Advertisement

ஒஒ சரி சரி“., என்று சொல்லிவிட்டு அமைதி அடைந்தான்., அவனுக்கு தெரியும்., இது போன்ற மண் சரிவும்.,  ஆள்களை காணும்., என்று தேடுவதும் சகஜமாக நடக்கும் சில விஷயங்கள்.,

         எஸ்டேட்டுக்கு இடையில் இருக்கும் குடியிருப்பு தொழிலாளிகளுக்கு தான் அதிக கஷ்டம்., மண்சரிவில் மாட்டிக் கொண்டால் மிகவும் கஷ்டம் எனவே தான் தன்  எஸ்டேட்டில் வேலை பார்ப்பவர்களுக்கு எல்லாம்.,

       சற்று தள்ளி இருந்து வந்தாலும் பரவாயில்லை என்று சமதளமான பகுதியிலும் அடிக்கடி மண்சரிவு ஏற்படாத பகுதியுமாக பார்த்து கோர்ட்ரஸ் கட்டிக் கொடுத்திருந்தார்கள்.,

            அவன் தந்தை காலத்திலேயே அங்கிருந்து வருவதற்கு போவதற்கு என்று எஸ்டேட்டின் சொந்த செலவில் 2 ஜீப் ம் இருந்தது.,

         அதுவும் இப்போது வரை பயன்பாட்டில் இருக்கிறது.,  வேலைக்கு வருபவர்கள் அங்கிருந்து ஜீபில் அழைத்துக் கொண்டு வந்து எஸ்டேட்டில் விட்டு விட்டு மாலை நேரம் திருப்பி அழைத்துக் கொண்டு போய் அங்கு விட்டு விட்டு வந்து விடுவார்கள்.,

        அதனாலோ என்னவோ சரவணன் எஸ்டேட்டில் வேலை பார்ப்பவர்கள் யாரும் வேறு எஸ்டேட்டுக்கு வேலை தேடி செல்வதே இல்லை.

     அவர்கள் சென்று சேரும் போதே மீண்டும் இருட்டத் தொடங்கியிருந்தது.,

        “என்ன மேனேஜர் சார் மறுபடியும் மழைவருமா., மேகம் வேற மிரட்டிட்டு வருது“., என்று கேட்டார்.

      ” இல்ல சார்., இன்னைக்கு கிளைமேட் அப்படி இருக்கு., அதனால அப்படி இருக்கும்.,  மத்தபடி  லேசா தூரல் போட்டுட்டு இருக்கும்.,என்று சொன்னார்.

        “சரி நீங்க ஜீப் நிறுத்திட்டு வாங்க“.,  நான் மெதுவா எஸ்டேட் உள்ளே இறங்கி பாத்துட்டு வரேன்“.,என்று சொல்லி குளிருக்காக தன் மேல் போட்டிருந்த ஜர்க்கினை நன்றாக இழுத்து விட்டுக் கொண்டான்.,

         கொஞ்சம் அதிக குளிர்ச்சியாக இருப்பது போல தோன்றியது.,  பொதுவாக இந்த மாதத்தில்  எப்போதும் அந்த அளவு குளிர் எடுக்காது.,  ஆனால் ஒரு மழை பெய்து விட்டால் குளிர் சற்று அதிகமாக தெரியும்.,

         அது போல தான் இன்றும் மழை பெய்யவும்.,  அதிகமாக குளிர் எடுப்பது போல தோன்றியது.,

          ‘சரி இன்னும் இரண்டு நாளைக்கு இங்க தான் முடிஞ்சா போன் பண்ணி கம்பெனி மேனேஜர் ட்ட பேசணும்., நான் வர்ற வரைக்கும் பார்த்துக்கோங்கஎன்று சொல்லனும் ன்னு மனதில் நினைத்துக் கொண்டே சென்றான்.,

          அவனுடைய கம்பெனி மேனேஜர் தெரிந்தவர் மட்டும் அல்ல., அவன் அப்பாவின் காலத்திலிருந்து இருக்கும் பெரிய மேனேஜர் ஒருவரும்.,  இவனுடைய நண்பன் ஒருவனும் இருப்பதால் அவனால் சகஜமாக பேச முடியும் என்பதால் நினைத்துக் கொண்டே., வந்து கொண்டிருந்தான்.

           சரிவான பாதையில் இறங்கிக் கொண்டிருக்க.,  மேனேஜர் மேலிருந்துஅந்த பக்கம் பார்த்து போங்க., அங்க கொஞ்சம் தண்ணி அதிகமா போச்சு., வழுக்கலா  இருக்கும்“., என்று சொன்னார்.,

        அவனும் திரும்பி பார்த்து கையை காட்டி விட்டு மெதுவாக இறங்க தொடங்கியிருந்தான்., வேறு ஏதேனும் பாதிப்பு இருக்கிறதா என்று ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டு சென்றவனுக்கு தேயிலைச் செடியின் அடியில் ஏதோ வித்தியாசமாக தெரிய.,

      ‘என்ன அது‘., என்று பார்த்துக் கொண்டே சென்று கொண்டிருந்தான்.,

      தூரத்திலிருந்து பார்க்கும் போது ஏதோ துணி மட்டும் தெரிவது போல வித்தியாசமாக ஏதோ தெரிய., கண்ணை கசக்கிக்கொண்டு பார்த்தான்.

        ‘இது என்னது இப்படி வித்தியாசமா தெரியுது., ஏதாவது அடிச்சிட்டு வந்திருச்சா மழையிலஎன்று யோசித்துக் கொண்டே நிதானமாக அவ்விடம்  சற்று பயந்து தான் சென்றான்.,

         ஏனெனில் மழை நேரத்தில் சில இடங்களில் காட்டுக்குள் இருந்து எதையும் அடித்து வந்துவிடும் என்ற பயத்தோடு மெதுவாக செல்ல பார்த்தவனுக்கு ஒரு நிமிடம் உடல் உதறியது போல இருந்தது.,

       ஏனெனில் ஆங்காங்கு கிழிந்த உடையுடன்  ஒரு பெண்ணின் உடல் தேயிலைச் செடிகளின் அடியில் சிக்கியிருப்பது தெரிந்தது.,

       அதன்பிறகு பார்க்கவே அவளின் கற்றை முடி ஒரு தேயிலை செடியின் அடியில் இழுத்து பிடித்து சிக்கியிருந்தது., அம் முடியால் மட்டுமே தேயிலை செடிகளுக்குள் அவள் சிக்கிக் கொண்டிருக்கிறாள்., என்பது தெரிந்தது.

        அந்த முடி இல்லை என்றால் நிச்சயமாக நீரோடு அடித்து செல்லப்பட்டு இருப்பாள்., என்பதை ஒரு நொடியில் புரிந்து கொண்டவன்.,

             அப்போது திரும்பிப்பார்க்க மேனேஜர் வருவது தெரியவும்.,  அவசரமாக தன்னுடைய ஜர்கினையை கழட்டி அவள் உடை ஆங்காங்கு கிழிந்து இருந்த படியால் அந்தப் பெண்ணின் உடலின் மேல் போட்டு அவளை மொத்தமாக ஜர்க்கினை வைத்து சுருட்டினான்.

       பின்பு அவள் முடியை தேயிலைச் செடியின் அடிப்பகுதியிலிருந்து எடுக்க முற்பட்டால்., அதில் தோல்வியே மிஞ்சியது., உயிர் இருக்கிறதா என்று கழுத்தில் கை வைத்து பார்க்க லேசான துடிப்பு தெரிய அவனுக்கு பயம் வந்தது.,

         மேனேஜரைப் பார்த்துமேனேஜர்என்று கத்தவும்., 

       அவர்என்ன சார்“., என்று கேட்டார்.

          அவன் தரையில் முட்டியிட்டு அமர்ந்திருப்பது தெரிந்தது.. “சார் என்ன  ஆச்சுஎன்று அங்கிருந்து வேகமாக வர போக..,

        சிஸர்.. வேணும் என்றான் அவரோ  என்னது கத்தினார்.,

      “கத்தரிக்கோல் எடுத்து வாங்கஎன்று கத்தினான்.

        “கத்தரிக்கோலா எதுக்கு“.,  என்று கேட்டார்.,

        “சீக்கிரம் எடுத்துட்டு வாங்கஎன்று சொல்ல.,

        மேனேஜரும் பாதி தூரம் வந்திருந்தவர்., மீண்டும் மேலே ஓடிச் சென்றார்., தேயிலை செடிகளை வெட்டி வைத்திருக்கும் பெரிய கத்திரிக்கோலை எடுத்துக்கொண்டு வர.,

            இவனோகத்தரிக்கோலை எடுத்து வர சொன்னா.,  இந்த மனுஷன் எதை எடுத்துட்டு வந்து இருக்கார்‘., என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவன்.

        ‘சரி எதையோ எடுத்துட்டு வரட்டும்என்று சொல்லி கொண்டிருந்தவன் அவளை முடிந்த அளவு தேயிலைச் செடிகளிலிருந்து வெளியே இழுத்து எடுத்தான்.,

          ‘சார் இது‘., என்று கேட்ட படி வந்தவர்  மீண்டும் சார் அழைத்து அருகில் வந்தார்.,

         அவன் ஒரு பெண் உடலை வெளியே எடுத்து போட்டிருப்பதை பார்த்து கொண்டு ஓடி வந்த மேனேஜர்சார் என்ன இது“., என்று கேட்டார்.,

         “உயிர் இருக்குது சார்., முடிந்தளவு காப்பாத்த பார்ப்போம்“.,என்று சொன்னான்.,

        “சார் மேல எல்லாம் போக முடியாது சார்., ஹாஸ்பிடல் கொண்டு போறதெல்லாம் கஷ்டம்“., என்று சொன்னார்.,

       ” நம்ம எஸ்டேட் டாக்டரை வர சொல்லுங்க., வீட்டுக்கு வர சொல்லுங்க“.,  என்று சொல்லி விட்டு

          பெரிய கத்திரியை நீட்ட., நிமிர்ந்து பார்த்தவன்முடிய வெட்டுங்க“.,  தேயிலை செடிக்குள் சிக்கியிருந்த முடியை வெட்ட சொன்னான்.,

              அவளின் முடி பாதிக்கு மேல் மேனேஜரின் கையால் வெட்டப்பட்டது.,  அவளைத் தன் கையில் எடுத்துக் கொண்டவன் அந்த முடியை முழுசா எடுத்துடுங்க., தேயிலை செடியில் எதுவும் இருக்க வேண்டாம்.,  எடுத்திருங்கஎன்று சொன்னான்.

      “சார் என்ன சார்., நாம என்ன கொலையா பண்றோம்., எவிடன்ஸ் இருக்க கூடாதுன்னு சொல்ற மாதிரியே சொல்றீங்க“.,  என்று சொன்னான்.,

      அவரை பார்த்தவனுக்கு ஒரு புறம் கடுப்பும்., மறுபுறம் சிரிப்பும் வந்தது.,

       “நீங்க வேற., யாரு என்ன., எப்படி இங்க வந்தா ன்னு தெரியலை.,  ஏன் போலீஸ் ட்ட கூட சொல்லலை.,  தேயிலை செடிக்குள் சிக்கிருச்சு காப்பாற்றுவதற்காக முடியை வெட்டினத சொல்லனும் இல்ல.,  அதுக்காக தான் வெளியே எடுங்க“., என்று சொல்லவே அவர் முடியை  நிதானமாக எடுத்துக் கொண்டிருந்தார்.,

       சரவணன்சார் நான் அந்த பொண்ண கையில வச்சிருக்கேன்.,  எவ்வளவு நேரம் இப்படியே தூக்கிட்டு நிற்க.,  நிதானமா ஒவ்வொரு முடியா பிரிச்சு எடுங்க.,  அதுக்குள்ள நான் வீட்டுக்கு நடந்து போய் இருப்பேன்னு நினைக்கிறேன்“., என்று சொன்னான்.

       அவசர அவசரமாக முடியை  சுருட்டி எடுத்துக் கொண்டவர்., முன்னாள் நடக்க.,  அவளை தூக்கிய படி ஜீபிற்கு  வந்தவனுக்கு அவள் மேல் மண்ணும் சேறும் சகதியுமாக கலந்து இருந்தாலும்.,  அவளின் முகத்தை பார்க்கும் போதேகடவுளே அவளை காப்பாற்றி விடு‘.என்றே மனம் நினைத்தது.

       அங்கிருந்தே மருத்துவருக்கு போன் செய்து சொன்னவன்., அவளுக்கு உயிர் இருப்பதை மீண்டும் உறுதிப் படுத்திக் கொண்டான்.,

       அவளை கையில் தூக்கிய பிறகு தலை தொங்க., அவன் கையில் கிடந்தவளின் கழுத்தில் நரம்பு துடிப்பது தெளிவாக தெரிந்தது., தண்ணீரோடு அடித்து சென்றதால்.,  அவளை சுத்தமாக கழுவி விட்டது போல முகம் வெளுத்து ஆங்காங்கே சீராய்ப்புகளோடு., அடிபட்ட காயங்களோடு இருந்தாள்., 

     அவனுக்கும் பயம் இருந்தது., ‘மேனேஜர் சொன்னது போல ஏதேனும் அசம்பாவிதம் என்றால் என்ன செய்ய முடியும்., இருக்கட்டும் எதற்கும் டாக்டர் வரட்டும் பார்த்துக் கொள்ளலாம்‘., என்று நினைத்துக் கொண்டான்.,

          அதன்பிறகு வீட்டிற்கும் தகவல் சொல்ல அவன் அம்மாவை ஒரு அறையை சுத்தப்படுத்தி வைக்க சொன்னான்., இவர்கள் வீட்டிற்கு செல்லவும் மருத்துவர் வரவும் சரியாக இருந்தது.,

       ஜீப்பை விட்டு அவளை தூக்கும் போதே அவள் உடல் மேலும் துவண்டிருந்ததை அவனால் உணர முடிந்தது., ‘ஒருவேளை ஏதேனும் ஆகிவிட்டதோஎன்று பதட்டத்தோடு அவள் முகத்தை பார்த்த படியே வீட்டிற்குள் தூக்கி வந்தான்.,

     வழியில் நின்ற அம்மாவும் வேலைக்கு இருக்கும் பாக்கியமும் அவன் கண்ணுக்கு தெரியவில்லை.

திடீரென கிடைக்கும் உறவுகள் வாழ்நாளை மறக்க முடியாத வகையில் மாற்றக்கூடும்.

     ஒரு துன்பத்தில் இருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம்.. அந்தத் துன்பத்தை வேறு யாருக்கும் கொடுக்காமல் இருப்பதே.!

Advertisement