Advertisement

நான் உன் நிறையன்றோ!..

12

இப்போது கபாலியின் அழைப்பை ஏற்று.. ரமணனின் அண்ணன் தம்பி..  வந்து சேர்ந்தனர். ஆனால், வீடு அமைதியாக இருந்தது. மகேஸ்வரிக்கு துக்கம் தாங்கவில்லை இவர்களை பார்த்ததும்.. நடந்தது அனைத்தையும்.. தங்களுக்கு தெரிந்தது அனைத்தையும்.. சொல்லி அழுது முடித்தார். ஆக, அக்காவின் காதலுக்காக.. தம்பி அவர்கள் வீட்டு பெண்ணை கடத்தியிருக்கிறான் எனவும். உடனே, கபாலிக்கு அழைத்து, ரமணின் அண்ணன் பேசினார்.. திட்டினார்.. போய் மன்னிப்பு கேள் அவர்களிடம்’ என நல்ல புத்தி சொன்னார்.

எல்லாவற்றுக்கும் கபாலி பதில்தான் பேசினான். கோவத்தில் போனை வைத்தும் விட்டான்.

மகேஸ்வரியை.. உறவுகள்தான் தேற்றிவிட்டு சென்றனர்.

ஜெயந்தினியும் அன்னையும் அமைதியாகவே அந்த இரவை கடத்தினர். கபாலி வீடு வரவில்லை. குவாரி சென்றுவிட்டான். மயூராவின் போன் தன்னிடம் இருப்பதை இப்போதுதான் கவனித்தான், கபாலி. அதை எடுத்து பார்த்தான்.. அதை ஆன் செய்ய தோன்றவில்லை. பார்த்துவிட்டு.. பத்திரப்படுத்திக் கொண்டான்.

!@!@!@!@!@!@!@

இப்போது, மயூரா குளித்து முடித்து.. தயாராகி தன் அன்னை அறைக்கு சென்றாள்.. வசீகரன் தங்கையை பார்த்ததும் “மயூ.. சாரி டா..” என்றான் அவளை அணைத்துக் கொண்டு.

தங்கை அமைதியாக இருந்தாள்.. அண்ணன் “எப்போ வந்த.. அவன்.. க்கும், அவன் ஏதாவது சொன்னானா” என்றான், எப்படி தங்கையிடம் பேசுவது.. கபாலி ஏதாவது மிரட்டினானா இல்லை, தவறாக நடந்துக் கொண்டானா என கேட்க வேண்டும்.. ஆனால், எப்படி கேட்பது என தெரியவில்லை தடுமாறினான், அண்ணன்.

மயூரா “ண்ணா.. அவன் ஏதும் என்கிட்டே சொல்லல.. உங்ககிட்ட போனில் பேசும் போது..தான் தெரியும். அவங்க.. அந்த ஜெயந்தினியோடு தம்பியா” என்றாள்.

தலையை குனிந்துக் கொண்டு.. ‘ஆம்’ என்பதாக தலையசைத்தான் அண்ணன்.

மயூரா “அ.. ஜெ..யந்தினி.. அழகா இருக்காங்க. இங்க வந்தாங்க. நீதான் பார்க்கலை” என்றாள் இப்போது கைகளை கட்டிக் கொண்டு அண்ணனின் முகத்தை கவனித்துக் கொண்டே பேசினாள், தங்கை.

வசீகரன் புருவம் உயர்த்தினான் “எதுக்கு வந்தாள்..” என்றான் .

மயூரா “இங்க வா ண்ணா, உனக்கு என்ன நடந்துதுன்னு தெரியாது. வா” என கூட்டி சென்று அவனை சேரில் அமர வைத்தாள். தான் அவனின் கட்டிலில் அமர்ந்துக் கொண்டாள், எதிரே.

மயூரா “நம்ம வீட்டிலிருந்து யாரும், அங்க போகலை இன்னமும். அதற்குள், அவங்க அதான் உங்க.. சாரி, ஜெயந்தினி.. என்னை கூட்டிகிட்டு இங்க வந்துட்டாங்க” என தொடங்கி அவள் கண்ணில் நீர் ததும்ப மன்னிப்பு கேட்டு சென்றது வரை எல்லாம் சொல்லி முடித்தாள், அவனின் தங்கை.

வசீகரன் தங்கையை பார்க்க முடியாமல் எழுந்து நின்றுக் கொண்டான் தன்னவள் நினைவில்.

மயூரா “ஏன், கீழ வரலை நீங்க.. அவங்க உங்களை பார்க்க நினைச்சிருப்பாங்க.. அவங்களுக்கு, என்னை கூட்டிட்டு போனது தெரியாது. என்னை  பார்த்ததும்.. அப்படியே வந்துட்டாங்க.. பட்டு புடவை கட்டியிருந்தாங்க.. பாவம், நிறைய ஏமாற்றம் அவங்களுக்குதான்.” என்றாள் ஆழமான குரலில்.

வசீகரன், எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு, எந்த பாவனையும் இல்லாமல் நின்றான். ‘எதற்காகவும் நான் உணர்ச்சிவசப்பட்டிட கூடாது’ என அமைதியாக நின்றிருந்தான் எங்கோ வெறித்து பார்த்துக் கொண்டு.

மயூரா  அண்ணனையே பார்த்தாள்.. “அண்ணா, ஏன் இப்படி இருக்க.. அதான், நான் வந்துட்டேனில்ல.. நீ, அவன் கிட்ட பேசு.. பாவம் அவங்களுக்கு, அவங்க தம்பி செய்தது எதுவுமே தெரியாது போல.. நீ பேசிடு” என்றாள், திக்கினாலும் தான் சொல்ல வந்ததை சொல்லி முடித்தே, வெளியே வந்தாள்.

வசீகரன் அழுத்தமாக அப்படியே நின்றுக் கொண்டான். ‘என்ன செய்ய முடியும் என்னால்.. அவனுக்கு அக்காவாக பிறந்துவிட்டாளே.. என்னை காதலித்தும் விட்டாளே அழட்டும், நன்றாக அழட்டும். என்னால் இப்போது ஒன்றும் செய்ய முடியாது.. ப்பேஸ் பண்ணட்டும்.’ என அழுத்தமாக நின்றுக் கொண்டான்.

மயூரா உண்பதற்காக கீழே வந்தாள். சாதரணமாக இருந்தாள் பெண். ஆனால், ஆண்களால் யாராலும் பெண்ணின் முகத்தை பார்க்க முடியவில்லை.. அவ்வளவு சங்கடமாக இருந்தது. ‘என்ன இருந்தாலும் பெண்ணை ஒருவன் தங்களுக்கு தெரியாமல் கூட்டி சென்றிருக்கிறான், அவனாக  விடுவிக்கும் வரை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை எதற்கு பெரிய்ப்பா.. சித்தப்பா.. அண்ணன்.. தம்பி.. என என்ன ஆண்கள் நாங்கள்’ என எண்ணம்தான்.

மயூரா, தானாகவே தன் தந்தையிடம் வந்தாள்.. “ஏன் ப்பா, ஓ… ஒருமாதிரி இருக்கீ..ங்க..” என்றாள் தன்னுடைய திணறலான மொழியில். பின்  அவளாகவே “நா..ன்.. நல்..லா.. இருக்கேன் ப்பா.. நீ..ங்க ஏதும் கவலைப்படா….தீங்க ப்பா,” என்றாள்.

மயூராவின் பெரியப்பா “மயூ,  சரியாகிடுவான்.. நீ சாப்பிட்டியா” என்றார்.

மயூரா “இதோ போறேன்..” என சைகை பாதி.. பேச்சு பாதியாக சொன்னாள்

பெரியப்பா தன் மனைவியை பார்த்து “என்ன ம்மா.. பெண்ணை கவனிங்க” என்றார்.

மயூரா “ஏன் அப்..பா, எ..ன்கிட்..டே பேசமாட்..டீங்களா” என்றாள்.

இப்போது ஆதிகேசவன் “அப்படி எல்லாம் இல்லடா..” என எழுந்தார். மகளை கூட்டிக் கொண்டு உண்ணுமிடம் வந்தார்.

பெண்கள் தட்டு வைத்து தோசை பரிமாறினார். ஆதிகேசவன் மகளுக்கு ஊட்டி விட்டார்.

மயூரா “அப்பா.. அ..ண்ணா, கல்..யாணம்..” என்றாள்.

ஆதிகேசவன் முறைத்தார் மகளை. நீ இதை பேச கூடாது என இருந்தது அந்த பார்வையில். மகள் பேச்சை நிறுத்திவிட்டாள். தந்தை மூன்றாவது தோசையையும் ஊட்டினார் மகளுக்கு. மகள் போதும் என்றதும் தட்டிலேயே கைகழுவி, மகளுக்கு வாய் துடைத்துவிட்டார், ஆதிகேசவன். 

மகள் எழுந்துக் கொள்ளவும்.. தந்தை.. நெற்றியில் முத்தம் வைத்தார்.. “இன்னிக்கு நீ என் கூடதான் இருந்த சரியா.. எப்போதும் இன்னிக்கு நடந்ததை பற்றி  பேசக் கூடாது. அ..வன், அரவிந்த் போன் செய்தால்.. இன்று நடந்ததை பற்றி ஏதும் சொல்லாத.. சரியா டா..” என்றார்.

மயூரா, தலையசைத்து மேலே சென்றுவிட்டாள்.

இரவு உண்டனர் பெரியவர்கள். கிளம்பினர் எல்லோரும். 

ஆதிகேசவன் வீட்டில் எல்லோரும் உறங்க சென்றனர். யாருக்கும் உறக்கம் வரவில்லை. எதை சிந்திப்பது என தெரியவில்லை அவர்களுக்கு. தந்தையாக ஆதிகேசவனுக்கு.. தன் மகளின் வாழ்வுதான் முன் நின்றது ‘ஏன் தங்கை இன்னும் அழைக்கவில்லை. அண்ணன் போன் செய்து சொல்லிவிட்டார்.. மயூரா வந்து சேர்ந்துவிட்டாள் என. ஆனால், இன்னும் அழைக்கவில்லையே.. ஒருவார்த்தை அழைத்திருக்கலாம்..’ என எண்ணிக் கொண்டிருந்தார். 

மயூராவிற்கு, தன் போன் கபாலியிடம் இருக்கிறது, அதை எப்படி வாங்குவது என எண்ணம். அவளின் மனதில் எந்த வேறுபாடுமில்லை எனவே, உறங்க முற்பட்டாள். ஆனால், என்னமோ யோசனை.. அரவிந்த் என்ன சொல்லுவார்.. அத்தை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என யோசனை வந்தது அவளுக்கு. எனவே, அவளின் உறக்கமும் கெட்டது.

வசீகரன் ஜாதகத்தில் எல்லா கிரங்களுகம் அவனுக்கு பகையாகி போனது  போல.. ‘என்னதான், என்னால் முடியும்.. இது என் வாழ்க்கை.. நான் பார்த்துக்கிறேன்..’ என எண்ணினாலும்.. விதி அவர்களின் வாழ்வில்தான் ஒவ்வொரு முறையும் நானும் இருக்கேன்  டா..’  என காட்டி செல்லுகிறது. விரக்தியின் உச்சத்தில் இருந்தான், வசீ.

அங்கே, 

மறுநாள் ஆனந்திடம் கொடுத்து, மயூராவின் அகாடமியில் கொடுக்க செய்திவிட்டான். ஆனால், அதில்தான் பிரச்சனை தொடங்கியது. கபாலி.. ஒரு சின்ன நோட் வைத்திருந்தான் அதில். ஒன்றுமில்லை ‘அக்காவின் திருமணத்திற்காக உன்னை கஸ்டடி எடுத்துட்டேன்.. யோசிக்காமல், சாரி’ என ஒரு வரி  செய்திதான் இருந்தது. ஊர்.. பெயர்.. ஏதும் இல்லை. யாரின் போன் என தெரியாமல் அங்கே வேலை செய்யும் பெண் எடுத்து படித்துவிட்டாள். பின்தான், அந்த போன் யாருடையது என தெரிந்து..  மயூராவிடம் கொடுத்தாள். ஆக, அங்கே வந்து நடனம் பயிலும் பெண்களின் மத்தியில்.. மயூராவை யாரோ கஸ்டடி எடுத்தார்களாம்.. என சிறகு கொண்டு பறந்தது.

ஆக, மீண்டும் பழைய நிலையை விட மோசமாகியது எல்லோரின் மனநிலையும்.

அடுத்த ஒருவாரத்தில், கபாலி வீடு வரவில்லை. அன்னையிடமும் அக்காவிடமும் பேசவில்லை. ‘சொந்தங்கள் விஷயத்தில் தான் இப்படி செய்திருக்க கூடாது என..’ அவனின் மனமே சொன்னது இப்போது. எனவே, அதை உணர்ந்து.. வேலையில் தன்னை தொலைக்க தொடங்கினான் ‘நமக்கு இந்த குடும்பம்.. சேர்த்து வைக்கிறது.. காதல் எல்லாம் வராது போல. நமக்கு கல்லு.. ரேட்.. லோட் அனுப்பிட்டியா.. அமௌன்ட் ரிசீவ்டுடா.. அதுதான் சரி.’ என தெளிந்துக் கொண்டான், கபாலி.

எனவே பொறுமையாக தன் அன்னைக்கு ஒருவாரம் சென்று போன் செய்தான் “என்ன ம்மா.. அக்கா எப்படி இருக்கா” என்றான்.

அன்னை மகேஸ்வரி திட்டி தீர்த்தார்.. எல்லாவற்றையும் பலியாடு போல.. தலை குனிந்து கேட்டுக் கொண்டான்.. சமாதானமோ மன்னிபோ சொல்லவில்லை, கேட்கவில்லை.

அன்னையும் ‘எப்படி இருக்க.. வா..’ என ஏதும் சொல்லவில்லை போனை வைத்துவிட்டார்.

அங்கே வசீகரனின் வீட்டில் மறுநாள்.. மயூரா, மேலே தனது அறையிலிருந்து பார்த்துக் கொண்டே இருந்தாள்.. அப்படி ஒரு சத்தம் வீட்டில். இதுவரை.. இப்படி இந்த வீட்டில் சண்டை நடந்ததேயில்லை.. அந்த அத்தை.. அண்ணன் தம்பி எல்லோரையும் லெப்ட் ரைட் வாங்கிக் கொண்டிருந்தார்.

மயூரா, மிரண்டு அதை வேடிக்கை பார்த்தாள் ‘தன் தந்தையை, அண்ணனை எல்லோரையும் வைதது.. கபாலியை கொன்னு போட்டிருக்க வேண்டாமா.. என்றது. அத்தோடு, ‘அந்த வீட்டிலிருந்து சம்பந்தம் வேறு வர போகுதாமே..’ என ஆரம்பித்து  ‘அப்புறம் நாங்க யாரும் வரமாட்டோம்.. உங்க கிட்ட இப்போவே சொல்லிட்டேன்..’ என ஒருபாடு ஆடிதீர்த்து விட்டுதான் போனார் அந்த அத்தை. ஆக, அத்தைகள் எல்லாம் ஒருபக்கம்.. இப்போது தங்களின் அப்பா  பெரியப்பா சித்தப்பா என இவர்கள் எல்லாம் ஒருபக்கம் என சண்டை நடந்துக் கொண்டிருக்கிறது இந்த ஒருவாரமாக.

ஆதிகேசவனுக்கு, அவரின் அண்ணனுக்கும் இரண்டொரு நாட்கள்.. ‘அக்கா தங்கைகள் சொல்லுவது சரி.. கோவம் இருக்குமே அவர்களுக்கும்’ என சகோதரர்களும் அமைதியாக இருந்தனர்.

ஆனால், அந்த தங்கை பேசவேயில்லை.. மயூரா வந்த பிறகும் கூட, ஆதிகேசவனிடம் போன் செய்துக்கூட பேசவில்லை. உள்ளூரில் இருக்கும் அக்காதான் ‘அரவிந்துக்கு அவர்கள் வேறிடம் பார்க்கலாம்  என இருக்காங்க.. நீங்க பெண்ணுக்கு பார்த்திடுங்க.. அவங்க வீட்டில், இது சரி வராதுன்னு சொல்லிட்டாங்க’ என சொல்லி சென்றார்.

ஆக, ஆதிகேசவன் சகோதரர்களுக்கு.. வருத்தம்தான். ஆனால், அதைவிட இருபிள்ளைகளின் வாழ்வு இப்படி விடை தெரியாமல் இருப்பதில்.. அவர்களுக்கு சங்கடம் வந்தது. மூவரும் கலந்து பேசினர். ஆதிகேசவனுக்கு, ஜெயந்தினியை பெண் எடுப்பதில் சந்தோஷம். ஆனால், தன் பெண்ணின் வாழ்வு என்ன என்ற கேள்விதான் முன்நின்றது. தன் சொந்தமே எட்டி பார்க்காத நிலை.. அவரை இன்னமும் நிலைகுலைய செய்தது. அத்தோடு, நாளை ஜெயந்தினியின் வீடு.. இங்கே வர போக இருக்கும்.. எப்படி, அவர்களோடு பழக முடியும்.. என பல சங்கடங்கள்.. எதுவும் தீரவேயில்லை.

நாட்கள்தான் சென்றது.

மூன்று மாதம் ஆகிற்று.

மயூராவின் நிச்சயம் நடக்கும் என எதிர்பார்த்த மாதம் இது. எனவே, சொந்தகள் எல்லாம் பேச தொடங்கியது.. ஏதாவது விருந்து விழா என பார்க்கும் போது ’என்னாச்சு.. பொண்ணு கல்யாணம்’ எனவும் ‘ஏன், உங்க நாத்தனார் பேசுவதில்லை போல.. உங்களை பார்க்காமல் போறாங்க’ எனவும் கேட்க தொடங்கினர்.

ஆக, ஆதிகேசவனின் அண்ணன்.. தன் தம்பிடம் பெண் விஷயத்தை கொஞ்சம் தள்ளி வை. வசீகரனின் திருமணத்தை முதலில் முடிப்போம்’ என்றார். 

இந்த நாட்களில் வசீகரனும், ஜெயந்தினிக்கு அழைக்கவில்லை. ஜெயந்தினியும் சொல்லி விட்டுதானே வந்தாள் ‘உங்களின் எந்த முடிவையும் ஏற்கிறோம்’ என, அதனால், வசீகரனுக்கு அழைக்கவில்லை.

ஆக, பெரியவர்கள் எல்லோரும் சேர்ந்து.. ஜெயந்தினையை பெண் கேட்பது என முடிவானது. முறையாக மகேஸ்வரிக்கு அழைத்து பேசினர், நாளை வருகிறோம் என, ஆதிகேசவன் குடும்பத்தார்.

மகேஸ்வரியும் ‘நடந்ததை மறந்துடுங்க.. மன்னிச்சிடுங்க, என் பெண்மேல் தவறில்லை.. என் பெண் அமைதியானவள். பையனால்.. இனி உங்களுக்கு தொந்திரவு வராது’ என்றார் திடமானக் குரலில்.

ஆனால், மறுநாள் வேறு நடந்தது.

மகேஸ்வரி.. தங்கள் உறவுமுறைக்கு தகவல் சொல்லி வரசொன்னார். ஆனால், மகனுக்கும் அழைத்து பேசினார்.. ‘வீடு வந்திடாதே’ என. ஆக, மகேஸ்வரி பரபரப்பாக அதே சமயம்.. அமைதியாக இந்த நிச்சய ஏற்பாடை செய்தார்.

மறுநாள் காலையிலேயே நல்லநேரம் என வந்தனர் வசீகரனின் வீட்டார். ஜெயந்தியின் வீட்டில்.. ரமணனின் அண்ணன் முறையாக வரவேற்றார். சுமூகமாகவே சென்றது. அதிகம் பேச்சில்லை.. அளவான தேவையான பேச்சு மட்டுமே நடந்தது. வசீகரன் வந்திருந்தான். ஆனால், நிமிர்ந்து ஜெயந்தினியை பார்க்கவில்லை. சபையில் வந்து நின்ற பெண்ணுக்கு, தன்னவனின் பாராமுகம் அழுகையைத்தான் தந்தது.

ஆனால், ரமணனின் அண்ணன் சபையில் வேறு சொன்னார். ‘அதெப்படி கபாலியை ஒதுக்குவது.. அவன் அக்காவிற்கு எனத்தானே இப்படி செய்தான். நாளை அக்கா மச்சான் என கபாலிதானே எல்லாவற்றுக்கும் முன் நிற்கனும்.. உங்க பெண்ணுக்கும், இன்னும் ஏதும் முடிவகலை.. பேசாமல் பெண் கொடுத்து.. பெண் எடுத்தக்கலாம்.. உறவில் எந்த சிக்கலும் வராது. நாளபின்ன யாரும் எதுவும் பேசவும் முடியாது.. உறவும் நிலைத்து நிற்கும்..’ என்றார்.

அஹ.. மிரண்டே போகினர் ஆதிகேசவன் குடும்பத்தார்.

வசீகரன் உடனே எழுந்துக் கொண்டான் “அப்பா போலாம்.. மயூரா என்னால் பட்ட கஷ்ட்டம் போதும்.. இனியும் இப்படி ஒருவனை கட்டிக்கிட்டு, அவள் கஷ்ட்டப்பட வேண்டாம்.” என்றான் எங்கோ பார்த்துக் கொண்டு.

ரமணனின் அண்ணன் “அப்படி சொல்லாதீங்க தம்பி, அவன் தன் அக்காக்காகதான் எல்லாம் செய்தான். என்ன, முறையை மறந்துட்டான். மத்தபடி.. தங்கம் ப்பா.. அவன். அதன்பிறகு ஏதேனும் தொந்திரவு தந்தானா.. இல்லையே. ரமணன் பையன் ப்பா.. பாசக்காரன் ப்பா.. அவன் தொழில் அப்படி. சின்ன பையன் எதோ முன்னுக்கு பின் முரண் அவ்வளவுதான். உங்களை போல நல்லவர்களோடு இருந்தால்.. அவனும் பக்குவமாகிடுவான். நீங்க எல்லாம் பெரியவங்க.. உங்களுக்கு தெரியாதது இல்லை.. எங்க பெண்ணும் எப்படி வாழுதோ என எங்களுக்கும் கவலை இருக்காது. உங்களுக்கும் அப்படியேதான்” என தன் தம்பி குடும்பம் எங்கே பிரிந்திடுமோ.. அவனின் வாரிசை ஒதுக்கிடுவரோ என நயமாக பேசினார். 

வசீகரன் “பெரியப்பா.. இது சரி வராது” என சொல்லி வெளியே கிளம்பிவிட்டான்.

சுமதிக்கு இந்த யோசனை நிம்மதியை தந்தது. ‘எங்கே பெண்ணுக்கு வரன் தேடுவது.. நாத்தனார் வீட்டில்.. அரவிந்துக்கு வேறு இடத்தில் நிச்சயம் என்ற செய்தியை.. மற்ற உறவுகள் மூலம் அறிந்ததிலிருந்து.. அன்னைக்கு கோவம்.. பயம் வருத்தம் என எல்லாம் சேர்ந்துக்  கொண்டதே. எனவே, கணவரிடம் ‘பேசலாம்’ என்றார் குடும்ப தலைவி.

ஆதிகேசவன் மற்றும் அவரின் அண்ணன் தம்பி மூவருக்கும் எதோ பாரம் இறங்கிய நிலை. பெண்ணின் வாழ்வு முடிவாகிவிட்டது என நிறைவு வந்தது.

வசீகரன் கபாலி மயூரா என மூவரும் இல்லாமல்.. இரு ஜோடிகளின்  திருமணமும் நிச்சயிக்கப்பட்டது, பெரியவர்களால்.

  

Advertisement