Advertisement

நான் உன் நிறையன்றோ!

17

சுமதி,  தன் மருமகளிடம் “நைட் மாவு இருக்கு டா. நான் வர விடியற்காலை ஆகிடும். இன்னிக்கு மதியம் நீ சீக்கிரம் வந்திடு. ஈவினிங் வேலை இருக்குமா.. போகனுமா.. வீட்டில் இரும்மா.. யாராவது வந்திட்டே இருப்பாங்க.” என்றார்,  அன்பு கட்டளையாக.

ஜெயந்தினி தங்களின் அலுவலகத்திலேயே அக்கௌன்ட்ஸ் செக்ஷனில் வேலை கற்கிறாள். அதனால் கணவனோடு தினமும் அலுவலகம் செல்லுவாள். மதியம் எடுத்து சென்றிடுவாள் உணவை. இந்த   ஒரு வாரமாகதான் செல்லுகிறாள். அதனால், தான் மட்டும் கணவனோடு வீடு வந்தால் சரியாக இருக்காது என எடுத்து சென்றிடுவாள்.

இன்று அத்தை இப்படி சொல்லவும், தலையை உருட்டினாள், புது மருமகள்.

 

காலை 5:30க்கு, கபாலிக்கு எப்போதும் போல, விழிப்பு வந்துவிட்டது.  மயூரா இன்று, கிளம்புகிறாள் என்ற எண்ணத்தோடு எழுந்தான். எப்போதும் போல, ஜாக்கிங் கிளம்பிவிட்டான்.

மயூரா எழுந்து இலகுவாக கிளம்பினாள். இன்று பத்து மணிக்கு மேல், இங்கிருந்து கிளம்பினாள் போதும். அரேஞ்ச்மென்ட்ஸ் எல்லாம் பார்ப்பதற்கு, தங்களின் மேனேஜர் சென்றிருப்பார் நேற்று இரவே. அடுத்து, காலை ஒன்பது மணிக்கு பக்கவாத்தியம்.. இவளின் நடன குழுவினர் எல்லோரும் கிளம்புகின்றனர்.. தங்களின் அகாடமியிலிருந்து. இவள் தன் அன்னையோடு பத்து மணிக்கு கிளம்புகிறாள்.

மயூரா, கணவன் சென்றுவிட்டதால்.. அவசப்படாமல் குளித்து.. வெளியே வந்தாள். இவள் உடை மாற்றும், அந்த தடுப்பு போன்ற இடத்தில் ஏசி இல்லை.. அதனால், அறையில் வந்து நின்று புடவை கட்டத் தொடங்கினாள்.

காட்டன் புடவை, இரு பக்கமும் மெரூன் பார்டர்.. உடல் முழுவதும் ராமர் பச்சை நிறம் கொண்ட.. சில்க்காட்டான் புடவையை கட்டிக் கொண்டிருந்தாள்.. மயூரா.

“வள்ளி கணவன் பெயரை 

வழி போக்கன் சொன்னாலும்.. 

வள்ளி கணவன் பெயரை 

வழி போக்கன் சொன்னாலும்.. 

உள்ளும் உருகிதடி.. கிளியே.. 

என் ஊனும் உருகுதடி..” என  காவடி சிந்து ராகத்து பாடலை முணுமுணுத்துக் கொண்டே.. நடு அறையில் நின்று புடவையை கட்டிக் கொண்டிருந்தாள் பெண்.

கபாலி, ஜாக்கிங் முடிந்து நேரே.. தன் அறைக்கு வந்தான் எப்போதும் போல கபாலி. கதவை திறந்துக் கொண்டு உள்ளே வந்தான் சட்டென.

அங்கே மனையாள்.. அரைகுறையாய் நின்றிருந்தாள்.. கபாலி, எதோ தவறான அறைக்கு வந்துவிட்டேன் என எண்ணி.. கதவை அடித்து சாற்றி விட்டான் சட்டென.

என்னமோ கபாலிக்கு தவறு செய்துவிட்டதாக எண்ணம்.. யார் எங்கள் அறையில் என இப்போத்தான்.. கதவை சாற்றிய பிறகுதான்..  புரிய, என் அறை.. என் மனையாள் என கண்கள் விரிந்தது, ஆசையில். யோசியாமல் கதவை மீண்டும் திறந்துக் கொண்டு உள்ளே சென்றான்.

அந்த ஷன நேரத்தில்.. மயூரா அந்த உடைமாற்றும் அறைக்கு சென்றுவிட்டிருந்தாள். கபாலிக்கு என்னமோ தான் அடிவாங்கியதாக தோன்ற.. அவளை ஸ்பரிசித்தே ஆகவேண்டும் என வேட்கை எழுந்தது கணவனாக. முகம் ஒரு மாதிரி இறுக.. எதோ பிடிவாதத்தோடு அந்த ஸ்க்ரீன்தாண்டி உள்ளே சென்றான்.

மயூரா அதிர்ந்தே போனாள். அரைகுறையாக மேலே முந்தாணியை போட்டுக்  கொண்டு.. கண்ணில் அதிர்ச்சி காட்டி, கணவனை ஏறிட.. கணவனுக்கு அந்த, அதிர்ந்த பார்வை.. தயக்கத்தை தந்தாலும்.. மூர்க்கத்தையும் தந்தது.. ‘கணவன் நான், எதுக்கு மிரண்டு போறா..’ என எண்ணிக் கொண்டு.. உரிமையாய் மனையாளை நெருங்கி.. நடுங்கும் கைகளால், அந்த நடுக்கம்.. தெரியாமல் சட்டென அவளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு.. தன்னை, அவளின் கழுத்து வளைவில் புதைக்க..   

எங்கிருந்து மயூராவிற்கு கோவம்.. வேகம் என எல்லாம் வந்ததோ.. கணவனே ஆனாலும், தள்ளினாள், தன்னை விட்டு வெறி வந்தவளாக பிரித்தெடுத்தாள். எதோ பூஞ்சையாய் இருப்பாள் என நினைத்தவள்.. மூங்கிலாக இறுகி போனாள். அவளின் உடலின் எந்த பாகமும் கணவனின் கைகள் தீண்டா வண்ணம்.. தன்னை அவனிடமிருந்து பிரித்துக் கொண்டாள். வேகம்தான் வெறிதான் இருந்தது. ஆனால், கண்ணில் ஏனோ கண்ணீர் வந்தது, மனையாளுக்கு.

கபாலி ஸ்தம்பித்து தோற்று போனான். பெண்ணவளை, அவன் அணைத்த வேகம் வேண்டுமானால்.. மின்னல் வேகமாக இருக்கலாம்..  ஆனால், அவளின் கைகள் அவனை தள்ளிய வேகம் இமைக்கும் நேரத்திற்கும் குறைவான நேரம்.. இன்னும் கணவன் என உணராதவளின் வேகம்.. அயலான் என எண்ணியவளின் வேகம். கணவனால் கணிக்க முடிந்திடாத வேகம்.. ஸ்தம்பித்து போனான் கபாலி.

அவளை விடுவதற்கு அவனின் ஆண்மனம் ஒத்துக் கொள்ளவில்லை.. மயூரா இப்போது திரும்பி நடந்தாள். அந்த அறையில், புடவையை அவசர அவசரமாக.. கட்டிக் கொண்டிருந்தாள். கபாலிக்கு, இவள் தள்ளிவிட்டதில் வெறிதான் வந்தது, இறுகிய முகத்துடன்.. கண்ணெல்லாம் சிவந்து.. அவள் விலகியதில் உண்டான அவமானம் சேர்ந்துக் கொள்ள.. கணவன் “என்ன  டி, ரொம்பதான் சிலுப்பிக்கிற.. என்னிக்கு இருந்தாலும் நான்தான் உன் புருஷன்.. என்கிட்டே என்ன. நான்தான் தாலி கட்டியிருக்கேன். உங்க வீட்டில், வாழதானே அனுப்பினாங்க.. எங்க போய்டுவ.. பார்க்கிறேன்” என்றான் வன்மமாக.

மயூரா கல்போல் இறுக்கிக் கொண்டாள், எதையும் காதில் வாங்காமல் புடவையை கட்டிக்கொண்டு, வெளியே செல்ல பயமாக இருக்கவும்.. மீண்டும் பாத்ரூம் சென்றாள். மனமெல்லாம் வலித்து. அழுகையாக வந்தது.. அழுதாள்.

கபாலி, வெளியே சென்றுவிட்டான்.

மயூரா அழகாக ஆசையாக கிளம்பிக் கொண்டிருந்தாள்.. இப்படி புயலென அவளின் சந்தோஷத்தை ஏன் எதற்கு என தெரியாமலே வாரி சுருட்டிக் கொண்டு, வேகமாக வெளியே சென்றுவிட்டான் கணவன் எனும் புயல். இந்த உறவு  சிக்கி சின்னா பின்னமானது இப்போது.

மயூராவிற்கு இப்போதுதான் புரிந்தது ‘திருமணம் அவ்வளவு ஈசி இல்லை..’ என. அண்ணன் இதற்குதான் சொன்னானா.. திருமணம் முடிந்தால்.. வாழ்வு வந்துவிடும் எனத்தான் எண்ணினேன்.. ஆனால், மனம் இன்னும் எதையும் ஏற்கவில்லையோ.. அவன் கணவன்.. எனக்கு புரியுமே.. நான் எப்படி அப்படி தள்ளிவிடலாம்’ என அவள் மேல்தான் கோவம் வந்தது மயூராக்கு. 

அத்தோடு, கணவன் மீதும் ஒரு நல்லெண்ணம். அது இயல்பாக வந்தது. இன்னும் இன்னும் மனது வாடி போனது, வதைத்தது அவளை. கணவன் என இந்த ஒருவாரத்தில் ஒருநாள் கூட என்னை அவன் தப்பாக பார்த்ததில்லை.. என்னிடம் நெருங்கியது இல்லை. தள்ளி இருந்தான்.. என்னை தவிர்த்தான். ஆனால், கள்ளமில்லை அவரிடம். என்னை ஏற்கவில்லை, மதிக்கவில்லை என எண்ணியிருந்தேன். இப்போது ஆசையினால் வந்தானோ.. அப்போ, விருப்பம்தானோ என்மீது.. என ஆயிரம் யோசனை அவளுக்கு. இன்னுமே எதையோ நினைத்து அழுகை.. அழுகை.. கண்ணெல்லாம் சிவந்து முகம் வீங்கி போகிற்று. 

கபாலி, அங்கிருந்த அடுத்த அறைக்கு சென்றான். கோவம் கோவம் என மூர்க்கம்தான் வந்தது அவனுக்கு. நான் கணவன்.. என்னை தள்ளுறா.. அன்னிக்கு சும்மா இருந்தது தப்பாக போய்விட்டது.. என்னை ஒண்ணுக்கும் ஆகாதவன்னு நினைச்சிட்டா போல.. தள்ளி விடுறா.. இழுத்து நாலு அரை விட்டிருக்கணும்.. என தன் கையை சுவற்றில் குத்தினான். இங்கும் அங்கும் தோற்று போனதில் நிலை கொள்ளாமல் நடந்தான். கபாலிக்கு, கோவம் மனையாளிடம் தோற்றத்தில்.. வெறியாக மாறியது.  அவனுக்கு தோற்பதே பிடிக்காது.. அதிலும் மனையாளிடம் தோற்றத்தில்.. அரக்கனாக மாறி போனான்.

எவ்வளவு நடந்தாலும் ஒருநிலைக்கு வர முடியவில்லை.. அவனால். இன்னும் அவள் மேல் வேட்கைதான் அதிகமாகியது. அதை அவனால், மீற முடியவில்லை.. உணர்வுகளின் பிடியில் சிக்கிக் கொண்டான் கபாலி. ஒருமாதிரி பித்து பிடித்த நிலையில் ஷவரின் கீழே நின்றான். கண்ணெல்லாம் சிவந்து போனது. எவ்வளவு நேரம் நின்றானோ தெரியவில்லை.

“பாழாப்போன மனசு..

பசியெடுத்து.. கொண்ட 

பத்தியத்த முறிக்குதடி..

பாராங்கல்ல சுமந்து..

வழிமறந்து.. ஒரு 

நத்த குட்டி நகருதடி..”

மயூரா, அழுது முடித்து.. நிலைக்கு வந்தாள். என்ன செய்வது என தெரியவில்லை.. வெளியே செல்ல வேண்டும் மணி எத்தனை ஆகியிருக்கும்.. ஏதும் தெரியவில்லை. இங்கேயே  பயந்து அமர்ந்திருப்பது என்னமோ போல இருந்தது. லேசாக கதவை திறந்துக் கொண்டு.. எட்டி பார்த்தாள். கணவன் அங்கே இல்லை.. என தெரியவும், அவசர அவசரமாக முகத்தை கழுவிக் கொண்டாள். அந்த கண்ணாடியை பார்க்க.. முகம் வீங்கி இருந்தது. அதை பார்த்து இன்னும் அழுகையாக வந்தது. அதை அடக்கிக் கொண்டு வெளியே வந்தாள்.

மணி  பார்க்க.. எட்டு’ மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. ’அப்பாடா..’ என தளர்ந்து அமர்ந்தாள். ‘ஆண்டவா.. எனக்கு என்ன ஆனது. ஏன் இப்படி நடக்கிறேன்..’ என ஆராயத் தொடங்கினாள். விடை என.. தன்னுடைய காதலில்லா மனம்தான் தெரிந்தது. ‘நான் ஏன் அவரை விரும்ப வேண்டும், அதான் திருமணமே முடிந்துவிட்டதே.. அதன்பின் எதற்கு விரும்ப வேண்டும்.. இயல்பாக, கணவனின் அருகாமையை ஏற்க வேண்டுமே நான்’ என கேள்விதான் அவளுள் எழுந்தது. 

மீண்டும் கண்ணீர் சுரபி வேலை செய்ய கண்ணீர் பொங்கி பொங்கி வந்தது, மயூராவிற்கு. என்னமோ தவறு செய்த உணர்வு.. தன்னை மன்னிக்கவே முடியவில்லை. அங்கே இருக்க இருக்க.. இன்னும்  அவளுக்கு அழுகைதான் வந்தது.

கணவன் அறைக்கு வருவதற்கு முன் கிளம்பிவிட வேண்டும் என தோன்ற.. வேகமாக தனது சின்ன பாக் எடுத்துக் கொண்டாள்..  அதில் டவள் எடுத்துக்  கொண்டாள்.. வேறு சில புடவை என தேவையானவற்றை எடுத்துக் கொண்டாள். மீண்டும் கண்ணாடியை பார்க்க முடியவில்லை. நெற்றியை தொட்டு பார்த்தாள்.. பொட்டில்லை.. பொட்டு எடுத்து வைத்துக் கொண்டாள்.

பேக் உடன் கீழே சென்றாள். மயூராவிற்கு இப்போதுதான் நடுக்கம் குறைந்தது. அமைதியாக பூஜை அறை சென்று அமர்ந்துக் கொண்டாள். கச்சேரிக்கு செல்ல வேண்டும், ஆனால், மனம் முழுவதும் குழப்பம் நடுக்கம் மட்டுமே. மூச்சை இழுத்து இழுத்து விட்டு.. தன்னை நேராக்கிக் கொண்டாள்.

இருபது நிமிடம் பிடித்தது.. அவளின் மூச்சு நேராக. காலையிலிருந்த அந்த இனிமையான மனம் இப்போது இல்லை.. வரவழைத்துக் கொண்ட தைரியமான மனம்தான் இப்போது பெண்ணுக்கு. கண்களை திறந்தாள். அண்ணாமலையார் தன் மனையாளோடு நின்றார். அவரை சற்று நேரம் பார்த்தாள். அண்ணாமலையார் எப்போதும் உண்ணாமலையை பிரியவேமாட்டார். அவரோடு எப்போதும் மனையாள் இல்லாமல் போட்டோவை கூட  இவள் பார்த்ததில்லை. மனது ‘நானும் அவனை பிரிந்திட கூடாது’ என எண்ணியது.

மீண்டும் கண்களை மூடிக் கொண்டாள்.. மனதுள் “ஓம்.. ஓம்..” என சொல்லிக் கொண்டாள். நிதானப்பட்டு வெளியே வந்தாள்.

மயூராவிற்கு மனதுள் முழுவதும் கணவன்தான் நிரம்பி வழிந்தான்.. ‘எப்படி தீர்ப்பது இதை… எனக்கு அவரின் நெருக்கம் பிடிக்கலை..இன்னமும் என்ன செய்வது’ என ஓடிக்கொண்டே இருந்தது மனதுள். ‘அண்ணன்கிட்ட சொல்லலாமா.. அத்தைகிட்ட.. அவர் ரொம்ப ஹார்ஷா இருக்கார்ன்னு சொல்லாமா.. அம்மா, அம்மாகிட்ட அம்மாகிட்ட.. ஐயோ, சொல்ல முடியாதே..’ என ஓடிக்கொண்டே இருந்தது. 

வெளியே வந்தாள், மயூரா.  அவளின் சிந்தனையை கலைத்தார்.. மாமியார்.

மகேஸ்வரி “மயூ ம்மா, ஏன் டா.. இவ்வளோ லேட்.. காபி கூட குடிக்கலை.. இப்போது காபி தரவா, சாப்பிடுறீயா.. அம்மா எத்தனை மணிக்கு வருவாங்க” என கேள்வியாக கேட்டார்.

மயூரா “அத்தை காபி, தலைவலிக்கு” என்றாள்.

மகேஸ்வரிக்கு, மருமகளின் குரலே சொன்னது. அவளின் குழந்தை குரல் காணாமல் போனது இப்போது. கரகரவென இருந்தது.. முகம் சிவந்து வாடி போய் இருந்தது.

மகேஸ்வரி “என்ன டா.. காய்ச்சலா” என்றார் அருகில் வந்து நெற்றியை தொட்டு பார்த்து.

மயூரா குழந்தை என ‘ஆம்’ என தலையசைத்தாள்.

மகேஸ்வரி.. “கஷாயம்  போடுறேன்.. இப்போது காபி தரேன்.. போகும் போது இந்த கஷாயத்தை குடிச்சிடு.. காரில் தூங்கிட்டே போ.. காய்ச்சல் சரியாகிடும். அண்ணாமலையாரே  என்ன இது சோதனை.. முதல் ப்ரோக்ராம் இப்படியா ஆக வேண்டும்.. “ என புலம்பியபடியே உள்ளே சென்றார் வேகமாக.

மயூரா இரண்டு தாய் கண்ட குழந்தையென அதிர்ந்து நின்றாள்.

மகேஸ்வரி காபி கொண்டு வந்து கொடுத்தார். சர்க்கரை கம்மியாக.. சூடாக இருந்தது.  தன் அத்தையை பார்த்துக் கொண்டே.. குடித்து முடித்தாள் பெண்.

கபாலி, இறங்கி வரவேயில்லை. மகேஸ்வரி “என்ன செய்யறான் இன்னும் காணோம்.. இந்நேரம் கிளம்பி இருப்பானே.. ஒருபோன் செய்து கூப்பிடும்மா அவனை. இட்லி சூடா இருக்கு.. வர சொல்லு” என்றார். தன் மருமகளிடம் 

மயூரா அதிர்ந்து அமர்ந்திருந்தாள். நான் கூப்பிடனுமா திரும்பவும் எனத்தான் தோன்றியது அவளுள்.

கபாலி ஒருவழியாக தன் அறைக்கு வந்தான். அவள் இல்லை. இன்னும் குறுகி போனான். தலையை கூட துவட்டவில்லை. அப்படியே படுத்துக் கொண்டான். கீழே செல்ல முடியவில்லை எதோ அவமானமாக உணர்ந்தான். ஒரு உறவை.. எப்படி எல்லாம் கடினப்படுத்திக் கொள்ள முடியுமோ.. அவ்வளவு கடினப்படுத்திக் கொண்டான். கடல் என்னதான் நீண்டு.. அகண்டு.. ஆழ்ந்து.. கிடந்தாலும் பலனேதும் இல்லையே. தேன் ஒரு துளிதான் என்றாலும்.. ருசிக்குமே. அப்படிதான் கபாலியின் ஆத்திரம் அதிகாரம் எல்லாம் நீண்டு.. அகண்டு இருந்தாலும்.. பலனில்லாமல் போகிற்று இப்போது. அன்பு என்ற சின்ன தேன் துளிதானே ருசிக்கும்.. அன்பில்லா வாழ்க்கை.. ஒன்றுமில்லா அகண்ட சமுத்திரம்தானே.

இப்போது, மயூரா “அத்தை கூப்பிட்டேன், அவர் எடுக்கலை” என்றுவிட்டாள்.

மகேஸ்வரி “சரி, நான் கூப்பிடுறேன்” என்றார். அழைத்தார்.. போன் இங்கே ஒலித்தது. மகேஸ்வரி மருமகளை பார்த்தார்.

‘ஐயோ’ மாட்டிக் கொண்ட மயூரா அமைதியாக அமர்ந்துக் கொண்டாள். மகேஸ்வரிக்கு எதோ புரிவது போல இருந்தது. எதோ சரியில்லை என உடனே கணக்கிட்டுக்கு கொண்டார். ‘ஆஹா.. மருமகள் முகம் வாடி இருக்க காரணம் எதோ இருவருக்குள்ளும் தகராறு.. திருமணமாகி ஒருவாரத்தில் என்ன தகராறு..’ என சிந்தனை செல்ல.. மேலே தன் மகன் அறைக்கு செல்ல படி ஏறினார், மகேஸ்வரி.

Advertisement