., உங்க அம்மா அப்பாட்ட கூட்டிட்டு போவேன்., இப்படி  முன்னாடி கூட்டிட்டு போனா என்ன சொல்லுவாங்க.,  அதனால உனக்கு நல்ல சரியாகுற வரைக்கும்., நீ அத்தை கூட இருக்கலாம் சரியா”.,  என்று சொன்னார்.

         “இங்க ரொம்ப குளுருது”.,  என்றாள்.

          “நம்ம இங்கேயே இருக்க மாட்டோம்., நாம வேற ஊருக்கு போயிருவோம்., அங்க போகலாம் சரியா”., என்று சொன்னார்.,

        “எப்போ போவோம்”., என்றாள்.

          “எப்ப வேண்டுமானாலும் போகலாம்.,  உனக்கு கொஞ்சம் சரி ஆகட்டும்., அப்புறம் போகலாம்”., என்று சொல்லவும்., “சரி” என்றவள்.

         திலகவதியின் கையை எப்போதும் போல  தடவிப் பார்த்தாள்., “என்னமா” என்று கேட்டார்.,

      தொட்டுப் பார்த்தவள்., “இந்த கையை தொட்டு பார்த்து இருக்கேன்”., என்று சொன்னாள்.

        டாக்டர் தான் ‘எதுவும் சொல்லாதீங்க, பேசாதீங்க, என்று சைகை காட்டினார்.,

           “அத்தைய உனக்கு அடையாளம் தெரியுதா” என்று கேட்டார்.,

          தலையாட்டியவள் சரவணனை நிமிர்ந்து பார்த்தாள்.,

          அவரும் சரவணனும் இங்க தான் இருக்கான்.,  அதனால உனக்கு அடையாளம் தெரியும் தானே”., என்று சொன்னார்.,

         “ஓஓ., தெரியும்”., என்று சொன்னாள்.,

     அதே நேரம் மேனேஜர் வரவும் வேகமாக திலகவதியின் கையை தன்னோடு சேர்த்து பிடித்துக்கொண்டாள்.,

Advertisement