Advertisement

நான் உன் நிறையன்றோ!..

6

வசீகரனுக்கு, வைகறையிலே அழைத்துவிட்டாள் ஜெயந்தினி. தன் தம்பி எங்கிருக்கிறான்.. என்ன.. என ஏதும் தெரியவில்லை. அன்னைக்கு, காலையில் தன் தம்பி அனுப்பியபடி சொல்லி வைத்திருக்கிறாள். ஆனால், வசீகரன் சொல்லியது, அவளுக்கு தெரியுமே, அதனால்.. என்ன ஆகிற்று என கேட்க அழைத்தால் தம்பி போனை எடுக்கவில்லை. இரவு முழுவதும் ஜெயந்தினிக்கு பயம்.. இமை மூடவில்லை அவள். அதனால் ஐந்து மணிக்கு முன்பே, அழைத்துவிட்டாள்.. வசிக்கு.

வசீகரனும் எடுத்தான், ஜெயந்தினியின் நிலை புரிந்து, ‘ஒன்றுமாகாது..’ என ஆறுதலாக பேசினான். ஜெயந்தினி மிகவும் அழவே.. தானே பேசி, விவரம் கேட்டு சொல்லுகிறேன் என சமாதானப்படுத்தினான், அவளின் நண்பன் வசி.

அப்போதே கபாலியின் எண்ணுக்கு அழைத்தான். கபாலி யாரிது என யோசனையோடுதான் எடுத்தான். உறக்கமேயில்லை அவனுக்கு. என்ன இருக்கும் இவர்களிடம்.. என்ன வடிவிலிருக்கும்.. எப்படி நாளைய விடியலை எதிர்கொள்வது.. என சிந்தனைதான் அந்த வாலிபனுக்கு. ஆனால், வழி ஏதும் தெரியவில்லை.. தன்னை அறியாமல் கண்ணசந்த நேரம்.. வசியின் எண்ணிலிருந்து அழைப்பு வந்தது, கபாலிக்கு. நிறைய தயக்கத்தோடு அந்த அழைப்பை ஏற்றான் கபாலி.

வசி “ஹெலோ, கபில் தானே” என்றான்.

கபாலி “ம்.. நீங்க யாரு” என்றான் விசாரணையான குரலில்.

வசி “நான் உன் அக்கா ஜெயந்தினியின் ப்ரெண்ட்.. வசீகரன்” என்றான் குரலில் தடுமாற்றமோ,  இலகு பாவமோ இல்லாமல்.

கபாலி “ஒகே.. எனக்கு எதுக்கு போன் பண்ணீங்க” என்றான்.

வசீகரன் “இல்ல கபில், அவங்க ரொம்ப பீல் பண்றாங்க.. அதான் என்ன ஆச்சுன்னு கேட்கலாமேன்னு.. க்கும், நான்தான் சொன்னேன்.. இ.. இப்படி உங்க ஷாப்.. இல்ல, லாக் ஆகியிருக்குன்னு.. நான்தான் சொன்னேன். அதான்.. இப்போது அக்கறையாகவும் கேட்க்கிறேன்.. என்ன பிரச்சனை..” என்றான். 

கபாலி “நீங்க இந்த ஊரா.. “ என்றான் அவசரமாக.

வசி “ம்.. அப்புறம் எப்படி ஜெயந்தினியை எனக்கு தெரியும்..” என்றான்.

கபாலிக்கு,இந்த லாஜிக்’கை யோசிக்ககூட  தோன்றவில்லை.. அவன் “உங்களுக்கு ஏதாவது டிடெக்டிவ் தெரியுமா..” என்றான் தன் அக்காவின் நண்பன் எனவும், அப்படியே நம்பி பட்டென யோசியாமல் கேட்டுவிட்டான். அடுத்த ஷணம்தான் ‘ஐயோ.. யார் என்ன என தெரியாமல் கேட்டுவிட்டேனே..’ என தன் தலையை தட்டிக்கொண்டான்.

அதற்குள் வசி “ம்.. இருக்காங்க, ஆனால், தர்மபுரியில் இருக்காங்க.. நான் நம்பர் சென்ட் பண்றேன்.. வசீகரன்’ன்னு என் பேர் சொல்லுங்க போதும்.. என் ப்ரெண்ட்தான். ஆனால், பத்து மணிக்கு மேல பேசுங்க.. ரொம்ப அர்ஜென்ட்டா..” என்றான்.

கபாலி எப்படி சொல்லுவது என தெரியவில்லை.. “ம்.. க்கும், எனக்கு குழப்பமா இருக்கு.. நீங்க அக்கா ப்ரெண்ட்தானே.. எங்க இருக்கீங்க” என்றான். இப்போது அமர்ந்திருந்த இடத்திலிருந்து சற்று தள்ளி வந்தான். குரலிலும் குழப்பம்தான். யாரிடம் கேட்பது.. என்னவென கேட்பது.. இவரும்  நண்பரா.. தெரியாது.. ஆனால், அக்காவின் நண்பன் எனவும் பெரும் நம்பிக்கை வசீகரன் மேல் வந்தது.. ஆனாலும், அவரை பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டுமே.. எனவே, வினவினான்.

வசீகரன் “ஹேய்.. நான் *** கம்பெனி, ஆதிகேசவன் பையன்.. என்னை ஞாபகம் இல்லையா..” என்றான்.

கபாலி ஆதிகேசவன் என்ற பெயரை கேட்டதும் வாடி போனான், இருந்த குழப்பத்தில் இப்போது இதுவும் சேர்ந்துக் கொள்ள.. ’இவரிடம் இனி என்ன கேட்பது.. தேவையில்லையே..’ என தோன்றிவிட்டது. அமைதியானான் கபாலி.

வசீகரன் “என்ன.. கபில்.. ஞாபகம் இல்லையா” என்றான், இளையவனின் அமைதி பார்த்து.

கபாலி, இந்த அமைதியான குரலை கேட்டவனுக்கு சட்டென போனை வைக்க மனதில்லாமல் “ஓகே.. ஒன்னும் பிரச்சனையில்லை.. அக்கா கிட்ட நான் பேசறேன்.. நீங்க கால் செய்ததுக்கு தேங்க்ஸ்.. எனக்கு செகண்ட் கால் வருது.. அப்புறம் பேசறேன்.” என்றவன் “பை.. வசீகரன்” என்றான், எதிர்முனையில் பேசுபவரின் பதிலை வேண்டாதவனாக, போனை கட் செய்தும்விட்டான்.

வசீகரனுக்கு என்னமோ போலானது.

கபாலிக்கு தலையே வலித்தது.. ‘யாரப்பா எனக்கு உதவுவார்கள்’ என மேலே பார்த்து வினவினான். ‘இதோ விடிகிறதே இந்த விடியல்.. எனக்கு என்ன வைத்திருக்கும்.. இந்த மண்.. கல்.. எனதில்லை என்றிடுவரோ.. இந்த பரந்த திடலும்.. பல இயந்திரங்களும் எனதில்லை என ஆகுமா..’ என அவனின் குழப்பம் நீண்டது.

இப்போது அவனின் அலைபேசி.. எதோ செய்தி வந்ததற்கான ஒலி எழுப்பியது. வசீகரன் அந்த டிடெக்டிவ் நம்பர் அனுப்பி இருந்தான்.. கபாலிக்கு.

கபாலிக்கும் அதை பார்த்து இன்னும் குழப்பம்தான்.. இதை ஏற்பதா வேண்டாமா என.

ஆனந்த் எழுந்து வந்தான் இப்போது “என்ன கபில் சர், என்ன செய்ய  போறோம்” என்றான்.

குமரன் இங்கேயே தனி அறையில் வைத்திருந்தனர். அவரிடம் பேச பேச.. எதோ பெரிய திட்டம் அவர்களுக்கு இருப்பதாக தோன்றுகிறது. எனவே, பேச விருப்பமில்லாமல்.. வந்த மூவரையும் தனியாக பிரித்து வைத்தனர்.

இப்போது, கபாலி “ஆமாம்.. நம்ம அட்வகேட் யாரு.. “ என கேட்டபடி.. அலுவலகத்தின் வரவேற்பறை நோக்கி நடந்தான்.

ஆனந்த் “ஏன் சர்,   இவ்வளவு செய்தவங்க.. அவரை மட்டும் விட்டு வைச்சிருப்பாங்களா..” என்றான்.

கபாலி நின்று திரும்பி பார்த்தான். அந்த பார்வை, தனது கடைசி ஆயுதமும் போய்விட்டதா.. எனத்தான் இருந்தது. 

ஆனந்த்  அதை உணர்ந்து “கபில், வேறு அட்வகேட் பார்க்கலாமே.. இப்போ நம்மிடத்தில் யார் எப்படின்னு தெரியாதே..” என்றார்.

கபாலி உங்களுக்கு தெரியுமா என்ற பார்வை பார்த்தான் ஆனந்தை. ஆனந்த் “உங்க அளவுக்கு பெரிய வக்கீல் எல்லாம் தெரியாது சர்.. வேணும்ன்னா கேட்டுப்பார்க்கிறேன்” என்றான்.

கபாலி தன்னுடைய நண்பன் உறவில் யாரோ இருக்கிறார்கள் என இந்த ஒருமாத உள்ளூர் நண்பர்கள் பழக்கத்தில் கேள்விபட்டிருந்தான், எனவே, நேரம் காலம் பார்க்காமல்.. அந்த நண்பனுக்கு அழைத்தான்.

அடுத்த அரைமணி நேரத்தில் ஊரில் மிக பிரபலமான அட்வகேட் கிடைத்துவிட்டார் கபாலிக்கு. நண்பனின் தந்தை அழைத்து கபாலியிடம் பேசினார்.. அவரிடம், இவன் கொட்டி தீர்த்தான். நல்லவேளை, அவருக்கு, கபாலியின் நிலை புரியதான் செய்தது. ஆனாலும், இப்படி நீ எல்லோரையும் பிடித்து வைத்திருப்பது நல்லதல்ல.. விட்டுடு.. நாம் என்ன என்றாலும் பேசிக்கலாம்.. என் மச்சான் செய்து தருவான்..’ என அறிவுரை சொன்னார்.

கபாலி எல்லாவற்றுக்கும் ‘ம்.. ம்… “ என்றான் எதிர்த்தும் பேசவில்லை, சமாதானமாகவும் பேசவில்லை. அந்த நண்பரின் தந்தை புரிந்தது போல.. மேற்கொண்டு, ஏதும் பேசாமல்,  தானே வக்கீளோடு வருவதாக சொல்லி, போனை வைத்தார்.

ஆக, கபாலிக்கு, தன் நண்பரின் தந்தை மூலம் ஒரு விடிவு கிடைத்தது. குமரன் போன் செய்து அவ்வபோது மேனேஜர் எங்கிருக்கிறார்.. தன் மனைவி, எப்படி இருக்கிறாள் என பேசிக்கொண்டே இருந்தார். தன் மச்சினரிடம் ‘தேவைபட்டால்.. போலீஸ் கம்பளைன்ட் கொடுக்கணும்.. மச்சான். நான் இங்கதான் இருக்கேன்.. ஒன்னும் பிரச்சனையில்லை. மாமா நல்லா இருக்கார்..’ என சொல்லி வைத்திருந்தான்.

ஆக, ஆளுக்கொரு யோசனையில் இருந்தனர்.

காலை.. பத்து மணி.

கபாலியின் அட்வகேட், நண்பரின் தந்தையோடு வந்து சேர்ந்தார். வந்தவர்.. முதலில்.. கபாலியிடம் விவரம் கேட்டுக் கொண்டார். அடுத்து, அவனின் அம்மாவிற்கு அழைத்து பேசினார். கபாலி தயங்கினான். ஆனாலும், உன் அப்பாவின் நிலை என்ன.. என நாம் கணிப்பதை  விட உன் அம்மா  சொல்லுவதுதான் சரிவரும். உண்மை நிலையை சொல்லி கேளு.. அவர் வருத்தப்பட்டாலும்.. பரவாயில்லை.. நம்மிடம் வேறு, எழுத்து பூர்வ ஆதாரம் எதுவுமில்லை.. அதனால், என்ன நடந்ததுன்னு கேளுங்க கபாலி” என்றார்.

கபாலி இப்போது அக்காவிடம் அழைத்து பேசினான்.. அன்னையிடம் விவரம் கேட்க்கச் செய்தான். பாவம், அப்பாக்கு உடம்பு சரியில்லைதான், ஆனால், அவரேதும் எழுதி கொடுக்கலை ப்பா.. உனக்குத்தான் எல்லாம்’ என்றார் பதறியவறகாக.

கபாலி முறைத்தான்.. தன் நண்பனின் தந்தையை. எல்லோருக்கும் மீண்டும் வழியில்லா நிலை. எல்லோரின் முகத்திலும் பீதி. அதை யாரும் காட்டிக் கொள்ளாமல் மறைத்து.. அங்கே நின்று, இங்கே நின்று.. என மேனேஜரின் வரவுக்காக காத்திருந்தனர். ஆக, கபாலியின் கையில் ஒரு ப்ரூப்பும் இல்லை.

மேனேஜர் வைரமுத்து.. அட்வகேட்.. ஆடிட்டர்.. எல்லோரும் வந்து சேர்ந்தனர் கூட்டமாக.

கபாலி, ஒய்ந்த தோற்றத்தில் இருந்தான்.. அதை வெளியே தெரியாமல்.. மறைத்துக் கொண்டு.. முறைப்பாக வந்தவர்களை பார்த்தான். வந்தவர்கள் இங்கே வந்து, குமரனிடம் பேப்பர்ஸ் எல்லாவற்றையும் காட்டிக் கொண்டிருந்தனர், மூவரும். அவர்களிடம் திமிரான அலட்சியமான பார்வைதான் இருந்தது.

கபாலியின் அட்வகேட் “சொல்லுங்க.. என்ன பிரச்சனை” என்றார்.

குமரனின் அட்வகேட் “நீங்க யார் அதை கேட்க” என்றார். 

கபாலிக்கு கோவமாக வந்தது “என்ன என்ன.. பேச்சு இது, உங்களை எல்லாம் யாருன்னு தெரியாமல் உள்ளே விட்டுட்டார் எங்க அப்பா.. இவனுங்க எல்லாம் யாரு நீயின்னு எங்களை கேட்க்கிரானுங்க” என்றான் சத்தமாக.. எரிச்சலாக.

குமரனின் குரூப் குரூரமாக சிரித்தது.

கபாலியின் நண்பனின் தந்தை அமைதிபடுத்தினார் எல்லோரையும்.

ஆனாலும் இப்போது முறையான அறிமுகம் நடந்தது. இப்போது குமரனின் அட்வகேட் பேச தொடங்கினார் “இங்க பாருங்க.. இதில், ரமணன் கையெழுத்து இருக்கு. அவர் சுயசம்பாதியத்தில் சம்பாதித்ததை.. தன் மேனேஜருக்கு எழுதி வைத்திருக்கிறார்.” எனவும்.

கபாலியின் அட்வகேட் குறிக்கிட்டு “பவர் மட்டுமா.. இல்ல, எல்லாத்தையுமா” என்றார்.

.

 

Advertisement