Advertisement

“ஓ அவ்ளோ பெரிய மனுஷியாகிட்டிங்களா இனி என் கிட்ட இருந்து பணம் வாங்க மாட்டிங்க, காலேஜ் படிக்க போறோமேன்ற திமிரா” என சற்று கோபமாக கேட்க,

“அப்டி இல்லண்ணா கூட இருந்து உன்னோட கஷ்டத்தை பாத்த எனக்கு உன்ன மேலும் மேலும் கஷ்டபடுத்த மனசு கேட்கலை” என்றவள் “நா கேக்குறதுக்கு மழுப்பாம பதில் சொல்லு, அப்பா இறந்த பிறகு நீ ஏன் காலேஜ் மட்டும் போகாம” ” என்ற வார்த்தையில் அதிக அழுத்தம் கொடுத்து,

“பார்ட் டைம் வேலை பாத்த, அம்மா தான் அப்ப வேலைக்கு போய்ட்டு இருந்தாங்களே நீ படிப்ப மட்டும் பாத்துருக்க வேண்டியது தானே” என்றாள் வேகமாக அவனுக்கு புரிய வைக்கும் நோக்கத்தோடு. 

“என்ன வருணா புரியாம பேசுறா அம்மா வேலைக்கு போனங்க தான் நா இல்லைன்னு சொல்லல, அவங்க வேலை பாத்து கிடைச்ச கொஞ்ச வருமனாத்துல நம்மள படிக்க வச்சு, குடும்பத்தோட பொறுப்பையும் பாத்துகிட்டாங்க. அவங்க செய்யிற வேலைய பாத்த பிறகு நா மட்டும் ஏன் காலேஜ் டைம் தவிர மத்த நேரத்துல விட்டுல சும்மா  இருக்கணும்னு யோசிச்சேன். என்னோட தேவைக்காகவும் வீட்டோட சின்ன சின்ன தேவைக்களுக்காகவும் வேலை பாத்தேன்”. 

“அதே தான் நானும் சொல்றேன் நீ இப்போ தான் வேலைக்கு சேந்திருக்க உன்னோட எஜூகேஷன் லோன் இருக்கு, வீட்டு செலவு ,அம்மாவுக்கு ஹாஸ்பிடல் செலவுன்னு எல்லாத்தையும் நீ ஒருத்தன் தான் பாத்துகிற, இதுல நா வேற உனக்கு செலவு இழுத்து வைக்கணுமா? காலேஜ் ஃபீஸ் மட்டும் நீ கட்டு என்னோட மத்த சின்ன சின்ன செலவெல்லாம் நா பாத்துகிறேன் செலவு போக மிச்சம் இருந்தா வீட்டுக்கு அனுப்பி வைக்கிறேன். 

அந்த ராமருக்கு உதவி செஞ்ச அணில் மாதிரி ஏதோ என்னால முடிஞ்ச அளவுக்கு உன்னோட செலவை குறைகிறேனே, நானும் கில்டியா ஃபீல் பண்ண மாட்டேன்” என்று வருத்தம் தோய்ந்த குரலில் கூறினாள்.

பார்வையில் பெருமிதமும் கர்வமும் கலந்து அவளை பார்த்தவன், வராத கண்ணீரை  ஒற்றை விரலால் துடைத்துபடி “என்ன ஒரு செண்டிமெண்ட் என்னையே அழ வச்சுட்டயே” என்றான் ராகவன்.

“உன்கிட்ட போய் பேசுனேன் பாரு என்னைய” என அறையை பார்வையால் அலசினாள் வருணா. 

“நீ தேடுறது இங்க இருக்காது வெளிய தான் இருக்கும் நா வேணா எடுத்துட்டு வரவா?” என கேட்டவனை அடிக்க கை ஓங்கியவள்,

“உன்னால எனக்கு காரியம் ஆக வேண்டியதிருக்கு அதனால பிழைச்சு போ” என அந்தரத்தில் நிறுத்தி இருந்த கையை கொண்டு “ணங்க்” என ராகவனின் தலையில் கொட்டினாள்.

“ஷ் ஆ.. ஏய் பிசாசு வலிக்குது டி” என்றவாறே தலையை தேய்த்து கொண்டவன் “காலேஜ் பேர் என்னன்னு சொன்ன” என்று வலியை பொறுத்து கொண்டு கேட்க,

“இப்போ தானே சொன்னேன்”, வருணா அலுத்து கொள்ள,

“மறுபடியும் சொல்றதால ஒன்னும் குறைஞ்சு போக மாட்ட சொல்லு” என்று அவன் கேட்கவும் கல்லூரியின் பெயரை கூற,

சற்று யோசனையில் ஆழ்ந்தவன் “ஒரு நிமிஷம் இரு” என கூறிவிட்டு எழுந்து சென்று அலைபேசியில் எண்களை தடவி தீவிரமாக உரையாடிவிட்டு சிரித்து கொண்டே வந்தான்.

அவன் சிரிப்பின் காரணம் புரியாமல் வருணா விழிக்க,

“தனியா வீடெல்லாம் பாக்க வேணாம் குட்டிம்மா என்னோட பிரெண்ட் ஒருத்தன் சென்னையில நீ படிக்க போற காலேஜ்ல தான் ஒர்க் பண்றானாம், அவன்கிட்ட பேசிட்டேன் அவனுக்கு தெரிஞ்ச ஒருத்தரோட வீடு இருக்குதுன்னு சொல்லிருக்கான், என்னால அங்க வர முடியாது சோ அவனே உன்கூட இருந்து எல்லாத்தையும் பாத்துப்பான் சரியா?.அப்ளிகேஷன் பாஃர்ம் எங்க அதை கொடு அம்மாகிட்ட சைன் வாங்கிட்டு வரேன்” என கேட்க,

“தாங்ஸ் ண்ணா” என அவனை கட்டி கொண்டவள் விண்ணப்ப படிவத்தை அவனிடம் கொடுத்து “அது யாருண்ணா புது பிரெண்டு, எனக்கு தெரிஞ்சு உன்னோட பிரெண்ட்ஸ் எல்லாம் இங்க தான சுத்திட்டு இருக்காங்க”.

“இவன் என்னோட ஸ்கூல் பிரெண்டு இப்போதைக்கு இவன் ஒருத்தன் மட்டும் தான் கான்டாக்ட்ல இருக்கான். பேர் பாலாஜி விஷயத்தை சொன்னதும் தான் தெரிஞ்சது அவனும் அந்த காலேஜ்ல தான் ஒர்க் பண்றான்னு, ‘அவள அனுப்பி விடு எல்லாத்தையும் நா பாத்துக்கிறேன்னு’ சொல்லிட்டான், சரி நா போய் அம்மாவ பாக்குறேன் அவங்கள கன்வைன்ஸ் பண்ணனும் கொஞ்சம் கஷ்டம் தான்” என  சென்றுவிட,

‘முருகா அம்மா சரின்னு சொல்லணும் அப்டி சொல்லிட்டா, எனக்கு பதிலா என்னோட அண்ணன்னுக்கு மொட்டையடிச்சு உனக்கு அவரோட முடிய காணிக்கையா செலுத்துறேன்’ என மனதில் வேண்டி கொண்டாள் வருணா.

சாரதாவிடம் விஷயத்தை தன்மையாய் எடுத்து சொல்லி புரிய வைக்கும் முயற்சியில் இறங்கினான் ராகவன். 

“என்னடா அவ தான் புரியாம பேசுறேன்னா நீயும் சென்னையில போய் படிக்கட்டும்னு சொல்ற அதுவும் தனியா வீடு எடுத்து வேலை பாத்து எனக்கு சரியாபடலை ராகவா, சின்ன பொண்ணுடா தனியா வீடு எடுத்து படிக்க வேண்டிய அவசியம் என்ன? இங்க இருந்து படிக்க முடியாதா?” என கோபமாகவே பேசினார் சாரதா.

“அம்மா நாம தான் அவள சின்ன பொண்ணா நினைச்சிட்டு இருக்கோம் அவ ரொம்ப தெளிவா யோசிக்கிறா முடிவெடுக்கிறா அவள பத்தின பயம் வேணாம், இந்நேரம் அப்பா இருந்தாருன்னா இப்டியா பேசுவாரு தைரியமா போய் படிச்சுட்டு வரட்டும்னு சொல்லிருக்க மாட்டாரு” என்றவன் அவரின் கவலை உணர்ந்து “ம்மா வருணா தைரியமான பொண்ணு தனியா சூழ்நிலைய எப்டி கையாளனும்னு நல்லாவே தெரியும், சரின்னு சொல்லுங்கம்மா என்னோட பிரெண்ட் அங்க தான் ஒர்க் பண்றான் நீங்க கவலைபடாதீங்க அவன்கிட்ட விவரமெல்லாம் கேட்டுட்டேன் எல்லாத்தையும் நா பாத்துகிறேன்னு சொல்லிட்டான் ப்ளீஸ்ம்மா படிக்க தானே போறா போயிட்டு வரட்டும் எல்லாம் ஒரு வயசுகுள்ள தான் உங்களுக்கு தெரியாதது எதுவும் இல்ல” என கெஞ்ச, 

“என்னமோ ராகவா இது எதுவும் எனக்கு சரியாபடலை அவளோட வயசு என்னோட மனசை ரொம்ப உறுத்துது எதுவும் தப்பாகிடுமோன்னு பயமா இருக்கு. உன்ன நம்புறேன் இவ்ளோ தூரம் சொல்ற நீயாச்சு அவளாச்சு என்னமோ பண்ணுங்க வயசு பிள்ளை எது பண்ணாலும் நாலு தடவை யோசிச்சு பண்ணு சொல்லிட்டேன்” என்றவர் விண்ணப்பத்தில் கையெழுத்திட்டு அவனிடம் கொடுத்து,

“சாப்பாடு எடுத்து வைக்கிறேன் ரெண்டு பேரும் சாப்பிட வாங்க” எனசென்று விட்டார்.

மகளை வெளியே அனுப்ப துளியும் விருப்பமில்லை ஆனால் மகன் கேட்டதும் மறுத்து பேச துணிவுமில்லை பொறுப்பை எடுத்து கொண்டவன் எதையும் சரியாக தான் செய்வான் என்ற நம்பிக்கை அவருக்கு. அந்நம்பிக்கை பொய்த்து போகும் என நினைத்து பார்க்கவில்லை.

என்ன சேதி கொண்டு வருவானோ என அறையில் ஆவலுடன் காத்திருந்தவளுக்கு  உள்ளே நுழைந்தவனை கண்டதும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

“என்ன ண்ணா என்னாச்சு அம்மா ஓகே சொல்லிட்டாங்களா?” என கேட்க,

முகத்தை சோகமாய் வைத்து கொண்டு “ப்ச் சாரி குட்டிம்மா அம்மா முடியவே முடியாதுன்னு சொல்லிட்டாங்க, நானும் கன்வைன்ஸ் பண்ற மாதிரி பேசினேன் ஆனா அவங்க முடிவில இருந்து கொஞ்சம் கூட இறங்கல, இந்தா உன்னோட அப்ளிக்கேஷன்” என்று நீட்டினான் ராகவன்.

நொடியில் முகம் வாட்டமுற குளம் கட்ட தொடங்கிய விழி நீரை தொண்டைக்குழியில் அடகியவள் அதை கவலையுடன் பிரித்து பார்த்தாள். ‘சாரதா’ என்ற மூன்று எழுத்து வழுக்கி வழிந்து இறுதியாய் கீழே நீண்டிருந்தது.

கையெழுத்தை பார்த்தவள் சிரிப்பை அடக்கி கொண்டு நின்றவனிடம் முறைப்பை காட்டினாள்.

“சும்மா விளையாடி பாத்தேன் இப்போ உனக்கு ஓகே தானே படிப்பு விஷயத்துல நீ கேட்டு நா மாட்டேன்னு சொல்லுவேனா என்னோட செல்ல வாலு” என தலையில் கைவைத்து அழுத்தியவன் தோளோடு அணைத்து கொண்டான்.

“ரொம்ப தாங்க்ஸ் ண்ணா” என்றவள் “முருகா நா கேட்டதை நீ செஞ்சுட்ட உன்கிட்ட என்னோட அண்ணனுக்கு மொட்டை அடிக்கிறதா வேண்டிக்கிட்டேனே அதை கண்டிப்பா நிறைவேத்துறேன், இது.. இதோ நிக்குதே இந்த தடிமாடு மேல சத்தியம்” என அவன் தலையில் நச்சென்று அடித்தாள் வருணா. அவள் சத்தியம் செய்ததை விட அவள் கூறிய வேண்டுதலில் அதிர்ச்சி அடைந்து வாய் பிளந்து நின்றான் ராகவன்.

“ஏய் நா எதுக்கு மொட்டை அடிக்கணும்”.

“பின்ன உனக்கு அடிக்கிறேன்னு வேண்டிகிட்டா நீ தான் வேண்டுதலை நிறைவேத்தணும், அம்மா பர்மிஷன் கொடுத்துட்டா எனக்கு பதிலா உனக்கு மொட்டை அடிக்கிறேன்னு வேண்டிருந்தேன் நா வேண்டிகிட்டது நடந்துருச்சு” என அசால்டாக தோளை குலுக்க,

“காரியம் ஆனதும் உன்னோட வேலைய காட்டிட்ட, வேண்டுதலை தப்பா வச்சிட்ட குட்டி பிசாசே, நீ நினைச்சது நடக்கணும்னா நீ தான் மொட்டை அடிச்சிக்கணும் நா இல்ல”.

“அய்யோ… என்ன ராகவா புரியாம பேசுற, நா மொட்டை அடிச்சா நல்லவே இருக்காது கஷ்டப்பட்டு இவ்ளோ முடிய வளத்துருக்கேன் அது போனா திரும்ப இதே மாதிரி நீளமா அடர்த்தியா வருமா சொல்லு? உன்னோட தங்கச்சிக்காக இந்த சின்ன விஷயத்தை கூட செய்ய மாட்டியா”என சுணங்கிய குரலில் கேட்க,

அண்ணா என்ற அன்புமொழி மருவி, ராகவா என தருவியதை உணர்ந்தவன் “ம்ஹும் எல்லா ஏ நேரம் காரியம் ஆனதும் ராகவன் ஆகிட்டேனா, இன்னைக்கு பேப்பர்லயே போட்டுருந்துச்சு யாருக்கும் உதவி பண்ணாத அதோட விளைவு வேற மாதிரி இருக்கும்னு, அது என்ன மாதிரியான விளைவுன்னு இப்போ தானே தெரியிது, உனக்கு இது தேவையாடா ராகவா” என தன்னை தானே கேள்வி கேட்டு நொந்து கொள்ள,

அவன் புலம்பியதில் எழுந்த  சிரிப்பை அடக்கி கொண்டு “அது அப்டி தான் ராகவா ஃப்ரியா விடு இதெல்லாம் சாதாரண விஷயம் இதுக்கு போய் ஃபீல் பண்ணலாமா? யாருக்காக பண்ற உன்னோட தங்கசிக்காக தானே, ஓவரா ஃபீல் பண்ணாத” என முதுகில் தட்டி கொடுத்தவள் ராகவனின் முறைப்பை பொருட்படுத்தாமல் மான் போல துள்ளி குதித்தபடி,

“ராகவன் துணையிருக்க எனக்கென்ன மனக்கவலை ஏழேழு பிறவிக்கும் எதற்கும் பயமுமில்லை” என விண்ணப்ப படிவத்தை அந்தரத்தில் ஏந்தியபடி பாடி கொண்டே சென்றாள் வருணா.

அவள் செய்கை ராகவனின் இதழில் புன்னகையை தவழ செய்ய, தலையை உலுக்கி கொண்டவன் இடை நிறுத்திய பணியை தொடர்ந்தான்.

தொடரும்…

Advertisement