Advertisement

நான் உன் நிறையன்றோ!..

1௦

அங்கே, மயூராவின் வீட்டில் விஷயம் தெரியவே பனிரெண்டு மணி ஆனது. ஓட்டுனர், வண்டியை சரி செய்துக் கொண்டு.. அகாடமி செல்லவும்தான் இங்கே வரவில்லை மயூரா என தெரிந்தது ஓட்டுனருக்கு.

மயூராவின் வகுப்பிலும்.. ‘என்னுடைய் கார்.. பழுது, அதனை சரிசெய்துக் கொண்டு வருவேன்’ என போனில் மயூராவே முன்பு பேசி இருந்ததால்.. ஏதும் அவள் வராதது குறித்து சந்தேகம் வரவில்லை.

ஓட்டுனரும் வீட்டில், ஆதிகேசவனுக்கு அழைத்து  சொல்லவில்லை.. தானே, தேடியிருக்கிறார் இரண்டுமணி நேரம். அதன்பின்தான்..  வீட்டிற்கு சென்றவர்.. கண்ணில், உண்பதற்கு வந்த வசீகரன் தென்படவும், அவரிடம்.. வண்டி பழுதானது.. அதனால், கபாலியின் வண்டியில்.. தான் மயூராவை அனுப்பி வைத்ததை ஒப்புக் கொண்டு சொல்லி முடித்தார் ஓட்டுனர்.

ஓட்டுனருக்கு பயமோ பயம்.. தான் கபாலியின் வண்டியில் அனுப்பியததினால்தான் இந்த பிரச்சனையோ.. பெரியவருக்கு தெரிந்தால்.. என்ன செய்வாரோ எனதான்  தானே தேடினார். கிடைக்கவில்லை எனவும், வசீகரனை கண்டவர், சொல்லி முடித்தார்.. ‘மன்னிச்சிடுங்க  தம்பி..’ என ஆயிரம்முறை மன்னிப்பு கேட்டார்.

வசீகரன், இந்த செய்தியை கேட்டு.. ஆத்திரத்தில் கொதித்தான்.. ‘அவன் அக்காவை திருமணம் செய்துக் கொள்ளவில்லை என.. என் தங்கையை வைத்து மிரட்ட பார்க்கிறான்..’ என புரிந்தது அவனுக்கு. ஆனால், ‘இப்படி ஒரு நிகழ்வினால் தீர்வு கிடைக்காதுடா மடையா’  என திட்டிக் கொண்டான் கபாலியை.

வசீகரனுக்கு, கபாலி தன் தங்கையை ஒன்றும் செய்ய மாட்டான்.. என்பது திண்ணம். ஆனால், இது எவ்வளவு பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்.. என நினைக்க நினைக்க மண்டை காய்ந்தது வசீகரனுக்கு.

தனக்கு தெரிந்த, செக்யூரிட்டி ஏஜென்சியிடம் சென்றான் முதலில். யாருக்கும் தெரியாமல் கபாலியின் கம்பெனி, வீடு என எல்லா இடத்திலும் ஆட்களை போட்டான்.. பின், ஜெயந்தினியிடம் பேசினான்.. கபில் எங்கிருக்கிறான்.. எப்படி இருக்கான்.. என பொதுவாக பேச்சை வளர்ந்தான். பாவம் ஜெய்ந்தினிக்கு ஒன்றுமே தெரியவில்லை.. தம்பி பற்றி. அடுத்து  என்ன செய்யலாம் என யோசனை கேட்டான், அந்த ஏஜென்சியிடம் . ஆனால், எந்த பலனுமில்லை.

அதற்குமேல் நேரம் கடத்தாமல்.. தன் தந்தை வந்ததும்.. தன் தந்தையிடம்  சொல்லிவிட்டான் வசி. ஆனால், ஆதிகேசவன் தன் அண்ணனோடு இன்று வீடு வந்திருந்தார்.

ஆதிகேசவன், மகன் சொல்லியதை கேட்டு.. தன் மகனை விட்டார் ஒரு அரை. மகனை இதுவரை அடித்ததேயில்லை.. சொல்லி புரியவைப்பார்.. இல்லை, தானாக  அனுபவபட்டு திருந்தி வரட்டும் என காத்திருப்பார். இன்று மகன் மேல்லிருந்த கோவம்.. தான் நினைத்து  போல்தான் அவன்.. அவன் வீடு.. என கபாலியை அவர் கணித்திருந்த விதம் எல்லாம் இப்போது உண்மையாகி அதில், தன் மகள் மாட்டிக் கொள்ளவும்.. வந்த கோவத்தில்.. தன்னையும் மீறி.. அடித்துவிட்டார் ஆதிகேசவன்.

மகன் வாங்கிக் கொண்டான். ‘தந்தை முன்பே சொன்னார்.. அவர்கள் குடும்பம் இப்போது சரியில்லை.. எதையும் செய்வதற்கு யோசிப்பதில்லை அந்த கபாலி.. ஒரு ஒழுங்குமுறை இல்லை.. என சொன்னார்.. அதெல்லாம் உண்மையென செய்துவிட்டான், இவன்.’ என தாலியை குனிந்துக் கொண்டு நின்றான் வசீகரன்.

ஆதிகேசவனுக்கு போலீஸ்க்கு போக வேண்டும் என எண்ணம் வந்துவிட்டது. ஆனால், ஆதியின் அண்ணன் ‘அந்த பையனா..  அவன் ஒன்றும் அப்படி கிடையாதே.. நல்லா தொழில் பார்க்கிறான். ரமணனை விட நல்லா தேறிட்டான். அவன் எதுக்கு.. என்ன தம்பி விஷயம் உண்மைய சொல்லு’ என கேட்க.

சுமதி அழத் தொடங்கினார். அஆதிகேசவ்ன் விஷயத்தை சொன்னார்.

இப்போது, ஆதிகேசவனின் அண்ணன் போலீசுக்கு செல்லும் எண்ணத்தை விடுத்தார். அவரும் தன் பங்குக்கு.. வசீகரனை முறைத்தார். 

தன் தம்பியிடம்.. ”எப்போ விஷயம் உனக்கு தெரிந்ததோ அப்போவே அவனுக்கு ஒரு கல்யாணத்தை செய்து வைத்திருக்கணும். நீ.. பெருசா பையன் மனசு மாறட்டும்.. குடும்பத்தை புரிந்துக்  கொள்ளட்டும்’ன்னு ஆறப்போட்டு..  இப்போ பார்.. நம்ம பொண்ணு மேல விழுது எல்லாம்.. இப்போ என்ன பண்றது.. தேவியின் வீட்டில் வேறு.. ஆயிரம் பேசுவாங்க..” என தங்களின் தங்கையின் வீட்டை பற்றியும் பேசினார்.

வசீகரன் “கபாலி, என்னை பயப்படுத்த அப்படி செய்திருக்கிறான்.. மத்தபடி, அவன் மயூவை.. ஒன்னும் பன்னமாட்டான் பெரியப்பா” என்றான் சன்னமான குரலில்.

பெரியவர்கள் இருவரும் சீறினார்.. ”டேய் நம்ம வீட்டு பெண்ணை தூக்கியிருக்கான் டா” என ஏதேதோ பேசினார்.

வசீகரனுக்கும் கோவம்தான்.. ஆனால், மயூராவிற்கு ஏதும் ஆகாது என சொல்ல நினைத்தான் வீட்டாரிடம். அதுவும் தவறாகி போனது. உறவுகள் எல்லாம் வந்து சேர்ந்தது. மயூராவின் வருகால மாமியார் வீடு மட்டும் வரவில்லை. முறையாக, ஆதிகேசவனின் அண்ணன் அழைத்து விவரத்தை சொல்லிவிட்டார்.. ‘போலீசுக்கு போகலைம்மா.. நம்ம வசி செய்தது இது.. எல்லாம் நம்ம ஆட்கள்தான், அந்த பையன் நல்ல பையன்.. நாம பேசிடலாம்.. நீங்க கவலைபடாதீங்க’ என ஆறுதலாக.. சமாதானமாக தழைந்து.. என பலவகையில் பேசினார்.

ஆனால், அந்த பக்கமிருந்து எந்த பதிலும்.. ஆறுதலுக்காக கூட ‘ஆதி எப்படி இருக்கான்.. சரி, அப்புறம் பேசிக்கலாம்’ என எந்த பேச்சும் சொல்லும் வரவில்லை.

இவர்கள் தேடிய இடத்திலிருந்து எல்லாம் ஆட்கள், எந்த சாதகமான பதிலையும் சொல்லவில்லை. வேறுவழி இல்லாமல், போலீசில் சத்தமில்லாமல் தேடசொல்லிவிட்டனர், வசீகரன் வீட்டார். 

!@!@!@!@!@!@!@!@!@!

கபாலி பொறுமையாகவே வண்டியை செலுத்திக் கொண்டிருந்தான். அவனிடம் எந்த பதட்டமோ.. பரபரப்போ இல்லை. அவனுள், தான் நடத்தவிருக்கும் செயலின் திட்டத்தை.. கற்பனை செய்து பார்த்துக் கொண்டிருந்தான். எனவே, அவனின் கைகளில் வண்டி ஊர்ந்தது. 

இவனின்  இந்த கற்பனையை கலைப்பது போல அவனின் மூளை எதோ ஒரு சுகந்தமான மணத்தை உணர்ந்தது. அது, கபாலியின் நாசியில்.. மென்மையாக தாக்கி.அவனின் கவனத்தை வந்த திசை நோக்கி திருப்பிக் கொண்டது. இதமான மல்லிகையின் மணம் தாக்கியது.. அவனை. கபாலி பக்கவாட்டில் திரும்பி பெண்ணவளை பார்த்தான். மயூராவும் அனிச்சயாய் திரும்பி பார்த்தாள்.. மையிட்ட மாவடு விழிகள்.. அவனை அருகிலேயே தாக்கியது.. ஷன நேரம் ஸ்த்ம்பித்தான் கபாலி.. 

காரில் பாடல் வரிகள் வேறு..

“மங்கை மான்விழி அம்புகள்

என் மார்த் துளைத்தது என்ன..”

இப்போது, தலையை சட்டென ஆட்டிக் கொண்டு பாதையை கவனித்தான்.  அவளின் அகாடமிக்கு செல்லும் பாதையிலிருந்து.. வேறு பாதைக்கு வண்டியை திருப்பினான். இப்போதும் மீண்டும் பெண்ணவளை திரும்பி பார்த்தான்.. அவள் ஏதாவது கேட்பாள் என பார்த்தான். அவள் கவனிக்கவில்லை சட்டென. ‘அண்ணனுக்கு அழைத்து சொல்ல வேண்டும்.. யார் இவர் என கேட்க்க வேண்டும்’  என எண்ணிக் கொண்டே இருந்தாள் மயூரா.

இப்போது மயூரா போனை எடுத்தாள்..  தன் அண்ணனுக்கு செய்தி அனுப்ப. அதை கண்டுக் கொண்ட கபாலி “ஓ.. சூப்பர்.. இங்க கொடுங்க போனை” என்றான் மரியாதை பன்மையில்.

மயூராவிற்கு ‘ஏன் போனை கேட்க்கிறான்’  என தோன்ற..  இன்னும் அழுத்தி போனை பிடித்துக் கொண்டு.. கபாலியை கேள்வியாக நிமிர்ந்து பார்த்தாள்.

கபாலி, அவள் தரவில்லை எனவும்.. இடது கையால்.. போனை அவளின் விரல்களுக்கு இடையிலிருந்து பிடிங்கிக் கொண்டான். பெண்ணின் மென் விரல்கள்.. அவனின் அழுத்தத்தில்.. போனை இழந்து விட்டது. காரணமே தெரியவில்லை பெண்ணுக்கு.. விழித்தபடியே எப்போதும் போல வார்த்தைகள் வராமல்.. கண்ணால் அவனை முறைத்தாள்.. ‘ஏன்’ என்பதாக.

கபாலி, இப்போது திரும்பி அவளை பார்த்துக் கொண்டே, போனை ஆப் செய்தான். அவளின் கண்கள் கேள்வியாக எரித்தது.. அவனை. அது கபாலிக்கு உத்வேகத்தை தர “என்ன.. முறைக்கிறீங்களா..” என்றான் சாவகாசமான குரலில்..

மயூராவிற்கு சட்டென பேச வரவில்லை.. தலையசைத்தாள்.. ’இல்லை என்பதாக’.

இப்போது கபாலி போனில் ஆனந்துக்கு அழைத்து “கொஞ்சம் வேலை இருக்கு.. வெளியே போறேன்.. பெங்களூர் லோட் மட்டும் ஏற்றி விட்டுடுங்க.. பார்த்துக்குங்க அப்புறம் பேசறேன்” என்றவன்.. தன்னுடைய போனையும் ஆப் செய்து வைத்தான்.

அவ்வபோது பெண்ணவளை திரும்பி பார்த்தான்.

இப்போது, கபாலி “ஏன், வாய் திறந்து பேச மாட்டீங்களோ.. உங்களையே பார்த்திருந்தால், எப்படி டிரைவ் பண்றது..” என்றான் சாவகாசமான குரலில்.. கேள்வியாய்.

மயூரா, திரும்பிக் கொண்டாள். பெண்ணுக்கு குழப்பம்.. ‘யாரிவன்.. அப்பாவின் எதிரோயோ.. இல்லையே, நம்ம டிரைவர் அண்ணா, தெரிந்தவர்கள் என சொல்லிதானே அனுப்பினார்.. ஒருவேளை அண்ணனின் ப்ரெண்ட்டோ.. அப்போ, ஏன் போனை வாங்கினாங்க.. அப்போ வேறு யாரோ.. நம்ம ஆட்கள் இல்லையோ..’ என மனதினுள் ஆயிரம் விஷயம் ஓட.. அது அவளின் பயத்தை அதிகமாக்கியது. 

Advertisement