Advertisement

யாரு நான் பேட்

ஆமா. நீங்க ஏன் அக்காவை லவ் பண்ணீங்க, அதனால தான் இவ்வளவு பிரச்சனை. அஜு எங்களை விட்டு தள்ளி போயிட்டான், அப்பா அவரை எவ்வளவு பேசுறார் தெரியுமா? உங்களுக்கு ஹெல்ப் பண்ண போய் அஜு தினமும் திட்டு வாங்குறாங்க

ஜீவிம்மா. நான் பாவம் இல்லையா? என் கதையை விட்டுடேன்

நீங்க எங்க வீட்டு மாப்பிள்ளை ஆகிட்டீங்க. அப்பா உங்கிட்ட நல்லா தானே பேசுறார். விருந்து வேற ஒவ்வொரு முறையும்

இனி நான் உங்க வீட்ல விருந்தே சாப்பிடலை. போதுமா?” என்றான் கல்யாண் கடுப்புடன்.

இப்போ நாம பேசிட்டு இருக்க விஷயத்துக்கு கொஞ்சம் வா ஜீவிம்மா. நீ உன் மனசை சொல்லு. உனக்கு என்ன தோணுதுன்னு என்கிட்ட சொல்லு?” என்று கேட்டான்.

எனக்கு அஜு வேணும். இவ்வளவு தான் தோணுது. எனக்கு அவரை  வேற யாருக்கும் கொடுக்க முடியாதுஎன்றாள் சின்னவள் தீர்மானமாக.

அதெப்படி முடியும்?’ கல்யாண்க்கு கேள்வி வந்துவிட்டது. அடக்கி கொண்டான்.

ஜீவிதா இப்போது தான் இரண்டாம் ஆண்டு படிக்கிறாள். சிறியவள். குழப்பி கொள்கிறாள். முதிர்ச்சி இல்லை. தெளிவு இல்லைவருடங்கள் போகட்டும். அப்புறம் பார்ப்போம்

தனக்குள் முடிவெடுத்து கொண்டவன், “சரி ஜீவிம்மா. இதை இப்படியே விடு. படிப்புல கவனம் வை. இதை அப்பறம் பார்ப்போம்என்றான்.

ஜீவிதா கேட்டு கொண்டாள்.

அஜய் இந்த வருடம் வேலையை விட்டு, ஊருக்கே போக போகிறான். தொழில் ஆரம்பிக்க போகிறான். எல்லாம் செட்டில் ஆகட்டும். பின் பேசுவோம் என்று கல்யாண் நினைக்க, வருடங்கள் கடந்தும் இது இப்படியே தான் போய் கொண்டிருக்கிறது.

ஜீவிதா படிப்பு முடித்து வேலைக்கும் வந்துவிட்டாள். கல்யாண் எதிர்பார்த்த முதிர்ச்சி, தெளிவு எல்லாம் வந்துவிட்டது

தனக்கு தேவையானதை போராடி பெற்று கொள்கிறாள், துணிந்து முடிவு எடுக்கிறாள்

ஆனால் அஜய் விஷயத்தில் மட்டும், இன்னமும்எனக்கு அஜு வேணும்என்று மட்டுமே சொல்கிறாள்.

கல்யாண்க்கு தான் மண்டை வெடித்தது. ஜீவிதா இங்கு வேலைக்கு வந்த பின், இடையில் இருவர் மட்டுமே சந்தித்து பேசினர். “அஜய் விஷயத்துல உன் முடிவு என்ன?” என்று கேட்டான்

அப்போ சொன்னது தான் சீனியர், எனக்கு அஜு வேணும்என்றாள்

முன்பை விட வெகு தீர்மானம்!

நீ கிளியரா சொன்னாதான் நான் அஜய்கிட்ட பேச முடியும் ஜீவிம்மா

நீங்க ஏன் பேசணும் சீனியர்?”

அப்போ நீ பேசு. உன் மனசுல இருக்கிறதை அவன்கிட்ட சொல்லு

ஜீவிதா மௌனம் காத்தாள்

அவனுக்கு பொண்ணு பார்க்க ஆரம்பிக்கிறாங்க ஜீவிம்மா” 

அத்தை என்கிட்ட சொல்லவே இல்லை

நேத்து தான் தாரணி சொன்னா?”

பார்க்கட்டும்என்றவளின் முகம் எல்லாம் சிவந்து, சூடேறி போயிருந்தது

கல்யாண் மேற்கொண்டு பேச நினைக்க, பெண் கிளம்பி விட்டிருந்தாள்

சரி வார இறுதியில் வீட்டிற்கு வர வைத்து பேசலாம் என்று கல்யாண் நினைத்திருக்க, ஜீவிதாவும் வந்தாள். எதிர்பாராமல் அஜய்யும் வந்தான்.

இதோ இருவரும் வீட்டில் வைத்து சந்திக்காமல் சாலையில் வைத்து நேருக்கு நேர் நிற்கின்றனர்

அஜய் கார் அவளின் ஸ்கூட்டியை சட்டென வழி மறைக்க, பெண் அதிர்ந்து பிரேக்கை இழுத்து பிடித்து நிறுத்தினாள். அப்படியும் அவளின் ஸ்கூட்டி அவனின் காரை தொட்டு தான் விட்டது.

ஜீவிதா மங்கலான கண்களை சிமிட்டி எதிரில் யார் என்று பார்த்தாள். அஜய் இறங்கி வந்து கொண்டிருந்தான். இவளுக்கு முன் வந்து நின்றான்

ஜீவிதா கண்கள் விரிந்து போனது. சில வருடங்களே ஆகும் அவனை நேரில் பார்த்து. ஒருவேளை பிரம்மையோ?

என்னை தெரியுதா?” அஜய் இரு கைகளையும் கட்டி கொண்டு கேட்டான்.

உண்மை. நேரில் நிற்கிறார்.

ஜீவிதா அவனை உணர தடையாக, ஹார்ன் சத்தம். சுற்றி பார்க்க சற்று ஓரம் தான் இருந்தனர். ஆனாலும் வண்டிகள் ஹார்ன் அடித்தது. இருவரும் வண்டியை எடுத்தாக வேண்டும்.

உன்கிட்ட தான் கேட்கிறேன், என்னை தெரியுதா?” என்று மீண்டும் கேட்டான்.

இன்னும் நன்றாக வளர்ந்து, உடல் வைத்து, கண்களில் தீர்க்கம் நிறைந்து, நிமிர்வில் ஓர்வித தோரணையுடன் நின்றிருந்தவனை பார்க்க மறுத்தாள் பெண்.

அதில் அஜய்க்கு இன்னும் இறுக்கம். “என்னை பாலோ பண்ணுஎன்று அவன் கார் எடுக்க சென்றான்.

தள்ளி இருந்தவரை அவனை மீறியவள், நேருக்கு நேர் நிற்கும் போது அவனை மறுக்க முடியாமல் பின் தொடர்ந்தாள்

அஜய் கார் நின்ற இடத்தில் இவளும் நிறுத்த, அஜய் அவன் பக்க கதவை திறந்துவிட்டான். ஜீவிதாவிற்கு கால்கள் ஒத்துழைக்கவில்லை.

தன் வண்டியிலே இருந்தாள். அஜய் ஹார்ன் அடித்தான். அடுத்து கொண்டே இருந்தான்.

ஜீவிதா மெல்ல அவன் காருக்கு சென்றுவிட்டாள். அவன் பக்கமும் அமர்ந்து கொண்டாள். அஜய் அவளை நன்றாக பார்த்து அமர, அவனின் வாசம் வெகு அருகில்

புதிதாக அவனுக்கே உரித்தான வாசனையை உணருகிறாள். இத்தனை வருடம் இல்லாதது இது

அருகருகே இருந்த எத்தனையோ நிமிடங்களில் செய்யாத செயலை இப்போது செய்தாள். அவன் வாசனையை அடி மனதின் ஆழம் வரை இழுத்து சுவாசித்தாள். தனக்குள் நிரப்பியும் கொண்டாள்.

கைகள் தொட்டு விடும் தூரம். அன்று அந்த பெண்ணை தொட்ட கைகள். அதனையே வெறித்து பார்த்தாள்.

அஜய் அவள் பார்வை சென்ற இடத்தை புருவம் சுருக்கி பார்த்தான். அவனுக்கு புரியவில்லை. “எதுக்கு என் கையை முறைச்சு பார்க்கிற?” என்று கேட்டான்.

பெண் பார்வையை நேரே திருப்பி கொண்டாள். இனி தொடர்ந்து கேள்வி வரும்

தாரணி கல்யாணத்துல பேசினதுக்கா இவ்வளவு பண்ற ஜீவிதா நீ?” அஜய் கேட்க,

ஜீவிதா அவன் பக்கம் திரும்ப வேண்டுமே? உள்ளம் மட்டும் அப்படி குமுறியது.

இவர் வேறு ஒரு பெண்ணுடன் இருந்த போது எனக்கு கொதித்ததே, இவருக்கு அப்படி ஏதும் இல்லையா

அந்த ஆனந்தன் என்னை தொந்தரவு பண்றான்னு சொன்னா நீயே ஹாண்டில் பண்ணு இல்லை சொன்னார்சோர்ந்து போனாள்

வெளிக்காட்டி கொள்ளாமல் இருக்க, கைகளை இறுக்கமாக பிணைந்து கொண்டாள்.

வளர்ந்துட்ட. நல்லா வளர்ந்துட்டஎன்றான் அஜய்.

இப்போதான் என்னை பார்க்கிறாரா? சுத்தம்.

ஆனா மூளை மட்டும் ரிவர்ஸ்ல போகுதா?” அஜய் கேட்டுவிட, ஜீவிதா சிலிர்த்து அவனை திரும்பி பார்த்து முறைத்தாள்.

அஜய் உள்ளுக்குள் சிரித்து கொண்டான். என்ன சொன்னால் பெண் திரும்பி பார்ப்பாள் என்று அவனுக்கா தெரியாது.

என்ன முறைக்கிற? உண்மை தானே? மூளை உனக்கு தேயுதோனு எனக்கு டவுட்என்றான்.

ஜீவிதாவிற்கு வார்த்தைகள் வேகமாக வந்தது. விழுங்கி கொண்டாள்.

என்ன பதில் சொல்லு? எதுக்கு இந்த ஓட்டம்? என்னை பார்க்க மாட்டேங்கிற, என்கிட்ட பேச மாட்டேங்கிற. என்ன பிரச்சனை உனக்கு? என்கிட்ட சொல்லு ஜீவிஎன்று மென்மையாக கேட்டான்

ஜீவிதாவிற்கு அவன் மென்மையில் உள்ளம் கரைந்தது

யாராவது எதாவது சொல்லிட்டாங்களா? அங்கிள் பேசுறாரா? நான் வேணும்ன்னா அவர்கிட்ட வந்து பேசவா?”

ஆனந்தன் கூட உன்னை டிஸ்டர்ப் பண்றது இல்லை தானே? இப்போ நானும் அவனும் ப்ரெண்ட். உனக்காகவே அவன்கூட பேச ஆரம்பிச்சேன். நல்ல பாண்ட் எங்களுக்குள்ள இப்போஎன்றான்.

ரொம்ப சந்தோசம், என்னை தவிர எல்லார்கிட்டயும் பாண்ட் போடுறார், கிழிச்சு போட்டுடுறேன்கருவி கொண்டாள்.

ஜீவி வேற யாரும் ஏதும் தொந்தரவு கொடுக்கிறாங்களா?”

ஜீவிதா உன்கிட்ட தான் கேட்கிறேன்

என்கிட்ட பேச மாட்டேங்குற நீ, எனக்கு புரியவே மாட்டேங்குதுஅஜய் ஆயாசத்துடன் தலை கோதி கொண்டான்.

அவளின் தொடர் மௌனம் அவன் பொறுமையை சோதித்தது.

சின்ன பொண்ணுன்னு பார்த்தா ரொம்ப பண்ற  ஜீவிஎன்றவன், அவளுக்கு முன் இருந்த பார்சலை எட்டி எடுத்தான்

அதில் பெண்ணை லேசாக உரசி சென்றான். ஜீவிதா சிலையாகி போனாள்.

இந்தாஎன்று அவளுக்கு முன் நீட்டினான். ஜீவிதா பார்த்தாலும் வாங்கவில்லை

பலாப்பழம். உனக்கு பிடிச்சது தான்என்றான்

பெண் வாங்காமல் போக, அவளின் மடியிலே பட்டென வைத்துவிட்டான்

ஜீவிதா” 

ம்ஹூம். அசைவே இல்லை.

அவளிடம் நிறைய மாற்றங்கள். மூடவே செய்யாத வாய் இப்போது திறப்பேனா என்று அவனுக்கு ஆட்டம் காட்டியது.

நிமிடங்களே பேச்சில்லை. அஜய் அவளை பார்க்க, நேரே பார்க்க என்றிருந்தான்.

சோ பேச மாட்ட

ரைட் பேசாத” 

எதார்த்தம் அப்போ உனக்கு புரியலைன்னாலும் இப்போ புரிஞ்சிருக்கும். நான் சொன்னது உண்மைன்னு தெரிஞ்சிருக்கும், ஆனாலும் என்கிட்ட பேச மாட்டன்னா இது வேற எதுவோஎன்றான் சரியாக.

ஜீவிதாவிற்கு திக்கென்றது.

அது என்னவா இருந்தாலும் நீ என்கிட்ட பேசணும். பேச முடியாத அளவு நாம இல்லை, நீ இல்லை

இனி நானா உன்கிட்ட பேசறதா இல்லை, பார்க்க வரதா இல்லை. என்னமோ பண்ணு. போஎன்றுவிட்டான்.

அவளை பார்க்காமல் மொபைல் எடுத்து கொண்டான். ஜீவிதா கண்கள் அவனையே பார்த்தது

அவ்வளவு தான். இறங்க வேண்டும். கிளம்ப வேண்டும். ஆனால் மனமில்லை

அஜய் அவளை பார்க்க மாட்டான் என்று புரிந்து போனது. மடியில் இருக்கும் பார்சல் கனத்தது. எடுத்து காரிலே வைத்து இறங்கிவிட்டாள்.

அஜய் இதை நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. அந்த பார்சலையே பார்த்திருந்தான்

Advertisement