கபாலி, கிளம்பிவிட்டிருந்தான். அதன்பின்தான் இவர்களின் உரையாடல். எனவே, அவனுக்கு ஏதும் தெரியாது.

மயூரா, கிளம்பி சென்றாள்.. இப்போது ஜெயந்தினி பயன்படுத்தும் கார்.. மயூவிற்கு என டிரைவரோடு இருக்க.. யாரும் சொல்லாமல், மயூரா அதை எடுத்துக் கொண்டாள்.

ஆக, மயூரா தன் அக்டாமிக்கு மகேஸ்வரியை அழைத்துக் கொண்டாள். அவரும் ஆசையாக அங்கு வரும் எல்லோரிடமும் பேச தொடங்கினார்.. அவர்களின் நடந்ததை பார்க்க தொடங்கினார். பாட்டும் நடனம்முமாக நேரம் சென்றுது அவர்க்கு.

ஆகிற்று ஒருவாரம்.

கபாலி, மதிய உணவிற்கு வந்ததில்லை. ஆனால், குவாரியில் இருந்தவனுக்கு.. ஆடிட்டர் அழைக்க.. வந்துவிட்டான். வேலை எல்லாம் முடிய இன்று தன் அன்னைக்கு அழைக்காமல் வீடு வந்தான். வீடு பூட்டி இருந்தது. தன் காரில் இருந்த சாவிக் கொண்டு திறந்துக் கொண்டு உள்ளே வந்தான். உணவு கொஞ்சமாக டேபிளில் இருந்தது. ‘அம்மா எங்கே போயிருப்பாங்க’ என கேள்வி எழுந்தது.

இப்போதுதான் அன்னைக்கு அழைத்தான். மகேஸ்வரி மகன் கேள்வியில் ‘நான் மயூராவின் ஸ்கூல்க்கு  வந்திருக்கேன் ப்பா, நீ சாப்பிட வந்தியா.. கூப்பிடவேயில்லை’ என்றார்.

கபாலிக்கு இந்த தகவல் புதிது.. ‘ஏன் என்னிடம் சொல்லிட்டு போகலை..’ எனதான் கேட்கத் தோன்றியது. ஆனால், அவனை எதுவோ தடுத்தது.. அமைதியாக “சரி வைக்கிறேன்” என போனை வைத்துவிட்டான்.

மகேஸ்வரிக்கு மனது கேட்கவில்லை.. தன் மருமகளிடம் சொல்லிவிட்டு.. வீடு வந்து சேர்ந்தார்.

கபாலிக்கு என்னமோ ஒருமாதிரியாக இருந்தது. தன் அன்னை வீடு வரவும்தான் கொஞ்சம் தெளிந்தான் “அம்மா பசிக்குது” என்றான்.

மகேஸ்வரி பரபரவென சாதம் வைத்து.. உணவு பரிமாறினார்.. மகனுக்கு. கூடவே, அங்கே நடன வகுப்பில் நடந்ததை பற்றி பேசிக்கொண்டே இருந்தார் அவ்வபோது.

அவர் இயல்பாக பேசினாலும், மகனின் மனது உறுத்தியது ‘அம்மாவை நான் கவனிக்கலையோ..’ என.

மாலையில் நேரமாக வந்துவிட்டாள் மயூரா. கணவனின் வண்டி இந்த நேரத்தில் நிற்பதை பார்த்து அமைதியாக வந்தாள். கபாலி என்னமோ ஹாலிலேயே அமர்ந்திருந்தான். மனையாள் வரவை இன்றுதான் பார்க்கிறான்..  தாமரைபூ நிற காட்டன் புடவை அவளின் தேகத்தில் படிந்து இருந்தது. பார்க்கவே, உழைப்பு தெரிந்தது.

மயூரா, கணவன் அமர்ந்திருப்பதை பார்த்ததும்.. சின்ன வாட்டம் அவளின் முகத்தில்.. தலையை குனிந்துக் கொண்டு.. ‘தன்னை’ கண்டும் காணாமல் கடந்தவளை.. திரும்பிப்  பார்க்காமல், கடினப்பட்டு.. இறுக்கமாக அமர்ந்திருந்தான் கபாலி. ஆனால், அவள் கடந்து செல்லவும்.. அந்த மல்லிகை  வாசம் அவனை சூழ்ந்தது.

அவள் அந்த பக்கம் சென்றதும், மகேஸ்வரி, தன் அறையிலிருந்து எழுந்து  வந்தார். சற்று படுக்க சென்றிருந்தார். மகன், கீழே ஹாலில் இருப்பதை பார்த்து.. “வந்துட்டாளா ப்பா.. கார் சத்தம் கேட்டுதே.. எங்க மயூ” என்றார்.

கபாலிக்கு உள்ளுக்குள் ஆச்சர்யம்.. அந்த பிசாசு இவ்வள்ள்ள்ளோ க்ளோஸ்சோ.. பதிலே சொல்லாமல் மேலே பார்த்தான் மகன். மகனின் பார்வை புரிந்து அன்னை.. “இரு சூடா பஜ்ஜி போடுறேன்.. அவளும் வரட்டும் சாப்பிடலாம்” என சொல்லி உள்ளே சென்றார்.

மயூரா சற்று நேரத்தில் கீழே வந்தாள்.. கபாலி போனில் யாருடனோ பேசியபடியே அதே இடத்தில் அமர்ந்திருந்தான். இப்போது தன் மனையாள் என்ன செய்கிறாள் என பார்த்திருந்தான்.

மயூரா குளித்து வந்திருப்பாள் போல.. சுடி அணிந்திருந்தாள். அவள் கடந்த போது, மல்லிகை வாசம்.. வரவில்லை, கணவன் அவளின் பின்னலை பார்த்தான், அவள் மல்லிகை வைக்கவில்லை. கொஞ்சம்  ஏமாந்து போனான். 

மயூரா பூஜை அறை சென்றாள்.. விளகேற்றினாள், கையில் ஊது பத்தியுடன் வெளியே வந்தாள்.. வீட்டின் எல்லா புறமும் காட்டினாள்.. ஆங்காங்கே, வைத்தாள். மீண்டும் பூஜை அறை சென்றாள்.. சற்று நேரம் சென்று வெளியே வந்தாள், நேராக டைனிங் டேபிள் சென்று அமர்ந்தாள்.

மகேஸ்வரி “வந்துட்டியா.. ஆமாம், நீங்க, நாளைக்கு எப்போ கிளம்பனும்” என கேட்டபடியே.. இரண்டு ப்ளேட் பஜ்ஜி எடுத்து வந்தார். ஒன்றை மருமகள் கையில் கொடுத்தவர்.. ”அவன்கிட்ட கொடுத்துட்டு வந்து.. நீ சாப்பிடு” என்றார்.

மயூரா எச்சில் விழுங்கியபடியே.. எதோ மலையை பிரட்டும் எண்ணத்தில் திணறியபடியே, ப்ளேட் எடுத்து சென்றாள்.

ஹாலில் கபாலியின் அருகில் சென்று நின்றாள்.. அவன் போன் பேசிக் கொண்டே பார்க்க.. கையில் கொடுத்துவிட்டு, ‘அப்பாடா’ என வந்துவிட்டாள் தன்னிடத்திற்கு.

கபாலி போனை வைத்துவிட்டு.. தட்டோடு, வந்து டேபிளில் அமர்ந்தான். மயூரா “அத்தை காலையில் பத்துமணிக்கு கிளம்பனும்.. லஞ்ச் அங்க ஏற்பாடு செய்திருப்பாங்க.. நைட் பங்க்ஷன் முடிய.. லேட் ஆகும். மிட் நைட்தான் வருவேன்..” என தன்னுடைய எல்லா ப்ரோக்ரா’மும் சொல்லிக் கொண்டிருந்தாள். 

அப்போதுதான் வந்து அமர்ந்தான் கபாலி.. இவளின் பேச்சை கேட்டவன் அனிச்சையாய் “என்ன அவுட் ஸ்டேஷன் போறியா” என்றான்.

மயூரா கணவனின் கேள்வியில் மாட்டிக் கொண்டவளாக விழித்தாள்.

மகேஸ்வரி “ஏன் மயூ.. அவன்கிட்ட சொல்லலையா..” என்றார் சின்ன குரலில் அதட்டலாக.

மயூரா சற்று நேரம் சென்று “டென்ஷனில் மறந்துட்டேன் அத்தை.. நைட் பேசலாம்ன்னு நினைச்சேன்” என்றாள், சமாதானமானக் குரலில்.

மகேஸ்வரி “என்னம்மா..இது, அவன் கிட்டதானே முதலில் சொல்லனும்.. உங்க வீட்டில் சொல்லிட்டியா” என கேட்டபடி, தான் தொடுத்த மல்லிகை பூவை மருமகளிடம் கொடுத்தார். 

மயூரா, தன் அத்தையின் கேள்வியில் தயங்கியபடியே பூவைத்துக் கொள்ளும் சாக்கில் அந்தபக்கம் நகர்ந்துக் கொண்டாள்.

இப்போது கபாலி “அதெல்லாம் சொல்லியிருப்பா ம்மா.. அவங்க எல்லா அரேஞ்ச்மென்ட்’ஸும் செய்திருப்பாங்க.. மக போறான்னா.. சும்மாவா.. என்கிட்டே மட்டும்தான் மறந்திடும்” என்றவன் “காபி கொடும்மா தலையை வலிக்குது” என்றான்.

மயூராவிற்கு இதுபோன்ற பேச்சேல்லாம் பழக்கமில்லை, அதில்  குரல் இன்னமும் திக்க.. “இல்லங்க.. இல்ல அத்தை, கல்யாணத்திற்கு முன்னமே புக் ஆகிய பங்க்ஷன். அதான், அண்ணன் அரேஞ்ச்மென்ட்ஸ் எல்லாம் அப்போவே பார்த்துட்டான். இப்பவும், அம்மா என் கூட வருவாங்க..” என  அவள் திணறி சொல்ல சொல்ல..

கபாலி பொறுமை இழந்தவனாக “ஓகே.. இப்போவாது எனக்கு விஷயம் தெரிந்ததே.. சரிம்மா, நான் குவாரி போறேன். நாளைக்கு மதியம்தான் வருவேன்” என்றான் பொறுப்பாக.

மகேஸ்வரி “டேய் நீ முதலில் சொல்லிட்டு போய் பழகு டா. அந்தப் பெண்ணுக்கும் சொல்லி கொடு.. போ.. என்ன ஏதுன்னு பேசிட்டு அப்புறம் கிளம்புங்க.” என அதட்டினார். அப்படியே ஹாலில் சென்று அமர்ந்துக் கொண்டார் சீரியல் போட்டு கொண்டு.

டேபிளில்  அமர்ந்திருந்த இருவருக்கும்.. கொலைவெறி, ஒருவர்மேல் ஒருவருக்கு. ஆனால், நிமிர்ந்து பார்க்க முடியவில்லை.. இருவருக்கும் சங்கடம். 

மயூரா ‘இவர் இன்னும் வான்னு கூட கூப்பிட்ல.. நான் எங்க இருக்கேன், என்ன பன்றேன், ஏதாவது தெரியுமா.. சொல்லலையாம். ஆசை கணவன்.’ என முறைத்தாள்.

கபாலி ‘என்னை மனுஷ்னாகவே பார்க்கறதில்லை. எங்க அம்மாவையும் அக்டாமிக்கு கூட்டி போயிருக்கா என்கிட்டே சொல்லவேயில்ல.. இப்போ, இவளும் பங்களூர் போறா.. சொல்லவேயில்ல..’ என திட்டிக் கொண்டிருந்தான்.

கபாலி “எப்போ கிளம்பறீங்க..” என்றான்.

மயூரா அவன் முதல் வார்த்தை பேசவும் “இ..ல்ல.. அண்ணன் பார்த்துக்குவாங்க. அதான்” என்றாள்.

கபாலி “எப்போதுமே.. அண்ணனே பார்த்துக்குவாரா” என்றான் நக்கலாக.

மயூரா கோவமாக முறைத்தாள்.. அடுத்த நொடியே அது முடியாமல் போக.. தலை தாழ்ந்தாள்.

கபாலி “சொல்லணும்.. என்கிட்டே  சொல்லணும்” என்றான் திமிராக.

மயூராவும் “க்கும்.. அப்படிதானே நீங்களும்.. சொல்லுங்க, சொல்றேன்” என்றாள் தன்னை தானே தேற்றிக் கொண்டு, கணவனை நிமிர்ந்து பார்த்து.

கபாலிக்கு ஒருமாதிரி.. ஜிவ்வென இருந்தது.. அவள் கொஞ்சிகொஞ்சி கோவம் கொண்டு சொன்னதில்.. அவன் உதடுகள் மடித்து கண்ணை சுருக்கி “நான் சொன்னால்.. அதையே நீ செய்வ..ம்..” என்றான், சின்ன குரலில் ரகசியமாக.

மயூரா ஏதும் சொல்லாமல் நின்றாள்.

கபாலி “இங்க பாரு..” என்றான்.

அவள் பார்க்கவில்லை. கணவன் அதட்டினான் “நான் சொல்லலைன்னாலும் சொல்லணும்” என்றான்.

மயூராவும் அதட்டலாக  “முடியாது” என்றவள், அங்கிருந்து நகர்ந்தாள்.

கபாலியின், இதழ்கள் விரிந்தது.. ‘ம்.. நான் சொன்னால், இவள் சொல்லுவாளாம்.. ரூல் போடறா.. பார்க்கலாம் டி” என கோவமே கொள்ளாமல் திட்டினான் அவளை. அந்த மல்லிகை வாசம் சூழ்ந்தது ரம்யமாக அவனை

“வெள்ளி சலங்கைகள் கொண்ட.. 

கலைமகள் வந்து ஆடும் நேரமிது..”