Advertisement

ஆமா டாபாப்போம் நாளைக்கு மேல போய் யாரையாவது கேட்டு விசாரிச்சுட்டு வர சொல்லுவோம்“., என்று சொல்லலாம்.,

               அந்த பொண்ணு முழிக்கட்டும்., அப்புறமா.,  வெளியே சொல்லி விசாரிக்கலாம்., இல்ல னா அந்த பொண்ணையே யாருன்னு கேட்டு கரெக்டா வீடு கேட்டுக் கொண்டு விடுவோம்“.,  என்று சொன்னான்.

       “முதலில் எந்திரிக்கட்டும்“., என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

                இரவு உணவு முடித்துவிட்டு செவிலியும் பாக்கியமும் அறையில் வந்து படுத்து விட.,

       திலகவதி தன் அறைக்கு சென்றவர் மகன் இன்னும் ஹாலில் இருப்பதை பார்த்து விட்டுஎன்னடா இங்கே உட்கார்ந்து இருக்க“., என்று கேட்டார்.

      “ஒன்னும் இல்லமா படுக்கணும்“., என்று சொன்னான்.

          “படுக்கணும்னா  போய் படு“., என்று சொன்னார்.

      “எதுவும் தேவைப்படுமா  ம்மா“., என்று கேட்டான்.

          “தேவைப்பட்டால் கூப்பிடுவாங்க.,  நான் பாக்கியத்து ட்ட  சொல்லி இருக்கேன்“.,  என்று சொல்லி விட்டு அவனை அழைத்து அறைக்கு தள்ளி விடாத குறையாக தள்ளி விட்டு விட்டு தன் அறைக்கு சென்றார்.,

            தன் அறையின் உள்ளே சென்றவர் அங்கு தன் அறையில் மாட்டி இருக்கும் கணவன் புகைப்படத்திடம்அந்த பெண்ணை எப்படியாவது காப்பாற்றுங்க.,  நல்ல அழகா இருக்கா ங்க., உங்களுக்கு ஞாபகம் இருக்கா நம்ம ரெண்டு பேரும் அடிக்கடி பேசுவோமே.,  எந்த பெண்ணை பார்த்தாலும் நமக்கு தோனும் ன்னு பேசிப்போம்  இல்ல., நமக்கு இந்த மாதிரி மருமக வந்தா நல்லா இருக்கும் ன்னு.,  இப்படி மருமக வந்தா நல்லா இருக்கும் எத்தனை தடவை பேசியிருக்கிறோம்.,

          ஏனோ எனக்கு இன்னைக்கு இந்த பொண்ண பார்த்தவுடன் இவ மாதிரி மருமக வந்தா நல்லா இருக்கும்னு தோனுச்சு., ஆனா யாரு பெத்த பிள்ளையோ., என்ன டாக்டர் ஒரே ஒரு விஷயம் கன்பார்ம் பண்ணிட்டாங்க., அந்த புள்ளைக்கு தப்பா எதுவும் நடக்கலை., மண்சரிவுக்குள் மாட்டி தப்பி வந்த பிள்ளை தான் அப்படின்னு சொல்லிட்டாங்க., ஒருவேளை கல்யாணம் ஆன பிள்ளையா இருந்தா., ஒன்னும் பண்ண முடியாது.,  வேற ஏதும் தப்பு தண்டா நடந்து இந்த பொண்ண யாரும் தூக்கிப் போட்டு இருந்தா கூட.,  என் மனசுல  அந்த பொண்ணை நல்லபடியாக பத்திரமா வெச்சிருக்கணும் அப்படின்னு தான் தோணுச்சு“.,  என்று சொல்லி தன் கணவனின் புகைப்படம் பேசிக் கொண்டிருந்தார்.,

       ஏனோ அவர் புகைப்படத்தில் இருந்து சிரிப்பது போல அவருக்கு தோன்றியது.

        அவளும் சிரித்தபடிசரி சரி உங்களுக்கும் பிடித்திருக்கும் எனக்கு தெரியும்“., என்று சொல்லி விட்டு இரவு விளக்கு எரிய விட்டு விட்டு கட்டிலில் படுத்திருக்கும் போது.,

        கணவன் இருக்கும் காலத்தில் இருவரும் வெளியே சென்றால் பேசுவதை நினைத்துக்கொண்டார்.,

     எப்போது வெளியே சென்றாலும் தன் மகன் தலையெடுத்த பிறகு.,  மகன் வயதிலோ., அவனை விட சிறிய பெண்களையோ பார்த்தால் கணவன் மனைவி இருவருக்கும் நம்ம வீட்டுக்கு வர்ற மருமகள் எப்படி இருக்கணும் என்ற பேச்சாகவே இருக்கும்.,

    பார்க்கும் பெண்களை எல்லாம்இந்த மாதிரி பொண்ணு இருந்தா நல்லா இருக்கும் ங்க., நம்ம வீட்டுக்கு வர்ற மருமகள் எப்படி இருப்பா“., என்று கேட்பதோடுஇவனுக்கு வர்ற பொண்ணு பொறுமையா இருக்கணும்.., இவனோட டென்ஷன் ஆகுற குணத்திற்கு பொறுமையாக ஒரு பொண்ணு வேணும்என்று இருவரும் பேசிக் கொள்வதை இப்போது நினைத்துக் கொண்டிருந்தவருக்கு ஏனோஇன்று வெகு நாட்களுக்கு பிறகு மனதில் பாரம் நீங்கியதுபோன்ற ஒரு உணர்வு தோன்றியது.

         ஆனாலும் அவள் காலையில் கண்விழித்து பேசிய பிறகு தான்.,  அவருக்கு மனதில் நிம்மதி தோன்றும் என்ற எண்ணமும் இருந்தது.

     இக்காலத்தில்சிறு பெண்களே காதல் கல்யாணம்., காதலுக்காக ஓடி வருவது என்று இருக்கும் போது இந்தப் பெண் எப்படி என்று தெரியவில்லை., இதே ஊராக இருந்தால் எப்படியும் நாளை அல்லது  நாளை மறுநாளுக்குள்  தெரிந்துவிடும்.,  இல்லை என்றால் எப்படி கண்டுபிடிப்பது.,  முதலில் அவள் முழித்து உண்மையை தான் நம்மிடம் சொல்கிறாள் என்று என்ன நிச்சயம்., எதையும் மறைக்க முயற்சி செய்தால் என்ன செய்ய.,  என்று யோசித்துக் கொண்டிருந்தவர்., சரி எதுவாக இருந்தாலும் நல்லபடியாக நடக்கும்‘., என்ற எண்ணத்தோடு கண்ணயர்ந்து விட்டார்.

        அங்கு அவன் அறையில் ஏதோ அப்பெண்ணை தூக்கி வந்ததையே நினைத்துக் கொண்டிருந்தான் சரவணன்.,

        ‘ஏனோ அவளை கையிலெடுக்கும் போது மனம் முழுவதும் ஒரு நடுக்கத்தோடு., அவளைக் காப்பாற்றி விடு கடவுளே என்ற கூப்பாடுமட்டுமே அவனிடம் இருந்தது.

       ‘ஏன் இத்தனை உதறல்., எப்பொழுதும் தைரியமாக கையாளுபவன் தான்.,  அவளை அப்படி பார்த்ததாலா., என்னவோ., அது மட்டும் இல்லாமல் மேனேஜர் வேறு பயம் காட்டி இருந்ததால் அன்று அவளை எடுத்து வீட்டிற்கு வந்து டாக்டரிடம் ஒப்படைக்கும் வரை அவனுக்கு நிம்மதியே இல்லை., அதன் பிறகு மருத்துவர் சொன்னது வேறு ஏதும் நடக்கவில்லை.,  தண்ணீரில் இழுத்து வந்ததும் ஆங்காங்கு சிராய்ப்புகளையும்., இரத்தகட்டுக்களை தவிர வேறு எதுவும் இல்லை.,  என்ற சொன்னதேஅவனுக்கு பெரும் நிம்மதியாக இருந்தது.,

            எப்படித்தான் பெண்களை இப்படி தவறாகவே பார்க்கிறார்களோ.,  தனக்கு உரிமை இல்லாத ஒருத்தியை எப்படி அப்படி கண்ணோட்டத்தோடு பார்க்க முடியும்., தன் மனைவியைத் தவிர வேறு ஒரு பெண்ணை நினைக்காத தன் தந்தை தான் அவனுக்கு நினைவு வந்து போனார்.

           அத்தனை நல்ல மனிதர் தன்னை வளர்த்ததும் அப்படித்தானே வளர்த்தார்.,  ‘பெண்களை மரியாதையோடு பார்க்க சொல்லிக் கொடுத்தவர்., பெண்களும் நம்மை போல ஒரு உயிர் என்று சொல்லி சொல்லி வளர்த்தவர்., உனக்கென ஒருத்தி வரும் வரை உன் எண்ணங்களை எப்போதும்., மற்றவர்கள் மீது பார்க்கும் பார்வையில் கூட கண்ணியம் தவறாமல் காத்துக் கொள்‘., என்பது அடிக்கடி அவன் தந்தை எனக்கு சொல்லிக் கொடுத்த வாழ்க்கை பற்றிய விஷயங்களை நினைத்து கொள்வான்.

       ‘உனக்கென்ன வருபவளோடு இரண்டறக் கலந்து வாழ வேண்டும் அதுதான் வாழ்க்கைஎன்றும் சொல்லிக் கொடுத்தார்.

         காலையில் அவள் நல்லபடியாக கண்விழிக்க வேண்டும் என்ற வேண்டுதலோடு கண்ணயர்ந்து விட்டான்.

      அங்கு அவளின் அறையிலோ  அவ்வப்போது நர்ஸ் எழுந்து பரிசோதித்துக் கொண்டிருந்தார்., பாக்கியமும் முழித்து பார்த்துக் கொண்டாலும் அவளிடம் சிறு அசைவும் இல்லை., டிரிப்ஸ்  ஒரு பாட்டில் முடிந்திருக்க காலை வேளையில் தான் இன்னொரு பாட்டிலை மாட்டி விட்டிருந்தார்.,

     ஏனெனில் ஏற்கனவே ஊட்டியில் நல்ல குளிர் மழை என்று இருப்பது மட்டுமல்லாமல்.,  அவள் ஏற்கனவே ஜில்லிட்டுப் போய் இருந்ததால் தான் ஹீட்டர் போட்டு அறையை சூடு செய்தனர்.,   ஆனால் இப்போது ஹார்ட் பீட் நார்மலாக தொடங்கியிருந்தது., 

     பாக்கியம் எப்போது எழும் நேரத்தில் எழுந்து விட்டார்.,

          “என்னம்மா ஏதாவது மாற்றம் இருக்காஎன்று கேட்டார்.

        ” இல்லைஎன்று சொன்னவர் பல்ஸ் பார்க்கவும்., அது நார்மல் என்று காட்டியது., “எல்லாம் நார்மலா இருக்கு இருக்கட்டும் பார்ப்போம்“., என்று சொல்லிவிட்டு  டாக்டர் சொன்னபடி மருந்துகளை டிரிப்ஸ் ல்  இறக்கினார்.

      பின்பு அவரவர்களுக்கான வேலையில் இருந்தனர்., பாக்கியம் சென்று அனைவருக்கும் டீ போட்டு எடுத்து வந்து கொடுத்தார்.

         அனைவரும் டீயை குடித்துவிட்டு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்., மருத்துவர் போன் செய்தார்., “என்ன அந்த பொண்ணு முழிச்சிட்டாளா“., என்று கேட்டார்.

         செவிலி பெண்ணோ., “இல்ல மேடம்என்று சொல்லி என்னென்ன மருந்து கொடுத்தார் ட்ரிப்ஸ் மாற்றியது என அனைத்தையும் சொன்னார்.

        மருத்துவர் தான்என்னது இன்னும் முழிக்கலையா“., என்றார்  அதிர்வோடுபல்ஸ் எப்படி இருக்குஎன்று கேட்டார்.

      ” நார்மலா இருக்கு டாக்டர்என்று நர்ஸ் சொன்னார்.

            மருத்துவர்சரி நான் இன்னும் கொஞ்ச நேரத்துல வர்றேன்என்று சொல்லி பதட்டத்தோடு போனை வைத்தார்.,

               மருத்துவரின் பதட்டம் வீட்டில் உள்ளவர்களையும் சற்று பதட்டம் கொள்ள வைத்தது.

         வீட்டிற்கு வந்த மருத்துவர் எல்லா பரிசோதனையும் செய்ய.,  உடல்நிலை நார்மல் என்று காட்டினாலும் டெம்பரேச்சர் கூட தான் சென்றது.,

           ‘உடல்நிலை முன்னேற்றத்தில்  மாற்றங்கள் அனைத்தும் சரியாக இருக்கிறது., ஆனால் இன்னும் ஏன் முழிப்பு வரவில்லைஎன்று கன்னத்தை எல்லாம் தட்டி பார்த்தனர்.

       அவளிடம் எந்த அசைவும் இல்லை ஆழ்ந்து உறங்கும் பெண் போல  நித்திரையில் இருந்து கொண்டே இருப்பது இருந்தால் மருத்துவர் தான் இப்பொழுது என்ன செய்வது என்று யோசனையோடு.,

      “போன் செய்து கேளுங்கள் வெளியே பாதை எதுவும் சரியாக இருந்தால்.,  வேறு ஏதாவது மருத்துவமனைக்கு கொண்டு செல்லலாம்., முடிந்த அளவு மேலே கொண்டு செல்ல முடிந்தால்.,  ஊட்டியில் அல்லது கோத்தகிரியில் இருக்கும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்வோம்.,  இல்லை என்றால் கோயம்புத்தூர் சென்றுவிடலாம்“., என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

      அப்போது உடனடியாக மேனேஜரிடம் சொல்லி விசாரிக்க சொல்லவும்.,  மேனேஜர்பாதை ஓரளவுக்கு சரியாக இருக்கிறது., ஆனால் சுற்றுப்பாதையில் தான் செல்ல வேண்டும்., குன்னூரில் இருந்து செல்லும் பாதை மறிக்கப்பட்டிருக்கிறது.,

       கீழிருந்து மேல் வருபவர்கள் கூட வரமுடியாத சூழ்நிலையில் பாதை மாற்றியிருக்கிறார்கள்., இங்கிருந்து செல்லும் பாதையும் காட்டுப்பாதை போல் இருக்கும்., மலையை சுற்றி போக வேண்டும்., ஜீப் மட்டும் தான் போக முடியும்., சாதாரணமாக அந்த மலையை சுற்றி வரும் பாதையில் யாரும் வரமாட்டார்கள் என்பதால்., அப்பாதையில் தான் செல்லவேண்டும்“.,  என்று சொன்னார்.

           ‘என்ன செய்வது‘., என்று யோசனையோடுஅவளை அழைத்துக் கொண்டு செல்லலாமா., இல்லை வீட்டில் வைத்து பார்ப்போமா‘., என்ற யோசனையோடு அனைவரும் குளம்பிப் போயிருந்தனர்.

           உயிரின் மதிப்பு யாருக்கும் தெரிவதில்லை., இழக்கும் வரை.,

    தனக்காக வாழ்வது இன்பம்.. பிறருக்காக வாழ்வது பேரின்பம்.!







    

Advertisement