Advertisement

நான் உன் நிறையன்றோ!..

7

இரவு மணி பத்துக்கு மேல், கபாலியின் வக்கீல் “விட்டுடுங்க கபாலி, அவங்களை.. இனி ஒன்னும் பிரச்சனை வராது.” என்றார். கபாலிக்கு அவர்களை விடும் எண்ணமே இல்லை.. மனதில் வெறி அடங்கினாலும் ஒரு வன்மம் இருக்கவே இருக்கிறது அவனிடம்.. ‘கொஞ்சம் நம்பினால், உடல் நிலை முடியவில்லை’ என்றால்.. எமாற்றுவீர்களா’ என ஒரு வன்மம் இருக்கிறது. எனவே, அமர்ந்து அவர்களை என்ன செய்யலாம் என யோசனையில் இருந்தான்.

ஆனந்த் “சர், கபில்.. எல்லாம் சரியாகிடுச்சி. எல்லாம் உங்கள் கைக்கு வந்திடுச்சி.. அவங்களை அப்படி முறைக்காதீங்க.. இனி இவர்களால் ஏதும் செய்ய முடியாது. வீட்டுக்கு போகணும் பசங்க.. நீங்க.. நான்.. எல்லாம்.. நாளைக்கு உங்கள் முதல்நாள். கபில் சர்.. கபில் சர்..” என  அழைத்து சொல்லிக் கொண்டிருந்தார்.

கபாலி “ம்.. ம்.. சரி, ஆனந்த் சர்.. “ என்றான் ஒரு நெடிய மூச்சை இழுத்துவிட்டு.. தன்னை சமன்படுத்திக் கொண்டான்.

கபாலி, எழுந்தான்.. தனது ஷர்ட்’டை நன்றாக தட்டிவிட்டு.. கசங்கலை   நீவிவிட்டான், முழங்கைக்கு மேல் ஏற்றிவிட்டிருந்த ஷர்டின் கைபகுதியை இறக்கி.. நேர் செய்துக் கொண்டான். இரு கைகளாலும்.. தன் சிகையை கோதி கோதி நேர் செய்தான்.. அவர்கள் ஆருவரையும் நேர் பார்வையாக பார்த்தான்.. “வெல்.. இனி இங்கே நீங்கள் இல்லை. இனி போகும் இடத்திலும் பார்த்து இருங்கள். எல்லோரும் என்னை போல.. உங்களை சும்மா விடமாட்டாங்க, ரைட்.” என்றான் நக்கல் குரலில்.

பின்  குமரனிடம் “உங்க பெண்டாட்டி பிள்ளைகள் எல்லாம்  வந்துட்டாங்க.. உங்க வீட்டில், இருக்காங்க. எதாவது பிரச்சனை வந்தது.. ஜாக்கிரதை” என சுட்டுவிரல் நீட்டி எச்சரித்தான். குமரன் அதிர்ந்தார் மீண்டும்.. அவனுடன் வாயாடுபவர்.. இப்போது அமைதியானர்.

பின் “சரி, ஆனந்த்.. எல்லோரும் கிளம்பட்டும்.” என்றான். 

குமரன் கோஷ்ட்டிக்கு, ஆத்திரம்தான். தங்களுக்குள், ஒருவருடைய பார்வையை ஒருவர் பார்த்து அமைதியாகினர். கிளம்பினர்.

பின் கபாலி வக்கீலுக்கு என, பீஸ் கொடுத்தான். அவர் தன் ஒருநாளை இங்கே செலவழித்திருந்தாரே அதனால். தன் நண்பனின் தந்தைக்கு நன்றி தெரிவித்து அனுப்பி வைத்தான். அவர்களும், அறிவுரைக்களும்.. யோசனைகளும் சொல்லி கிளம்பினர்.

பின், குவாரி ஊழியர்கள் அனைவருக்கும்.. நிறைவாக கூலி கொடுத்து அனுப்பினான். எல்லோருக்கும் தமிழ் அவ்வளவாக தெரியாது.. எனவே, ஹிந்தியில் ‘உண்டு கிளம்புங்கள்.. காலையில் வேலைக்கு வந்திடனும்.. லீவ் எடுக்க கூடாது’ என பேசி அனுப்பி வைத்தான்.

இந்த அலுவலகத்தை தனக்கு டீ கொடுக்கும் பொன்னுசாமி தாத்தாவை காவலுக்கு இருக்க வைத்தான். கூடவே எப்போதும் இருக்கும் ஆட்கள் இருந்தனர், நால்வர்.

இறுதியாக ஆனந்த்’தை அவர்களின் வீட்டில் இறக்கிவிட்டு, தான் வீடு வந்து சேர்ந்தான் அர்த்த ராத்திரியில். அவனின் அன்னை வந்து கதவை திறந்தார்.. விளையாடி திரிந்த பிள்ளை வீடு வந்தது போல கலையிழந்து அவர் முன் நின்றான் மகன். 

அன்னை “என்ன டா.. ப்ரெண்ட்ஸ் எப்படியிருக்காங்க.. ஏன்  உடம்பு முடியலையா.. தங்கிட்டு, காலையில் வந்திருக்கலாமில்ல..” என்றார். 

கபாலிக்கு, வீட்டில் எல்லாம் தெரிந்திருக்கும்.. அம்மா என்ன சொல்லுவார்களோ.. என்ன கேட்பார்களோ.. அதை வேறு சமாளிக்க வேண்டும்.. என எண்ணிக் கொண்டே வந்தான்.

ஆனால், அன்னையின் கேள்வியில்.. பேச்சில் தெரிந்த வெகுளித்தனத்தை   நின்று.. பார்த்து.. உணர்ந்தான். கபாலிக்கு, மனது அந்த நொடியில்.. தான் செய்வது.. இனி செய்ய போவது  எல்லாம் சரியே.. என நியாப்படுத்திக் கொண்டது.  ‘இதே வெகுளித்தனத்தை.. இந்த வாஞ்சையை எப்போதும் அவரிடம் நிலைத்திருக்க செய்ய வேண்டும்.. என் அப்பா இவளை.. என் அன்னையை எப்படி பார்த்துக் கொண்டாரோ.. உலகம் தெரியாமல்.. ஒரு நல்ல உலகத்தில்  என் அன்னையை வைத்திருந்தாரோ.. அப்படியே நான் வைத்திருக்க வேண்டும்..’ என எண்ணிக் கொண்டான்.. இப்போதுதான் தலையெடுத்த மகன்.

மகேஷ்வரி “சப்பிட்டியா  கபில்.. எப்போது கிளம்பின” என வினவிக் கொண்டிருந்தார்.

கபாலி, சற்று நேரம் சென்று.. “சாப்பிட்டேன்.. காலையில் பேசறேன் ம்மா.. டயர்டா இருக்கேன். நீங்க போய் படுங்க.. நான் லாக் செய்துக்கிறேன்” என சொல்லி அவரை அனுப்பி வைத்தான்.

பின் பொறுமையாக தனதறைக்கு சென்று, ஹீட்டர் ஆன் செய்து வந்தான். பிரிட்ஜ்ஜில் என்ன இருக்கிறது என பார்த்தான்.. எதோ சாக்லேட் இருந்தது பெரிய பாக்கெட்.. பின் ஆப்பிள். எடுத்து வந்து ஹாலில் அமர்ந்து உண்டான். என்னமோ யோசனை.. டிவி போடவில்லை.. போனையும் பார்க்கவில்லை.. எதோ யோசனையில் இருந்தான்.

சற்று நேரத்தில் எழுந்து குளிக்க சென்றான்.. ஆவிபறக்கும் வெந்நீர்.. உச்சந்தலையில் கொட்ட.. மனதின் வலி உடலில் தெரிந்தது அவனுக்கு. மழையில் நிற்கும் எருமைபோல.. நின்றான்.  கொஞ்சம் கொஞ்சமாக அவனிடமிருந்து தயக்கம்.. தடுமாற்றம்.. சூடு.. சொரணை.. இரக்கம்.. வெட்கம்.. எல்லாம் ஆவியாக பறந்தது.. அத்தோடு சேர்ந்து உடல்வலியும்.

“சிறகு கிடைத்தால் பறப்பது 

மட்டும் வாழ்க்கையல்ல..

சிலுவை கிடைத்தாலும் 

சுமப்பதுதான் வாழ்க்கை..”

–கண்ணதாசன்—

எப்போது உறங்கினானோ.. காலையில் ஆறுமணிக்கு எழுந்துக் கொண்டான். பரபரப்பாக ஜாக்கிங் செல்ல கிளம்பிக் கொண்டிருந்தான்

அன்னை மகேஷ்வரி அப்போதுதான் எழுந்து வந்தார். மகனை இப்படி பார்க்கவும் “என்ன ப்பா.. அதுக்குள்ள எழுந்திட்டியா.. ஜாக்கிங் போறியா.. ஹாட்வாட்டர் தரவா குடிக்க..” என்றபடி, மகனின் அருகே வந்து அவனை தொட எத்தனித்தார்.

கபாலி “இல்லம்மா..  வேண்டாம்..” என்றபடி தள்ளி சென்றான்.

அன்னை “என்ன டா.. கண்ணெல்லாம் ஒருமாதிரி இருக்கு.. இங்க வா” என்றார், மகன் தள்ளி போனதால்.. உடல்நிலை சரியில்லையோ என கூப்பிட்டார்.

கபாலி “ம்மா..ஆ… எனக்கு ஒண்ணுமில்ல.. டைம் ஆச்சு ம்மா.. பைய்..” என்றவன் நிற்காமல் சென்றுவிட்டான் வாசல் நோக்கி. என்னமோ அன்னையை நெருங்க முடியவில்லை.

கபாலிக்கு உறக்கம் வரவில்லை.. தன்னை மறந்து எதோ இரண்டுமணி நேரம் உறங்கியிருப்பான் போல. இப்போது சட்டென எழுந்தும் கொண்டான். அவனின் மனம் எல்லாம் ‘அடுத்து எப்படி.. நம் அலுவலகத்தை நடத்துவது’ என்பதிலேயே இருந்தது. எனவே, யோசனையில் இருந்தவனுக்கு, அன்னையிடம் நெருங்க தெரியவில்லை.. முடியவில்லை.

ஜாக்கிங் சென்று வந்தவன் உடனேயே அலுவலகம் கிளம்பிவிட்டான். அலுவலகத்தில் எது.. எங்கே.. எப்படி இருக்கும்.. என அவனுக்கு தெரியாதே. எனவே, நேரமாக சென்றான்.

அன்றைய பேப்பரில்.. கபாலி சொன்னது போல.. அறிவிப்பு வந்துவிட்டது. இப்போது உள்ளூரில் தொழில் வட்டத்தில் குமரன் பற்றி தெரியத் தொடங்கியது. ஆனாலும், யாரும் சட்டென நம்பவில்லை.. கபாலியின் அலுவலகத்திற்கு அழைத்து விவரம் கேட்டுக் கொண்டனர். ஆனந்த்.. மற்றும் சூப்பெர்வைசர் என மூன்று நபர்கள்  அந்த அழைப்புகளுக்கு பதில் சொல்லினர். 

இன்னமும் பையர்ஸ்’களுக்கு விஷயமே தெரியாது. கபாலி எல்லோருக்கும் மெயில் செய்ய சொல்லி இருந்தான்.. அந்த வேலைகள் தொடங்கியது. எப்படியேனும் குமரன் பற்றி எல்லோருக்கும் தெரிவிப்பதே இப்போது அவனுடைய நோக்கமாக இருந்தது.

ஜெயந்தினி பேப்பர் பார்த்துதான் தெரிந்துக் கொண்டாள். உடனே தம்பிக்கு அழைத்து பேசினாள். அவனும் பொறுப்பாக பதில் சொன்னான்.. “ஆமாம் அக்கா.. அதான், அவங்களை வேலையிலிருந்து எடுத்துட்டோம்.. அதான் அந்த நோட்டீஸ்.. அம்மா கிட்டயும் சொல்லிடு.. வீட்டுக்கு யாராவது வந்தால் விடாதே.. கூர்க்கா இருக்காங்க.. இருந்தாலும்.. தெரியாத ஆட்கள் வந்தால் கூப்பிடு க்கா” என பொறுப்பாக பேசினான்.

ஜெய்ந்தினிக்கு அப்படியா என கேட்டுக் கொண்டாள். ஆனால், அன்று இரவு.. எப்போதும் போல, வசீகரன் அழைக்கவும் தனக்கு தெரிந்ததை சொல்லினாள் தன் நண்பனிடம் ஜெயந்தினி.

ஆனால், வசீகரன் சிரித்தான் கேலியாக. ஜெயந்தினி “எதுக்கு இப்படி சிரிக்கிறீங்க.. பாவம் என்தம்பி எப்படி கண்டிபிடிச்சான் பார்த்தீங்களா..” என பெருமையாக கர்வமாக அவனை வம்பிழுத்தாள் இன்று, விளையாட்டாய். 

அவர்களுக்குள் விளையாட்டாய் வம்பிழுப்பதும் இப்போதெல்லாம் நடக்கிறதுதான். ஆனால், இது இப்படி.. இந்த வரைமுறைக்குள் தங்களின் உறவு.. நட்பு.. என அவர்கள் இன்னும் வரைமுறைப்படுத்திக் கொள்ளவில்லை. எனவே, இன்றும் விளையாட்டாய் பெண்ணவள் பேசினாள்.

வசீகரன் “ம்.. அவ்வளவுதான் சொன்னானா உன் தம்பி..”என்றான் கேள்வியாய்,

ஜெயந்தினி “ம்.. வேற என்ன” என்றாள் பெருமையாக.

வசீகரன் “ஊரே இன்னிக்கு அவனை பற்றிதான் பேசுது தெரியுமா.. என்ன என்ன செய்திருக்கான் தெரியுமா உன் தம்பி.. தில்லு அவனுக்கு.. குமரனை மிரட்ட.. அவரோட மாமனாரை தன்னோட கஸ்டடியில் வைத்திருந்திருக்கான்.” என அங்கு நடந்ததை சொன்னான் தன் தோழியிடம்.

ஜெயந்தினி “இல்ல.. அவன் சின்ன பையன், உங்ககிட்ட” என தயங்கியபடியே சொல்ல.

வசீகரன் “யாரு சின்ன பையன்.. குமரன் தப்பு செய்தான்தான், யாரும் இல்லைன்னு சொல்லல.. அதுக்காக குடும்பத்தை கூட்டி வந்து.. அசிங்கபடுத்தலாமா.. அவங்க இவனின் மேல் கம்பைன்ட் கொடுத்தால் என்ன செய்வான்.. இல்லை, நீங்க போற வர இடத்தில் பிரச்சனை செய்தால் என்ன செய்வான். நீ வெளிய எங்கேயும் போகும் போது பிரச்சனை வந்தால்.. அவங்க எல்லாம் எப்படி வேணாலும் இறங்குவாங்க.. இவன் போலீஸ் போய் கம்ப்பைன்ட் செய்ய வேண்டியது தானே.. இல்லை, நம்ம அசோசியேஷயன் இருக்கு.. ஒரு நாலு பெரியவங்களை வைத்து பேசி முடிச்சிருக்கலாம்.. ஈசியாக செய்ய வேண்டியதை, எப்படி  காம்ப்ளிகேட் செய்திருக்கான் தெரியுமா?. இவன் கம்பெனியில் மட்டும்தான் நடக்குதா.. எல்லா இடத்திலும், ஒரு நெருக்கடி இருக்கத்தான் செய்யுது. இப்போது இவனை யார் நம்புவர்.. நாளைக்கு வரவு செலவில் இழுபறி வந்தாலும்.. இவன் ஏதாவது செய்திடுவான்னு பயம் வரும்.. யார் பிஸினெஸ் செய்வா?..  அதைவிட.. வீட்டு பெண்கள் குழந்தைகளின் பாதுகாப்பை பார்க்க வேண்டாமா.. எப்போதும் இவன் கூடவேவா இருப்பான்.” என நிதர்சனத்தை சொல்லி முடித்தான் நண்பன்.

ஜெயந்தினி அமைதியாக அமர்ந்துவிட்டாள்.. ‘இதில் இவ்வளவு இருக்கா.. எனக்கு, தம்பி சொன்னது மட்டும்தானே தெரியும்’ என யோசனை வந்தது.

வசீகரனுக்கு சற்று நேரம் ஆனது.. தன் வருத்தம் தீர.. தோழியிடம் சொல்லக் கூடாது எனத்தான் இருந்தான்.. ஆனால், தொழில் வட்டத்தில்.. நல்லவிதமாக பேசினாலும் ‘இப்படிதான் இருக்கணும்..’ என கபாலிக்கு ஆதரவு  இருந்தாலும். என்னமோ சரியில்லை எனத்தான் அவர்களின்.. அதாவது வசீகரனின் தந்தை ஆதிகேசவன் நினைத்தார்.

அவருக்கு, கொஞ்சம் சந்தேகம்தான், அந்த குமரன் மேல். என்னவாகிடும்.. எப்படி இருந்தாலும்.. பொதுவில் வரும்போது பேசிக்கலாம்.. எச்சரித்து விட்டுவிடலாம்.. என எண்ணினார். ஆனால், அதன் பாதிப்புகள் தெரியாது அவருக்கு.. எதோ, தன் நண்பனுக்கு தெரியாமல் சின்ன சின்ன சரக்குகளை எடுத்திருப்பான் எனத்தான் நினைத்தார், அதனால் அப்படி நினைத்தார்.

இப்போது, இன்று காலையில்.. நடந்தவைகள் எல்லாம் பொதுவெளியில் பேசப்பட்டதும்.. அதிர்ந்தனர் ஆதிகேசவன். ‘பாருடா.. மொத்தத்தையும் வளைக்க நினைச்சிருக்கான்’ என அதிர்ந்தனர். 

ஆனாலும், கபாலியின் செயலை இன்னும் எதிர்த்தனர்.. இதை இப்படி அவன் செய்திருக்க கூடாது.. இது பின்விளைவுகளை தரும்.. கண்டிப்பாக  இவ்வளவு தண்டித்திருக்க கூடாது அவனை.. இது கபாலியின் தொழிலை பாதிக்கும்.. பாரு சிறுபையன்னு காட்டிட்டான்..’ என கபாலி மீதுதான் விமர்சனம் அதிகமாக வந்தது.

அதனால், வசீகரனுக்கு.. அவனின் தொலைநோக்கு பார்வையில்.. இப்படி ஒரு கெட்டபெயர்.. கபாலியின் செயலில், அது எப்படி தங்களை பாதிக்கும் எனத்தான் யோசனையே.. வருத்தமே.. மற்றபடி, கபாலியின் துணிச்சல் அவனுக்கு பிடிக்கத்தான் செய்தது. எனவே, இப்போது சற்று நேரம் முன்.. தன்னையறியாமலே பொங்கிவிட்டான் தோழியிடம்.

இப்போது ஜெயந்தினி “இப்போ என்ன பண்றது.. போலீசுக்கு போகிடலாமா” என்றாள் கவலையாக.

இப்போதுதான் தன்னிலையிலிருந்து வெளியே வந்தான் வசீகரன்   “ஹேய்.. இனி, க்கும்.. ஜெயந்தி.. இதென்ன.. விடு, நான்தான் கொஞ்சம் ஓவரா பேசிட்டேன்.. விடு.. அதெல்லாம் அவன் பார்த்துப்பான்.. அத்தோடு, எதுவும் ஆகிடாது. அசோசியேஷயன் அவனுக்கு சப்போர்ட் பண்ணும்.. நாங்க.. இன்னும் நிறையப்பேர் இருக்காங்க.. ஜெயந்தி, அது எல்லாம் சரியாகிடும்.. விடு..” என்றான்.

ஜெயந்தினி “ஆனாலும், அவன் செய்தது சரியில்ல தானே” என்றாள்.

வசி “அப்படி எல்லாம் இல்ல..” என கொஞ்ச நேரம் பேசினான்.

ஜெயந்தினிக்கு வருத்தமே மிஞ்சியது.. யார் பேசியிருந்தாலும்..  அவளுக்கு தம்பி செய்தது தவறு என வருந்தியிருக்க மாட்டாள். ஆனால், தன்னுடைய தோழன் வசி சொல்லவும்.. அவளால் தம்பி செய்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

வசீகரன் இறுதியாக “இங்கபாரு, அவன்கிட்ட ஏதும் கேட்க்காத.. உனக்கு தெரிந்ததுன்னு, அவனுக்கு தெரிந்தால்.. அப்புறம் அவன் வீட்டில் நடமாட.. ஏதாவது பேசவே கஷ்ட்டபடுவான். அவனாக சொன்னால்.. கேட்டுக்க.. நீயே ஏதும் கேட்காத..” என்றான். 

ஜெயந்தினிக்கு இதெல்லாம் தெரியவில்லை.. தம்பி வீடு வந்ததும் சண்டை போடனும்ன்னுதான்  இருந்தாள்.. இப்போது தோழன் இப்படி சொல்லவும்.. முன்பே அவன்மேல் இருந்த ஒரு தோழமை.. இப்போது இன்னும் வலுபெற்றது.. ‘எவ்வளோ யோசிக்கிறான்.. எங்களுக்காக..’ என சட்டென மனதுள்.. ஜில்லென நுழைந்துக் கொண்டான், அவளுக்கே தெரியாமல். 

இப்போது “ம்.. கேட்க்கலை.. சாப்பிட்டாச்சா.. “ என எப்போதும் அவர்களுக்குள் எழும் பேச்சுகளை பேசத் தொடங்கினர்.

!@!@!@!@!@!@@@!@!@!@!@!

அடுத்தடுத்த நாட்களில் வேலைக்கு எல்லோரும் நேரமாக வந்தனர், கபாலியின் அலுவலகத்தில். முதலில் அலுவலகத்தின் வரைமுறை செயல்பாடுகளை வாய் வார்த்தையாக சொன்னார், ஆனந்த். அத்தோடு, நேற்றுவரை தன் கண்களால் பார்த்த.. நிலவரத்தையும் சொன்னார். சொன்னது எதுவும் பொய்யாகவில்லை. குடோன் காலியாக இருந்தது. ஆர்டர்ஸ் வரவேயில்லை இந்த இரண்டு மாதத்தில். குவாரி மட்டும் இரவு பகலாக ஆட்களை வைத்து வேலை நடந்தது என ஆனந்த் சொன்ன எதுவும் பொய்யாகவில்லை.

கபாலிக்கு இருந்த கோவத்தையும்.. வருத்தத்தையும் இந்த நிகழ்வுகள் அதிகரித்தது.  அவனால் இப்போது வாய்திறந்து பேசவோ.. கையோங்கி தவறு செய்தவர்களையோ அடிக்கவோ முடியாதே.. எனவே, பொறுமையாக இருந்தான். 

இயற்கை கபாலிக்கு கை கொடுத்தது.. அவர்கள் எடுத்து சென்றது பெரிய இழப்புதான்.. நட்டம்தான். ஆனாலும், கபாலி மனம் தளராமல் உழைக்க தயாரானான். அன்று வந்து வட்டி கேட்டவர்களிடமே.. இப்போது இன்னும் கடன் வாங்கினான். வேறு வழி இருக்கவில்லை. அவர்களும் அந்த கம்பெனியின் அருமை புரிந்ததால்.. கொடுத்து உதவினர். மாதம் ஆனால், வட்டி என லட்சங்களில் வருகிறதே.. அதனால், யோசிக்கவில்லை.. கபாலிக்கு ஒரு நம்பிக்கை கிடைத்து. இறங்கி வேலை செய்தான்.

கபாலியின் ஆரம்பம் இப்படிதான்.. தன்னுடையதை தக்க வைக்கவே போராட வேண்டிதான் இருந்தது. என்னவென யோசித்து யோசித்து தன்னுடைய தொழிலை நடத்த வேண்டி இருந்தது அவனுக்கு.

நாளுக்கு நாள் அவனுக்கு பிரச்சனைகள்தான். இயல்பாக தொழில் செய்பவர்களை விட.. இவனின் பிரச்சனை நீண்டது. ஆனாலும் சமாளித்தான் அவன். சிலவற்றை அடிதடியாக.. சிலவற்றை பேசி.. சிலவற்றை மீட்டிங்.. மிரட்டல் என பலகோணங்களில் சமாளித்தான், இந்த வருடங்களில்.

Advertisement