Advertisement

“பணமும் உண்டு, என்னோட ஆசையும் நிறைவேறும்”, என்று எண்ணியவள் “உனக்கு என்ன தோணுதோ செய் ரகு”, என்று சொல்லி விட்டாள்.

அடுத்த நாளே ரகு டைவர்ஸ் அப்லை பண்ணி விட்டான். இரண்டு வீட்டிலும் பெரியவர்கள் எவ்வளவோ பேசினார்கள். ஆனால் இவர்கள் கேட்க வில்லை.

மூர்த்தி மகனிடம் பேச வர “வேண்டாம்னு சொன்னப்ப நீங்க தான் எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிங்க? இப்ப அதுல பஞ்சாயத்து பண்ண உங்களுக்கு உரிமை இல்லை. இது என் வாழ்க்கை என் முடிவு. யாரும் தலையிடக் கூடாது”, என்று உறுதியாக சொல்லி விட்டான்.

கீர்த்தியும் ஆதியை அவனிடமே கொடுத்து விட்டு ரகு பார்த்துக் கொடுத்திருந்த மற்றொரு வீட்டுக்குச் சென்று விட்டாள். அவளுக்கு துணையாக அவளது தாய், தந்தை வந்து இருந்தனர். கீர்த்தியின் தங்கைகள் அவர்கள் ஊரில் இருந்த பள்ளியில் ஹாஸ்டலில் இருந்து படித்துக் கொண்டிருந்தார்கள்.

பேங்க்ளூரிலே கீர்த்திக்கு வேலை வாங்கிக் கொடுத்ததும் ரகு தான். இதில் ரகுவுக்கு ரிசல்ட் வர ஆதியை அன்னை தந்தையிடம் கொடுத்து விட்டு டிரெயினிங்க்காக கேரளாவுக்கு சென்று விட்டான்.

திருவனந்தபுரத்திலே ரகுவுக்கு முதல் போஸ்டிங் போட்டார்கள். இனி அங்கே தான் வாழ்க்கை என்பதால் தாய் தந்தையை வீட்டைக் காலி பண்ணி விட்டு அங்கே குவாட்ரஸ்க்கு வரச் சொல்லி விட்டான்.

மூர்த்தியும் நிர்மலாவும் கிளம்ப தயாராகி விட்டார்கள். ஆனாலும் மகன் வாழ்க்கையை காப்பாற்ற கிளம்புவதற்கு முன் கீர்த்தியை பார்த்து பேசி சமாதானப் படுத்தி அவர்களை சேர்த்து வைக்க நினைத்த மூர்த்தி கீர்த்தியைக் காண அவளது வீட்டுக்குச் சென்றார்.

அங்கே வீட்டில் பூட்டுக் கிடந்தது. ஆனால் வாசலில் செருப்புகள் கிடந்தது. ஒரு வேளை வேறு செருப்பு போட்டுப் போனார்களோ என்று அவர் எண்ணிக் கொண்டு வெளியே வரும் போதே பக்கத்து வீட்டில் இருந்தவர் “அவங்க அடிக்கடி இப்படி செய்யுறது தான். பின் பக்க கதவு திறந்து இருக்கும் போங்க”, என்றார்.

“இது என்ன புது டெக்னிக்கா இருக்கு?”, என்று எண்ணிக் கொண்டு அவர் பின் பக்கம் செல்ல அங்கிருந்த பெட் ரூமில் இருந்து வந்த சத்தம் ஒரு மாதிரி இருக்க திகைத்து ஜன்னல் வழியாக பார்க்க அதிர்ந்து போனார்.

அங்கே கீர்த்தி அவளுடன் வேலை பார்க்கும் ஒருவனுடன் தவறான உறவில் இருக்க “அடச்சீ”, என்று அருவருப்புடன் சொல்லி விட்டு தரையில் அமர்ந்தவர் வாந்தி எடுக்க ஆரம்பித்தார்.

கீர்த்தியும் பதறி அவனை போகச் சொல்லி விட்டு உடை மாற்றி வெளியே வந்து பயந்து போய் நின்றாள். அவளது தாயும் தந்தையும் கோவிலுக்கு சென்றதால் தான் அவனை வீட்டுக்கு அழைத்து வந்தாள். ஆனால் மூர்த்தி வருவார் என்று அவள் எதிர் பார்க்க வில்லையே.

“மாமா”, என்று கீர்த்தி அழைக்க “அடச்சீ”, என்று ஆரம்பித்து பல கெட்ட வார்த்தைகளை சொல்லி அவளை அழைத்தவர் “உன்னைப் போய் அந்த ஜானகி பொண்ணு அவ்வளவு நல்லவன்னு சொல்லுச்சே? இதான் என் மகன் கல்யாணம் வேண்டாம் வேண்டாம்னு சொன்னானா? தப்பு பண்ணிட்டேனா?”, என்று கேட்ட படியே நெஞ்சைப் பிடித்துக் கொண்டார்.

அடுத்த நொடி வியர்த்து ஒழுக மயங்கிச் சரிந்தார். என்ன செய்ய என்று தெரியாமல் பயந்து பதறி கீர்த்தி நிற்க பக்கத்து வீட்டில் இருப்பவர் பார்த்து அங்கே வந்து ஆம்புலன்ஸை அழைத்து அவரை அழைத்துக் கொண்டு போகச் சொன்னார். வேறு வழி இல்லாமல் கீர்த்தி தான் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாள். அவருக்கு தீவிர சிகிச்சை நடக்க ரகுவுக்கு அழைத்துச் சொன்னாள்.

உடனே கிளம்பிய அவனும் தாய்க்கு அழைத்து விசயத்தைச் சொல்ல ஆதியை பக்கத்து வீட்டில் கொடுத்து விட்டு நிர்மலா மருத்துவமனைக்கு வந்தாள். கீர்த்தியின் பெற்றவர்களும் வந்தார்கள்.

ஹார்ட் அட்டாக் சிவியர் என்று சொல்லப் பட்டது. ரகு வரும் போது மூர்த்தி ஐ.சி.யுவில் தான் இருந்தார். டாக்டர்கள் கெடு கொடுத்திருந்தனர்.

“அப்பா எதுக்கு மா கீர்த்தி வீட்டுக்கு போனாங்க?”, என்று கேட்டான் ரகு.

“உன் வாழ்க்கையை நினைச்சு அவருக்கு பயம். அதான் பேச போனாங்க”, என்று நிர்மலா சொல்ல “அப்பா உன் கிட்ட என்ன சொன்னாங்க கீர்த்தி? எப்படி இப்படி ஆச்சு?”, என்று கேட்டான்.

“வந்தாங்க, காபி குடிக்கச் சொன்னேன். எதுக்கு மா டைவர்ஸ் எல்லாம்னு கேட்டுட்டே மயங்கி விழுந்துட்டாங்க”, என்று பொய்ச் சொன்னாள்.

அனைவரும் அவர் பிழைக்கட்டும் என்று வேண்ட கீர்த்தி மட்டும் அவர் சாகட்டும் என்று வேண்டினாள். அவர் உயிர் பிழைத்து உண்மையைச் சொன்னால் ரகு தன்னை ஒரு வழி செய்து விடுவான் என்று தெரியுமே?

மூர்த்திக்கு சரியாகி விட்டது என்றும் வேறு எந்த அதிர்ச்சியும் அவருக்கு இப்போதைக்கு சொல்லக் கூடாது என்றும் மருத்துவர்கள் சொன்னார்கள். அதற்கு பின் தான் நிம்மதியானது. ஆனால் கீர்த்தியோ பயந்து போய் இருந்தாள். அவர் உயிருடன் இருக்க கூடாது என்று முடிவு எடுத்தாள்.

அன்று இரவு அவருக்கு துணையாக யார் தங்க என்ற பேச்சு எடுக்கப் பட ரகு நான் இருக்கிறேன் என்று சொல்ல “வேண்டாம் ரகு, நீ அங்க இருந்து டிராவல் பண்ணிருக்க? அத்தையும் மருந்து சாப்பிடணும். ஆதி வேற இருக்கான். நீங்க வீட்டுக்கு போங்க. நான் மாமாவைப் பாத்துக்குறேன்”, என்றாள் கீர்த்தி.

“உன்னால எப்படி பாக்க முடியும்?”

“நர்ஸ் பாத்துப்பாங்க. நாம ஒரு அட்டண்டர் இருக்கணும் அவ்வளவு தான். அது நான் இருக்கேன். நீ காலைல அத்தையைக் கூட்டிட்டு வா”, என்று சொல்ல வேறு வழியில்லாமல் கிளம்பினான்.

நடு இரவில் விழிப்பு வந்த மூர்த்தி கீர்த்தியை தான் பார்த்தார். அவளைக் கண்டு அவர் டென்ஷன் கூடியது. அவளுக்கும் டென்ஷன் தான். இந்த ஆள் முழிக்க கூடாதே என்று தீவிரமாக யோசித்தாள். அவரிடம் அதிர்ச்சியான விஷயம் சொல்லக் கூடாது என்று நினைவில் வந்தது.

அவர் தலையில் பெரிய இடியைத் தூக்கிப் போடத் தயாரானவள் அவரைக் கண்டு நக்கலாக சிரித்தாள்.

“ஏன் எங்களை ஏமாத்தின?”, என்று திக்கி திணறிக் கேட்டார் மூர்த்தி.

“நான் தான் ஏமாந்துட்டேன். ரகு லவ் பண்ணினது ஜானகியை அவங்களைப் பிரிக்கணுன்னு நினைச்சு என் வயித்துல வளந்த சுனில் குழந்தையை ரகு குழந்தைன்னு சொன்னேன். கடைசில இப்படி ஆகிருச்சு. சுனில் செத்துட்டான். ரகு இப்பவும் அவளை தான் நினைச்சிட்டு இருக்கான். அப்படின்னா எனக்குன்னு ஒரு வாழ்க்கை வேண்டாமா? அதான் டைவர்ஸ் பண்ண போறேன். இதுல என்ன இருக்கு? நீங்க பாத்ததை மறந்துருங்க. நான் உங்க மகன் வாழ்க்கைல வர மாட்டேன். இதைப் பத்தி வெளிய சொல்லக் கூடாது. சொன்னீங்கன்னா…..”, என்று சொல்லும் போதே அவர் கண்கள் நிலை குத்தி விட்டது.

ஆதி தன்னுடைய பேரன் என்று அவர் எண்ணியிருக்க அதுவும் இல்லை என்ற உண்மை தெரிந்ததும் மகனுக்கு தான் நியாயம் செய்ய வில்லை என்ற குற்ற உணர்வும் சேர்ந்து அவர் இதயம் துடிப்பை நிறுத்திக் கொண்டது.

டாக்டர் வந்து பார்த்து விட்டு “பல்ஸ் இல்லை, எல்லாருக்கும் சொல்லிருங்க”, என்று சொல்ல அப்பாடி என்று மூச்சு விட்டவள் ரகுவுக்கு போன் பண்ணி நடித்து அழுது விட்டாள். மூர்த்தியின் இழப்பு அம்மா மகன் இருவரையும் அதிகம் பாதித்தது.

அவருக்கான எல்லா கடைமையும் முடிந்து வீட்டைக் காலி பண்ணி விட்டு நிர்மலா மற்றும் ஆதியுடன் திருவனந்தபுரம் சென்று விட்டான். ஆனால் கீர்த்தியுடன் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை போனில் பேசுவான். அவள் தான் அழைப்பாள். இடையில் கீர்த்தியின் தந்தை இறந்து விட அதற்கும் அவன் மட்டும் வந்து சென்றான். அவளுக்கு சம்பளம் வந்தாலும் அவன் தரும் பணமும் வேண்டுமே. அதனால் இப்போது வரை நடிக்க தான் செய்தாள்.

குழந்தையைப் பார்த்தால் சுனில் நினைவு வந்து சாகத் தோன்றுகிறது என்பாள். உண்மையிலே ஆதி சுனில் போலவே இருப்பதால் ரகுவும் குழந்தையை அவளிடம் காட்ட மாட்டான். பணம் மட்டுமே அனுப்புவான்.

அங்கே தனிக்காட்டு ராணியான கீர்த்தியும் வேலைக்குச் செல்வதும் பல ஆண்களின் படுக்கைக்குச் செல்வதுமாக வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தாள் ரகுவின் தயவில். அவளுடைய தங்கைகளும் இப்போது கல்லூரி முடிக்கும் தருவாயில் இருந்தார்கள். அவர்களையும் அவள் தான் பார்த்துக் கொண்டாள். ஆனால் தவறான வழியில் வரும் பணத்தை வைத்து. அதை தாய்க்கு கூட தெரியாமல் மறைத்து வைத்திருந்தாள்.

தங்கைகளுக்கு துணைக்கு தேவை என்று தாயையும் ஊருக்கு அனுப்பி இருக்க பேங்க்ளூரில் கீர்த்தியின் ஆட்டம் அதிகம் தான். ஆனால் அதை ரகுவுக்கு சொல்லத் தான் ஆள் இல்லை. அதை மோகன் சொன்ன போதும் ரகு நம்ப வில்லை. இது தான் ரகு மற்றும் ஜானகியின் வாழ்க்கையில் நடந்த பழைய நிகழ்வுகள்.

காதல் தொடரும்….

Advertisement