Advertisement

உள்ளே சென்றவன்எங்க உன்கூடவே உன்ன விட்டு ஒருநிமிஷம் கூட பிரியாம கர்ணனோட கவச குண்டலம் மாதிரி ஒட்டிட்டு இருப்பாங்களே அவங்கள காணோம்என பார்வையை படர விட்டபடியே கேட்க,

வந்த விஷயம் என்னன்னு மட்டும் சொல்லு அதைவிட்டுட்டு தேவையில்லாததெல்லாம் கேட்காத இது அவங்க வீடு அதை மனசுல வச்சுட்டு பேசு ரிஷி, அதுவுமில்லாம அவங்க எங்க போயிருக்காங்கன்னு உன்கிட்ட சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்ல,

என்ன பேசணும் சீக்கிரம் பேசிட்டு கிளம்பு எனக்கு டைம் ஆகுது நா வெளிய போகணும் கிளம்புற நேரத்துல நந்தி மாதிரி குறுக்க வந்துட்டுஎன முகத்தில் கடுப்பை தேக்கி கொண்டு முணுமுணுத்தாள்.

சாரிம்மா நீ வெளிய கிளம்புற நேரம்ன்னு எனக்கு தெரியாது தெரிஞ்சிருந்தா அப்பாயின்ட்மெண்ட் வாங்கிட்டு வந்துருப்பேன்என்றவனின் குரலில் ஏகத்துக்கும் கேலி இழையோடியது.

நாள் முழுசும் உன்கூட உக்காந்து பேச வேண்டிய அவசியம் எனக்கு இல்ல. முக்கியமா உன்ன மாதிரி அடுத்தவங்க காசுல உக்காந்து சாப்பிடுற எண்ணம் கொஞ்சம் கூட எனக்கு இல்ல, நா என்ன வேலை வெட்டி இல்லாதவன்னு நினைச்சியா?, உன்கூட உக்காந்து சாவகாசமா பேசிட்டு இருக்குறதுக்கு நிறைய வேலை இருக்கு சொல்ல வேண்டியதை சொல்லிட்டு போலாம்னு தான் இங்க வந்தேன் எனக்கு என்ன தலையெழுத்தா ஓசி சோறு சாப்டுறதுக்குஎன அலட்சியமாய் பேசி அவமதிக்க.

ரிஷிஎன பல்லை கடித்தாள் ரஞ்சனி. கோபத்தை காட்ட முடியாமல் கையை மடக்கி கொண்டு தன் அதீத உணர்வை கட்டுப்படுத்தியவள்,

யாருக்கிட்ட பேசுறேன்னு பாத்து பேசு வார்த்தை ரொம்ப தடுக்குது. வாய் இருந்தா என்னவேனாலும் பேசலாம்னு நினைப்பா, நா உன்கூட பிறந்தவ அதை ஞாபகத்துல வச்சுக்கோ“.

தங்கச்சியா யாரு நீயா?” என இகழ்ச்சியாய் புன்னகைத்தவன்பாசம்னா என்னனு தெரியுமா? நம்பிக்கைக்கு அர்த்தம் தெரியுமா? உனக்கு துணையா நின்னதுக்கு இப்ப வரைக்கும் தண்டனைய அனுபவிச்சுட்டு இருக்கேன், உண்மை தெரிஞ்சும் ஒரு வார்த்தை கூட ஏண்டா இப்டி பண்ணேன்னு கேட்காதவனுக்கு துரோகம் பண்ணிட்டேன்னு வேதனை பட்டுட்டு இருக்கேன். அது சரி உனக்கு எங்க தெரிய போகுது வலிய பத்தி, வலி கொடுக்க வேணா தெரியும்என பேசி கொண்டே செல்ல,

போதும் ரிஷி நீ ரொம்ப பேசுற உனக்கு மட்டும் தான் வேதனையா ஏன் எனக்கில்லை? தினமும் வலியை அனுபவிச்சுட்டு இருக்கேன் நீ சொல்லிட்ட நான் சொல்லலை அவ்ளோ தான் வித்தியாசம். என்ன சொன்ன ஓசி சோறா யாரு நா ஓசி சோறு சாப்டுறேனாஎன இதழ் சுழித்து நிந்தனையாய் புன்னகைத்தவள்,

எனக்கும் கொஞ்சம் தன்மானம் இருக்கு உரிமை இருக்குற இடத்துல உக்காந்து சாப்பிடலை அதுக்கு தகுந்த சன்மானம் கொடுக்க போறதால இங்க சாப்பிடுறேன் அதுல உனக்கு ஏன் வயிறு எரியிது, வேணும்னா நீயும் உக்காந்து சாப்டு யாரு வேணாம்னு சொன்னதுஎன திமிராக பதில் கூறியவள் கால்மேல் கால் போட்டு சோபாவில் அமர்ந்தாள்

மரியாதை துளியும் அவளிடம் இருந்து தனக்கு கிடைக்காது என்பது முன்பே அவன் அறிந்தது தான், இருந்தும் ரஞ்சனியின் நடவடிக்கை அவனுக்கு வருத்தத்தை அளிக்க, அதை வெளிகாட்டாது பேச தொடங்கினான் ரிஷி.

 “அது சரி நாய் வாலை நிமித்த முடியுமா? உன்னோட தலையெழுத்து இப்டி தான்னா யாரலை என்ன பண்ண முடியும், ஒன்னு சொல்றேன் நல்லா கேட்டுக்கோ இந்த ஜென்மம்ன்னு இல்ல எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அபிக்கு வருணா தான் அவளுக்கு அவன் தான்!, இதை யாரலையும் மாத்த முடியாது உன்னோட முயற்சியில நீ பின்னடைவை தான் சந்திக்க போற ரஞ்சனி

அஞ்சு வருஷமா அவ நினைப்பை மட்டுமே சுமந்துகிட்டு வாழ்ந்துட்டு இருக்குறவன் உன்ன திரும்பி பார்ப்பான்னு நினைக்கிறயா?, இப்ப இல்ல எப்பவும் நீ அவனோட மனசுல இடம் பிடிக்க முடியாதுஎன உறுதியுடன் கூறியவனை உணர்ச்சிகள் அற்று வெறித்தாள் ரஞ்சனி.

 

தனக்கு சாதகமாக தன் வாழ்வை பெரிதாக கருத வேண்டியவன் எவளோ ஒருத்தியின் மீது இத்தனை அக்கறை காட்டுகிறானே எனக்கு ஆசைகள் இருக்க கூடாது இல்லை காதல் தான் வர கூடாதா?’ என மனதிற்குள் புழுங்கினாள் ரஞ்சனி.

அழுத்தமாய் அழுகையை அடக்கியதில் வலி தொண்டையை அடைக்க, நொடியில் கண்களில் ஈரம் சுரந்து விருவிறுப்பை உண்டு பண்ணியது. அழுவது கோழை தனாம் என்பது ரஞ்சனியின் வாழ்வில் எழுத படாதா சட்டம் அவளுக்கு அவளே பிறப்பித்து கொண்டது. விழிகள் கலங்குவதை அவனிடம் காட்ட கூடாது என்று சட்டென முகத்தை திருப்பி கொண்டாள்.

கோபத்தில் முகத்தை திரும்பி கொண்டாள் என எண்ணியவன்நீ எப்டி வேணாலும் போ நா வந்த விஷயத்தை முதல சொல்லிடுறேன் வருணாவ மறுபடியும் அபி கூட சேத்து வைக்க போறேன் என்னால பிரிஞ்சவங்களை சேர்த்து வச்சு சந்தோஷமா வாழ வைக்க போறேன். நா முடிவு பண்ணிட்டேன் இதை சொல்லிட்டு போக தான் வந்தேன் ஏதாவது கோல்மால் பண்ணனும்னு நினைச்சீங்க நா மனுஷனா இருக்க மாட்டேன் சொல்லிட்டேன்என எச்சரிக்கை விடுத்தவன் முகத்தில் அத்தனை கோபம்.

ம்ஹும் அவ இப்போ எங்க இருக்காளோ என்ன பண்றாளோ அதுவே தெரியல இந்த லட்சணத்துல ரெண்டுபேரையும் சேத்து வைக்க போற. யாருக்கு தெரியும் இந்நேரம் வேற ஒருத்தன கல்யாணம் பண்ணிட்டு வேற வாழ்க்கை குழந்தைங்கன்னு வாழ்ந்துட்டு இருக்கலாம்! இப்போ போய் சேர்த்து வைக்கிறேன்னு சொல்ற உனக்கே முட்டாள் தனமா இல்லஎன எள்ளி நகையாட,

வருணாவை பத்தி எனக்கு நல்லா தெரியும் ஒரு நாளும் அபிய மறந்து இன்னொருத்தன கல்யாணம் என்ன!, நினைச்சு கூட பாக்க மாட்டா. அவளோட காதல் உண்மையானது கடைசி வரைக்கும் மிஸஸ் அபிநந்தனா தான் இருப்பா. அவள பத்தி எதுவும் முழுசா தெரியாம விமர்சிக்காதஎன்றவன்,

நந்துவை மறந்துட்டு வேற ஒரு நல்ல வாழ்க்கைய அமைச்சுக்க பாரு ரஞ்சி கேட்பார் பேச்ச கேட்டு உன்னோட வாழ்க்கைய நாசமாக்கிக்காத, உன்னோட எதிர்கால வாழ்க்கைக்கு அது நல்லது இல்ல. நமக்கு எது கிடைக்கனும்னு இருக்கோ அது தான் கிடைக்கும் கிடைக்காதுன்னு தெரிஞ்ச பிறகு அதை அடைய நினைக்கிறது தப்புமா,

காதல் மென்மையானது அதுல உண்மையும் தூய்மையும் கள்ளமில்லாத அன்பும் தான் இருக்கணுமே தவிர பொய்யும் பிடிவாதமும் இருக்க கூடாது ஏற்கனவே அவனோட மனசை ரொம்ப காயப்படுத்திட்ட மேலும் மேலும் அவனுக்கு காயத்தை உண்டு பண்ண நினைக்காத. நந்து பாவம் வெளிய சொல்ல முடியாம அவனுக்குள்ளேயே எல்லாத்தையும் போட்டு தவிச்சுட்டு இருக்கான்என தன்மையாய் கூறியவனின் குரல் பிசிறு தட்டியது.

எது நல்லது கெட்டதுன்னு எனக்கு தெரியும் நீ ஒன்னும் சொல்ல வேணாம், இந்த அட்வைஸ் பண்ற வேலையெல்லாம் என்கிட்ட வச்சுக்காத அதெல்லாம் உன்னோடயே மூட்டை கட்டி வச்சுக்கோ ரிஷி. நீ என்ன பண்ணாலும் சரி என்னோட மனசை மாத்திக்க முடியாது எனக்கு அபி வேணும் அபி மட்டும் தான் வேணும். அவரு எனக்கு கிடைக்கணும்னா என்ன வேணும்னாலும் பண்ணுவேன் அந்த வருணா எப்டி அவரோட வாழ்க்கையில ரீ என்ட்ரி ஆகுறான்னு நானும் பாக்குறேன்என ஆத்திரத்தில் உறுமியவளின் முகம் சிவந்தது.

நேத்து வந்த ஒருத்திக்காக என்னால அவர விட்டு கொடுக்க முடியாது ரிஷிஉனக்கே தெரியும் அவர நா எந்த அளவுக்கு நேசிக்கிறேன்னு ஆசைய விதைச்சுவிட்டு அதை முளைக்க விடாம இடையிலேய வேற ஒருத்தி வந்து அறுவடை பண்ணிட்டு போவா நா போனா போகட்டும்னு வேடிக்கை பாத்துட்டு இருக்கணுமா

என்ன பத்தி உனக்கு நல்லாவே தெரியும் ஒரு விஷயத்தை அடைய நினைச்சிட்டா எந்த எல்லைக்கும் போவா இந்த ரஞ்சினி, நந்தன் எனக்கு கிடைக்கணும்னா என்ன வேணாலும் பண்ணுவேன்.நீ பண்றதை பண்ணு அபிய எப்டி என்னோட வழிக்கு கொண்டு வரணும்னு எனக்கு தெரியும்என்றாள் செருக்குடன்.

இல்ல ரஞ்சி ரொம்ப தப்பு நீ இப்டியெல்லாம் யோசிக்க கூடாது ஒரு காலத்துல எப்டி இருந்தவ அதை யோசிச்சு பாரு, மனசு என்னவேனாலும் சொல்லும் நமக்கு தான் தெரியும் எது சரி எது தப்புன்னு அவன் உன்ன விரும்பலை வருணாவ தான் விரும்புனான் விரும்பிட்டு இருக்கான், கல்யாணமாகி வேற ஒருத்திக்கு சொந்தமானவனை நினைக்கிறதே தப்பு உன்னோட எண்ணத்தை மாத்திக்கோ உனக்கு எப்டி பட்ட மாப்பிள்ளை வேணும்னு சொல்லு நா பாத்து முடிச்சு வைக்கிறேன்என சற்று தன் நிலையில் இருந்து அவளுக்கு புரிய வைக்கும் நோக்கில் தணிவாக பேச,

கைதட்டி அவுட்டு சிரிப்பு சிரித்தவள்பிரமாதம் ரிஷி நல்லா நடிக்கிற ஒன்னு பண்ணு ஆபிஸ் வேலைய விட்டுட்டு பேசாமா சினி ஃபீல்டுக்கு போயேன் உன்னோட நடிப்புக்கு சிறந்த அங்கிகாரம் கிடைக்கும்என கிண்டல் மொழி பேசியவள்,

எப்டி எப்டி அவர நா அவளுக்கு விட்டு கொடுக்கணுமா? அவ காதல விட என்னோட காதல் எந்த விதத்துல குறைஞ்சுருச்சு சொல்லு ரிஷி?, அழகு அறிவுன்னு அவளவிட எந்த விதத்தில நா குறைஞ்சு போயிட்டேன் அவர எந்த அளவுக்கு நேசிக்கிறேன்னு சொன்னா புரியாது எப்டியெல்லாம் அவரு கூட வாழணும்னு நினைச்சுட்டு இருக்கேன் தெரியுமா?” என்றாள் முன்பை விட அழுத்தமாக.

நீ விதண்டாவாதமா பேசுற முடிவெடுத்துட்டு பேசுறது வேற முடிவு எடுக்காமலே சரியா தப்பான்னு யோசிக்காம பேசுறது வேற, நீயா பேசலை உன்ன இந்த அளவுக்கு பேச வச்சிருக்காங்க இனி உன்கிட்ட பேசி புரிய வைக்க நினைக்கிறதுல எந்த பிரயோஜனமும் இல்ல நா பிடிச்ச முயலுக்கு மூணு காலுன்னு பிடிவாதமா நிக்கிற, ஆனா ஒன்னு மட்டும் தெரிஞ்சுக்கோ வருணா அபியோட சேர்ந்து வாழ போறது நிச்சயம்! உன்னோட கனவு பலிக்க போறது இல்ல அதை ஞாபகம் வச்சுக்கோஎன அழுத்தம் பொதிந்த குரலில் உரைத்தவன்,

அடுத்த வாரம் பணம் அனுப்புறேன்னு சொல்லிருக்கான் அதுவரைக்கும் பாத்து செலவு பண்ண சொல்லு உன்னோட கூட்டாளிகிட்ட, நா கிளம்புறேன் ஒரு அண்ணனா சொல்ல வேண்டியது என்னோட கடமை சொல்லிட்டேன் அப்றம் உன்னோட இஷ்டம்என கூறிவிட்டு வேகமாக சென்று விட,

பொத்தென சோபாவில் அமர்ந்தவள் ஆத்திரத்தில் நகங்களை துவம்சம் செய்ய தொடங்கினாள்.

ச்சே மழை மட்டும் குறுக்க வராம இருந்தா இன்னேரம் கேரளத்துல நிம்மதியா ட்ரிப் என்ஜாய் பண்ணிட்டு இருப்பேன் கடைசி நிமிஷத்துல ட்ரிப் கேன்சல் பண்ணி தேவையில்லாத பேச்சையெல்லாம் கேட்க வேண்டியதா இருக்கு எல்லாம் என்னோட நேரம்என புலம்பி தள்ளினாள் ரஞ்சனி.

தரிசனம் தொடரும்…. 

Advertisement