Advertisement

     பணக்காரர்கள் காணாமல் போனாலே தேடுவதற்கு மந்தமாக செயல் படும் போலீஸ் ஒரு ஏழைத் தாயின் புகாருக்கா செவி சாய்க்கும்? அதுவும் விக்ரம் கொடுத்த பிரசரில் “ஏமா பொறுமையா தான் கண்டு பிடிப்போம்? உன் பொண்ணு எங்க போனா யார் கூட போனான்னு எங்களுக்கு எப்படி தெரியும்? அவ ஆஃபிஸ்ல விசாரிச்சதுல அத்தனை பசங்க கூட பழகி கெட்டு போயிருக்கா. இப்பவும் எவன் கூடவாது உல்லாசமா இருக்க தான் போயிருப்பா. பொறுமையா கண்டு பிடிப்போம்”, என்று சொல்லி விட்டார்கள். அதை விக்ரம் சொன்னதும் ரகு மற்றும் ஜானகிக்கு ஐயோ பாவம் என்றெல்லாம் தோன்றவே இல்லை.

     விக்ரம் போனை வைத்ததும் ஜானகியை தன்னருகில் இழுத்துக் கொண்டவன் “அந்த கீர்த்திக்கு பெரிய ஆப்பா தான் ரெடி பண்ணிருக்காங்கன்னு நினைக்கிறேன்”, என்றான்.

     “படட்டும் ரகு. அவளுக்கு எல்லாம் பாவமே பாக்க கூடாது. அவளால உன்னை நினைச்சு எவ்வளவு கண்ணீர் வடிச்சிருப்பேன் தெரியுமா? என் ரகு இப்ப கீர்த்தி கூட சந்தோஷமா இருப்பான்னு நினைச்சு எவ்வளவு துடிச்சிருப்பேன்? உன்னை நினைக்கிறது பாவம்னு தெரிஞ்சும் அதை அடக்க முடியாம குற்ற உணர்ச்சில எவ்வளவு கஷ்டப் பட்டிருப்பேன்? என்னைச் சுத்தி எல்லாமே இருக்கும் ரகு. ஆனா எதுவுமே இல்லாத மாதிரி இருக்கும். உனக்கு புரியுதா? பூத்து குலுங்குற அழகான நந்தவனத்துக்கு நடுவுல தாகத்துல இருந்த மாதிரி உணர்வு. தப்பா ரைட்டான்னு தெரியாத குழப்பம். என்னால அப்பா வேற ஜெயிலுக்கு போய்? எப்படி கம்பீரமா இருக்குறவரை இப்படி ஜெயிலுக்கு தள்ளிட்டோமேன்னு அவ்வளவு கஷ்டம்? அம்மாவோட கண்ணீர், அண்ணா தனியா எல்லாம் சமாளிச்சான். அவன் வேலையையும் பாத்து அப்பப்ப கார்மெண்ட்ஸ் பார்த்து எங்களைத் தேற்றி, அவன் வாழ்க்கையவே கெடுக்குறோம்னு அவ்வளவு குற்ற உணர்ச்சி எனக்கு. எல்லாம் இந்த கீர்த்தியால தானே? அவளுக்கு நான் என்ன பண்ணுனேன்? என் கிட்ட பொய்ச் சொல்லி நமக்கு மயக்க மருந்து கொடுத்து உன் கூட தப்பா போட்டோ எடுத்து எவ்வளவு கிர்மினலா இருந்துருக்கா பாரேன்?”, என்று கோபத்துடன் உரைத்தாள்.

     அவள் டென்ஷன் ஆவதைக் கண்டவன் அவள் தோளை வருடி விட்ட படி “டென்ஷன் ஆகாத ஜானு மா. நம்ம கஷ்டம் எல்லாம் முடிஞ்சிருச்சு. நம்ம காதலே நம்மளை சேத்து வச்சிருச்சு. அவ எப்படியும் நாசமா போகட்டும்”, என்றான்.

     “ஏன் ரகு, நான் உன் மேல உண்மையான லவ் வச்சிருந்தா உன்னை நம்பிருப்பேன் தானே? அந்த கீர்த்தியை நம்பி இப்படி பண்ணினது எவ்வளவு தப்பா போய்ருச்சு பாத்தியா?”, என்று கேட்கும் போதே அவள் கண்கள் கலங்கி விட்டது.

     அவள் கண்ணீரைத் துடைத்து விட்டவன் “இல்லை டி, நீ வச்சிருந்ததும் உண்மையான லவ் தான். எனக்காக என்னோட மானத்துக்காக என்னை யாரும் தப்பா பேசிறக் கூடாதுன்னு தானே போட்டோ வாங்க சுனிலைத் தேடிப் போன? அது காதலால தானே? இத்தனைக்கும் அப்ப நான் இன்னொருத்தி புருஷன். ஆனாலும் எனக்காக போய் ஆபத்துல மாட்டி, மாமா ஜெயிலுக்கு போய்….. அதுவும் காதல் தான் டி. ஆனா எனக்கு தான் உன்மேல இருந்தது காதலான்னு தெரியலை. அப்பா கட்டாயப் படுத்தவும் நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன் தானே? உனக்காக தனியா இருக்கலையே? ஆனா நீ இத்தனை வருஷம் என்னை நினைச்சு இருந்துருக்கியே மிர்ச்சி? என் காதலை விட உன் காதல் பெருசு தான் டி”, என்றவன் அவளை வாகாக அணைத்துக் கொள்ள அவளும் அவன் நெஞ்சத்தில் முகம் புதைத்தாள். ஆறுதலாக அணைத்தது சிறிது நேரத்தில் காதல் தொடுகையாக மாற ஆரம்பித்தது.

     சரியாக முப்பது நாட்கள் கழித்து கீர்த்தி அந்த இடத்தில் இருந்து வெளியே விடப் பட்டாள். அந்த பெண் அவளுக்கு என்று பணம் கொடுக்க அதை வாங்கிக் கொண்டு தப்பித்தோம் பிழைத்தோம் என்று எண்ணி பேங்க்ளூர் வீட்டுக்கு தான் சென்றாள். அரைகுறையான சாப்பாடு, அங்கு வந்த ஆண்களால் அவள் பட்ட கஷ்டம், ஒழுங்காக தூங்காதது அவள் உடலை பாதியாக இளைக்க வைத்திருந்தது.

     எந்த அழகைக் காட்டி ஆண்களை மயக்கினாளோ இப்போது அவளிடம் அது இல்லை. முகம் லேசாக சுருங்கி, தேஜஸ் போய், கழுத்து எலும்புகள் எல்லாம் வெளியே தெரியும் படி இருந்தாள். அவள் பேங்க்லூர் வீட்டுக்கு வந்தது தான் தாமதம் அடுத்த அரை மணி நேரத்தில் போலீஸ் அங்கே வந்தார்கள். அவளிடம் எதிலெதிலோ கையெழுத்து வாங்கிக் கொண்டு சென்றார்கள். அவள் என்னவென்று விசாரிக்க அதற்கு யாரும் பதில் சொல்லவே இல்லை. அவள் பேச்சுக்கு அங்கே எந்த மதிப்பும் இல்லை.

     பல குழப்பம் மனதுக்குள் கீர்த்திக்கு. எதையும் தெளிவாக யோசிக்க கூட முடியவில்லை. அவளுக்கு நிறைய ஓய்வு தேவைப் பட்டது. யாரையும் எதிர்க் கொள்ள கூட முடிய வில்லை. உடல் எல்லாம் சக்தி இல்லாதது போல நடுங்கியது.

     தன்னைக் கடத்தியது யார்? ஏன் இப்படி செய்தார்கள்? மறுபடி ஏன் விட்டார்கள்? போலீஸ் ஏன் தன்னுடைய பேச்சைக் கேட்க வில்லை? என்று ஒன்றுமே தெரிய வில்லை.

     என்ன செய்ய ஏது செய்ய என்று புரியாத நிலையில் மதுரையில் இருக்கும் தாய்க்கு அழைக்க “சீ நீயெல்லாம் ஒரு பொண்ணாடி? உன்னைப் பெத்ததை நினைச்சு எனக்கு அருவருப்பா இருக்கு. எங்களைப் பொறுத்த வரை நீ செத்துட்ட? இனி எங்க முகத்துல முழிக்காத”, என்றாள்.

     “அம்மா நான் என்ன பண்ணினேன்?”, என்று அவள் கதற “ஆதியோட அப்பா யாரு டி?”, என்று ஒரு கேள்வி தான் கேட்டாள் அந்த தாய். கீர்த்தியால் பதில் சொல்லவே முடியவில்லை. தன்னைப் பற்றி எல்லாம் தெரிந்து விட்டது போல என்று எண்ணிக் கொண்டு அமைதியாக இருக்க “என் புருசனும் என் மூத்த மகளும் செத்துட்டாங்கன்னு சொல்லி தான் என் மத்த ரெண்டு பொண்ணுங்களுக்கும் கல்யாணமே பண்ணி வைக்கப் போறேன். என் கண்ணு முன்னாடி வந்த என் கையாலே உன்னைக் கொன்னுருவேன்”, என்று சொல்லி அவளின் தாய் போனை வைத்து விட்டாள்.

     தாய்க்கு மீண்டும் மீண்டும் அழைக்க அவளின் தாய் போனை எடுக்கவே இல்லை. அப்படியே சோர்வால் கட்டிலில் சரிந்து விட்டாள்.

     அதே நேரம் விக்ரம் அனுப்பிய ஏதோ ஒரு லிங்க்கை ரகு ஓப்பன் செய்ய அதில் ஒரு வீடியோ வந்தது. அதைப் பார்த்த அடுத்த நொடி அருவருப்புடன் கண்களை மூடிக் கொண்டு அதை டெலீட் செய்து விட்டான். விக்ரமுக்கு அழைத்து தகவல் சேகரித்தவன் அதை ஜானகியிடம் சொல்லவே இல்லை. ஆனால் மோகனிடம் சொல்ல அவருக்கு அவ்வளவு சந்தோஷம்.

     மூன்று நாட்கள் வீட்டில் இருந்ததை சமைத்து சாப்பிட்டு ஓய்வெடுத்த கீர்த்தி அன்று அலுவலகம் சென்றாள். ஒரு மாதத்துக்கும் மேல் அவள் வேலைக்குச் செல்ல வில்லை என்பதால் என்ன சொல்வார்களோ என்று பயமாக தான் இருந்தது.

     ஒரு வேளை இந்த வேலை போனாலும் இருக்குற எக்ஸ்பீரியன்ஸ் வச்சு வேறு வேலை தேட வேண்டியது தான் என்று பலதும் எண்ணிக் கொண்டே அங்கு செல்ல அவளை வேலையில் இருந்து தூக்கி இருந்தனர்.

     அவள் காரணம் கேட்டாள். லீவ் எடுத்ததற்கு மன்னிப்பு கெட்டு மெடிக்கல் செர்ட்டிபிகேட் வாங்கித் தருவதாக கூட சொன்னாள். ஆனால் அவர்களோ அவள் எதிர்பார்க்காத காரணத்தைச் சொன்னார்கள். ஒரு வெப்சைட் பேர் சொல்லி அவளைப் பார்க்கச் சொல்ல அவசரமாக அதைப் பார்த்தவளின் கண்கள் நிலை குத்திப் போனது. ஏனென்றால் அவளைக் கடத்தி இருந்த போது அவளை ஆண்கள் நெருங்கியது எல்லாம் அந்த இணைய தளத்தில் வீடியோவாக பதிவு செய்யப் பட்டிருந்தது. அதுவும் அவள் முகம் மட்டும் தெரியும் படியும் அவளே அந்த ஆண்களுடன் விருப்பத்துடன் இருப்பது போலவும் எடிட் செய்யப் பட்டிருந்தது.

     உடலில் ஒட்டுத் துணி இல்லாமல் அவளது வீடியோ இணையத்தில் பரவி கிடந்தது. “சார் இது நான் இல்லை”, என்று அவள் ஆபீஸில் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் யாரும் கேட்க வில்லை. அதுவும் அங்கிருப்பவர்கள் ஒரு மாதிரி பார்க்க அவமானமாக உணர்ந்தாள். அதுவும் அவளுடன் ஒன்றாக இருந்த ஆண்களும் அவளை ஒரு மாதிரி பார்க்க அவளால் ஒரு நொடி கூட அவர்கள் முன்னால் இருக்க முடிய வில்லை.

Advertisement