Advertisement

4

          ஊர் வந்து சேரும் போதே உறவுகள் வீட்டில் கூடியிருக்க அனைவருமே புலம்பி தீர்த்தனர்.,

       பெற்றவர்கள் தான் என்ன தான் கதறினாலும் போனவள் திரும்ப வரப்போவதில்லை என்ற நினைவோடு அழுது கொண்டிருந்தனர்.

           வீட்டில் கிட்டத்தட்ட இரண்டு நாள் முழுவதும் உறவுகளும் நண்பர்களும் இருந்தார்கள்.,

        அவர்களால் முடிந்தது ஆறுதல் வார்த்தை சொல்வது மட்டும் தான்.,  ஆனால் இழப்பின் வலி இழந்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும் என்பது போல பெற்றவர்களுக்கும் உடன் பிறந்தவர்களுக்கு மட்டும் தான் அந்த வலியும் வேதனையும்.,

      நாட்கள் வேகமாக கடந்து செல்வது போல தெரிந்தது., ஒவ்வொரு நாளும் வலியின் அளவு அதிகரித்துக் கொண்டே செல்வது போல உணர்ந்தார்கள்.,

       வீட்டில் ஊரில் இருந்து வந்திருந்த பெரியவர்கள் தங்கியிருந்தனர்.,

     பாட்டி தாத்தா முறையில் உள்ளவர்கள் செய்ய வேண்டிய சடங்குகளை எல்லாம் செய்து கொண்டிருந்தனர்., மீராவின் அம்மாவோஎதையும் செய்யாதீர்கள் என் பிள்ளை எங்கேயாவது தப்பி பிழைத்து இருந்தாலும்., நல்லா இருக்கணும் இதெல்லாம் செய்யாதீங்க“., என்று சொன்னார்.

            கூடியிருந்த சொந்தங்கள் தான்.,  “இன்னுமா நீ நம்புற அவ ஆத்மா நல்லபடியா சாந்தி அடையட்டும் நினையேன்.,  எங்களுக்கும் ஆசைதான் அப்படிப்பட்ட நல்ல புள்ளைய பறிகொடுக்க யாருக்கு மனசு வரும்“.,  என்று சொல்லி அனைவரும் அழுது கொண்டிருந்தனர்.

         பெரியவர்கள் தான்நீங்கள் வந்து ஒரு வாரம் ஆகப்போகிறது., கிட்டத்தட்ட விபத்து நடந்து பத்து நாட்களுக்கு மேல் கடந்து விட்டது., இன்னுமா எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்., அப்படி அவள் இருந்திருந்தால் இதற்குள் தகவல் வந்திருக்கும் அல்லவா“., என்று சொன்னார்கள்.

        வேறு வழியில்லாமல் பெரியவர்கள் சொன்ன சடங்கு சம்பிரதாயங்களை செய்ய தொடங்கினர்., அதற்குள் ஓரளவு காயங்களோடு நடமாட தொடங்கியிருந்த கல்லூரி நண்பர்களும் வந்திருக்க பத்தாம் நாள் காரியங்கள் நிறைவேற்றப்பட்டு கொண்டிருந்தது.,

         வீட்டிலுள்ளவர்கள் பேச மறந்தவர்களாக அமர்ந்திருந்தனர்.,அதுவரை வெறும் விளக்கின் முன் காரியங்கள் நடந்து கொண்டிருந்தது.,

      அப்போதுதான் பெரியவர் ஒருவர்புள்ளையோட போட்டோ குடுங்க.,  கன்னியா போனவ கன்னிசாமியா நின்னு குடும்பத்தை பார்த்துக்குவாஎன்று சொல்லி கேட்டார்.

       மீராவின் அக்காவோ., “இல்ல என் தங்கச்சிக்கு எதுவும் ஆயிருக்காது., என் உள் மனசு சொல்லுது.,  அவ எங்கேயாவது இருப்பா“.,  என்று அழுதுகொண்டே கூறினார்.

        பெரியவர்கள் தான்எல்லாருக்கும் அப்படித்தான் இருக்கும்., எத்தனையோ இயற்கை அசம்பாவிதத்தில் காணாம போனவங்க இல்லையா.,  கடல்ல புயலில் அடிச்சிட்டு போகும் போது அப்படித்தான் எல்லாரும் எதிர்பார்த்து காத்துகிட்டு இருக்காங்க.,  எப்படியும் உயிரோடு திரும்பி வருவாங்க என்கிற நம்பிக்கையில இருப்பாங்க.,

        எத்தனையோ பேருக்கு உடம்பு கிடைக்காமலேயே போய் இருக்கு.,  இப்ப கடலில் காணாமல் போனவர்களை என்ன சொல்வாங்க.,  கடல் மாதா மொத்தமா எடுத்துக்கிட்டா ன்னு சொல்லுவாங்க., அது மாதிரி தான் இவ மலையில் காணாமல் போயிருக்கா., அந்த மலையம்மா எடுத்துக்கிட்டா ன்னு நினைச்சுக்கோ“., என்று சொல்ல வீட்டினர் துடித்துக் கொண்டிருந்தனர்.

        கல்லூரி தோழர்களும் தோழிகளும் வீட்டிற்கு வந்தவர்கள்., எந்த தகவலும் இல்லை என்று தெரிந்த பின்பு ஒன்றும் சொல்வதற்கு இல்லாமல் திரும்பி சென்றனர்.,

        யாருக்கு யார் ஆறுதல் சொல்வது என்பது அங்கு புரியவில்லை பவித்ராவின் மனமோ குற்றவுணர்ச்சியில் தவித்தது.,

    தொட்டபெட்டாவில் வைத்து அவளிடம் கிண்டல் செய்த அவள் நண்பர்களோ வாய்விட்டு புலம்பிக் கொண்டிருந்தனர்.,

        தோழர் தோழிகள் எல்லாம் சேர்ந்து வந்திருக்க அவர்கள் எல்லாம் வந்த காரில் திரும்பும் போது.,  “அவளை நான் தானே  உன்னை  தள்ளிவிடுறேன்  மேகத்தில் பறந்து போறீயா“., என்று கேட்டேன்.,  அய்யோ நான் தானே அப்படி கேட்டேன்., இப்ப ஒரேடியா பறந்துட்டாளே“.,  என்று சொல்லி அழுது கொண்டே இருந்தான்.,

         “தப்பு பண்ணிட்டேன்., அன்னைக்கு ஏதோ விளையாட்டா சொன்னேன்., பொதுவா எல்லாரும் சொல்லுவாங்க பேசும்போது வார்த்தையை யோசிச்சு பேசு., அனாவசியமாக வார்த்தை விடாதே ன்னு தான் சொல்லுவாங்க., வார்த்தை வரும் போது பக்கத்துல இருக்க தேவதைகள் ததாஸ்து சொல்லும் சொல்லுவாங்க.,  அப்போ அது தெரியல.,

    ஆனா இப்போ உண்மையிலேயே எந்த தேவதை ததாஸ்து சொல்லுச்சு என்று தெரியலையே., அந்த தேவதை மட்டும் கிடைத்தா கால்ல விழுந்தாவது கேட்பேனே அவளை திருப்பி கொடுத்துடு ன்னு“.,  என்று சொல்லி அழுது கொண்டே இருந்தான்.,

         நண்பர்கள் ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக் கொண்டாலும் கல்லூரியின் அவர்கள் வகுப்பில் துருதுரு என்று இருக்கும் மீராவை இழந்தது அனைவருக்கும் வருத்தம் தான்.,

        பவியோநான் மட்டும் அன்னைக்கு அவளுக்கு கானர் ஷிட் கொடுத்திருந்தா.,  நான் வேணும்னே அவளை இடிச்சிட்டு தான் உட்கார்ந்து இருப்பேன்., அவட்ட போட்டி போட்டு.,  நான் தான் தப்பு பண்ணிட்டேன்“.,  என்று சொன்னாள்.

       ஒவ்வொருத்தரும் ஏதோ தங்களால் தான்  மீராவிற்கு இப்படி ஆகி விட்டது என்று எண்ணி மருகி கொண்டிருந்தனர்.

            முன்னோர்கள் சொல்லும் வாக்கும் உண்மை என்பதை சில நேரங்களில் உணர வைத்திருக்கிறார்கள்.,  அக்காலங்களில் பேசும் போது இரவில் சத்தமாக பேசக்கூடாது என்று சொல்வார்கள்., அது மட்டுமில்லாமல் பகலில் பக்கம் பார்த்துப் பேசு இரவில் அதுவும் பேசாதே என்ற பழமொழியும் உண்டு.

   தங்களை சுற்றி நல்ல சக்தியும் இருக்கும்., கெட்ட சக்தியும் இருக்கும்., நாம் சொல்லும் வார்த்தைகளை அப்படியே ஆகட்டும் என்று சொல்லும்.,

      அது சொல்லி விட்டு போய்விட்டாள் அப்படியே நடக்கும் என்பார்கள்.,  பொதுவாக நாம் சொல்லும் வார்த்தைகளுக்கு அதிகமான பலன் உண்டு., எப்போதும் நாம் உபயோகிக்கும் வார்த்தைகளை பார்த்து உபயோகிக்க வேண்டும்., இது அனைவருக்கும் பொருந்தும்.,

         எந்த ஒரு வார்த்தையை திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டு இருக்கிறோமோ., அந்த வார்த்தை மந்திரத்திற்கு சமமானது என்று பெரியவர்கள் சொல்வார்கள்., அப்படியே நடக்கவும் செய்யும் என்றும் கூறுவார்கள்.,  எனவே உபயோகிக்கும் வார்த்தைகளை கவனமாக கையாளுங்கள்.

           கல்லூரி மாணவ மாணவிகள் சென்று விட மேலும் 6 நாட்கள் கடந்து இருக்க., அவளுக்கு வீட்டில் 16ஆம் நாள் காரியம் நடந்தது.,

     வீட்டினரின் மனத்திருப்திக்காக அவளது புகைப்படம் மட்டும் வீட்டில் வைக்கவில்லை., வைக்கக் கூடாது என்பதில் மீராவின் அண்ணனும் அக்காவும் பிடிவாதமாக இருந்தார்கள்.,

         வீட்டிலுள்ளவர்கள் சாமி கும்பிட்டு செய்ய வேண்டிய காரியங்களை செய்து கொண்டிருக்கும் போதே.,

             மீராவின் அண்ணி மீண்டும் பேச்சுவாக்கில் அவள் அண்ணனை திருமணம் செய்ய மறுத்ததை பற்றி பேசி.,

       “இப்படி அற்பாயுசில் போறதுக்கு தான் கல்யாணம் பண்ண மாட்டேன் சொன்னாளோ.,  என்னவோ.,  அதை மட்டும் தான் உருப்படியா செஞ்சுட்டு போய் இருக்கா., அவ  கல்யாணம் பேசி முடிவு  பண்ணி இருந்தா.,

      இப்படி ஆனாதுக்கு எங்க அண்ணணை இல்ல குறை சொல்லுவாங்க.,  இவனை கல்யாணம் பேசின நேரம் தான் அப்படி போயிட்டா ன்னு.,  நல்லவேளை நிச்சயதார்த்தம் நடக்கவில்லை“., என்று சொன்னாள்.

       அதுவரை அழுது கொண்டிருந்த மீராவின் அக்காவும் கலைந்து கிடந்த தலையை வாரிக் கொண்டை போட்டவள்.,  சேலையை இழுத்து சொருகிக் கொண்டு நேராக வந்தவள்.,  தம்பி மனைவிக்கு ஓங்கி ஒரு அறை விட்டாள்.,

      “இன்னொரு தடவை தேவையில்லாம பேசின.,  உன்னை கொலை பண்ணிடுவேன்.,  ஞாபகம் வச்சுக்கோ தம்பி பொண்டாட்டியாவது மண்ணாங்கட்டியாவது., என் தங்கச்சிய பேசுறதுக்கு உனக்கு எந்த அருகதையும் கிடையாது., என்று சத்தமாக சண்டை ஆரம்பிக்க.,

      அவர்கள் குடும்பமும் அங்கேயே இருக்க அனைவரும் அதிர்ந்து விட்டனர். பதினாறாம் நாள் காரியத்திற்கு வந்து இருந்த அக்கம்பக்கத்தினரும் நண்பர்களும் அதிர்ந்து போய் பார்த்தனர்.,

        பத்ரகாளியின் உக்கிரத்துடன் நின்ற மீராவின் அக்காவோ.., “உன் அண்ணன பத்தி தெரியுமா.,  பேச வந்துட்டா என் தங்கச்சி பத்தி.,  என் தங்கச்சிய பத்தி உனக்கு என்னடி தெரியும்., வந்து ஆறு மாசம் கூட ஆகல., நீ வந்த நேரம் தான் என் தங்கச்சி போயிட்டா ன்னு  நா சொல்றதுக்கு எவ்ளோ நேரம் ஆகும்.,

         எந்த நேரத்தில் இந்த வீட்டில் காலடி எடுத்து வைச்சியோ., என் தம்பியை தனியா கூட்டிட்டு போன சரி., அவன் விரும்பின பொண்ணோட அவன்  வாழ்க்கை நல்லா இருக்கணும்., நல்லா இருக்கட்டும்னு நினைத்து தான் நாங்க அவன் தனிக்குடித்தனம்  வச்சோம்.,

        என்னமோ பெருசா பேசுதே உனக்கு விஷயம் தெரியுமா“., என்று சொல்லிஉன் அண்ணன்காரன்“., என்று காலேஜில் மீராவை சந்தித்து சொன்னதை சொன்னதோடு.,

           “ஏற்கனவே  ஒருத்திய ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணி ஏற்கனவே குடும்பம் நடத்திட்டு இருக்கான்குழந்தை எதுவும் இருக்கான்னு கேட்டு விசாரிச்சிக்கோங்க., உனக்கு முன்னாடி உங்க அண்ணனுக்கு கல்யாணம் ஆகிருச்சி அது தெரியுமா“.,  என்று கேட்டாள்.

          அதிர்ந்துபோய் குடும்பத்தினரும் அக்கம் பக்கத்தவரும் பார்த்துக் கொண்டிருக்க.,

      சொந்த பந்தங்களுக்குள்என்ன விஷயம் என்ன விஷயம்“., என்று கிசுகிசுக்க தெரிந்தவர்கள் தங்களுக்குள் தெரிந்த விஷயங்களை பகிர்ந்து கொண்டிருந்தனர்.

      “அப்படியா அப்படிப்பட்ட பயலுக்கு தான் இவங்க மீராவை கேட்டாங்களாக்கும்“., என்று சொந்தக்காரர்கள் பேசியவர்கள்.

              “மீராவை கல்யாணம் பண்ண ஒரு தகுதி வேணும் உங்க குடும்பத்துக்கு இல்ல நினைக்கிறேன்“.,  என்று சொன்னார்கள்.

          அதுவரை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த மீராவின் அண்ணன் மெதுவாக எழுந்து வந்துநீ உங்க வீட்டுக்கு கிளம்பு., எப்போ என் தங்கச்சியை பற்றி தரக்குறைவாக பேசினீயோ., இனிமேல் எனக்கு நீ தேவையில்லை.,  கோர்ட்ல பார்க்கலாம் டைவர்ஸ் வாங்கிப்போம்., நான் உன்னை லவ் பண்ணி தான் கல்யாணம் பண்ணினேன்.,  நான் லவ் பண்ணினது  தெரிஞ்ச என் தங்கச்சி தான் எனக்காக எங்க அப்பா அம்மா கிட்ட பேசி.,  கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கி சேர்த்து வச்சா.,  ஆனா உனக்கு அந்த நினைப்பு கூட இல்ல இல்ல.,

எங்க வீட்டில லவ் மேரேஜ்க்கு சம்மதிச்சி உன்னையும் பொண்ணு கேட்டு முறைப்படி கல்யாணம் பண்ணி வெச்சாங்க., உங்க வீட்ல வசதி அது இது ன்னு பேசப்போய் தான்., எங்க அப்பா என்னை தனிகுடித்தனம் வச்சாரு.,

         சரி தனிக்குடித்தனம் ஆசைப்படறீங்க  ன்னு எங்க அப்பா சொன்னார்., அதற்காக தான் வந்தேன்.,  ஆனா இன்னைக்கு என்ன எல்லாம் பேசுற.,  அது மட்டுமில்லாம  உங்க அண்ணன் காலேஜ்ல போய் பார்த்து பேசி இருக்கான்.,  அவன்  லவ் பண்ணா அவன் தான் சொல்லியிருக்கனும்., கல்யாணம் பண்ணி கூட குடும்பம் நடத்தினா போய் தொலையட்டும்.,  அதை  கல்யாணம் பேசும் போது கூட சொல்ல தைரியம் இல்லாதவன் எதுக்கு லவ் பண்றான்.,

       அப்ப நீ கிளம்பு உங்க வீட்டுக்கு“., என்று சொன்னான்.

       பிரகதியின் அம்மா தான் பயந்து போய்மாப்பிள்ளை தம்பி அவ ஏதோ கோவத்துல பேசிட்டா., அதுக்காக இப்படிலாம் பேசாதீங்க“., என்று சொன்னார்.

           “வாய மூடிட்டு உங்க பொண்ணை  கூட்டிட்டு போறது னா கூட்டிட்டு போங்க இல்லாட்டி நான் போலீஸ் ஸ்டேஷன் போய் நிற்க வேண்டியது இருக்கும்“.,

       “போலீஸ் ஸ்டேஷன் போவீங்களா.,  நான் போய் உங்க மேல வரதட்சணை கொடுமை ன்னு கேஸ் கொடுப்பேன்“., என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே.,

          அருகிலிருந்த சொந்த பந்தங்கள்யம்மா வாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டியா., வாழனும்னு ஆசை இருக்கா இல்லையா“.,  என்று அதட்டிக் கேட்ட  பின்பு ஆளாளுக்கு பேசி சமாதானம் செய்தனர்.

          “இப்பதிக்கு உங்க பொண்ண உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போங்க., நல்ல புத்தி சொல்லி அனுப்புங்க., ஒரு வீட்டில் இப்படித்தான் பிள்ளையை இழந்து நிற்கும் போது வாய்க்கு வந்த படி பேசுவீங்களா“., என்று சொல்லி சத்தம் போட்டனர்.,

       தன் மகள் செய்தது தவறு என்பதை உணர்ந்த பிரகதி இன் பெற்றோர்கள்வீட்டுக்கு வா பேசிக்கலாம்என்று சொல்லி அவளையும் சேர்த்து அழைத்துக் கொண்டு சென்றனர்.

       அவள் அண்ணனுக்கு அன்று கடும் பூசை காத்திருந்தது., இனி அவர்கள் குடும்பம் அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும் என்று மீராவின் அண்ணனும் அக்காவும் முடிவு செய்துவிட்டனர்.,

        அவர்கள் வீடு அமைதியான சூழலை தத்தெடுத்தது.,  அப்போது ஊரில் இருந்து வந்த பெரியவர்கள் தான்ஒன்னும் இல்லப்பா., அதுக்காக இப்படியே ஆளுக்கு ஒருமூலையில் உட்கார்ந்து இருப்பீங்களா., மத்தவங்க வாழ்க்கை பார்க்க வேண்டாமா“., என்று சொன்னார்கள்

          “அவங்கவங்க வேலைய பாருங்க.,  மறக்க முடியாதது தான் இப்படி நினைச்சுகிட்டே உள்ளேயே இருந்தீங்கன்னா.,  இன்னும் வலியும் வேதனையும் அதிகமாக தான் செய்யும்.,

          நீங்க போட்டோ வைக்க கூடாது.,  சொன்னது எதுக்குன்னு எங்களுக்கும் தெரியும்., மனசுல அப்படி நினைச்சுக்கோங்க., நம்ம பிள்ளைங்க எங்கேயோ வாழ்ந்துகிட்டு இருக்கா ன்னு நினைச்சு மனசை தேத்திக்கோங்க.,

        நிச்சயமா அப்படி  நினைச்சு தான் மனச தேத்திக்கிட்டு வாழனும்., ஏதோ ஒரு கண்ணுக்கு தெரியாத இடத்தில் நம்ம பிள்ளை இருக்கா அப்படின்னு நினைச்சு  இருந்துக்கோங்க.,  வேற வழி இல்ல“., என்று சொன்னார்கள்.,

      மீராவின் அம்மா தான் அதிகமாக அழுதார்., ஒருவருக்கு தெரியாமலேயே ஒருவர் அழுதாலும் மற்றவர்கள் அறியாமல் பார்த்து கொண்டனர்.,

         அதன் பின் அவர்கள் வீடு சிரிப்பு சத்தம் இன்றி.,  ஏதோ கடமைக்காக வாழ்வது போல போய்க் கொண்டிருந்தது.,

ஒரே ஒரு முறை தான் வாழ்க்கை., அதற்குள் எத்தனை போட்டி., எத்தனை பொறாமை”.,

வாழ்க்கை என்னும் பரீட்சையில் இதயம் சொல்லும் சொல்லை நம்பி தோல்வியடைந்து விடாதே.. உன் மூளையின் சொல் கேட்டு வாழ்க்கையில் முன்னேறி வெற்றி அடைந்து விடு.!”

Advertisement