Advertisement

ஆனா அந்த கல்யாணத்தனால எங்க குடும்பம் உடைந்து போகும் நான் நினைக்கல. அப்பறம் அப்பவோட இழப்பு எல்லம் சேர்ந்து இது எல்லாத்துக்கும் நீ தான் காரணம் உன் மேல வன்மத்தை வளத்துகிட்டேன். ஆனா அதுக்கு அப்புறம் எத்தனை யோ முறை எல்லாம் என்னாலதான் நடந்து அப்படினு மனசாட்சி சொன்னாலும், அதை ஏத்துக்க என் ஈகோ இடம் தரல. அதனால தான் நீங்க   என்ன தேடிவந்தப உங்க பாக்க முடியாது சொல்லி அனுப்பிடேன்.

ஆனா இப்பதான் எனக்கு தெரியிது அது எவ்வளவு பெரிய தப்புனு, என்றவன் மீண்டும் அவள் முகம் பார்த்தான், அதில் எந்த பாவமும் இல்லை.

சிறிது நேரம் அமைதியாக இந்தவன், பின் ஏதோ பேச வாய்திறக்க, இப்ப எதுக்கு இந்த சென்டிமண்ட் சீன்  ஒட்டிட்டு இருக்க? என்றாள் இது வரை அவன் பேசியது எல்லாம் வீண் என்பது போல்.

அவள் கேள்வியில் அவன் விழிக்க இங்க பார் எனக்கு இப்ப இதுக்கு எல்லாம் நேரம் இல்ல, இன்னும் 2 வாரத்துல அந்த ஆர் கே என்ன பன்ன  போறான் நானே தலைவலியில இருக்கேன் இப்பவந்து, இடம் சுட்டி பொருள்விளக்கிட்டு இருக்க.. என்றாள் அலட்சியமாக

என்னது நான் எவ்வளவு பில் பன்னி சொன்னா இவ என்ன இப்படி சொல்றா, அண்ணா எப்படி இந்த லூச ஹன்டில் பன்னி இருப்பார், என்றி நினைத்தவாரே அவளை பார்த்து இருந்தான்.

இளா நீயும் ஒன்னா எல்லாரையும் உன்ன மாதிரி சிடுமூஞ்சி குமார் இல்ல,  என்றாள் நக்கல் குரலில்.

என்னது   சிடுமூஞ்சி குமாரா? என்று அவள் சொன்னதில் ஜர்க் ஆனவன், பின் சுதாரித்து டேய் நீ எதுக்கு இங்க வந்தே இப்போ என்ன பன்னிட்டு இருக்கே?

என்று நினைத்தவன். சரி யார் இந்த ஆர் கே?

உனக்கு அவன தெரியுமா?

ஏன் தீடீர்னு கேக்கர என்றாள்

இல்லை முதலில் இந்த கேசில் எனக்கு அக்கரை இல்லைனாலும் ஆஸ்பிட்டல் இருக்கும் போதும், இங்க வந்துக்கு அப்புறமும் உங்க இரண்டு பேரையும் தூக்க நிறைய முயற்சிப்பன்னாங்க, அதனால தான் நான் உங்க பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்தேன்.

இது வரைக்கும், என்க்கு தெரிஞ்சு இதுல அந்த அரசியல்வாதி, அவனோட பையன் ஆனந்து, ராகவ் வோட அப்பா, இது இல்லாமா நிறை பேர் இந்த கேஸ்ல நேரடியாகவும் மறைமுகமாகவும் நிறையபேர் இருக்காங்க, ஆனா இந்த ஆர் கே இந்த லிஸ்டுலயே இல்ல, அப்புறம் எப்படி?

எனக்கு மட்டும் இல்ல இளாக்கும் கூட ஆர் கே வ தெரியும்.

இங்க பார் இந்த கேஸ் ல என் நடக்குது முதல அத சொல்லு என்றான் வெற்றி..

அவனை பார்த்தவள் அவளின் நக்கலை எல்லாம் விட்டுவட்டு, அவன் அமர்ந்து இருந்த பென்சில் அமர்ந்தவள், இந்த கேஸ்ல முதல எல்லாம் நல்லா தான் போய்ட்டு இருந்து, ஆனா தீடீர் வளவன் இறந்து, அதை தொடர்ந்து அவங்க அப்பா இறந்து எல்லாம் ஏதோ இளா க்கு தப்பா பட்டுச்சு வளவனோடது தற்கொலையா இல்ல கொலையா விசாரிச்சட்டு இருந்தபதான், இளா க்கு உங்க விட்டுல இருந்து கல்யாணம் சொல்லி அவன் அங்க வந்த போது, ஆதிரை பாண்டிசேரி வந்து அந்த டிரக் கேஸ்ல மாட்டினது.

ஆனா அப்போ ஆதிரை எனதால பாண்டிசேரி வந்தா அப்படி எங்க கிட்ட சொல்ல, அதோட அப்ப அடுத்து அடுத்து நடந்த சம்பவங்கள், எல்லாம் ஆதிரைக்கு எதிரா இருந்து.

அதுல ஒர் நல்லவிஷயம் அந்த கேஸ் பாண்டிசேரில நடந்து இல்லைனா, ஆதிரைய அப்பவே கொன்னு இருப்பாங்க.

ஆனா அதே சமயத்துல டிஜிபி யாலும் எங்களுக்கு பெருச ஒன்னும் சப்போட் பன்ன முடியல, அவர் ரிட்டேர்மன்ட் ஆகுற நேரம், ஆதிரையை கண்டிப்பா பாதுகாப்ப ஒர் இடத்துல வைக்க வேண்டிய நிர்பந்தம், இளா தான் எங்க விட்டில இருக்கட்டும் அவள கூட்டிட்டு போனான், ஆனா அங்க உங்க அப்பா அப்ப இருந்த கண்டிஷன் வைச்சு நீ கல்யாணத்தை எப்படியாவது நடத்த முயற்சிபன்னத உங்க அம்மா மூலமா தெரியவந்து, அதனால அத தவிர்க தான் ஆதிராவ அவன் கல்யாணம் பன்னது. அண்ணிக்கு காலைவர எனக்கும் ஆதிராக்கும் இது தொரியாது, தீடிர் எல்லாம் ரெடிபன்னி கல்யாணத்த முடிச்சுட்டான், டிஜிபி அதுக்கு வந்து இருந்தார்.

ஆனா அது அப்பறம் உங்க வீட்டுக்கு வந்தப எல்லாம் மறுபடியும் சொதப்பல், அதனால நாங்க வெளிய தங்க னோம். 6 மாதம் வரை எல்லாமே அப்படியே இருந்து, ஒர் வழியா அந்த டிரக்ஸ் கேஸ்ல இருந்து ஆதிரைய வெளிய கொண்டுவந்தோம், ஆனா அவ எதலயும் ஈடுபாது இல்லாம இருந்தா, ஆசிரமத்தோட மதர் தான் அவள டிகிரி போட சொன்னாங்க, அவளோட கவனத்தை அதுல திருப்பினாங்க.

அதுக்கு அப்புறம் ரவி, ராகவ் கேஸ்ல பெருசா முன்னோற்றம் இல்லைனாலும் அப்படியே இருந்து, இதுக்கு நடுவுல இளாக்கு வேற இடத்துக்கு மாற்றல், கேஸ் கிடப்புல இருந்துசு.

ஆதிராக்கும் இளாக்கும் ஆண் குழந்தை பிறந்து மறுபடியும் அவன் கோவை வந்தான், குழந்தைக்கு 2 மாதம் இருக்கப்ப அவனும், ஆதிராவும் கார்ல போரப்ப விபத்து நடந்து அங்கயே இறந்து போய்ட்டதா தகவல் வந்து, எங்களா அவங்க பாக்க முடியல மொத்தமா கார் கருகிட்டதாலயும் எதுவும் சரியா கிடைக்கல, ஆன போலீஸ் அது இளா ஆதிரா தான் கேஸ் முடிடாங்க.

தீடீர் மறுபடியும் ஆதிரைக்கு கொலை முயற்சி நடந்து, யார் எங்களால கண்டு பிடிக்க முடியல, அந்த நேரத்துல டிஜிபி ஒர் நாள் கால் பன்னார், ஆதிரைய மதர்கிட்ட ஒப்படைக்க சொன்னார். அவள குழந்தையோட அங்க அனுப்பிட்டு என்ன டில்லில ஒர் லாயர் கிட்ட ஜுனியரா சேத்துவிட்டார்.

நான் டெல்லி போக முன்ன உன்னையும் , உங்க அம்மாவையும் பார்க்க ரொம்ப டிரைபன்னேன், ஆனா இரண்டு பேரும் அதுக்கு ஒத்துக்கல.

அப்ப இருந்து சூழ்நிலையில் எங்க இரண்டு பேர் உயிருக்கும் உத்திரவாதம் இல்லை, எப்படியாவது குழந்தைய உங்ககிட்ட கொடுக்கனும் நாங்க நினைச்சோம். ஏனா எங்க இரண்டு பேர்க்கும் ஏதாவது ஆய்டா அனாதையா வளர்றது எவ்வளவும் கொடுமைனு எனக்கு தெரியும்,

எல்லாருக்கும் இளா மாதிரி ஒருத்தர் கிடைக்கமாட்டாங்க இல்ல?

என்றவள் கண்கள் கலங்கி இருந்தோ என்று அறியும் முன் முகத்தை வேறு புறம் திருப்பி இருந்தாள்.

அதுக்கு அப்புறம் யாரும் யார்கிட்டையும் தொடர்புல இல்ல, மறுபடியும் முகிலுக்கு 3 வயது ஆகும் போது தான் நான் ஆதிரை பார்க்க வந்தேன், அது வரைக்கும் எப்பவாது போன்ல பேசுறது தான்.

ஆதிரை இங்க டீச்சர்ரா இருந்தா அவ வெளி உலக தொடர்பு எதையும் வெச்சுகல, அதுக்கு அப்புறம் மறுபடியும் இந்த கேஸ் ரிஒப்பன் பன்னலாம் 1 வருஷத்துக்கு முன்னால முடிவு பன்னி அது சம்பந்தமா வேலைகள் ஆரம்பிச்சோம், அதே சமயத்துல ஆதிரை காஞ்சிபுரம் வந்தா, வந்த இடத்துல உண்ண பார்த்து பத்தி சொன்னா, அப்பதான் முகில உங்கிட்ட ஒப்படச்சுட்டு நாங்க இங்க இருந்து சென்னை போறதா இருந்து, ஆனா அதுக்குள்ள அவளுக்கு விபத்து ஏற்பட்டு எல்லாம் மாறிடுச்சு.   

இதுக்கு நடுவில் யாரும் ஆதிரையை தேடலயா?

தேடினாங்க, ஆனா அவங்களுக்கு நேத்ராவும், ஆதிரையும் ஒன்னுதான்     தெரிவறதுக்கு முன்ன அவள பாதுகாப்பா இளா தன் கூட தங்க வெச்சிகிட்டான். அவனுக்கு அப்புறம் அவ மதர் கிட்ட போய்டா இது எல்லாத்துக்கும் டிஜிபி எங்களுக்கு ரொம்ப உதவிய இருந்தார்.

இதுல ஆர் கே எங்க வரான்?

ஆர் கே என்னோட காலேஜ் சீனியர் இளா வோட பேச் தான் அவனுக்கும் எனக்கும் ஆகாது, தான் 1 வருஷம் சேர்ந்தப்ப இவங்க கேங் என்னை ரகீங் பன்னாங்க ஆனா நான் எதையும் செய்ய முடியாது அப்படினு சொல்லிடேன், அதோட பிரின்ஸ்பல் கிட்டயும் இவங்க பத்தி புகார் கொடுத்தேன். அது அப்போ பெரிய பிரச்சனை ஆச்சு அதனால அவன சஸ்பன்பன்னாங்க, அது அப்புறம் இளா தான் புகார் வாபஸ் வாங்க சொன்னாங்க. ஆனாலும் அவனுக்கும் எனக்கும் அடிக்கடி முட்டிக்கும். இதோ தான் லா காலேஜ்லயும், என்றாள் முகத்தை சுருக்கியபடி.

நீயார்கிட்ட தான் சன்ட போடாம இருந்து இருக்கே, என்று மனதில் நினைத்தவன் அதை வெளியில் சொல்லவில்லை.

சிறிது நேரம் அமர்ந்து இருந்தவர்கள் பின் தங்கள் இடம் சொன்றனர்.

……………………………….

இங்கே ஒரே ஆட்டம் பாட்டாமாக இருந்து, ஆர் கே வும் அவர்களுடன் இனைந்து இருந்தான்.

சூப்பர் யா என் வாழ்க்கையில் இந்த மாதிரி ஒர் வெற்றி எனக்கு கிடைச்சதே இல்லை, இத்தன வருஷமா இந்த கேஸ் எங்களுக்கு எவ்வளவு பெரிய தலைவலி தெரியுமா?

எந்த நேரமும் தலைக்கு மேல கத்தி தொங்கற மாதிரி இருக்கும், இன்னிக்குதான்யா நிம்மதியா இருக்கு.

எப்படி இந்த கேஸ் ஒரே ஹேரிங்க ஒடச்சே, ஒரே வாட்டில கேஸ் முழுசா மாத்திட.

இத்தன நாளா எங்கய இருந்த, உன்ன மட்டும் நான்  5 வருஷத்துக்கு முன்னால பார்த்து இருந்தேன் வை நான் தான் இந்த நாட்டோட பிரதமரா இருந்து இருப்பேன்.

இப்ப என்ன கொட்டு போச்சு, இனிமே எங்க கூடயே இருந்துரு, உன்ன எங்க கொடு போகனுமோ அங்க கொண்டு போறன்.

என்று தன் பாட்டிற்க்கு பேசிக்கொண்டே இருந்தார் அருணாச்சலம் (ரவியின் தந்தை), கேஷ்வ் (ராகவ் தந்தை) இவர் அளவிற்க்கு ஏதும் பேசவில்லை என்றாலும், அவர் மனதிலும் நிம்மதியே.

சரி ஆர் கே அடுத்து என்ன பன்ன போற அந்த பெண்ணு எனக்கு என்னா ஆட்டம் காமிச்சா தெரியுமா?

என் இத்தன வருஷ அரசியல் வாழ்க்கையில் அந்த இரண்டு பெண்ணுங்களும் ஆட்டம் கான வச்சாங்க, இந்த கேஸ் முடிஞ்ச பிறகு இருக்க என்று கருவினார்………..

சரி ஆர் கே அடுத்து என்ன பன்ன போற என்றார் கேஷ்வ்?

நான் என்ன பன்னும் என்றான் ஆர் கே கூலாக?

என்ன என்று இருவரும் விழித்தனர்.

இன்னும் 2 வாரத்துல கோர்ட்டுல ஆதாரம் கொடுக்கனும் மே என்றனர் இருவரும்,

ஆமா என்றான் அலட்சியமாக

ஆமா னா என்ன அர்த்தம் மிஸ்டர் . ஆர் கே

ஆதாவது நான் கோட்டுல சொன்ன கதைக்கு நீங்க திரைகதை, வசனம், நடிகர்கள் ஏற்பாடு பன்னும் அர்த்தம் என்றான். 

என்னது? என்றனர் இருவரும்.

ஆமா 

நீங்க தானே சென்னிங்க உங்களா முடியாது ஏதும் இல்லைனு, 2 வாரம் டைம் வாங்கி கொடுத்து இருக்கேன், சீக்கரம் எல்லாத்தை ரெடிப்பன்னி கொடுத்துடிங்கனா அடுத்த ஹேரிங் வசதியா இருக்கும். என்றவன் எழுந்து கிளம்பி இருந்தான்.

இவன் நல்லவனா? கொட்டவனா? என்றபடி இருவரும் அமர்ந்து இருந்தனர்…………………………

   

நிலவு தேயும்…………

Advertisement