Advertisement

இந்த வழக்கில் குற்றம் சாட்டபட்டவர்கள் ரவி மற்றும் ராகவ் என்றாலும், இவர்களின் பின்னியில் இருந்து இவர்களுக்கு உதவிய அனைவரும் குற்றவாளிகளாகவே கருதப்படுவர்.

அதன் படி இந்திய தண்டனை சட்டம் பிரிவு ஐபிசி பிரிவு 300 – கொலைக் குற்றம், பிரிவு 306 – தற்கொலைக்கு தூண்டுதல்  ,ஐபிசி பிரிவு 307 – கொலை செய்ய முயற்சி செய்தல், ஐபிசி பிரிவு 366A – இளம்பெண்ணை கட்டாயப் புணர்ச்சிக்கு ஆட்படுத்தல், ஐபிசி பிரிவு 370 – ஆள் கடத்தல், ஐபிசி பிரிவு 375 – வன்முறைப் புணர்ச்சி, ஐபிசி பிரிவு 376 – வன்முறைப் புணர்ச்சிக்குரிய தண்டனை ஆகிய பிரிவுகளின் கீழ் ,ரவி மற்றும் ராகவ் ஆகிய இருவருக்கும்  இரட்டை ஆயுள் தண்டனையும் 15 லட்சம் அபராதமும் விதிக்கிறேன். அதை கட்ட தவறினால் மேலும் 7 ஆண்டுகள் சிறை தன்டனையும் விதிக்கிறைன்.

இந்த குற்றத்திற்க்கு உடந்தையாக இருந்த கேஷவ் மற்றும் அருணாசலதிற்க்கும், 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் மேலும் 5 லட்சம் அபராதமும் வீதிக்கிறேன். இதை கட்ட தவறினால் மேலும் 3 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவிக்க வேண்டும்.

மேலும் இந்த குற்ற பின்னிகளுக்கு உடந்தையாக இருந்த, பொய் சாட்சி கூறி வழக்கின் போக்கை மாற்றி, அதற்காக கொலை குற்றமும் செய்து, எல்லாவற்றையும் மறைத்த குற்றத்திற்காக ஆனந்திக்கு ஆயுள் தண்டனையும், பொய் சாட்சி கூறியதிற்க்கும் மேலும் 3 ஆண்டு சிறைதண்டனையும் அனுபவிக்க வேண்டும்.

மேலும் இந்த குற்றத்தில் உடந்தையாக இருந்த அதிகாரிகள் மற்றும் அவர்களுக்கு துனை நின்றோர் அனைவரையும் கூடிய சீக்கரம் கைது செய்து நீதி மன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று காவல்துறைக்கு ஆனையிடுகிறைன்.

இந்த வழக்கில் கடைசிவரை நின்று எந்த துன்பத்திலும் வழக்கை நடத்தி வெற்றி பெற்ற ஆதிரை, வக்கீல் கவிதா, ஓய்வு பெற்ற டிஜிபி சத்திய மூர்த்தி மற்றும் இந்த வழக்கில் முக்கிய ஆதாரங்கள் வெளிவர காரணமாக இருந்த இளமாறன் ஐபிஎஸ், வக்கீர் ஆர் கே விற்க்கும் எனது பாரட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

என்று நிதிபதி தன் தீர்ப்பை கூறி முடித்தும். யார் அதிக அதிர்ச்சியில் இருந்தார்கள் என்று அவர்களுக்கே தெரியும்.

குற்றவாளிகள் அனைவரும் அதற்கு எல்லாம் இந்த வக்கீல் தான் காரணமா, அந்த இளமாறன் இன்னும் சாகவில்லையா? என்ற கேள்விகளுடன் தன் சிறைபயனத்தை நேக்கி சென்றார்கள்.

ஆனந்தி இன்று நீதிமன்றத்தில் நடந்த நிகழ்வில் உறைந்து இருந்தவர் இன்னும் நடப்புக்கு வரவில்லை, என்னதான் எல்லாம் தெரிந்தாலும் தந்தையைகொன்றது அம்மா தான் என்று தெரிந்த பின் அதியன் ஆனந்தியை ஏற்எடுத்தும் பார்க்கவில்லை.

இத்தனை நாள் பட்ட கஷ்டங்களுக்கு பலன் கிடைத்தாலும், தன் சகேதிரியும் இளாவும் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்று அறிய ஆவல் கொண்டாள் ஆதிரை.

தன் நன்பன், வழிகாட்டி என்று தன் வாழ்க்கையில் எல்லாமும்மாக இருந்தவன், உயிருடன் இருக்கிறான் என்ற மகிழ்ச்சியில் கவிதாவும், தன் மகன் இருக்கிறான் என்ற மகிழ்வில் பத்மாவும்.

அண்ணன் இறப்புக்கு தான் காரணம் என்று குற்ற உணர்வில் இருந்துவிடுபட்டு வெற்றியும் மகிழ்ச்சியில் திளைத்து இருந்தனர்.

எல்லா பார்மாலிட்டிஸ் முடித்தவர்கள், நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளிவந்த எல்லோரும் இளாவை தேட அவன் ஆர் கே வின் தோளில் கைபோட்ட படி வந்தான்.

அவனை பார்த்த எல்லோர் கணகளிலும் ஆனந்தம் மட்டுமே.

சரி சரி எல்லோரும் எவ்வளவு நேரம் இங்கு இருக்க போறிங்க வாங்க வீட்டுக்கு போலாம் என்று கூறியவன் அதியனையும் தங்களுடன் அழைத்துக்கொண்டான். 

எல்லோரும் வெற்றி விட்டில் இருக்க. இளாவை பாய்ந்து கட்டிக்கொண்டாள் கவிதா, ஆனால் இந்த முறை அதை பொறாமையாக இல்லாமல் மகிழ்வுடன் பார்த்து இருந்தான் வெற்றி.

இத்தனை நாட்களி்ல் அவள் இளா மீது வைத்து இருந்த பாசத்தை அவன் அறிந்து இருந்தான்.

பத்மா மகனை அனைத்து முத்தமிட்டார். வெற்றி இளாவின் அருகில் வந்து என்னை மண்ணிச்சுடு இளா என்றான் அவனை அனைத்தபடி.

எல்லாம் முடிந்தபின், அனைவரும் உண்டு இளைபாரினர்.

கவிதா இளாவிடம் என் நடந்து இத்தனை நாள் எங்கு இருந்தாய் என்று கேட்டாள்.

அதற்கு ஆர் கே நான் கல்யாணம் முடிந்து குன்னூக்கு ஹனிமூனுக்கு வந்து இருந்தேன், அப்போ ஒரு லாரி கார் இடித்து விழுந்தை பார்த்தேன், அது கொஞ்சம் நடமாட்டம் இல்லாத பகுதி நான் அங்கு சென்று பார்க்கும் போது காரில் தீபிடிக்கும் நிலை, உடனே காரில் இருந்து இருவரையும் வெளியில் எடுத்து அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தேன், அதன் பிறகு தான் அது இளா தெரிஞ்சுது, அப்போ அவன் போன் அடித்து அதில் பேசியது டிஜபி சத்திய மூர்த்தி அவர்கிட்ட நான் விபத்து பத்தி சொன்னதும்.

இதை பற்றி யார் இடம் சொல்ல வேண்டாம் என்றும், தான் உடனே வருவதாகவும் கூறினார். அதன் பிறகு அவர் வந்து அவங்களோட நிலைமையை பார்த்து மருத்துவர்கிட்ட கேட்ட போது இப்போதைக்கு ஏதும் சொல்லமுடியாது தலையில் பலமான அடி பட்டு இருக்கு அந்த பெண்ணிக்கு, அவருக்கு உடல் பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருக்கு. இப்போதுக்கு உயிருக்கு ஏதும் ஆபத்து இல்லை என்றாலும், அந்த பெண் கோமாவுக்கு போக நிறைய வாய்ப்பு இருக்கு என்றார்.

பின் அவரின் உதவியுடன் நாங்க அவங்களை டெல்லி கூட்டிகிட்டு போய்டேன், அங்க மருத்துவ மனையில் இருவருக்கும் சிகிச்சை போய்ட்டு இருந்து இளா சரியாக முழுசா 3 வருஷம் ஆச்சு, அது வரைக்கும் அவங்கள பத்தி எந்த தகவலும் யார்கும்  சொல்ல வேண்டாம் முடிவு பன்னோம்.

அங்க இருந்தே கேஸ் பத்தின தகவல் சேகரிக்க ஆரம்பித்தோம். எல்லாம் இருந்தும், ஆனந்தன் அவர்களுடன் இருக்க வரைக்கும் எங்களால் அவர்களை நெருங்க முடியல, இதுக்கு நடுவில் ஆனந்தன் விலகினதும் ஆர் கே வை அனுப்பி கேஸ் எடுக்க வைத்தோம்.

உனக்கு சத்திய மூர்த்தி சார் மூலம் எல்லா உதவியும் செய்தோம். நாங்க நினைத்த மாதிரி எல்லாம் நடந்து. அன்னிக்கு ஆனால் அன்று இரவு அவர்களே எல்லாவற்றையும் சொல்லி இப்படி மாட்டி கொள்வார்கள் என்று எதிர் பார்க்கல. சென்னை வந்துல இருந்து ஆர் கே வோட டிரைவர்ரா அவன் கூடவே தான் இருந்தேன். இந்த தாடி மீசையினால யாரும் என்னை அடையாளம் கண்டு பிடிக்கல.

அன்னிக்கு எல்லாத்தையும் நான் தான் பதிவு பன்னி கோர்ட்டுல கொடுத்தேன்.

அது சரி அன்னிக்கு கோட்டுக்கு வந்து யார் என்றாள் கவிதா?

அது தேவி……..

தேவியா?

ஆமா இந்த கேஸ் ஆரம்பிக்க காரணமா இருந்த பெண், அந்த பெண்ண மீரட்டினத பார்த்து தான் ஆதிரை இந்த கேஸ் கொடுத்தா. ஆனா அங்க அவனுங்க மீரட்டலுக்கு பயந்து ஊரவிட்டே போய்டாங்க. இப்போ அந்த பெண்ணுதான் வந்து சாட்சி சொல்லுச்சு.

உனக்கு விபத்து ஏற்பட்டப்ப அந்த பெண் தான் உன்னை டிரிட் பன்னது, அது அப்புறம் ஆர் கே கிட்ட அந்த பெண்ண பத்தி சென்னேன். அவன் தான் அந்த பெண்ணை கோட்டுல வந்த உண்மையை சொல்ல சொன்னான்.

அன்னிக்கு அந்த தேவிய நான் நான் தான் கூட்டிவந்தேன்.

ஆதிரா எங்கே என்றாள் ஆதிரை, அவள் ஆர் கே வோடவீட்டுல இருக்கா, இன்னிக்கு சாயந்திரம் எல்லோரும் இங்க வந்துடுவாங்க.

என்றான் ஆர் கே, அதே போல் அன்று மாலையே எல்லாரும் வந்துவிட அதன் பின் அங்கு நடைபெற்ற அன்பு பரிமாற்றங்களும், மண்ணிப்பு கோரல்களும் முடிந்து எல்லோரும் உணவை முடித்துவிட்டு. பெரியவர்கள் உறங்க சென்றுவிட.

இளையவர்கள் தோட்டத்தில் அமர்ந்து கதையளந்து கொண்டு இருந்தனர்.

அதுவரை ஏதும் பெரியதாக பேசாமல் அமைதியாக இருந்த ஆதிரையை பார்த்த இளா என் ஆதி இவ்வளோ அமைதியா இருக்க. அடுத்து எண்ண பன்னபோற என்றான் அதியன் பார்த்தபடி.

இன்னும் ஏதும் முடிவு செய்யவில்லை, இந்த வேலை பிடித்து இருக்கிறது. இதை இப்படியே தொடரலாம் என்று நினைக்கிறேன். மற்றவற்றை காலம் தான் முடிவு செய்ய வேண்டும்.

என்றாள்,

இளா அதியனை கண்களால் காட்டி நீ ஏன் உன் வாழக்கையின் அடுத்த கட்டத்தை பற்றி யேசிக்க கூடாது என்றான்.  இல்லை இப்போதைக்கு அந்த எண்ணம் இல்லை. என் எதிர்காலத்தை அதியன் உடன் பினைத்தை கொள்ளும் எண்ணம் என்னூள்ளூம் இருந்து, ஆனால் அதற்கு நான் கொடுத்த விலை பெரியது. என் கனவே என் கைவிட்டு போனது. இந்த காயங்கள் ஆர கொஞ்ச நாள் ஆகலாம். 

அப்போது அதை பற்றி போசலாம் என்றவள் அவன் அடுத்து பேசும் முன் அந்த இடம் விட்டு நகர்ந்தாள்.  அவள் நகர்ந்த உடன் அதியன் இளாவிடம் வந்தவன், அவளுக்காக நான் காத்து இருப்பேன் இளா என்றவன் வேறு ஏதும் சொல்லாமல் சென்றுவிட்டான்.

காலம் இவர்களின் காயங்களை ஆற்றி நல்ல முடிவை இவர்களுக்கு தரும்.

…………………………

எல்லோரும் அமர்ந்து இருக்கும் இடம் சென்றவன்,  ஏய் கவி நீ என்ன பன்ன போற என்றான் அவளை பார்த்து. நீதான் சொல்லனும் இளா. என் வாழ்க்கையில் நீ தான் இது வரை முக்கிய இடங்களில் எல்லாம் எனக்கு வழிகாட்டியாக இருந்து இருக்கிறாய்.

நீ சொன்னால் அது சரியாக தான்  இருக்கும், நீயே சொல் அடுத்து நான் என்ன செய்டும் என்றால்.

வேற என்ன கல்யாணம் தான். என்றாள் அவள் முகம் பார்த்து

எந்த முக மாற்றமும் இல்லாமல் சரி என்றாள் ஒர் சொல்லில்!!!!!!!!!

யார் மாப்பிள்ளை இளா என்றான் ஆர் கே?

வேற யார் வெற்றிதான் என்றான் இளா!!!!!!!!!!!!

இதில் அப்போதும் முகம் மாறமல் இருந்து கவிதா தான்.

வெற்றி என்ன சொல்வது என்று தெரியாமல் இளா முகம் பார்க்க, நாளை இது பற்றி அம்மாவிடம் பேசலாம் எல்லோரும் போய் தூங்க செல்லுங்கள் என்றான்.

அனைவரும் கலைந்து செல்ல.

வெற்றி சற்று தயங்கிவிட்டு பின்னே சென்ற கவிதாவிடம், உனக்கு இதில் சம்மதமா என்றான் அவளை நேக்கி.

ஏன் உங்களுக்கு இதில் விருப்பம் இல்லையா?\

என்றாள் கேள்வியுடன்…..

இல்லை அது அது வந்து……………. என்றவன்…………

என்னை உனக்கு பிடிக்குமா என்றான் எதிர்பார்ப்புடன்.

அவனை பார்த்தவள் இளாவிக்கு என்ன என்பிடிக்கும் என்று தெரியும் என்றாள் அவன் முகம் பார்த்து…………

முதலில் அதன் அர்த்தம் புரியாதவன் பின் முகம் மலர்ந்தான்……..

குட் நைட் என்றான்………..

நீங்கள் ஏதும் சொல்லவில்லையே என்றாள் போகிறவனை பார்த்து……….  அவன் திரும்பி பார்த்து எனக்கு என்ன பிடிக்கும் என்றும் இளாவிற்க்கு தெரியும் என்றான் புன்னகை முகமாய்.

இருவரும் புன்னகையுடன் விடைபெற்றனர்.

…………………………………..

எல்லோரும் அவர் அவர் அறை சென்றுவிட்ட பின்னும் பால்கனியில் நின்று நிலவை பார்த்துக்கொண்டு இருந்தாள் ஆதிரை.

இங்கு என்ன செய்கிறாய் ஆதிரை?  

இளா புறம் திரும்பாமல் நிலவையே பார்த்து இருந்தவள், இன்னிக்கு கோர்ட்டுல நடந்த தான் நினைச்சிட்டு இருந்தேன். ஜர்ஜ் சொன்ன மாதிரி இன்னும் இதுமாதிரி எத்தனை போர் பாதிக்கபட்டும் அத வெளியில் சொல்லமுடியாமல் இருப்பாங்க. என்றவள் அவங்களுக்கு எல்லாம் நாம ஏதாவது செய்யமுடியாதா என்றால்.

அதை கேட்டதும் சிரித்த இளா இங்க பார் ஆதிரை என் பசிக்கு நான் தான் சாப்பிடனும், உன் தாகத்துக்கு நீதான் தண்ணீர் குடிக்கனும். இங்க யாரும் கடவுள் இல்லை.  எல்லாத்தையும் சரி செய்ய. ஆனா நம்மால ஒன்னு பன்ன முடியும் நம் தலைமுறைகளை சரியான வழியில் கொண்டு செல்ல முடியும். நம்மை சார்ந்தவர்களுக்கு இதை நாம் எடுத்து சொல்லமுடியும். 

இந்த சமுதாயத்தின் மாற்றம் என்பது ஒர் நாளில் ஏற்படுவது இல்லை, ஆனால் இந்த நிலை நிச்சயம் ஒரு நாள் மாறும், அதற்கான கருவிகளாக நாமும் இருக்கலாம்.

நீ இவ்வளவு நேரம் பார்த்துக்கொண்டு இருந்தாய்யே அந்த நிலவில் என் அப்படி உனக்கு தெரிந்து.

   இளாவை திரும்பி பார்த்தவள் இன்னுக்கு பவுர்ணமி முழுநிலா அழகா இருக்கு, நாளைக்கு இது கொஞ்சம் கொஞ்சமா தேய்ந்து கானம போய்விடும் என்றாள் அந்த நிலவை பார்த்தவாரே…………………..

அதை கேட்டு சத்தமாக சிரித்தவன், நீ ஒர் படித்த பெண் அதுவும் ஆசிரியை ஆனால் நீயே இந்த நிலா தேய்ந்து வளர்கிறது என்று என்றோ நம் பாட்டி சொன்ன கதையை தான் சொல்கிறாய்.

உனக்கு தெரியாதா தேய்வது நிலவல்ல, பூமி சூரியனை சுற்றிவருகிறது, நிலவு பூமியை சுற்றிகிறது. அதனால் ஏற்படும் ஒர் நிகழ்வுதான் இந்த பௌர்னமி அம்மாவாசை, எல்லாம். ஆனால் நம் கண் முன்னே இது தான் உண்மை என்று தெரிந்த போதிலும் பலவற்றை நாம் அதற்கு முற்றிலும் மாற்றான ஒர் நம்பிக்கையை தான் கொண்டு இருக்கிறோம்.

அதோ போல் தான் இதுவும், இந்த சமுதாயத்திற்க்கு குற்றவாளிகள் யார் என்றும் தெரியும், குற்றம் என்ன என்று புரியும்.  அந்த குற்றத்தை குற்றம் என்று சொல்லும் மனது தான் நமக்கு வேண்டும்.

அதுவரை நீ சொன்னது போல் நிலவு தேய்யும்………………

  

     

இந்த கதைக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி

Advertisement