Advertisement

வணக்கம் தோழிகளே, 

உங்க ஆதரவிற்க்கு நன்றி, படித்து உங்கள் நிறை குறைகளை என்னுடன் பகிர்ந்துக்கொள்ளவும்.

எனக்கு தொடர்ந்து ஊக்கம் அளிக்கும் வாசகர்கள் மற்றும் கருத்து தெரிவிக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

தேய்வது நிலவல்ல

அத்தியாயம் – 29

காலையில் அந்த மருத்துவமணை வளாகத்தில் காத்துக்கொண்டு இருந்தான் ஆர் கே. 

ஸார் என்று அவன் பின்னால் கேட்ட குரலில் திரும்பியவன். 

I am dr. devi 

நர்ஸ் சென்னாங்க என்ன விஷயமா என்னை பார்க்க வந்து இருக்கிங்க ? என்றாள் அவனை நேக்கியவாரே

I am RK advocate என்றவன் தான் வந்த காரணத்தை சென்னவுடன் அவள் முகம் வெளளுத்து, அவனை அச்சத்துடன் பார்த்தவள், இல்லை இதை என்னால் செய்யமுடியாது என்றாள், அச்சத்துடன் அவன் முகத்தை பார்த்துக்கொண்டே.

மிஸ் தேவி, மிஸ் தானே இதை நீங்க செய்துதான் ஆகனும், இல்லைனா இன்னும் 1 மாதத்தில் நடக்க போற உங்க கல்யாணம் என்று இழுத்தவன் எதும் சொல்லாமால் அந்து இடத்தை விட்டு நகர்ந்து இருந்தான்.

அவனை பின் தொடர்ந்த வாரே இருந்த கேஷ்வ் ஆள் ஸார், அந்த வக்கீல் அந்த பொண்ணு அட்மிட் ஆகி இருந்து ஆஸ்பிட்டலுக்கு வந்து அங்க இருந்த டாக்டர்கிட்ட பேசிகிட்டு இருக்கான் என்றவன்.

அவன் சென்றவுடன் அங்கு இருந்த செவிலியர்ரிடம் அவன் வந்துக்கான காரணத்தை கேட்க, அவர் ஒரு கேஸ் விஷயமா அந்த டாக்டர் பார்க்க வந்து இருப்பதாக கூறினாள்.

விசாரித்தில் அவள் ஆதிரை பார்த்துக்கொண்ட டாக்டர் என்று தெரிந்து, சரி என்று புறப்பட்டவன், எல்லாவற்றையும் கேஷ்வ் இடம் கூறினான்.

என்னதான் இருத்தாலும் கேஷ்வ்க்கு அவன் மேல் நம்பிக்கை வர மறுத்து, அதனால் தான் அவனை பின் தொட அவர் ஆட்களை ஏற்பாடு செய்து இருந்தார்.

…………………

இங்கு அருணாச்சலம் பெங்களூரில் இருக்கும் ஆனந்தியிடம் பேசிக்கொண்டு இருந்ததார்.

அவர்கள் அவர்கள் பேசிமுடித்தவுடன் தன் ஆட்களிடம் ஆனந்தி பற்றி விசாரிக்க சொன்ன அருணாச்சலம். அவர் இப்போது பெங்களூரில் இருப்பதாக தகவல் கிடைத்தவுடன், அவர் ஆட்களை அனுப்பி அவரை தொடர்புக்கொண்டார்.

அதன் படி இப்போது இருக்கும் வழக்கின் நிலையும், ஆர் கே கோர்டில் சொன்னுது அனைத்தும் உண்மைதான் என்று கூற வேண்டும் என்றும், அதை தொலைபேசி வாயிலாகவும் ஆனந்தி யிடம் தெரிவித்தார்.

ஆனந்தி இதை மறுத்தால் இதற்க்கு முன் நடந்த எல்லாவற்றிக்கும் ஆனந்திக்கும் தொடர்பு இருப்பதாக உன்னையும் இந்த வழக்கில் மாட்டிவிடுவோம் என்றும். மேலும் அவர் பணம் வாங்கியதற்கான சாட்சியும் தன் இடம் இருப்பதாக மிரட்டியவர். போலீஸ் அவரை தொடர்புக்கொண்டாள் எல்லாவற்றையும் தான் சொன்னது போல் ஒத்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறி மிரட்டி இருந்தார்.

இதை எல்லாம் கேட்ட ஆனந்தி தலையில் கைவைத்து அமர்ந்து இருந்தார். அடுத்து என்ன செய்வது என்று அவருக்கு தொரியவில்லை. 

எல்லாவற்றிக்கும் மேல் தன் கணவன் மற்றும் மகன் கொலைக்கு தானும் உடந்தை என்ற விஷயம் மட்டும் தன் அதியன் அறிந்தால் அதன் பின் நடப்பவைகளை அவராள் கற்பனை கூட செய்ய முடியவி்ல்லை.

எல்லாவற்றிக்கும் மேல் அவரிடம் இருக்கும் சொத்துகள் மற்றும் பணம் பறி போய்விட்டாள் அதை அவர் நினைக்க கூடவிரும்வில்லை.

மகன் அதியன் அமெரிக்கா சென்றபின் தன் மகளை அந்த ஊரில் இருக்கும் ஒரு வசதியான குடும்பத்தில் திருமணம் முடித்து இருந்தார்.

மகள் திருமணத்திற்க்கு மகன் வராமல் இருந்து அவருக்கு வசதியாக இருந்து. அவர் கையில் இருக்கும் பணத்தில் மிக ஆடம்பரமாக எல்லாவற்றையும் ஏற்பாடு செய்தார், சம்பந்தி விட்டில் மகன் பணம் அனுப்பியதாக கூறியவர், அதியனிடம் எல்லாம் மாப்பிள்ளை வீட்டு செலவு என்று கூறியிந்தார்.

அதன் பின் எல்லாம் அவர் மணம் போல் வாழ்ந்தார், சொந்தங்களுடன் அவ்வளவு நெருக்கம் இருக்கவில்லை அதனால் அது அவருக்கு இன்னும் வசதியாகி போனது.

இப்படி இருந்தவர், மீண்டும் வசதியில்லா வாழ்வு வாழவே இல்லை சிறைசாலை செல்லவோ விரும்பவில்லை, அதை அவர் நினைத்துக்கூட பார்க்க முடியாமல் தவித்தார்.

பணமா மகனா என்ற அவர் தராசில், பணமே வென்றிட, அருணாசலத்தின் பக்கம் நிற்பது என்ற முடிவுக்கு வந்து இருந்தார்.

…………………………………………..

இங்கே கவிதா ஆர் கே சொன்ன குற்றசாட்டிற்க்கு எல்லாம் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் சொல்லபட்டது, அதற்கான முகாந்திரம் ஏதும் இருக்கிறதா என்று ஆராய்ந்துக்கொண்டு இருந்தாள்.

வளவனும் ஆதிரையும் காதலர்கள் என்றால் அவர் பேசியதற்கான ஆதாரங்கள், அவர்களின் சந்திப்புகள், தொலை பேசி அழைப்புகள் மெயில் தொடர்பு என்று எல்லாவற்றையும் ஆராய்ந்துக்கொண்டு இருந்தாள்.

அதியன் ஒப்படைத்த ஆதாரம், அதில் அவன் ஆதிரை பற்றி ஏதும் கூறி யிருக்கிறானா என்று மற்றோர் முறை ஆராய்ந்து பார்த்தால், ஆனால் அதில் அப்படி ஏதும் இல்லை.

வளவன் கொடுத்து, இதுவரை அவர்கள் எத்தனை பெண்களை பயமுறுத்தி பயண்படுத்தி இருக்கிறார்கள், அவர் சம்பந்தமான வீடியோகள், தொலைபேசி உரையாடல்கள், புகைப்படங்கள், பெரும் புள்ளிகளுடன் எடுக்கப்பட்ட வீடியோகள் போன்றவைதான்.

பாண்டியில் அதியன் ஆதிரை சந்திக்க சென்ற போது அவள் அவனை பார்க்கவே இல்லை, ஆனால் அவள் இருந்த இடத்தில் தான் அதியன் இருந்தான், அதன் பின் அந்த விடுதிக்கு சென்று இருக்கிறார்கள். அங்கு அதன் பிறகு நடந்தவற்றில் ஆதிரை போலீஸ்ல் மாட்டியது என்று எல்லா கேமரா பதிவுகளையும் ஆராய்ந்து பார்த்தார். ஆனால் அதிலும் ஏது இல்லை, ஆனால் ஏதை வைத்து ஆர் கே இதை எல்லாம் சொன்னான், என்று தீவிர யோசனையில் இருந்தவள் முன் காபி கப் நீட்டபட்டது.

அந்த நேரம் காபி அவளுக்கு தேவைபட்டது, அதை புரிந்துக்கொண்டு யார் இதை கொடுப்பது என்று எண்ணியவள், நிமிர்ந்தும் இன்னும் அதிர்ச்சியானாள், ஏனில் அதை நீட்டியது வெற்றி.

ஒரு புன்னகையுடன் அவள் அருகில் அமர்ந்தவன்,அதை அவள் கையில் தினித்தான். பெற்றுக்கொண்டவள் அதை அருந்தும் வரை அமைதியாக இருந்தான் பின், என்ன ஏன் இப்படி இருக்க கவி என்றான், அவள் எல்லாவற்றையும் கூறினாள்.

எல்லாவற்றையும் பெறுமையாக கேட்டவன், இந்த கேஸ்ல பெரும்பாலான எவிடன்ஸ் வளவன் கிட்ட இருந்து தான் கிடச்சி இருக்கு, அப்போ அங்க குடும்பத்தி இருப்பவர்களுக்கும் அதை பற்றி தெரிந்து இருக்கும். நீ சொல்லறத வெச்சிப்பாத்தா, கண்டிப்பான அதியனோட அம்மாக்கு இதுல ஏதோ சம்பந்தம் இருக்கும், நீயொன் அவங்கள கேட்க்கூடாது என்றான்.

சிறிது யோசித்தவள் அதியனுக்கு அழைத்தாள், 

அதியன் நான் கவி நான் கேட்பதற்க்கு உண்மைய மட்டும் சொல்லுங்க என்றவள், உங்க அம்மாக்கு எல்லா விஷயமும் தெரியுமா? என்றாள்.

அதை அமைதியாக இருந்தவன், எப்படி சொல்லவான் அவன் அம்மாவும் இது எல்லாவற்றிக்கும் உடந்தை என்று.

அவனின் சென்னை விட்டில் அவனுக்கு கிடைக்கப்பொற்ற ஆதாரங்களை வைத்து அவன் எல்லாவற்றையும் பார்த்த போது அவன் அன்னையின் செல்வநிலை அவனுக்கு உறுத்தியது, அது சம்பந்தமாக அவன் தேடல்கள், தன் தாய்க்கு எப்படி இவ்வளவு பணபுழக்கம், என்று ஆராய்ந்தவன் தன் கணிணி அறிவை பயண்படுத்தி அனைத்தையும் அறிந்துக்கொண்டான்.

ஆனால் அவன் அறிந்த விஷயம் தான் அவனுக்கு உவப்பாக இல்லை, தன் அம்மா பணத்தின் மீது அதிக பற்றுக்கொண்டவர் என்பது அவனுக்கு தெரியும், ஆனால் அது இந்தளவு என்று அவன் எதிர்பார்க்கவில்லை.

அவன் அன்று ஆதிரை மருத்துவமணையில் பார்த்தை அவன் அன்னையும் பார்விட்டார், அதனால் தான் எல்லாவற்றிக்கும் ஆதிரை தான் காரணம், ஆதிரை தான் வளவன் மீது வீணாக பழி சுமத்தி, அவன் இறப்பிற்க்கும், இப்போது அப்பாவின் நிலைக்கும் அவள் தான் காரணம் என்று கூறினார்.

ஆனால் அப்போது அவனுக்கு நம்பிக்கை இல்லை தான், ஆனால் உடனடியாக நடந்த அப்பாவின் மரணம் அவனை எதையும் யோசிக்கவிடவில்லை, எல்லாவற்றையும் ஆதிரைக்கு எதிராக வே திட்டமிட்டு அதில் அவளை சீக்கவும் வைத்தான்.

ஆனால் என்று அவன் சென்னைவீட்டில் எல்லாவற்றையும் பார்த்தானோ அன்றே அவன் ஆதிரைக்கு உதவ முடிவு செய்தான்.

அதானல் தான் அவன் எல்லாவற்றையும் கவிதாவிடம் கொடுத்து அவர்களுக்கு துனை நின்றதும். மேலும் என்னதான் அன்னை தவறு செய்து இருந்தாலும் அவரை சிக்க வைக்க அவனுக்கு மணம் இடம் கொடுக்கவில்லை.      

  

இப்போது கவிதா கேட்க்கும் கேள்விக்கு அவன் மௌனமே பதிலாக, கவி ஏதும் போசாமல் வைத்துவிட்டாள்.

……………………….

இவர்கள் எல்லாம் தங்கள் வேலைகளில் இருக்க, நீதிமன்றம் சொன்ன 2 வாரம் முடிந்து, மீண்டும் இன்று நீதி மன்றம் கூடுகிறது. எல்லோருக்கும் பதட்டத்தில் இருந்தனர்.

ஒரு வேளை ஆர் கே சொன்னது போல் ஆதாரங்களை ஒப்படைத்தால், நிச்சயம் ஆதிரை கைது செய்யகூடும். அதே சமயம், ஆதிரைக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, என்று நிறுபிக்க எந்த வலுவான ஆதாரமும் அவர்களிடம் இல்லை. 

அவன் முயன்ற வரையில் ஆனந்தியை கவிதாவால் தொடர்பு கொள்ளமுடியவில்லை, அதிலேயா அவள் அவர்களின் கட்டுபாட்டில் இருக்கிறார் என்று கவிதாவிற்க்கு புரிந்து. 

ஆர் கே வும் சிறிது பரபரப்பாக காணப்பட்டான்

எல்லோரும் நீதிமன்றத்தில் கூடினர், மீண்டும் வழக்கு விசாரனை தொடங்கியது. எதிர் பார்த்து போலவே ஆர் கே வளவனின் அம்மாவின் வாக்கு முலத்தை நீதிமன்றத்தில் சமர்பித்தான், அதன் பின் ஆனந்தியை அழைத்து விசாரிக்க அவரும் எல்லாம் தன் மகன் மற்றும் ஆதிரையின் திட்டம் தான் என்று கூறினார். ஆனந்தி கூறியதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை என்றாலும், அதியன் தன் அம்மா தனக்காக கூட பார்க்காமல், இப்படி பணத்திற்காக ஏதும் செய்வார் என்று அவனும்  எதிர்பாக்கவில்லை.

ஆனால் இது எதையும் ஆனந்தி கண்டுக்கொள்ளவும் இல்லை.

ஆர் கே யூவர் ஆனர், இந்த வழக்கு ஒரு பொய்யான வழக்கு என்பதற்க்கு இதை விட வேறு ஆதராம் தேவை இல்லை. வழக்கில் முக்கிய குற்றவாளி ஆன வளவனின் அம்மாவே வளவன் தான் எல்லாவற்றையும் செய்தான் என்றும். இதை எல்லாம் அறிந்த தான் அவன் அப்பாவிற்க்கு மாரடைப்பு வந்தது என்று சாட்சி கூறியிள்ளார். 

எல்லாவற்றிக்கும் மேல் இந்த வழக்கில் இது வரைக்கும் பாதிக்கபட்ட பெண்கள் என்று 100க்கும் மேற்பட்ட வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களை எதிர்தரப்பினர் சமர்ப்பித்து இருக்கிறார்கள்.

ஆனால் இது வரை பாதிக்பட்ட ஒரு பெண் கூட இது பற்றி எந்த காவல் நிலையத்திலும் புகார் அளிக்கவில்லை. ஆதிரையும் கூட தான் பாதிக்கபட்ட பெண் என்று கூறவில்லை. அவர் யாரையே மிரட்டியதை பார்த்து இருக்கிறார், அதை வைத்துதான் புகார் அளித்து இருக்கிறார். இது ஒரு உண்மையான வழக்காக இருந்தால். இதில் பாதிக்கட்ட ஒருவர் கூடவா புகார் அளிக்காமல் இருப்பார்.

இதில் இருந்து இது ஒர் பொய்யான வழக்குதான் ஆகவே என் கட்சிகார் ரவி மற்றும் ராகவ் குற்றமற்றவர்கள், அவர்களை இந்த வழக்கில் இருந்து விலக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று ஆர் கே கூறி அமர்ந்து இருந்தான்.

அதை புறம் தள்ளிய கவிதாவோ பாதிக்க பட்டவர்தான் புகார் அளிக்கு வேண்டும் என்பது இல்லை யுவர் ஹானர். என் கட்சிக்கார் ஒரு பொது நல வழக்காகவே இதை பதிவு செய்தார். அதனால் இந்த குற்றசாட்டை ஏற்கமுடியாது. மேலும் ஆனந்தி கூறுவது போல் இந்த எல்லாவற்றையும் வளவனும், ஆதிரையும் தான் செய்தார்கள் என்றால் ஏன் இதை வளவன் இறந்த போது அவர் கூறவில்லை. மேலும் இதை இவர்கள் தான் செய்தார்கள் என்று கூற எந்த உரையாடல்களோ, தொலைபேசி அழைப்புகளே இல்லை. 

என்றவள் அடுத்து பேசிக்கொண்டு இருக்கும் போது ஒருவன் நீதிமன்றத்தின் உள் நூழைந்தான், நீதிபதியிடம் சேர்க்கும்மாறு ஒரு உறை அவன் கொடுக்க அதை பெற்றுக்கொண்ட நீதிபதி, அதை பிரித்து படித்தவர்.

சம்பந்தபட்ட அந்த நபர் இங்கு இருக்கிறாரா என்று கேட்டார், வந்தவன் ஆம் என்று கூற. சரி அவரை வரச்சொல் என்றவர், வாயிலை பார்க்க அங்க முழுவதும் மறைக்கபட்ட உடையுடன் ஒருவர் உள்ளே வந்தார்.

நீங்கள் இந்த வழக்கு சம்பந்தமாக என்ன கூற விரும்பினாலும் கூறலாம் என்றார். 

அவரும் தலை அசைத்து தன் வாக்குமூலத்தை சொல்ல சாட்சி கூட்டில் ஏறியிருந்தார்.

  

நிலவு தேயும்…………

Advertisement