Advertisement

நான் உன் நிறையன்றோ!..

9

என்னமோ ஜெய்ந்தினிக்கு நேரமே சரியில்லை போல.. வெளியிலிருந்து வரும் போது.. அவளின் அன்னை எதிரில் நின்றார். புக்ஸ் பாக் பெரிதாக இருந்தது.. அன்னை கண்ணில் அது பட்டுவிட்டது. 

மகேஸ்வரி உள்ளே வந்த பெண்ணிடம் “என்ன அது “என்றார்.

மகள் அகப்பட்டுக் கொண்டாள்.. பொய் சொல்லவும் வரவில்லை..  வீரமாக ‘புடவை ம்மா.. வசீகரன் வாங்கிக் கொண்டுத்தார்’ என  சொல்லிவிட்டாள். தொடர்ந்து சில விளக்கங்களும் சொன்னாள் பெண்.

மகேஸ்வரிக்கு, என்ன சொல்லுவது.. எப்படி கையாள்வது என தெரியவில்லை.. தைரியமாக திடமான முகத்துடன்.. தனக்கு புடவை வாங்கிக்  கொடுத்த ஆண்மகனை பற்றி பெண் சொல்லுவதை அவரால் ஏற்கவே முடியவில்லை. ஆனால், அடுத்து என்ன செய்வது, திட்டுவதா,, மிரட்டுவதா.. அழுவதா.. ஏதும் புரியவில்லை அவருக்கு. மகளின் திடம் உணர்ந்து.. ஏதும் பேச தெரியாதவர்.. தனதறைக்கு சென்றுவிட்டார். 

மகேஸ்வரிக்கு, என்னமோ அவரின் மனது வேதனை கொண்டது. இனம் புரியாத கோவமும் அழுகையும் வந்தது அன்னைக்கு. ‘எனக்கு எந்த உரிமையும் இல்லையா என் பெண்ணின் மீது.. நான் தவறாக வளர்த்து விட்டேனோ.. அவர் இருந்திருந்தால்.. இப்படி நடந்திருக்காதோ.. அவனும் வீடு வருவதில்லை.. மகளும் இப்படி நிற்கிறாள்..’ என பல உணர்வுகள்.. கவலைகள் அவரை பயமுறுத்தியது. அழுதார் வேண்டிய மட்டும்.. அதை தவிர அவருக்கு வேறு தெரியாது. மகனிடம் சொல்ல வேண்டும் என கூட தோன்றவில்லை.. தான் தனியானதாக உணர்ந்தார்.

இரவு உணவு உண்ணவும் அன்னை வரவில்லை எனவும், ஜெயந்தினி அன்னையிடம் பேச சென்றாள்.. “ம்மா.. சாப்பிடலாம் வாம்மா” என்றாள்.

அன்னை எதுவும் பேசவில்லை.

ஜெயந்தினியே, அன்னையின் அறையில் அமர்ந்து.. வசீகரன் பற்றிய விவரங்களை சொன்னாள்.. “நம்ம ஆதிகேசவன் பையன் ம்மா.. அப்பா முன்னாடி அங்கேதானே வேலை பார்த்தார்.. “ என தொடங்கி எப்படி பள்ளியில் படித்தனர்.. எங்கே பேச தொடங்கினர்.. வசீகரன் நல்லவன்.. கண்டிப்பா வந்து பெண் கேட்டபார்.. என நிறைய சொன்னாள் பெண்.

ப்பா.. அன்னைக்கு ஆதிகேசவன் குடும்பம் என்ற வகையில் நிம்மதி. ஆனால், ‘காதல் விருப்பம் நேசம்’ என்பதில் உண்டான கசப்புகளால்.. அன்னை சமாதானமாகவில்லை. மகளிடம் மறுத்து ஒரு வார்த்தை சொல்லவில்லை.. ’அவர்கள் பெரிய இடம்.. கண்டிப்பாக திருமணத்தை அந்த பையன் நடத்திக் கொள்வான்’ எனத்தான் எண்ணினார். அதனால், பயம் கொண்டு ஏதும் பேசவில்லை மகளிடம்.. ‘தான் யாருக்கும் வேண்டாதவளாக உணர்ந்தார். தன்னை யாரும் எதும் கேட்பதில்லை.. அவரவர் விருப்படி  நடந்துக் கொள்கின்றனர்.. அவ்வளவுதான், எனக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை..’ என மீண்டும் மகளின் பேச்சு.. அவரின் மனதில் இந்த எண்ணத்தைதான்  உண்டு பண்ணியது.

மறுநாளிலிருந்து பேசவில்லை மகளிடம் மகேஸ்வரி, ஒதுங்கிக் கொண்டார். பெண்ணும் அன்னையிடம் வந்து.. வந்து.. பேசினாள்.. உண்ணும் போது ‘எனக்கு சொல்லிக் கொடும்மா.. நல்லா இருக்கு’ என பாராட்டினாள். ‘பூ தொடுக்க கத்துக் கொடும்மா.. நான் சமைக்கிறேன் இன்னிக்கு.. வெள்ளிக் கிழமை நானும் கோவிலுக்கு வரேன்..’ என அன்னையோடு நிறைய நேரம் செலவழிக்க.. பேச நினைத்தாள். ஆனால், .அன்னை வாயே திறக்கவில்லை.

ஜெயந்தினிக்கு ஒரு கட்டத்தில் கோவம் வர.. அவளும்.. தனதறையில் முடங்க தொடங்கினாள்.

இதெல்லாம் ஏதும் தெரியாமல்.. அடுத்த ஒருவாரம் சென்றுதான் வீடு வந்தான் கபாலி. அவன் இரவு வந்தான். அன்னைதான் கதவை திறந்துவிட்டார். அன்னை எப்போதும் இரண்டு வார்த்தை பேசுவார்.. கபாலி சில நேரங்களில் பார்ட்டி என போய் வந்திருந்தால்.. கண்டுக் கொள்வார்.. கதவை திறந்ததும்.. அப்போதே அதட்டுவார்.. “இதென்ன டா பழக்கம்.. இந்த வயதில் இது தேவையா.. உங்க அப்பா.. எவ்வளவு வளர்ந்தும் ஒன்பது மணிக்கு வீடு வந்திடுவார்.. தொழிலை பார்த்தால் நீ  பெரிய ஆளா..’ என அப்போதே அதட்டுவார்.

கபாலி, எதும் பேசாமல் தலையை குனிந்துக் கொண்டு தன்னறைக்கு சென்றிடுவான்.

ஆனால், இன்று அன்னை ஏதும் பேசவில்லை.. அமைதியாக கதவை திறந்துவிட்டு உள்ளே சென்றுவிட்டார். கபாலிக்கு ஏதும் தெரியவில்லை.. சத்தமில்லாமல் தனதறைக்கு சென்றுவிட்டான்.

காலையில் ஜாக்கிங் சென்றான். ‘அன்னை எழுந்துக் கொள்ளவில்லை போல.. தன் கண்ணில் படவில்லை’ என எண்ணிக் கொண்டான். மகன் வீட்டில் இருக்கும் நாட்களில்.. அவனின் உடல் நலனில் அக்கறை கொண்டு எல்லாம் செய்வார், மகேஸ்வரி. இன்று அன்னையை காணோம். கபாலியும், அதிகம் யோசிக்காமல் ஜாக்கிங் சென்றுவிட்டான்.

அடுத்த இரண்டுமணி நேரத்தில் வீடு வந்த பின்னும்.. ஏதும் அன்னையின் சத்தமில்லை. மகன் குளித்து கிளம்பி வந்தான். அப்போது அன்னை, தன்னை கண்டுக் கொள்ளவில்லை. 

கபாலி “ம்மா..” என்றான் சத்தமாக.

அப்போதுதான் அன்னை “வா சாப்பிடலாம்” என்றார். குரலில் எப்போதும் இருக்கும் அக்கறையில்லை.. என்னமோ குறைந்தது.. அது என்னவென மகனுக்கு தெரியவில்லை, ஆனால், குறை..ஒட்டாத தன்மை  மட்டும் தெரிந்தது.

ஜெயந்தினியும் வந்து சேர்ந்தாள்.

கபாலி “என்ன அக்கா.. அம்மாக்கு உடம்பு சரியில்லையா.. நீ சமைக்கலாமில்ல” என்றான்.

ஜெயந்தினி, தம்பி கேட்டுடன்.. கண்ணில் நீரோடு நடந்த எல்லாவாற்றையும் சொன்னாள். அதாவது தான் வசீகரனை விரும்பிகிறேன். அன்னைக்கு.. என் பர்த்டேக்கு அவர் சரீ கிப்ட் பண்ணார். அதான், அம்மாக்கு கோவம்.. அதிலிருந்து அம்மா இப்படிதான் இருக்காங்க. என சொல்லி ஜெயந்தினி அழத் தொடங்கினாள்.

அன்னை, பிள்ளைகளின் எதிரில் நிற்காமல்.. உள்ளே சென்றுவிட்டார். ஜூஸ் போடுவதற்கு மாதுளையை உரிக்க தொடங்கினார். கண்கள் கசிந்து கொண்டிருந்து.

கபாலி, சோபாவில் அமர்ந்துக் கொண்டான். இப்போதும் அன்னை வெளியே வராமல் இருப்பதை பார்த்தவன் “அம்மா… அம்மா..” என அழைக்கவில்லை, கத்தினான்.

‘என் காது கேட்காது’ என அன்னை கிட்சனிலேயே நின்றார்.

கபாலி ஓய்ந்து போனான். அக்காவை பார்க்க, அவளும் அழ.. தம்பிக்கு கோவம்தான் வந்தது. ஒருவாரம் முன்னால்.. வசீகரன் பார்த்த பார்வையின் அர்த்தம் மொத்தமும் புரிந்தது கோவக்காரனுக்கு.

அக்காவை நன்றாக முறைத்தான்..

‘தம்பிக்கும் பிடிக்கவில்லை போல’ எனத்தான் தோன்றியது  அவனின் பார்வையில், ஜெயந்தினிக்கு “என்ன கபில்” என்றாள் தயக்கமாக..

கபாலி “ஏன் க்கா.. உனக்கு வேறு இடமே கிடைக்கலையா.. ஆளே கிடைக்கலையா.. அதெப்படி சரியாக நமக்கு ஆகாவங்ககிட்டதான் இந்த லவ், அது இது எல்லாம் வருமா..“ என உற்று பார்த்து சின்ன குரலில் கத்தினான்.

ஜெயந்தினி ஏதோ சொல்ல வாயெடுத்தாள் பெண்.

கபாலி விடவில்லை.. மீண்டும் அவனே பேசினான்.. “போயும் போயும், அந்த ஆதிகேசவன் குடும்பம்தான் கிடைச்சிதுதா.. அவங்க நம்ம எதிரிக்கா.. அவங்களுக்கு அவங்க மட்டும்தான் உசத்தின்னு எப்போதும் ஒரு நினைப்பு இருக்கும். போ க்கா..” என்றவன் எழுந்து சென்றுவிட்டான். உண்ண கூடயில்ல.

வீடு சிறையானது மூவருக்கும். ஒருவரை ஒருவர் பார்க்கவே விரும்பவில்லை. ஜெயந்தினி கொஞ்சம் கொஞ்சம் பேச முயற்சித்தாள்.. ஆனால், அன்னையும் தம்பியும் பிடி கொடுக்காமல் போக.. அவளும் ஓய்ந்து போனாள்.

அங்கு வசீகரன் வீட்டில்.. எப்போதும் போல.. தடாதான். ஆதிகேசவன் “இங்க பார்.. இது ஒத்து வராது.. மறந்துடு.. அவ்வளவுதான். ரமணன் இருந்தவரை.. அந்த குடும்பம் சரியாக இருந்தது. இப்போது அவன் பையன் சரியில்லை.. அத்தோடு ரமணன் இருந்திருந்தாலும்.. இப்படி எல்லாம் நடக்க அனுமதிக்கமாட்டேன். நம்ம பழக்க வழக்கப்படி செய்துக்கலாம் ப்பா.. நீயே கொஞ்ச நாளில் சரியாகி வருவ..” என்றுவிட்டார்.

வசீகரனுக்கு இதெல்லாம்தான் நடக்கும் என தெரியும் என்பதால்.. மகனும் “அப்பா.. இந்த முறை.. என்ன ஆனாலும் சரி, எனக்கு ஜெயந்தினிதான் வேண்டும்.” என மொழிந்தவன்.. இப்போது வீட்டார் யாரோடும் பேசுவதில்லை.

மாதங்கள் கடந்தது.

இப்படிதான் அந்த மாதங்களும் சென்றது, எல்லோரும் காலையில் எழுகின்றனர்.. வேலையை பார்க்கின்றனர்.. உயிர்  நிலைக்க.. உண்கின்றனர்.. என்ற நிலை. 

நாட்கள் கடந்தது.

ஜெயந்தினி CAஇறுதி தேர்வு எழுதி முடித்தாள். சொந்தத்தில் ஒருவர்.. ஜெயந்தினியை பெண் கேட்டனர். மகேஸ்வரி “இல்ல, அவள் வேலைக்கு போக போறா.. இப்போ பார்க்கலை” என சொல்லி சமாளித்துவிட்டார்.

தன் மகனிடமும் மகளிடமும், மகேஸ்வரி “இங்க பாருங்க.. விரும்பிட்டா, கல்யாணம் செய்துக்கணும்.. இன்னும் எத்தனை நாள் இப்படியே இருப்ப.. பெண் கேட்டு வர சொல்லு.. கல்யாணம் முடித்தால்.. என் கடமை முடிந்தது.” என்றார்.

ஆனால், வசீகரன் வீட்டில் பெண் கேட்டு வரவில்லை.

ஜெயந்தினி அவர்கள் வீட்டில் சம்மதிக்கவில்லை எனவும்.. கபாலிக்கு இன்னுமின்னும் தன் கருத்துதான் சரி என திண்ணம் வந்தது. ‘நான் சொன்னேனே.. அவன் வேறு கல்யாணம் செய்துப்பான்.. நீ பாரு.. இதெல்லாம் சரிவராது க்கா..’ என்றான்.

ஜெயந்தினி “நீ பேசலாமில்ல.. எனக்காக செய்ய மாட்டியா” என்றாள் அழுகையாக.

தம்பிக்கு, இந்த அழுகைக்கு பதில் சொல்ல முடியவில்லை.. “என்னமோ செய்.. இதில் நான் என்ன செய்ய முடியும்.. “ என்றுவிட்டான்.

ஆக, யாரும் ஏதும் செய்ய முடியாத நிலை.

ஜெயந்தினியும் வசீகரனுக்குமே ‘இதென்ன நிலை.. எப்படி மாற்றுவது’ எனதான் யோசனை. ஆனால், பதில் மட்டும் கிடைக்கவில்லை. தங்களுக்கு தெரிந்த பதிலும்.. உவப்பாக இல்லை.. காலம் இப்படியே விடையில்லாமல் சென்றது காதலர்களுக்கு.

!@!@!@@@!!@!@!@!@!@!

வாழ்க்கை எந்த நொடியில் எப்படி மாறும் என தெரிந்துக் கொண்டால்.. வாழ்வின் சுவாரஸ்யம் போகிவிடும்தான். ஆனால், சில இடர்களை தவிர்த்திருக்கலாம். அந்த இடர்களால் வரும் மனஸ்தாபங்களை தள்ளி வைத்திருக்க முடியும்.. இல்லை, தவிர்த்திருக்க கூட முடியும். மனஸ்தாபம் இல்லையென்றால் பிரிவுகள் நடந்திருக்காது. பிரிவுகள் எப்போதும் கொடுமையானவை.. அது நண்பர்களாக இருந்தாலும் சரி.. பெற்றோராய் இருந்தாலும் சரி.. தம்பதியாய் இருந்தாலும் சரி. பிரிவுகள் வலிகளை துக்கங்களையும் மட்டுமே கொண்டது. சின்ன சின்ன சந்தோஷங்களும் அங்கு பாரமே. வாழ்க்கை எந்த நொடியும் மாறும்.

அன்று.. கபாலி, கிருஷ்ணகிரிக்கு வேலை விஷயமாக சென்றுக் கொண்டிருந்தான்.

சாலையில் ஒரு கார் அதன் அருகில் ஒரு பெண்.. காரில் எதோ பழுது என தூரத்திலிருந்து பார்த்தாலே தெரிகிறது. 

அந்த பெண் நின்றிருந்த காரின் ஓட்டுனர், இவனுக்கு முன் சென்ற கார்’ரை கைகாட்டி நிறுத்துகிறார்.. நிற்கவில்லை அந்த கார்.. வேகத்தை சட்டென குறைக்க முடியாதே.. எனவே, கடந்து சென்றுவிட்டது அந்த கார். அடுத்து கபாலியின் கார்.

கபாலி, அந்த ஓட்டுனர் கைகாட்டி நிறுத்தவும்.. யோசனையோடு தன் கார்’ரை நிறுத்தினான். ’யார் இந்த பெண் எங்கோ பார்த்திருக்கிறேனே..’ என்ற யோசனையோடே இறங்கினான்.

அழகாக கண்களுக்கு மை தீட்டி.. தாமரை வண்ண காட்டன் புடவை கட்டி.. பின்னிய ஜடை முதுகை தாண்டி நீள.. அந்த ஏசிகாரிலிருந்து இறங்கி நிற்பதால்.. காதுமடல் அருகே.. வழியும் வேர்வை துளிகளை கண்டுக்கொள்ளாமல்.. நின்ற காரினை பார்த்து.. சங்கடமாக சிரித்தபடி, நின்றாள் மயூரா.

கபாலிக்கு சட்டென ஒரு சிலிர்ப்பு அந்த கண்களையும் காதோர வியர்வையையும் பார்த்து.. ‘அஹ…’ என மனமும் உடலும் சிலிர்த்தது அடங்கியது, ஆண்மகனுக்கு. இறங்கி நின்றான் கபாலி.

அடுத்த நொடியே ‘ஹோ.. வசீகரனின் தங்கை..’ எனத்தான் தோன்றியது.. வன்மமான கபாலிக்கு. ம்.. சட்டென ஜெயந்தினியின் தம்பியானான் கபாலி.

ஓட்டுனர் வந்து கபாலியிடம்  “சர்.. அவங்களுக்கு கிளாஸ்க்கு டைம் ஆச்சு.. இங்கதான் ஏழு கிலோமீட்டர்.. கொஞ்சம் விட்டுங்க சர்.. ஆதி சர் பொண்ணு சர்.. ரொம்ப நேரமாக நிற்கிறாங்க..” என்றான்.

மயூரா நடனப்பள்ளி ஆரம்பித்துவிட்டாள். பள்ளி முடித்துவர்கள் கூட சேர்ந்து பயிலலாம். மூன்று வருடம் டிகிரி படிப்பும் உண்டு அங்கீகரிக்கப்பட்ட பலகலை கழக்கத்திலிருந்து.  நடனம் பாட்டு என பைன் ஆர்ட்ஸ் அகாடமி என கலைகளுக்கான ஒரு பயிலகத்தை நிறுவிவிட்டாள் மயூரா. 

அது சிறப்பாக இயங்கத் தொடங்கி நான்கு மாதம் ஆகிவிட்டது. பகுதி நேர மாணவர்கள்.. இல்லத்தரசிகள்.. குழந்தைகள்.. என பல வயதினரும் பயில்கின்றனர். அதற்கு தக்க ஆசிரியர்கள் இருந்தனர்.. வகுப்புகள் நேர இடைவெளியில் அழகாக நடக்க தொடங்கிவிட்டது.

இப்போது, கபாலி யோசனையோடே கேட்டுக் கொண்டு “சரி, வரசொல்லுங்க..” என்றான். வேட்டி அணிந்திருந்தான்.. கருப்பு கலர் வேட்டி அவனின் பிடித்த உடை.. ஏதாவது பையர்களை சந்திக்க ஹோட்டல்ஸ் செல்லுவது என்றால்.. அதற்கு தக்க உடை அணிவான். குவாரி செல்ல.. லோக்கலில் வேலை என்றால்.. இப்படி வேட்டியில்.. சிலசமயம் சாதரணமாகதான் இருப்பான்.

ஆனால், அந்த கருப்பு வேட்டியும்.. வெங்காய நிற லினேன் ஹல்ஃப் ஹன்ட் ஷர்ட்’டும்.. மயூராவை யோசிக்க வைத்தது.. மேலுதடு வேர்க்க.. திரும்பி டிரைவர்’ரை பார்த்தாள். 

அந்த ஓட்டுனரும் “தம்பியை, தெரியும்மா.. அப்பாக்கு.. அண்ணனுக்கும். நீ போம்மா.. நான், இரண்டுமணி நேரத்தில் வந்திடுறேன்” என்றார்.

மயூரா பயத்தை மறைத்துக் கொண்டு.. கபாலியை பார்த்து புன்னகைக்க முற்பட்டாள்.. ஆனால், உதடுகள் விரியவில்லை.. கண்கள் மலரவில்லை.. அவள் உள்ளத்தின்  தடுமாற்றம்.. கண்வழியே.. முகம் வழியே.. வியர்வை வழியே.. சென்று கபாலியை தாக்கியது.

கபாலி  தன் ஷர்ட்’டை பின்னால் இழுத்துக் கொண்டு.. யோசனையோடு.. அவளின் தடுமாற்றத்தை ரசித்தான். என்னமோ அவனுக்கு புரிகிறது.. ‘கிடைத்துவிட்டாள்..’ என மூளை துள்ளுகிறது. ஆனால், அவனின் மனம் அமைதியாகிறது.. பெண்ணவளின் கண்களின் கலக்கத்தில். இருவேறு சந்தோஷமும் ஒருங்கே அவனுள். ஒருமாதிரி பரவசமாக உணர்ந்தான்.

பாவம்.. ஜெயந்தினியின்.. தன் அண்ணன் விரும்பும் பெண்ணின் தம்பி இவன்.. இந்த கபாலி.. என அவளுக்கு சத்தியமாக தெரியாது. தன் அண்ணன் ஒரு பெண்ணை விரும்புகிறார்.. வீட்டில், சம்மதிக்க காத்திருக்கிறார் என தெரியும். அப்படி தெரிந்தது முதல்.. அண்ணனோடு அதிகம் யாரும் பேசுவதில்லை, என தெரியும் அவ்வளவே. அதனால், தானும் பேசுவதில்லை 

மயூராவிற்கு வேலையிருப்பதால்.. அதிகம் தன் அண்ணனின் விஷயத்தில் ஏதும் கேட்டுக் கொள்வதில்லை. அப்படியே கேட்டாலும்.. பெரியவர்கள்  இளையவர்களுக்கு ஆதரவாக முடிவெடுக்க போவதில்லை. இவளையும் ஒதுக்கி வைத்துவிடுவர். இதெல்லாம் பெண்ணுக்கு தெரியுமே. எனவே, தன் வேலையை மட்டும் பார்த்திருந்தாள். 

அத்தோடு, இன்னும் மூன்று மாதத்தில் மயூராவிற்கும்  நிச்சயம்.. தன் அத்தை பையனோடு. அவன் வெளிநாடு சென்றிருக்கிறான் வேலை விஷயமாக. அவன் வந்ததும் நிச்சயம். இதெல்லாம் சிறுவயதில் பேசி முடித்ததுதான். அதனால், திருமணம்.. காதல்.. நேசம்.. என இதிலெல்லாம் இவளுக்கு எந்த அபிப்ராயமும் இல்லை. திருமணம் என்பது ஒரு கடமை.. தன் அண்ணன் மட்டும் எப்படி, வேறு யோசித்தான் என அவளுக்கு அடிக்கடி தோன்றுவதுண்டு.

இது இப்படி இருக்கையிதான்.. இந்த நிகழ்வு..

இந்த ரோட்டில் வருபவர்கள் உள்ளூர் ஆட்களாகத்தான் இருப்பார்கள். அத்தோடு, அந்த டிரைவர்க்கு கபாலியை தெரிந்திருந்தது. எனவே, அனுப்பினார்.

கபாலியும் தலை அசைத்து “வாங்க..” என சொல்லி காரின்  முன்பக்க கதவை திறந்துவிட்டான், தானே.

Advertisement