Advertisement

சரி முதலில் தூங்க வைக்கலாம்“., என்று சொல்லிக் கொண்டே இருந்தனர்.

        அதன் பின்பு ட்ரிப்ஸ் இல் அவளுக்கு தேவையான சத்துக்களை ஏற்றும் மருந்துகளையும் செலுத்திவிட்டு அவளுக்கு தூங்குவதற்கு ஊசி போட்டனர்.,

         “தூங்கி எழும் போது மனம் தெளிவான பின்பு தான் அவளால் சரியாக யோசிக்க முடியும்“., என்று டாக்டர் சொல்லி அவளை ஊசி போட்டு தூங்க வைத்தார்.,


           ஆனால் தூங்கியவள்., முழுதாக தூங்காமல் மாலை 7 மணி போல எழுந்து கொண்டாள்., பாக்கியம் மட்டும் அருகில் இருக்க அவள் பதட்டத்தோடு ஒரு ஓரமாக சரிந்து உட்கார்ந்தாள்.,

      தன் இடது கைப்பக்கம் மட்டும் கை வைத்து தேடவும்., பாக்கியம் அம்மா வெளிய போய் சரவணனை கூட்டி வர.,   சரவணனை பார்க்கும் போது கூட அறிமுகமில்லாத பார்வை பார்த்தவள்.,

        அவன் கையை பிடித்து அடையாளம் கண்டு கொண்டவள்., அவனை நன்றாக திரும்பி பார்த்தாள்.,

      அவனும் இந்த பொண்ணு ஏன் இப்படி பார்க்கிறது என்று யோசித்துக்கொண்டு இருக்கும் போது அவன் கையை தன் கைகளுக்குள் சேர்த்துப் பிடித்துக் கொண்டவள்., அப்படியே அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.,

      ஏதோ அவன் மட்டும் தான்., அவளுக்கு துணை என்று நினைத்துகொண்டாள்.,

      அவனுக்கு தான் என்ன செய்வது என்று தெரியவில்லை பின்பு மருத்துவருக்கு போன் செய்து  சொல்லிவிட்டு அவன் அம்மாவும் உள்ளே வந்தார்.,

         திலகவதி அம்மா மறு கையை பிடித்துக்கொள்ள., அவர் கையை தடவி பார்த்து அறிந்த பின்பே அவரை சினேகமான புன்னகையோடு பார்த்தாள்.,

          கையோடு அவள் அவர்களை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டாள்.,  வேறு யாரையும் அவளுக்கு  தெரியவில்லை., அவள் முதன் முதலாக மயக்கம் தெளியும் போது தொடு உணர்ச்சியில் அறிந்த இருவரை மட்டுமே அவளுக்கு தெரிந்தது.,

      அதனால் கைகள் மூலமே அவர்களை அடையாளம் கண்டு கொண்டாள்.,  அனைவரையும் பார்த்தாலும் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.,

       அதற்குள் மருத்துவரும் வந்துவிடகுடிக்க ஏதாவது சூடா கொண்டு வந்து கொடுங்க“., என்று பாக்கியம் அம்மாவிடம் மருத்துவர் சொன்னார்.

     பாக்கியம் அம்மாவும் சூடாக டீ போட்டு எடுத்து வர போகும் போது.,  “சற்று இனிப்பு தூக்கலாக போடுங்கள்“., என்று சொல்லியே அனுப்பியிருந்தார் டாக்டர்.

          அதனால் இனிப்பு சற்று அதிகமாக போட்டுக் கொண்டு வந்து அவளிடம் கொடுத்தார்.,

       அவள் அதை பார்த்து விட்டு எதற்கு என்று கேட்டாள்., அப்போது திலகவதி அம்மா தான் கையில் வாங்கி குடிமா என்று வாயில் அருகே வைத்து அவளை குடிக்க வைத்தார்.

          மெதுமெதுவாக குடித்தவுடன் சற்று நேரத்தில் அவள் தெளிவாக தொடங்கியிருந்தாள். அதை அவர்களே உணர்ந்தனர்.,

          பின்பு டாக்டர் அவள் எதிரில் அமர்ந்த படி அவள் கால்களை அடிபட்ட இடங்களில் பரிசோதிக்க., அவள் அறியாமல் கூச்சத்தில் காலில் இருந்த போர்வையை.,  உடையோ விலக்க விடாமல் அழுத்திப் பிடித்துக்கொண்டு எதுக்கு என்று மீண்டும் கேட்டாள்.,

         “ஒன்னும் இல்லமா உனக்கு அடிப்பட்டு இருக்கு இல்ல., நேத்து மருந்து போட்டோம்.,அதை தான் பார்க்கிறேன்“.,  என்று சொன்னார்.,

         “இல்ல வேண்டாம்“., என்று மட்டும் சொன்னாள்.,

       “ஒன்னும் செய்யாது மா., உனக்கு மருந்து போடனும்  இல்ல., சரியாகனும் இல்ல“.,  என்று சொன்னார்.

      அவள் அமைதியாக இருக்கவும்.,

          “வலி குணமாகனும் இல்லையாஎன்று கேட்டார்., 

    மீண்டும் தலையை மட்டும் அசைத்தாள்.

            ஆனாலும் கால்களை அவருக்கு சரியாக காட்டாமல் நகர்த்தி நகர்த்தி வைத்தாள்.,

           திலகவதி அம்மாவும்சரி இப்ப வேண்டாம் கொஞ்ச நேரம் கழிச்சு  பார்ப்போம்.,  மருந்து போட்டுக்கனும் சரியா“., என்று சொன்னார்.

               அவரிடம் தலையை மட்டும் அசைத்தாள்., பின்புஉன் பேரு என்னமாஎன்று டாக்டர் கேட்டார்.

      அவர்களை மலங்க மலங்க பார்த்தபடிபேரு பேரு“., என்று இரண்டு முறை சொன்னவள்.,

       “ஏன் என்னை  உங்களுக்கு தெரியாதா., என் பேரு  தெரியாதா“.,  என்று அவர்களிடமே கேட்டாள்.

      அனைவருக்கும் சற்று அதிர்ச்சியாக தான் இருந்தது., அதே நேரம் டாக்டர் தான்கரெக்ட் உன் பேரு எங்களுக்கு தெரியும்.,  நாங்க சொல்றோம் சரியா.,  இப்போ நீ இதை குடிச்சிட்ட இல்ல.,  இப்ப கொஞ்சம் எந்திரிச்சு நடக்க முடியுதா ன்னு பாக்குறியா., வேற எங்கேயும் வலி இருந்தா சொல்லனும்“., என்றார்.

அவரையே ஒரு மாதிரி பார்த்தவுடன்.,
அதான் அப்ப சொன்ன இல்ல.,  அந்த இடம் ஒரு மாதிரி இருக்கு ன்னு., நான் கூட அதுக்காக ஊசி போட்டேன் இல்லஎன்று சொல்லவும்., வேகமாக தலையசைத்தாள்.,

     ” அந்த மாதிரி இருந்தா என்கிட்ட சொல்றியா“.,  என்று சொல்லவும் மீண்டும் தலையசைத்தாள்.

       அதன் பின்பு டாக்டர் நர்சிடம் சொல்ல.,  அவர் கையிலிருந்த ட்ரிப்   எடுத்து விட்டார்., அவளை கட கட்டிலை விட்டு இறங்க வைத்தனர்.,

       பின்பு மெதுவாக திலகவதி அம்மாவை பிடித்துக் கொண்டு அவள் நடந்தாலும்., அவளால் லேசாக நடக்க முடிந்தது., காலில் ஆங்காங்கே வலி இருந்ததால் சரியாக ஊன்ற முடியாமல் இருந்தது.,

        காலில் க்ரீப் பேன்ட்  போட்டு கட்டிக் கொள்வோம் என்று சொன்னார்கள்.,

      ஏனென்றால் முட்டி வலிக்கிறது என்று சொல்லி காட்டினாள்., மூட்டு பகுதியை காட்டி இங்கு ஒரு மாதிரி இருக்கிறது என்று சொன்னவள்., கணுக்காலையும் காட்டி இங்கு அப்படி இருக்கிறது என்று சொல்ல.,  புரிந்து கொண்டவராக அங்கே க்ரீப் பேன்ட் கட்டி விடலாம் என்று சொல்லியிருந்தனர்.

         எங்கிருந்து விழுந்தால்.,எப்படி விழுந்தால்., என்று தெரியாமல் எங்கெங்கே அடிபட்டிருக்கிறது என்று தெரியாமல்., அவளே இங்கு வலிக்கிறது என்று சொன்னால் மட்டுமே புரியும் என்பதால்.,

        சரவணனை வெளியே செல்ல சொல்லிவிட்டு எங்கு எங்கு வலிக்கிறது என்று இருவரும் மாற்றி மாற்றி கேட்டனர்.

       சரியாக ரத்தக்கட்டு உள்ள இடங்களை சொன்ன பின்பு., முதுகில் லேசாக வலிக்கிறது என்று சொன்னாள்.

      அவர்கள் கேட்பதற்கு மட்டுமே அவள் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.,  ஆனால் தானாக அதிகமாகப் பேசவில்லை.,

அவள் இப்போது எதுவும் தெரியாதது போலவே முழித்துக் கொண்டிருந்தாள்.,  திலகவதி அம்மாவை மட்டும் கையை பிடித்துக்கொண்டே அமர்ந்திருந்தாள்.,

       முதலில் சரவணன் அறையை விட்டு போக சம்மதிக்காததால் உனக்கு கால்  மருந்து போடணும்., சரவணன் இருந்தா பரவால்லியா., மருந்து போடவா என்று கேட்டார்.,

       ஏற்கனவே காலை தொட விடாமல் பார்த்தவள்., அவன் இருப்பான் மருந்து போடுவோம் என்று சொல்லவும்., “வேண்டாம்என்று அவசரமாக தடுத்தாள்.

         அவள் குழப்பமான மன நிலையில் இருப்பதை புரிந்து கொண்ட டாக்டர்., வேறு எதுவும் சொல்லாமல்., “சரியா போய்டும் சரியாஎன்று அவள் மனநிலைக்கு ஏற்ப பேசிதூக்கம் வந்தா தூங்கு.,  பசிக்கிற மாதிரி இருந்தா கேளுஎன்று சொன்னார்.

       “பசிக்கு னா., என்ன செய்யும்“., என்று கேட்டாள்.,

        அது என்ன செய்யுமா என்று  சற்று நேரம் யோசித்த படி அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்.,

         “இந்த இடத்தில் சத்தம் கேட்கும் அல்லது வலிக்கும்“., என்று சொல்லி டாக்டர் அவள் வயிற்றில் கையை வைத்து சொன்னார்.,

        “எனக்கு அது  அப்படி தான் இருக்குஎன்று சொன்னாள்.

              “பசிக்கிறதை கூட சொல்ல தெரியல்லையா“., என்று நினைத்த படி பாக்கியமும் அவசரமாக சென்று இட்லி எடுத்து வைத்து காரமில்லாத சட்னியோடு வந்து கொடுக்க.,

      திலகவதி அம்மாதான் ஊட்டி விட்டார்.,  ஊட்டி விடவும் வாயில் வாங்கி சுவைத்தவள்இது நல்லா இருக்கு“., என்று சொன்னாள்.,

      “நல்லா இருக்கா., அப்ப நல்ல சாப்பிடு“.,  என்று சொல்லி அவளுக்கு சாப்பிட கொடுத்து தண்ணீர் கொடுத்தனர். மாத்திரை முழுங்க சொல்லிகொடுத்தனர்., அத்தியாவசிய சில விஷயங்களை நர்ஸ் சொல்லி கொடுக்க உடனே கற்றுகொண்டாள்.

      அப்போது தான் உள்ளே வந்த சரவணன் டாக்டரிடம்டாக்டர் அந்த பொண்ணு ஏன் இப்படி நடந்துக்குது“.,  என்று கேட்டான்.

      “தெரியலையே தம்பி., அதுதான் நான் யோசிச்சிட்டு இருக்கேன்., இந்த பொண்ணு ஏற்கனவே மனநலம் பாதிக்கப்பட்ட பொண்ணா., இல்ல இந்த ஆக்சிடெண்ட் அப்புறம் இப்படி இருக்குதா.,  அதிர்ச்சியில் இப்படி இருக்குதா ன்னு தெரியல.,

      “ஒருவேளை தூங்கி எந்திரிச்சா.,  காலைல அவளோட நிலை என்னன்னு தெரியும்., அதிர்ச்சியில் ஏற்பட்டது தான் என்றால் காலையில நார்மலா பேச வரும்“.,  என்று சொன்னார்.

          திலகவதி அம்மா தான்  சந்தேகத்தோடுடாக்டர் அவளுக்கு பேரு என்னன்னு தெரியல.,  ஒருவேளை மறந்து இருக்குமோ“., என்று கேட்டார்.

          டாக்டரும்எனக்கு அந்த சந்தேகம் இருக்கு., அவளுக்கு தலையில பின்பக்கம் அடிபட்டு நல்ல வீங்கி போய்  இருக்கு., அவளுக்கு எந்த அளவுக்கு ஞாபகம் இருக்கு ன்னு.,  அவ கொஞ்சம் தெளிவான பிறகு தான் சொல்ல முடியும்“.,  என்று சொன்னார்.,

         அப்படியா என்று கேட்டுக் கொண்டிருந்தனர்.,

         அப்போது தான் திலகவதிஇந்த பொண்ண பத்தி வெளியே கூட விசாரிக்க முடியாதே டாக்டர்“.,  என்று சொன்னார்.,

         “பொறுங்க எதுவா இருந்தாலும் இன்னைக்கு நைட்டு நல்லா தூங்கி எழும்பட்டும்., நான் இப்பவும் தூக்கத்துக்கு ஊசி போட சொல்லி இருக்கேன்., அதே மாதிரி யாராவது கூட இருந்துக்கோங்க போதும்“.,  என்று சொன்னார்.,

          இன்றும் செவிலி பெண் அங்கே இருப்பதாகக் இருந்தது., இடையில் வீட்டிற்கு மட்டும் அந்தப் பெண்மணி சென்று வந்திருத்தார்.,

     அன்றும் அவர்கள் பாதுகாப்பில் அவள் இருந்தாள்.,  காலையில் எழுந்தால் தான் தெரியும் அவளது நிலை என்னவென்று.,

      ஒருவேளை அனைத்தும் மறந்து இருந்தால்., அவளை பற்றி யாரிடமும் தெரிவிக்க கூடாது என்பதில் தெளிவாக இருந்தனர்., ஏனெனில் யாரையும் நம்பி அவளை எப்படி ஒப்படைக்க முடியும்., யார் என்று தெரியாமல் யார் கையிலும் ஒப்படைத்து விட்டால் அவளின் நிலை என்னவாகும் என்று பேசிக் கொண்டிருந்தனர்.,

    டாக்டரும் திலகவதியும் அதற்கு சம்மதம் கேட்க சரவணனும் சம்மதம் தெரிவித்தான்.,  மேனேஜர் இடமும் யாருக்கும் தெரியக்கூடாது என்று சொல்லி வைத்தனர்.,

       அவள் அங்கே இருப்பது வேறு யாருக்கும் தெரியாதபடி பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தனர்.,  ஆனால் விடியல் என்ன வைத்திருக்கிறது என்று யாருக்கு தெரியும்.,

    மறதி சில நேரங்களில் வரம்., சில நேரங்களில் சாபம்., இங்கு வரமா சாபமா.,

     வெற்றியும் தோல்வியும் இரு படிகளே.. ஒன்றில் உன்னை உணர்ந்து கொள்வாய்.. மற்றொன்றில் உன்னை திருத்திக் கொள்வாய்.

Advertisement