ஈசன் “போங்க தாத்தா.. வருவான். எங்க போயிட போறான்” என்றான், சத்தமாக. தாத்தாக்கு சங்கர் நினைவு வந்தது. ஏதும் சொல்லாமல் கடைக்கு சென்றுவிட்டார்.

ராம்’மோடு சற்று நேரம் ஈசன் பேசிக் கொண்டிருந்தான். எத்தனை மாச வாடகை கொடுக்கலை.. அட்வான்ஸ் எவ்வளவு என ராம்’மிடம் கேட்டான். அவருக்கு தெரியவில்லை.

பின், தங்களின் கடையை அடைத்துவிட்டு.. ராம்’மோடு தாத்தாவையும் வீடு அனுப்பி வைத்தான் காரில், ஈசன்.

சற்று நேரத்தில் டயர் கடைக்காரன் வந்து சேர்ந்தான். ஈசன் அப்போதும் கடையை திறக்கவில்லை. 

கிருபாவிற்கு அழைத்தான். மாலை ஐந்து மணிக்கு மருத்துவரிடம் சென்று வந்திருந்தாள். காய்ச்சல் விட்டு விட்டு வருவதால்.. தாத்தா அப்போதே, மருத்துவரை பார்த்து வர பணித்தார்.

அசதியில் கிருபா உறங்கியிருந்தாள். 

இப்போது காய்ச்சல் இல்லாமல் இருந்தது.. அதில் ஈசனின் அழைப்பு கண்ணில் பட அழைப்பை, ஏற்றாள். 

ஈசனின் அவளிடம் விவரம் கேட்டுக் கொண்டான்.

தாத்தா, வீடு வந்தார். ராம் காரெடுத்துக் கொண்டு கடைக்கு சென்றார்.

எல்லோரும் அமர்ந்திருந்தனர் வாசலிலேயே. தாத்தாவை பார்த்ததும் எல்லோருக்கும் நிம்மதி.

கோகிலா “என்ன ப்பா, இவ்வளவு நேரம்..” என தொடங்க.

பாட்டி “ஈசன் எங்க” என்றார்.

தாத்தா நடந்ததை சொன்னார்.

ஈசன், பேசினான்.. கடைக்காரனிடம். கடைக்காரன் காசில்லை என்றான். “பொருட்களை வேறு கைக்கு மாற்றுகிறேன்.. அதன்பிறகுதான் அமௌன்ட் வரும்.. அப்புறம் தருகிறேன்” என்றான்.

ஈசன் “அதெல்லாம் ஆகாது. அட்வான்ஸ் வாங்கியிருப்பாய்” என்றான்.

பதிலில்லை.

ஈசன் “எனக்கு அமௌன்ட் இப்போ போட்டுவிட சொல்லு.. இல்லை நீ போடு. அதுவரை ஏதும் ஆகாது. என்ன செய்யணுமோ செய்” என சொல்லி அமர்ந்துக் கொண்டான், தோரணையாக.

அந்த கடைக்காரன் யாரிடமோ பேசினான் போனில். ஒன்றும் நடக்கவில்லை.

ஈசனிடம் வந்து பேசி பார்த்தான், கடைக்காரன். ஈசன் அசையவில்லை.

அருணாசலம், ஈசனை போனில் அழைத்து விவரம் கேட்டார். சொன்னான் ஈசன். “பாவம் பா, உள்ளே இருக்கிறவங்க. காலையில் பேசிக்கலாம்” என்றார், தாத்தா.

ஈசன் முடியாது என தலையைசைத்து மறுத்துவிட்டான்.

கிருபா, ஈசன் போன் செய்யும் போதுதான் எழுந்து அமர்ந்திருந்தாள். எதற்கு கேட்க்கிறான் என அப்போதே கேட்டதற்கு.. ஈசன் ‘தானும் தாத்தாவும் கடைக்கு வந்தது..’ பற்றி சொன்னான்.  

கிருபா, சற்று நேரம் சென்று எழுந்து வெளியே வந்து அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.. ஈசன் போன் செய்தது பற்றி.

தாத்தாவும் நடந்தவை எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். எல்லோரும் கேட்டுக் கொண்டனர்.

சாப்பிடலாம் என கோகிலா அழைக்க.. யாருக்கும் உணவு எடுத்துக் கொள்ளும் மனநிலை இல்லை. அப்படியே அமர்ந்துக் கொண்டிருந்தனர்.

கிருபாவிற்கு இட்லி ஒரு பௌலில் போட்டு கொண்டு வந்து கொடுத்தார் கண்ணமா அக்கா. கிருபா உண்டுவிட்டு.. மாத்திரைகளை எடுத்துக் கொண்டாள். அப்படியே சேரில் சாய்ந்து உறங்கினாள்.

மணி பதினொன்றுக்கு மேல் இருக்கும்.. ஈசன் வீடு வந்தான். வீடு மொத்தமும் திண்ணையில் அமர்ந்திருந்தனர். ஈசன் காரில் வரும் போதே ‘இந்த காட்சியை பார்த்து.. என்ன ஆச்சு..’ என யோசித்துக் கொண்டே காரிலிருந்து இறங்கினான்.

கிருபா தாத்தாவின் ஈசி சேரில் சாய்ந்திருந்தாள்.. கோகிலா கீழே திண்ணையில் படுத்திருந்தார். பாட்டியும் தாத்தாவும் அமர்ந்திருந்தனர் வாகாக சேரில் அமர்ந்திருந்தார். காரினை பார்த்ததும் கோகிலா எழுந்து அமர்ந்தார்.

ஈசன் வாசலின் முன்புறமே காரினை நிறுத்திவிட்டு, இறங்கி உள்ளே வந்தான் ஈசன்.

பாட்டி “ஏன் ஈசா, இவ்வளவு நேரம்..” என பேச.. கோகிலாவும் “முதலில் சாப்பிடலாம் வாப்பா..” என அழைக்க.. இதெல்லாம் அவனின் காதில் விழவில்லை.

கிருபாதான் முதலில் அவனின் கண்களுக்கு தெரிந்தாள் அத்தனை பேரின் நடுவிலும். ஓய்ந்த தோற்றம்.. இப்போதுதான், தன்னை பார்க்கும் அந்த சிவந்த விழிகளும்.. அவனை சட்டென பேச வைத்தது “கிருபா என்ன ஆச்சு..” என.

கிருபா நிமிர்ந்து அமர்ந்தாள்.. என்ன சொல்லுவது என தெரியாமல்.

கோகிலா “காய்ச்சல், வைரஸ் பீவர்ன்னு சொல்லியிருக்காங்க” என்றார்.

கிருபா தலையசைத்தாள்.. ம்.. என.

தாத்தா “அதான், இன்னிக்கு அவள் கடைக்கே வரலை ஈசா.. பாரு ஒரே நாளில் எப்படி ஆகிட்டான்னு, நீ தூங்குன்னு சொன்னோம். கேட்க்கலை. நாங்க எல்லோரும் இருக்கவும் இங்கேயே தூங்கறேன்னு சொல்லிட்டு உட்கார்ந்திருக்கா” என்றார் பேத்தியை வாஞ்சையாய் பார்த்துக் கொண்டே.

ஈசன் “ஹாஸ்ப்பிட்டல் போனீங்களா” என்றான்.

கிருபா தலையசைத்தாள்.

எல்லோரும் அமைதியாகினர்.

ஈசன் அதில் சுதாரித்து.. திண்ணையில் அமர்ந்தான்.

கிருபா கண்மூடிக் கொண்டாள்.

கோகிலா “என்ன ஆச்சு, ஏன் இவ்வளவு கோவம். கடைக்காரன் ஏதாவது செய்திட போறான் ப்பா ஈசா” என்றார்.

ஈசன் “அதெல்லாம் ஏதும் செய்யமாட்டான் அத்தை. அதென்ன சொல்லாமல் கடையை காலி செய்வது. அதான். பணம் வாங்கிட்டேன்..”  என கொடுக்க வேண்டிய தொகையை எல்லோரிடமும் சொன்னான்.

 பின் ஈசனே “பொருட்கள் இன்னும் இருக்கு.. காலையில் பேசிக்கலாம்ன்னு, கடையை  திறந்து ஆட்களை  மட்டும் விட்டுட்டு.. கடையை பூட்டிட்டு வந்துட்டேன்.” என்றான் ஒரு கொட்டாவியோடு.

கோகிலா “பணம் கொடுத்திட்டானா.. ஈசா, சாப்பிடலாம்” என்றார். எழுந்து உள்ளே சென்றார். 

தாத்தாவும் “அப்படியா ப்பா, சந்தோஷம். இப்படி ஒருத்தர் வேணுமா இருக்கு. நானும் கிருபாவும் வாரத்திற்கு இரண்டுதரம் கூப்பிட்டு. கடையை கொடுத்திடுன்னு சொல்லுவோம். பதிலும் சொல்லலை.. காசு கொடுக்கலை. எதோ இப்போவது நடந்ததே.” என்றார்.

பின் ஈசன் “எந்த அக்கௌன்ட்க்கு மாற்றிவிட தாத்தா” என கேட்டான்.

தாத்தா “ம்.. வை.. நாளைக்கு கிருபாக்கிட்ட பேசிட்டு.. எதில் போடலாம்ன்னு சொல்றேன்” என்றவர் உள்ளே எழுந்து சென்றார்.

பாட்டி மெதுவாக எழுந்துக் கொண்டே “சாப்பிட்டு, அப்புறம் ரூமிற்கு போ… ஈசா. ” என்றவர். “கிருபா போடா, தூங்கு.. போ” என்றார்.

ஈசன் “இன்னும் நீங்க சாப்பிடலையா பாட்டி” என்றான்.. அதிர்ந்தவனாக.

பாட்டி “நான் சாப்பிட்டேன், இன்னும் உங்க தாத்தாவும் அத்தையும் சாப்பிடலை.. போங்க சாப்பிடுங்க” என்றார். பாட்டி உள்ளே சென்றுக் கொண்டே.

ஈசன், எழாமல் அப்படியே அமர்ந்து கிருபாவையே பார்த்துக் கொண்டிருந்தான். சரியாக அவளை பார்த்தே நான்கு நாட்களுக்கு மேல் இருக்கும். இப்போது அவளை பார்க்கவும்.. அவளின் கண்களை பார்க்காமல் போக மனதில்லை அவனுக்கு. 

நொடிகள் நீண்டது. இவன் எழுந்து செல்வான்.. என அவள் கண் திறக்காமல் இருக்க. அவள் கண் திருப்பாள்.. பேசிவிட்டு செல்ல வேண்டும்.. என அவனும் அப்படியே அமர்ந்திருந்தனர்.

கிருபாவிற்கு, அவனின் பார்வை.. இந்த அமைதி.. ஒருமாதிரி குளிரை தந்தது. மனத்தால் அவனின் இருப்பை உணர்ந்துக் கொண்டு கண்களை மூடியிருந்தாள். அவனை பார்க்க கூடாது என வீம்பில்.. ம்.. அவன்மேல் கோவம் இருக்கிற போதும், எதோ கருணையும் அவன்மேல் பிறக்கிறது. அவனின் கண்களில் தெரியும் குழப்பம்.. இருவேறு யோசனையை அவளுக்கு கொடுகிறது. எனவே, கிருபாவிற்கு பயம். எனவே, கண்களை திறக்கவில்லை.

ஈசன் “உடம்பு முடியலைன்னு சொல்லலாமில்ல.. எனக்கு தெரியவேயில்லை. அப்போவே வந்து பார்த்திருப்பேன், யார் கூட ஹாஸ்பிட்டல் போன” என்றான்.

கிருபா “உங்ககிட்ட எதுக்கு சொல்லணும்” என்றாள்.. அலட்சிய குரலில்.

ஈசன் “இ..தென்ன கேள்வி.. சொல்லணும். எல்லோருக்கும் தெரியனுமில்ல” என்றான், இத்தனைநாள் இல்லாத திடமான குரலில்.

கிருபாவிற்கு அந்த திடமான குரல் பிடிக்கவில்லை  “எதுக்கு சொல்லணும். நீங்க இந்த வீட்டு ஆளா.. இல்லையே..” என்றாள்.

ஈசன் இதையெல்லாம் யோசித்து யோசித்து.. குழம்பி இருந்தவன்.. இவள் மீது ஈர்ப்பில் இருந்தவன்.. அவளின் எதிரே நெருங்கி வந்து நின்று “உண்மைய சொல்லு, நான் இந்த வீட்டு ஆளு இல்லையா” என்றான், அவளை எரிப்பது போல பார்த்து. முன்பு ஷண்முகம்.. இப்போது இவளா என்ற கோவம் அவனுக்கு.

கிருபா அவன் அருகே வந்த போதே அனிச்சையாய் கண் திறந்துவிட்டாள்.. கண்கள் சிவந்து இருந்தது.. மூக்கின் நுனி சிவந்து.. மீண்டும் காய்ச்சல் அவளுக்கு என அறிகுறிகள் தெரியும் வண்ணம்.. முகம் வாட நிமிர்ந்து ஈசனை பார்த்தவள் எழுந்துக் கொண்டாள்.

ஈசன் கொஞ்சம்  தள்ளி நின்றான். ஆனால், அவள் முகத்தையே பார்த்து நின்றான்.

கிருபா அவன் மேல் தனக்கிருக்கும் பலவீனங்களை மறைத்துக் கொண்டு.. “அதெல்லாம் தெரியலை.. தூங்கனும் எனக்கு.” என்றாள்.

ஈசன் “பேச மட்டும், நல்லா தெரியுமோ..” என்றான்.

கிருபா அதை காதில் வாங்காதவள் போல நடக்க தொடங்கினாள்.

ஈசன் ஒன்றும் பேச முடியாமல் நின்றிருந்தான்.