Advertisement

நான் உன் நிறையன்றோ!

19

மகேஸ்வரி மகனின் அறையில் பார்க்க, மகனும் உறங்கிக் கொண்டிருந்தான். “கபில்.. டேய்..” என எழுப்ப.. கபாலி அன்னையிடம் பேசவில்லை, கண்திறந்து என்ன என்பதாக பார்த்தான்.

மகேஸ்வரி, கபாலி இந்த நேரத்தில் இப்படி உறங்கவும்.. மனது கரிக்க தொடங்கியது. கீழே மருமகள் சரியில்லை.. இங்கே மகன் என தோன்ற.. “என்ன டா, உடம்புக்கு என்ன, ஜாக்கிங் போனியே” என வினவியபடியே, மகனின் நெற்றியை தொட்டார். ஜில்லெனதான் இருந்தது.

அன்னை “என்ன டா.. சாப்பிட்டு வந்து ரெஸ்ட் எடு” என்றார்.

கபாலி கண்கள் சிவக்க எழுந்தான்.. கண்கள் மூடி இருந்தாலும் உறக்கம் வரவில்லை.. இப்போ அன்னை சொல்லவும் “ம்.. நீ போ ம்மா, வரேன்” என்றான்.

மகேஸ்வரி, கீழே கிளம்பி சென்றார்.

மயூரா “அத்த, அம்மா.. என்னை அங்கே வர சொல்லிட்டாங்க.. நா..ன் சாப்பிட்டு கிளம்பவா அத்தை” என்றாள்.

மகேஸ்வரிக்கு என்னமோ ஒன்றும் புரியவில்லை.. என்ன நடக்கிறது என. அவரும் “ஏன், இங்க வருவதாகதானே சொன்னாங்க..” என்றார்.

மயூரா சிரித்துக் கொண்டே “அண்ணி, ஆபீஸ் போறாங்க.. சமையல் செய்துக் கிட்டு இருக்காங்களாம், அம்மா. அண்ணி மதியம் வந்திட சொல்லி இருக்காங்களாம். அதனால், நீ வந்துட்டா எனக்கு ஈஸின்னு சொன்னாங்க.. அதான், வேற ஒண்ணுமில்ல அத்தை” என்றாள்.

மகேஸ்வரி “ஏன், ஜெயாவை லீவ் போட சொல்லி இருக்கலாம். சரி சரி.. கபில் கிட்ட சொல்லிட்டியா” என்றார்.

மயூரா “ம்.. சொல்லிட்டுதான் வந்தேன்” என்றாள் தன் அத்தையை நிமிர்ந்து பாராமல்.

மகேஸ்வரி “சாப்பிடு, வா” என்றார்.

மயூரா சாப்பிட்டு, தன் அத்தை கொடுத்த மல்லிகை சரத்தை வைத்துக் கொண்டு ”அடுத்த முறை நீங்களும் என்கூட வரணும் அத்தை.” என விண்ணப்பம் வைத்து, விடைபெற்று கிளம்பினாள்.

கபாலி எழுந்து பால்கனியில் நின்றிருந்தான். பொதுவான, அழகான பெரிய போர்ட்டிகோ போன்ற பால்கனி.. அல்லது, சிட்அவுட் என மாடியில் உண்டு. அதுவும்.. வீட்டின் முகப்பை பார்த்தது போன்ற அந்த அமைப்பு. அதில் எலிவேஷன் என வேலைபாடுகள்.. ஊஞ்சல்.. உண்டு. இப்போது மயூரா வந்த பிறகு.. சின்ன ஸ்டூல் வைத்து உருளியில் மலர் வைக்கிறாள். அங்கேதான் நின்றுக் கொண்டிருந்தான், மனைவியினாள் புறக்கணிக்கப்பட்ட கணவனாக.

தோல்வியே அவன் கண்டதில்லை. அவனுக்கு இந்த ஏழு வருடத்தில் புரிந்தது எல்லாம்.. வெற்றி வெற்றி மட்டும்தான். எங்கேனும் சறுக்கும், ஆர்டர் கைவிட்டு போகும்.. என உணரும் தருணத்தில்.. எப்படியேனும் ஆட்களை பிடித்து.. இல்லை, ஆஃபர் கொடுத்து தனது வியாபாரத்தை தக்க வைத்துக் கொள்வான். 

இப்போது திருமண விஷயத்திலும் அப்படித்தான நினைத்தான். அவர்களாக என்னை அழைத்தார்கள்.. ஒருமாதிரி, ஆதிகேசவன் குடும்பத்தில் தனக்கு பெண் கொடுத்துவிட்டனர் என மௌனமாக கர்வம் கொண்டிருந்தான். அதனாலேயே, அவர்கள் வீட்டு  பெண் மீது, கொஞ்சம் அலட்சியமும் வந்திருந்தது அவனுக்கு. திருமணம் முடித்து வந்தது முதல்.. மனையாள் என காதல் பார்வை வேண்டாம்.. ஒரு பெண் என கூட அவளை எண்ணி.. பேசவோ.. மதிக்கவோ இல்லை, இந்த பத்து நாட்களாக.. கபாலி.

இன்று காலையில், ஒரு குருட்டு தைரியம். நேற்று, அவள் இரண்டு வார்த்தை பேசியிருக்கவும்.. அதில் தெரிந்த அவளின் தைரியும். அதை சீண்டும் எண்ணம். அத்தோடு, கணவன் என்ற உணர்வு.. ஆக எல்லாம்  சேர முன்னேறிவிட்டான் கபாலி. அதனால், தோற்றும்விட்டான். 

ம்.. அவன் எதோ பிஸினெஸ்சில் தோற்பது போல, அதை ஏற்கவே முடியவில்லை அவனால்.. ஏற்க தெரியவில்லை. இது உறவு.. வாழ்க்கை துணை.. அவள் தன்னவள்.. தன்னுடைய சுக துக்கங்களை பங்கு போட வந்தவள் என அவனுக்கு  புரியவில்லை.. அஹ, புரியும்.. ஆனால், ஏற்கவில்லை. ஏற்க மனதில்லை. என்னமோ இவன்தான் வேண்டும் என அவர்கள் நல்லவிதமாக எண்ணி பெண்ணை இவனுக்கு கொடுத்தாக எண்ணம். எனவே, மனையாளின் புறக்கணிப்பை ஏற்கவே முடியவில்லை அவனால், அதற்கான காரணத்தை ஆராயத் தெரியவில்லை அவனுக்கு. என்னமோ நினைக்க நினைக்க அவமானமாக.. இருந்தது அவனுக்கு. இது உறவு.. காலத்திற்கும் இது வேண்டும் என எண்ணவில்லை.. ‘கணவன் நான்’ என்னை எப்படி உதறலாம் அவள்.. தள்ளி நிறுத்தாலம்.. அவளை.. அவளை’ என   ஆத்திரம்தான் வந்தது.

இப்போது, மயூரா, காரில் கிளம்புவது தெரிந்தது.. கோவம் தீரா பெருமூச்சு வந்தது, அவனிடம். ‘போடி.. போடி எத்தனை நாள் ஒழிந்துக் கொள்வ.. பார்க்கிறேன்’ எனத்தான் தோன்றியது.

கபாலி, கீழே சென்றான். உணவு உண்டான். அவனின் அன்னை ‘மாத்திரை தரவா..’ என்றார். வேண்டாம் “மதியம் சாப்பிட வரமாட்டேன் ம்மா..” என்றான்.

மகேஸ்வரி “என்ன டா.. இப்போதுதான் கல்யாணம் ஆகியிருக்கு.. இந்த வாரத்தில் நீ ரெண்டுநாள் வீடு வரலை. இது சரியாக இல்லை. இனி, பொறுப்பாக குடும்பம் பார்க்கிற வழிய பாரு. நைட் வீடு வந்து சேர்.. சொல்லிட்டேன்” என்றார்.

கபாலி ‘க்கும்.. வீடு வந்துட்டா மட்டும்.. கிளு கிளுன்னு எல்லாம் நடந்திடும்’ என மனதில் நினைத்துக் கொண்டான்.

மகேஸ்வரி “நாளை உங்களுக்கு மறுவிருந்து நாள். அங்க, மயூரா வீட்டுக்கு போகணும். மயூ, நைட் வந்திடுவாள். நீயும் இங்க வந்திடு.. காலையில்  நேரமாக போகனும். மதியம் சாப்பிட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடு டா. அத்தோட, நீயும் மயூவும் எங்காவது வெளியூர் போயிட்டு வாங்க.. வேலை எப்போதும்தான் இருக்கும்” என்றார்.

கபாலி ஒன்றும் பேசாமல், அன்னை சொன்னதை கேட்டுக் கொண்டிருந்தான், யோசனையோடு.

சற்று நேரத்தில் தன் அக்காவிற்கு அழைத்து பேசினான் ”எப்போ அக்கா, ஹனிமூன் போற.. டிக்கெட் போட்டுட்டியா” என்றான்.

ஜெயந்தினியும் “ம்.. நெக்ஸ்ட் வீக் டா.. மாமா ப்ரீ செய்துக்கிறேன்னு கேட்டார். அதான் லேட். இன்னிக்கு பேசிடுவார்ன்னு நினைக்கிறேன் ஏஜென்சியில்.” என்றாள்.

பின் “நீ எப்போ போற.. மயூக்கு பாலி’ஐலண்ட் ரொம்ப பிடிக்குமாம்.. சொல்லிட்டே  இருப்பாளாம்.. பிரெண்ட்ஸ்’சோடு போறேன்னு. போயிட்டு வாங்க நீங்களும்” என்றாள்.

கபாலி “ம்..  போகனும் க்கா.. சரி, நான் அந்த ஏஜென்சியை பேச சொல்றேன்” என இன்னும் இரண்டு வார்த்தை, அவள் அவர்களின் கம்பெனிக்கு செல்லுவது பற்றி பேசி வைத்தான், தம்பி.

மயூராவிற்கு காரில் செல்லும் போது கணவனை பற்றிதான் சிந்தனை. தன்னவன் என ஆசையாக அவனின் முகம் நினைவில் வரவேயில்லை.. அவனின் அழுத்தமான பற்றுதலும்.. தான் உதறியதும்தான் நினைவில் வந்தது. கண்களை அழுத்தமாக மூடிக்கொண்டாள். ஆனால், இன்னும் இன்னும் காலையில் நடந்ததே நினைவில் வந்தது பெண்ணுக்கு. 

அங்கிருந்த மியூசிக் பிளேயரில் பாடலை ஒலிக்கவிட்டாள்.. 

“சத்தம் இல்லா தனிமை கேட்டேன்..

யுத்தம் இல்லா உலகம் கேட்டேன்.. “ என பாடல் தொடங்க. என்னமோ ஒரு ஆசுவாம் அவளுள். தப்பித்துக் கொண்டாள்  போல, அவனின் நினைவிலிருந்து.

அங்கே சென்று சேர்ந்தனர் மயூராவும், அவளின் அன்னையும். நேரம் அவர்களுக்கு சரியாக இருந்தது. ஒருமுறை ஒத்திகை பார்த்தனர், மேடையில். அடுத்து மதியம் உண்டு ஒருமணி நேரம் ஒய்வு, அடுத்து ஒப்பணை தொடங்கினர். சரியான நேரத்தில் அவர்களின் நடனம் தொடங்கியது.

மயூராவின் கவனம் முழுவதும்.. நடனத்திலேயே இருந்தது. இரவு நடனம் முடிந்து தன் குழுவினர்களை  உண்ண வைத்து.. முறையாக மேனேஜரோடு வழியனுப்பி பின்தான் மயூரா, கிளம்பினாள், அன்னையோடு.

நடு இரவில் வந்துவிட்டாள் வீட்டிற்கு. சுமதி மகளை மகேஸ்வரியிடம் சேர்ப்பித்துவிட்டு வீடு கிளம்பினார். நாளை, தன் மகளின்  மறுவிருந்து எனவே, கிளம்பிவிட்டார்.

மயூராவிற்கு இப்போதுதான் தன்னுடைய நிலை புரிந்தது. ஐயோ!.. மீண்டும் அந்த அறைக்கு போக வேண்டுமா.. எனதான் தோன்றியது. கபாலியின் கார், அழகாக போர்ட்டிகோவில் நின்றது கம்பீரமாக. 

மயூராவிற்கு, அரைதூக்கத்திலும் ஆயிரம் யோசனை.. கீழே படுக்க முடியாது.. மாடியில் வேறு அறையில் சென்று உறங்கினால்.. பிரச்சனை தள்ளிபோகும். தீராது. என தோன்றியது. காலையில், கபாலி கண்டுக் கொண்டால்.. பிரச்சனை இன்னும்தான் அதிகமாகும். பெரியவர்களிடம் பிரச்சனை போகிவிட்டால்.. எனவும் பயம் அவளுக்கு. இப்போது அறைக்கு சென்றதும் அவர் விழித்துவிட்டால்.. சொல்லிவிட்டு.. வேறு அறைக்கு போகிடலாம்.. ஐயோ.. பையித்தியம் என்ன சொல்லுவ..’ என மனது மீண்டும் நடுங்க தொடங்கியது. மனது பதை பதைக்க.. மேலே ஏறினாள் பெண்.

Advertisement