Advertisement

அந்த குமரன் அட்வகேட் “ம்.. அதான்.. க்கும், ஆனாலும், இன்னும் 1 1/2 வருடம் எங்களுக்கு பவர் இருக்கு..” என்றனர்.

கபாலியின் அட்வகேட் “அப்படி இருக்காதே.. பையன் படிக்கிறான்..  பொண்ணும் படிக்குது.. அவருக்கு உடம்பு சரியில்லை அவ்வளவுதானே.. நீங்க  என்ன, என்ன என்னமோ சொல்றீங்க, எங்க பத்திரம்..” என்றார்.

“நாங்களும் பத்திரமில்லாமலா சொல்றோம்.. வருது.. எங்க சீனியர் கிட்ட இருக்கு.. ஆனால், அதற்குமுன் குமரனின் மாமனாரை விடுங்க.. இது நல்லா இல்லை.. நாங்கள் எங்கள் பக்கமிருக்கும் நியாத்திற்கு கம்ப்ளைன்ட் கொடுத்தால், அவ்வளவுதான்.. இந்த படிக்கும் பையனின் வாழ்க்கை. அதற்குதான் பேசாமல் இருக்கோம்..”  என்றார் நல்லவர்களாக.

கபாலி “கொடுக்க வேண்டியதுதானே.. முதலில் செய்ங்க போங்க.. சர், என்ன இருக்கு எதுக்கு இங்க இருக்காங்கன்னு கேளுங்க சர்..” என்றான் எரிச்சலாக.

கபாலியை தொடர்ந்து, அவனின் அட்வகேட் “இங்க பாருங்க.. நீங்க ஏன் கம்ப்ளைன்ட் கொடுக்கலை.. பேசாமல் அதை செய்ங்க.. இது என்னான்னே புரியலை.. “ என்றார்.

அடுத்து அடுத்து அவர்களும் குமரனின் மாமனாரை விடுங்கள்.. என எரிச்சலாக பேசினர். கபாலி முடியாது என நின்றான்.

வேறு வழியில்லாமல்.. ஒரு பத்திரம் எடுத்து வைத்தனர், அவர்களின் அட்வகேட், அதில் ரமணின் கையெழுத்து இருந்தது. ஒரு நகல் இவர்களுக்கு கொடுத்தனர்.

கபாலியின் அட்வகேட் அதை வாங்கி படிக்க.. எல்லாம் குமரனுக்கு சாதகமாகத்தான் இருந்தது.

கபாலியின் அட்வகேட், விரிவாக படித்து விட்டு.. தங்களுக்குள் கலந்தாலோசிக்க எண்ணினார். எனவே, எல்லோரும் தனியாக “அது கபாலி, எல்லாம் தப்பா இருக்கு. பவர் மட்டும் அவங்களுக்கு. நிர்வாகம் அவங்க பொறுப்புதான்னு இருக்கு. அவங்க, இங்க இருக்கலாம்ன்னு இந்த பேப்பர் சொல்லுது.” என்றார். 

கபாலி சொன்ன அவரை முறைத்தான். 

அட்வகேட் “நா.. ம.. கொஞ்சம் பொறுமையாகத்தான் இருக்கணும். அப்பா பெயரில் இருக்கும் அக்கௌன்ட்’டை, உன் பெயரில் மாற்றிக்க.. அடுத்த ஒரு மாதத்தில்.. ரமணனின் டெத் செர்டிபிகேட் வைத்து.. உன் பெயருக்கு எல்லாம் மாற்றிடலாம். நீ ஒன்னும் கவலை படாதே.. ஒரேமாதம் இதை ஒன்றுமில்லாமல் செய்துகிறேன்” என்றார்.

கபாலிக்கு இந்த காகிதத்தின் மேல் நம்பிக்கை இல்லை. இதையெல்லாம் கேட்கும்  பொறும்மையும் இல்லை அவனுக்கு. ‘இவர்கள் இன்னமும் இந்த கம்பெனியில் வேலை வேறு செய்வார்களா.. ஒருமாதம் ஆகுமா.. என் பெயரில் எல்லாம் மாறுவதற்கு. என் அப்பன் சொத்தை.. இவர்கள் எடுத்துக் கொண்டு.. என்னிடமே ஆட்டம் காட்டுகின்றனரே’ என தோன்ற.. கபாலி போன் செய்தான்.. யாருக்கோ.. “டேய், அந்தம்மாவை.. கூட்டிட்டு வந்திடுங்க டா..” என்றான்.

தாங்கள் இருந்த அறையிலிருந்து வெளியே வந்தான். அவனின் ஆட்கள் எல்லோரும் நிற்க.. எல்லோரையும் ஓரு பார்வை பார்த்தான். யார்யாறேங்கு இருக்கிறார்கள் என ஆராய்ந்தான்.

மதியம் மணி பனிரெண்டு. கபாலியின் ஆட்கள்.. அதாவது, கம்பெனியில் வேலை செய்பவர்கள் என யாருமில்லை.. இவன் உதவிக்கு வந்திருந்த ஆட்கள் மட்டும்தான் இருந்தனர். ஒன்றும் வேலை நடக்கவில்லை.. மார்கெட்டில் இருக்கும் கடை என்பதால் திறந்து வைத்திருந்தனர்.. ஆபீஸ் போன்ற அறை, ரோட்டின் புறம் இருக்கும்.. இவர்கள் குடோன் போன்ற.. அமைப்பில் பேசிக் கொண்டிருந்தனர்.. அது சற்று உள்ளே தள்ளி இருக்கும்.

இப்போது கபாலி எந்த யோசனையும் இல்லாமல்.. மேனேஜரின் அருகில் வந்தான். குமரனின் ஆட்கள் எல்லோருக்கும்.. இவன் எதோ சமரசம் பேசத்தான் வருவான்.. என எண்ணி கிண்டலாக குமரன் “என்ன கபாலி, கம்ப்ளைண்ட் கொடுக்கலாமா” என்றார்.

காபலியின் ஆட்கள் எல்லோரும் பார்த்துக்கொண்டே இருக்க.. கபாலி, குமரனின் பேச்சை கேட்டவன் மேனேஜரின் கையை பிடித்து முறுக்கினான்.

மேனேஜர் “ஆஆஆஆ..” என அலற..

குமரன் “ஹேய்… என்ன பண்ற” என்றார்.

இப்போது கபாலியின் ஆட்கள், அவன் அருகில் வர.. மேனேஜரை  “பிடிங்கடா இவனை..” என்றவன், தன் ஷர்ட்டின் காலர் பட்டன்’னை கழற்றி விட்டுக்கொண்டே ”ஆனந்த்.. எல்லா பக்கமும் க்ளோஸ் பண்ணுங்க.. ம்.. நம்ம பசங்க இன்னும் வருவாங்க.. அவங்களை அப்படியே.. வாசலில் கூட்டமாக ஆங்காங்கே நிற்க சொல்லுங்க..” என்றவன்.

கபாலி தன் அட்வகேட் பார்த்து “என்ன அங்கிள்.. ஏதாவது பாண்ட் பேப்பர் இருக்கு உங்ககிட்ட “ என்றான். 

இப்போது குமரன் தன் அலைபேசியில் யாரையோ அழைக்க “பிடிங்க அவனை” என மரியாதையே இல்லாமல் கத்தினான்.

உடனே ஆட்கள் பிடிக்க.. “எல்லோர்கிட்ட இருந்தும் போன் வாங்குங்க..” என்றான்.

கபாலி “ஏன் டா.. நான் உங்ககிட்ட கெஞ்சிகிட்டு நிக்கனுமா.. அய்யா சாமி என கம்பெனியை எனக்கு கொடுன்னு கெஞ்சனுமா” என்றவன் ஓங்கி இத்தனை நேரமிருந்த ஆத்திரத்தில்  ஒரு அரை வைத்தான் குமரனை.

அந்த இடமே அமைதியானது. சூப்பர்வைசரும்.. இன்சார்ஜ்ம்.. “ஹேய்.. என்ன “ என முன்னே வர.. கபாலியின் ஆட்கள் அவனை பிடித்தனர்.

கபாலி “என்ன இது உன் அப்பன் கம்பெனின்னு நினைச்சியா.. என்னோடது. என்னமோ கத்தற.. அல்லகைகளா..” என்றவன் ஓங்கி ஒரு அரை வைத்தான் சூப்பெர்வைச’ரை.

கபாலியின் நண்பனின் தந்தை “வேண்டாம் கபாலி, அவங்கதான் எதோ ஆசையில் செய்தால், நாமும் தரம் மீறி செய்ய வேண்டாமே.. “என்றார்.

கபாலி “அடுத்தவன் சொத்துக்கு ஆசை படுபவனுக்கே இத்தனை திமிர்னா.. எனக்கு எவ்வளோ இருக்கும்.. போங்க அங்கிள்” என்றவன் இப்போது இன்சார்ஜ்’சை ஒரு அரை வைத்தான்.

கபாலி மீண்டும் அட்வகேட்டிடம்.. “இப்போவே எழுதி வாங்குங்க.. எனக்கு என்பெயரில்  எல்லாம் இருக்கணும்.. அதுக்கு என்ன வேண்டும்.. உடனே பண்ணுங்க.. ஆனந்த்.. என்ன வேண்டும்ன்னு கேட்டு எல்லாம் வாங்கிக் கொண்டுங்க..” என்றான், இருவரையும் பார்த்து சொன்னான்.

குமரன் “உன் மேல கடத்தல் கேஸ் பையில் பண்ண சொல்லிட்டேன்.. போலீஸ் வந்திடும் உன்னை தேடி..” என்றார்.

கபாலி “சரிவரட்டும்.. நான் பார்த்துக்கிறேன்..” என்றான் திமிராக. மீண்டும் “நீ இந்த இடத்திலிருந்து போகணும்ன்னா.. எல்லாத்தையும் எனக்கு கொடுத்துட்டுதான் போகணும், ஒன்றையணா பேப்பரை வைச்சிகிட்டு.. என்கிட்டேயே  என் கம்பெனியை சொந்தம் கொண்டாடுற..” என்றான் வெறியான குரலில்.

கபாலி “என்ன சர்.. இவனுங்ககிட்ட இந்த பத்திரம் செல்லாதுன்னு இப்போவே எழுதி வாங்குங்க.. இப்போவே..” என காட்டு கத்து கத்தினான்..

அட்வகேட் “சரிதான்.. அதை ரிஜிஸ்ட்டர் பண்ணனும்.. இன்னிக்கே முடியாதே” என்றார்.

கபாலி “எழுதி வாங்கங்குங்க, ரிஜிஸ்ட்டர் ஆகும்வரை.. குமரனோட பொண்டாட்டி.. பிள்ளை எல்லாம் நம்ம பொறுப்பில் இருப்பாங்க.. நீங்க கையெழுத்து வாங்கும் வழியை பாருங்க” என்றான் வெறியாட்டம் ஆடுபவனாக..கண்மண் தெரியவில்லை அவனுக்கு.

குமரன் ஸ்தம்பித்தார், கபாலியை பார்த்தார்.. சிறுபையன் கண்ணை கசக்கிக்கொண்டு.. மூக்கை உறிஞ்சிக் கொண்டு.. படிக்க சென்றிடுவான் என எண்ணியவன்.. இப்போது பார்வையால் எரித்தான்.. வார்த்தையால் வஞ்சித்தான், அவரை.

கபாலி அங்கிருந்த அத்தனை நபர்களையும் ஆட்டி வைத்தான்..  யாருக்கும் காலையிலிருந்து, அன்னம் தண்ணி இல்லை. வெறியாக நடமாடினான்.. சீறினான் எல்லோரிடமும். வாலிபன் என்ற பாவனை அவனின் தோற்றத்தில் எங்கும் காணவேயில்லை. தேர்ந்த கொள்ளைகாரனாக.. கொடியவனாக மாறி போனான் இந்த வாலிபன்.

கபாலியின் அட்வகேட்’க்கும் மறுத்து பேசும் எண்ணமில்லை.. வேலைகள்  நடக்க தொடங்கியது. கபாலியின் வீட்டுக்கு ஒரு ஆள் சென்று, ரமணனின் டெத் செர்டிபிகெட் வாங்கி வந்தனர்.. ஒருவர் நோட்டரியை அழைக்க சென்றார்.

எல்லோருக்கும் டீ வடை என உண்ண குடிக்க எதோ ஒன்று வந்தது. ஆனந்த் ஏற்பாடு செய்தார்.

கபாலியின் வழக்கறிஞ்சர் சொன்னபடி.. பத்திரம் தயாரானது. குமரன் சூப்பெர்வைசர், இன்சார்ஜ், மேனேஜர், ஆடிட்டர் இவர்கள் அனைவருக்கும் *** இந்த் கம்பெனிக்கும் சம்மதம் இல்லை எனவும், அவர்கள் வசம் இருக்கும் கம்பெனியில் எல்லா கணக்குகளையும் ஒருமாதத்திற்குள் ஒப்படைக்க வேண்டும், இனி இந்த கம்பெனிக்கும் அவர்களுக்கும் சம்பந்தம் இல்லை என..  இன்ன பிற செய்திகளையும் தாங்கிய முழுநீள பத்திரம் ஒன்று தயாரானது.

மாலை ஏழு மணிக்கு அந்த பத்திரம் கையெழுத்தானது. எந்த வகையிலும், இந்த கம்பெனிக்கும் இவர்களுக்கும் சம்மந்தம் இல்லை… என நாளை நாளிதழில் விளம்பரம் கொடுக்கவும் முடிவானது.

கபாலி தன்னுடைய பரந்த திடலில்.. வெறி அடங்கியவனாக.. கையெழுத்திட்ட அனைவரையும் முறைத்துக்கொண்டே நின்றான்.

குமரனின் ஆடிட்டர் “இங்க பாரு தம்பி..எதோ சாதிச்சிட்டதா நினைக்காத.. இந்த் கம்பெனியை மீட்டெடுக்க உன் ஆயுள் முழுவதும் செலவாகும்.. ம்.. இங்க உனக்கு ஏதும் தெரியாது.. உன்னால் தெரிஞ்சிக்கவும் முடியாது.. இனியும் நீ கஷ்ட்டபடுவ” என்றார்.

கபாலி திமிராக நின்றான்.. “ஹா… என்ன வயிறு எரியுதா.. அடுத்தவன் சொத்தை பிடுங்கும் உனக்கே வயிறு எரியுது.. சாபம் விடுற.. ஹா.. பார்க்கலாம்டா.. இது என்இடம்.. இங்கதான் இருப்பேன்.. நீதான் ஓடி ஒழியனும். அதனால.. அப்போ அப்போ வந்து பார்.. எப்படி இருக்கேன்னு” என்றான் திமிராக.

“நூறாக படை நூறாக..

தொட்ட இடமெல்லாம் தூளாக..

நேராக வழி நேராக..

வெல்லலாம் தாறுமாறாக..”

 

Advertisement