Advertisement

                          நான் என்பதே நாம் தானடி

1

      ஊட்டி மலைகளின் இளவரசி என அழைக்கப்படுகிறதுஇது  நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளதுஊட்டியில் இருந்து 19 கிலோமீட்டர் தொலைவில் குன்னூர்  இருக்கிறது என்றால்., ஊட்டியில் இருந்து 31 கிலோமீட்டர் தொலைவில் கோத்தகிரி உள்ளது.

           மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் ஊட்டி., குளுமையை மொத்தமும் தனக்கே குத்தகை எடுத்தது போல குளிர்ந்து போய் இருந்தது.,

       ஒவ்வொரு துளியிலும் இயற்கையை தன்னகத்தே கொண்டு., தனக்கே இயற்கை சொந்தம் என்று இருமாந்து  இருந்தது.,

       அழகின் மொத்த உருவமாய்., அழகுகளை எல்லாம் ஒன்று கூட்டி உருவானது போல இருந்தது நீலகிரி மலை.

             அவ்விடத்தில் சுற்றுலா வருபவர்களுக்கு பஞ்சமே கிடையாது.,  என்னும் அளவிற்கு மக்கள் வந்து சென்றபடியே இருந்தார்கள்.,

        மழைகாலங்களில் தான் அங்கு ஆட்களின் வரத்து குறைவாக ஆனால் உதகையில் பெய்யும் மழையை மட்டும் எப்போதும் நம்பவே கூடாது.,

            திடீரென பெய்யும் மழை கூட நிற்காமல்., அவ்வூர் மக்களுக்கு பல பிரச்சினைகளை உருவாக்கி விடும்.,

      இதோ அவ் அழகிய உதகையில் தான் கல்லூரி சுற்றுலா வந்த சிட்டுக் குருவிகள் பறந்து திரிந்து கொண்டிருந்தன.

      தொட்டபெட்டா., நீலகிரி மாவட்டத்தில் உள்ள மிக உயரமான மலை ஆகும்இதன் உயரம் 2623 மீட்டர்கள் ஆகும்

           “ஸ்டுடென்ட்ஸ் நம்ம இன்னைக்கு தொட்டபெட்டா நிற்குறோம்., இது தான் நம்முடைய தமிழகத்திலேயே உயரமான சிகரம் சொல்றாங்க., தென் தமிழகத்தில் இரண்டாவது இடம்., கேரளாவில் இருக்கும் ஆனைமுடி தான் முதல் உயர்ந்த சிகரம்.,

     நல்லா என்ஜாய் பண்ணுங்க கானர் பக்கம் போகாதீங்க., ஜாலியா என்ஜாய் பண்ணுங்க., நாம நாளைக்கு காலையில இந்த ஊட்டிய விட்டு கீழே இறங்கி விடுவோம்“., என்று சொன்னார்.

     மாணவர்கள் என்று சோகமான ராகம் படித்தனர்.,

      மாணவிகளும்இன்னும் ஒருநாள் இருந்தா என்ன“., என்று கத்தினர்.

     அதற்கு கல்லூரியின் பேராசிரியர்களாக மாணவ மாணவிகளுக்கு துணைக்கு வந்த மூவரும்., “அது எப்படி முடியும்., காலேஜ் பெர்மிஷன் கொடுத்த டைமுக்கு தான் போயாகணும்., நாளைக்கு மார்னிங் நாம கிளம்புறோம்“., என்று சொன்னார்.

            ஒரு டிபார்ட்மென்ட் ஸ்டூடண்ட்ஸ் மட்டும் என்பதால்., ஒரே பஸ்ஸில் மாணவமாணவிகள் அனைவரையும் சேர்த்து அழைத்துக் கொண்டு வந்திருந்தனர்.,

         இதோ தொட்டபெட்டாவின் சிகரத்திலிருந்து பஞ்சு பொதியாக., பனியாக தழுவிச் சென்ற மேகக் கூட்டத்தை பார்த்தபடி இருந்த தோழிகளுக்குள்  குசுகுசுவென இரகசியம் பேச தொடங்கினர்.

          “இப்படியே இருக்கனும் போல இருக்கு., செம க்யூட்டா  இருக்கு., இந்த மாதிரி மேகம் எல்லாம் நம்மை தழுவி போற இடத்துல நின்னு., இப்படி பார்த்துகிட்டே இருந்தா எப்படி இருக்கும் தெரியுமா., அழகுன்னா அழகு இந்த மாதிரி ஒரு அழகை  எங்குமே பார்க்க முடியாது“., என்று அவள் சொன்னாள்.

       அருகில் இருந்த மாணவனும் சினிமா பாடல்களை பாட தொடங்கினான்.

        நான் இதை சொல்லியே ஆகனும்
        நீ அவ்வளவு அழகு
        இங்க எவனும்
        இவ்வளவு அழக
         இவ்வளவு அழக
         பார்த்திருக்க மாட்டாங்க.,

         என்று சொன்னான்.,

      மேகத்தை வர்ணித்து கொண்டிருந்த மீராவோயாரடா சொல்ற லூசு பயலே“. என்று கேட்டாள்.

       “உனக்கு பெரிய நினைப்பு தான்“.,  என்று அவளை சொன்னவன்.,
நான் அந்த ஊட்டி மலையை பார்த்து சொன்னேன்., சூர்யா சிம்ரனை பார்த்து தான் மட்டும் தான் சொல்லுவாரா., ஏன் நம்ம எல்லாம் ஊட்டி மலையை பார்த்து சொல்லக் கூடாதா“., என்று சொன்னான்.

      ” லூசு பயலே.,சொல்லுறதை மெதுவா சொல்லி தொலைச்சிட்டு போ., அதுக்கு ஏன் காதுக்குள் வந்து கத்தற மாதிரி.,  பின்னாடி  இருந்து கத்துற“., என்று சத்தம் போட்டாள்.

      “நீ மேகத்தை தழுவ ஆசைப்பட்டீயே., நான் வேணா தள்ளி விடவாஎன்றான் குறும்புகாரன்., அருகில் இருந்த மற்ற மாணவர்கள் சிரிக்க.,

       “அடேய் எல்லோரும் டிபார்ட்மென்ட்க்கு தான வருவீங்க“., என்றாள் மீரா., 

        “ஆத்தா பத்ரகாளி., ப்ரபஸர் யார்ட்டையும் மாட்டி விட்டுறாதஎன்று அவனும் பதிலுக்கு தணிந்து பேசினான்.

      “போய் தொல லூசு“., என்று சொல்லி விட்டு பவியோடு பேசத்தொடங்கினாள்.

       ” மீரா நீ சொன்னதுக்கு அப்புறம் யோசிச்சு பாத்த.,  எனக்கு அப்படி இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும் ன்னு தோணுதுடி“., என்றாள் பவி.

        மீராவும்ஆமாடி அப்படியே வானத்துல பறக்கிற மாதிரி இருக்கும்.,  அப்படியே மேக கூட்டங்களுக்கு நடுவுல பறந்து போனால் எப்படி இருக்கும்.,  அப்படின்னு தோணுது., அப்படியே பள்ளத்தாக்கை பாரேன் எவ்வளவு அழகா இருக்கு“.,  என்று சொன்னாள்.,

     அருகிலிருந்த மற்றொரு மாணவனும்அழகில் தான் ஆபத்து இருக்குமாம் மீரா.,  நீ வேற அழகு அழகு ன்னு., இந்த மலையை எல்லாம் காட்டி சொல்லும் போதே., எனக்கு பக்கு பக்குன்னு இருக்கு.,  ஏன்னா இந்த மலைகளில் நிறைய ஆபத்து இருக்காம்“., என்று சொன்னான்.,

         “ஏண்டா உங்களுக்கு நல்ல வார்த்தையே வராதா டா., எப்ப பார்த்தாலும் இப்படியே பேசிட்டு இருக்கீங்க“., என்று சொன்னாள்.

    அருகில் இருந்த மாணவ மாணவிகள் எல்லாம் சேர்ந்து கொண்டு ஜாலியாக அரட்டை அடிக்க துவங்க அந்த இடமே களை கட்டி இருந்தது.,

        எத்தனை தான் சண்டை போட்டுக் கொண்டாலும்., அவர்கள் வகுப்பில் மாணவ மாணவிகளுக்கு அப்படி ஒரு ஒற்றுமை., ஒருவரை ஒருவர் அடித்து பிடித்து விளையாடி போனார்கள்.,

          அவர்களுக்கு காவலுக்கு நின்ற பேராசிரியர்கள் தான்., “அந்த ஓரத்துக்கு போகாதீங்க., இங்க வாங்க., பாதுகாப்பு கம்பி எல்லாம் போட்டு இருந்தாலும்.,அது ரொம்ப ரிஸ்க்.,  இங்க வாங்க.,  இங்கே வாங்க“., என்று பிடித்து அவர்களை இழுத்து வைத்துக் கொண்டிருந்தனர்.,

          “இது என்னடா ஸ்கூல் ஸ்டூடண்டை கூட்டிட்டு வந்த மாதிரியே நம்மை டிரீட்  பண்றாங்க“., என்றனர் கிசு கிசுப்பாக.,

      “மேம் நாங்க ஒன்னும் ஸ்கூல் ஸ்டுடென்ட் இல்லை“.,  என்று பிள்ளைகள் கத்தினர்.,

         “வாயை மூடுங்க பிள்ளைங்களா“., என்று கோபத்தில்  பேராசிரியர் சத்தம் போட்டதோடு அனைவரையும்சீக்கிரம் கிளம்புங்கள் மேகம் கூடுதுஎன்று சொன்னார். அத்துடன் அவர்கள் அங்கு வந்தும் வெகுநேரம் ஆகியிருந்தது.

       அங்கிருந்த கைடுஎவ்வளவு சீக்கிரம் கிளம்புகிறோமோ., அவ்வளவு சீக்கிரம் நீங்க தங்கியிருக்கும்  ரூமுக்கு போயிட்டிங்க னா., நீங்க சாப்பிட்டு ரெஸ்ட் எடுக்க சரியா இருக்கும்.,  நாளை காலையில வேற.,  நீங்க சீக்கிரம் கிளம்பனும்“.,  என்று சொன்னார்.

      அனைவரும் அறைக்கு வந்தனர்.,  அதன் பிறகு இரவு உணவை முடித்துக் கொண்டு., கேம் பயர் போட்டு அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் இரண்டாகும் படி மாணவமாணவிகளின் ஆட்டமும் பாட்டமும்  கொளுத்தி எடுத்தார்கள்.

       மீராவின் குரல் எப்போதும் தனித்தன்மை வாய்ந்தது.,  மிகவும் மிருதுவாக அழகாக பாடக்கூடியவள்.,  ஆனால் முறைப்படி சங்கீதம் கற்றுக் கொண்டவள் அல்ல.,

     அப்போது பேராசிரியர்கள் தான்., “மீரா உன் குரல் நல்லா இருக்குமே.,  ஒரு பாட்டு பாடுஎன்று சொன்னார்கள்.

        அவளோஐயோ என்ன பாட்டு பாட“.  என்று கேட்டாள்.

        பசங்களெல்லாம் ஆளாளுக்கு ஒன்று சொல்ல.,  ஒரு பெண் பேராசிரியர் தான்., “நேற்று இல்லாத மாற்றம் பாடுஎன்று சொல்லி., அவர் காலத்து ஒரு பழைய பாடலை சொன்னார்.

     அவளும் பாடத்தொடங்கினார்.,

     நேற்று இல்லாத மாற்றம்     
      என்னது காற்று என் காதில்
       ஏதோ சொன்னது
     இதுதான் காதல் என்பதா
     இளமை பொங்கி விட்டதா
      இதயம் சிந்தி விட்டதா
       சொல் மனமே..

என்று அப்பாடலை தொடர்ந்து பாடிக் கொண்டிருந்தாள்.

       அந்த இதமான சூழ்நிலையில் அவளின் மெல்லிய குரல் அத்தனை மிதமாக இருந்தது.,

       அந்த மிதமான சூழ்நிலையிலேயே எல்லோரும் அவரவருக்கு என ஒதுக்கிய இடத்திற்கு சென்று உறங்கச் சென்றனர்.

         காலை நேரம் பெண் பேராசிரியர்கள் பெண்கள் தங்கியிருந்த அறை கதவை தட்டி  “ஹரியப் கேர்ள்ஸ்., வேக்அப்., சீக்கிரம் கிளம்பி வாங்க.,  காலை டிபன் முடிந்ததும்.,  இங்கிருந்து கிளம்பனும்.,  சீக்கிரம் சீக்கிரம்“.,  என்று அவசர படுத்தினார்.

        “இந்த குளிருக்கு இதமா இழுத்து போத்திட்டு தூங்கினால் எப்படி இருக்கும் தெரியுமா“., என்று ஆளாளுக்கு பேசிக்கொள்ள மீராவும் போர்வைக்குள் சுருண்டு படுத்திருந்தவள் கண்மூடி இந்த கிளைமேட் இருந்தா எப்படி இருக்கும்“., என்று சொன்னாள்.,

     “உங்க வீட்டில மிதி  விழும் கிளம்புஎன்று பவி சொன்னாள். ஒவ்வொருவராக கிளம்பி வந்தனர்.

      மீரா குளித்துவிட்டு அவளுக்கு மிகவும் பிடித்த லாவண்டர் கலர் சுடிதார் போட்டு.,  தலையை பின்னி போட்டிருந்தாள்., இடுப்பு வரை இருந்த கூந்தல் அழகாக இருந்தது.

     மற்ற மாணவிகள் பிரி ஹேர் அது இது என்று விட்டிருக்க..,  இவளோஇது தான் தனக்கு வசதி.,  ஃப்ரீ ஹேர் எல்லாம் செட் ஆகாது“., என்று சொல்லிவிட்டு நன்றாக அழுத்திப் பிண்ணியபடி தன் ஜடையை முன்பக்கம் தூக்கிப்போட்டு ஷாலுக்குள் மறைத்து வைத்தாள்.,

       ஏனெனில் அடர்த்தியான அத்தனை திக்கான முடி அவளுக்கு உண்டு..

      அவள் முடிக்கென என அவள் கல்லூரியில் ஒரு ரசிகர் பட்டாளமே உண்டு.,  பின்னி போட்டாலும் சரி சாதாரணமாக போட்டு வந்தாலும் சரி., அவள் தலையில் பூ வைத்து வந்தாலும் அதை பார்த்து ஒரு கூட்டம்  ரசித்து பேசும்.,

      ஆனால் அவளோ., அத்தனை அழகு  மிருதுவான குணம்., ஆனால் நேரெதிராக  துருதுரு வாயாடி., அவளுக்கு இயற்கை மிகவும் பிடித்த ஒன்று.

         பஸ்ஸில் ஏறி உட்கார இவள் தோழி பவியோ முன்பக்கமாக படி ஏறியவுடன் முதலில் இருக்கும் சீட்டில் ஜன்னலோரத்தில் அமரந்தாள்.,

        இவளோஅடியே திமிருபிடிச்சவளே.,  நான் தாண்டி வரும் போது உட்கார்ந்து இருந்தேன்., இப்ப நீ எதுக்கு அங்க போய் உட்கார்ந்த“., என்று கேட்டாள்.

         “வரும்போது நீ உட்கார்ந்திருந்த.,  இப்ப போகும் போது நான் இங்க உட்கார்ந்து  வர்றேன்., நீ அந்தப் பக்கம் உட்காரு“., என்று சொன்னாள்.

     “எனக்கு தான் வாந்தி வருமே., அப்ப நான் உன் மேலேயே வாந்தி பண்ணிடுவேன்“., என்று மீரா சொன்னாள்.

       “வாந்தி வந்தா படி வழியா வெளியே எட்டி வாந்தி பண்ணு“., என்று சொன்னாள் பவி.,

       “அது தான் டோர் இருக்கேஎன்று மீரா சொன்னாள்.,

         அதற்கு பவியும்ஆமா இந்த டிரைவர் அண்ணா ஓட்டுற ஸ்பீடுக்கு  நீ இறங்கி போயே வாமிட் பண்ணிட்டு திரும்பி ஏறிக்கோ.,  என்று சொல்லி கிண்டல் செய்து கொண்டிருந்தாள்.,

       டிரைவரோஆமா மா  அப்படிதான்.,  மலைப்பகுதியில் மெதுவாக ஓட்ட முடியும்“.,  என்று சொல்லி பேசிக் கொண்டிருந்தார்.,


    மாணவர்களும் ஜாலியாக பேசிக்கொண்டே.,  ஒவ்வொருவராக பஸ்ஸில் ஏற துவங்கவும்.,

     மேகம் கருத்து கொண்டு வர

      ஹோட்டலின் உரிமையாளர் தான்.  “மேகம் கருத்திருக்கு சார்., மழை வருமோ என்னவோ“., என்று சொல்லிக் கொண்டிருந்தார்.,

      கல்லூரி பேராசிரியர்களோ., “இல்லை கிளம்பி விடலாம்“., என்று சொல்லும் போது டிரைவரும்ஆமாம்மா கிளம்பிடுவோம்., ஒரு  ஒன்றரை மணி நேரத்தில் இருந்து ரெண்டு மணி நேரம் ஆனாலும் மெதுவா போனா கூட கீழே இறங்கி விடலாம்“., என்று சொன்னார்.

             “ஆமா சார்  நாங்க கிளம்புறோம்“.,  என்று பேராசிரியர் சொல்லிக் கொண்டிருந்தனர்.

       “சரி பார்த்து போங்க., இறங்கும் போது குன்னூர் வழியா தான் இறங்கணும்., இன்னொரு பாதை சரியா இருக்காது.,  ஜாக்கிரதையா போங்க“.,  என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

          எல்லோரும் பாட்டு பாடி சத்தம் போட்டுக் கொண்டே அங்கிருந்து கிளம்பினர்.,

             ஊட்டியில் இருந்து குன்னூர் உள்நுழைந்து பஸ் இறங்கத் தொடங்கி இருக்கவும்., மழையும் பெய்ய தொடங்கியிருந்தது.

    எல்லோரும் வெளியே பார்த்துக் கொண்டே., “எப்படி இருக்கு யப்பா., அந்த பக்கம் பாரு எவ்வளவு பெரிய பள்ளம்.,  இந்தப்பக்கம் பாரு எவ்வளவு பெரிய  டீ எஸ்டேட்“., என்று ஆளாளுக்கு சத்தம் போட்டுக் கொண்டே வந்தனர்.

      அமைதியாக எட்டிப்பார்த்த மீராவுக்கு கால் கூசியது., யம்மாடி எவ்வளவு பெரிய பள்ளம்., தொட்டபெட்டா வை அதிக ஆழம் இருக்குமோ.,என்று தோன்றியது.,  ஏனெனில் அவள் சிலசமயங்களில் கால் கூசும்., என்று சொல்பவள்.

          அப்போது பார்த்து வாமிட் வருகிறது என்று எழுத்தவள் கதவோரம் சென்று நின்று மழைக்காற்றை அனுபவித்து விட்டு வந்தாள்., அதனை ரசனையோடு பவியிடம் சாரல் மழை என்று வர்ணித்து கொண்டிருந்தாள்.

         மழையும் வழுத்தது., அடித்துப் பெய்த மழையில் அக்கம் பக்கம் இருந்த மரங்களே தெரியாத போது., ரோடு எப்படி தெரியும்.,  டிரைவர் நிதானமாக சென்றாலும்., திடீரென மலைப்பகுதியின் பக்கவாட்டில் மண்சரிவு துவங்கி இருந்தது.,


       அதை பார்த்த பேராசிரியர்களும் மண்சரிவு என்று கத்தினர்.,

        டிரைவரும் ஒதுக்கிக் கொண்டு செல்ல முயன்றார்., ஆனால் கண்ணிமைக்கும் நொடியில் பஸ் பள்ளத்தாக்கில் உருளத்  துவங்கியது.,

       ஏற்கனவே முன்பக்க கதவு சரியாக இல்லாததால் மாணவிகள் அலறினர்.

         கம்பியை அழுத்திப் பிடித்துக் கொண்டாலும் பஸ் உருண்ட  வேகத்தில்., சரியாக அமராமல் இருந்த  மீரா வெளியே தூக்கி எறியப்பட்டாள்., கதவும் கழண்டு போயிருந்தது.,

       அவள் அந்தரத்தில் பறந்து செல்வதை உணர்ந்தவள்., மழை வேகமாக அடிக்க தன்னால் முழுதாக கண்ணைத் திறந்து கூட பார்க்க முடியாமல் மேகங்கள் தன்னை அணைப்பது போல தோன்றியது., கனவு என்ற எண்ணத்தோடு அந்தரத்தில் பறந்து கொண்டிருப்பது போல உணரும் போதே..,  தொட்டபெட்டாவின் நினைவு வந்தது.

       தொட்டு சென்ற மேகங்களும் நினைவில் வந்தது., சரி நாம் ஆசைப்பட்டது போல மேகத்தில் கலந்துவிட போகிறோம் என்ற நினைவோடு., அவள் பார்க்க பஸ் உருண்டு மோதி ஒரு மரத்தில் மோதி நிற்பதை  பாதி பிம்பம் மட்டும் தெரிந்தது.,

       பக்கவாட்டு வழியாக அவள் விழுவதை அவளே உணர்ந்தாள்., தூக்கி வீசியதில் சற்று உயரம் சென்று திரும்பி வந்ததால்., பஸ் உருள்வதை அவள் கண்ணால் பார்க்க முடிந்தது.,

          அதிர்ச்சியில் மயக்கம் கொஞ்சம் கொஞ்சமாக வருவதை உணர்ந்தாலும்., அவளால் சத்தம் போட முடியவில்லை.,

      மழைத்தண்ணீர் மேகக் கூட்டம் என்று ஏதேதோ உணர்வுகள்.,கடைசியாக பஸ்ஸில் பாடிய பாடல்களின் நினைவோடு கொஞ்சம் கொஞ்சமாக சுய நினைவை இழந்து கொண்டிருந்தாள்.

          அதே நேரம் பள்ளத்தாக்கில் விழும் போது எதை பிடிப்பது என்று தெரியாமல்.,  பிடிப்பதற்கு கையை தடவி தேட எதுவும் கிடைக்காமல் போக., பக்கவாட்டில் தலை தோள் சென்று., ஏதோ ஒன்றில் அடித்து மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக பறப்பது புரிந்தது.,  வலியோடு கண்ணீரோடு கண் திறக்க முயன்று முடியாமல் காற்றோடு கலந்த மேகத்தை பார்த்தபடியே கண்ணை மூடினாள்., மீரா.

        அங்கு பஸ் உருண்டு மரத்தில் மோதி நின்ற  இடத்தில் எழுந்தவர்கள்.,  ஆளாளுக்கு பயத்தில் கத்த., மண்சரிவில் ஆங்காங்கே எல்லாம் மூட துவங்கியிருந்தது.,  பஸ்சில் ஒரு பகுதியில் மண் விழுந்திருக்க.,  பேராசிரியர்கள் தவித்துக் கொண்டிருந்தனர்.,

      அவர்கள் கண்முன்னே மீரா வெளியே தூக்கி வீசப்பட்டதை அறிந்தவர்கள் இந்த மலையில் எங்கே சென்று தேடுவது, என்று திணறிப் போயினர்.

       மாணவமாணவிகளை பஸ்ஸை விட்டு வெளியே இழுக்கும் முயற்சியில் இறங்கி கொண்டிருந்தனர்., பஸ்சில் இருந்து பெட்ரோல் கசியும் மணமும் அடிக்க துவங்கியிருந்தது., டிரைவர்க்கு நன்கு அடி பட்டிருந்தாலும் சீக்கிரம் பிள்ளைகளை கீழே இறக்குங்கமா“., என்று சொல்லிக்கொண்டு இருந்தார்.,

    அவரும் ஒதுக்கி இருந்ததால் மட்டுமே., மண்சரிவுக்குள் மாட்டாமல் பஸ் தப்பியது., ஆனால் ஓடித்து திருப்பவும் தான் மீரா தூக்கி வீசப்பட்டாள்., கதவு கலண்டு விழுந்திருந்தது.,

       மழை நின்ற பின்பு தான் இயற்கையின் சதிராட்டத்தின் பாதிப்பு தெரியும்.,

   மனிதனை விட இயற்கை ஒன்றும் அத்தனை ஆபத்தானது இல்லை

“எல்லாம் என்னுடையது என்ற வாழ்க்கை பயணத்தில் இறுதியில் எதுவும் நம்முடையது இல்லை என்பதே நிதர்சனம்”.

Advertisement