Advertisement

தேய்வது நிலவல்ல

அத்தியாயம் – 8

வளவன், ராகவ் மற்றும் ரவி இவர்களின் கூட்டு முயற்சி தான் V.R.R Institute and Coaching centre, கல்லூரி காலத்திலேயே முவரும் நன்பர்கள்.

இதில் ராகவ் வசதியான குடும்பத்தை சார்ந்தவன், அவன் அப்பாவிற்க்கு தொழில் நடத்தும் முதலாளி வர்கத்தை சார்ந்தவர்.

ரவி அரசியல் பின்புலம் கொண்டவன் தமிழ்நாட்டின் முக்கிய கட்சியின், அவன் தந்தை முக்கிய பதவியில் இருப்பவர்.

இருவரும் வசதியான குடும்பத்தை சார்ந்தவர்கள், பணம் இவர்களின் கையில் தண்ணிர்பட்ட பாடுதான், உலகில் உள்ள எல்லா பணம் செலவளிக்கும் வழியை நன்கு அறிந்தவர்கள்.

இவர்களின் குடும்பங்களின் செல்வ சொழுமை இவர்களின், எல்லை இது தான் என்று என்றும் வகுத்து இல்லை.

தங்களின் மகிழ்ச்சிகாக எந்த எல்லைக்கும் போக தயங்காதவர்கள்.

இவ்வளவு பணம், அந்தஸந்து இருந்தும் இவர்களால் அந்த கல்லூரியில் முக்கியத்துவம் பெறமுடியவில்லை.

அதனால் இவர்கள் தங்கள் அணியில் வளவனையும் இனைத்துக்கொண்டார்கள்.

வளவன் மத்தியவர்க்கம், நிறைய ஆசைகள், கணவுகள் இருந்தாலும், அதை நிறை வேற்ற பணம் இல்லாதவன்.

ஆனால் மிகவும் திறமையானவன், எந்த ஒரு செயலிலும் கல்லூரியில் முன்நிறுத்தபடுபவன்.

எப்போதும் இவனோடு இருப்பதால், ராகவ் மற்றும் ரவியின் மீது படியும் பார்வையும் மாறியது (அ) மாற்றபட்டது.

வளவனுக்கு எப்போதும் வசதியான வாழ்வின் மீது தீரா தாகம். மெதுவாக நாறோடு சேரும் பூவாது இவன் வாழ்க்கை பாதை.

கல்லூரிகாலத்திற்க்கு பின் இவன் தொடங்க நினைத்து தான் இந்த Institute and Coaching centre, இவனுக்கு கற்பதிலும், கற்ப்பிக்கவும் நன்றாக வந்து(அப்பாவை போல).

இன்று உள்ள சமுதாய சூழலில் மக்கள் யோசிக்காமல் செய்யும் செலவு என்னறால், அது கல்விக்கானது தான்.

எப்படியாவது தங்கள் பிள்ளைகளை நன்றாக படிக்கவைக்க வேண்டும், அதற்காக தங்கள் வாழ்நாளில் சம்பாதித்து எல்லாம், பள்ளி கட்டணம் செலுத்த பயண்டுத்தும் பொற்றேர் இங்கு ஏறாளம்.

தங்கள் பிள்ளைகள் டாக்டர்கள், இஞ்சினியர்கள் ஆவர்களா என்று எப்பாடு பட்டாவது பணத்தை கொடுத்து Coaching centre களில் சோர்பதை அவன் அறிவான்.

ஆனால் அவன்னிடம் திட்டம் இருந்த அவளவில் பணம் இல்லை, அவன் இந்த விஷயத்தை வீட்டில் சொன்ன போது, அவன் அம்மா தான் முதலில் எதிர்த்து.

மகன் நல்ல படியாக இஞ்சினியரிங் படித்து முடித்துவிட்டான். அவன் திறமைக்கு கண்டிப்பாக கல்லூரி காம்பஸ்சில் லேயே வேலை கிடைத்துவிடும்.

ஒர் இரு வருடங்களில் வெளிநாட்டிற்க்கு சொன்றுவிட்டால், தான் ஆசைபட்ட மகன் மூலமாக நிறைவேறும். என்ற கனவில் இருந்தவரால், மகனின் எதிர்கால திட்டத்தை ஏற்க்கொள்ள முடியவில்லை.

அவரை பொருத்தவரை கிடைக்கும் நல்ல வாய்ப்பை பயன் படுத்திக்கொள்ளாமல், கையில் இருக்கும் பனத்தை மகன் முதலீடாக கேட்பது, அவருக்கு உவப்பாக இல்லை.

மாதம் சுளையாக வரும் சம்பளத்தை விட்டு இது என்ன வேண்டாத வேலை என்று தான் தோன்றியது அவருக்கு.

வளவனின் அப்பாவிற்க்கு இதில் பரம சந்தோஷம் (ஒரு வேலை இதில் மகன் செய்ய போகும் வேலைகள் தெரிந்தால் இதற்கு சம்மதித்து இருக்கமாட்டாரோ என்னவோ?)

ஆனந்திக்கு எப்போதும் வளமாக வாழ்க்கை மீது தீராத மோகம், அவர் சிவநேசனை திருமனம் முடித்த போது அவர் அரசு உத்தியோகத்தில் இருக்கிறார், தன் ஆசைகள் அனைத்தும் நிறை வேறும் என்ற கனவில் தான் மணம் முடித்தார்.

அவரும் அவரின் ஆசைகளை நிறை வேற்றவே முனைந்தார், ஆனால் ஆனந்தியின் ஆசையாவும் போராசை யானது தான் மிச்சம்.

அரசு ஆசிரியர் ஆன அவர் சம்பாதிக்க நிறைய வழிகள் இருந்த போதிலும், அதில் எதிலும் அவர் சொல்லவில்லை. மாலை நேரத்தில் பிள்ளைகளுக்கு இலவசமாக பாடம் சொல்லிக்கொடுத்து, சாப்பிட பன்டமும் கொடுப்பவர்.

ஆனந்தியின் அகராதி படி இவர் பிழைக்க தொரியாதவர். வளவன் வயிற்றில் இருக்கும் போது இந்த மாதிரி பன விஷயத்தில் இருவருக்கும், அடிக்கடி முட்டிக்கொள்ளும்.

ஊரில் யாரும் மே தவறு செய்வது இல்லையா என்ன? அவருக்கு மட்டும் என்ன வந்து, அந்த மனிஷன் அவர் பையன பாஸ் பன்ன எவ்வளவு பனம் வேனாலும் தர ரெடியா இருக்காரு, எவ்வளவே பேர் பாஸ் பன்றான் இவன் பன்றதுல என்ன ஆயிடும்.

இதுல யாருக்கு என்ன பாதிப்பு வர போகுது, இதுக்கு போய் இந்த மனுஷன் இந்த குதி குதிக்கறாரு, நான்னாக என்ன இவரையா தப்பு செய்ய சொல்றேன், கொஞ்சம் கண்டுக்காம இருந்தா என்ன. அது அவன் தர பனத்தை வாங்கி காம, என்ற புலம்பலில் இருந்தார்….

ஒர் கட்டத்தில், இது தான் என் சம்பாத்தியம், இதில் முடிந்தால் இரு இல்லை உன் அம்மாவிட்டிற்க்கு சொன்றுவிடு என்ற அளவில் பிரச்சனை பொரிதாக, ஆனந்தி அமைதியாகி விட்டார்.

அவருக்கு தொரியும் அவர் வீட்டின் செல்வநிலை, ஆனால் எப்போது மனதில் பனம் பற்றிய சிந்தனைதான்.

அவரை பொருத்தவரை தான் நான் தப்பு செய்யல, யாரே செயறத கண்டுக்காம இருக்க பணம் வந்தா அதுல தப்பு இல்ல……

இந்த மாதிரி சூழலில் வளர்ந்தவன் தான் வளவன், சிறு வயதில் இருந்த பனத்தின் மீது தீராத மோகம், அது அவனை எந்த எல்லைக்கும் போக தூண்டியது, அதனால் தான் கல்லூரியிலும் ரவி மற்றும் ராகவ் பற்றி தெரிந்து இருந்தும் அவர்களிடம், நட்பு பாராட்டினான்.

வீட்டில் ஏற்பட்ட வாக்குவாத்தில் மன சோர் அடைந்து தான் மிச்சம். அதே மனநிலையில் இருந்தவன், நன்பர்களை பார்க்க வந்து இருந்தான்.

அவர்கள் இவன் சேர்வுக்கான காரணம் கேட்க, சொன்னான்…..

அதை கேட்டவர்கள், தாங்கள் பணம் தருவதாக சொல்லவும், உடனே வேலையை தொடங்கிவிட்டான்.

இவர்கள் படிப்பு முடிந்தபின், முன் போல் இல்லாமல் வீட்டில் அடுத்து என்ன வேலை, கல்யாணம் என்பது போல் பேச, அவர்களால் அவர்களின் கட்டுபாட்டுக்குள் செல்லமுயடிவில்லை.

அதே நேரத்தில் வள்வன் சொன்னது போல் நாங்கள் தொழில் சொய்கிறோம், என்றால் கண்டிப்பாக ஒத்துக்கொள்வார்கள்.

அதே சமயம் வளவனை பற்றியும் அறிவார்கள், தாங்கள் தங்கள் இஷ்டம் போல் இருக்கலாம். என்று எல்லாவற்றையும் யோசித்தவர்கள், உடனே செயலில் இறங்கினார்கள்.

முதலில் எல்லாம் சரியாக தான் சென்றது, ரவியும் ராகவும், பயிற்சி மையம் வர ஆரம்பிக்கவும், மெல்ல நிலை மாறியது, அதுவும் வெளியிலு தொரியாத வகையில்.

ஏற்கனவே நிறைய பெண்களுடன் பழக்க உடையவர்கள் இருவரும், ஆனால் அதற்க்கு அவர் செலவிடும் தொகை கணக்கில் அடங்காது.

இவர்கள் பழகும் பெண்களும் இவர்களை போலதான் எங்கு நிறைய பணம் வரும் மே அங்கே தாவிடுவார்கள்.

ஒரு நாள் ஏதற்ச்சையாக பயிற்சி மையம் வந்தவர்கள், அங்கு வரும் டீன் ஏஜ் பெண்களின் மீத் இவர்களின் பார்வை விழுந்து.

அதிக செல்வ செழிப்புடன் அழகாக வரும் இவர்களின் மீது அவர்களின் பார்வை அந்த வயதிற்க்கே உரிய சுவாரசியத்துடன் படிய, இவர்களின் வேலை சுலபமாக இருந்து.

அதிக செலவு இல்லாமல் நிறை விதவிதமான பெண்கள், இவர்களின் வலையில் விழ ஆரம்பித்தனர்.

முதலில் இதில் விளையாட்டாக இறங்கிறவர்கள், பின் இதை முழு நேர வேலையாகினர். அவர்கள் தேட வேண்டியில்லாமல், பெண்களை பற்றிய முழுத்தகவளும், அவர்கள் சேர்கையின் போதே கிடைத்து.

இதில் பெண்களின் குடும்பநிலை, செல்வநிலை, உடன் பிறந்தோர், குடும்ப பின்னனி என எல்லாவற்றையும் ஆராய்ந்து, தாங்கள் மாட்டிக்கொள்ளாத வகையில் பெண்களை தோர்ந்து எடுத்தனர்.

அவர்களுக்கு அதிக உதவிகள், சிறப்பு சலுகைகள் கொடுத்தனர், இதை எல்லாம் விளம்பரபடுத்தி, சேர்க்கையை அதிகமாக்கலாம் என வளவனிடம் கூறினர், அதன் படி நடக்கவும் நடந்து.

இவர்களிடம் சிக்கும் பெண்களிடம் கண்ணியம் காத்து அவர்களிடம் நல்ல காதலனாக காட்டிக்கொள்ளும் இவர்கள், சமயம் வாய்க்கும் போது இவர்களுடன்னான பழக்கத்தை அடுத்த கட்டத்திற்க்கு கொன்டு செல்வார்கள்.

இவை எல்லாம் அந்த பெண்ணிற்க்கு தொரியாமல் பதிவு செய்து அதை பணமாக மாற்றினர், அந்த பெண்ணிற்க்கு இது பற்றி ஏதும் தெரியாது.

அப்படி ஏதும் தெரிந்து இவர்களை கேட்டால், அதைக்கொண்டு அந்த பெண்களை மீரட்ட தொடங்கினார்கள்.

அந்த வயது பெண்களுக்கான அச்சதிலும், பிரச்சனையை கையாள தெரியாமலும் சிலர் தற்கெலை செய்து கொள்ள, பலர் இன்னும் இவர்கள் பிடியில்.

அதில் ஒருத்தி தான் தேவி, அவள் முதலில் வளவனிடம் புகார் சொல்ல, அவனுக்கும் இது அதிர்ச்சிதான் தன் நன்பர்களிடம் இது பற்றி அவன் சன்டையிட, இங்கே பார் வளவா, நாங்கள் யார் கையும் பிடித்து இழுப்பது இல்லை.

எங்க கிட்ட இருக்க பணத்தை பார்த்து வராங்க, எங்க கூட ஊர் சுத்தராங்க, இவளுகளுக்கு ஏதும் தொரியாத என்ன..

எல்லாம் தொரியும், நாங்க யாரையும் கூப்பிடல பாத்துக என்க….

இருந்தாலும் அதன் பின் நன்பர்களை கவனிக்க தொடங்கினான். அவர்களின் செயல்களை கண்டுக்கொண்டவன் அவர்களை கண்டிக்க, அவர்கள் இவனை பனத்தால் சமரசம் செய்தார்கள்.

மையத்தின் 80% உரிமையை அவனுக்கு விட்டுக்கொடுத்தார்கள், அதொடு அவன் இடம் கடன் கொடுத்த தொகையும் வேண்டாம் என்றார்கள்.

அதாவது தாங்கள் செய்வதை கண்டுக்கொள்ளாமல் இருப்பதற்க்கு, அவனை பணம் கொடுத்து சரிகட்டானர்கள்.

நான் தவறு செய்லவில்லை, தவறை செய்கிறவர்கள் (பெண்கள்) எல்லாம் தெரிந்துதான் செய்கிறார்கள், என்ற எண்ணம் வளவனுடையதாக இருந்து.

ஆனால் இதில் தேவி போலீசில் புகார் செய்ய போவதாக சொல்ல, அன்று பார்டியில் அவளை தனியே அழைத்து மீரட்டினர், அதோடு அவள் சம்பந்தமாக அவர்கள் பதிவு செய்து வைத்து இருந்தவற்றை எல்லாம் காட்டி அவளை மீரட்டி இருந்தனர்.

அதைதான் அன்று நேத்ரா கேட்க நேர்ந்து.

அதன் பின் அவள் அவளை சமாதானம் செய்து, தன் அப்பாவின் நன்பர் ஆன டி ஐ ஜி மூலம் புகார் அளிக்கலாம் என்று நம்பிக்கை தந்தால்.

அதன் படி அனைத்து ஏற்பாடுகளும் நடை பெற, தேவியின் அம்மா மற்றும் அண்ணன் இதற்க்கு ஒப்புக்கொள்ளவில்லை.

இதில் இருந்து பின் வாங்க விரும்பாத நேத்ரா, தானே அவர்கள் மீது புகார் அளிக்க முன்வந்தால்.

இது வேண்டாம் தயாளனுக்கு தெரிந்தால் பிரச்சனையாகும் என்று டி ஐ ஜி சொன்னாலும்,   அவள் பின் வாங்கவில்லை.

புகார் அவளின் பெயரிலேயே கெடுக்கப்பட்டது.

அதன் விளைவு தான் இந்த டி வி செய்தி.

இனி இவர்களின் வாழ்க்கை பாதை திசை மாறும் அதில் யார் விழ்வார்? யார் வாழ்வார்??

நிலவு தேயும்…………

Advertisement