தாத்தா யோசனையாக பார்த்தார்.  அவன் இங்கே இருந்த நாள்வரை.. கிருபா இருக்கும் இடத்தில் அவன் நிற்கவே மாட்டான். அப்படி இருந்தால்.. கண்டிப்பாக பேச்சு வார்த்தை முற்றி சண்டையாக நிற்கும்தான். ஆனால், இந்த சத்தத்தில் இப்படி அழைப்பை கேட்டதேயில்லை என எண்ணிக் கொண்டு உண்பதற்கு வந்து அமர்ந்தார் தாத்தா.

கிருபா ஸ்ரத்தையில்லாமல் உண்பதற்கு அமர்தாள். என்னமோ என் கடன் என்பதாகத்தான் அவளின் நடவடிக்கை இருந்தது. தாத்தாக்கு என்ன வேண்டும் என கவனிக்கவில்லை. பாட்டியை உண்பதற்கு அழைக்கவில்லை.. எதோ உண்டேன் என உண்டு.. தன் அறைக்கு சென்றுவிட்டாள்.

தாத்தா ஏதும் கேட்டுக் கொள்ளவில்லை.

கிருபா லாப்டாப்’வோடு திண்ணையில் அமர்ந்துக் கொண்டாள். ஈசன் இப்போது கிருபாவிற்கு அழைத்தான், அலைபேசியில்.

கிருபா எடுத்தாள்.. 

ஈசன் “என்ன ஆச்சு” என்றான் தனிவாகவே.

கிருபாவிற்கு  அவனிடம் சொல்லிடும் எண்ணம்.. ஆனால், சண்முகம் மாமா தாத்தாவை நினைத்து கவலையாக “ஒ..ஒண்ணுமில்ல” என்றாள்.

ஈசன் “பின்னாடி.. திட்டுகிட்ட வா” என்றான்.

கிருபா “இல்ல, நீங்க இப்டியே பேசுங்க, தாத்தா பார்க்கிறாங்க” என்றாள்.

ஈசன் “நானே தாத்தாகிட்ட பெர்மிஷன் சொல்லிடுறேன். என்ன இப்போ. தாத்தா அதெல்லாம் ஒன்னும் சொல்ல மாட்டார்” என்றான்.

கிருபா “வேண்டாம் ப்ளீஸ் ஈசன்” என்றாள், குரல் பதறியது.

ஈசன் யோசனையாக “நீ வா நான் இப்போவே உன்னை பார்க்கனும். இல்லை, சொல்லிடுவேன்” என மிரட்டினான். அவனுக்கே சிரிப்பாக இருந்தது இந்த மிரட்டல்.. இப்போ அவள் ஸ்கூல் பிள்ளையா, நானா.. என எண்ணிக் கொண்டே வந்தான்.

கிருபாவும் மெதுவாக யாருக்கும் தெரியாமல் பின்பக்கம் இருக்கும் திட்டிற்கு வந்தாள்.

ஈசன், அங்கிருந்த வாஷிங்மெஷின் மேல் சாய்ந்து நின்றிருந்தவன்.. அவளை தனியே பார்த்ததும்.. இமைக்க மறந்தவன் போல.. நின்றான்.

கிருபாவிற்கும் அப்படியே. நீண்டநாள் சென்று.. பார்க்கிறேன். காதல் என சொல்லி.. அந்த வார்த்தையின் சத்தம் என் காதில் கேட்க்கும் முன், கடல் தாண்டி சென்றவன்.. வந்து நிற்கிறான்.. இனி எந்த பிரச்சனையாக இருந்தாலும் என் மனதில் நின்றிடுமா என்ன.. என குழப்பங்கள் மறந்து புன்னகையோடு அவனை நெருங்க.. ஈசன் சற்று உள்ளே.. மேலே இரும்பு கூரை வேய்ந்திருப்பர் அங்கே தள்ளி நின்று.. ரசனையாக தன்னவளை பார்க்க தொடங்கினான்.

கிருபாவின் முகம் வெட்கம் கொண்டு சிவந்து கொள்ள.. திரும்பி நின்றுக் கொண்டாள்.

ஈசன் “என்ன பிரச்சனை உனக்கு..” என்றான்.. குரல் கொஞ்சியது தன்னவளிடம்.

கிருபாவின் உடல்மொழி சட்டென மாறியது. இறுகிக் கொண்டாள்.

ஈசன் அவளை பின்னிலிருந்து இடையோடு கட்டிக் கொள்ள.. பெண்ணின் பூந்தேகம் தளர்ந்தது.. ஈசனுக்கும் அவளின் அவஸ்த்தை புரிய.. தன்னை நோக்கி அவளை திருப்பினான்.. “இப்படிதான் வெல்கம் பண்ணுவேன்னு எதிர்பார்த்தேன்” என்றான் ஏக்கமான குரலில், அவளை கட்டிக் கொண்டே.

கிருபா, ஈசனின் கண்களை நிமிர்ந்து பார்த்தாள்.. லேசாக கலங்கி இருந்தது.. முகத்தில் மலர்ச்சி.. கண்களில் மட்டும் எதோ கலக்கம் என ஈசனுக்கு புரிய.. “என்ன.. எப்போதும் குத்தவா வெட்டவான்னு பார்ப்ப.. இப்போ என்ன வெட்க்கமா”  என்றான் அவளை தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டு, ரசனையாகவே வினவினான்.

கிருபாவும் திமிறாமல் அவனின் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டாள். ஆனால், பேசவில்லை.

ஈசன் “ஏதாவது பேசு டி” என்றான்.

‘ம்கூம்..’ என தலையசைத்தாள்.. மற்றபடி.. வாய் திறக்கவில்லை. இருவருக்குள்ளும் வெப்ப காற்று உள் சென்று.. தாபத்தை தூண்ட.. ஈசன் தன்னவளை இன்னும் இறுக்கிக் கொண்டான்.. கிருபா “ஈசன்.. வி..டுங்க..” என தனக்கே கேட்க்காத குரலில் பெண்ணவள் மிழற்ற..

ஈசன், அவளின் தோள் வளைவில் முத்தம் வைத்தான். பெண்ணவளின் பூந்தேகம் சிலிர்க்க.. ஈசனுக்கு இன்னும் ஆசை கூடியது.. பெண்ணவளின் ஷோல்டெர் பகுதியில் உள்ள.. டாப்ஸ்சினை.. தன் விரல் கொண்டு லேசாக  கைவரை நகர்த்தியவன்.. காதலால் நொறுங்க கடித்தான்.. கிருபா “ஆ..” என கத்தியேவிட்டாள். 

ஈசன் அலட்டிக் கொள்ளாமல் “ஷ்.. அஹ.. என்ன வாசனைடி நீ” என ரகசிய குரலில்.. சொல்லி மீண்டும் ஷோல்டரில் டாப்ஸ் ஏற்றி விட்டு.. உடையிலேயே முத்தம் வைத்துதான் அவளை விடுவித்தான்.  

“நெருங்காதே..

விலகாதே..

உன் பக்கமிருந்தால்..

கெட்டு போவேன்..

தள்ளியிருந்தால் 

நல்லவனாவேனே..”

கிருபா, அவன் முத்தம் வைத்த இடத்தை தேய்த்துக் கொண்டே.. அவனை முறைத்து, தள்ளி தூரமாக நின்றுக் கொண்டான்.

ஈசன் புன்னகையோடு அருகில் வந்து “என்ன சொல்லு” என்றான்.

கிருபா “என்ன இது.. இப்படி எல்லாம் செய்வாங்களா.. நான் உங்களை ரொம்ப நல்லவர்ன்னு நினச்சேன்” என்றாள் குழந்தை மிரட்டலாக.

ஈசன் “ஹேய்.. நீயா நினைச்சிகிட்டா நானா பொறுப்பு..” என சொல்லி அவளின் கையை பிடித்தான். எங்கே அவன் மீண்டும் அணைப்பானோ என எண்ணி.. விலகி போனாள் பெண்.

ஈசன் “அடி.. நில்லு..” என சொல்லி வலுகட்டாயமாக அவளின் கைகளை தனக்குள் எடுத்துக் கொண்டான். பின் “என்ன ஆச்சு, நான் வந்தது பிடிக்கலையா.. ஏன் என்கிட்டே வரவேயில்ல” என்றான் ஏக்கமாக.

கிருபா இவனிடம் எதையும் சொல்ல கூடாது எனதான் இவனை பார்ப்பதை தவிர்த்தாள். சென்று நொடி வரை மறந்தும் விட்டாள்.. வீட்டில் என்ன நடக்கிறது என. ஆனால், இப்போது ஈசன் கேட்டிடவும் சமாளிப்பாக “எப்படி வருவது..” என்றாள் முறைப்பாக.

ஈசனுக்கு, புரியாதா.. “நான் என்ன மடியிலா வந்து உட்கார சொன்னேன்.. என்னை பார்கலை.. கண்ணில் என்னமோ. உயிரே இல்லையே.. நானும் வந்ததிலிருந்து பார்க்கிறேன்..” என்றான்.

கிருபா முகம் இயல்பை தொலைத்தது.. 

ஈசன், இப்போது சீரியஸ் ஆகினான் “என்ன நடக்குது. நீ சரியில்லை.. உண்மையை சொல்லு.. உங்க மீனாட்சி வந்திருக்கு போல.. என்ன அப்பாக்கு ஏதும் செய்ய கூடாதுன்னு சொல்றாங்களா” என்றான்.

கிருபா “அதெல்லாம் இல்லை” என்றால் சலிப்பாக.

ஈசன் பிடித்துக் கொண்டான் “அப்போ உண்மையை சொல்லு” என்றான் நேர் பார்வை பார்த்து.

கிருபாவிற்கு அதற்குமேல்.. மறைக்க முடியவில்லை.. “சொல்றேன், எனக்கு ஒரு சத்தியம் பண்ணுங்க” என கையை நீட்டினாள்.

ஈசன் சுதாரித்துக் கொண்டான்.. “என்னான்னு சொல்லு கிருபா” என்றான்.

கிருபாவிற்கு பயம் பற்றிக் கொண்டது.

ஈசன் அதட்டினான் “என்ன நடக்குது சொல்லு..” என்றான்.. பெண்ணவள் தன் கையை பார்த்து அவனையும் பார்த்தாள்.. பின் “சத்தியம் ப்ளீஸ்” என்றாள்.

ஈசன் “நான் சத்தியம் சாக்லேட் எல்லாம் யாருக்கும் கொடுக்கறதில்ல.. வாங்கிக்கிறவங்களுக்குத்தான் அது நல்லா இனிப்பா.. இருக்கும். கொடுக்கிறவங்களுக்கு அது.. இனிப்பா இருக்காது” என புது தத்துவத்தை சொன்னான் அந்த நேரத்தில்.

ஆனால், அதெல்லாம் கிருபாவின் மனது ரசிக்கும் நிலையில் இல்லை.. “அப்போ நான் சொல்லலை” என்றாள்.

ஈசன் “சரி விடு.. என்னான்னு உள்ள போய் கேட்டேன்னா தெரியப் போகுது” என்றான்.

கிருபா “ஐயோ அதுக்குதான் சொல்றேன்.. சத்தியம் பண்ணுங்கன்னு” என்றாள்.

ஈசன் “சொல்ல போறீயா, இல்ல.. நான் கேட்க்கவா” என்றான்.

கிருபா திட்டில் அமர்ந்து “நீங்க ஏதும் செய்ய கூடாது, நான் பார்த்துக்கிறேன்.. அப்படின்னா சொல்றேன்” என பேரம் பேசினாள்.

ஈசன் “நீ முதலில் சொல்லு” என்றான்.. முகம் விளையாட்டுத்தனத்தை தொலைத்திருந்தது.

கிருபா, அவனின் முக மாற்றத்தை பார்த்து.. “ஷண்முகம் மாமா ஒரு வரன் கொண்டு வந்திருக்கார்.. நேற்று அம்மாவும் மாமியும் போய் ஜாதக பொருத்தம் பார்த்துட்டு வந்திருக்காங்க.. ஏழு பொருத்தம் இருக்காம்.. சங்கர் மாமா திவசம் முடிந்ததும், என்னை சென்னை கூட்டி போறாங்களாம், அங்கே வைச்சி பேசிக்கலாம்ன்னு இருக்காங்களாம்” என எல்லாவற்றையும் சொல்லி முடித்தாள்.

ஈசன், அவள் பேச பேச.. “இத்தனை வருஷம் எங்க போனார் உன் மாமா. இப்போ ஏன் திடீர்ன்னு. ஏன் இப்போதான் அந்த பையன் வயசுக்கு வந்தானாமா.. இத்தனைநாள் தெரியாதா.. என்னமோ இருக்கு.. இரு.. நான் தாத்தாகிட்ட பேசுறேன்” என கிளம்பினான்.

கிருபா “போங்க போங்க.. அப்படியே போங்க.. நானும் எங்க மாமா என்ன சொல்றாங்களோ அதை கேட்டு போய்டுவேன்.” என்றாள்.. பிடிவாத குரலில்.

ஈசன் “அடிங்க.. கேட்பீங்க கேட்பீங்க.. ஏத்தத்தை பாரு.. உங்க மாமா குடும்பத்துக்கே விஷம் வைச்சிடுவேன் ஜாக்கிரதை” என்றான் கொலைகாரன்.

கிருபா “ஐயோ.. கொஞ்ச நேரம் சும்மா இருங்க.. நான் தாத்தாகிட்ட இன்னிக்கு பேசுகிறேன்னு சொல்லியிருக்கேன். தாத்தா முன்னமே என்கிட்டே கேட்டாங்க.. நான்தான் உங்ககிட்ட கேட்டுட்டு சொல்லிக்கலாம்ன்னு இருந்தேன், நானே தாத்தாகிட்ட பேசுகிறேன்.. ப்ளீஸ்.. நீங்க அமைதியா இருங்க” என்றாள்.

ஈசன் “தாத்தா கேட்டும் நீ சொல்லலை.. அப்போ, ஜாதகம் வரை பார்த்திருக்காங்க.. முன்னாடியே என்கிட்டே சொல்லியிருக்கலாமில்ல” என்றான் கடுப்பான குரலில்.

கிருபா “நீங்க அப்போதான் ஊருக்கு கிளம்பிட்டு இருந்தீங்க, அதான் டென்ஷன் பண்ண வேண்டாமேன்னு சொல்லலை” என்றாள்.

ஈசன் “தியாகி.. டி நீ. எப்படி, அவங்க நிச்சயம் செய்தக்துக்கு அப்புறம் சொல்லிக்க்லாம்ன்னு இருந்தியோ.. வா, தாத்தாகிட்ட பேசலாம்.. நானும் கடைக்கு வரேன்” என சொல்லி முன்னே சென்றான்.

கிருபா என்ன நடக்குமோ என அமர்ந்தாள்.. அந்த திட்டிலேயே.