Advertisement

இதுல என்ன சார் இருக்கு நா பாத்துகிறேன். உங்க வீடு நீங்க திரும்பி வர வரைக்கும் பத்திரமா இருக்கும் கவலை படாம போய்ட்டு வாங்க எத்தனை நாள் ஆனாலும் பரவாயில்ல அம்மா உடம்பு தேறினதும் வந்தா போதும் எல்லாத்தையும் நா மேனேஜ் பண்ணிக்கிறேன்“.

தாங்க்ஸ் வருணா நா கிளம்புறேன்என ரவி விடைபெற்று கிளம்பிட,

நடைபயில வந்த ஒரு சிலர் இருவரும் பேசிக்கொண்டதை பார்த்து கிசுகிசுத்து கொண்டே கடந்து சென்றனர்

ஒரு நாள் இரு நாள் என்றால் குறுகுறுப்பும் கூச்சமும் நிறைந்திருக்கும், இங்கு வந்ததில் இருந்து தான் செல்லும் போதெல்லாம் பார்க்கும் பழகிய பார்வை தானே!’ என நிந்தனையாய் எண்ணியவளின் இதழ் மெல்லிய சிரிப்பில் வளைந்தது

அதேவேளை பொழுதும் நன்றாக புலற தொடங்கியிருக்க, அன்றைய நாளில் இதுவும் ஒரு அனுபவம் என எண்ணமிட்டபிடியே இல்லம் சென்றாள் வருணா.

அழுது மரத்து போன விழிகளுக்கு சற்று நேரம் அமைதி கிட்டிட கிடைத்த சந்தர்ப்பத்தில் ஆழ்ந்த நித்திரைக்கு சென்று எப்போதும் எழும் வேளையில் மீண்டும் விழித்து கொண்டன நந்தனின் விழிகள்கண்களை திறந்து மூடியவன் இரவு அருகில் உறங்கியவனை தேடினான்.

இவ்ளோ காலையில எங்க போனான் ஏழு மணி ஆனாலும் எருமை மாடு மாதிரி தூங்கிட்டு இருப்பான் இன்னைக்கு எனக்கு முன்ன எந்திரிச்சுட்டானா?” என அதிசயமும் ஆச்சர்யமும் இழையோட, முணுமுணுத்தபடி எழுந்து வெளியே வந்தவன்முத்து ண்ணா!” என அழைக்க,

கூப்பிட்ட குரலுக்கு வேக நடையில் கையில் காஃபி டம்ளருடன் வந்தவர்இந்தாங்க தம்பிஎன நீட்டினார் முத்து

அவரை மெச்சுதலாய் பார்த்தவன் டம்ளரை தன் கரத்திற்கு மாற்றி கொண்டுரிஷி எங்க ண்ணா ரூம்ல பாத்தேன் காணோம் வெளிய இருக்கானா?” என கேட்டபடி மிடறாக குளம்பியை உறிஞ்ச,

இல்ல தம்பி அந்த தம்பி காலையில சீக்கிரமே கிளம்பி போயிட்டாங்க. நா எந்திரிச்ச போது வாசல் கதவு திறந்திருந்தது வெளிய கார் சத்தமும் கேட்டுச்சு என்னனு போய் பாக்குறதுக்குள்ள விருட்டுன்னு காரை கிளப்பிட்டு போயிட்டாங்கஎன சொல்லி முடிக்க

விழியில் திகைப்பை காட்டியவன் உறிஞ்சிய குளம்பி உமிழ்நீருடன் கலந்ததை உணர்ந்து கடினப்பட்டு தொண்டையில் இறக்கினான் அபிநந்தன்.

போயிட்டானா?”, நந்தனிடத்தில் மெலிதாய் அதிர்வு உண்டானது. ஆனால் எதையும் காட்டி கொள்ளவில்லை.

சரி ண்ணா நா அவன்கிட்ட பேசிக்கிறேன் நீங்க போங்கஎன்றவன்எப்பவும் போல காஃபி சூப்பர்என்று பாராட்டிவிட்டு, அறைக்கு சென்று குழப்பம் தாங்கிய முகத்துடன் ரிஷியின் எண்ணிற்கு தொடர்பு கொண்டான்.

மறுமுனையில் அழைப்பு முழுதும் சென்று நின்று போகநேத்து நைட்டு நல்லா தானே இருந்தான் என்னவா இருக்கும் எதுவும் சொல்லாம கிளம்பி போற அளவுக்கு அப்டி என்ன அவசர வேலை?” என காரணம் தெரியாமல் குழப்பங்கள் புடை சூழ

பாத்துட்டு அவனே கூப்பிடட்டும் போன் மேல போன் போட்டு தேவையில்லாம தொந்தரவு பண்ண கூடாதுஎன அடுத்த நொடியே குழப்பத்திற்கெல்லாம் முற்று புள்ளி வைத்து விட்டு பூந்துவலையை எடுத்து கொண்டு குளியலறை நோக்கி அடியெடுத்து வைத்தான்.

சற்று நேரத்தில் குளியலை முடித்து கொண்டு வெளியே வந்தவன் அலுவலகம் செல்ல தயராகி அறையில் இருந்து வெளியே வர பால்கனியில் அமர்ந்திருந்தான் ரிஷி.

அன்றைய தினதந்தியை புரட்டி கொண்டிருந்தவனின் பார்வை தான், செய்தி தாளில் பதிந்திருந்ததே தவிர கவனம் வேறு எங்கோ எதை பற்றியோ அசைபோட்டு கொண்டிருந்தது.

என்னடா நேரா ஆபிஸ் போகாம இங்க வந்துருக்க, காலையில சொல்லாம கிளம்பி போயிட்ட என்னடா ஏதாவது முக்கியமான வேலையா?” என அருகில் சென்றவன் தோளில் கரம் வைத்து கவனத்தை தன் புறம் திருப்பினான்.

நந்தனின் வருகை உணர்ந்து எழுந்து கொண்டவன்ப்ச் இல்ல நந்துஎன்றான் குரலிலும் முகத்திலும் சுணக்கம் கலந்து சுரத்தில்லாமல்.

உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் அது.. எப்டி சொல்றதுன்னு தான் தெரியலைஎன தயக்கத்துடன் தொடங்க,

நீ என்ன சொல்ல போறன்னு எனக்கு தெரியும் அவங்களுக்கு பணம் வேணும்னு உன்ன தூது அனுப்பிருக்காங்க அதை எப்டி சொல்றதுன்னு தெரியாம முழிக்கிற அதானேஎன கேட்டவனின் பார்வையில் மட்டுமல்ல குரலிலும் பரிகாசம் தொனித்தது.

அதில்லை நந்து இது வேற ஒரு விஷயம். அவங்க எப்டி போனா எனக்கு என்ன?” என அலட்சியமாக உரைத்தவன்,

நந்தனின் கரம் பற்றி தொண்டையில் சிக்கி கொண்ட முள்ளை போல வார்த்தைகளை பிரயோக்கி முடியாமல் தவித்தான்.

என்னடா சொல்லு?”என நந்தன் ஊக்க,

நா சொல்ல போறத கேட்டு நீ என்மேல கோபப்படலாம் ஏன் அடிக்க கூட செய்யலாம். ஆனா.. என்னால நிம்மதியா தூங்க முடியலடா தினமும் உன்கிட்ட சொல்ல சொல்லி என்னோட மனசாட்சி கொல்லுதுஉனக்கு துரோகம் பண்ணிட்டு எப்டி நிம்மதியா இருக்குறேன்னு கேள்வி கேக்குது! என்னோட மனசாட்சி கேக்குற கேள்விக்கு பதில் சொல்ல முடியலை நந்து. கடவுள்கிட்ட இருந்து கூட தப்பிச்சிறலாம் ஆனா மனசாட்சிக்கிட்ட இருந்து தப்பிக்க முடியாதுடா.

இதுவரைக்கும் சொல்லாம இருந்தது தப்பு தான், ஆனா இனிமேலும் சொல்லாம என்னால இருக்க முடியலை எல்லாத்தையும் சொல்லிறலாம்னு ஒரு முடிவோட தான் வந்துருக்கேன் நேத்து நைட்டு நீ பேசுனதை கேட்டேன் நந்துஎன்றவனின் முகம் வேதனையில் துவண்டு போனது.

ரிஷியின் வருத்தம் எதனால் உண்டானது என விளங்கி போக, ‘எப்போதோ தெரிந்த விஷயம் இப்போது அதை பற்றி பேசி அவனை மேலும் குற்றவுணர்ச்சியில் தள்ள வேண்டாம்என நினைத்தவன் அவன் மனநிலையை இயல்பாக்க வேண்டி

டேய் என்னாச்சு உனக்கு, காலங்காத்தால இப்டி வந்து புலம்பிட்டு இருக்க நேத்து நைட்டு நா என்ன பேசினேன் தூக்கம் வரலைன்னு கதை தானே படிச்சிட்டு இருந்தேன். கதையில எமோஷ்னல் சீன் வந்தது டையலாக்க சரியா வெளிப்படுத்தினா தான் நல்லா இருக்கும் அதான் கொஞ்சம் உணர்வு பூர்வமா வாசிச்சேன் அதை போய் தப்பா புரிச்சுக்கிட்டு பேசுற உனக்கு காது ரெண்டும் அவுட்டாயிருச்சு முதல நல்ல இஎன்டி டாக்டரா போய் பாருஎன கேலியாக பேசியவன்உடம்புக்கு எதுவும் இல்லையேஎன வேகமாக அவன் நெற்றியை தொட்டு பார்த்தான்.

கண்களில் நீர் கசியசாரிடா நந்துஎன்று ரிஷி அணைத்து கொள்ள,

அவன் மனநிலை உணர்ந்து கனிவாய் பேச தொடங்கினான்.

டேய் நீ ஏதோ தேவையில்லாத விஷயத்தை நினைச்சு ஃபீல் பண்ற அதை விட்டு வெளிய வா எப்பவும் போல நார்மலா இருடா“. 

என்ன மன்னிச்சிரு நந்து உன்னோட வாழ்க்கைய நானே பாழாக்கிட்டேன் என்னால தான் உனக்கு இந்த நிலைமை சந்தோஷமா வாழ வேண்டிய நீ இன்னைக்கு அதை இழந்துட்டு பேருக்கு ஒரு வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்க. உன்னோட இந்த நிலைமைக்கு நான் தாண்டா காரணம்என்றவனின் உடல் அழுகையில் குலுங்கியது.

ரிஷி! அழுகுறியா? டேய் இங்க பாரு என்னாச்சு உனக்குஎன திகைப்பு மேலோங்க  விலக்கி நிறுத்தியவன்என்னடா“.

எப்டி சொல்லறதுன்னு தெரியல உன்னோட பிரெண்டா இருக்குற தகுதி எனக்கு இல்லடா என்ன மன்னிச்சிறு நந்து. உண்மை தெரிஞ்ச பிறகு இந்த பாவிய மன்னிச்சு உன்னோட நண்பனா எப்பவும் போல பழகுடா ஒதுக்கி வச்சுறாதா என்னால தாங்கிக்க முடியாது?”என யாசகம் நிறைந்த குரலில் வேதனை ததும்ப கேட்டான் ரிஷி.

ப்ச் லூசு நீ எப்பவுமே என்னோட பிரெண்ட் தான் அதுல என்ன சந்தேகம் உனக்கு என்ன சொன்னாலும் சரி நீ தான் என்னோட பெஸ்ட் பிரெண்ட் பைத்தியம் மாதிரி எதையாவது உளறிட்டு இருக்காதாஎன கண்டிப்பு கலந்த குரலில் சமாதானம் செய்தவன்,

எனக்கு ஆபிசுக்கு டைம் ஆச்சு எது சொல்றதா இருந்தாலும் சீக்கிரம் சொல்லுடாஎன அவசரப்படுத்தினான்.

தயக்கத்துடன் மெல்லிய குரலில்உன்னோட இந்த வாழ்க்கைக்கு நானும் ஒரு விதத்துல காரணம் தான் நந்து. என்னோட பங்களிப்பு தான் இதுல அதிகம்என்றவனை அசராது பார்த்தான் நந்தன்.

இதழில் சலனமில்லா புன்னகை படரஎனக்கு எல்லாமே தெரியும் ரிஷிஎன உணர்ச்சியற்று கூறியவன்,

அவ்ளோ தானே இப்போ கிளம்பலாமா?” என கேட்டு விறுவிறுவென படியிறங்கி செல்ல,

என்ன தெரியுமா?” என திகைப்பை காட்டியவனின் வாய் தானாக முணுமுணுக்க, அதிர்ச்சியின் பிடியில் சிக்கி மீள முடியாமல் உறைந்து போய் நின்றிருந்தான் ரிஷி.

நந்தனுக்கு விஷயம் தெரியும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை அவன்.அதன் தாக்கத்தை நொடியில் சமாளித்து கொண்டவன் விறுவிறுவென படிகளில் இறங்கி அவன் முன்னால் சென்று நின்று மூச்சு வாங்கியபடி,

உனக்கு தெரியுமா? ஏன் என்கிட்ட முன்னாடியே அந்த விஷயத்தை பத்தி கேக்கலை. இப்டி ஒரு விஷயம் உனக்கு தெரிஞ்ச மாதிரி நீ காட்டிக்கவே இல்லையே ஏண்டா?. யார் சொன்னாங்கஉனக்கு எப்டி தெரியும்? விஷயம் தெரிஞ்ச பிறகும் என்மேல உனக்கு கோபம் வரலையா?” என அவன் தோள்களை பற்றி உலுக்கியவன், வேதனையில் பற்றி எறிந்த மனதை அணைக்க முடியமால் அடுக்கடுக்காய் கேள்விகளை தொடுத்தான்.

அவன் கேள்விகளுக்கெல்லாம் ஒற்றை புன்னகையை பதிலாய் உதிர்த்தவன்எனக்கு உன்மேல கோபம் வரல ரிஷி. பாவம் நீ என்ன பண்ணுவ, உன்னோட தங்கச்சி வாழ்க்கை நல்லா இருக்கணும்னு தானே அந்த மாதிரி பண்ண அவளோட பிடிவாதம் உன்ன அந்த மாதிரியான சூழ்நிலையில தள்ளிடுச்சு, உன்னோட இடத்துல நா இருந்திருந்தாலும் சுயநலமா தான்டா யோசிச்சிருப்பேன்என நிதானமாக பேசினான்.

Advertisement