Advertisement

3

         மீராவுடைய அக்காவின் நினைவுகள் பின்னோக்கி செல்ல.,  மீராவின் வளர்ச்சிகளை யோசித்துக் கொண்டிருந்தவர்.,

          அவள் ப்ளஸ் டூ பாஸ் செய்த சமயம் அவளுடைய மதிப்பெண்களை வைத்து வீட்டில் அனைவரும் சந்தோஷப்பட்டனர்.,

             அவளுக்கு சிறுவயதிலிருந்தே கம்ப்யூட்டர் மிகவும் பிடிக்கும் என்பதால் கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட படிப்பு எடுக்க வேண்டும் என்ற ஆவலுடன் படிப்பைத் தொடர்ந்தாள்., அப்படியே தான் கம்ப்யூட்டர் சம்பந்தமாக எடுக்க வேண்டும் என்று யோசிக்கும் போது தான்.,

       பி. எடுத்துக் கொள்கிறேன் என்று சொல்லி ஆசைப்பட்டு பி. கம்ப்யூட்டர் சயின்ஸ் எடுத்தாள்.

             அப்போதும் சொல்வாள்., நான் மேற்கொண்டு படிக்க வேண்டும்.,  கம்ப்யூட்டரில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை பற்றி சொல்லி கொண்டே இருப்பாள்., அதுவும் இந்த வருடத்தோடு அவளுக்கு கடைசி வருட படிப்பு முடிகிறது.,

     இன்னும் 6 மாதத்தில் அவளுடைய படிப்பு முடிவடைய கூடிய நேரம்., ஆனால் இப்படி ஆகும் என்று கனவில் கூட நினைக்கவில்லை., என்று எண்ணியபடி கண்ணில் வடிந்த கண்ணீரை துடைத்து கொண்டவருக்கு., அவளை தவிர வேறு எந்த நினைவும் வருவதற்கு இல்லை.,

           நான்காவது வருடம் ஆரம்பத்தில் இருக்கும் போது தான் தன் தம்பியின் திருமணத்திற்கு பெண் பார்க்க துவங்கலாம் என்று பெற்றவர்கள் நினைக்க., 

      தம்பியோஇல்லை வேண்டாம் மீரா படிப்பு முடியட்டும்.,  அவளை திருமணம் செய்து கொடுத்த பின்பு தான் திருமணம் செய்து கொள்கிறேன்“., என்று சொல்லிக்கொண்டே இருந்தான்.

      மீராவும்அதெல்லாம் வேண்டாம்“.,  என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

     அப்போது தான் மீராவிற்கு தற்செயலாக அவள் கல்லூரி தோழிகள் மூலமாக தெரியும் தன் அண்ணன் ஒரு பெண்ணை விரும்புவது.,

       அதன்பிறகு அவள் அண்ணனை கண்காணிக்க தொடங்கினாள்., அவனுக்கு தெரியாமல் அவன் செல்லில் இருந்து போட்டோக்களையும்., போன் நம்பரையும் எடுத்துக்கொண்டு சரி இவனை பார்த்து கொள்ளலாம் என்று அமைதியாக இருந்துவிட்டாள்.

      அதன் பின்பு அவன் ஒரு பெண்ணை விரும்புவது பற்றி மெதுவாக தாய் தந்தையிடம் கோடிட்டு காட்ட ., அதையே அவர்களும் பிடித்துக்கொண்டனர்.

         ‘சரி அந்த பெண் வீட்டில் பேசலாம்‘., என்று நினைக்கும் போது அவர்கள் இவர்களை விட சற்று கூடிய நிலைமையில் உள்ளவர்கள் என்பதால் முதலில் யோசித்தாலும் பின்பு இருவருக்கும் மனமொத்து போனபின்பு வசதி என்ன வசதி என்பதை பற்றி எதற்கு யோசிக்க வேண்டும் என்று நினைத்தனர்.

            பெண்ணைப் பெற்றவர்களுக்கோ தங்களை விட குறைந்த இடத்தில் கொடுப்பதற்கு மனமில்லை.,  அப்பெண்ணும் செல்லமாக வசதி வாய்ப்போடு வளர்ந்ததால் சாதாரண குடும்பத்தில் வந்து வாழ்வதற்கு தயங்கவே., 

      மீராவின் தந்தை தான்கல்யாணம் முடிந்த உடனே தனிகுடித்தனம் வச்சிடுவோம்., அவனோட சம்பாத்தியம் அவன் குடும்பத்துக்கு.,எந்த சூழ்நிலையிலும் என் பெண்களுக்கு செய்யவேண்டியது அவனை செய்ய சொல்லி  வந்து நிற்க மாட்டோம்.,

       என் பொண்ணுங்களுக்கு நான் இருக்கிற வரைக்கும் நான் பார்த்துக்கிறேன்., அது போல என் சேமிப்பு மற்றும் சொத்து மூன்று பேருக்கும் சமம்“., என்று சொன்னார்.

         அதன் பின்பே அவர்கள் சம்மதிக்கவே செய்தனர்., கல்யாண பேச்சு வார்த்தை எல்லாம் சுகமாக சென்று கொண்டு இருக்கும் போதே ஒரு முறை கோயிலில் வைத்து பேசலாம்.,என்றனர்

          கோயிலில் வைத்து ஜாதகம் பார்த்து தேதி குறிக்கும் போது தான் மீராவை முதல் முதலாக பார்த்த அப்பெண்ணின் தாயார்., “எங்கள் மகனுக்கு உங்கள் பெண்ணை கல்யாணம் செய்து தர முடியுமா“.,  என்று கேட்டார்.

          முதலில் பெரியவர்கள் தயங்கினர்.,  “அவள் இப்பொழுது தான் படித்துக் கொண்டிருக்கிறாள்., படிப்பு முடியட்டும்“., என்று சொன்னார்கள்.

          மிகவும் வற்புறுத்தி கேட்டதோடு பெண் கொடுத்து பெண் எடுப்பது போல இருக்கட்டும் என்று சொன்னார்கள்.

              அவர்களும் சரி திருமணத்தை படிப்பு முடிந்த பிறகு வைத்து கொள்ளலாம்., மகளின் திருமண தோடு நிச்சயதார்த்தத்தை மட்டும் வைத்துக்கொள்வோம்.,  என்று பேச அனைவரும் சம்மதித்தனர்.

           ஆனால் மீராவோ., ” நான் சின்ன பொண்ணு எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க நினைக்கிறீங்க.,  என் படிப்பே  முடியல., அதுக்குள்ள ஏன் அவசரப் படுறீங்க“.,  என்று கோபப்பட்டாலும் தன் தாய் தந்தை தனக்கு நல்லது தான் செய்வார்கள் என்ற எண்ணத்தோடு வேறு வழியின்றிஎனக்கு கல்யாணத்துக்கப்புறம் படிக்க சம்மதிப்பார்களாஎன்று கேளுங்கள்

       என்று ஆயிரத்தெட்டு கண்டிஷன் களோடு சொல்லிக்கொண்டிருந்தாள்.

     ஆனால் முழு மனதோடு சம்மதிக்காமல் புலம்பிக் கொண்டிருந்தாள்.

       மீராவின் அண்ணன் தான்.,  நான் பேசுகிறேன் பாப்பா.,  நீ டென்ஷன் ஆகாம இந்த வருஷம் படிப்ப முடி“.,  என்று சொன்னான்.

          மனமில்லாமல் சரி சரியென்று தலையாட்டி இருந்தாள்.,

           எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டிருக்க., ஒருநாள் திடீரென வந்து நின்றவள்.,  “இல்ல எனக்கு இந்த கல்யாணமே வேண்டாம்., கல்யாணம் பண்ணி வைக்க கூடாது“., என்று பிடிவாதமாக இருந்தாள்.

     அனைவரும்ஏன் எதற்குஎன்று கேட்டனர். இன்னும் ஒரு மாதத்திற்குள் அவனின் திருமணம்., அன்றே நிச்சயதார்த்தம் என நாள் குறித்து இருந்தனர்.

       இவள் முடியவே முடியாது என்று பிடிவாதமாக நின்றாள்.

        “ஏன் பாப்பாகடைசி நேரத்தில் பிடிவாதம் பிடிக்குற“., என்று கேட்டான் மீரா அண்ணன்.

         “அது தான் ஏற்கனவே சொன்னேனே“., என்றாள்.

      “இல்ல இந்த வருஷம் படிப்ப முடி ன்னு  சொல்லியாச்சே“.,  என்றான்.

       “நான் தான் முதலில் சொல்லிட்டேனே., அது மட்டும் இல்லாமல் ஒரு வருஷம் முன்னாடியே தான் சொல்றேன் இல்ல.,  எனக்கு வேண்டாம் னா வேண்டாம்“., என்று அடம் பிடித்தாள்.,

         இவனோசின்னப்பிள்ளை மாதிரி அடம் பிடிக்கிற“., என்று கேட்டான்.

          “அப்ப என்னை சின்ன பிள்ளையா நடத்தாதீங்க., உங்க இஷ்டத்துக்கு நான் இருக்கனும்ன்னு எதிர்ப்பார்க்கதீங்க.,  மத்ததெல்லாம் சின்னப்பிள்ளை மாதிரி.,  நீ சின்னபுள்ள ன்னு சொல்லுறீங்க இப்போ மட்டும் எதுக்கு கல்யாணத்தை பேசுறீங்க“.,  என்று கத்தினாள்.

      .அவள் கண் கலங்கிஎன்னால் திருமணம் செய்து கொள்ள முடியாதுஎன்று சொன்னாள்.

     அதற்கு மேல் அவளை கட்டாயப்படுத்த மனமில்லாத மீராவின் அப்பாசரி மீரா கல்யாணம் வேண்டாம்., அந்த பேச்சை விடு“., என்று சொன்னார்.

        தன் தந்தையின் தோளில் சாய்ந்தவள்., “தேங்க்ஸ் பா“., என்று மட்டும் சொன்னாள்.

           அதன் பிறகு அவர்கள் வீட்டிற்கு தெரியப்படுத்தினர்., மீராவின் அண்ணன் மனைவியாக வந்த வர இருந்த பிரகதி தான் பயங்கரமாக கோபப்பட்டாள்.,

     “அது எப்படி முடியாதுன்னு சொல்லுவா., எங்க அண்ணன கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லுவாலாம்., நான் மட்டும் உங்களை கல்யாணம் பண்ணிக்கனுமா“., என்று கேட்டாள்.

          அதையே  கேட்டு சண்டை பிடிக்க.,  அதையே அவனும் பேசினான்.,

       மீரா தான்., “நீங்க இரண்டு பேரும் லவ் பண்றீங்க தானே.,  அப்ப கல்யாணம் பண்ணிக்கோங்க., என்னமோ  நான் என்ன உங்க அண்ணன் லவ் பண்ணுறேனா சொன்னேன்.,  இல்ல தானே., இல்ல  உங்க அண்ணன் என்னை லவ் பண்றேன்னு சொன்னாங்களா.,  தேவையில்லாம பேசாதீங்க“., என்று சொல்லி இருவரையும் சேர்த்து கத்தி விட்டாள்.

          அதன் பிறகு அமைதியானவர்கள்.,  “அது மட்டுமல்லாமல் உங்களுக்கு இஷ்டம்னா கல்யாணம் பண்ணுங்க., நீங்க தான்  லவ் பண்ணுனீங்க“., என்று சொன்னாள்.

     அதே போல  “நீங்க லவ் பண்ணலை ன்னு சொல்லுங்க., நான் எங்க அப்பாட்ட பேசுறேன்“., என்று சொன்னாள்.

          அவளும் எப்படியாவது தன் அம்மாவின் ஆசைப்படி., இவளை மருமகளாக கொண்டு சென்றுவிட வேண்டும் என்று நினைத்திருந்தாள்.,

          இவள் முடியவே முடியாது என்று சொன்னவுடன்., நிச்சயதார்த்தம் நிறுத்தப்பட்டது., அதில் பிரகதி என் குடும்பத்திற்கு சற்று வருத்தம் தான் என்றாலும்.,

        அவள் திமிர் பிடித்தவளாக இருக்கிறாள்., என்று பரவி விட்டிருந்தனர்., அவள் மேல் கோபமாக இருந்தனர்., மீராவின் அண்ணனுக்கு  தன் மனைவியாக வருபவளின் கோபம் புரிந்தாலும்., கண்டு கொள்ளாமல் சரி விடு., அவ சின்ன பிள்ளை அப்படிங்கும்  போது நாங்க கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வைக்க முடியாது“.,  என்று சொன்னான்.,

     அதற்கு மேல் அவளை பேசவிடாமல் வைத்திருந்தான்., அதன் பிறகு இருவரும் அதைப் பற்றி பேசிக் கொள்வதில்லை.,

     மீராவின் தந்தை சொன்னது போலவே திருமணம் முடிந்து மறுவீடு சாஸ்திர சம்பிரதாயங்கள் முடித்த உடனேயே மகனையும் மருமகளையும் தனிக்குடித்தனம் வைத்தார்.,

       அண்ணியின் பேச்சுவார்த்தை குத்தலாக இருந்தது., அது மட்டும் அல்லாமல் எப்போதும் இவளிடம் முகம் திருப்புவதாகவே இருந்தாள்.,

        ஏனெனில் அவர்களின் பேச்சும் நடவடிக்கையும் அப்படியிருந்தது.,  ‘நல்லவேளை மீரா திருமணம் செய்து கொடுக்கவில்லை‘., என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டார்.

       ஆனாலும் அனைவருக்கும் நிச்சயதார்த்தம் நிறுத்தியதை  தான் சொல்லிக் காட்டுகிறார்கள் என்பது புரிந்தது., இவள் கண்டுகொள்ளாமல் இருக்க முதல்முறையாக வீட்டிற்கு சீர்செய்ய வந்திருந்தனர் பிரகதியின் பெற்றோர்.

    அப்போதும் வீட்டிலுள்ளவர்கள் மீராவை மட்டும் ஒதுக்குவது போல கண்டு கொள்ளாமலிருந்தனர்.,

        மீராவோ எதைப்பற்றியும் கண்டு கொள்ளாமல் வீட்டின் பின் வாசலில் போய் அமர்ந்து கொண்டாள்.,

         அங்கு மீராவின் தாய் விஷேச நாட்களில் தன்  உதவிக்காக ஒரு பெண்மணியை மட்டும் வேலைக்கு வரச் சொல்வார்., எப்போதாவது வரும் அந்த  பெண்மணியை.,  அன்று விருந்தினர்கள் வருவதால் வர சொல்லியிருந்தார்.,

         பின்புறம் அமர்ந்து அந்த பெண்மணி பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்தார்.,  இவளும் அந்த இடத்தில் அவர்களோடு அமர்ந்து கதை பேசிக் கொண்டிருந்தாள்.,

           அப்போது மீராவின் அண்ணி ஆகியவள்., அந்தப் பக்கமாக போகிற போக்கில்இப்படி குறைந்தவங்க கூட உட்கார்ந்து கதை பேசுவது தான் இவ வழக்கம் போல..,  அதனால தான் எங்க வீட்டு ஆட்களை எல்லாம் பிடிக்கல போல.,

      எங்க வீட்டுக்கு வர்றதுக்கு ஒரு தகுதி தராதரம் வேணும்., அதெல்லாம் உன்கிட்டே இல்ல., வெறும் அழக வச்சு என்ன பண்ண“., என்று சொல்லி பேசிக் கொண்டே போக.,

         மீராவின் அக்காவிற்கு கோபம் வந்துவிட்டது., “யாரை பார்த்து என்ன பேசுறேன்னு தெரிஞ்சுதான் பேசுறியா.,  தகுதி தராதரம் எல்லாம் பார்த்து கல்யாணம் பண்ணனும் நினைக்கிறவ எதுக்கு என் தம்பியை லவ் பண்ணி  கல்யாணம் பண்ணின., தகுதி தராதரம் பார்த்து லவ் பண்ண வேண்டியது தானே“., என்று கேட்டாள்.

       “தேவையில்லாம பேசாதீங்க“., என்று அவளும் பதில் பேசினாள்.

    அதே நேரம் மீரா அண்ணன் வந்து விட பேச்சு அத்தோடு நின்றது.,

           மீராவின் அக்கா தான்., “ஏன் தேவையில்லாம என்ன எல்லாம் பேசுறாங்க“., என்று சொன்னார்.

      “பேசினா பேசிட்டு இருக்கட்டும்.,  அவங்க இப்ப பேசுவதனால் என்ன ஆகப் போகுது., ஒன்னும் இல்ல தானே., நடக்குறது எல்லாம் நல்லதுக்கு நினைத்துக்கோங்க.,  எப்பவுமே  நம்ம சில விஷயங்களை எல்லாம் அஜெஸ்ட் பண்ணி போக முடியாது“.,  என்று சொன்னாள்.

       ஏண்டி அப்பா அம்மா சரி சரி ன்னு சொல்ல போய் தானே., நீயும் சரின்னு சொன்ன., அப்புறம் என்ன இப்ப மட்டும் வேண்டாம் ன்னு சொல்றே“., என்று கேட்ட அக்காவை.,

        மீரா நேருக்கு நேராக கண் கொண்டு பார்த்தாள்., அவளின் கண்ணில் ஏதோ சொல்ல விரும்புவது தெரியஎன்னஎன்று கேட்டார்.,

     “அப்புறமா சொல்றேன்“., என்று மட்டும் சொல்லி விட்டு அமைதியாகி விட்டார்.

        சீர்செய்து அவர்கள் கிளம்பவும் மீராவின் அம்மாவும் சற்று வருத்ததோடு தான் பேசிக் கொண்டிருந்தார்கள்., அப்படி நடந்திருந்தா நம்மளும் கல்யாணத்திற்கு தேவையானதை பார்த்திருக்க வேண்டியது இருக்கும்“.,என்று மீராவின் அம்மா பெருமூச்சோடு சொன்னார்.

       மீராவின் அப்பா தான்தேவை இல்லாம பேசாத., புடிக்கலைன்னு சொல்லி நின்னு போச்சு.,  இனிமேல் திரும்ப திரும்ப அதைப் பத்தி பேசாத“.,  என்று சொன்னார்.

           “இல்ல நம்ம இப்ப சரி ன்னு சொன்னாலும்., பிரகதி வீட்டில உடனே கல்யாணம் பண்ண பேசிருவாங்க தெரியுமா“., என்று சொன்னார்.

         மீரா அவள் தந்தையை பார்க்க.,  அவரோபிள்ளைக்கு பிடிக்கலன்னு சொல்லுறா., இதுக்கு மேல பேசாத“., என்று சத்தம் போட அத்தோடு அப்பேச்சு முடிந்தது., ஆனால் அவ்வப்போது அம்மா அவளை இதை சொல்லி திட்டுவதுண்டு.,

       இவற்றை நினைத்துக்கொண்டிருந்த மீராவின் அக்காவோ.,  ‘குருவி தலையில் பனங்காய் போல., யார் யாரோ செய்தவைக்கு எல்லாம்.,  என் தங்கை தான் எத்தனை பாரம் சுமந்தாள்.,  எத்தனை அவ சொல்லையும்., திட்டையும் ஏற்றுக் கொண்டாள்., இதெல்லாம் இப்படி போவதற்கு தானா‘.,  என்று நினைத்துக்கொண்டாள்

          அன்று மாலை மொட்டைமாடியில் வைத்து தான் மீரா தன் அக்காவிடத்தில் சொன்னாள்.,

        “நான் வேண்டாம்னு சொன்னேன் இல்ல.,  அன்னைக்கு அண்ணியோட அண்ணா காலேஜ் வந்திருந்தாங்க.,  வந்தவங்க ஆபிஸ் ரூம்ல சொல்லி பார்க்கணும் னு சொல்லியிருக்காங்க.,

      வாட்ச்மேன் கிளாஸ்க்கே வந்துட்டாரு.,  மேம் கூட யாருன்னு கேட்டாங்க., ரிலேஷன் மட்டும் ன்னு தான் சொன்னேன்., எதுக்கு இங்க வந்து இருக்காங்க ன்னு கேட்டு சத்தம் போட்டாங்க..,

        நான் தெரியலை மேடம் என்னன்னு கேட்டு வரேன் அப்படின்னு சொல்லிட்டு.,  போகவா ன்னு கேட்டேன்.,  போ அப்படின்னு சொன்னாங்க.,

        அங்க போய் கேட்டா., அவங்க யாரோ ஒரு பொண்ண லவ் பண்றதாகவும்.,  அதனால கல்யாணத்தை நிறுத்தனும்., நீ எப்படியாவது சொல்லி நிறுத்திரு.,

        ஏன்னா  நான் எங்க வீட்ல சொன்னா நிறுத்த மாட்டாங்க., எங்கம்மா அடம் பிடிப்பாங்க.,  என் தங்கச்சி மிரட்டுவா.,  அதனால என்னால அவங்க கிட்ட பேச முடியாது., சோ எப்படியாவது நிறுத்த வழியை பாரு ன்னு சொன்னாங்க.,

        நான் சொன்னேன்., இதுல எல்லாம் எங்க வீட்ல என்னால பேசக்கூட முடியாது அப்படின்னு சொன்னதற்கு., இது உன் வாழ்க்கை பார்த்துக்கோ.,

       என்னால உன்ன எல்லாம் கல்யாணம் பண்ணிக்க முடியாது.,  அது மட்டும் இல்லாம நான் அந்த பொண்ண யாருக்கும் தெரியாம ஆல்ரெடி ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிட்டேன்., அப்படி இருக்கும் போது இப்ப நான் உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டா.,  நீ என்னோட ரெண்டாவது வைஃப் என்கிற பெயரில் தான் வருவ.,

          வீட்டோட கட்டாயத்துக்காக நான் கல்யாணம் பண்ணிட்டேனா., உன்னை இரண்டாவது வொய்ப் சொல்ற மாதிரி ஆயிடும்., இது தேவையா அப்படின்னு சொன்னாங்க.., அதை கேட்கும் போதே கேவலமா இருந்துச்சு“., என்றாள்.

     “இது எல்லாம் அப்பவே சொல்லிருக்க வேண்டியது தானேஎன்றார் அக்கா.

        தன் மேல  தப்ப வச்சிட்டு வந்து பேசுறத பாத்தியா., இதுதான் லைஃப் கா.,  அண்ணி ட்ட இதப் பத்தி இப்ப நான் சொல்றதுக்கு ரொம்ப நேரம் ஆகாது.,

         ஆனால் இது  நமக்கு எதுக்கு தேவையில்லாத வேலை ன்னு தான் நான் சொல்லல., ஆனா அவங்களுக்கு அவங்க அவங்க நினைச்சது நடக்கல.,  சோ அவங்க அவங்க கோபத்தை இப்படி காட்டிட்டு போறாங்க.,

      என்னால அவங்க சொன்னதற்காக எல்லாம் எதையும் மாத்திக்க முடியாது.,  ஜஸ்ட் இதுதான் உறவுகள்., கண்டுக்காம போகனும் இல்லை மூஞ்சி காட்டிட்டே இருப்பாங்க.,  காட்டிட்டு போகட்டும்.,  அதற்காக வருத்தப்பட போறது இல்ல.,

        நம்ம வீட்லயா வந்து இருக்காங்க.,  அவங்க தனியாதானே இருக்காங்க.,  நல்லது கெட்டது க்கு கூட வர மாட்டாங்க.,  எனக்கு தெரிஞ்சு கல்யாணம் முடிஞ்சு இந்த மூணு மாசத்துல இன்னைக்கு தான் வந்து இருக்காங்க., மத்தபடி அண்ணன் மட்டும் தானே வந்து எட்டிப் பார்த்துட்டு போகுது., அப்புறம் எதுக்கு பேசாம இருக்கா.,  நம்ம யார்கிட்டயும் போய் எதுக்கும் நிக்க போறது இல்ல.., அப்புறம் என்ன“.., என்று சொன்னாள்.

        முதன் முதலாக தன் தங்கையை பெருமையாக உணர்ந்தாள்., ‘மீராவிற்கு  இருக்கிற புத்திசாலித்தனம் யாருக்கு தான் இருக்குதுஎன்று யோசித்துக் கொண்டவள்.,  “இதை அம்மா., அப்பா ட்ட சொல்லலாமே“., என்று கேட்டாள்.

      “வேண்டாம்னு சொன்னா.,அண்ணன் காதுக்கு போகும்., அண்ணன் காதுக்குப் போனா அண்ணிட்ட போகும்., அப்புறம் இதை வச்சு அவங்க வீட்ல சண்டை வந்தா அதுக்கு காரணம் நான் தான் ன்னு நினைப்பாங்க., என் மேல கூட கொஞ்சம் அவங்களுக்கு கோபம் வரும்., தேவையா இதெல்லாம்.,  என்ன பண்ணிட்டுப் போறாங்க..,

     ரிஜிஸ்டர் மேரேஜ் வீட்டுக்கு தெரியாம பண்ண தெரிஞ்சா மட்டும் போதுமா., வீட்டில் காதல் பண்ணுறத சொல்ல தெரியாதா.,  தங்கச்சிக்கு லவ் மேரேஜ் தானே., நடந்து இருக்கு,

      அப்போ அவனோட லவ்வ சொல்றது க்கு என்ன செய்து., இவ்வளவு பயப்படுறவன் எல்லாம் லவ் பண்ண கூடாது“. என்று சொல்லிக் கொண்டிருந்தாள்

       “யாரும் எப்படியும் போகட்டும்என்றவர்.,  சிரித்தபடிஉன் குணத்துக்கு எல்லாமே நல்லதா தான் நடக்கும்“., என்று சொன்னாள். அக்கா.

            “நடக்குறது எல்லாம் நன்மைக்கே ன்னு நினைக்கனும் க்கா“., என்றாள்.

     “அதுவும் உண்மை தான் கண்ணு.,  உனக்கு ஒருத்தன் இனியா  பொறக்க போறான்., எங்கே பிறந்திருந்தாலும் வருவான் பாரு“., என்று சொன்னார்.,

         அவளோவருவான் வருவான்., பறந்து வருவான்“., என்று சொல்லி கிண்டல் செய்து கொண்டிருந்தாள் மீரா.

     அதை எல்லாம் இப்போது நினைத்துப் பார்த்தவளுக்குஅப்படி ஒருவன் வருவதற்கு வாய்ப்பே இல்லாமல் போய் விட்டாளே‘., என்று நினைத்து கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள்.

      “விதி இவ்வளவு தான் என்றிருக்கும் போது., நாம் திட்டங்கள் போட்டு என்ன பயன்”.

      “காலம் போடும் கணக்கை இறைவனை தவிர யாராலும் மாற்ற முடியாது.. அதனால் நல்லதை நினை.. நல்லதை செய்.. மற்றதை இறைவன் பார்த்துக் கொள்வான்”.

Advertisement