Advertisement

2

      மீட்பு பணி தீவிரமாக நடந்து கொண்டிருந்தது.,  ஓரளவுக்கு மாணவ மாணவிகளை நல்லபடியாக காப்பாற்றிவிட்டனர்  பேராசிரியர்களில் ஒருவர் காலமானார்.,

           பஸ் டிரைவர் அதிக காயம்பட்ட கண்டிஷனில் இருந்தார்., அப்போதும் பேராசிரியர் மறைவிற்கு காரணம் இதுபோன்ற ஆக்சிடெண்டில் ஏற்படும் திடீர் நெஞ்சு வலி தான்.,

         அவர் சற்று வயது கூடியவர் அது மட்டும் இல்லாமல் சுகர் பேஷன்ட் என்பதால்., அவருக்கு நெஞ்சுவலி வந்ததை யாரும் அறியவில்லை.,

            அனைவரும் இழுத்து காப்பாற்றப்பட்டு மண் சரிவில் இருந்து அனைவரும் சற்றே ஒதுங்கி நிற்கும் போதுதான் அவர் நெஞ்சை பிடித்துக்கொண்டு சரிந்து விட்டார்.,

        மாணவ மாணவிகள் அடிபட்டு ஆஸ்பத்திரியில் இருக்க ஒரு சிலர் மட்டும் தான் எந்த காயங்களும் இல்லாமல் தப்பி இருந்தனர்., ஆனாலும் விபத்தின் அதிர்வு அவர்களுக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்க அனைவருமே மருத்துவமனையில் தான் இருந்தனர்.,

          கல்லூரிக்கு இங்கிருந்து பேராசிரியர்கள் விஷயத்தை தெரிவித்து விட கல்லூரி நிர்வாகம் யார் யார் சுற்றுலா சென்றார்கள் என்று கணக்கெடுத்து.,  அவர்களுடைய பெற்றோர்களுக்கு எல்லாம் தகவல் தெரிவித்திருந்தனர்.,

          பெற்றோர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் பிரச்சனை நடந்த இடத்திற்கு வந்து சேரவே இரண்டு நாட்களுக்கு மேல் ஆகி இருந்தது.,

       ஏனெனில் ஒரு நாள் மழையிலேயே ஆங்காங்கு மண்சரிவு.,  பாறை உருண்டு ஆங்காங்கே பாதை அடைப்பட்டு இருந்தது.,
       அது மட்டும் இல்லாமல் மழைத்தண்ணீரின் வெள்ளம் போன்ற வேகம் அதிகமாக இருந்ததாலும் எதுவும் செய்ய முடியவில்லை.,

       அவர்கள் வருவதற்கு இரண்டு நாள் ஆகிவிட யாருக்கும் மீரா அங்கு இல்லாதது தெரியாது., இங்கு வந்த பிறகு சொல்லிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் பேராசிரியர்கள் அவளைத் தேடிக் கொண்டிருந்தனர்., ஒரு வேளை அதற்குள் கிடைத்து விட்டால் என்ற எண்ணத்தோடு.,

           பெண் பேராசிரியர்கள் இருவர் மாணவமாணவிகளுக்கு துணையாக மருத்துவமனையிலேயே இருந்தனர்.

         ஒரு பேராசிரியர் மாரடைப்பில் காலமாகி விட மற்றொரு பேராசிரியர் அங்கு இருந்த போலீஸ்காரர்களுடனும்.,  சுற்றுலா வழிகாட்டியுடனும்.,  அது மட்டுமல்லாமல் அங்கு இதுபோல பள்ளத்தில் இறங்கி காணாமல் போனவர்களை தேடுபவர்களும் சேர்ந்து அலைந்து கொண்டிருந்தனர்.

        பேராசிரியர்களுக்கும் ஆக்சிடெண்டில் நல்ல அடி தான்., ஆனால் அவர்கள் அவர்களுடைய வலியை பார்க்க முடியாது அல்லவாதங்களை நம்பி அனுப்பிய பெற்றோர்களையும் தங்களின் மாணவமாணவிகள் எல்லோரையும் பிள்ளைகள் போல பார்ப்பவர்கள் அல்லவா..,  அவர்களை பார்ப்பதை விட வேறு என்ன., என்ற எண்ணத்தோடு தான் தங்கள் வலியை பொறுத்துக் கொண்டு தேடிக் கொண்டிருந்தனர்.,

       கை காலில் எலும்பு முறிவு என்று நிறைய மாணவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.,

        எப்படியும் அவரவர் பெற்றோர்கள் வந்தவுடன் அவர்கள் கையில் ஒப்படைத்து விட வேண்டும் என்ற எண்ணத்தோடு காத்திருந்தனர்.,

       பேராசிரியர்களின் வீட்டிற்கும் தகவல் தெரிவித்ததால் அவர்களும் வந்து கொண்டிருந்தனர்.,

       இரண்டு நாட்கள் ஆன நிலையிலும் மீராவை கண்டுபிடிக்க முடியவில்லை உள்ளே டீ எஸ்டேட்டின் பள்ளத்தாக்கில் இறங்கியவர்கள்., “அந்த இடத்திலிருந்து யாரும் இல்ல., எஸ்டேட்டில் வேலை பார்க்கிறவங்க., எஸ்டேட் ஓனர்  எல்லார்ட்டையும் சொல்லிட்டு வந்திருக்கோம்.,

        அவங்க சொல்றாங்க மழை ஜாஸ்தி பெய்தா.,  மழை தண்ணி அடிச்சு கொண்டு போயிரும்.,  அப்படியே யானையா இருந்தாலும் இழுத்துக் கொண்டு பேயிரும் இந்த மழையில் வரும் வெள்ளத் தண்ணி“., என கூறியவர்கள்.,

     இந்த இடத்தில் தண்ணியோட இழுப்பு அதிகமா இருக்கும்., அதனால இழுத்துக்கொண்டு பேயிருக்கும்., கீழ இருக்குற இடத்துல போய் தேடினால் தான் உண்டு.,

           ஆனா நீங்க சொல்றது பார்க்கும் போது., பொழச்சி இருக்க வாய்ப்பு இல்லஎன்று சொல்ல அனைவரும் பதட்டத்தோடு இருந்தனர்.,

        இரண்டு நாட்களில் கிடைக்கவில்லை எனும் போது கிடைப்பதற்கு இனி சாத்தியமில்லை.,  என்ற நிலைக்கு வந்திருந்தார்கள்., இரண்டு நாளில் பெற்றவர்களும் வந்து சேர்ந்திருந்தனர்.

            அதுவரை மீராவை தேடிக் கொண்டிருக்கிறோம் என்று சொன்ன போலீஸ்காரர்கள்., மருத்துவமனையில் வைத்துஅந்த பெண்ணின் உடம்பு கூட கிடைக்கவில்லை“., என்று மட்டும் சொல்ல மீராவின் அம்மா அங்கேயே மயங்கி சரிந்து இருந்தார்.

       சக மாணவ மாணவிகளின் அழுகையும்.,  பேராசிரியர்களின் அழுகையும் தவிர வேறு சத்தம் இல்லை.,

       மாணவமாணவிகள் அதிர்ச்சியோடு  மீரா என்று சத்தம் கொடுக்க., அவள் நெருங்கிய தோழியும் அங்கேயே மயங்கி சரிந்தாள்.

            “எத்தனை எத்தனை கனவுகள்., துறுதுறுப்பு அத்தனையும் நொறுங்கி போனதே“., என்று பேராசிரியர்கள் சொன்னதோடு.,

    “நன்கு படிக்கும் மாணவி இப்படி ஆகும் என்று எதிர்பார்க்க வில்லையே“.,  என்றனர்.

        அங்கு டிரிட்மெண்ட் நடந்து சற்று உடல்நலம் தேறியிருந்த பஸ் டிரைவர்.,  “ஏறும் போது கூட சிரித்தபடி சந்தோஷமாக கேலியும் கிண்டலுமாக ஏறிய பிள்ளை அல்லவா“., என்று சொல்லி புலம்பினார்.  

         இரண்டு நாளில் ஓரளவுக்கு மாணவ மாணவிகள்., தெரிந்திருந்ததால் ஆளாளுக்கு சொல்லி புலம்பிக் கொண்டே இருந்தனர்.,  மற்ற பெற்றவர்களோ வருத்தம் தான் இருந்தாலும் தங்கள் பிள்ளைகளை பிழைத்துக் கொண்டார்கள் என்ற எண்ணத்தோடு ஆளாளுக்கு காரும் வேணும் பிடித்து பிள்ளைகளை வீட்டிற்கு அழைத்து செல்ல முற்பட்டனர்.,

     ஏனெனில் கை., கால் முறிவில் இருந்த பிள்ளைகளை வைத்துக் கொண்டு தெரியாத இடத்தில் என்ன செய்ய., ஊருக்கு சென்றாலவது பார்த்து கொள்ளலாம்., என்ற எண்ணத்தோடு..

        அப்போதும் மீராவின் பெற்றோர்இன்னொருமுறை தேடலாமா“., என்று போலீஸ்காரரிடம் கேட்டனர்., அவருக்கும் தெரியும் தானே இருந்தும் அவர்கள் திருப்திக்காக., மீண்டும் தேடுதல் வேட்டை தொடர்ந்தது.,

        அப்போதும் மீராவின் அண்ணனும் முடிந்தளவுக்கு மற்றவர்களோடு சேர்ந்து தேடியும் கிடைக்காததால் அங்குள்ள எஸ்டேட் தொழிலாளிகளிடம் கேட்டனர்.

            “சில சமயம் இந்த மாதிரி மண்சரிவு சரி பண்ணும் போது உடம்பு கிடைக்கும் அப்படி இல்ல., அப்படின்னு சொல்லி ஆச்சுனா, மழை பெஞ்ச வேகத்துக்கு தண்ணி ஜாஸ்தியா ஓடுச்சு., ஒருவேளை தண்ணி எடுத்துட்டு போய் இருந்ததுனா ஒண்ணுமே பண்ண முடியாது சார்., இந்த பக்கம் காட்டாற்று வெள்ளம் மாதிரி போகும் போது மாட்டினா., உடம்பு கிடைக்கிறது கஷ்டம்.,  இந்த மாதிரி நாங்க எத்தனையோ பார்த்திருக்கோம் சார்., இழப்பு தான்., வேற வழி இல்லை.,

       நீங்க நினைக்கிற மாதிரி கிடையாது எல்லாருக்கும் பார்க்க சாதாரணமா தெரியும்., அழகான இடத்தில் இருக்காங்க.,  இப்படித்தான் சார் நினைப்பாங்க., இந்த இடத்தில் அவ்வளவு ஆபத்து இருக்கு.,

     உடம்பு கிடைச்சா அட்லீஸ்ட் கடைசியாக முகத்தைப் பார்ப்பதற்கு கொடுத்து வச்சிருக்கு ன்னு நினைச்சுக்கோங்க.,  கிடைக்கலன்னா இந்த மண்ணுக்குச் சொந்தம் ஆயிட்டா ன்னு நினைச்சுக்கோங்க., அவ்வளவு தான் சார் அது மட்டும் இல்லாம உள்ளே தள்ளி போகப்போக காடு., அந்த காட்டுக்குள்ள உடம்பை தண்ணி இழுத்துட்டு போய் இருந்தாலும் நரி சிறுத்தை எல்லாம் இருக்கும் ன்னு சொல்லுவாங்க கிடைக்கிறது கஷ்டம் சார்., ரொம்ப யோசிக்காதீங்க“.,  என்று சர்வ சாதாரணமாக சொல்லிவிட்டு சென்றார்.

       அழத் தொடங்கிவிட்டனர் குடும்பத்தினரும், நண்பர்களும்., அதற்குள் தகவல் தெரிந்து மீராவின் அக்கா குடும்பம்., அண்ணன் மனைவி என அனைவரும் வந்து இருந்தனர்.,

       இங்கு மேலும் ஒரு வாரம் இருந்து தேடியவர்களுக்கு எந்த தகவலும் வராததால்., அனைவரும் ஊருக்கு கிளம்பலாம் என்ற எண்ணத்தோடு இருத்தனர்.,

      பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் போகாமல் இருந்தவர்கள் என அனைவரும் சேர்ந்து கிளம்பத் தொடங்கினர்., அவர்களெல்லாம் ஆளாளுக்கு தனித் தனி வாகனத்தில் கிளம்பினர்., இவர்களும் ஒரு காரை பிடித்து கிளம்பி இருந்தனர்.

        ரொம்ப அதிக சீரியஸ் கண்டிஷனில் இருந்த சிலர் மட்டும் அங்கே இருந்தனர். அவர்களோடு பெற்றோர்கள் இருந்தனர்.

     ‘ஏதோ தங்கள் பிள்ளை இந்த அளவுக்கு பிழைத்தது‘., என்று நினைத்து அவர்கள் மனதை தேற்றிக் கொண்டனர்.

     பவியோ அமைதியாக இருந்தாள்., மீராவின் மறைவுக்கு  பின்பு யாரிடமும் பேசாமல் அமைதியாக ஒதுங்க.,  மற்றவர்கள் தான்ஏன்டி இப்படி இருக்கஎன்று சொல்லி அவளை மாற்றும்படி இருந்தது.,

       அவளோஅவ ஜன்னலோர சீட் கேட்டா.,  நான் ஒருவேளை ஜன்னலோர சீட் போகாமல் இருந்திருந்தா.,  அவ அந்த படிப்பக்கம் இறங்கி இருக்க மாட்டா., கடைசி படி  வரை இறங்கி ஒரு தடவை போயிட்டு வந்தா., திருப்பி என் பக்கத்தில் வந்து உட்காரும் போது சரியாக உட்காரலை., எட்டி எட்டி பார்த்திட்டே இருந்தா., ஒழுங்கா உக்கார்ந்து இருந்தா.,  கூட கீழே விழுந்து இருக்க மாட்டா இல்லை“., என்று புலம்பினாள்.

        “அதெல்லாம் ஒன்னும் இல்ல., நீ பேசாமல் இரு“., என்று சொல்லி பேராசிரியர்கள் சத்தம் போட்டு அவளை சமாதானம் செய்தனர்.

      அதே நேரம் அவளுக்கு மன ரீதியாக ஏதும் பாதிப்பு வந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் அவளுக்கு கவுன்சிலிங் கொடுத்து அனுப்பி வைத்தனர்.

         எப்படியும் மாணவ மாணவிகள் உடல் தேதி கல்லூரிக்கு வர நாளாகும்., என்பதால் அதை கல்லூரி நிர்வாகத்திடம் தெரிவித்தனர்.

        அவர்கள் நல்லபடியாக திரும்பி வரவேண்டும் என்ற வேண்டுதலோடு கல்லூரி நிர்வாகம்., அவர்கள் உடல்நிலை சரியாகும் வரை கல்லூரிக்கு விடுப்பு எடுத்துக் கொள்ள அனுமதித்தது.,  ஓரளவுக்கு நன்றாக இருப்பவர்கள் கல்லூரிக்கு வர வேண்டும் என்று சொன்னதோடு., பேராசிரியர்கள் தங்கள் நிலை சரியாக பின்பு வரட்டும்“., என்று சொன்னார்கள்.

    வயதான பேராசிரியர் ஏற்கனவே அவர் உடல் நலம் சரியில்லாதவர் தான் என்ற காரணத்தினால் வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் மீராவை தான் நினைத்துக் கொண்டனர்., “எங்கே என்று தெரியாமல் கடைசி நேரத்தில் முகத்தை கூட பார்க்க முடியாமல்., பெற்றோர்கள் உடன் பிறந்தவர்களை தவிக்க விட்டுவிட்டு மறைவதற்கு பதிலாக.,  ஏதோ உடல் கிடைத்ததே‘., என்று அவர்கள் நினைத்துக் கொண்டனர்.

       சீரியஸான கண்டிஷனில் இருந்த மாணவ மாணவிகளின் பெற்றோர்களும்ஏதோ தங்கள் பிள்ளை இந்த அளவுக்கு அது தங்கள் கண்முன் வந்தானேஎன்று நினைத்துக்கொண்டனர்.,

        ஒவ்வொருவரும் அவரவர் எண்ணத்திற்கு மனதை தேற்றிக் கொண்டனர்.

        மீராவின் குடும்பம் தங்கியிருந்த இடத்திலிருந்து கிளம்பலாம் எனும் போது .,  பெற்றோர்களும் உடன் பிறந்தவர்களும்மீண்டும் ஒருமுறை தேட முடியுமாஎன்று தான் எண்ணினர்.,

       அங்கிருந்தவர்களோ என்ன தகவல் கிடைத்தாலும் சொல்கிறோம் என்று சொன்னார்கள்.,

      ‘இனி கிடைக்காது., கிடைக்கமாட்டாள் இனி உயிரோடு இருக்க வாய்ப்பில்லை.,  என்று தெரிந்தும் கடைசியாக ஒருமுறை முகத்தையாவது பார்த்து விட மாட்டோமா., என்ற எண்ணத்தில் தான்., தவிப்பில் தான்‘., மீண்டும் தேடலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது.

         ஆனால் வேறு வழியில்லாமல்சரி கிளம்புவோம்‘., என்று  பெற்றவர்கள் கண்ணீரோடு அங்கிருந்து கிளம்ப.,  உடன் பிறந்தவர்களும் தங்கள் உடன் பிறந்தவளை இழந்துவிட்டோம்.,  என்று எண்ணத்தோடு தவித்தபடி கிளம்ப தொடங்கும் போது தான்., அவள் அண்ணியும் முதல் முதலாக வாயைத் திறந்தாள்.,

        “நல்ல வேலை கல்யாணம் நடக்கல., கல்யாணம் நடந்து இருந்தா., எங்க அண்ணன் நிலை என்ன ஆகும்., எங்க அண்ணனை கடவுளா பாத்து காப்பாற்றி விட்டிருக்கான்“., என்று சொன்னாள்.

      முதல் முதலாக யாரோ போல் பார்த்து வைத்தான்.,  மீராவின் அண்ணன்.

       மீராவின் அக்காஇதுக்கு மேல நீ ஒரு வார்த்தை பேச கூடாது., தம்பி பொண்டாட்டி ன்னு எல்லாம் பார்க்க மாட்டேன்“., என்று சொல்லி வார்த்தையாக சொல்லும் போதே கண்ணில் இருந்து கண்ணீர் வடிந்தது.,


       அவள் அக்காவின் எண்ணம் முழுவதும் தனக்கு 11 வயதிற்கு பிந்தி பிறந்த தன் தங்கையின் மேல் தான் நினைப்பு முழுவதும் இருந்தது., காரின் பக்கவாட்டு இருக்கையில் அமர்ந்திருந்தவள்.,  அதன் ஜன்னலில் சாய்ந்து அத்தேயிலை தோட்டத்தை பார்க்கும் போது இங்கு எங்கோ உருவம் இல்லாமல் காற்றோடு கலந்துவிட்டாள்.,  தன் தங்கை என்ற எண்ணத்தோடும் யோசனையோடும்.,  பார்த்துக்கொண்டே இருந்தவளுக்கு.,  அவளின் ஒவ்வொரு வளர்ச்சியும்.,  அவளைப் பற்றிய ஒவ்வொரு நினைவும்., அவள் ஒவ்வொரு அடியாக உயர்ந்ததும் நினைவில் வந்து மோதியது.

           பஸ்ஸில் இருந்து மீட்கப்பட்ட அவரவர் உடமைகள் அவரவர் இடம் ஒப்படைக்கப்பட்டிருக்க., மீராவின் பையை அவர்கள் வீட்டில் ஒப்படைத்து இருந்தனர்., அதை மடியில் வைத்து கட்டிப் பிடித்தக் கொண்டிருந்த அவள் அம்மா காரில் செல்லும் போது புலம்பிக் கொண்டே இருந்தார்.,

         “ஒரே ஒரு தடவை அவ முகத்தையாவது  பார்த்து இருக்கலாம்., அதுக்கு கூட  வாய்ப்பே இல்லாமல்“.,  என்று புலம்ப.,

         “அப்பா தான் அப்படி யோசிக்காதா.,  இப்படி நினைச்சுக்கோ.,  நம்ம பிள்ளை எங்கோ  உயிரோட இருக்கா ன்னு நெனச்சுக்கோ“., என்று சொல்லி ஆறுதல் படுத்திக் கொண்டிருந்தார்.

      அவர்கள் அப்பா அம்மா  இருவரும் பேசுவதை பார்த்துக்கொண்டிருந்த.,  அக்காவுக்கும் தம்பிக்கும் கஷ்டமாகத்தான் இருந்தது.,

        அப்பா சொல்வது போல எங்காவது இருந்தால் நன்றாக இருக்குமே.,என்று தோன்றியது., ஆனால் எஸ்டேட்டில் உள்ளவர்கள் சொன்னதை பார்க்கும் போது சற்று பயமாகவும் இருந்தது.

        ஏனெனில் அவள் விழுந்து  இருப்பாள் என்று பேராசிரியர் குறிப்பிட்ட இடத்தை தேடி பார்க்கும் போது.,  அங்கு எந்தவித அடையாளமும் இல்லை.,  தண்ணீர் அடித்துக் கொண்டு சென்றதற்கான அடையாளம் தான் அதிகம் இருந்தது.,

       ஏனெனில் அங்கிருந்த தேயிலைச் செடிகள் முதற்கொண்டு வேரோடு பிடுங்கி நின்றிருந்தது.,

    அவ்வளவு அழுத்தமாக வேரூன்றியிருக்கும் தேயிலை செடிகளை.,  அந்த வெள்ளம் வேர் தெரியும் அளவிற்கு அடித்து இழுத்துச் சென்றிருக்கிறது என்றால்.,

       அங்குஅவ்வளவு உயரத்திலிருந்து விழுந்தவளுக்கு என்ன ஆகியிருக்கும் என்பதை யோசிக்க முடிந்தது., சாதாரண மனநிலையில் யோசித்தால் பிழைப்பதற்கு வாய்ப்பே இல்லை.,  என்று தோன்றினாலும்.,  உடன் பிறந்தவள் என்ற எண்ணத்தில் யோசிக்கும் போது பிழைத்திருக்கக் கூடாதா என்ற ஏக்கம் வந்தது‘.,

        மீராவின் பெற்றவர்களையும் உடன் பிறந்தவர்களையும் சமாளிப்பதே மீராவின் அக்கா கணவருக்கு பெரிய விஷயமாக இருந்தது.,

       எதுவுமே சாப்பிடாமல் மயங்கி மயங்கி கிடந்த மீராவின் அம்மாவை இப்பொழுது தான் ஏதோ தண்ணீர் ஆகாரமாக குடிக்க வைக்கும் நிலைக்கு வந்திருந்தனர்.

        இன்னும் ஊரில் போய் எத்தனை பேருக்கு பதில் சொல்ல வேண்டியது இருக்கும்.,  எத்தனை பேரை சமாளிக்க வேண்டியது இருக்குமோ.,  என்ற எண்ணம் தோன்றினாலும்., மீராவின் இழப்பை அவர்கள் குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ள சற்று தாமதம் தான் ஆகும்., என்று அவனுக்கு தோன்றியது.

            ஏனெனில் அவர்கள் குடும்பம் அப்படி தான்.,  மீராவின் அக்கா சாந்திக்கு பதினோரு வயது இருக்கும்போது மீரா பிறந்தாள்.

      அப்போது மீராவின் அண்ணனுக்கு எட்டு வயது., எனவே அவர்கள் இருவரும் பெரிய பிள்ளைகள் என்ற நினைப்போடு இருக்க.,  தங்கள் வீட்டிற்கு வந்த குட்டி குழந்தையாய் இருந்த மீராவை தங்களுக்கு கிடைத்த விளையாட்டுத் தோழியாக பார்க்காமல்.., பொம்மையாக தான் தோன்றியது.

          பெண் குழந்தைகளை பொருத்தவரை பொம்மையை கூட தாய்மையோடு அணைத்துக் கொள்ளும் என்கையில் உயிருள்ள பொம்மையாக.,  தன் குழந்தை போல பாவிக்கத் தொடங்கி இருந்தாள்.

          அவள் அண்ணனுக்கும் அப்படித்தான்.,  தங்கை தன் சொல்வதை தங்கை கேட்பாள்., என்ற எண்ணத்தோடு அவர் நினைத்திருக்க., ஆனால் அவள் அதட்டல் உருட்டலுக்கு எல்லாம் இவன் அடிபணியும் நிலையில்  இருந்திருந்தான்.


       அப்பா மத்திய அரசு உத்தியோகத்தில் அதிகாரப் பதவி.,  அம்மா இல்லத்தரசி., அவர்களுக்கு இவர்கள் மூவரும் குழந்தைகள்., மீராவின் அக்காவிற்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிவிட்டது.

      அக்காவின் திருமணத்தின் போது 12 வயதாக இருந்த மீரா., மீராவின் அக்கா கணவனுக்கும் இவள் குழந்தை போல தான்., மீராவின் அண்ணனுக்கு இதோ திருமணமாகி ஆறு மாதங்கள் தான் ஆகிறது.

    தன் தங்கைக்கு முடித்த பிறகு தான்.,  செய்து கொள்வேன் என்று சொன்னான்.,

         அப்படி சொல்லிக் கொண்டிருந்தவனை கட்டாயப்படுத்தி அவன் விரும்பிய பெண்ணை திருமணம் செய்து வைத்ததே மீரா தான்.,

       “நான் சின்ன புள்ள தானே., சின்ன பிள்ளைக்கு கல்யாணம் பண்ணினா கம்பி எண்ணனும்  உனக்கு தெரியாதா“., என்று சொல்லி அவனிடம் திருமணத்திற்கு சம்மதிக்க வைத்திருந்தாள்.,

     ஆளாளுக்கு அவரவர் எண்ணத்தில் இருக்க.,  தங்கள் இருப்பிடம் நோக்கி அவர்கள் கார் சென்று கொண்டிருந்தது..

     சுற்றுலா கிளம்பும் போது சிறுபிள்ளைத் தனமாகஉனக்கு என்ன வேணும்.,நான் வாங்கிட்டு வரேன்.,  உனக்கு என்ன வேணும்., நான் வாங்கிட்டு வரேன்“., என்று குதித்துக் கொண்டு கிளம்பிய மீரா எங்கே.,

           ஏதோ இதுவரை சுற்றுலாவே சென்றதே இல்லை என்பது போல தன் தோழிகளோடு குதித்துக் கொண்டு கிளம்பி இருந்தாள்.,

     ஒரேடியா போவதற்கு தான் அவ்வளவு மகிழ்வாக கிளம்பினாளோ., என்ற எண்ணம் தோன்றியது.

           ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலையில் தவித்துக் கொண்டிருந்தனர்., இதை எதைப் பற்றியும் யோசிக்காத ஒரே ஜீவன் என்றால் அது மீராவின் அண்ணி மட்டும் தான்..

இழப்பு வரும் வரை யாருக்கும் அதன் வலி புரிவதில்லை

    “எல்லா உணர்வுகளையும் வெளிப்படுத்த நினைக்காதீர்கள்.. சில உணர்வுகளை மனதுக்குள் கட்டுப்படுத்தினாலே போதும்.. பல பிரச்சனைகள் சரியாகி விடும்“.,

Advertisement