Advertisement

7

       மருத்துவரும் வீட்டில் உள்ளவர்களும் சேர்ந்து.,  ‘என்ன செய்யலாம்என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவள் அருகில் சென்று மீண்டும் அவள் கன்னத்தை தட்டி பார்த்தார் மருத்துவர்.,

      சற்று நேரம் அமைதியாக அவளிடம் ஏதாவது மாற்றம் தெரிகிறதா என்று பார்க்கும் போது விரல்கள் அசைவது புரிந்தாலும்.,  அமைதியாக பார்த்துக் கொண்டே இருந்தனர்.,

        மீண்டும் ஒருமுறை கன்னத்தை தட்டி விட்டு அவளுக்கு ஒரு மருந்தை மட்டும் கையில் ஏற்றிவிட்டார்.,

        மருந்து ஏற்றிய சற்று நேரத்தில் அவளுடைய உடல் சற்று உதறுவது போல தோன்றியது., கரு விழிகள் மூடிய இமைகளுக்குள் அங்குமிங்கும் அலைவது போல தெரியவும்.,

        டாக்டர் அவளுக்கு முழிப்பு வருகிறது என்று சொல்லிக்  கொண்டு இருக்கும் போதே.,  அவள் கை இரண்டும் பக்கவாட்டில் நீண்டு எதையோ தேடுவது போலவும்., பிடிப்பதற்கு தேடுவது போல தவிக்க அவள் அருகில் இருந்த சரவணனின் கை தான் முதலில் அவளது இடது கைக்கு தட்டுப்பட்டது.,

       கையை அவள் இறுக்கமாக பற்றிக் கொள்ள., அவளின் பிடியில் அவன் தான் பயந்து போனான்.

        ஏனெனில் அந்த அளவுக்கு அழுத்தமாக அவன் கையை பிடித்து இருந்தாள்.,

          அவன் டாக்டரை பார்த்துஆண்டி கையை ரொம்ப ஸ்ட்ராங்கா புடிச்சிருக்காங்க.,  என்று சொன்னான்.

       “பயத்தில் பிடிக்கிறாங்க., வேற ஒன்னும் இல்ல“.,  என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே.,

        ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருக்கும் கையையும்.,  அங்கும் இங்கும் சொல்ல அவளின்  மற்றொரு புறம்  நின்றிருந்த நர்ஸ் பிடிப்பதற்குள்., வேகமாக வந்த திலகவதி அவள் கையை அழுத்தமாக பிடித்து அழுத்தி வைத்தார்.,

        ஏனெனில் ட்ரிப்ஸ் ஏறிய இடத்தில்., இவள் ஆடியதில் கையிலிருந்து ஊசி உருவி வந்து விடுமோ., ரத்தம் வந்துவிடுமோ.,  என்று பயந்தார்கள்.,

          ஆனாலும் அவள் கையை மடக்கியிருந்தாள்., லேசாக அதிலிருந்து ரத்தம் கசியத் தொடங்கியிருந்தது.,

        ஆனாலும் அவளது உடம்பு உதறி போட்டது.,  அவளின் கரு விழிகள் இமைகளுக்கு மேல் அலை பாய்வது தெரிந்தது.,  ஏதோ நன்றாக பயந்து இருக்கிறாள் என்பதை அனைவராலும் புரிந்துகொள்ள முடிந்தது.,

       அதே நேரத்தில் மீண்டும் உடல் உதற கைகால்கள் இழுத்துக் கொள்வது போல போகும் போதே.,  காலை பாக்கியமும் நர்சும் சேர்ந்து பிடித்து கொண்டனர்.

        இங்கு கையை அவர்கள் இருவரும் பிடித்திருக்க டாக்டர் அடுத்த மருந்தை உடம்பில் செலுத்தினார்..

       சற்று நேரம் உதறினாலும்., கொஞ்சம் கொஞ்சமாக உதறல் நின்றது.,

         தூக்கத்திலிருந்து பயந்து பாதியில் முழித்தவள் போல.,  கண்ணை திறந்து மலங்க மலங்க பார்த்தாள்.,

      எழும்ப முயற்சி செய்யும் போது கூட சரவணன் கைபிடித்த கையை மட்டும் விடாமல் இருந்தாள்.,

      அவள் எழும்ப முயற்சி செய்வதை உணர்ந்து., அப்போதும் திலகவதி தான் லேசாக சாய்த்தார் போல் பிடித்து உட்கார வைத்தார்.,  வேகமாக இழுத்து மூச்சு விட்டாள்.,

      கண்ணை திறந்து அனைவரையும் ஒரு முறை பார்த்தபடியே மீண்டும் அப்படியே சரவணன் கையை பிடித்தபடியே அவன் தோளில் சாய்ந்து விட்டாள்.,

        “டாக்டர்“., என்று பதறி போய் சரவணன் அழைத்தான்.

      “ஒன்னு இல்ல.,  ஒன்னு இல்ல இன்னும் கொஞ்ச நேரத்துல சரியாயிடும்.,  மூச்சு விடுவதற்கு சிரமமாக இருக்கும் போல., நல்லா பயந்திருக்குது போல சரியாயிடும்“., என்று சொல்லி மெதுவாக தடவிக் கொடுக்க சொன்ன டாக்டரே.,

         அவளுக்கு மெதுவாக கழுத்திலிருந்து நெஞ்சுவரை தடவி விட.,  திலகவதியும் அவன் தோளில் சாய்ந்தபடி இருந்தவளின் முதுகை மெதுவாக நீவி விட்டு சற்றே அழுத்தி கொடுக்க.,

         மீண்டும் ஒரு பெருமூச்சு விட்டவள் கண்ணை திறந்து பார்த்தாள்., மீண்டும் கண்ணை மூடியபடி அவன் தோளில் சரிந்து விட்டாள்.,  கட்டிலில் தலையணையில் அவள் தலையை வைக்க., அவனின் பிடித்த கையை மட்டும் அவள் விடாமல் இருந்தாள்.

      கையை உருவ முற்படும் போதே மீண்டும் அவள் உடல் நடுங்குவதை உணர்ந்து., அவனே அவள் கையை இப்போது அழுத்தமாக பிடித்துக் கொண்டான்.

          அவன் கையைப் பிடித்தவுடன் அவள் உடல் நடுங்குவது சற்று குறைவது உணர்ந்தவர்கள்., “ஏதோ பயந்து இருக்கிறாள்., இப்போது ஆறுதலுக்கு பக்கத்தில் ஆள் இருக்கிறது என்ற தைரியத்தில் தான் அவளது நடுக்கம் குறைகிறது., அதனால் அவள் நன்கு தூங்கும் வரை அவளோடு இருங்கள்“.,  என்று சொன்னார்.

        “டாக்டர் அந்த பொண்ணு முழிச்சா தானே யாரு., என்னன்னு கேக்க முடியும்.,  அவங்க வீட்டிலேயும் தேடுவாங்களே“.,  என்று சரவணன் கேட்டான்.

           “முதல் முழிக்கட்டும் அவசரப்பட வேண்டாம் அதிர்ச்சியில் இருக்கிறவங்க.,  உடனே எல்லாத்தையும் சொல்ல மாட்டாங்க.,  கொஞ்சம் நார்மலுக்கு வரட்டும்“., என்று சொல்லிக் கொண்டிருந்தார்.,

        அப்போது மருத்துவர் மீண்டும் சில மருந்து வகைகளை அவளுக்கு இறங்கிக் கொண்டு இருந்தார்., மீதி டிரிப்ஸில் சேர்த்து விட்டுபார்த்துக் கொள்ளுங்கள் ஒன்றும் இல்லை“., என்று சொல்லி விட்டு நர்சை அங்கேயே இருக்கும் படி சொல்லி விட்டு கிளம்பினார்.

       அவள் நன்கு தூங்கும் வரை அருகில் இருந்த சரவணன்., அதன் பின்பு மெதுவாக எழுந்து சென்றான்.,

       எழுந்து செல்வதற்கு முன் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவன்., 

               ‘எப்படி., என்ன விபத்து நடந்துச்சுன்னு தெரியலையே., இந்த பொண்ணு எந்திரிச்சு சொன்னா தானே யாருக்கும் தகவல் சொல்றதா இருந்தாலும் சொல்ல முடியும்.,  பாவம் வீட்ல உள்ளவங்க எப்படி பயந்து போய் இருக்காங்களோ தெரியலையே., கண்டிப்பா இவ்வளவு அழகான பொண்ணு., பெத்தவங்க கூட பிறந்தவங்க யாரா இருந்தாலும் என்ன எல்லாம் நினைக்க தோணும்., என்ன பிரச்சனைன்னு தெரியலை ன்னு பயப்படுவாங்க இல்ல., என்ன விஷயம் எதனால காணாம போனா., இப்ப இங்க இருக்கா ன்னு கண்டதையும்  நினைப்பாங்க‘., என்று யோசித்தவன்.,

            ‘ஒருவேளை ஊட்டியில் உள்ள பெண்ணாக இருக்குமோ., அல்லது ஏதேனும் எஸ்டேட்டில் உள்ள பெண்ணாக இருக்குமோ.,  என்று நினைத்தவனுக்கு இல்ல இவள் நிச்சயமாக எஸ்டேட்டில் உள்ள பொண்ணு கிடையாது‘., என்று தோன்றியது.

          ‘சீக்கிரம் முழித்து விடு., உன்னை எப்படியாவது  உன் குடும்பத்தோடு கொண்டு போய் சேர்த்து விடுகிறேன்என்று மட்டும் மனதில் நினைத்துக் கொண்டவன் அவளை பார்த்தபடியே கிளம்பினான்.

      அப்போது மேனேஜரிடம்அருகில் எஸ்டேட்டில் ஏதும் மண்சரிவில் இந்த மலையில் யாரும் காணாமல் போனார்களா., என்று மட்டும் விசாரியுங்கள்., ஆனால் யாரிடமும் இந்த பெண்ணிங்கு இருப்பதை தெரியப்படுத்த வேண்டாம்., அவள் முழித்து யார் என்று சொன்ன பிறகு அவள் வீட்டில் கொண்டு விட்டு கொள்ளலாம்“., என்று சொன்னான்.

        அதன்படியே அனைவரும் சரி என்று சொல்லி இருந்தனர்., அது டாக்டர்., நர்ஸ்., பாக்கியம் அம்மா., மற்றும் வீட்டில் வேலை பார்க்கும் மற்றவர்கள் ஆகட்டும் சொல்ல வேண்டாம் என்றே சொன்னார்கள்.,

         ஏனெனில் ஒரு பெண்ணின் வாழ்க்கை அல்லவா.,  உடல்நலம் சரியில்லாமல் ஒரு பெண் ஒரு நாள் வெளியில் தங்கினால் கூட தவறாக பேசும் உலகம் தானே., இன்னும் அப்படி தானே இருக்கிறது என்ற எண்ணத்தோடு.,

           அனைவருமே அவன் சொல்வதற்கு சரி என்று சொன்னார்கள்., அதன் பின்பும் அவளை அவ்வப்போது அனைவரும் கவனித்துக் கொண்டாலும் அதன் பிறகு அவள் முழிக்க நேரம் எடுத்தது.

          மீண்டும் மதிய உணவு நேரத்தை தாண்டிய பிறகு அவளுக்கு முழிப்பு வர அனைவரும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தனர்., எழுந்தவள் கண்ணை முழுதாக கூட திறக்காமல் கையை நீட்டி பக்கவாட்டில் தேடினாள்.

   அவளிடம் பாக்கியம் வந்து கையை பிடிக்க அவர் கையை முதலில் தடவி பார்த்தவள் பின்பு கையை விட்டு விட்டவள்.,

         மீண்டும் கையை நீட்டி தடவஅந்த பொண்ணுக்கு கண்ணு ஏதும் தெரியாதாஎன்ற எண்ணத்தோடு அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே திலகவதி அம்மா தான்.,  “சரவணா இங்கே வா“., வெளியே நின்றவனை மெதுவாக அழைக்க வந்தவன்.,  அவளிடம் கையைப் பிடிக்க போக அவன் கையை தடவி பார்த்தவள் பின்பு அழுத்தமாகப் பிடித்துக் கொண்டாள்.,

       அனைவருக்கும் இது அதிர்ச்சியாக இருந்தாலும்., ‘ஒரு வேளை அவளுக்கு கண்ணில் ஏதும் பாதிப்பு வந்து விட்டதோஎன்று தான் பயந்தார்கள்.,

       அதன் பிறகு சற்று நேரம் அமைதியாக இருந்தவள் பின்பு மெதுவாக கண்விழித்தாள்.

       இழக்கின்றி வெறித்து பார்த்தவாறு அமைதியாக இருந்தாள்.,

     பின்பு எழுந்து கொள்ள முயற்சி செய்ய பாக்கியம் அம்மா பின்பக்கமாக இருந்து லேசாக தூக்கி விட எழுந்தவள் அப்படியே சரவணன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

சரவணனும் அவளையும் அம்மாவையும் மாறி மாறி பார்க்க., அவள் அம்மா எதுவும் பேசாதே என்று செய்கை செய்தார்.,

    பின்பு அவளிடம்ஏதாவது சாப்பிடுறீயாஎன்று கேட்டார்.,

        எதுவும் புரியாத பாஷை பேசுவதுபோல மலங்க மலங்க அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

        அவளுக்கு முழிப்பு வரும் போதே டாக்டருக்கு போன் செய்து இருந்ததால் அவர்கள் கேட்டுக் கொண்டிருக்கும் போதே டாக்டரும் வந்தார்.,

         டாக்டரும் அவள் சரவணன் கையை பிடித்துக் கொண்டு., அவன் தோளில் சாய்ந்து இருப்பதை தான் பார்த்துக் கொண்டே வந்தார்.,

       மீண்டும் டாக்டரை பார்த்தவுடன் திலகவதிஅம்மா சாப்பிடலாமாஎன்று கேட்டார்.,

      ” ஏன்“.,  என்று மட்டும் கேட்டாள்.,

     என்னடா அந்த பொண்ணுஏன்னுகேட்குது என்று அனைவரும் அவளை பார்த்தனர்.

       “ஆமா நீங்க யாரு“.,  என்று கேட்டவுடன்.,

       ‘அப்பாடா பொண்ணுக்கு பேச்சு வந்திருச்சு‘., என்று பார்த்துக் கொண்டிருக்கும் போதே சற்றே அமைதியானவள்., கையில் வென் ப்ளான் போட்டு இருந்த வலது கையை வைத்து தலையை அழுத்தி பிடித்தவள்., “நான்., நான்“., என்று திணறியவள்., “எனக்கு என்ன ஆச்சுஎன்று திக்கித் திணறி கேட்டாள்.

     “அது ஒன்னும் இல்லமா.,  சின்ன ஆக்சிடென்ட்என்று சொன்னார்கள்.,

       “ஆமா நீங்க எல்லாம் ஏன் இப்படி பயந்து போய் இருக்கீங்க“., என்று கேட்கவும் தான் இவள் யார் என்று நினைத்துக் கொண்டு நம்மிடம் பேசிக் கொண்டிருக்கிறாள்., என்ற யோசனையோடு..,

        “எங்களை  யாரு ன்னு தெரியுதம்மாஎன்று டாக்டர் கேட்டார்.

       இல்லை எனும் விதமாக தலையசைத்தாள்.,

          “சரி உனக்கு எப்படி ஆக்சிடென்ட் ஆச்சு ஞாபகம் இருக்கா“., என்று கேட்டார்.

     “எனக்கு ஆக்சிடெண்ட் எதுக்கு ஆச்சுஎன்றாள்

     “என்னது ஆக்சிடென்ட் எதுக்கு ஆச்சா“.,  என்று டாக்டர் யோசனையோடு பார்த்துக் கொண்டிருக்கும் போதே.,

        யோசனையோடு வேறு எதுவும் பேசாமல்நீ எப்படிமா ஆக்ஸிடெண்ட்ல மாட்டினஎன்று மாற்றி கேட்டார்.,

       அவள் அவர்களை பார்த்தபடி இருக்கும் போதே., அடிபட்ட கழுத்து பகுதியை அழுத்தமாக பிடித்துக் கொண்டுஇங்கே என்னமோ பண்ணுதுஎன்றாள்.,

       அது வலி என்று சொல்ல தெரியவில்லை.,

           அத்தனை வலியிலும் இடதுபக்க கையை மட்டும்  அவன் கையைப் பிடித்த பிடியில்  இருந்து விடாமல் இருந்தாள்.,

          வலது கையை வைத்து இடது பக்க அடிபட்ட பகுதிகளை  மட்டும் என்னமோ பண்ணுது என்று சொன்னாள்.,

        டாக்டர் தான்., “அதுக்கு பேர் வலி.,  நான் அதுக்கு ஒரு ஊசி போட்டால் வலி குறைந்து விடும்“., என்று சொன்னார்.

         தலையை மட்டும் அசைத்தாள்., பின்பு கண்மூடி அங்குமிங்குமாக வெட்டப்பட்ட முடியை தொட்டுத் தொட்டுப் பார்த்தவள். எதுவும் புரியாமல் மீண்டும் அமைதியாகி விட்டாள்.,

     டாக்டர் தான்இன்னைக்கு எதுவும் சாப்பாடு கொடுக்க வேண்டாம்., ட்ரிப்ஸ் இன்னும் கொஞ்ச ஏறட்டும்.அவ தூங்கட்டும்., தூங்கி எழுந்திருச்சா ஒருவேளை தெளிவாக யோசிப்பா.,  இப்போ அந்த அதிர்ச்சி பயம் எல்லாம் இருக்க போய் தான்., இதோ இந்த மாதிரி கைய புடிச்சிட்டு விடமாட்டிக்குறா“., என்று திலகவதி அம்மாவிடம் சொன்னார்.

       

Advertisement