Advertisement

நான் உன் நிறையன்றோ!

19

கபாலி, எப்போதும் போல காலையில் எழுந்து ஜாக்கிங் சென்றுவிட்டான். மயூராவிற்கு இன்று மிகவும் தாமதமாக எழுந்தாள். என்னமோ விழிப்பே வரவில்லை. 

கபாலி, ஜாகிங் முடித்து வந்து குளித்து.. உடைமாற்றி.. தயாராகியும் மயூரா விழிக்கவில்லை. கபாலிக்கு அவளின் அருகில் செல்ல கொஞ்சம் முரண் வந்தது. ம்.. இப்போதிக்கு அவள் தன்னை தரமாட்டேன் என சொல்லிவிட்டாளே, அதனால் ஒரு வீம்பு எதற்கு  அவளை பார்ப்பானே! என வீம்பு. போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டு.. உறங்கிக் கொண்டிருந்தவளை தொந்திரவு செய்யாமல் கீழே சென்றான் கபாலி.

மகேஸ்வரி “என்ன டா, மயூவை காணோம்.. இன்னிக்கு, அவங்க வீட்டுக்கு விருந்துக்கு போகனுமே டா, இன்னுமா கிளம்பலை.” என்றார்.

கபாலி “ம்மா… எனக்கு டிபன் கொடு. நான் கொஞ்சம் வெளிய போகனும்..” என்றான்.

மணி எட்டு. 

மகேஸ்வரி “எப்போ வருவ? இன்னிக்கு எந்த வேலையும் வேண்டாமே டா.. பெரியப்பா பெரியம்மா வந்திடுவாங்க, என்ன பதில் சொல்ல.. ஆனந்த் பார்க்க மாட்டாரா” என மகனை திட்டத் தொடங்கினார்.

கபாலி உண்பதற்கு மட்டுமே வாய் திறந்தான்.. அன்னைக்கு பதில் சொல்லவில்லை. உண்டு முடித்துவிட்டு, “வந்திடுவேன் ம்மா.. ரெடியாக இருங்க போலாம்..” என்றவன், கிளம்பிவிட்டான் அலுவலகம் நோக்கி.

கபாலிக்கு, இந்த வேலை எதிர்பாராததுதான். அரசு அலுவல் சார்ந்த ஏலத்திற்கான பேச்சு வார்த்தைக்கு, இன்றுதான் அந்த அலுவலர் நேரம் கொடுத்தார். காலையில்தான் செய்தி வந்தது ஆனந்த் மூலம். எனவே, அவசரமாக சென்றுவிட்டான்.

மயூரா அவசரமாக எழுந்து நேரம் பார்க்க. வெட்கமாகி போனது பெண்ணுக்கு. அலைச்சல்.. அத்தோடு, கணவனிடம் வாதாடியது எல்லாம் சேர, ஓய்வில்லாத நிலையில்.. அவளால் எழ முடியவில்லை.  இப்போது அவசர அவசரமாக குளித்து.. எல்லோ நிற கோட்டா காட்டன் புடவை, அதில் அழகான பச்சை கோடி போன்று எம்ப்ராயிடரி செய்த.. அழகான புடவை.. அதற்கு தோதான அணிமணிகள் அணிந்துக் கொண்டு, அவசர அவசரமாக கீழிறங்கி வந்தாள் பெண்.

மகேஸ்வரிக்கு, மருமகளை பார்த்ததும் இருந்த வருத்தம் எல்லாம் காணாமல் போனது.. நேற்று போல் அல்லாமல், மலர்ந்த மலரென.. பரபரவென கீழிறங்கி வந்தவளை பார்க்க பார்க்க கொஞ்சம் அமைதியானார் மாமியார். மருமகளின் முகம்  தெளிந்து இருக்கவும்.. மகனுக்கும், மருமகளுக்கும் நேற்றிருந்த பிணக்கு இன்று இல்லை எனத்தான் முதலில் தோன்றியது.

மயூரா, தன்னையே பார்த்துக் கொண்டிருந்த அத்தையிடம் வந்தாள் தயங்கிய குரலில் “சாரி அத்தை..” என்றாள்.

மகேஸ்வரி “எதுக்கு சாரி. அவன் வெளிய போயிட்டான். உனக்கு தெரியுமா? இன்னிக்கு, உங்க வீட்டுக்கு போகனும் நீங்க.. இவன் கிளம்பி போயிட்டான். உன்னை கிளம்பிவிட்டு அழைக்க சொன்னான். என்னமோ போ.. பத்து மணிக்கு நீங்க அங்க போயிடுங்க..” என புலம்பிய படியே, காபியை கையில் கொடுத்தவர், சோபாவில் அமர்ந்தார்.

மயூரா, காபியை வாங்கி வைத்துவிட்டு.. பூஜை அறைக்கு சென்றாள் விளகேற்ற.. அங்கே பூஜை முடிந்திருந்தது. மயூரா சுவாமியை வணங்கி வெளியே வந்தாள்.

மயூராவும் மகேஸ்வரியும் பேசிக் கொண்டிருந்தனர். காபியை குடித்து முடித்து கிட்சென் சென்றாள், மயூ. டிபன் தயாராக இருந்தது. வேலை செய்பவர் பாத்திரம் துலக்கிக் கொண்டிருந்தார்.

இப்போது, கபாலியின் பெரியப்பா குடும்பம் வந்தது.. அதன்பின் பேச்சு சென்றது, பெரியவர்களுக்கு உணவு பரிமாறினாள்.. மயூரா. தானும் உண்டு அமர்ந்தாள்.

மகேஸ்வரி “கபிலுக்கு கூப்பிடு டா.. மணியாச்சு.. எப்போ போறது” என்றார்.

மயூரா தயங்கினாலும்.. கணவனுக்கு அழைத்தாள்.. மனது பரபரத்தது.. ‘எப்படி அழைப்பது அவரை.. ‘என்னங்க’ என அம்மா அப்பா மாதிரியா.. இல்லை, ‘கபில்’ என அவர் பெயர் சொல்லி, அத்தை அழைப்பது போலவா.. என ஒருமாதிரி பரபரத்தது, பெண்ணவளுக்கு.

முதல்முறை.. அவளின் அழைப்பு எடுக்கப்படவில்லை. மயூரா அமைதியாகிவிட்டாள். ‘உஹ்ப்..’ என இழுத்து மூச்சு விட்டு, தனது பரபரப்பை குறைத்துக் கொண்டாள். நேற்று நடந்த பேச்சு வார்த்தை நோக்கி சென்றது அவளின் மனது.. ஆனால், அதை யோசிக்க விடாமல், அவளின் அகாடமியிலிருந்து அழைப்பு வந்தது பெண்ணுக்கு. இன்று, இவள் வகுப்பிற்கு செல்லவில்லை. அத்தோடு நேற்று விழாவிற்கு வந்திருந்த மாணவர்களுக்கு இன்று விடுமுறை. அதனால், மற்ற மாணவர்களோடு.. எப்போதும் இருக்கும் ஆசிரியர்களோடு வகுப்பு ஆரம்பிக்க தொடங்கியது. அதை சொல்லுவதற்காக அழைத்திருந்தனர். மயூரா பேச தொடங்கினாள்.

அடுத்து அரைமணி நேரம் சென்று.. தன் அத்தையின் சொல் கேட்டு மீண்டும் அழைத்தாள், தன் கணவனுக்கு. இந்தமுறை பரபரப்பு குறைந்திருந்தது பெண்ணுக்கு. அசித்ரையாகதான் அழைத்தாள். ஆனால்,  கணவன் இந்தமுறை இரண்டே ரிங்கில் எடுத்துவிட்டான்.

கபாலி “ம்.. ஹலோ ..” என்றான்.

மயூராவிற்கு நேரில் விட போனில் அவனின் குரல்வளம் மூச்சடைக்க செய்தது.. சட்டென எப்படி என்ன சொல்லுவது என தெரியவில்லை பெண்ணுக்கு.. நொடி நேரம் அமைதியாகிவிட்டாள்.

பொறுமையில்லா கபாலி “ஹலோ, என்ன..“ என்றான் மொட்டையாக. தன் மனையாளின் எண்ணிலிருந்து அழைப்பு வந்திருக்கிறது என தெரியும். ஆனாலும், அவளுக்கு இருந்த பரபரப்பு.. அவனுக்கு  இல்லை போல.. ஒருமாதிரி இறுகிய குரலில் “என்ன” என்றான் இரண்டாம் முறை.

அந்த அதட்டலில் மயூராவிற்கு சுரணை வர “எ..என்னங்க.. இல்ல.. நம்ம வீட்டுக்கு போகனுமில்ல. நான் ரெடியாகிட்டேன்..  நீங்க வர எவ்வளோ நேரமாகும். இல்ல, அத்தை கேட்க சொன்னாங்க” என்றாள், தன்னை மீட்டுக் கொண்ட திடமான குரலில்.

கபாலி, சட்டென இறங்கிய குரலில் “இல்ல, இப்போதான்.. மீட்டிங் ஸ்டார்ட் ஆகபோகுது. நீங்க எல்லோரும் முன்னாடி போகங்களேன். நான் வர டூ ஹௌவர்ஸ் ஆகும். நான் வர கொஞ்சம் லேட் ஆகும்.” என்றான் அமைதியான குரலில். சட்டென என்றுமில்லாமல் ஒருமாதிரி இறைஞ்சியது அவனின் குரல்.

மயூரா அமைதியாக இருக்கவும், கபாலி “மாமாகிட்ட சொல்லிடுறேன் நான். பெரியப்பாகிட்ட பேசிடுறேன்..” என்றான் எப்போதும் போலான குரலில், தனது நேராக்கிக் கொண்ட குரலில்.

மயூரா சோர்ந்து போனாள். கணவனோடு சேர்ந்து செல்ல முடியாத வருத்தமும்.. அவன் சட்டென குரல் மாற்றிக் கொண்டு.. நான் மாமாகிட்ட பேசறேன் என்ற விதமும் கோவத்தை கொடுத்தது.. ‘என்னை தெரியலை இன்னும் அவனுக்கு’ எனதான் கோவம்தான். ஆனாலும், முதல்முதலில், தான் கணவனோடு செல்ல வேண்டும் என் வீட்டிற்கு என தோன்ற.. அத்தோடு நேற்றுதானே எதேதோ பேசியிருந்ததால்.. அவனோடு இருந்தால் தானே அவனுக்கு, என்னை தெரியும் என தோன்ற “நான் வெயிட் பண்ணவாங்க.. அத்தை, பெரிய மாமாவை.. முன்னாடி போக சொல்லவா..” என்றாள் யோசனையாக.

கபாலி கடிந்தான் “ம்கூம்.. இல்ல, நீயும் கிளம்பு, அவங்க என்ன செய்வாங்க அங்க தனியாக சென்று.. நீங்க எல்லோரும் கிளம்புங்க. சரி, டைம் ஆச்சு.. நான் பேசிக்கிறேன்.“ என்றவன், எந்த விடைபெறும் வார்த்தையும் சொல்லாமல், போனை வைத்துவிட்டான்.

மயூராவிற்கு, தான் நேற்று அவனிடம் பேசியது தவறு.. என உணர்ந்தாள். போனை சட்டென கணவன் வைத்தும்.. சொல்ல முடியா வலி தாக்கியது அவளை. நேற்று நான் செய்தது தவறு என யோசிக்க தொடங்கினாள்.. எதோ யாரிடமோ பேசுவது போல.. ஒருகுரல்.. விடைபெறாத பேச்சு.. நான் என்ன அவ்வளவு கசக்கிறேனா.. என்ன இருந்தாலும்.. கணவன் என அவன் என்னிடம் உரிமை எடுத்துக் கொண்டிருந்திருந்தால்.. நன்றாக பேசியிருப்பான் போல.. அதனால்தான் பேசவே யோசிக்கிறான்.. எதோ என் வாழ்வை.. சரி செய்துக் கொள்கிறேன் என எண்ணி தவறு செய்துவிட்டேன்..’ என தோன்ற தொடங்கியது மயூராவிற்கு. போன் பேசி முடித்தவள்.. போர்ட்டிகோவில் அப்படியே சிந்தனையில் அமர்ந்துக் கொண்டாள்.

அடுத்த பதினைந்து நிமிடத்தில்.. மகேஸ்வரி “மயூ, உள்ள வா.. அவன் நேரே அங்கே வரேன்னு சொல்லிட்டான், வா.. நாம் கிளம்புவோம்” என்றார்.

ஆக, கபாலி எல்லோரிடமும் பேசிவிட்டான். கபாலியின் அத்தை மாமா.. பெரியப்பா பெரியம்மா மகேஸ்வரி, மயூரா என அறுவரும் கிளம்பினர் மயூராவின் வீடு நோக்கி. மயூவின் முகம் தெளிந்தும் தெளியாமலும் இருந்தது. பெரியவர்கள் எல்லோருக்கும் அவளின் நிலை புரிந்தது. எனவே, ஏதும் கபாலியை பற்றி பேசாமல்.. ‘புடவை நல்லா இருக்கு டா.. நேற்று எடுத்த போட்டோஸ் காட்டு.. நம்ம சின்னு பாப்பாக்கு நீ கிளாஸ் எடுப்பியா’ என பலவாறு பேசிக் கொண்டே வந்தனர் மயூராவிடம், பெரியவர்கள்.

மயூராவின் வீட்டிலும் அப்படியே.. இன்முகமாக வரவேற்றனர்.. ‘மாப்பிள்ளைக்கு வேலை.. ஒருவராக இருக்கிறார்.. வேலை இருக்குமில்ல.. நம்ம தொழில் பற்றி தெரியுமே.. வரட்டும் மயூ..’ என பலவாறாக பேசிக் கொண்டு இருந்தனர்.

மயூராவிடம், சித்தப்பா சித்தி.. பெரியப்பா பெரியம்மா.. அண்ணன்.. தன் ஜெயா அண்ணி என எல்லோரும் பேசி அவளின் மனநிலையை மாற்றி இருந்தனர். மயூவும் இயல்பாக இருக்க தொடங்கினாள்.. தன்னறைக்கு செல்ல வேண்டும் போல இருந்தது. ஒருமணி நேரம் சென்று.. தன் வீட்டு பெரியவர்கள் எல்லோரும் பேசிக் கொண்டு இருக்கவும், தன் அன்னையிடம் சொல்லிக் கொண்டு.. மேலே தனதறைக்கு சென்றாள், மயூரா.

மயூராவிற்கு அழுகையாக வந்தது.. தான் நேற்று கணவனிடம் பேசியது தவறு தவறு.. அவருக்கு.. என்னை தெரிவிப்பதற்கான வழியை நான் இழந்துவிட்டேன்.. இயல்பான நடைமுறையை நான் இழந்துவிட்டேன். இப்போது பார்..  பேசவே இல்லை.. என மீண்டும் மீண்டும் தோன்ற.. மனது அழுந்தியது. அப்படியே கட்டிலில் சாய்ந்துக் கொண்டாள்.

கபாலி சரியாக உணவு நேரத்திற்கு வந்துவிட்டான். ஆர்பாட்டமாக வரவேற்றனர் தங்கள் வீட்டு மாப்பிள்ளையை. மயூராவை அழைத்தனர் பெரியவர்கள். கபாலி புன்னகை மாறாமல்.. எல்லோரையும் விசாரித்து அமர்ந்திருந்தான். மயூரா அமைதியாக வந்தாள். பெண்மாப்பிள்ளை இருவரையும்.. அமர வைத்து நலங்கு வைத்து.. பட்டு புடவை.. கபாலிக்கு உடைகள்.. மோதிரம்.. பெண்ணுக்கு மோதிரம் என மீண்டும் தங்களின்  அன்பை சொல்லினர். ம்.. முறை என இல்லை, அன்பை தெரிவித்தனர். 

இப்போதுதான் கபாலிக்கு நினைவு வந்தது ‘தானும் மனையாளுக்கு தோடு ஆர்டர் செய்திருந்தேனே.. வந்ததா என தெரியவில்லை..’ எனவே, இப்போது எல்லோரின் எதிரிலும் தன் மனையாளிடம் ரகசியம் பேசினான்.. “நேற்று உனக்குன்னு ஒரு ஜுவேல் ஆர்டர் செய்திருந்தேன்.. ஏதாவது நகை கடையிலிருந்து பார்சல் வந்தது..” என்றான்.

மயூரா அதிர்ந்தாள்.. ‘நேற்றுதானே அத்தனை சண்டையிட்டேன் என தோன்றியது, ஏன் ஆர்டர் செய்தார் எப்போது..’ என பல கேள்விகள் எழுந்தது.. இருந்தும்  “இல்லைங்க” என்றாள். கணவன் போனை எடுக்க.. மயூரா எழுந்து சென்றாள். எல்லாம் கொடுத்து முடிந்திருந்தனர் பெரியவர்கள். எனவே, பெண்ணவள் எழுந்துக் கொண்டாள்.

கபாலி போன் பேசி முடித்தான். இப்போது பெண் மாப்பிள்ளையை உண்பதற்கு அழைத்தனர். ஆக, தம்பதிகளாக உண்ணத் தொடங்கினர். கபாலி எல்லோரிடமும் நன்றாக பேசினான்.. கலகலப்பாக இருந்தான். தன் அக்கா மாமாவிடம் டிக்கெட் போட்டாச்சா என்றான். அவர்கள் ஹாங்காங் செல்லுவதாக சொல்லவும்.. அங்கே பார்க்க வேண்டிய இடங்கள்.. உணவு பற்றி பேசினான். கணவனின் பேச்சு பெண்ணவளை ஈர்த்தது. அவ்வபோது கணவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.

உண்டு முடிக்கவும்.. கபாலியின் பெயர் சொல்லி.. நகை கடையிலிருந்து ஆள் ஒருவர் வந்திருந்தார். கபாலி அந்த பொருளை வாங்கிக் கொண்டு.. அவரை அனுப்பி வைத்தான்.

கபாலி அதை வாங்கிக் கொண்டு.. உள்ளே வந்தான். எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. அவன் தன் மனையாளுக்காக எதோ ஆர்டர் செய்திருக்கிறார்.. என. ம்.. மனையாளிடம் ரகசியம் பேசும்போதே..  அவர்களின் பேச்சில் ஜெயா கேட்க்க.. அப்போதே கபாலி சொல்லிவிட்டான். எனவே, எல்லோரின் எதிரிலும் இப்போது அந்த மயில் தோடு ஜிமிக்கியை தன்னவளிடம் கொடுத்தான்.. அமைதியாக ஆர்பாட்டம் இல்லாமல். மயூராவும் ஆர்பாட்டம் செய்யாமல் வாங்கிக் கொண்டாள். பெரியவர்கள் எல்லோரும் கண்டும் காணாமல் இருந்தனர்.

ஜெயந்தினி “அழகா இருக்கு டா.. சூப்பரா செலக்ட் செய்திருக்க.. கபில். இப்போவே வியர் செய்து காமி மயூ” என்றாள் சத்தமாக.

மயூராவையே எல்லோரும் பார்க்க, மயூராவிற்கு அந்த ஜிமிக்கியை அணிவதற்கே தயக்கமாக இருந்தது. நேற்றுதான் கணவனிடம் ‘எனக்கு உங்கள்மீது நம்பிக்கை வரவில்லை..’ என சொல்லியிருந்தேன்.. இப்போது எதன் அடிப்படையில் இந்த பொருளை ஏற்பது.. என தோன்ற.. மயூரா முகம் இறுக.. “இல்ல, அண்ணி.. அப்புறம் ஈவ்னிங் போட்டுக்கிறேன்” என்றாள் தயக்கமான குரலில்.

கபாலி, ஆழ்ந்து தன்னை பார்ப்பதும்.. கேலியாக புன்னகைப்பதையும் உணர முடிந்தது மயூராவினால். என்னமோ மனது வலித்தது. மயூரா மேலே செல்ல எத்தனித்தாள்.

சுமதி “மயூ, மாப்பிள்ளையும் உன் அறைக்கு கூட்டி போ.. ரெஸ்ட் எடுங்க..” என்றார். சொல்லியவர்கள் வேலையை பார்க்கத் தொடங்கினர்.

மயூரா, தன் கணவனை பார்த்தாள்.. கபாலி, அவளை பார்க்காமல் போனை பார்த்துக் கொண்டிருந்தான். மயூராவிற்கு கோவமாக வந்தது.. ஒன்றுமே செய்ய முடியாமல், கணவனின் அருகில் சென்று “மேலே..” என திக்க.

கணவன் அவளை ஓரகண்ணால்,  பார்த்தும் பார்க்காமலும் எழுந்து.. ’போ..’ எனுமாறு கையசைத்தான். இருவரும் மேலேறினர்.

மயூராவிற்கு எல்லா வகையிலும் தோல்விதான் என தோன்றியது. இருவரும் உள்ளே வந்தனர், கபாலிக்கு எந்த அலட்டலும் இல்லாமல் பெட்டில் அமர்ந்தான்.. அவளின் அறையை கண்களால் நோட்டம்விட்டான்.. “என்ன ஹியர்ரிங்க்ஸ் எப்படி இருந்தது.. ம்” என்றான்.

மயூரா தாமதமாக “ம்.. “ என்றாள்.

கபாலி “எனக்கு தெரியும்.. நகை பொதுவா எல்லோருக்கும் பிடிக்குமே. என்ன சொன்னாங்க உங்க அம்மா சித்தி எல்லாம்” என்றான்.

மயூரா “ம்.. “ என்றாள்.

கபாலி அப்படியே கட்டிலில் கால்களை நீட்டி சாய்ந்துக் கொண்டான்.. “என்ன நேற்று அப்படி எல்லாம் பேசிட்டோமே எப்படி இதை வியர் செய்றதுன்னு இருக்கா” என்றான்.

மயூரா அமைதியாக அமர்ந்தாள்.

கபாலி “எப்படி இருந்தாலும் மூணு மாசம் சென்று.. போட்டுக்கலாமில்ல.” என்றான்.

மயூராவிற்கு வலித்தது.. கோவமாக வந்தது.. முறைத்தாள் கணவனை.

கபாலி “ம்.. உண்மைதானே..” என்றான் நக்கலாக.

மயூரா அமைதியாகவே கணவனை பார்த்தாள்.  

கபாலி சிரித்துக் கொண்டே கண்மூடிக்கொண்டான்.

மனையாள் ஜன்னல் வழி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

கபாலி “ம்.. என்னை புரிஞ்சிக்கிறேன்னு சொன்னதுக்கான கிப்ட்’டாக  இதை வைச்சிக்கோ.. ஆனால், நேற்று நம்ம ப்ஸ்ட் நைட் நடந்திருந்தால்.. ஆசையாக உனக்கு.. கொடுக்க வாங்கின கிப்ட் இது. என்ன செய்ய..  யாருக்கு கொடுக்க.. வேஸ்ட்ஆக கூடாதில்ல. வைச்சிக்கோ. ஆனால், நீ சொன்னது எதோ புதுசா இருக்கு.. காலையில் யோசிச்சேன்.. நல்லா இருந்தது உன் கான்சப்ட். ம்.. புதுசா இருந்தது..” என்றான்  சிரித்துக் கொண்டே.

மயூரா “ம்..” என அவனின் நக்கலை ஏற்றாள். கணவன் சொல்லிய பரிசுக்கான அர்த்தம் தெரிந்தது அவளுக்கு. மனது நான் நினைச்சது சரிதானோ என எண்ணிக் கொண்டது. ஆனால், அந்த நினைப்பு அப்பட்டமாக வலித்தது.. இதயம் சுருங்கியது.. மூச்சு கூட கடினப்பட்டு வந்தது. 

மயூரா பாவம் தடுமாறினாள் ‘யாரிவன்.. எல்லோரிடமும்  சிரித்து இன்முகமாகதானே பேசினான். அவனின் வேட்டியும் தோரணையான புன்னகையும் அத்தனை  அழகாக இருந்ததே.. என்னிடம் ஏன் முறைக்கிறான்.. நான் அவனின் மனைவிதானே.. ஏன் கணக்கு பார்க்கிறான். இப்போது அவன் சொல்லும் காரணம் உண்மையாக இருந்தாலும்.. ஒருபொய் சொல்லியிருக்கலாமே.. உனக்காகத்தான் வாங்கினேன் என பொய் சொல்லியிருக்கலாம்.’ என தோன்றியது.

சட்டென பெண் சுதாரித்தாள் ‘வேண்டாம்.. பொய் வேண்டாம்.. உண்மை போதும். போதும்.. ம்.. ஆனால், அவன் பொய்யாவது சொல்லி.. இந்த கிப்ட் கொடுத்திருக்கலாம்..” என தோன்றியது பெண்ணுக்கு.

தளர்ந்து அமர்ந்தாள் பெண்.. உறங்கும் அவனையே பார்த்தாள்.. மனது உண்மையாகவே கணவன் என அவனை முழுதாக ஏற்றது. அவனின் கண்டுக் கொள்ளாத பாவத்தையும் மன்னிக்க முடிந்தது அவளால்.. அதனால்தான் ‘பொய்யாவது சொல்லியிருக்கலாம்’ என எண்ணிக் கொண்டாள் போல.. தானும் கண்மூடி படுத்துக் கொண்டாள்.

“பனியில் மூடிபோன பாதை 

மீது வெய்யில் வீசுமோ..

இதயம் பேசுகின்ற வாரத்தை

உந்தன் காதில் கேட்க்குமோ..”

Advertisement