Advertisement

     “அதெல்லாம் முடியாது. ஜானகிக்கு பட்டர் ஸ்காட்ச் தான் பிடிக்கும். அது தான் எல்லாத்துக்கும்”, என்றான் வெங்கி. அவன் அப்படிச் சொன்னதே கீர்த்திக்கு எரிச்சலைக் கொடுத்தது.

     “ஏன் அவளுக்கு பிடிச்சதை தான் வாங்கணுமா? எல்லாருக்கும் வெண்ணிலா வாங்க வேண்டியது தானே?”, என்று கேட்க “போடி, ஜானுக்கு பிடிச்சது தான் எல்லாருக்கும். உனக்கு வேண்டாம்னா என் கிட்ட கொடுத்துரு”, என்று சொல்லி விட்டுச் சென்றான் அவன். ஜானகியை திரும்பிப் பார்த்தாள். அவள் அனிதா மற்றும் ரகுவுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருக்க கீர்த்திக்கு புகைந்தது.

     “இவ மட்டும் பெரிய இவளா? இவளையே எல்லாரும் தாங்குறாங்க?”, என்று கடுப்புடன் எண்ணிக் கொண்டாள்.

     நினைத்தது போல அவர்கள் வாங்கி வந்த ஸ்நாக்ஸ் எல்லாம் ஜானகிக்கு பிடித்ததாக இருக்க வேண்டா வெறுப்பாக அதை வாங்கி உண்டாள் கீர்த்தி. அது மட்டுமல்லாமல் ரகுவும் ஜானகியும் எச்சில் பார்க்காமல் பங்கிட்டு உண்ணுவதையும் ஆதங்கமாக பார்த்துக் கொண்டு தான் இருந்தாள். அவளுக்கு நன்கு புரிந்தது ஜானகி மற்றும் ரகுவுக்கு இடையில் ஏதோ இருக்கிறது என்று.

     படம் முடிந்ததும் உணவு உண்ணச் செல்ல ஹோட்டலிலும் ரகு ஜானகி அருகிலே அமர கீர்த்திக்கு தெள்ளத் தெளிவாக புரிந்தது. ரகுவை பார்க்கும் ஜானகி கண்களிலும் காதல் தெரிய கீர்த்தியால் அதை தாங்கவே முடிய வில்லை.

     அன்று மாலை வீட்டுக்கு கிளம்பும் போது “ரகு என்னை பஸ் ஸ்டாண்ட்ல விட்டுரு”, என்று சொன்ன ஜானகி அவன் பின்னால் ஏறிக் கொள்ள அவனும் சந்தோஷமாக வண்டியைக் கிளப்பினான். போகும் அவர்களையே வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்த கீர்த்தியை அர்ஜூன் தான் ஹாஸ்டலில் இறக்கி விட்டான்.

     ஆண்களுடன் பெண்கள் பைக்கில் போவது அவர்களுக்குள் புதியது இல்லை தான். ஆனாலும் கீர்த்தி மனதை ஜானகியும் ரகுவும் வண்டாக குடைந்தார்கள். அந்த கவலையிலே ஹாஸ்டல் சென்றாள்.

     பைக்கில் சென்று கொண்டிருந்த ஜானகி மற்றும் ரகுவின் மனம் உல்லாசமாக இருந்தது. பஸ் ஸ்டாண்ட் வந்ததும் “இறக்கி விடு டா. பஸ்ல போய்க்கிறேன்”, என்றான்.

     “வீட்ல விட்டுறேன் டி”

     “அதுக்கு எங்க அம்மா ஒரு பாட்டு பாடுவாங்க. அப்பா வேற ஊர்ல இல்லை. என்னால சமாளிக்க முடியாது”

     “ஓ, சரி வீட்டுக்கு பக்கத்துல விட்டுறேன்”, என்று சொல்ல அவளும் அடுத்து எதுவும் சொல்ல வில்லை. அடுத்து என்ன பேச என்று தெரியாமல் இருவரும் அமைதியாக இருக்க “சாரி”, என்றாள் ஜானகி.

     “எதுக்கு சாரி? நீ என் கிட்ட சாரி கேக்கணுமா? சரி சொல்லு எதுக்கு?”

     “அது தியேட்டர்ல  வச்சு….”

     “செருப்பால அடிப்பேன்னு சொன்னதா?”

     “ம்ம்”

     “விடு மிர்ச்சி, நீ தானே சொன்ன?”

     “ம்ம்”

     “ஆனா ஒரு டவுட்?”, என்றவனின் குரலில் சீண்டல் இருக்க “என்ன?”, என்று கேட்டாள் ஜானகி.

     “செஞ்சதுக்கு கோபம்னு தெரியும். ஆனா பிடிச்சதா?”, என்று கேட்க அவளிடம் அமைதி மட்டுமே. தன்னுடைய பைக் கண்ணாடியை அவளைப் பார்க்கும் வண்ணம் வைத்தவன் அவளைப் பார்த்தவன் அவள் விழிகளில் எதையோ தேட அவளோ பார்வையைத் திருப்பி சாலையில் வைத்தாள். ஆனாலும் அவளுக்கு படபடவென்று வந்தது. அவன் தோளில் பதிந்திருந்த அவளது கரத்திலும் லேசான நடுக்கம்.

     அவள் நடுக்கத்தை உணர்ந்தவன் “நான் எதுவும் கேக்கவும் இல்லை. எதையும் சொல்லவும் இல்லை போதுமா?”, என்று கேட்க அவளுக்கும் அப்போதைக்கு அப்பாடா என்று இருந்தது. ஆனாலும் அவளால் ஒரு முடிவுக்கு வர முடிய வில்லை. அவன் காதலைச் சொல்ல வேண்டும் போலவும் இருந்தது. சொன்னால் என்ன செய்ய என்று தடுமாற்றமாகவும் இருந்தது.

     அதற்கு அடுத்த வாரத்தில் ஒரு நாள் அர்ஜூன் வீட்டுக்கு அனைவரும் சென்றிருந்தார்கள். அர்ஜூனின் பிறந்த நாளுக்காக நண்பர்களை அழைத்திருந்தான். கீர்த்தி வரவில்லை என்று சொல்லி விட்டதால் மற்ற அனைவரும் சென்றார்கள்.

     மற்ற யாரும் பிறந்த நாள் வந்தால் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று உணவு வாங்கிக் கொடுப்பதோடு முடிந்து விடும். அர்ஜூன் புதியதாக அழைத்ததால் தயங்கிய படி தான் சென்றார்கள். ஆனால் அர்ஜூன் அன்னை தந்தை நன்கு பழகியதால் இயல்பானார்கள்.

     கேக் வெட்டி, நான்வெஜ் விருந்து முடிந்து கிளம்பும் போது “இருங்க டா வரேன்”, என்று சொன்ன அர்ஜூனின் அன்னை முதலில் அனிதா தலையில் மல்லிகை பூ வைத்து விட்டு ஜானகிக்கு தலைவாரி அவள் தலையிலும் மல்லிகை பூவை வைத்து விட்டாள்.

     ஜானுவுக்கு தலைசீவி பூ வைப்பதில் எல்லாம் ஆர்வம் இல்லாமல் போனாலும் அர்ஜூனின் அன்னையை சங்கடப் படுத்தாமல் அமைதியாக இருந்தாள்.

     “இன்னைக்கு தான் ஜானு பொண்ணு மாதிரி இருக்கா”, என்று வெங்கி சொல்ல மற்றவர்களும் ஆமாம் என்று சொல்ல ரகுவின் கண்களோ அவள் மீதே இருந்தது. அவன் பார்வையில் உள்ளுக்குள் ஏதோ குறுகுறுக்க சிறு வெட்கத்துடன் திரும்பி கொண்டாள் ஜானகி.

     அங்கே விருந்து முடிந்ததும் அனைவரும் ஷாப்பிங் செல்ல ஒரு மாலுக்குள் புகுந்தார்கள். தங்களுக்கு தேவையானதை வாங்கி விட்டு அர்ஜூனுக்கும் கிஃப்ட் வாங்கிக் கொடுத்து விட்டு திரும்புவதற்காக அனைவரும் லிப்டுக்குள் புகுந்தார்கள். ஆண்ட்ரூ விடுமுறை என்பதால் கொஞ்சம் கூட்டமாக தான் இருந்தது லிஃப்டுக்குள். ஜானுவின் பின்னே ரகு நிற்க அவளுக்கு முன்னே வெங்கி பாதுகாப்பாக நின்றான். அப்போது ஜானகியின் தலையில் இருந்த மல்லிகைப் பூ வாசனை ரகுவை மயக்கியது.

     அவன் லேசாக முன்னே வந்து அவள் தலையிலிருந்த பூவின் வாசனையை முகர்ந்து  பார்க்க அவனது மூச்சுக் காற்று அவள் கழுத்தில் பட்டது. ஏனோ அவளையும் அறியாமலே பின் பக்கமாக சாய அவன் கரங்களும் அவளது இடையைப் பற்றிக் கொண்டது. அதை அவள் எதிர் பார்க்கவே இல்லை.

     அவனது நெருக்கம், இடையில் இருந்த அவன் முரட்டு கரத்தின் திண்மை அவளை தள்ளாட வைத்தது. கால்கள் தள்ளாட அவன் மீதே சாய இடையில் இருந்த கரம் இன்னும் அழுந்தியது. மூச்சு விட முடியாமல் திகைத்தாள் ஜானகி. முன்னால் நகர முடியாமல் வெங்கி வேறு நின்றிருக்க ரகு மேல் ஒட்டிய படி தான் நின்றாள். அவன் கரம் வேறு லேசாக அசைய அதற்கு மேல் முடியாமல் இடையில் இருந்த அவன் கரத்தை தட்டி விட்டாள்.

     அவள் தட்டி விட்டாலும் மீண்டும் இடையைப் பற்றினான் ரகு. அவள் மறுப்பு எல்லாம் அவனுக்கு பெரிதாக தெரியவே இல்லை. இப்போது இரண்டு கரங்களும் அவள் இடையைப் பற்றி இருக்க “மிர்ச்சி”, என்று அவள் காதில் முணுமுணுத்தான். லேசாக அவன் இதழ்கள் அவள் காதில் பட பெரு விரலை அழுத்தி ஊன்றி தன்னை சமாளிக்க முயன்றாள்.

     இப்போது அவன் இதழ்கள் அவள் தலையில் இருந்த பூவில் பதிய அவன் செய்கையை உணர்ந்த ஜானகிக்கு வியர்த்துப் போனது. ஆனாலும் அந்த உணர்வுகள் அவளை ஒரு ஏகாந்தத்துக்கு அழைத்துச் சென்றது நிஜம்.

     பூவுக்கு முத்தமிட்ட உதடுகள் இப்போது அவள் உடை மறைக்காத தோளில் லேசாக பதிய அந்த உணர்வுகள் தாங்க முடியாமல் அவன் மேலே இன்னும் நன்றாக சாய்ந்து விட்டாள். அவள் செய்கையில் அவளை விட்டு பிரியும் எண்ணமே அவனுக்கு வரவில்லை. அவள் இடையில் இருந்த அவன் கரங்களும் இன்னும் அழுந்தி பதிய உதடு கடித்து அந்த உணர்வை அடக்க முயன்றாள் ஜானகி.

     ஒரு மோனநிலையில் இருவரும் மூழ்கி இருந்தார்கள். பிடிக்காதவன் என்றால் இந்த அளவுக்கு போயிருக்காது. நொடியில் உதறித் தள்ளி இருப்பாள். ஆனால் அவன் தீண்டலை மனது ரசித்தது மட்டும் நிஜம். அவள் தேகம் மொத்தமும் வெம்மையாகிப் போன உணர்வு அவளுக்கு.

     அவள் அமைதியும் நெகிழ்வும் அவனையும் தைரியம் கொள்ளச் செய்ய அவன் உதடுகள் அவள் பின் கழுத்தில் இருந்த பூனை முடிகளில் பதிந்தது. அப்போது பட்டென்று லிப்ட் திறக்க போக அவசரமாக அவளை விட்டுவிட்டான். தடுமாறிய படியே வெளியே சென்றாள் ஜானகி. அவனை நிமிர்ந்து பார்க்க கூட ஜானகியால் முடிய வில்லை.

Advertisement