Advertisement

இருள் இன்னமும் தெளியமால் தான் இருந்தது. வழக்கத்தைவிட சீக்கிரமே எழுந்து கொண்டாள் வருணா. இரவு உறங்க தமதமானதாலோ என்னவோ எழும்போதே இருபக்கமும் தலை விண்விண்னென்று தெறிக்க,

அய்யோ இந்த தலைவலி வேற உயிரை வாங்குது காலையிலேயே ஆரம்பிச்சிருச்சு ச்சேஎன கையால் தலையை தாங்கி பிடித்தவள் வலியை அடக்கி கொண்டு, அயர்வோடு எழுந்து குளியலறை சென்று, முகம் கழுவிட்டு முகத்தை துடைத்து கொண்டே சமையலறைக்குள் நுழைந்தாள்.

அவள் வரவை அறிந்தே பால் காய்ச்சிய பத்திரத்தை மீண்டும் அடுப்பில் வைத்து சூடு படுத்த தொடங்கினார் சாரதா.

அம்மா ஒரு காஃபி கிடைக்குமா ரொம்ப தலைவலிக்குதுஎன்றவாறே வருணா திண்டில் ஏறி அமர்ந்து கொள்ள,

ஏய் என்னடி பண்ற? இன்னும் சின்ன பொண்ணுன்னு நினைப்பா இறங்கு கீழ“.

ப்ச் போங்கம்மா எப்ப பாரு ஏதாவது சொல்லிகிட்டே இருக்குறது. சின்ன பிள்ளையா இருந்தா தான் ஏறி உக்காரணுமா என்ன?, நா பெரிய பொண்ணா வளர்ந்திருந்தாலும் உங்களுக்கு எப்பவுமே சின்ன பொண்ணு தான் அதனால அதட்டாம பக்குவமா சொல்லுங்கஎன  கூறியவள் சாரதாவின் தோளில் தலை சாய்த்து கொண்டாள்.

தலைவலியை இமை மூடி அடக்கியவளின் செய்கையை பார்த்த சாரதா அவள் முகத்தில் தெரிந்த வலியின் உணர்வை கண்டு கனிவு பிறக்க, வருணாவின் தலையை பரிவாக தடவி கொடுத்தவாறே,

இன்னும் கொஞ்ச நேரம் தூங்க வேண்டியது தானே ஏன் இவ்ளோ சீக்கிரத்துல எந்திருச்ச, மணி அஞ்சு தானே ஆகுதுஎன்றார் தன்மையான குரலில்

சாரதா கூறிய பின்னரே கடிகாரத்தை பார்த்தாள் வருணா, ஐந்தை கடந்து ஐந்து நிமிட பயணத்தை தொடங்கியிருந்தது பெரிய முள்.

அஞ்சு தான் ஆகுதா!”, ஏமாற்றத்தின் சாயல் முகத்தில் படர,

ப்ச் இனி தூக்கம் வராதும்மா  நீங்க காஃபி கொடுங்க தலைவலி உயிர் போகுதுஎன்றாள் வருணா தலையை அழுத்தி பிடித்தபடி.

டம்ளரை அவளிடம் நீட்டியவர் அப்போது தான் கவனித்தார் மகளின் முகத்தை. ‘சிவந்திருந்த கண்கள் கண்களை சுற்றி கருவளையம் சற்று வீங்கிய முகம் ஜீவன் இல்லாத விழிகள், அடங்கி, பின் அலைபாய்ந்து இலக்கற்று வெறிக்கும் பார்வைஎன அவள் வதனத்தில் ஆராய்ச்சியை மேற்கொண்டவர், இன்னதென்று  யூகிக்க முடியாமல் அவளிடமே கேட்டார்.

சில நாட்களாகவே வருணா சரியாக உறங்கவில்லை என்பது அவர் அறிந்து மறைத்து கொண்ட விஷயம். என்ன ஏது என கேட்டால் ஏதாவதொரு காரணத்தை கூறி மலுப்பிவிடுவாள் அல்லது பேச்சை துண்டிப்பது போல வெடுக்கென பேசிவிடுவாள், அதற்காகவே சாரதா இதுவரை வருணாவிடம் எதுவும் கேட்டு கொள்ளவில்லை இன்று மனம் தாளாமல் மனதில் உள்ளதை கேட்டுவிட்டார்.

என்னம்மா முகமெல்லாம் வீங்கி இருக்கு உடம்பு எதுவும் பண்ணுதா டாக்டர்கிட்ட போலாமா, கொஞ்ச நாளா நானும் கவனிச்சிட்டு தான் இருக்கேன் சரியா தூங்குறதே இல்ல போல. என்னாச்சு ஸ்கூல்ல ஒர்க் பிரஷர் ஜாஸ்தியா இருக்கா? இல்ல வேற ஏதாவது பிரச்சனையா?” என கேட்டு அவள் முகம் பார்க்க,

எனக்கென்னம்மா பிரச்சனை இருக்க போகுது நீங்களா ஏதாவது கற்பனை பண்ணிக்காதீங்க ஸ்கூல் ஒர்க் முடிச்சிட்டு படுக்க கொஞ்சம் டைம் ஆகிடும். அதுவுமில்லாம நேத்து நைட்டு ஆரம்பிச்ச  தலைவலி இப்ப வரைக்கும் விட்டபாடில்லை உயிர் போகுது வேற ஒன்னுமில்ல ம்மாஎன்றவளின் இதழில் வலிய வந்து ஒட்டி கொண்டது புன்னகை.

பெற்றவளுக்கு தெரியாத பிள்ளையின் மனம் என்னவென்றுஎத்தனை நாளைக்கு தான் இந்த நாடகம்னு நானும் பாக்குறேன் அப்படி என்னடி பிடிவாதம் மனசுல இருக்கிறதை பெத்தவகிட்ட சொல்ல கூடாதுன்னு. இருக்கட்டும் நா கும்பிடுற சாமி உண்மை என்னனு தெரியவைக்காமல போயிரும், கட்டுனவன எத்தனை நாளைக்கு தான் மனசோடவே மறைச்சு வச்சிருப்பன்னு பாக்குறேன்என மனதோடு மருகினார் சாரதா.

அவளை பற்றிய கவலை தான் சாரதாவின் மனதில் பெரும் பாராங்கல்லின் கணமாய் அழுத்தி கொண்டிருந்தது.

சரிம்மா நா கொஞ்ச நேரம் அப்டியே நடந்துட்டு வறேன் வெளிய போனா நல்லா இருக்கும்னு தோணுது ரொம்ப நாள் ஆகுது விடிய காலையில  வாக்கிங் போய்என டம்ளரை சாரதாவின் கையில் திணித்து விட்டு, திண்டில் இருந்து துள்ளி இறங்கியவள் சாரதாவின் கன்னம் தட்டி விட்டு சென்றாள்.

அவள் செல்வதை பார்த்து பெருமூச்சை சொறிந்த சாரதா மகளை பற்றிய கவலையை எப்போதும் போல ஒதுக்கிவிட்டு அன்றாட வேலையில் கவனத்தை செலுத்த தொடங்கினார்.

இதமான வாடை காற்று உடலை வருடி செல்ல, மனதை நிறைத்து அழுத்தி அமிழ்த்தி கொண்டிருந்த பாரம் அத்தனையும் நீங்கி விட்டதை போன்ற உணர்வு எழுந்தது. பரபரவென சூடுபரக்க கைகளை தேய்த்து கன்னத்தில் வைத்து கொண்டு வானத்தை பார்த்தாள் வருணா.

இருள் கவ்விய ஆகாயத்தில் தங்க தாரகைகள் மின்னி மிளிர்ந்து கொண்டிருந்தன.

கிழக்கில் வெள்ளி பூத்திருக்க அந்நட்சத்திரத்தின் அருகே அமாவாசை முடிந்து மூன்றாம் நாள் பிறை நிலவு அழகாய் இடம் பிடித்திருந்தது. அதை கண்டு அவளையும் அறியாமல் புன்னகை துளிர்விட,

எத்தனை பரந்த வானம்! எந்த வித துக்கம் துயரம் வேதனை வலி என்ற உணர்வுகள் ஏதும் இல்லாமல் அமைதியாய் கிடக்கிறதே, தனக்கு மட்டும் சிறகுகள் இருந்தால் சுதந்திரமாக வானத்தில் எத்தனை ஆனந்தமாய் பறக்கலாம்என இயலாத விஷயத்தின் மீது ஆசை உண்டாகி, மனதில் அசைபோட்டு கொண்டிருக்க

என்ன வருணா இவ்ளவு சீக்கிரம் எந்திரிச்சுட்டீங்கஎன்ற குரல் கேட்டு திடுக்கிட்டு திருப்பி பார்த்தாள் வருணா.

சிறு புன்னகையை தாங்கி கொண்டு நின்றிருந்தான் ரவி. அந்த நேரத்தில் அவனை எதிர்பார்க்காதவள்

ஹப்பா நீங்க தானா பயந்திட்டேன் சார்என நெஞ்சை பிடித்து கொண்டு கூற,சிறு புன்னகை அளவாய் விரிந்தது அவனிடத்தில்.

தூக்கம் வரலை சார் அதான் கொஞ்ச நேரம் காத்தாட நடக்கலாமேன்னு வந்தேன்நீங்க என்ன இந்த நேரத்துல அதுவும் கையில பேக்கோட, எங்க கிளம்பிட்டீங்கஎன புருவம் உயர்த்தி எப்போதும் போல மிக இயல்பாக பேசியவளை வியப்பு மேலோங்க பார்த்தான் ரவி.

எப்படி இவளால் சாதாரணமாக பேச முடிகிறது நேற்று இரவு நடந்த எதுவும் இவளை சிறிதும் பாதிக்கவில்லையா? அல்லது நான் பேசிய அனைத்தையும் மறந்துவிட்டளா இல்லை அதை  ஒரு பொருட்டாக  மதிக்கவில்லையா?..’ 

சிந்தனைகள் தடையின்றி நீள

பதில் கிடைக்கும் முன்பே சிந்தனையை கலைத்தால் வருணா.

என்ன சார் அப்டியென்ன தீவிரமா யோசனை பண்ணிட்டு இருக்கீங்க அதுவும் என்னோட முகத்தை பாத்துஎன அவன் முன் சொடுகிட்டு கேட்க,

ஒன்னுமில்ல வருணாஎன மறுப்பாக தலை அசைத்தான் ரவி.

நா ஊருக்கு கிளம்புறேன் சார்கிட்ட லீவ் சொல்லிட்டேன் எப்ப வருவேன்னு சொல்ல முடியாதுஎன்றதும் வருணாவின் முகம் வாட்டம் பெற்றது.

தன்னால் தான் இந்த முடிவா என்றெண்ணியவளுக்கு சங்கடம் உண்டாகசாரி சார் நேத்து நா கொஞ்சம் ஓவராவே பேசிட்டேன் நீங்க ஊருக்கு போறதுக்கு காரணம் அது தான்னாவெரி வெரி சாரிதிடீர்னு நீங்க அந்த மாதிரி ஒரு எண்னம் இருக்குறதா சொன்னதும் என்னால ஏத்துக்க முடியலை,

 இப்பன்னு இல்ல எப்பவும் என்னோட முடிவுல எந்த மாற்றமும் இருக்காது ஒரே ஒரு காதல் ஒரே ஒரு முறை கல்யாணம் இந்த வாழ்க்கைக்கு போதும்என்றாள் வாழ்வின் பூரணத்தை அறிந்து அதை அனுபவித்தவளாய்.

எதிர்பாராத ஏமாற்றமும் அதனால் உண்டான வலியின் சாயல் முகத்தில் பிரதிபலிக்க, சிறு புன்னகை சிந்தியவன்,

இல்ல வருணா, பிடிச்சது எல்லாம் நமக்கு சொந்தமாகணும்னு நினைக்கிறது முட்டாள் தனம். நீங்க சரியா தான் இருந்திருகீங்க, நான் தான் தப்பா அர்த்தம் கண்டுபிடிச்சு வீணா ஆசையா வளத்துகிட்டு, இப்போ கஷ்டத்தை அனுபவிக்கிறேன். சட்டுன்னு உங்கள மறக்க முடியுமான்னு தெரியலை ஆனா…” என கடைசி வரியில் கணத்த குரலில் இழுத்து, சொல்ல வந்த வார்த்தையை சொல்ல முடியமால் நிறுத்தி கொண்டான் ரவி.

அவன் நிலையை காண பாவமாக தான் இருந்தது வருணாவிற்குபாவம் பார்த்தால் பாசம் வந்துவிடுமா என்ன? அவன் துன்பபடுவதற்கு நானா காரணம்? அனுமதியில்லாமல் வளர்த்து கொண்ட ஆசை உண்மை என்னவென தெரிந்ததும் வலுவிழந்து போனது. அவன் நிலைக்கு அவன் தான் காரணம்‘, உள்ளே எழுந்த வார்த்தைகளில் சற்று திடுகிட்டு தான் போனாள் வருணா.

ஒருவரின் வலியை பரிகாசம் செய்ய கூடாதுஎன தனக்கு தானே எண்ணத்தின் வாயிலாக சொல்லி கொண்டாள்.

ஈரம் படர்ந்த விழிகளை துடைத்து கொண்டவன்அம்மாவுக்கு உடம்பு முடியல அதான் கிளம்புறேன்“.

 

அச்சோ என்ன சார் ஆச்சு எதுவும் பிரச்சனை இல்லையேஎன பதட்டம் நிறைந்து வருணா கேட்க,

தெரியலை அங்க போனா தான் அம்மாவோட ஹெல்த் கன்டிஷன் என்னன்னு தெரியும் இப்போ தான் வீட்டுல இருந்து கால் பண்ணி சொன்னாங்க அதான் கிளம்புறேன்என்றவன்

ஒரு சின்ன உதவி வருணா, நா திரும்பி வர நாள் ஆகும் அதுவரைக்கும் வீட்ட கொஞ்சம் பாத்துக்கோங்க, நா வர்ற வரைக்கும் எனக்கு பதிலா நீங்க பசங்களுக்கு டீச் பண்ணுவீங்கன்னு பிரின்சிபில் சார்கிட்ட சொல்லிருக்கேன் அவரும் சரின்னு சொல்லிட்டாரு, ப்ளீஸ் சிரமம் பாக்காம எனக்காக இதை மட்டும் பண்ணுங்க நீங்க ஒத்துப்பீங்கன்ற நம்பிக்கையில யோசிக்காம சொல்லிட்டேன்என தயக்கம் மேலோங்க கூறினான் ரவி.

Advertisement