Advertisement

கபாலிக்கு இவள் பதில் பேசாமல் போகவும் அவளுக்கு வாய் பேச வராதோ என சந்தேகம் எழத் தொடங்கியது.

பயணம் அமைதியாகவே சென்றது சற்றுநேரம்.

மயூரா, ஓரக்கண்ணால்.. கபாலியை கணிக்க முற்பட்டாள்.. மாநிறம்.. கூரான நாசி.. யோசனையான பார்வை.. இறுகிய தாடை.. பரந்த தோள்கள்.. வலுவான புஜங்கள்.. அந்த ஏசி காற்றிலும்,  அவனை போல.. அசையாத  சிகை.. கருப்பு உடை.. ஆக, ராவணன்தான். என பெண்ணின் மனம் எதையோ எண்ணி கணக்கு போட்டுக் கொண்டது.

கபாலி, அவளின் பார்வையை உணர்ந்திருந்தான் போல.. இப்போது “என்ன உன் ரிசர்ச் முடிந்ததா.. நான் யார்.. கண்டுபிடிச்சிட்டியா, சொல்லு” என்றான், இப்போது மரியாதை பன்மையை கைவிட்டு,அமர்ந்த்தலான  குரலில். அவனிற்கு ‘மயூராவிற்கு, தன் அண்ணனின் விஷயம் தெரிந்திருக்கும். ஜெயந்தினியையும் தெரிந்திருக்கும்.. அப்படி என்றால், இன்னார் வீட்டு பையன் என என்னையும் தெரிந்திருக்கும்.. இப்போது கண்டுக் கொண்டிருப்பாள்.. இவளை விட்டே, இவளின் அண்ணனுக்கு பேசலாம்..’ என எண்ணி கேட்டான்.

மயூரா நடுங்கியபடியே அமர்ந்திருந்தாள்.. வாய்  திறந்து பேசவில்லை. நேரம் செல்ல செல்ல.. அவனின் பேச்சின் தன்மை மாறுகிறதோ என தோன்றியது அவளுக்கு.

ஆனால், குழப்பமே வந்தது கபாலிக்கு. கபாலி “என்ன, என்னை யாருன்னு தெரியுதா..” என்றான் மீண்டும், தன்னை தெரியவில்லையோ.

மயூராவிற்கு, அவன் சாதரணமாக கேட்பது கூட எதோ வில்லன் கேட்பது போல தோன்ற.. அழுகை வரும்போல ஆகிற்று. ஆனாலும் பயத்தை அவனிடம் காட்டக் கூடாது  என  கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டு.. திடமானவள் போல.. அவனை பாராமல் நேராகவே பார்த்துக் கொண்டு, அமர்ந்தாள். அவனின் கேள்விக்கு பதில் ஏதும் சொல்லவில்லை.

கபாலி “ம்.. அந்த குடும்பம்தானே எப்படி இருப்பீங்க.. ம்.. உங்க அண்ணனும் அப்படிதான் போல. அதான், ஆறுமாசம் ஆச்சு.. இன்னமும் எந்த முன்னேற்றமும் இல்லாமல்.. அப்படியே இருக்கான். அவனாவது கல்யாணம் செய்து தொலையலாமில்ல.. அதுவும் செய்யமாட்டீங்கிறான்.” என இவன் பேச.

இப்போதுதான் மயூராவிற்கு எதோ புரிய திரும்பி பார்த்தாள் கபாலியை. 

கபாலி “ஐயோ.. தெரிஞ்சிடுச்சா.. அப்படி முறைக்கிற, பேசு” என்றான் நக்கலாக.

மயூராவிற்கு வார்த்தைகள் வரவில்லை.. அத்தோடு, இவனிடம் பேசவும் சங்கடமாக இருந்தது.. ‘ஆக, அண்ணன் விரும்பும் பெண்ணின் சொந்தகாரன்.. அனேகமாக அண்ணனோ தம்பியோ.. என்ன செய்ய போறானோ.. என்ன நடக்க போகுதோ..’ என பயம் பற்றிக் கொண்டது. சீட்டில் சாய்ந்து கண் மூடிக் கொண்டாள்.

கபாலி, அவள் கத்துவாள்.. கோவப்படுவாள்.. என எண்ணினான். ஆனால், இவள் இப்படி அமைதியாக சாய்ந்து கண் மூடிக் கொள்ளவும்..  கோவம் வந்தது. வண்டியை ஓரமாக நிறுத்தினான்.

மயூரா கண்விழித்தாள். கபாலி பெண்ணவளையே ஆராய்ச்சியாய் பார்த்தான்.. அந்த பார்வையின் தாக்கம்.. பெண்ணை என்னமோ செய்ய.. காரின் வெளியே.. சுற்றிலும் பார்த்தாள்.. கதவை திறக்க எண்ணினாள். அது முடியவில்லை.. ‘என்னதான் வேண்டுமாம் இவனுக்கு’ என அலைபாய்ந்தது மனது.

கபாலி “உனக்கு காது கேட்க்குமா” என கேட்ட படியே அவளின் அருகில் நெருங்கினான் அமர்ந்த வாக்கிலேயே, சட்டென ”க்குகூ…” என கத்தினான் அவளின் காதில்.

மயூரா பதறி போய்.. முகத்தை மறைத்துக் கொண்டு.. உடலை குறுக்கிக் கொண்டாள்.. அவன் தன் அருகில் நெருங்கவும்.. ஏதோ தனக்கு ஆபத்து என  எண்ணிக் கொண்டாள் பெண். இப்போது அவன் கத்தவும், அதில் தூக்கிவாரி போட நிமிர்ந்தவள்.. மருண்ட விழிகளால்.. சுவாசம் தப்ப.. ஏறிட்டாள் அவனை. சட்டென அருகில் வந்தவனின் வாசம் இன்னும் அவளை சூழ்ந்திருந்தது. யாரு இவ்வளவு அருகில் நெருங்கியதில்லை அவளிடம். பதறி போனாள் பெண்.

கபாலிக்கு அப்போதே அவளிடமிருந்து விலகியிருந்தான்.. இவளின் செய்கையையும் மருண்ட பார்வையையும்  பார்த்த, அவனை என்னமோ தாக்கியது. அடுத்த நொடி திரும்பிக் கொண்டு, தலையை கோதிக் கொண்டான்.. என்னமோ ஏறியது அவனுக்கு.. அவளை இப்போது மேலிருந்து கீழ் ஆராய்ச்சியாய் பார்த்தான்.. ரௌத்ரமாக “ஓ.. அப்படின்னு நினைச்சிட்டியா” என்றான். பின்  என்ன நினைத்தானோ சைகை மொழியில் ‘உனக்கு நான் பேசுவது கேட்க்குமா.. உனக்கு பேச்சு வராதா’ என கேட்டான். இத்தனை நேரம் அவள் பேசவில்லை என்பதால்.

மயூராவிற்கு, கபாலியின் பார்வையும் செய்கையும்.. என்னதான் பயம் கொள்ள கூடாது என்றாலும்.. இப்படி தன்னை நெருங்குவது.. துச்சமாக பார்ப்பது.. காது கேட்டாதா என கேட்பது எல்லாம் எரிச்சலையும் ஒரு ஒவ்வாமையை உண்டாக்கியிருந்தது. அவனை முறைத்தாள் ஏதும் பதில் சொல்லவில்லை.

கபாலிக்கு, அதிசையமாகதான் போனது. தான் பேசுவது எல்லாம் காதில் கேட்க்கிறது.. அதற்கு தக்க.. முறைக்கிறாள், ஆனால், அழுத்தமாக எப்படி பேசாமல் இருக்கிறாள்.. என அதிர்ந்தான். அவளின் அருகில் செல்லவும் பயந்துவிட்டாள்.. ‘ச்ச ச்ச நானென்ன, அவ்வளவு ஈசியா, அதுவும் உன்கிட்ட மயங்க.. பெரிய ரம்பை..’ என  எண்ணிக் கொண்டு, போனை எடுத்தான்.

மயூரா, சற்று ஆசுவாசம் ஆனாள். காபலியின் பக்கம் திரும்பவேயில்லை. சற்று வெளியே பார்த்தாள்.. யாரும் மக்களே தென்படவில்லை.. செடிகள் மரங்கள் இல்லாத.. பாறையும் காய்ந்த புதர்களும் சாலையின் இரு ஓரத்திலும் தெரிந்தது. அவ்வபோது லாரி’கள் மட்டும் தங்களின் கார்’ரை கடந்து சென்றது.

சற்று நேரத்தில் காரை எடுத்தான் கபாலி.. பெண்ணின் பக்கம் திரும்பியும் பார்க்கவில்லை, கபாலி.

கபாலி பேச்சுக் கொடுக்கவில்லை.. யோசனையோடுதான் இருந்தான்.  சற்றுதூரம் சென்று, நல்ல மரத்தின் நிழலாக பார்த்து நிறுத்திக் கொண்டான். அங்கு சற்று நேரம்  அந்த கார்  நின்றது. அடிக்கடி, காரின் விண்டோ.. கீழே இறங்கியது. பின் ஏசி போட்டுவிட்டான். 

இப்படியே நான்குமுறை நடந்தது. 

நேரமும் மதியத்தை கடந்தது. பசிதான் இருவருக்கும்.. கபாலி திரும்பியும் மயூராவை பார்க்கவில்லை. மயூராவிற்கு வாய் திறந்து பேச பயம்.. ஆனால், காலையில் இருந்த பயம் இப்போது இல்லை, அவனிடம். எனவே, தன் ஹன்ட் பாக்கிலிருந்து தண்ணீர் எடுத்து குடித்தாள்.. வேடிக்கை  பார்த்தாள்.. என்னமோ இவன் தன்னை ஒன்றும் செய்யமாட்டான்.. என தோன்றிவிட்டது அவளுக்கு. அதனால், ‘என்னதான் நடக்கிறது பார்ப்போம்..’ என அமைதியாக அமர்ந்துக் கொண்டாள்.

மாலையில் இருட்ட தொடங்கும் நேரம்.. இப்போதுதான் போனை ஆன் செய்தான் கபாலி.

அடுத்தஷனம் காபலியின் போனுக்கு.. அழைத்துவிட்டான் வசீகரன். அந்த அழைப்பை பார்த்ததும்.. கையை ஸ்டியரிங்கில் மென்மையாய் குத்தினான் “எஸ்.. உங்க அண்ணன் வழிக்கு வந்துட்டான்.” என்றான் கொஞ்சம் இறுக்கங்கள் குறைந்தவனாக.. தன்போல பேசினான்.

மயூரா அவனையே பார்த்தாள்.. 

கபாலி போனை பார்த்துக் கொண்டே இருந்தான். அடுத்தமுறை போனில் அழைப்பு வரவும்.. கபாலி அதை ஏற்று “ஹலோ” என்றான்.

வசீகரன் “டேய், அங்க தொட்டு.. இங்க தொட்டு.. கடைசியில் வீட்டிலேயே விளையாட தொடங்கிட்டியா. ஏன் டா.. ஏன் டா இப்படி. எங்க டா மயூரா.. என்னடா பண்ண.. எவ்வளவு உன்னை நம்பினேன்.. உன்னை எப்படி எல்லாம் நினைச்சேன்.. ச்ச.. ஏற்கனவே, எங்க டா அவ.. எங்க..” என்றான்.

கபாலி அமைதியாக எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டான் பின் “உங்க வீட்டு பெண்ணுன்னா மட்டும் சக்கரைக்கட்டி.. எங்க வீட்டு பொண்ணான மட்டும் உப்புகல்லா.. காதலிக்க தெரிஞ்சவனுக்கு கல்யாணம் செய்ய தெம்பில்ல.. அங்க, எங்க வீட்டு பொண்ணு படற வேதனை உனக்கு.. உங்க வீட்டு ஆளுங்களுக்கு புரியனுமில்ல.. புரியாது டா..” என்றான்  மரியாதையே இல்லாமல்.

மயூரா அப்படியே பார்த்திருந்தாள் கபாலியை.

வசீகரனும் அமைதியாக இருந்தான்.. எதிர்த்து பேசவில்லை. அவன் ‘சொல்லுவது உண்மைதான். அதற்காகத்தான் என் திருமணத்திற்காகதான் போராடிக் கொண்டிருக்கிறேன்.. இந்த நான்கு மாதமாக.. எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ.. அப்போதெல்லாம் பேசிக் கொண்டே இருக்கிறேன். என் தங்கையின் நிச்சயம் முடிந்ததும்.. இன்னும் அழுத்தமாக பேசத்தான் போகிறேன்.. அதற்குள் இவன் இப்படி இழுத்துவிட்டு விட்டானே..’ என எண்ணிக்  கொண்டான்.

ஆனால், இப்போது காலம் கடந்திருந்தது, எனவே வசி “எங்க டா இருக்க.. நீ வீட்டு வா பேசிக்கலாம்” என்றான் தன்மையாக.

வசீகரன் பேசவும்..ஆதிகேசவனும் அவரின் அண்ணனும், அருகில் வந்தனர். வசி பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தனர்.

இப்போது கபாலி “அதேதான் நானும் சொல்றேன்.. எங்க நம்ம வீட்டுக்கு வந்திடுங்க.. தாம்பூல தட்டோடு.. பேசிக்கலாம். ம்.. சரியா.. அரைமணி நேரத்தில் வந்திடுங்க.. நான் நல்லவிதமாதான் சொல்றேன்.. இதுக்கு அப்புறம் லேட் செய்தால்…” என முடிக்காமல் போனை கட் செய்தான்.

Advertisement