Advertisement

இருவரும் அடுத்த ஒருமணி நேரத்தில் பார்த்துக் கொண்டனர். வசீகரனுக்கு தன்னவளை பார்க்கவே பாவமாக இருந்தது..  என்னமோ, வனப்பு குறைந்திருந்தாள் போல.. பிறந்தநாள் அழகே அவளிடம் இல்லை. 

வசி “என்ன டா சிரிப்பே இல்லை முகத்தில்” என்றான், அவளை பார்த்தவுடன். சோர்வாக புன்னகைத்தாள் பெண்.

வசீகரன், திடமான உடல்வாகு.. ஜெல் வைத்து.. சிகையை ஆடாமல் அசையாமல் படிய செய்திருந்தான். எப்போதும் மலர்ந்த புன்னகை முகம். அதிலும்.. அவனின் காதல் முகம் கனிவானது, அவளிடம் அதிர்ந்து பேசவேமாட்டான்.. அவள் என்ன சொன்னாலும் செய்து தருவான்.. ஜெயந்தினியின் அன்பன், வசி.

இப்போது, காதலாக இந்த வார்த்தையை கேட்கவும்.. ஜெயந்தினி தன்னவனிடம் கையை நீட்டினாள்.. பற்றிக் கொள்ளும் படி. எங்கே அவனை இறுக்கி கட்டிக் கொள்வோமோ.. என தடுமாற்றம் வந்தது தன்னவனை பார்த்ததும், ஜெயந்தினிக்கு. எனவே, வசி அவளின் கையை இறுக பற்றிக் கொள்ளவும்.. அவனோடு நடந்தாள் பெண்.. அன்னையின் அழுத்தமான பேச்சு நெஞ்சில் பயத்தை கொடுத்தது. ஆனால், தன்னவனின்  விரல்கள்.. தன்னை தொட்ட நொடி முதல்.. பெண்ணவளின் கவலைகள் காற்றில் கரைவதாக தோன்ற.. அவனை ஒட்டி நடந்தாள்.

வசி “என்ன என்மேல் அவ்வளவுதான் நம்பிக்கையா.. கையெல்லாம் சில்லுன்னு இருக்கு. ஃப்பியர்  வேண்டாமே ஜெயந்தி. நான்தான் உனக்கு.. என்னை மீறி ஏதும் நடக்காது. இன்னிக்கு, எனக்கு பிடித்தார் போல.. ஒரு ஒன்ஹௌர்.. ப்ளீஸ் சீயர்.. பேபி” என தன் விரல்களை சிரிப்பது போல.. விரித்துக் காட்டினான்.

ஜெயந்தினியும் தலையாட்டி ஏற்றாள்.

தங்களுக்குகென ஒரு டேபிள் புக் செய்திருந்தான். ஒரு நட்சத்திர விடுதி.. அவனின் நண்பனுடையது. இவர்களின் சந்திப்பு எப்போதும் இங்கே பாதுகாப்பாக நடக்கும். 

இன்று சில ஆரெஞ்ச்மெண்ட்ஸ் செய்திருந்தான். அதன்படி.. ஒரு சின்ன ப்ரைவேட் பிளேஸ்.. அந்த சுவரில்.. சிவப்பு ரோஜாவில் இவளின் பெயர் எழுதியிருந்தது.. கீழே அந்த இடம் முழுவதும் சிவப்பு பலூன்ஸ்.. இரு சேர்ஸ்.. சின்ன டேபிள். ஜெயந்தினி இந்த அமைப்பை பார்த்து..  வசியை இமைக்காமல் பார்த்தாள்.. இரண்டு நொடிகள்.

வசி “வாங்க பர்த்டே பேபி..” என்றான்.

ஜெயந்தினி, இப்போது தன் உடையை பார்த்துக் கொண்டாள்.. அனிச்சையாய். ப்ளாசோ பேன்ட் லாங் டாப் என அணிந்திருந்தாள்.

வசி அதை கவனித்து “ம்.. அழகா இருக்கு.. உன்கிட்ட சொல்லல.. சொன்னால் ஹாடா.. டிராமா மாதிரி தெரியுமேன்னு  சொல்ல.. வா..” என பற்றியிருந்த கையை விடாமல் கூட்டி சென்று, தன்னருகே அமர்ந்திக் கொண்டான்.

இப்போது நால்வர் வந்தனர் இசை கருவிகளோடு.. மெலிதான குரலில்.. கிட்டார் வாசித்துக் கொண்டே ஒரு இளைஞசன் பாடினான்.. 

“மேகமோ அவள் மாய பூதிரள்..

தேன் அலை சுழல்..

தேவதை நிழல்..” 

என பாட தொடங்க, வசி.. அவளின் விரல்களை இறுக பற்றிக் கொண்டான். அடுத்த நாற்பது நிமிடமும்.. அந்த இடம் மெல்லிசை மழையால் சூழ்ந்தது.. அதில் அவர்கள் காதல்.. நனைந்தது. இருவரும் அடிக்கடி ஒருவரை ஒருவர் பார்த்தபடி கேட்டுக் கொண்டிருந்தனர். நேரம் நிமிடமாக கடந்ததாக உணர்ந்தனர். இறுதியில் கேக் எடுத்து வந்தனர்.. வசி, தன்னவளின் கை பற்றி கேக் கட் செய்தான். 

அடுத்து, வசி கண்ணசைக்க.. எங்கிருந்தோ ஒரு கிஃப்ட் வந்தது. வசி அதை எடுத்து அவளிடம் கொடுத்தான்.. ப்யூர் காஞ்சிவரம் பட்டு.. லேவேண்டர் நிறம்.. ஜெரி வேலைபாடுகள் நிறைந்த அழகான பட்டு.. அவளிற்கான அவனின் தேர்வு.. பார்த்ததும் கண்கள் பணித்தது பெண்ணுக்கு.

வசி “என்னவோ, இந்த தரம்.. புடவைதான் கொடுக்கணும்ன்னு தோணிச்சி.. டைமும் கூடி வருது போல.. நான் எங்க வீட்டு ஆட்களோடு பெண் கேட்டு வருவேன்.. அப்போ, இந்த சாரிகட்டிக்கோ” என்றான் ஆழமான குரலில்.. சின்னதாக தனது ஆசையை சொல்லிக் கொண்டிருந்தான்.

ஜெயந்தினி கண்கள் பணிக்க சிரித்தாள்.. 

“அள்ளி சிந்தும் அழகின் துளிகள்..

உயிரில் பட்டு உருளும்..

வசமில்லா மொழியில் 

இதயம் எதையோ உளரும்..”

சற்று நேரம் அமைதி இருவருக்கும் நடுவில்.. அவர்களுக்கு தெரியும், வசியின் வீட்டில் கட்டுபாடுகள் அதிகம் என. கண்டிப்பாக ஏற்கமாட்டனர் எனத்தெரியும் அவளுக்கும். ஆனால், தன்னவனின் நம்பிக்கை.. இவளையும் தொற்றியது.. “தேங்க்ஸ் “ என்றாள்.

வசி “ஹா.. எவ்வளோ ஈஸியா சொல்லிட்ட.. தேங்க்ஸ்’ன்னு கொன்னுடுவேன்.. அதெல்லாம் சொன்னால். லவ் யூ.. மட்டும் போதும், எங்க சொல்லு… தௌசன்ட் டைம் சொல்லனும்.. நைட் போன் பண்றேன்.. அழாத.. ம்.. கிளம்பலாமா” என்றான், தனமையாக. 

ஜெயந்தினி “லவ் யூ வசி.. லவ் யூ..” என்றாள் நெகிழ்ந்த குரலில். அதில் வசி கிறங்கி போய்.. அவளை தோளோடு அணைத்தான்.

மனமேயில்லாமல் இருவரும் விடைபெற்றனர்.

!@!@!@!@!@!@!@!@!@!@!@!

மாலை ஆறுமணிக்கு மேல்.. ரோட்டரி ஹால். மேடை பரதநாட்டிய அலங்காரங்களோடு தயாராக நின்றது. இப்போது விழா ஆரம்பிக்க ஆயுத்தமாகிக் கொண்டிருந்தது அந்த இடம்.

பொறுமையான நடையில்.. ஆனந்தோடு உள்ளே வந்தான் கபாலி. வாசலில் தன் பெண்ணின் விழாவிற்கு வருபவர்களை வரவேற்க.. ஆதிசேஷன்.. அவரின் அண்ணன் மற்றும் வசீகரன் என மூவரும் நின்றிருந்தனர். இது முற்றிலும் ஒரு தொழில்முறை விழாதான். 

மயூரா நாட்டியம் பயின்று முடித்துவிட்டாள்.. இப்போது இங்கே தன்னுடைய ஊரிலேயே நாட்டிய அகடாமி ஆரம்பிக்கிறாள். அதற்காக, இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டாள். ம்.. வீட்டார் ஏற்பாடு செய்து தந்தனர். எனவே, ரோட்டரி குடும்பம் எல்லோருக்கும் அழைப்பு சென்றிருந்தது. கபாலி அதில் ராயல் மெம்பெர். அத்தோடு MLA தலைமை. எனவே, வந்து நின்று அவரின் கண்ணில் படவேண்டும்.. அதனால், வந்தான்.

இப்போது ஆதிகேசவன் “வாங்க..” என சம்பிரதாயமாக வரவேற்றார்.நம்ம வசீகரன் ‘தெரிந்திருந்தால்.. அவளையும் கூப்பிட்டு வர சொல்லியிருக்கலாமே’ என எண்ணிக் கொண்டே “வாங்க கபில்.. வாங்க.. ரொம்ப ஹாப்பி உங்களை இங்கே பார்ப்பதில்.. வாங்க.. நான் சீட் காட்டுகிறேன்” என தானே அழைத்து சென்றான்.

கபாலிக்கு இது ஒன்றும் புதிதல்ல.. எங்கு பார்த்தாலும்.. இதுபோல.. பல பொது இடங்களில் பார்த்தால்.. வசீகரன் நல்லமுறையில்தான் பேசுவான். தான் எப்படி கவனிக்காமல் சென்றாலும், வந்து இரண்டு வார்த்தை பேசிவிட்டுதான் செல்லுவான் என எண்ணிக் கொள்வான், கபாலி. அதனால், இது புதிதல்லவே.. எனவே சிரித்த முகமாக கபாலி சென்றான்.

வசி ”அம்மா நல்லா இருக்காங்களா.. “ என்றான்.

கபாலி “ம்..” என்றான்  என்ன பேசுவது என தெரியாமல்.

ஆனந்த் “சர்.. உங்கள் தங்கையா மயூரா..” என்றான்.

வசி “ம்.. எட்டு வருஷமா பரதம் கத்துக்கிறா.. ஸ்கூல் முடிச்சிட்டு.. அப்படியே சென்னை போயிட்டா.. அப்புறம் நார்த் போய் கதக்’க்கும் கத்துகிட்ட.. இப்போ ஒரு இன்சிட்டியூட்.. இங்க கிருஷ்ணகிரி தாண்டி ஒரு இடத்தில்.. அடுத்த மாதம் இன்னாகரேஷ்ன்.. அதான், ஒரு இன்ட்ரோ மாதிரி.. இந்த அரங்கேற்றம். அங்கே MP வருவார். அப்போது கண்டிப்பாக பாமிலியோட வரணும் எல்லோரும்.” என்றான், காரியகாரனாக. 

ஆனந்த் என்ன சொல்லுவது.. இதெல்லாம் தன் முதலாளியான கபாலிக்காக சொல்லுவது என புரிய, கபாலியை பார்த்தான் ஆனந்த். வசியும், நேர்பார்வையாக.. ‘சரின்னு’ சொல்லு எனும் அழுத்தத்தை தாங்கி கபாலியை பார்த்தான். தனக்கு சாதகமாக இவன் பதில் சொல்ல வேண்டுமென்ற ஆர்டர் அதில் அப்பட்டமாக இருந்தது. 

கபாலி, இந்த தொழில்  பழகிய நாட்களில்.. தானாகவே கற்றது வார்த்தைகளுக்குள் படிக்கும் கலையை. எனவே, வசியின் வார்த்தையை தன்னுள் அசைபோட்டவன்.. அவனின் பார்வையை பார்த்து, லேசாக கண்ணை சுருக்கி.. “ம்.. ம்..” என ஆராயும் விதமாக பார்க்க…

வசீகரன் சுதாரித்துக் கொண்டான். சட்டென  அங்கிருந்த தங்களின் ஸ்டாப் ஒருவரை அழைத்து.. “நம்ம ரிலேட்டிவ்ஸ் உட்காரும் இடத்தில்.. செகண்ட் ரௌவ்வில் சீட் ஆரேஞ் பண்ணுங்க.. இவங்களுக்கு” என சொல்லிவிட்டு..

வசி, கபாலியிடம் திரும்பி “பாருங்க.. நான் அப்புறம் வரேன்” என்றவன் விடைபெற்று கிளம்பினான்.

விழா தொடங்கியது. MLA வந்து தலைமை தாங்கினார். இவர்கள் ஆரம்பிக்க  உள்ள.. நாட்டியாலயா பற்றி பேசினார். தன் கையாலேயே.. மயூரா என அழைத்து மயூராவிற்கு வாழ்த்து சொல்லி.. பூங்கொத்து சால்வை பரிசளித்தார்.

மயூரா.. அழகான சந்தனவண்ண காட்டன் புடவையை, நாட்டியம் ஆடுவதற்கு ஏதுவாக கட்டிக் கொண்டு.. நாட்டிய ஒப்பனையோடு.. மென் நடையோடு.., மேடையின் பக்கவாட்டிலிருந்து வந்தாள்.. சபைக்கு ‘வணக்கம்’ என மொட்டென கரம் குவித்தாள்.. அதுவே நாட்டியம் போல அழகான தெரிந்தது. பின் MLA’வை  பார்த்து.. அளவான சிரிப்பு.. புன்சிரிப்பு.. என்பது இப்படிதான் இருக்கும் போல.. அப்படி பற்கள் இரண்டு மட்டும் தெரிய.. சிவப்பு பூவின் நடுவே உள்ள.. மகரந்தம் போல.. அழகாக சிரித்தாள்.

அவர் வாழ்த்தி தந்த பூங்கொத்தை வாங்கிக் கொண்டு.. மீண்டும், வணக்கம் சொல்லி.. அங்கிருந்த எல்லா பெரியவர்களுக்கும் வணக்கம் சொல்லி.. கிளம்பினாள். 

கபாலி இதையெல்லாம் கவனிக்கவில்லை.. MLA’வை எப்போது பார்போம் என அமர்ந்திருந்தான்.

நடனம் தொடங்கியது. முதல் நான்கு.. நடனம் வேறு நான்கு பெண்கள் வந்து ஆடினார். 

அந்த நேரத்தில் MLA.. கொஞ்சம் அங்கிருந்த தனியறைக்கு வந்தார். ஒவ்வொருவராக சென்று பார்த்தனர். கபாலியும் ஆனந்தும் சென்று  பார்த்தனர்.. MLA பேர் சொல்லி சிலர், தனியாக கமிஷன் கேட்பதால்.. அதை அவர் கவனிக்க வேண்டும்.. அப்புறம் உங்கள் பங்கும் கட்டாகிடும்..’ என அங்கே நின்ற ஒருவனை முறைத்து பார்த்து கபாலி மிரட்டினான்.

MLAவின் ஆட்கள் வாக்குவாதம் செய்ய தொடங்க..  MLAசமாதனம் செய்தார். கபாலியிம் பார்த்துக்கலாம் என பேசி அனுப்பி வைத்தார்.

இப்போது ஆதிகேசவன் ”வாங்க.. பெண்ணு நடனத்தை பாருங்க” என அழைத்தார்.

இப்போது மயூரா நான்கு பெண்களோடு வந்தாள்.. அழகான குற்றால குறவஞ்சி பாடல்..  ஆனந்தபைரவி ராகம்.. 

”பச்சமலை பவளமலை.. எங்களது நாடு.. 

பார்முழுதும் சீர் திகழும் எங்களது நாடு..

இச்சைதரும் கலைகளெல்லாம் 

நிறைந்திருக்கும் நாடு..

எல்லோரும் இன்பமுறும்.. 

எங்கள் தமிழ்நாடு..” 

என பாடல் ஒலிக்க கபாலி வந்து  அமர்ந்தான். மயூரா அழகான தாளத்தில்.. நளினமாக மயூரா ஆட.. எரிச்சலாக வந்தவன்.. எல்லாவற்றையும் மறந்து.. அவளின் நடனத்தில் லயித்தான்.

உதடுகளில் பாடல் இசைய.. பாடலுக்கு தக்க முக பாவத்துடன்.. கண்கள், காலுக்கு போட்டியா சூழன்று ஆட.. கபாலி புதிதாக பார்க்க தொடங்கினான்.

அடுத்து அவள் தனி ஆவர்த்தனமாக.. வர்ணத்தில் 

“சுவாமி நான் உந்தன் அடிமை..

என்று உலமெல்லாம் அறியுமே..

சுவாமி நான் உந்தன் அடிமை..

என்று உலமெல்லாம் அறியுமே..”

என அபிநயம் பிடிக்க.. கபாலிக்கு என்னமோ செய்தது உள்ளே.. அவளின் கண்களை தாண்டி.. தன் பார்வையை மீட்க முடியவில்லை அவனால்.. ‘இதென்ன..’ என அவனுக்கே  சங்கடமாக தோன்ற எழுந்துக்  கொண்டான் சட்டென. அரங்கமே, அமைதியில் இருக்க.. இவன் மட்டும்.. வெடுவெடுவென வெளியே வந்துவிட்டான்.

ஆனந்த் உடனேயே எழுந்தார்.. வசீகரனிடம் சொல்லிக் கொண்டு வெளியே வந்தார்..

அதற்குள் கபாலி, ஒரு தம் பற்ற வைத்துக் கொண்டு.. ‘இதென்ன ஒரு கேர்ள் ஆடுவதை பார்த்துக் கொண்டு நிற்கிறேன்.. ச்ச.. வேலையா இல்லை எனக்கு.. அந்த MLA இருப்பாராம்.. நாளை, அப்போது பார்த்துக்கலாம்.. எங்கே, ஆனந்த்” என எண்ணிக் கொண்டு நின்றான்.

ஆனால், மீண்டும்  அவன் காதில் “சுவாமி நான் உந்தன் அடிமை..

என்று உலமெல்லாம் அறியுமே..”

எனத்தான் கேட்டது. அதில், அவனின் புத்தி ஷணம் அங்கே லயித்துவிட்டுத்தான் மீண்டது. 

Advertisement