Advertisement

உன் மேலயோ இல்ல ரஞ்சனி, என்னோட சித்தி இவங்க மேலயெல்லாம் எனக்கு துளி கூட கோபம் இல்ல. நீங்க முணுபேரும் சொன்னிங்கன்னு உங்க வார்த்தைய நம்பி எங்க போறேன்னு கூட சொல்லாம என்ன விட்டு மொத்தமா போனாளே, அவ மேல தான் கோபம் வருத்தம் எல்லாமே.

நா திரும்பி வர்ற வரைக்கும் எனக்காக வெய்ட் பண்ணி என்கிட்ட கேட்டுட்டு அது உண்மையா இல்லையான்னு தெரிஞ்சுகிட்டு போயிருக்கலாம். இல்லையா எனக்கு கால் பண்ணி கேட்டுருக்கலாம்.

அவ்ளோ தான் அவ என்மேல வச்ச நம்பிக்கைஎன விரக்தியான புன்னகை சிந்தினான் அபிநந்தன்.

அவள பத்தி என்கிட்ட யார் என்ன சொல்லிருந்தாலும் துளி கூட நம்பியிருக்க மாட்டேன் ரிஷி. ஏன்னா, அவள நா காதலியா மனைவியா பார்த்ததை விட என்மேல அவகாட்டுன அக்கரையிலயும் பாசத்துலயும் கனிவுலயும் என்ன ஹேண்டில் பண்ண வித்துலயும் என்னோட அம்மாவ பாத்தேன்

ஒரு குழந்தைக்கு எது நல்லது கெட்டதுன்னு அம்மாவுக்கு தெரியும் அப்டி ஒரு உணர்வை கொடுத்தவ. மறுபடியும் எனக்கு அம்மாவோட அன்பு கிடைச்சுருச்சுன்னு ரொம்ப சந்தோஷபட்டேன். ஆனா!, எல்லாத்தையும் பொய்யாக்கிட்டு போய்ட்டா என்னோட சந்தோஷத்தை மொத்தமா கொண்டு போயிட்டா,

என்ன பத்தி கொஞ்சம் கூட கவலை படலை, அவ இல்லன்னா நா என்ன ஆவேன்னு கொஞ்சம் கூட யோசிக்காம மொத்தமா என்ன விட்டு போய்ட்டாஎன குரல் கமற பேசியவனின் கண்களில் கண்ணீர் துளிகள் துளிர்த்து கன்னத்தில் உறவாடியது.

நந்து சாரிடா உன்னோட வேதனைய என்னால புரிஞ்சுக்க முடியிது எல்லாம் என்னால தான், வருணாக்கு நா ரொம்ப பெரிய பாவம் பண்ணிட்டேன் மன்னிக்க முடியாத பாவம். ஆன்ட்டியும் ரஞ்சனியும் மட்டும் சொல்லிருந்தா வருணா நிச்சயம் நம்பியிருக்க மாட்டா, நானும் அவங்க கூட சேந்து உனக்கும் ரஞ்சனிக்கும் கல்யாணம் ஆகிருச்சுன்னு சொன்னதால தான் அவ வீட்ட விட்டு போயிட்டா எல்லாம் என்னால தாண்டா என்ன மன்னிச்சிறுஎன செய்த செயலை எண்ணி தலையில் அடித்து கொள்ள,அவன் செயலை தடுத்து நிறுத்தினான் நந்தன்.

பிரிஞ்ச உங்க ரெண்டுபேரையும் சேர்த்து வைக்கிறது என்னோட பொறுப்பு நா பண்ண பாவத்துக்கு பரிகாரம் இது தான், ஆன்ட்டியோட சுயரூபம் என்னன்னு தெரியாம அந்த மாதிரி சொல்லிட்டேன்.இனி ரஞ்சனிக்காக நா யோசிக்க போறதில்லை நந்து, உனக்காக யோசிக்க போறேன். என்னால முறிஞ்ச பந்தம் என்முலமாவே சேரட்டும் இப்போவே அதுக்குண்டான வேலைய பாக்குறேன் அவ எங்க இருக்கா என்ன பண்றான்னு தெரிஞ்சு உன்கிட்ட ஒப்படைகிறேன்என அறுதியிட்டு உரைத்தவனை அணைத்து கொண்டான் அபிநந்தன்.

அதை நா பாத்துகிறேன் நீ ஆபீஸ் வேலைய மட்டும் பாரு ரிஷி, மறுபடியும் அவ எனக்கு கிடைக்கணும்னு இருந்தா கண்டிப்பா என்கிட்ட வந்து சேருவா நீ கில்டியா ஃபீல் பண்ணாத வருணா நிச்சயம் என்னை தேடி வருவா, சரி டைம் ஆச்சு முக்கியமான மீட்டிங் இருக்கு நீ என்கூட வர்றயா இல்ல..”.

இல்லடா நீ ஆபிஸ் போ நா என்னோட கார்லயே வறேன் முக்கியமான ஒரு இடத்துக்கு போக வேண்டியது இருக்கு சோ நீ கிளம்பு நா பாக்க வேண்டியவங்கள பாத்துட்டு வறேன்என்றதும் சரியென்றவன் ரிஷியை வற்புறுத்தி காலை உணவை அவனுடன் சேர்ந்து முடித்துவிட்டு அலுவலகம் கிளம்பி சென்றான்.

அவன்  சென்ற வாகனத்தின் உருவம் தேய்ந்து மறையும் வரை பார்த்துக்கொண்டிருந்த ரிஷி, அவன் சென்ற திசைக்கு எதிர் திசையில் காரை செலுத்தினான்

அன்றைய தினம் ராகவனுக்கு விடுமுறை என்பதால் சற்று தாமதமாகவே எழுந்தவன்,   தினத்தந்தியில் பார்வையை பதித்து நிதானமாக விளம்பரங்கள் அடங்கிய பக்கத்தையும் விடாது நாளிதழில் அடங்கிய செய்திகளை வாசித்து கொண்டிருந்தான்.

அண்ணா இன்னைக்கு உனக்கு ஆபீஸ் லீவ் தானே என்னோட வண்டி பஞ்சர் சோ என்னையும் பாப்பாவையும் ஸ்கூல்ல ட்ராப் பண்றயா?” என கேட்டவாறே அறையில் இருந்து கைப்பையுடன் வெளிப்பட்டாள் வருணா.

செய்தி தாளில் இருந்து பார்வையை விலக்கியவன்ம்ம் சரி வரு நானே டிராப் பண்றேன் ரெண்டுபேரும் ரெடியா இருங்க சாப்டுட்டு கிளம்பலாம், உன்னோட வண்டிய பஞ்சர் ஷாப்ல விட்டுட்டு வந்துடுறேன்என்றவன், “வருணா உன்கிட்ட ஒரு விஷயம் பேசணும்“. 

சொல்லுண்ணா“. 

திருச்சியில என்னோட பிரெண்ட் ஸ்ரீதருக்கு மேரேஜ் என்னால அட்டன் பண்ண முடியாது சோ எனக்காக நீ போயிட்டு வரணும்என கெஞ்சுதலாய் கேட்க,

ம்ஹும் என்னால முடியாது அது நாகரிகமா இருக்காது ராகவா உன்னோட பிரெண்ட் கல்யாணத்துக்கு நீ தான் போகணும் நா எப்டி போக முடியும் அங்க எனக்கு யாரையும் தெரியாதுஎன்றாள் மறுப்பாக தலையசைத்து.

ப்ளீஸ் வரு என்னால முடியாதுன்னு தானே உன்ன போக சொல்றேன் முக்கியமான ப்ராஜெக்ட் விஷயமா வெளியூர் போக வேண்டி இருக்கு நீயும் பாப்பாவும் போயிட்டு வாங்கஎன்றதும் தான் தாமதம்.

எங்க மாமா போதோம்என அறையில் இருந்து வேகமாக வந்தவள் ராகவனின் கைபிடித்து இழுத்தாள் சுபர்ணா

வெளியே நடந்த சம்பாஷனைகளை ஒன்றுவிடாமல் கூர்மையாக செவிகளை தீட்டி வைத்து கேட்டு கொண்டிருந்தவள், ‘திருச்சி பயணம் பாப்பாவை அழைத்து போஎன்ற வரிகளில் கால்களுக்கு வேகம் கொடுத்து துள்ளலுடன் வெளிய வந்து கேட்க,மகளை முறைத்து பார்த்தாள் வருணா.

திருச்சிக்குடா குட்டிஎன ராகவன் கொஞ்சல் மொழியில் பதில் பேச,

அம்மாச்சி அதிக்கதி சொல்லுமே அந்த ஊதா?” என விழிகள் விரித்து கேட்டாள் மழலை.

ஆமாண்டா அந்த ஊர் தான் நல்லா இருக்கும் நீயும் அம்மாவும் போயிட்டு ஜாலியா திருச்சியை சுத்தி பாத்துட்டு வாங்க இன்னைக்கு ஸ்கூல்ல மாமாவே லீவ் சொல்லிடுறேன்என்றவன் சுபர்ணாவின் மூக்கை பிடித்து ஆட்டி தூக்கி கொண்டான்.

என்னால திருச்சிக்கு போக முடியாது ப்ளீஸ் ராகவா புரிஞ்சுக்கோ. ரவி சார் ஊருக்கு போயிருக்காறு அவரோட கிளாஸ் பசங்களுக்கும் நான் தான் டீச் பண்ணனும்என்றாள் சங்கடம் நிறைந்த குரலில்.

வருணா மேரேஜ் சண்டே தான் டென்ஷன் ஆகாதா ஒரு நாள் எக்ஸ்டரா லீவ் எடுத்தா ஒன்னும் ஆகாது உன்னோட பிரின்சிபில் கிட்ட நான் பேசுறேன்“. 

அதுக்கில்லை ராகவா..” என அவன் கூற்றை ஏற்கமுடியாமல் வருணா இழுக்க,

ஏய் அவன் தான் இவ்ளோ தூரம் சொல்றானே போயிட்டு தான் வாயேன்டி திருச்சி என்ன உனக்கு புதுசா? பிள்ளைய கூட்டிட்டு போயிட்டு சுத்தி பாத்துட்டு வருவியாஎன சாரதா தன் பங்கிற்கு அவளை வற்புறுத்தினார்.

இருவரும் சேர்ந்து முடிவெடுத்த பின் அதை மறுதலிக்க முடியுமா?’ என எண்ணியவள்

என்னமோ பண்ணுங்கஎன முடிவை அவனிடம் ஒப்படைத்து விட,

அம்மா நீங்களும் வருணா கூட போயிட்டு வாங்க நா வர்ற வரைக்கும் இங்க தனியா இருந்து என்ன பண்ண போறீங்க திருச்சிக்கு போகணும்னு சொன்னிங்களே உங்க தோஸ்த் எல்லாரையும் மீட் பண்ணி பேசிட்டு வாங்கஎன்றவன்,

சுபர்ணா குட்டி சீக்கிரம் கிளம்புங்க மாமா அம்மா வண்டிய ஒர்க் ஷாப்ல விட்டுட்டு வறேன்என அவளை கீழே இறக்கி விட,

சரி மாமாஎன்றவள் ராகவனின் கன்னத்தில் முத்தமிட்டு துள்ளி குதித்தபடி சென்றாள் சுபர்ணா.

ஆள் நடமாட்டம் அதிகமில்லாத   குடியிருப்பு பகுதிக்குள் காரை செலுத்தினான் ரிஷி. தெருவின் உள்ளே நுழையும் போதே மனதில் ஒருவித இறுக்கம் கலந்த உணர்வு படர தொடங்க முகம் அதை நகலெடுத்து காட்டியது. அந்த பகுதியிலேயே பெரிய வீடு அது தான்.வீட்டின் முன் காரை நிறுத்தியவன் ஹாரன் அடிக்க, எந்த வித பதிலும் இல்லை.

காரைவிட்டு இறங்கி சென்று கேட்டை திறக்க முயன்றவன் மிளகு கொடியும் வெற்றிலை கொடியும் பின்னி பிணைந்து நுழைவாயில் கதவை பக்கபலமாய் பற்றி கொண்டு துளிர்விட்டிருந்ததை கண்டு மெல்ல கதவில் இருந்து விலக்கி சுற்று சுவரின் மீது படரவிட்டு கதவை திறந்து உள்ளே சென்றான் ரிஷி

அழைப்பு மணியை இருமுறை இடைவிடாது அழுத்த, வேகமாக வந்து கதவை திறந்தாள் ரஞ்சனி.

 

பரிமளம் என எண்ணி கதவை திறந்தவளுக்கு வந்தவனை கண்டதும் முகத்தில் அத்தனை வெறுப்பு. பட்டென முகத்தை திருப்பி கொண்டு செல்ல முயல,

 “ஒரு நிமிஷம்என நிறுத்தியவன்,

உன்னகிட்ட பேசணும்னு தான் இங்க வந்துருக்கேன் உள்ள வான்னு கூப்பிட்டா என்ன குறைஞ்சா போயிடுவ“.

என்ன பொறுத்த வரைக்கும் நீ வேண்டாத விருந்தாளி உன்ன வான்னு கூப்பிட்டா என்ன கூப்பிடலைன்னா என்னஎன எடுத்தெறிந்து பேசியவளை இயலாமையுடன் பார்த்தான் ரிஷி.

ம்ஹும் அது சரி மரியாதை தெரிஞ்ச பொண்ணா இருந்தா அதெல்லாம் நா சொல்லாமலே உனக்கு தெரியும், அதெல்லாம் எங்க கிடைக்கும் என்ன விலைன்னு கேக்குற உன்கிட்ட எதிர்பாக்குறது என்னோட தப்பு தான். நா வேண்டாத விருந்தாளியாவே இருந்துட்டு போறேன்என எள்ளல் தொனிக்க பேசியவன்,

உன்கிட்ட கொஞ்சம் பேசணும் உள்ள போய் பேசலாமா.. இல்ல வெளிய நின்னே பேசலாமா?” என கேட்க,

எதிரியா இருந்தாலும் வந்தவங்கள வெளிய நிக்க வச்சு பேசுற பழக்கம் எனக்கு இல்ல, உன் அளவுக்கு மரியாதை தெரியலன்னாலும் ஏதோ எனக்கும் கொஞ்சம் தெரியும்என பார்வையில் பரிகாசம் நிறைத்து பேசியவள்உள்ள வாஎன்றாள் ரஞ்சனி.

Advertisement